ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
மறந்து போன உணவுகள் தலைப்பில் கம்பு கொண்டு தயாரிக்கப்படும் உணவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது என்ன?
கம்பு என்பது கேழ்வரகு போன்ற ஒருவித தானியம். இதனை இலங்கையில் எவ்வாறு குறிப்பிடுவார்கள் என்பது தெரியவில்லை. ஹிந்தி, ஆங்கிலம் இரண்டிலும் Bajra என்று சொல்லுவர். கம்பு கொண்டு தயாரிக்கப்படும் கம்பங்கொழுக்கட்டை மிகவும் பிரபலம். மிகவும் சத்தான தானியம் இது. கிராமத்தில் இதைக் கொண்டு பலவித இனிப்புகள் தயாரிப்பர். கஞ்சியும் தயாரிக்கலாம்.
சகோதரிக்கு, வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றது,நல்ல குளிர்ச்சியானது.என் அம்மா நன்றாக சமைத்துத் தருவார்.அப்போது பானையில் சமைப்பார்,இப்போது குக்கரில் சுலபமாக செய்யலாம்.கம்பு சாதம் 3 நாட்களுக்கு தண்ணீர் விட்டு வைத்து இருந்து தயிர் விட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.
சகோதரர் admin அவர்களுக்கும், சகோதரி vimala kandaswamy அவர்களுக்கும் மிக்க நன்றி. கம்பு கொண்டு தயாரிக்கும் உணவு பற்றியும் கம்பு என்றால் எப்படி இருக்கும் என்பதை படத்துடன் மிக அழகாக விளக்கம் கொடுத்தமைக்கும் நான் மிக்க நன்றி கூறுகிறேன்.
கம்பு 1டம்ளர் அரிசி 1டம்ளர் சிறிது வெந்தயம் இந்த முன்றையும் ஊறவைத்து அரைக்கும்போது, சிறியவெங்காயம் 10,கருவேப்பிலை சிறிது,சீரகம்கொஞசம் சேர்த்து அரைத்து உப்பு போட்டுக் கலக்கி 1மணி நேரம் கழித்து தோசை வார்த்தால்,வாசமான,ருசியான கம்பு தோசை தயார்! இதற்கு,தக்காளி சட்னி ஜோடி சூப்பர்!!!!