ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
Could someone give me tamil names for King fish, Sardines,Tilapia,Smelts,catfis h, Salmon and also for other fishes available in Canada. Also which fish tastes better for traditional south Indian cooking.
I have tried sardines for frying... they tasted allright but has got to be careful due to lot of bones ??? Catfish also tastes good. Salmon will have a strong smell.. I think manoharai madam can help us on how to cook salmon as she is here for a long time... Madame... please help us... I heard from my friends that tilapia also tastes good.. but haven't tried it yet.
Yeah.. you are correct, it would be of great help if someone could help us with the tamil names for the fishes...
Thanks Mythili
டியர் சுபாஷினி எப்படி இருக்கின்றீர்கள்? மீனின் சுவையை தெரிந்து வைத்துள்ள அளவிற்க்கு அதன் பெயர்களை நானும் தெரிந்துவைத்துக் கொள்ளவிலை. காரணம் நமது நாட்டில் இருந்தவரையில் சமையல் செய்ததை விட சாப்பிட்டதில் தான் காலத்தை ஓட்டியுள்ளேன். ஆகவே இங்கு கிடைக்கும் ஒரு சில மீன்களை சமைத்து பார்த்து, அதன் ருசியை வைத்து நான் தெரிந்துக்கொண்ட பெயர்களை கூறுகின்றேன். பெயர்கள் சரியாக இருக்காது என்று நினைக்கின்றேன். ஆனால் சுவையில் ஒத்துவரும். pomfret-வெளவ்வால் மீன் macarel-மத்தி மீன் belt or ribbon fish -வாள மீன் catfisn -கெளுத்தி sardine- கேரளத்து சால மீன். white fish,blue fish,king fish-கட்லா மீன் என்று கேரளாவில் அழைப்பார்கள் Tilapia-கறி மீன் அல்லது நெய்மீன் போன்றது snapper-ஸங்கரா அல்லது கிளிமீன் Tuna fish-வஞ்சர மீன் போன்ற ருசியுள்ளது. salmon -இவற்றுக்கு தமிழ் பெயர் கிடையாது. மேற்கூறியுள்ள எல்லா வகைகளையும் செய்துப் பார்த்திருக்கின்றேன். எனக்கு பிடிக்காத மீன் வகை smelts என்ற நெத்திலியை விட சற்று பெரியதாக இருக்கும். மேலும் அடுத்த முறை கடைக்கு செல்லும் பொழுது வேறு ஏதாவது நம்மூரின் மீன்வகைகள் உள்ளதாவென்று பார்க்கின்றேன். குழம்பிற்க்கு முட்கள் நிறைந்த எந்த மீனும் குழம்பின் ருசியைக் கூட்டும்.ஆகவே குழம்பிற்க்கு முட்கள் அதிகமுள்ள மீனைக் பயன்படுத்தவும், முட்கள் அதிகமில்லாத மீனை வறுக்கவும். குழந்தைகள் உள்ள வீட்டில் இதை மாற்றி செய்யவும்.நன்றி
டியர் மைதிலி எப்படி இருக்கின்றீர்கள்? மீனைப் பொருத்தவரையில் என்னத்தான் சுவையைக் கூட்ட பல மேஜிக்குகளைச் செய்தாலும், நம்மூர் மீன் குழம்பிற்க்கு உள்ள சுவையைப் பெறமுடியாது அல்லவா! என்னச் செய்வது ஒன்றை இழந்து தான் மற்றொன்றைப் பெறமுடியும்,ஆகவே இருப்பதை கொண்டு மனதிருப்பதி கொள்வோம். நீங்கள் கூறியுள்ள சால்மன் என்ற வகை மீனிற்க்கு ஒரு வித வாடை இருப்பது உண்மைதான். ஆனால் அந்த வாடையை சற்று குறைக்கலாம். மீனை துண்டுகள் போட்டு, நன்றாக கழுவி நீரைத் துடைத்து விட்டு உப்பையும், எலுமிச்சை சாற்றையும் ஊற்றி கலந்து வைத்து விடவும்.மசாலா தயாராகும் வரையில் ஊறினால் போதும்.அதன் பிறகு அதை குழம்பில் போடவோ அல்லது வறுக்கவோ பயன் படுத்துஙள். மேலும் வழக்கத்தைவிட உப்பு,புளி காரத்தை சற்று அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல ருசியாக இருக்கும். திலாப்பியா என்ற வகை மீன், குழம்பிற்க்கும், வறுக்கவும் மிகவும் ஏற்றது. குழம்பிற்க்கு அபார சுவையைக் கொடுக்கும். ஆனால் அதை சுத்தம் செய்வது தான் கடினம் மற்றபடி சுவை மிக மிக நன்றாக இருக்கும்.இன்னும் வேறேதாவது சந்தேகம் இருந்தாலும் கேட்கவும். நன்றி.
