topic_image


கிஸ்மிஸ்,முந்திரிப்பருப்பு என்றால் என்ன? இவைகளை எங்கு வாங்கலாம்? தெரிந்தவர்கள் கூறுங்கள்.

-நன்றி-


முந்திரி பருப்பு
மார்ச் 29, 2007 - 6:50am - வழங்கியவர் admin

இவ்வளவு அழகாக தமிழ் எழுதும் நீங்கள் முந்திரிபருப்பு என்றால் என்ன என்று கேள்வி எழுப்பியது ஆச்சரியத்தை உண்டாக்கினாலும், ஒருவேளை நீங்கள் இலங்கை தமிழராக இருக்க வாய்ப்புள்ளது என்று எண்ணி இங்கே பதில் கொடுக்கின்றேன்.

cashew nut என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதுதான் முந்திரிப்பருப்பு. நீங்கள் இலங்கைத் தமிழராக இருப்பின் கசுக்கொட்டை என்று சொன்னால் உங்களுக்கு விளங்கும் என்று எண்ணுகின்றேன். உங்களின் பார்வைக்கு எனது தோட்டத்தில் விளைந்த முந்திரி படத்தினை இங்கே தருகின்றேன்:-)

cashew fruit
cashew nuts 1
cashew nuts 2

உலர்ந்த திராட்சையை (Raisin) கிஸ்மிஸ் என்பர்.

Raisin

கனடாவில் அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் இதனை வாங்கலாம் என்று நம்புகின்றேன். மேலும் தகவல்கள் வேண்டும் என்றால் திருமதி. மனோகரி அவர்களை கேட்கவும். அவரும் கனடாவில் வசிப்பதால் கிடைக்கும் இடம் குறித்த சரியான தகவல்களைக் கொடுப்பார்.

wow!!!! very nice picture
மார்ச் 29, 2007 - 7:38am - வழங்கியவர் அபிரா...

பாபு அண்ணனுக்கு
உங்களிடம் இவ்வழவு அழகான முந்திரித்தோட்டம் உள்ளதா!!!? இந்தப் படத்தினைப் பார்த்ததும் அங்கு ஒரு முறை வந்து உங்கள் தோட்டத்தைச் சுற்றிப் பார்வையிடவேண்டும்போல் உள்ளது.

முந்திரித் தோட்டம்
மார்ச் 29, 2007 - 8:56am - வழங்கியவர் admin

ஒரே ஒரு முந்திரிப்பழத்தை மட்டும்தானே காண்பித்து இருந்தேன். அதை வைத்தே எங்களது அழகானத் தோட்டம் என்று முடிவு செய்துவிட்டீர்களே.. :-) ஓரளவிற்கு உண்மைதான். எங்கள் தோட்டம் என்றல்ல. கிராமத்தில் இருக்கும் தோட்டங்கள் என்றாலே அவற்றிற்கு ஒரு தனி அழகு உண்டு. எங்கள் கிராமத்து வீடும் அப்படித்தான்.

ஒருமுறை அல்ல.. எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து எங்கள் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாம். வாருங்கள்.. உங்களை மகிழ்வுடன் அழைத்து உபசரிக்கின்றோம்.

சென்ற வருடம் அறுசுவை டீம் அங்கே ஒரு விசிட் கொடுத்து, ரொம்பவே என்ஜாய் பண்ணியது. சில படங்கள் உங்கள் பார்வைக்கு..

முந்திரி மரங்கள் :-)
Village picture 1
எங்களது கிராமத்து குடில்
Village picture 2
இதுதான் எங்கள் Swimming pool
Village picture 3
இனிவரும் படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. படங்களே கதை சொல்லும்.
Village picture 4
Village picture 5
Village picture 6
Village picture 7
Village picture 8

very nice தோட்டம்
மார்ச் 29, 2007 - 9:09am - வழங்கியவர் sujathabubeshraj

பாபு அண்ணா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அண்ணா உங்க வீடு அன்ட் தோட்டம் நாகப்பட்டினத்தில் உள்ளதா உங்க கிராமம். அண்ணா அந்த போட்டாவில் இருப்பது நீங்களா?

