ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
இணைய தளங்களில் வரும் MP3பாடல்களை download செய்வது பாதுகாப்பானதா?
என் வாழ்கைல பாதிய mp3 download பன்ரதுக்கு தான் செலவு பன்ரேன் நர்மதா..அது பாதுகாப்பானது தான்...நீங்க virus க்கு தான் பயபடுரீங்கன்னா முதல்ல ஒரு antivirus software install பன்னிட்டு அப்ரம் பாட்டு download பன்னுங்க..அப்ரம் இடையிடையே antivirus live apdates பன்னுங்க..அத தான் mean பன்னுனீங்கலா?இல்ல நான் தான் ஒளரிட்டேனா?
ஹாய் தளிகா, மிக்க நன்றி. நான் virusக்கு பயப்படல்லை. Spy ware எதுவும் install ஆகிடுமோ எண்டு தான் யோசிக்கிறேன். அதுதான் கேட்டேன். என் கணவர் சில வேளைகளில் வீட்டில் இருந்தும் வேலை செய்வார். அதனால் கண்டபடி தெரியாத தளங்களில் இருந்தெல்லாம் டவுண்லோட் செய்யாதீங்க எண்டு சொல்லுவார். நானும் இதுவரைக்கும் பாடல்கள் எதுவும் டவுண்லோட் செய்ததில்லை. என்னிடம் இருக்கும் பாடல்கள் எல்லாம் கொஞ்சம் பழசாகிடுத்து. புதுபாடல் கொஞ்சம் டவுண்லோட் செய்ய நினைத்தேன். மற்றபடி என்னுடைய PC virus freeதான். நீங்க எந்த தளங்களில் இருந்து டவுண்லோட் செய்வீர்கள்? வெப் அட்ரஸ் தருவீங்களா?
நீங்க எழுதரது படிக்க நல்லா இருக்கு...கன்னத்தில் முத்தமிட்டால்படத்துல பேசர மாதிரி.....எனக்கு இலங்கைகாரர்கள் பேசரது புடிக்கும்...எப்பவும் இலங்கை ரேடியோ கேட்டுட்டு இருப்பேன்...அப்ப இனி க்ரீன் டீ போட்டு குடிக்கவேன்டியது தான்...ஸ்பய்வேர் பத்தி நான் கவல பட்டதில்ல..அப்டி பயம்னா antispyware install பன்னிக்கொங்க:-)......இப்ப தான் எல்லத்துக்கும் vaccine வெச்சிருக்கஙளே....எனக்கு இதுவரை அப்டி spyware எதுவும் கிடைச்சதில்ல...அப்டி கெடச்சாலும் என் pc இல அப்டி எதுவும் interestingaa .....நான் ஒவ்வொரு தடவ ஒவ்வொரு websiteல போய் song download பன்வேன்...அதிகம\\
www.coolgoose.com(cooltoad.com ) www.desitorrents.com அப்ரம் எதாவது torrentsக்கு போய் பன்வேன்...இதுல coolgooseலயே உங்கலுக்கு almost எல்லா songsஉம் கிடைக்கும் நர்மதா.
நர்மதா பாட்டு download பன்ரதுல வருமான்னு ஒரு சந்தேகமிருக்கு..வராதுன்னே நினைக்கிறென்...அதாவது இந்த spyware அதிகம வேர எதாவது பேர்ல தான் வரும்...அதாவது எதாவது software download பன்ன போய் எதோ ரொம்ப useful software போல பேர் வெச்சிருப்பங்க..னாமலும் அத நம்பி install பன்னிருவோம்...அப்டி தான் அதிகம வரும்..mp3 songல வராதுன்னே நினைகிரேன்..அப்டியே வர்ரதா இருந்தாலும் அது அதிகம.exe la தான் வருது....means if u try to download ne songs n it says itz a software n if u double click it it automatically displays songs apdinnu irundhaa..it means there iz a threat of spyware....n if u feel any change in pc's performance..itz better to format the pc n reinstall it....adhigama spysweeper dhaan waan use panniyirukken...adhu www.mininova.org la poi paatha kidaikumnu nnenakiren...confuse aaiduchaa?
நர்மதா,
tamilbeat.com ல போய் பாருங்க. தரமான MP3 சாங்க்ஸ் கிடைக்கும்.
அன்புடன் ஹர்ஷினி :)
நன்றி ஹர்ஷினி. நான் tamilbeat.comலதான் கொஞ்ச பாட்டு எடுத்தேன். ஆனா எல்லா புதுப்பாட்டும் அங்கு இல்லை. பரவாயில்லை. எடுத்தவரைக்கும் போதும் :) -நர்மதா :)
ஹலோ தளிகா, நான் சில ஒப்ஷன்ஸ் பண்ணி வச்சிருக்கிறேன். அதனால www.cooglegoose.com எனக்கு வருதில்லை. www.desitorrents.com லொகின் பண்ணினால்தான் உள்ளே விடும். அதனாலே நான் அங்கு போகலை. Anyway .........accept my late thanks. -நர்மதா :)
http://tamil.geethams.com/? id=15&View=all இந்த தளத்துல போய் பாருங்க. latest pOsts click பண்ணி sort பண்ணா புதுப்பாட்டெல்லாம் கிடைக்கும். பாருங்க, உங்களுக்கு தேவையான சாங்க்ஸ் இங்க இருக்கா, என்று.
I just purchased an ipod. Can anybody tell me how to download Tamil songs to ipod Now I download the songs to cd and then transfer to ipod.
Is there any way I can download Tamil songs directly to ipod. Help.
ஹர்ஷினி, என் பெண் கீபோர்டில் பழைய பாடல்களை வாசிக்க ஆசைப்படுகிறாள். பழைய பாடல்களின் சைட் கொடுங்களேன். அன்புடன் ஜெயந்தி
ஜெயந்தி மேடம்,
www.oruwebsite.com இந்த வெப் சைட்ல போய் பாருங்களேன். பழைய பாடல்கள் நிறைய கிடைக்கும்.
என்றென்றும் அன்புடன் ரீஹா :-)
ஒரு நல்ல இணைய தளம் பழைய பாடல்களுக்காக தந்ததற்கு மிகவும் நன்றி!
மலையாள MP3 திரைப்படப்பாடல்களுக்கான நல்ல இணைய தளங்கள் இருந்தால் எழுதுங்களேன்!
பழைய தமிழ்த் திரைப்படப்பாடல்களுக்கான மேலும் சில இணைய தளங்களைப்பற்றி நான் இன்னும் சில தினங்களில் எழுதுகிறேன்.
மனோ மேடம் அவர்களுக்கு,
நல்லா இருக்கீங்களா மேடம். உங்க கூட நா பேசினது கெடயாது இதுதான் முதல் தடவை. உங்க சமையல் குறிப்புகளெல்லாம் நான் ட்ரை பண்ணி பாத்துருக்கேன். உங்க குறிப்புகளெல்லாம் அருமையா இருக்கும். www.raaga.com இந்த வெப்சைட்ல தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இன்னும் நெறய லாங்குவேஜ்ல பாடல்கள் கேக்கலாம்.
அன்புள்ள ரீஹா!
உங்களின் அன்பான விசாரிப்பும் என் சமையல் குறிப்புகளுக்கு தந்த பின்னூட்டமும் உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தந்தது. www.raaga.com ஏற்கனவே எனது bookmark-ல் உள்ளது. இருப்பினும் அதை எழுதியதற்கு மறுபடியும் தாஙக்ஸ்!
நானும் ஒரு படத்தின் பாடல்களை தேடிக் கொண்டிருக்கின்றேன். கிடைக்கவில்லை. யாருக்கேனும் கிடைத்தால் இங்கே கொஞ்சம் லிங்க் கொடுங்கள். புண்ணியம் கிட்டும்.
படம்: தூரம் அதிகமில்லை. நாயகன்,நாயகி: கார்த்திக்,விஜி இசை: சங்கர் கணேஷ் டைரக்ஷன்: ராபர்ட் ராஜசேகர்
அப்புறம் 'அந்தி மாலை கோவில் வந்தேன்' என்று ஒரு (ஜானகி?) பாடல். படம் பெயர் தெரியவில்லை. அதுவும் கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம்.
....உங்கள் குறிப்பில் காய்கறி கீரை செய்து பார்த்துவிட்டேன்..அருமை அருமை.....நான் டவுன்லோட் செய்வது
www.cooltoad.com www.mp3.sajith.com www.mallutorrents.com இப்பொழுது தான் பிசி ஃபார்மேட் செய்ததால் இன்னும் என்னுடைய ஃபேவரைட்ஸ் இம்போர்ட் செய்யப் படவில்லை..செய்ததும் இன்னும் லின்க் ஏதும் இருந்தால் உங்களுக்கு அனுப்புகிரேன்
தளிகா:-)
'காய்கறி கீருக்கான பின்னூட்டம் மிகவும் மகிழ்வைத்தந்தது. அதற்கும் மலையாள பாடல்களுக்கான வலைத்தளங்களுக்கும் என் நன்றி!
//'அந்தி மாலை கோவில் வந்தேன்' //
நீங்க தேடிட்டு இருக்கும் பாட்டு ஏ.ஆர். ரஹ்மானோட "அந்தி மாலை" அப்டீன்ற ஆல்பத்துல உள்ள பாட்டா? இந்த பாட்ட ஜானகி தான் பாடி இருக்காங்க. நீங்க நினைக்கிற பாட்டு இதுவா? இல்ல வேற படத்துல உள்ள பாட்டா? நான் தப்பா சொல்றேனோ?
அன்புள்ள அட்மின் அண்ணாவிற்கு,
தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் "அந்திமாலை கோவில் வந்தேன்" என்பது சினிமாப்பாடல் இல்லை, ஜானகியின் அந்திமாலை என்ற ஆல்பத்தில் உள்ள பாடல்.
(எனக்கு சொர்க்கம் நிச்சயம்தானே?):-D
நன்றி, மீண்டும் சந்திப்போம்.
சகோதரிகள் ரீஹா மற்றும் சாந்தா அவர்களுக்கு மிக்க நன்றி.
அது ஆல்பம் பாடலா, படப்பாடலா என்பது எனக்கு தெரியவில்லை. 7 வருடங்களுக்கு முன்பு அந்த பாடலை சில முறை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. குரலை வைத்து ஜானகியாக இருக்கலாம் என்று யூகித்தேன். மற்றபடி அது எந்த படம் என்பதெல்லாம் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிடும் அந்த ஆல்ப பாடலாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். விரைவில் வாங்கிவிடுகின்றேன். இணையத்தில் எங்கேனும் அது இருந்தால் அந்த link ம் கொடுங்கள். உங்களுக்கு சொர்க்கத்தில் பிரமோஷனும் கிடைக்கும் :-)
Do u know isaitamil.net ?its a free website ,first u have to register free and see live ktv,sun tv,vijay tv and all recorded shows.sorry for typing in english
அண்ணா,
நீங்க கேட்ட பாட்டு இதோ:-)
http://www.mediafire.com/? 6l9xzgcm0gh
டவுன்லோட் செஞ்சு கேளுங்க:-)
அன்பு தங்கைக்கு,
நன்றி. நன்றி. நன்றி.. :-)
உண்மையில் சந்தோசத்தில் குதித்து கொண்டிருக்கின்றேன். 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த பாடலைக் கேட்கின்றேன். டவுன்லோடு செய்து எனது மொபைலுக்கும் ட்ரான்ஸ்பர் செய்துவிட்டேன். இன்று முழுவதும் அந்த பாட்டுதான் ஓடிக்கொண்டிருக்கும். :-)
அன்புள்ள ஹர்ஷிணி!
உங்கள் அண்ணனுக்கு அனுப்பிய பாடலை நானும் டவுண்லோட் செய்து கேட்டேன். இது ஒரு மலையாளப்பாடலின் தழுவல் என்றாலும் தமிழில் மிகவும் நன்றாக இருந்தது.
நீங்க எப்டி மலயாளப் பாடலை பத்தி தெரிஞ்சு வெச்சிருக்கீங்க?சும்மா இன்டெரெஸ்டா?என்ன சொல்லூங்க பர்வீன் வெளிநாட்டுக்கு போனா தான் நம்ம நாட்டு அருமை புரியும்ன மாதிரி நம்ம தாய்மொழி விஷயமா மத்தவங்க சொன்னா என்னவோ ஒரு பற்று என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்க. நீங்களும் நல்ல இசைபிரியைன்னு நெனக்கிரேன்.சரியா?
அன்புள்ள தாளிகா!
நான் நீங்கள் சொன்னதுமாதிரி ஒரு இசைப்பிரியைதான். கர்நாடக சங்கீதம் சிறு வயதில் முழுமையாகக் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறேன். ஆனால் இங்கு வந்த பிறகு என் சங்கீத ரசனை மலையாளம், ஆங்கிலம் என்று விரிவடைந்து விட்டது. நான் இங்கு வந்ததிலிருந்து கடந்த 30 வருடங்களாக நல்ல மலையாளத்திரைப்படப்பாடல்களை சேகரித்து வருகிறேன். இந்தப் பாடல்கூட ஜெயராம், ரேகா நடித்த [படம் நினைவில்லை] ஒரு படத்தில் 'ஏதோ வார்முகிலின் கினாவில் முத்தாய் நீ' என்று தொடங்கும் பாடல். கேட்டிருக்கிறீர்களா? தமிழ்த்திரைப்படங்களைவிட மலையளப்படங்களைத்தான் அதிகம் பார்ப்பேன்.
ஆன் இந்த பாட்டை கேட்டிருக்கேன்..andhi மாலையும் கேட்டிருக்கேன்..ஆனால் இந்த ரெண்டும் ஒரு போலன்னு இப்ப நீங்க சொன்னப்ப தான் புரியுது..படங்களைப் பொருத்தவரை எனக்கு பொறுமையில்லை..அதனால நடிகர் நடிகை பேர் கூட அவ்வளவா தெரியாது. ஆனால் நல்ல படங்கள்னு தோனினா கன்டிப்பா பாப்பேன்..உதா: அச்சுவின்டே அம்ம.. நீங்க சங்கீதம் படிச்சிருகீங்களா? இப்ப பாடுரதுண்டா?நீங்க பாடுரதை கேக்க ஏதாவது வழி இருக்கா??பாடி அப்லோட் பன்னிட்டு சொல்லூங்களேன்..ஏஷியானெட்டில் ஐடியா ஸ்டார் சிங்கெர் பார்ப்பதுண்டா?.எனக்கு சின்ன வயசில் சங்கீதம் படிக்க ரொம்ம்ப ஆசை ஆனா நடக்கல சில காரணத்துநால. இப்ப ஹிந்துஸ்தானி தான் புடிச்சிருக்கு. என் பொண்ணுக்கு இன்டெரெஸ்ட் இருந்தா படிக்க வெச்சுடனும்...ரெண்டு நாள் முன்ன சித்ரால்லாம் அபு தாபிக்கி ஏதோ ஒரு கன்சேர்ட்கு வந்தாங்க..எனக்க்கு ஆசை..என் பொண்ணு உக்கார மாட்டான்னு போல...எனக்கு ஒரே சந்தோஷன் நீங்க இசைபிரியைன்னதும்.
உங்கள் பதில் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. அருமையான மலையாளப்பாடல்களின் கலெக்ஷன் ஒன்றை ஏற்கனவே திரு. பாபுவிற்குக் கொடுத்துள்ளேன். இப்போது அதிகம் பாடுவதில்லை. அதற்கு பயிற்சி முக்கியம். False voiceல் தான் எப்போதும் பாடுவேன். ஊருக்குப் போனால் தோழியருடன் ராகங்கள் பற்றிய ஆராய்ச்சி, ரசிப்பு என்று எப்போதும் இருக்கும். இப்போதுகூட ஊருக்குத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.[இன்று மாலை] ஏஷியா நெட்டில் எப்போதாவது அந்த ப்ரோகிராம் பார்ப்பேன். நேரம் இருப்பதில்லை. இப்போது 'வடக்கும்நாதன்' பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஜெயா டிவி-ல் 'என்னோடு பாட்டு பாடுங்கள்' என்ர ஒரு மியூசிக் ப்ரோகிராம் வருகிறது. அவசியம் பாருங்கள். 2 மாதம் முன்பு நாங்களும் துபாய் அல் நாசர் லெஷர்லாண்டில் பாடகர்கள் சீனிவாஸ், ஹரிணி, மனோ, சுஜாதாவை வைத்து ஒரு இன்னிசை நிகழ்ச்சி செய்தோம். நவம்பர் முதல் வாரம் இலையராஜா தலைமையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரு மெகா இன்னிசை நிகழ்ச்சி உள்ளது. அதுவும்கூட எங்களுக்கு தெரிந்தவர்கள்தான் செய்கிறார்கள்.