ஹலோ சுபாஷினி, உங்களின் கேள்விக்கு மற்றுமோரு விடை. pomfrets என்ற மீன் வகையில் செய்த குழம்பு கிட்ட தட்ட நம்மூரின் குழம்பைப் போல் இருக்கும். மாங்காய் சீசனில் உங்கள் பகுதியில் இந்தியன் அங்காடி இருந்தால் பச்சை மாங்காய் கிடைக்கும். அதை வாங்கி வந்து முக்கியமாக இந்த வகை மீன் குழம்பில் போட்டு செய்துப் பார்த்த பிறகு,அதன் சுவையை மறக்காமல் கூறுங்கள், நன்றி.
எனக்கு US மீன்களின் பெயர் தெரியாது இப்பொழுது தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
எப்போதோ ஒரு சமயம் forumhub ல் மீன்கள் பெயர்கள் குறித்த உரையாடலில் பங்கேற்றேன். அந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.
அறுசுவை பழையத்தளத்திலும் மீன்களைப்பற்றி குறிப்புகள் உள்ளது. பார்வையிடவும்.
மிக்க நன்றி. அந்த குறிப்புகளுடன் படங்களும் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மனோகரி அவர்களுக்கு மிக்க நன்றி. இன்னும் வேறு பெயர்கள் தெரிந்தால் தெரிவிக்கவும். மீன் எனக்கு பிடித்தமான உணவு.
மிக்க நன்றி மேடம்.... நான் நலமே.. நீங்கள் சொன்னவாறு செய்து பார்க்கிறேன்.
ஹலோ மனோகரி மேடம் நான் மீன் வாங்கியதில்லை . என் கணவர்தான் வாங்கி வருவார்.அவருக்கும் அவ்வளவா மீன்கள் பெயர் தெரிவதில்லை. எனக்கு எந்த மீன் எப்படி இருக்கும் என்றே தெரியாது . எங்களுக்கு அருகில் உள்ள மார்கெட்டில் எல்லாம் நம்ம ஊர் மீன்கடை போல் வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கூட எழுதி இருப்பதில்லை. அதனால் அந்த மீன்கள் எந்த வடிவத்தில் , நிறத்தில் இருக்கும் என்று தயவுசெய்து முடிந்தால் கூறுங்களேன். நன்றி.
டியர் arangs எப்படி இருக்கீங்க? தங்களின் கேள்வி எளிதாக இருந்தாலும் பதிலளிப்பது கடினமாக உள்ளது. உங்களுக்கு கிடைக்கக் கூடிய மீன்களின் ஆங்கிலப் பெயர்கள் தெரிந்திருந்தால் மேலுள்ள பதிவுகளின் உதவியுடன் அதை இனங்கண்டு பிடித்துவிடலாம். அது இல்லை என்பதால் நீங்கள் விக்கிபீடியா போன்ற தளங்களுக்குச் சென்று மேலுள்ள மீன்களின் பெயர்களை எழுதிப் சர்ச் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.அறுசுவையின் பழைய தளத்தில் (http://www.arusuvai.com/ fooditems/seafoods/index.html) ஏராளமான மீனின் பெயர்கள் உள்ளன அதையும் பார்வையிடவும். இல்லாவிடில் அட்மினின் உதவியை நாடினால் நிச்சயமாக உங்களுக்கு உதவி கிடைக்கும் என்று பரிந்துரைக்கின்றேன். மற்றபடி எனக்கு தெரிந்த மீனின் நிறத்தையும் வடிவத்தையும் கூறும் பொழுது உங்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உணருகின்றேன்.ஆகவே முடிந்தால் நான் இங்கு பயன்படுத்தும் ஒரு சில மீனின் படங்களை அனுப்புகின்றேன். நன்றி.