அண்ணன் அவர்களுக்கு
மார்ச் 29, 2007 - 9:10am - வழங்கியவர் faizakader

உங்கள் கிராமத்து தோட்டம் மிகவும் அருமையாக இருக்கு.
எந்த ஊர் என்று தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

கிராமம்
மார்ச் 29, 2007 - 9:30am - வழங்கியவர் admin

வேதாரணியம் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் அது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மிகவும் பக்கம். கரியாப்பட்டினம் என்று சொன்னால் சகோதரி பாயிஜா காதர் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

சகோதரி சுஜாதா அவர்களுக்கு, எந்தப் படத்திலும் நான் இல்லை. படங்களை எடுத்தது நான் என்பதால் :-)

ஒகே அண்ணா
மார்ச் 29, 2007 - 9:55am - வழங்கியவர் sujathabubeshraj

ஒகே அண்ணா இவ்வளவு பயனுள்ள வெப் சைட்டை எங்களுக்கு அளித்த உங்களைப் பார்க்கும் ஆவலில் கேட்டேன் அண்ணா.:-(
முடிந்தால் இந்த தங்கையின் ஆவலை நிவர்த்திச் செய்யுங்களேன் அண்ணா

அருமையான கிராமம்
மார்ச் 29, 2007 - 10:00am - வழங்கியவர் ragaa

படத்தைப் பார்த்தவுடனே எனக்கு எங்கள் பாட்டி வீடுதான மனதில் வந்தது. உங்கள் வீடும் தோட்டமும் மிகவும் அழகாக இருக்கிறது. அங்கே இருந்து கொண்டுதான் அறுசுவையை நடத்தி வருகின்றீர்களா.. அறுசுவை டீம் என்று சொல்லி நிறைய பேர் படத்தைப் போட்டு உங்கள் படத்தை மட்டும் மறைத்தது நியாயமா.. உங்களைப் பார்க்கும் ஆவலில் கேட்கிறேன்.

wow..
மார்ச் 29, 2007 - 10:04am - வழங்கியவர் malar

இப்படி கொத்து கொத்தாய் மாங்காயை காமிச்சு எங்க வாயில் குடம் குடமா எச்சில் ஊற வைச்சிட்டீங்களே, அது என்ன உங்க ஊர் மரத்தில மாங்காய் எல்லாம் மண்ணுல காய்க்கிற மாதிரி இவ்வளவு கீழே காய்ச்சிருக்கு?

ரொம்பதான் பெருமை!
மார்ச் 29, 2007 - 10:26am - வழங்கியவர் Asma

வாழ்க்கையின் பெரும்பகுதி வெளிநாட்டில் கழிக்கும் எங்களுக்கு இந்தியாவின் இயற்கை அழகை இப்படியெல்லாம் காட்டி பெருமையடிக்காதீங்க! :((

எனது படங்கள்
மார்ச் 29, 2007 - 10:31am - வழங்கியவர் admin

அய்யய்யோ.. எனது படத்தை வெளியிடக்கூடாது என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. பலமுறை அறுசுவையில் எனது படம் வந்துள்ளது. கிராமத்து ட்ரிப்பில் கேமரா என் கையில் இருந்ததால் எனது படங்களை நானே எடுக்க முடியவில்லை. எனக்குத் தெரியாமல் நண்பர்கள் எடுத்த ஒன்றிரண்டு படங்களும் சரியாக வரவில்லை. நீங்களே பாருங்களேன்..

இங்கே தோளில் துண்டுடன் மாங்காய் பொறுக்கிக் கொண்டிருப்பதுதான் நான்..
Babu
இதுவும் நான்தான்
Babu
அட.. இதுவும் நான்தாங்க..
Babu

சகோதரி ராகா அவர்களுக்கு, அறுசுவையை அங்கிருந்துதான் நடத்த வேண்டும் என்று முதலில் திட்டமிட்டு இருந்தேன். சில அடிப்படை வசதிகள் அங்கே கிடைக்கவில்லை. அதனால் நாகையில் இருந்து நடத்திவருகின்றேன். விரைவில் சென்னைக்கு மாறவுள்ளோம் என்றத் தகவலையும் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.

