ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
மாங்காய் சாம்பார் செய்வது எப்படி ?? யாராவது சொல்லுங்களேன் .........
அனிதா
(150 கிராம்) துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும். ஒரு பெரிய நெல்லிக்காயளவு புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டி மசித்த பருப்புடன் சேர்க்கவும். 1 1/2 மேசைக்கரண்டி சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். புளி வாசம் போன பின், 1 மாங்காயை வெட்டி (கொஞ்சம் பெரிதாக) சாம்பாரில் போடவும். 1 கொதியில் மாங்காய் வெந்து விடும். இறக்கி விட்டு, 1 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கி, 1/2 தேக்கரண்டி கடுகு, சிறிது பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். மாங்காய் சாம்பார் 8 திக்கும் மணக்கும் (குறிப்பாக ஏன் மாங்காய் சாம்பார்? விசேஷமா?) வாழ்த்துக்கள், நன்றி. அன்புடன், செல்வி.
டியர் செல்வி ,
உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி. இந்த முறை மாங்காய் வாங்கினேன். சும்மா செய்யலாமே என்று கேட்டேன். மிச்ச படி விசேஷம் எதுவும் இல்லை.......
நாளை சாம்பார் செய்கிறேன். வாசனை பாண்டிச்சேரிக்கு வந்ததா என்று சொல்லுங்கள் .....ஹாஹாஹா :)
மாங்காய் சாம்பாரில் ஏற்கனவே,புளிப்பு இருக்கும் அல்லவா? பிறகு,எதற்கு புளி? ரொம்பவும் புளிப்பு அதிகம் இருக்கும் அல்லவா?
ஹாய் அனிதா, இன்னும் வாசனை இங்கு வரல. அதனாலென்ன? மாங்காய் வந்தபின் விசேஷம் வரட்டுமே. வாழ்த்துக்கள், நன்றி. அன்புடன், செல்வி.
ஹாய் விமலா, எப்படியிருக்கீங்க? புளி ஊற்றினால் தான் சாம்பார், இல்லையெனில் அது கூட்டு. மாங்காயில் புளிப்பு இருப்பதால் தான் புளியின் அளவை மிகக் குறைவாகக் கொடுத்துள்ளேன். தக்காளியும் சேர்க்கவில்லை. சில மாங்காய்கள் புளிக்கவே புளிக்காது, அப்படியிருக்கும் பட்சத்தில் கொஞ்சம் அளவு புளியாவது சேர்த்தால் தான் சாம்பார் ருசியாக இருக்கும். நன்றி. அன்புடன், செல்வி.
நான் நலம். நீங்கள் நலமா? எனக்கு புளிப்பு பிடிக்கும்!:) ஆனால் என் அய்த்தானுக்கு புளிப்பு என்றாலே அலர்ஜி :( அதானால்தான் கேட்டேன். நான் செய்து விட்டு சொல்கிறேன். அன்புடன் விமலா
ஹலோ செல்வி
எனது தாமதமான பதிலுக்கு மண்ணிக்கவும். மாங்காய் சாம்பார் அருமையாக இருந்தது. மிக்க நன்றி.
உங்க மாங்கா சாம்பார் எங்க அம்மா பண்றது போலவே இருக்கு. படிக்கும் போதே நா ஊறுது.
ஹாய் ஹர்ஷினி, எப்படியிருக்கீங்க? நீங்களும் என்ன அம்மான்னே கூப்பிடலாம், ஆனா உங்க வயசு 27க்குள்ள தானிருக்கணும் :-). வாழ்த்துக்கள். நன்றி. அன்புடன், செல்வி.
ஹாய் அனிதா, மாங்காய் சாம்பார் அருமையாக செய்ததற்கு வாழ்த்துக்கள். இனிமேல் யாருக்கேனும் மாங்காய் சாம்பார் வேண்டுமானால், உங்க வீட்டுக்கு அனுப்பிடலாம். சரியா? அன்புடன், செல்வி.
ஹாய் செல்வி,
தாரளமாக அனுப்பலாம். எனக்கு சமையலில் அவ்வளவாக அனுபவம் இல்லை. எதோ அருசுவை புண்ணியத்துல வாழ்க்கை ஓடுது.ஹா ஹா ஹா..... முன்பெல்லாம் அம்மவுக்கு போன் போட்டு சந்தேகம் கேட்பேன். இப்போது டைப் அடிக்கிறேன். அம்மாவிற்க்கு ஈடாக அருசுவை உள்ளது. மிக்க நன்றி.
அன்புள்ள செல்வி அம்மா,
இப்பதைக்கு, எனக்கு 26 வயசு தான். அதனால உங்களை அம்மான்னு தான் கூப்பிடப்போறேன். சரிங்கலா. உங்கள எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு :). உங்களொட நேர்ல பேசறதுபோலவே இருக்கு.
அன்புடன் ஹர்ஷினி :)