ஹலோ மனோகரி மேடம், எப்படி இருக்கிறீங்க .ரொம்ப நன்றி மேடம். நீங்கள் கூறியபடி அறுசுவையின் பழைய தளத்திற்கு சென்று பார்த்தேன். அதில் இறால் , நண்டு இரண்டின் படம் மட்டும்தான் உள்ளது . நான் இது வரையில் இது இரண்டுமட்டும்தான் ஒழுங்கா வாங்கி வந்துள்ளேன் . ஒரு தடவை கெலங்காமீன் என நினைத்து அதேபோல் உள்ள ஏதோ ஒன்றை வாங்கிவந்துவிட்டேன். அதிலிருந்து மீன்கடைக்கே போவதில்லை. இங்கு கடைகளில் இருக்கும் முக்கால்வாசி சீனர்களுக்கு அந்த மீன்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் தெரிவதில்லை.
நன்றி .
தலைப்பில அட்மினுக்கு நன்றி போட்டு, உள்ளே மேட்டர்ல மனோகரி மேடத்துக்கு பதில் சொல்லியிருக்கீங்க. (சில படத்துல ஆரம்பத்துல டைட்டில போடுவாங்களே.. "நன்றி. கொடுங்கையூர் பஞ்சாயத்து" அந்த மாதிரி:-))
அப்புறம் உங்களோட சமையலில் சிறப்பு திறனை படிச்சு கொஞ்ச நேரம் சிரிச்சேன். அப்புறம் நிறைய யோசிச்சேன். (நாளைக்கு முத வேலையா ஒவ்வொருத்தர் profile யும் திறந்து படிச்சு பார்க்கணும்.. நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் போல இருக்கு.)
சரி இப்ப மீன்கள் பத்தி:
நிச்சயம் மீன்கள் பற்றி ஒரு தனிப்பகுதி அறுசுவையில் கொண்டு வர்றோம். கவலைப்படாதீங்க. ஏற்கனவே படங்கள் நிறைய எடுத்து இருக்கோம். இன்னும் தகவல்கள் நிறைய திரட்ட வேண்டியிருக்கு.. அதுவுமில்லாம நிறைய வகை மீன்களை ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு பேர்ல சொல்றாங்க. அதே மாதிரி, ஒரே பேர்ல இருக்கிற மீன்கள் சில கிடைக்கும் இடத்தை பொறுத்து அமைப்பில வேறு விதமா இருக்கு. அப்புறம் வகைகள். இப்படி நிறைய விசயங்கள் இருக்குது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த பகுதிய கொண்டு வர்றதுக்கு முயற்சி செய்றோம்.
அதுவரைக்கும் மீன்கள் படம் பார்க்கணும்னா இந்த லிங்க் ல போய் பாருங்க..
MPEDA
துபாயில் கிங் பிஷ் - சீலாமீன் லேடி பிஷ் - கிளங்கா மீன் சுல்தான் இப்ராஹீம் - சங்கரா மீன்
ஹாய் arangs, சிங்கப்பூரில் சீனர்கள் மலாய் மொழியில் மீன்களின் பெயரை சொன்னால் புரிந்து கொள்வார்கள் தெங்கிரி-வஞ்சிரம் மீன் அல்லது நெய்மீன் காக்காப் மேரா-சங்கரா மீன்(red snapper) காக்காப் ஹித்தாம்-விளை மீன்(snapper) பவால் புத்தி-வவ்வா மீன்(pomfret) பவால் ஹித்தாம்-black skinned pomfret(taste is good but smelly) இக்கான் பிலிஸ்-நெத்திலி மீன் இக்கான் பராங்-வாளை மீன் இக்கான் செலார்-பாறை மீன்(எங்கள் ஊரில்)
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
Milk Fishனு ஒரு மீன் வாங்கி வந்திருக்காங்க. அதை எப்படி சமைக்கறதுன்னு தெரியல. யாராச்சும் சொல்லுங்க ப்ளீஸ்:-) ஃப்ரை பண்ணலாமா:-)
அன்புடன் ஹர்ஷினி :)
யப்பா யாராவது வந்து சொல்லுங்களேன்:-) இந்த பால் மீனை வெச்சு என்ன பண்றதுன்னு:-)
இப்ப கழுவினா, தூள் தூளா ஆயிடுது. கெட்டுபோன மீனான்னு தெரியல. ஆனா, நேத்து நைட் தான் வாங்கி வந்தாங்க. இப்ப்ப காலைல எங்களூக்கு. அதுக்குள்ள கெட்டு போயிடுமா.
