![]() உடல் எடை குறைவதற்கு: 1)இலகுவாக ஒரு கிழமைக்கு ஒரு பவுண்ட் நிறை வீதம் நீங்கள் குறைக்க விரும்பினால், உங்களிற்கு தினமும் எவ்வளவு கலோரி தேவை என்பதை கணக்கிடுங்கள்*. அதிலிருந்து 500 கலோரியை கழித்துவிட்டு மீதமுள்ள கலோரிக்கேற்றவாறு விரும்பிய உணவினை உட்கொள்ளுங்கள். *உங்களிற்கு தினமும் எவ்வளவு கலோரி தேவை என்பதை பின்வரும் முறையில் கணிக்கலாம்.(பெண்களுக்கு) நீங்கள் குறைவான உடற்பயிற்சி செய்பவராயின் : (Light Exercise) நீங்கள் அளவான/சாதாரணமான உடற்பயிற்சி செய்பவராயின் : (Moderate Exercise) நீங்கள் சிறிது கடினமான உடற்பயிற்சி செய்பவராயின் : (Moderate Heavy Exercise) நீங்கள் கடினமான உடற்பயிற்சி செய்பவராயின் : (Heavy Exercise) 2)ஒரு கிழமைக்கு இரண்டு பவுண்ட் நிறை வீதம் நீங்கள் குறைக்க விரும்பினால் நாளொன்றுக்கு மேலும் 500 கலோரி விரையமாகும்படி உங்களது உடற்பயிற்சியின் அளவை கூட்டுங்கள். 3) நிறைய நார்ச்சத்து உள்ள உணவுகளை (fiber content food)உட்கொள்ளுங்கள். 4) நிறைய தண்ணீர் அருந்துங்கள். ஒரு கிழமைக்கு 1 அல்லது 2 பவுண்ட்ஸ் வீதம் குறைப்பது ஆரோக்கியமானது. இதற்கு மேல் குறைப்பதற்காக மேலும் உணவை குறைத்தால் உங்களது உடல் மெட்டபோலிஸம் பாதிப்படையும். அத்தோடு தலைசுத்தல், மயக்கம், சோர்வு எல்லாம் வரும். எனவே சீராக எடையை குறைப்பது நல்லது. (கலோரியை பார்த்து, பார்த்து சாப்பாட்டை நிறுத்து, நிறுத்து சாப்பிடுவது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். இதுக்கு குண்டாவே இருக்கலாம் எண்டும் நினைக்க தோன்றும். ஆனால் போக போக பழகி விடும்) உணவுகளின் கலோரி அளவினை அறிவதற்கு எத்தனையோ இணைய தளங்கள் உள்ளன. [அறுசுவையிலும் இதற்கான பக்கம் ஒன்றை கொண்டு வரப் போவதாக பாபு அண்ணா சொன்ன நினைவு:)] அத்தோடு நாம் வாங்கும் packet அல்லது canned உணவுப் பொருட்களிலும் Nutrition Facts போட்டிருப்பார்கள். எனவே எமக்கு தேவையான கலோரி அளவை கணிப்பது சுலபம். இந்த குறிப்பு உண்மையிலேயே எனக்கு பயனளித்தது. அதனால் தான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த calculations பற்றி இங்கு தொலைக்காட்சியிலும் (KCTSஇல்)பல programmes பார்த்து இருக்கிறேன். Green Teaஉம் உடல் மெலிவதற்கு நல்லது என்று கேள்விப்பட்டேன். நிறைய இணய தளங்களிலும் பார்த்தேன்.அத்தோடு இது Cancer வராமல் பாதுகாக்கும் எண்டும் வாசித்தேன். ஆனால் இதற்கு விஞ்ஞானபூர்வமான விளக்கம் இல்லை. யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள். எல்லாரும் இப்படி ஏதாவது பண்ணி ஸ்லிம் பியூட்டி ஆகி விட்டால் கஷ்டம்தான். :)) -நர்மதா பி.கு: யாராவது இதை முயற்சித்து பார்த்து விட்டு பயனளித்ததா என்று கூறுங்கள்.:) ஆகஸ்டு 14, 2007 - 9:59pm - வழங்கியவர் Nila2006
|