சகோதரி மலர் அவர்களுக்கு, மாமரங்களை முறையாக காவாத்து செய்து பராமரிக்கவேண்டும். அப்போதுதான் அவை கொஞ்சம் பெரிய மரமாக மேல் நோக்கிச் செல்லும். எங்களது தோட்டத்தில் உள்ளவை சரியான பராமரிப்பு இல்லாமல் வளர்பவை. அதனால், கிளைகள் தரையில் படர்ந்தவாறு இருக்கின்றன. காய்களும் கீழே காய்க்கின்றன. மற்றபடி, சிறிய மரங்களிலும் காய்கள் கீழேதான் அதிகம் காய்க்கும்.

வெளிநாடு
மார்ச் 29, 2007 - 10:57am - வழங்கியவர் admin

சகோதரி அஸ்மா அவர்களுக்கு,

வெளிநாட்டில் இல்லாத இயற்கை அழகா.. அங்கே இயற்கையும் செயற்கையுமாய் அழகு ஏராளமாக கொட்டிக்கிடக்கும். இங்கே சிறப்பு என்னவென்றால், இருப்பவற்றை எனது தோட்டம், எனது கிராமம் என்று நாம் உரிமை கொண்டாடி பெருமை பட்டுக்கொள்ள முடியும். அங்கே கடினம். என்னதான் நான் வசிக்கும் ஊர் என்று சொல்லிக்கொண்டாலும் அந்நிய நாடு அந்நிய நாடுதான்.

நன்கு புகையட்டும்.. :-)

நன்றி அண்ணா
மார்ச் 29, 2007 - 11:20am - வழங்கியவர் sujathabubeshraj

ஐயோ எப்படி இவ்வளவு சீக்கிரம் response பண்ணீர்கள் அண்ணா. மிகவும் நன்றி அண்ணா

அழகிய கிராமம்
மார்ச் 29, 2007 - 1:50pm - வழங்கியவர் faizakader

திருத்துறைப்பூண்டியில் நான் 20 ஆண்டுகள் இருந்தேன். சுற்றி இருக்கும் கிராமகளில் வயல்களை தான் பார்த்து இருக்கேன்.
முந்திரி தோட்டம் இருப்பது இன்று தான் தெரிந்தது.
அடுத்தமுறை ஊருக்கு வரும் போது கட்டாயம் எங்கள் குடும்பத்துடன் வருகிறோம்.

நன்றி admin
மார்ச் 29, 2007 - 3:04pm - வழங்கியவர் தாரணி

நான் இலங்கைத் தமிழ் தான் அதனால் தான் இவைகளைக் கேட்டேன். நீங்கள் படத்துடனும் மிக விளக்கத்துடனும் தந்து இருக்கிறீர்கள். நான் கேட்ட வினாவுக்கு பதில் தந்ததுக்கு நன்றி நன்றி.

பாராட்டுக்கள்
மார்ச் 29, 2007 - 3:45pm - வழங்கியவர் Manohari

என்னத்தான் உங்க ஊரை படங்கள் எடுத்து பந்தா செய்துக் கொண்டாலும்,சொர்கமே என்றாலும்,எங்க மெட்ராஸை போல வருமா..,

பசுமை நிறைந்த அழகான உங்கள் ஊரையும், வீட்டையும்,குளத்தையும்,படங்களி
ல் பார்த்த போது கேரளாவை நினையுபடுத்தியது. நேயர்களின் கேள்விகளுக்கு இவ்வளவு அழகாகவும்,தெளிவாகவும் கூட பதிலளிக்கலாம் என்று நிருபித்துள்ளீர்கள்.பாராட்டுக்
கள். நன்றி.

அட்மின் படம்
மார்ச் 29, 2007 - 3:49pm - வழங்கியவர் ragaa

இப்படி முகம் தெரியாத படங்களை போடுவதற்கு சும்மாவே இருந்திருக்கலாம். உங்க முகத்தை காட்ட தயக்கமா இருந்தால் வேண்டாம். விட்டுவிடுங்கள்.

சகோதரி பாயிஜா அவர்களுக்கு
மார்ச் 29, 2007 - 3:55pm - வழங்கியவர் admin

20 ஆண்டுகள் திருத்துறைப்பூண்டியில் இருந்ததாக குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். தாங்கள் படித்ததும் திருத்துறைப்பூண்டியிலா?