இல்ல அந்த மீன் வெரைடி அப்படி தானா. தெரிஞ்சா சொல்லுங்களேன்.
எனக்கு தெரிந்தவை ஹர்ஷினி...பொதுவாக முலு மீன் வாங்கும் போது முலு மீனை தொட்டு பாக்கனும். தொடும் போது மீன் அமுங்காம கெட்டியா இருக்கனும்.அப்படி அமுங்கினால் அது பிரஷ் மீன் இல்லை.அப்பரம் அதன் Gills (மூச்சுவிடும் பகுதி ) திறந்து பாக்கனும் அது நல்ல இரத்த சிகப்பா இருக்குகனும் இருந்தா பிரஷ் மீன்.இரத்த சிகப்பா இல்லாம டார்க் கரும்சிகப்பு கலர் இருந்தா அது பலைய பிஷ்.
உங்க மீன் ஏன் உதிருதுன்னு தெரியல.நானும் நேத்து வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து மறுநாள் செய்திருக்கேன்.கெட்டதில்லை.
கெட்டுப்போன மீன் எப்படி கண்டுபிடிப்பதுன்னு தெரியல ஹர்ஷினி.ஆனால் ஒன்றி மட்டும் தெரியும் கெட்டு போன மீன் குக் செய்த பின்பு சாப்பிட்டால் கசக்கும்.
இன்னும் மீன் பற்றி அனுபவசாலிகள் யாரவது வந்து உதவுங்களேன்.
அன்புடன் பர்வீன்
டியர் ஹர்ஷினி மீன் பர்வீன் சொன்னமாதிரிதான் பார்த்து வாங்கனும். வெளிர் ரெடாக இருக்ககூடாது நல்ல சிகப்பா இருக்கனும் தொட்டுபார்த்த கால்ளு மாதிரி இருக்கும் குழைவாக அமுங்க கூடாது. தூள் தூள் ஆகி விட்டது என்றால் பழிஅய மீன் தான். மீன் வாங்க வந்தால் அதை உடனே ஒவ்வொரு வேளைக்கும் தகுந்த மாதி பாக்கெட் போட்டு ஒரு கவரி போட்டு மறுபடியும் ஒரு திக் கவரில் போட்டு வைக்கனும். அப்பதான் பிரிட்ஜை திரக்கும் போது ஸ்மெல் வராது. னைட் வாங்கைவந்தால் மறுநாளைக்கு கொஞ்சம் சோஒம்பேறி தணம் பார்க்காமல் உடனே கழுவி பிரைக்கு மாசாலா போட்டும், கிரேவிக்கு கழுவி ஒரு ச்ல்வர் டப்பாவில் போட்டும் பிரிட்ஜில் க்ழே (அ) சில் டிரேவில் வைத்து விடவேண்டியது மீன் என்றால் தான் சீக்கிரம் வேலை முடியும். ஹர்ஷினி என்னுடைய மீன் குழம்பு டிரை பன்ணி பாருங்கள். ஸ்மெல் இருந்தால் கொஞ்சம் வினிகர் போட்டு கழுவுங்கள். ஜலீலா
அன்புள்ள பர்வீன்,
ரொம்ப தேங்க்ஸ், மீன் வாங்க எனக்கும் தெரியாது, என் கணவருக்கும் தெரியாது. நீங்க குடுத்த ஐடியாஸ் நிச்சயம் எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். அன்னைக்கு அந்த மீன் சமச்சோம். நல்லா இருந்ததா சொல்லி சாப்பிட்டாங்க. ஆனா பயம் வந்தீடுச்சு, இனி மீன் வாங்க வேணாம்னு தான் நினச்சோம். நான் இந்த பதிவ பாக்கல. இனி வாங்கும் போது பாத்து வாங்கறோம். ரொம்ப நன்றி பா:-)
ஜலீலாக்கா,
உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ். பர்வீன் சொன்னா மாதிரி இனி பாத்து வாங்கறோம். நான் என் கணவர் வாங்கி வந்த உடனே ஃப்ரிட்ஜில் வெச்சிட்டேன். மறுநாள் எடுத்து கழுவினப்பொ தான் உடஞ்சா மாதிரி இருந்தது. அதான் இங்க வந்து கேட்டேன், நீங்கெல்லாம் இருக்கீங்கன்ற நம்பிக்க தான். ஆனா, மீன் வாங்கின இடத்துலயே கத்தி வெச்சு அடிச்சு நடு முள் ஒடச்சிருக்காங்க. அதனால தான் அப்படி வந்திருக்கும்னு நினச்சு சமச்சிட்டோம். ஆனா வாசம் நல்லா இருந்ததுனு சொல்லி சாப்பிட்டாங்க. இனி ஒழுங்கா பாத்து வாங்கிடறோம்.
