topic_image


i tried 7 cup cake..thanx to the memebr who shared thiz recipe...but my doubght iz shall i reduce the amount of sugar to 2 cups??bcuz for me itz too sweet..will it come properly?


7 cup cake
மார்ச் 10, 2007 - 2:41pm - வழங்கியவர் Manohari

டியர் தாலிகா, எப்படி இருக்கின்றீர்கள்? 7 கப் கேக்கில் சர்க்கரையை குறிப்பிலுள்ளபடி சேர்த்தால் கேக்கின் பக்குவம் கடித்து சாப்பிடுவதாக இருக்கும். சர்க்கரையைக் குறைத்து செய்தால் கேக் சற்று மெத்தென்று இருக்கும், மற்றப்படி சுவையில் குறையிருக்காது.செய்துப் பாருங்கள்.நன்றி.

8 கப்
மார்ச் 10, 2007 - 3:21pm - வழங்கியவர் admin

சகோதரி thalika அவர்களுக்கு, (உங்கள் பெயரை தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை)

உங்களுடைய சந்தேகம் அந்த குறிப்பில் இருந்த ஒரு பிழையை சரி செய்ய உதவியது. குறிப்பில் கடலைமாவு - 1, சீனி - 3, பால் - 1, நெய் - 1, முந்திரி - 1, தேங்காய்பூ - 1 என்று மொத்தம் 8 கப் அளவு கொடுக்கப்பட்டிருந்தது.

பொதுவாக 7 கப் கேக்கில் முந்திரி சேர்ப்பதில்லை. இதனை நமக்கு செய்து காட்டிய சகோதரி கூடுதல் சுவைக்காக முந்திரி சேர்த்தார். அதாவது ஒரு கப் கடலை மாவிற்கு பதிலாக முக்கால் கப் கடலை மாவு, கால் கப் முந்திரி பொடி சேர்த்து இருந்தார். முந்திரியை அரைப்பதற்கு முன்பு முழு முந்திரியாக ஒரு கப் அளவிற்கு இருந்ததால், குறிப்பில் அதனை ஒரு கப் முந்திரி என்று சேர்த்துவிட்டோம். கடலை மாவு முக்கால் கப் என்றுதான் இருந்தது. நான்தான் முழுதாக ஒரு கப் தானே எடுத்துச் செய்வார்கள் என்பதை மனதில் வைத்து ஒரு கப் என்று குறிப்பிட்டுவிட்டேன். அது தவறுதலாக 8 கப் கேக்காகிவிட்டது. இப்போது சரி செய்துவிட்டேன்.

சகோதரி மனோகரி அவர்கள் குறிப்பிட்டதுபோல் 3 கப் சீனி என்பதுதான் பொதுவான அளவு. உங்கள் விருப்பத்திற்கு நீங்கள் குறைத்துக் கொள்ளலாம். இனிப்புடன் கொஞ்சம் crispy தன்மையும் குறையும்.

குறிப்பு: தங்களின் கோரிக்கைக்கு நான் அனுப்பிய பதில் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றீர்களா? தங்களிடம் இருந்து பதில் எதுவும் வராததால், மின்னஞ்சல் உங்களை வந்தடையவில்லையோ என்ற சந்தேகத்தில் கேட்கின்றேன். உங்களது பெயர் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. எப்படி குறிப்புகள் சேர்ப்பது என்பது குறித்து விபரங்கள் அடங்கிய மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றீர்களா?

thank u guys
மார்ச் 10, 2007 - 5:00pm - வழங்கியவர் thalika

மிக்க நன்றி admin அவர்களுக்கும் மனோஹரி அம்மா அவர்களுக்கும்..நான் அவ்வப்போது ஆங்கிலத்தில் type செய்வேன்..தயவு செய்து என்னை மன்னிக்கவும்..எனக்கு இப்பொழுதும் தமிழில் type செய்யிய குறைந்தது அரை மணிநேரம் ஆகும்.1 வயது குழந்தையை வைத்துக்கொண்டு என்னால் அவ்வளவு நேரத்தை எப்பொழுதும் செலவிட முடிவதில்லை..கொஞ்சம் கண்டு கொள்ளாமல் இருந்து கொள்ளுங்களேன்
கப் cake விஷயத்தில் எனக்கு 1.5 கப் சர்க்கரையே போதும்...மெத்தென்று இருந்தால் மிகவும் நல்லது..அப்பொழுது நமது ஸ்ரீ krishna மைசூர் பாகின் மென்மை இருக்குமா?நான் அதனை செய்தும் பார்த்து விட்டேன்..அருமையாக வந்தது..மற்றுமொரு கேள்வி...அதனை எவ்வளவு நாள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்??
திரு admin அவர்கள் அனுப்பிய மின்அஞ்சல் எனக்கு கிடைக்க வில்லை..என்னை நீங்கள் ஓரம் கட்டிவிட்டீர்களோ என்று நினைத்து மனதை தேர்த்தி கொண்டேன்..என்னை சேர்த்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

7 cup cake
மார்ச் 10, 2007 - 5:50pm - வழங்கியவர் Manohari

நல்லது தாலிக்கா, வழக்கத்தை விட சர்க்கரை குறைவாகவும்,அதோடு பாலையும் சேர்த்து செய்யும் இனிப்புகள் விரைவில் கெட்டு விடும்.இந்த கேக்கைப் பொருத்தவரையில் கேக்கைச் செய்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விடுங்கள்.அல்லது வெளியிலேயே வைத்திருக்க வேண்டுமென்றால் இரண்டு அல்லது மூன்று வாரம் வரையில் வைத்திருக்கலாம், அவ்வளவு சீக்கிரம் கெடாதென்று தான் நினைக்கின்றேன்.மேலும் இதை விட, சாம்பியன் மிஸ்டர் அட்மின், அல்லது வேறு எக்ஸ்பர்டுகளிடமிருந்து ஏதாவது டிப்ஸ் கிடைக்கின்றதா என்றும், காத்திருக்கவும்.நன்றி.