சொர்க்கமே என்றாலும்
மார்ச் 29, 2007 - 4:05pm - வழங்கியவர் admin

சுத்தமான தண்ணீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், மாசற்ற காற்று, நெரிசலற்ற சாலைகள், ஒரு ஆபத்து என்றால் உடனே ஓடிவரும் நல்ல மனிதர்கள் கூட்டம், ஏமாற்று, திருட்டு பயமின்மை, செலவற்ற வாழ்க்கை, நேர்மையாய் தொழில் செய்யும் வியாபாரிகள், பிரச்சனைகள், கவலைகள் இல்லாமல் பரஸ்பரம் அன்பை பரிமாறிக்கொள்ளும் நல்ல உள்ளங்கள்.. இவை எல்லாம் அடங்கிய மெட்ராஸ் வெறும் ஊர் அல்ல.. பூலோகச் சொர்க்கமய்யா.. பூலோகச் சொர்க்கம்.

சகோதரி ராகா அவர்களுக்கு
மார்ச் 29, 2007 - 5:00pm - வழங்கியவர் admin

கிராமத்து தோட்டம் பற்றி உரையாடல் வந்ததால் கிராமத்தில் எடுத்த சில படங்களை வெளியிட்டேன். அறுசுவையில் பணியாற்றுபவர்கள் அப்போது என்னுடன் இருந்தனர். அவர்கள் படங்களை இதுவரை எங்கும் வெளியிட்டதில்லை என்பதால் இதை ஒரு வாய்ப்பாக வைத்து, அவர்கள் தடுத்த போதிலும் மீறி வேண்டுமென்றே (விளையாட்டாகத்தான்) வெளியிட்டேன். அந்த கிராமத்து சூழலில் என்னை எடுத்த படங்கள் எதுவும் நன்றாக இல்லை. (உண்மையில் என்னை படம் எடுக்க நான் அனுமதிக்கவில்லை. எடுக்கப்பட்ட சில படங்களும் எனக்குத் தெரியாமல் மற்றவர்கள் எடுத்தது. ஒன்றிலும் சரியாக எனது முகம் தெரியவில்லை. படங்கள் எடுப்பதில் எனக்கு இருக்கும் ஆர்வம், படங்கள் எடுத்துக்கொள்வதில் எப்போதும் இருந்ததில்லை.)

நீங்கள் எனது படத்தை வெளியிடுமாறு கேட்டபோது, வேறு சந்தர்ப்பங்களில் எடுத்த படங்களை இங்கே வெளியிட்டால், சப்ஜெக்ட்டிற்கு சம்பந்தமேயில்லாமல், பப்ளிசிட்டிக்காக வெளியிட்டதுபோல் இருக்குமே என்ற தயக்கத்தில் வெளியிடவில்லை. எங்கோ முந்திரிப்பருப்பில் ஆரம்பித்த உரையாடல் எனது ஊர் பெருமை பாடி முடித்து, இப்போது மெட்ராஸ் பெருமை பாடுதலில் வந்து நிற்கின்றது. இதை இதற்கு மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று நினைக்கின்றேன்.

எனது முகத்தைதானே பார்க்கவேண்டும். கீழே கொடுத்துள்ளேன். உங்கள் வீட்டுக் குழந்தைகளை எல்லாம் பார்க்கச் சொல்லவேண்டாம். அப்புறம் நடுராத்திரியில் பயந்து அழுதார்கள் என்றால் நான் பொறுப்பல்ல.

Babu

ஆ.....ஆ.... என்ன அழகு.... எத்தனை அழகு.....
மார்ச் 30, 2007 - 7:17am - வழங்கியவர் அபிரா...

பாபு அண்ணன்
"உங்களை மகிழ்வுடன் அழைத்து உபசரிக்கின்றோம்" என்ற வார்த்தையைப் பார்த்ததும் என்னை அழைத்து உபசரித்தது போன்றுள்ளது. ரொம்ப நன்றி.