இந்த முறை அம்மாகிட்ட குறிப்பு கேட்டு சமச்சிட்டோம். அடுத்த முறை நிச்சயம் உங்க குறிப்பு பாத்து சமச்சு உங்களுக்கு பின்னூட்டம் தரேன். சரீங்களா:-)
சகோதரிகளே பிரியாணிக்கும் புலாவுக்கும் என்ன வித்யாசம்?
ஆமாம் சல்மன் மீனில் ஒருவித வாடை உள்ளது. அதனால் ஆரம்பத்தில் நானும் கஸ்டப்பட்டேன், அதன் விளைவு நல்லதொரு முறை கண்டுபிடித்துவிட்டேன். அதாவது மனோகரி அன்ரி சொன்னதுபோல் மீனை சிறு துண்டுகளாக வெட்டி உப்பும் தேசிக்காயும் பிரட்டி கொஞ்சநேரம் ஊறவைத்து பின் grill ல் அல்லது oven ல் வையுங்கள். நீண்ட நேரம் தேவையில்லை பாதி அவிந்ததும் ஒரு வெள்ளை நிறப் பால்மாதிரி வடியும். பின் எடுத்துக் குழம்பு வையுங்கள். சுவை சுப்பரோ சுப்பர். இந்த மீனில் சத்து அதிகம் உள்ளதாம். குழந்தைகளுக்கும் நல்லது. இன்னுமொருமுறை உப்பு தேசிக்காயுடன் உள்ளி இஞ்சி பேஸ்ட், உங்கள் விருப்பம் போல் தூள்வகை கலந்து ஊறவைத்து நன்றாக வேகும்வரை grill or oven il வையுங்கள். அப்படியே சாப்பிடலாம்.grill or oven இல்லையெனில் சிறிது எண்ணெய் விட்டு அடுப்பில் திருப்பி திருப்பி, மீன் துண்டுகளை வாட்டி பின் குழம்பு வையுங்கள்.
நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அதிரா தேசிக்காய் என்றால் என்ன ??
திவ்யா பிரியாணி என்றால் தன்ண்னீர் இல்லாமல் தாளித்து அரிசியை முக்கால் பத்தில் வடித்து தம் போடனும் அது தான் பிரியாணி.
புலாவ் என்றால் தாளித்து அரைக்க வேண்டியவைகளை அரைத்து ஊற்றி அப்படியே தண்ணீர் அளந்து ஊற்றி, கொதிவந்தாதும் அரிசியை களைந்து போட்டு தம்மில் விடுவது,
ஜலீலா
மீன் பொரிக்கு போது வாடை அடிக்காமல் இருக்க மீன் பொரிக்கும் போது டிரெஸெல்லாம் வாடை வரும் அதை தடுக்க கிச்சனில் ஒரு ஈர டவலை எங்காவது தொங்க விட்டு விட்டு பொரித்தால் வாடை அடிக்காது. ஜலீலா
பாலம்மு எனக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது, தேசிக்காய் என்றால் எலுமிச்சம் பழம் என்றும் சொல்வது அதாவது.......... ஜலீலா அக்கா நான் இது பற்றி கேட்க இருந்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள். மணம் வருமென்று நான் மீன் எப்போதாவதுதான் பொரிப்பேன். இனி உங்கள் முறையை செய்து பார்க்கிறேன். வீட்டில் கறிமணம் பரவாது இருக்க ஏதேனும் முறை உண்டா?
பாலம்மு எனக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது, தேசிக்காய் என்றால் எலுமிச்சம் பழம் என்றும் சொல்வது அதாவது..lime........ ஜலீலா அக்கா நான் இது பற்றி கேட்க இருந்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள். மணம் வருமென்று நான் மீன் எப்போதாவதுதான் பொரிப்பேன். இனி உங்கள் முறையை செய்து பார்க்கிறேன். வீட்டில் கறிமணம் பரவாது இருக்க ஏதேனும் முறை உண்டா?