topic_image


வணக்கம்,

யாருக்காவது "Paprika" பொடி பற்றி தெரியுமா? அதை எப்படி, எந்த உணவு வகைகளில் சேர்க்கலாம்?


hai
ஆகஸ்டு 8, 2007 - 6:57pm - வழங்கியவர் Subha Jayaprakash

பாப்ரிக்கா என்றால் (red pepper) "சிவப்பு குடை மிளகாய் " என்று அர்த்தம்.

Paprika Powder
ஆகஸ்டு 8, 2007 - 10:15pm - வழங்கியவர் vinnie

Dear Sanjuswetha

சிகப்பு குடை மிளகாயை விதையுடன் அரைத்து செய்யப்படுவதுதான் பாப்ரிக்கா பொடி. இது ஹங்கேரி, ஸ்பானிஷ் போன்ற சமையல்கலில் உபயோகிக்கப்படுகிறது. இதை சுவையூட்டவும்(seasoning ) பயன்படுத்தலாம். பார்க்க நம் மிளகாபொடிப்போல இருக்கும். ஆனால் மைல்ட், ஸ்வீட் பாப்ரிக்காவில் சுத்தமாக காரம் இருக்காது. ஹாட் பாப்ரிக்கா எந்த அளவு காரம் என தெரியவில்லை.

நம் சமையலில் மிளகாய்பொடிக்கு பதில் சேர்க்கலாம். நல்ல கலர் கிடைக்கும். ஆனால் காரமே இருக்காது. அதிக நேரம் அடுப்பில் வைத்து செய்யும் உணவுகளில் இறக்குவதற்கு 5 நிமிடம் முன் சேர்த்தால் போதும்.