ஆ.....ஆ.... என்ன அழகு...... எத்தனை அழகு......... இந்த கிராமத்து குடிலுக்கும் தோட்டத்துக்கும்தான். இந்தக் குடிலில் இருந்து ஒரு கூழ் காய்ச்சிக் குடித்தால் சொல்லவா வேண்டும் அதன் சுவையை? ஐயோ.. சொல்லவே அங்கு வந்து ஒரு கூழ் குடிக்க வேண்டும் போலுள்ளது. காலையில் குடிப்பது பழங்கஞ்சியானாலும் அந்த வாழ்விலிருந்த வசந்தத்தைத் தொலைத்து விட்டோம். என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும்... மூச்சு விடும் ஒவ்வொரு முறையும் ஊரின் நினைவையே நாங்கள் உள்வாங்குகின்றோம்.

ஆ..... இப்படி மாமரத்தைக் காட்டி வாயில் எச்சில் வரவைக்கலாமா? இது நியாயமா? அடுக்குமா? கிராமத்துக்கென்றே ஒரு தனியழகு உண்டுதான்.

"காற்றில் வரும் கீதமே......
இந்த கிராமத்தின் அழகை அறிவாயோ.....
எவர்தான் இதில் மயங்காதவருண்டோ.....

இன்னும் பாட ஆசைதான் என் மகன் விடுவதாக இல்லை. அப்படியே அறுசுவை நேயர்களுக்கும் உங்களைப் பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்துவிட்டது. இன்னொரு முறை நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன். இந்த அருமையான கிராமத்துக் காட்சிகளை தந்தமைக்கு நன்றி.

அழகு
மார்ச் 30, 2007 - 7:32am - வழங்கியவர் suganyaprakash

தங்களது முந்திரி மரத்தையும்,மாமரத்தையும் கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.எவ்வளவு கேள்வி கேட்டாலும் சலிக்காமல் அதுவும் பசுமையாக பதில் அளிப்பதில் பெருமையடைகிறோம்.நன்றி.

பாபு அண்ணாவிற்க்கு
மார்ச் 30, 2007 - 8:00am - வழங்கியவர் seyedkatheeja

உங்கள் தோட்டத்தை பார்த்ததும் ஆஹா எத்தனை அழகு என்று நினைத்தேன். ஆனால் வெளி நாட்டில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு நீங்கள் சொல்வது உண்மைதான் என்னதான் அடுத்த நாட்டில் இருந்தாலும் நம்ம நாடு என்னைக்குமே நம்ம நாடுதான் அதுக்கு இணை எங்கும் கிடைக்காது. நான் எப்பொழுதும் எந்த ஊருக்கு போனாலும் நம்ம ஊருக்கு வந்து இருக்கும் நாட்களின் சந்தோஷம் இருக்கே அது ஒரு தனி சுகம்.இது அடுத்த நாட்டில் கிடைப்பது இல்லை அருகில் இருப்பவர்களே யார் என்று தெரியாது. நம்ம ஊரில் அப்படியா என்னதான் தெரியாதவர்களாக இருந்தாலும் ஒரு நட்பு,பாசம் எப்படியும் உருவாகிவிடும். ஆனால் வெளி நாட்டில் அதை எதிர் பார்க்க முடியாது. பாபு அண்ணா உங்கள் போட்டோவை எங்கள் வீட்டு குழந்தைகளிடம் காமிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறீர்களே இது உங்களுக்கே ரெம்பவும் ஓவரா தெரியலை.எங்கள் பாபு அண்ணா நன்றாக உள்ளார் .நீங்கள் எல்லருடைய கேள்விக்கும் மிக பொருமையாகவும் அதே சமயம் அக்கரையுடனும் பதில் அளிக்கும் உங்களுக்கு அறுசுவை நேயர் அனைவரின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள்கிறேன்.
நன்றி.

பாபு அண்ணனுக்கு
மார்ச் 30, 2007 - 9:31am - வழங்கியவர் julaiha

ஏன் நாகையில் இருந்து சென்னைக்கு மாறபோகிறீர்கள் வசதிகள் குறைவாக இருப்பதற்காகவா....? நாகையில் அறுசுவை நடந்துக்கொண்டு இருப்பது எனக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது... (நெருங்கிய ஊர் அல்லவா)

சென்னை
மார்ச் 30, 2007 - 10:03am - வழங்கியவர் admin

காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம். Forth Vision Media Pvt Ltd என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளோம். இதற்கான அலுவலகம் சென்னையில் அமையவுள்ளது. ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் சென்னை அலுவலகப் பிரிவு செயலாற்றத் தொடங்கிவிடும். அறுசுவை அதனுடைய ஒரு அங்கமாக இருக்கும். அறுசுவை மட்டுமன்றி இன்னும் பயனுள்ள பல இணையத்தளங்களை (குறிப்பாக மகளிருக்கு பயனுள்ள தளங்களை) தொடங்கவுள்ளோம். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது. (புதிய இணையத்தளங்கள் எப்படி இருக்கலாம் என்பது குறித்த உங்களது ஆலோசனைகள், தேவைகளை தெரியப்படுத்தலாம்.)

நாகையிலும் ஒரு பிரிவு தொடர்ந்து இயங்கிவரும். சென்னை மட்டுமல்ல, எங்களது திட்டங்கள் நல்ல முறையில் வெற்றி பெற்றால், விரைவில் இந்தியாவின் பெரிய நகரங்கள் அனைத்திலும் அறுசுவை அலுவலகங்கள் திறக்கப்படும். அறுசுவை தளத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளித்துவரும் நேயர்களை பங்குதாரர்களாக்கி அவர்களும் பயனுறும் வண்ணம் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டங்கள் பல உள்ளன. சிறிது காலம் செல்லட்டும். அவற்றைப் பற்றின விபரங்களை பின்னர் தருகின்றேன்.

Best Wishes
மார்ச் 30, 2007 - 11:58am - வழங்கியவர் sekar

Best wishes on your new venture. Good to see the growth of Arusuvai.

வாழ்த்துகள்
மார்ச் 30, 2007 - 12:22pm - வழங்கியவர் ragaa

ஒருவழியா உங்க முகத்தை காண்பிச்சதற்கு ரொம்ப நன்றி. அவ்வளவு பயப்படுற மாதிரி இல்லை.

உங்க புதிய நிறுவனம் பலபல வெற்றிகளை கண்டு இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமா வருவதற்கு எங்களது அட்வான்ஸ் வாழ்த்துகள். எங்கள் ஆதரவு அறுசுவைக்கு எப்போதும் உண்டு.

பாபு அண்ணனுக்கு
மார்ச் 30, 2007 - 2:36pm - வழங்கியவர் ஹவ்வா...

உங்கள் தோட்டத்தை பார்த்ததும் எங்கள் தோட்டம் ஞாபகம் வந்தது . அதில் காய் பழங்கள் பறித்து சாப்பிடுவது மிக ஆனந்தம் ஆனால் வெளி நாட்டில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்னதான் அடுத்த நாட்டில் இருந்தாலும் நம்ம நாடு என்னைக்குமே நம்ம நாடுதான் அதுக்கு இணை எங்கும் கிடைக்காது. ஊருக்கு வந்து இருக்கும் நாட்களின் சந்தோஷம் இருக்கே அது ஒரு தனி சுகம்.உன்டு .நீங்கள் உங்கள் நேரங்களை எல்லோருடைய கேள்விக்கும் மிக அக்கரையுடனும் பதில் அளிக்கும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள்கிறேன்.
நன்றி.

அறுசுவை டீம்
மார்ச் 30, 2007 - 11:10pm - வழங்கியவர் Manohari

திரு அட்மின் அவர்களுக்கு, உங்களையும், அறுசுவை டீமையும் ஃபோட்டோ வில் பார்தாகி விட்டது.அவர்களின் பெயர்களை எங்களுக்கு கூறி அறிமுகப்படுத்தலாமே. மிஸ் நிரஞ்ஜனா ஃபோட்டோவில் இல்லை என்று நினைக்கின்றேன். விசிட் செய்ய வரவில்லையா உங்களுடன்.நன்றி.

அறிமுகம்
மார்ச் 31, 2007 - 2:54am - வழங்கியவர் admin

மன்னிக்கவும். படங்களை வெளியிட்டபோதே அவர்கள் பெயர் விபரங்களையும் குறிப்பிட விரும்பினேன். அவர்கள் பெயர் விபரங்கள் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் கொடுக்கவில்லை. நிரஞ்சனா வெளியூரில் வசிக்கின்றார். அந்த டிரிப்பில் அவர் இல்லையே என்று புலம்பி தீர்த்துவிட்டார்.

67 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »