topic_image


மன்றத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட ஒரு விவாதத்தின் தொடர்ச்சியாக இதனை எடுத்துக்கொள்ளலாம். மேற்கொண்டு இங்கே கலந்துரையாடலாம். தயவுசெய்து இந்திய தேசப்பற்றினை காண்பிக்கின்றேன் என்று ஒரேடியாக "இந்திய வாழ்க்கைதான் பிடிக்கும்" என்று கருத்துக்கள் வைக்க வேண்டாம். உங்கள் மனதைத் தொட்டு உண்மையான கருத்துக்களை எடுத்து வையுங்கள்.

கேட்ட சர்டிபிகேட்ஸ், கேட்காத காகிதங்கள், கிடைக்குமா கிடைக்காதா தவிப்பு, கிடைப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை எப்படியாவது செய்தல், எதை இழந்தாவது இதை பெற வேண்டும் என்ற ஆர்வம், அப்படி இப்படி எல்லா பகீரதப் பிரயத்தனமும் செய்து, ஒருவழியாய் க்ரீன் கார்டு வாங்கி அப்பாடா என்று மூச்சுவிட்டுவிட்டு, இப்ப சொல்றேன், இந்தியா மாதிரி ஒரு நாடு, அங்க உள்ள வாழ்க்கை உலகில் எங்கேயும் இல்லை என்று உங்கள் தேசப்பற்றைக் காட்டி புலங்காகிதம் அடையச் செய்யவேண்டாம்.

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.." என்று கேள்வி கேட்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

வெறும் பணத்திற்காக மட்டும்தான் நீங்கள் வெளிநாட்டில் வசிக்கின்றீர்களா?

அப்படி பணத்திற்காகத்தான் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் இந்தியாவில் யாரும் சம்பாதிப்பதே இல்லையா? இல்லை இந்தியாவில் சம்பாதிக்க எனக்கு திறமை இல்லை என்பதை ஒத்துக் கொண்டு நீங்கள் வெளிநாடு சென்றீர்களா? இல்லை உங்கள் திறமைக்கு இங்கே அங்கீகாரம் இல்லை என்று நினைக்கின்றீர்களா?

இந்தியாதான் சிறந்த நாடு என்பவர்கள் வேறு வழியில்லை, இங்கே பிறந்துவிட்டோம், அதனால் அப்படித்தானே சொல்லியாக வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்கின்றீர்களா?

உண்மையில் இந்தியாவில் உங்களுக்கு பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? பிரச்சனைகள் என்ன? தீர்வுகள் என்ன?

இந்தியா வளரும் நாடு என்று சொல்லியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்ள போகின்றோம். எந்த நாடு வளராத நாடு? எந்த நாடு வளர்ந்து முடிந்துவிட்ட நாடு? எல்லா நாடுகளுமே வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள்தானே.. நாம் ஒரு படி ஏறுவதற்குள் மற்றவர்கள் நான்கு படி மேலே போய்விடுகின்றார்களே.. ஏற்கனவே ஒரு பெரிய இடைவெளி இருக்கின்றது. இதில் முன்னேற்ற விகிதம் இப்படி 1:4 என்று இருந்தால் நாம் என்று அவர்களை தொடுவது? இதற்கு என்ன செய்யவேண்டும்? எங்கே தவறுகள்?

அனைத்தையும் ஆராயலாம்.. வாருங்கள். எழுதிடுங்கள் உங்கள் எண்ணங்களை..


அன்பின் பாபு அண்ணாவிற்கு,
அக்டோபர் 18, 2007 - 12:13pm - வழங்கியவர் shantha

அன்பின் பாபு அண்ணாவிற்கு,
விவாதத்தில் பங்குகொள்பவர்கள் இந்தியாவை மாத்திரம்தான் தாய் நாடாகக்கொண்டிருப்பார்கள் என்றில்லை,இலங்கையைத்தாய் நாடாகக் கொண்டவர்களும் அறுசுவையின் உறுப்பினர்களாகவுள்ளனர். கருத்தெடுப்பிலும் அயல் நாடா அல்லது இந்தியாவா என்பதிலும் பார்க்க அயல் நாடா சொந்த நாடா என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி,
சாந்தா.

இரண்டும் பிடிக்கும்
அக்டோபர் 18, 2007 - 12:37pm - வழங்கியவர் thalika

எனக்கு இரண்டும் பிடிக்கும்...இங்கு ஒரு வகையில் என்றால் அங்கு ஒரு வகையில் பிடிக்கும்...இங்கு பிடித்ததற்கு முதல் காரனம் ப்ரைவசி பிடித்தது....ஆனால் இங்கயும் தொல்லை என்று வந்தால் அதுவும் உறனினர்களாகத்த் தான் இருப்பார்கள்....ஒரு சில நல்ல உறவினர்களை இங்க்ய் வந்தால் பார்க்க முடியாதேஙர வருத்தம் எப்பவும் இருக்கு.
ஊரில் இருந்து உறவு,ஒந்தம் கூடிவாழ்தல்னெல்லாம் பேசினாலும் ஒரு கல்யானமே நடக்கட்டும் கலந்துகிட்டு வந்து எத்தனை பேர் வாயை வெச்சுட்டு சும்மா இருக்கோம்..பந்தி முதல் ,மாப்பில்லைக்கு முடியில்ல ,பொண்ணுக்கு பல்லில்லைன்னு ஒரே ஜட்ஜ்மென்ட் வீட்ட்ல வந்ததும்..
இங்க அப்படியில்ல..எப்பவாவது ஒரு கெட் டுகெதெர் இருந்தாலும் போய்ட்டு வந்தா நிம்மதியா யாரையும் குறை சொல்லாம தூங்கலாம்.
திருமனமான தம்பதியருக்கு ப்ரைவசி வேனும்னா வெளினாடு தான் பெஸ்ட்...நான் ஊர்ல இருக்கப்ப காலைல 6 மணிக்கு மாமியார் வீட்ல கொஞ்சம் அதிகப்ப்ரசங்கி பாட்டிக படையெடுத்துவாங்க.....அப்ரம் ஒரே ரேகிங் என்கிட்ட மெல்ல"சீக்கிரம் எழுந்தியா?என்ன சமையல்?வீட்ல நல்ல சமைப்பியா?வேலை செய்வியா???"ன்னு என்கிட்ட கொஞ்சம் கலெக்ட் பன்னிட்டு என் மாமியார்ட போய்" இப்ப தான் எழுந்த மாதிரி இருக்கு மருமக?சமையல் யார் செஞ்சா"அப்டி சும்மா இருக்கர மாமியாரையும் பத்ரகாளியா மாத்தரதுகுன்னே ஒரு கேங் ரெடியா இருக்கும்....இங்க அப்படியில்லை எனக்கு உடம்பு சரியில்லைனா என் கனவரே எழுந்து டீ சாப்பிட்டு ப்ரெட் டோஸ்ட் பன்னி சாப்பிட்டுட்டு போயிடுவாரு.
நாங்கள் இங்கு வசிப்பது பணத்திற்கும் இன்னொன்று அமைதி....ஊரில் வெகேஷனுக்கு வந்தால் 1 மாசம் தூங்குவதே இல்லை.....படுத்தால் ஜன்னல் வழியே உருவம் போல தெரியும்,யாராவது ரத்திரியில் இருமினால் கூட அலறி ஓடுவோம்..
அப்ரம் வெளிய போகும்போது ஹேன்ட்பேகை இருக்க புடிச்சுக்கனும்...கழுத்தில் கவரிங் தான் போடனும்.....பயனத்தின் போது எப்ப எந்த வன்டி முடும்னு கடவுளை வேன்டிக்கிட்டே போவனும்.....அப்ரம் அங்க இங்க குன்டு வெடிச்சா அப்ரம் 4 மாசத்துக்கு தூக்கமே இல்ல.
இங்க அப்படியில்லை தனியா ராத்திரி 2 மனிக்கு ஒரு பெண் போவலாம்..காந்தித்தாத்தா சொன்னதென்னவோ இங்க தான் சரிப்படுது...நம்ம ஊர்ல போனா அப்புரம் முள்ளுக் காட்டுல சாக்குபைல நம்மளை சுருட்டி போட்டுவாங்க.
இப்ப 1 வாரமா தமிழ்நாட்டில் படும் கஷ்டம் மின்சாரப் பற்றாக்குறை..அது இங்க இல்ல.....இன்னக்கி ராத்திரி தூங்கினா வேனும்னா நாளைக்கி ராத்திரி வரை படுத்து தூங்கலாம் அந்தளவு மனசில் நிம்மதி..வேறென்ன திருடன் ,கொள்ளை,கொலை பயமில்லாததால தான்..அப்பவும் மனசில் வரும் கவலை நம்ம அன்பான சொந்தங்கள் அங்க என்ன பாடுபடுராங்களோன்னு தான்.
ஒன்னொரு நல்ல பழக்கம் நம்மாளுகள்ட்ட காலம்,நேரம் தவராமை..அடடடடாஅ என்ன ஒழுக்கம் ஒரு கடைக்கு போனா 10 நிமிஷ வேலைக்கு 30 நிமிஷம் வேனும், ஒரு பேன்குன்னா 1 மனிநேரம்,,ஒரு ஆட்டோ கூபிட்டா ஆட்டோக்காரன் பைலட்டை விட பந்தா வுடுவான்...பயனிக்க எவ்வளவுன்னா சாவுகிராக்கின்னு பேர் வேற எனக்குத் தேவையா?எங்கம்மா அப்பா என்னை வளத்தது யாரோ இப்படி கூப்பிடவா?
ஒரு பஸ்ல போக முடியுமா???இப்ப வும் நான் நெனச்சு பயந்து போயிடுவேன்....நான் 8 ஆவது படிக்கிரப்ப பஸ்ஸில் கன்டக்டர் குட்டட்டில் என் ச்கேர்டை காலால் மிதிச்சுட்டு என்னை ஒரு லுக்....அப்ப ரெண்டு அரை விட தைரியம் இல்லை....அப்ப பயந்துட்டே நான் பஸ்ஸை விட்டு இறங்கரப்ப முதுகில் ஒரு தட்டு தட்ட்டினான் ..நான் பயந்துட்டே வீட்ல போய் சாப்பிடவும் இல்ல....இதுவெல்லாம் இங்க நடக்காது நடந்தாலும் தைரியமாய் ரியாக்ட் பன்லாம்...சபோர்ட் நமக்குத் தான்..நம்ம ஊர்ல பொம்பளைக தைரியமா போலீஸ் ஸ்டேஷன் போக முடியுமா?
எத்தனை விஷயங்கள் சட்டப்படி தப்புன்னு தெரிஞ்சும் நாம கம்ப்லெயின்ட் பன்ரோம்??இங்க அரிசியில் ஒரு கல்லு கிடைச்சாலே கூப்பிட்டு கத்துர கத்துல 1 மூட்டைஇ அரிசி விட்டுக்கு வந்துடும்.....இன்னும் இருக்கு..இப்ப எழுதிட்டே இருந்தா கனவர் என்னை இந்தியாவுக்கே அனுப்பிடுவார்..அப்ரம் வரேன்

தளிகா:-)

இலங்கை - இந்தியா
அக்டோபர் 18, 2007 - 1:00pm - வழங்கியவர் admin

சகோதரி சாந்தா அவர்களுக்கு,

இந்திய அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் முறை இப்படி எல்லாவற்றிலும் இருந்து தற்போதைய இலங்கை நிறைய வித்தியாசப்படுகின்றது. இரண்டையும் ஒன்றாக்கி இங்கே விவாதிக்க இயலாது. ஆகவே தற்போதைக்கு ஒரு நாட்டை மட்டும் எடுத்துக் கொண்டு இங்கே அலசலாம். எனவே இதை இந்தியர்களுக்கு மட்டுமான விவாதம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள்.

மலேசிய தமிழர்கள், சிங்கை தமிழர்கள், மொரீஷியஸ் தமிழர்கள் என்று அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் நிறைய பேர் இந்த தளத்தினைப் பார்வையிடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் தாய்நாடு அவர்கள் பிறந்த நாடுதான். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பொதுவாக தாய்நாடு என்று குறிப்பிட்டால் அடுத்து ஒவ்வொருவரும் அவர்கள் நாட்டு சிறப்பினை பேச ஆரம்பித்துவிடுவர். எனவே இந்த விவாதத்தை, இந்தியாவா மற்ற முன்னேறிய நாடுகளா என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிக் கொள்ளலாம்.

இந்தியா
அக்டோபர் 18, 2007 - 2:45pm - வழங்கியவர் mubeenamohideen

என்னை பொருத்த வரை இந்தியா அழகான நாடு..எல்லா வளமும் உண்டு.ஆனால் அங்கு மனித்ர்கள் எழுதிய சட்டம் சரியில்லை.ஓட்டைகள் நிரைந்த சட்டம்..பணம் இருந்தால் போதும் எப்படி வேணா வளைச்சுக்கலாம்.திறமை உள்ளவர்கல் ஆள முடியாது.பணம் உள்ளவர்கள் ஆளலாம்.
திருடுவது மிகப் பெரிய குற்றம்.ஆனால் அன்கு சாதரணமாக இருக்கிரது.அதற்குறிய தண்டனயும் அவர்களை திருத்துவதில்லை.திருட்டின் மூலம் எத்தனை உயிர்கள் போயிக்கிரது.எத்தனை திருமணம் நின்று இருக்கிரது.எத்தனை குடும்பங்கள் சிதைந்து உள்ளது.கஷ்டப்பட்டு சம்பாதித்து, உழைத்து சேர்த்தவற்றை ஒரு நாளில் சுருட்டிக் கொண்டு போயி விடுகிரான் திருடன்.6மாசத்தில் வெளியே நல்லா வாழ ஆரம்பிக்கிரான்.பணம் தேவைப்பட்டால் மருபடியும் அதே வழி அதானே ஈஸியான வழி?அவனுடய ஒரு கையை எடுத்தால் மருபடியும் அந்த பக்கம் போவானா?அவனுடய வாரிசை தவறான வழியில் போக விடுவானா?
திருடனை பிடித்துக் கொடுத்து விட்டாலும் அவன் திருடிய நகை பணம் பேப்பரில் மட்டும் அப்படியே வரும்..சம்பந்தப்பட்டவர்கலிடம் அப்படியே கொடுத்து அனுப்புகிரார்கள் என்று நினைக்ரீர்களா?அதில் பாதித்தான் வரும்.அவர்களுடய உழைப்புக்கு பரிசாக எடுத்துக்கு கொல்கிரார்களாம்.அப்ப சம்பளம் அதற்கு என்று தெரியவில்லை?
திருட்டுக்கே இவ்வளவு கோல் மால் நடக்கிரது அங்கே?மற்ற விஷயத்தை அலசினால் ரொம்ப மோசமாக இருக்கும்..எனக்கும் சிறு வயதில் நிரய்ய கொடுமை நடந்து இருக்கிரது.அதை தைரியமாக வெளியில் கொன்டு வர முடியுமா?சம்பந்தப்பட்டவர்கல் அதற்கான தகுந்த தகுந்த தண்டனை அடைவார்களா?
என்னைப் பொறுத்த வரை சட்டம் கடுமையாக இருந்தால் அந்த நாடு நோக்கி எல்லோரும் தைரியம்மாக வருவார்கள்.மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
இந்தியாவுடய அழகுக்கு 12மாதமும் சுற்றுலா துறையாக பல நாட்டினரை அழைக்கலாம்..எவ்வளவு மோசமாக ஆக்க முடியுமோ அவ்வளவு குப்பையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டமும் சரியில்லை..நாட்டை ஆள்பவர்களும் சரியில்லை..
விலங்குகளுக்கு கொடுக்கும் பாதுகாப்புக் கூட மனிதர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.வெளிநாடு நோக்கி படையெடுக்க இதுதான் காரணம்..மக்கள் நிம்மதியை விரும்புகிறார்கள்..ஆட்சியாளர்க
ள் அவர்களுடய நிம்மதியை மட்டும் விரும்புகிரார்கள்.அவர்களை சுற்றிப் பாதுகாப்பு இருக்கிரது..ஆனால் சாதாரண மனிதனுடய வீட்டை சுற்றி என்ன இருக்கிரது?சட்டம் கடுமயாக இருந்தால்தானே அவனுக்கு பாதுகாப்பு இருக்கும்.எல்லா மனிதருக்கும் ஒரே ரத்தம் தானே ஓடுகிரது?அவர்களுடய உயிர் எவ்வளவு முக்கியமோ ..அதேபோல்தான் சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் உயிரும் அவனுடய குடும்பத்துக்கு முக்கியம்.இதை அவர்கள் இன்னும் உணர்ந்துக்கொள்ளவில்லை..

லாகின்பண்ணமுடியவில்லை
அக்டோபர் 18, 2007 - 3:12pm - வழங்கியவர் Jaleela Banu

அண்ணா காலையில் இருந்து உள்ளே நுழைந்து மன்ரத்தில் டைப் பண்ண முடியவில்லை
லாகின் கேக்குது
ஜலீலா

வயற்றூ எரிச்சலுக்கு
அக்டோபர் 18, 2007 - 3:29pm - வழங்கியவர் Jaleela Banu

அனிதா
வயற்றூ எரிச்சலுக்கு ஹெல்ப் கேட்டு இருந்தார்கள் முதலில் காரம் சுத்தமாக சாப்பிடகூடாது, ஜவ்வரிசி கஞ்சி ,இனிப்பு காரம் எதுவாக இருந்தாலும் ஒரு முப்பது நாற்பது நாளைக்கு குடிக்க செல்லுங்கள்.
ஜலீலா

சொர்க்கமே என்றாலும்
அக்டோபர் 19, 2007 - 1:54am - வழங்கியவர் DEVA

திருமணம் ஆனதிலிருந்து பல்வெறு நாடுகளில் வசித்து வந்திருக்கிறேன். தளிகா சொன்னதில் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு வெளிநாடு சொர்க்கம்தான். ஆனால் ஒரு குழந்தை பிறந்து அது பள்ளி செல்லும் பருவம் வரும்போதுதான் சில உண்மைகள் புலப்படும். ஒருவன் என்னதான் வெளிநாடுகளில் நல்ல செல்வாக்குடன், பணத்துடன் வசித்து வந்தாலும், அது அவனுக்கு மன நிம்மதி கொடுத்தாலும்,சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வசிக்கும் அனைவரும் எப்போதும் அந்த நாட்டில் செகண்ட் சிட்டிசனாக இருக்க முடியுமே தவிர அவர்களில் ஒருவராக எப்போதும் கலக்க முடியாது. கலாச்சாரம், பண்பாடு, பண்டிகை, பழக்க வழக்கம் என்று அவர்களிலிருந்து நாம் வேறுபட்டுதான் தெரிவோம். அவர்களோடு என்னதான் பின்னிப் பிணைந்து நட்பு பாராட்டினாலும் இது போன்ற சமயங்களில் அவர்களிடமிருந்து நாம் தனித்து இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

நாம் குடும்பமாக எங்கு வசித்தாலும் அது நமக்கு சந்தோஷத்தையே தரும். அது வெளிநாடாக இருந்தாலும் சரி, நம் நாடாக இருந்தாலும் சரி. இத்தனை நாள் இங்கே ஆஸ்திரேலியாவில் கூட்டுக் குடும்பமாக நான் என் தம்பி, அப்பா, அம்மாவோடு வசித்தபோது மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் குழந்தைகள் ஸ்கூல் செல்லும் பருவம் வரும்போது அவர்கள் மனது படும் கவலைகளை நம்மால் நிச்சயம் உணர முடியும். பெரியவர்களாகிய நமக்கே சில சமயங்களில் இவர்களுடன் எல்லா விதத்திலும் ஒத்துப் போகாத போது நம் இந்தியக் குடும்ப சூழலில் வளரும் குழந்தைகள் மிகவும் சஞ்சலத்துக்குள்ளாகிறார்கள். நான் இதுவரை பார்த்த முக்கால்வாசி இந்தியக் குடும்பங்களின் குழந்தைகள் ( பல வருடங்களாக வெளிநாட்டில் வசிப்பவர்கள்) ஒரு வித ரெண்டுங்கெட்டான் மனநிலையில்தான் இருக்கிறார்கள். இவர்களோடும் முழுதாக சேர முடியாமல், நம் நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றாலும் அங்குள்ள குழந்தைகளோடு முழுதுமாக கலக்க முடியாமல் இருக்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள் நமது மொழியை பேசும்போது ஒரு வித திக்குவாய் வந்ததுபோல் தமிழை கடித்து குதறுகிறார்கள்.

நம் நாட்டில் சம்பாதிப்பதைவிட வெளிநாட்டில் நல்ல சம்பாத்தியம் என்றுதான் அங்கே செல்ல நினைக்கிறார்கள். ஆனால் இப்போது நமது நாட்டில் IT துறையில் இருப்பவர்கள் வெளிநாட்டு சம்பளத்தை இந்தியாவிலேயே வாங்குகிறார்கள். செலவு இந்தியாவில் கம்மி. பேருக்கு வெளிநாட்டில் இருந்து கொண்டு இங்கே அதிகம் செலவழித்துக் கொண்டு நாம் சேமிப்பது என்னவோ கொஞ்சம்தான். இதற்கு விலையாக நாம் பலவற்றை கொடுக்கிறோம். வீட்டில் இருக்கும் ஹவுஸ் ஒய்பை விட( ஏனென்றால் நான் அப்போது இந்தளவு உணர்ந்ததில்லை) வேலைப் பார்ப்பவர்களுக்கு இந்த வித்தியாசம் நன்றாகவே புலப்படும். குழந்தைகளின் படிப்புக்கு, எதிர்காலத்திற்கு நல்லது என்று பார்த்து பார்த்து செலெக்ட் செய்து இந்த நாட்டிற்கு வந்தோம். வந்த பிறகே, நம் நாட்டின் படிப்பு எதற்கும் குறைந்ததில்லை என்ற உண்மை புலப்படுகிறது. என் தம்பி இங்கேயே படித்து, வேலை பார்க்கின்றான். ஆனால் இங்கே படிக்காமல் இந்தியாவில் படித்ததை வைத்து வேலைப் பார்க்கும் எனக்கு அதைவிட சம்பளம் அதிகம். மேலும் நம் நாட்டு குழந்தைகளிடம் உள்ள இண்டெலிஜன்ஸ் இங்கே குறைவே.

நான் வெளிநாட்டில் இழப்பவற்றைப் பற்றி நினைக்காமல் இங்கே இருக்கும் பகட்டைப் பார்த்து ஏமாந்துதான் போகிறோம். அம்மா என்னதான் வயசானாலும், அழகில்லாவிட்டாலும் அம்மாதான். அந்த பாசத்தை யாரும் காட்ட இயலாது. முகம் அழகாக, மேக்கப் செய்து கொண்டு வரும் ஒருவரை அம்மாவாக நினைக்க முடியுமா? நமது பண்டிகை கொண்டாட்டங்கள், குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தாத்தா, பாட்டி பாசம், வீட்டு வேலைகளை நாமே செய்து கை ரேகை அழிந்து போவது, ஆபத்துக்குக் கூட உதவாத அக்கம் பக்கம்( அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு 911 ம் , ஆஸ்திரேலியாவில் இருப்பவர்களுக்கு 000 ம் தான் ஆபத்துக்கு உதவுபவர்கள்), நமது நாட்டு கலாச்சார உடுப்பு, கோயிலுக்கு செல்வது, தினம் பூ வைத்துக் கொள்வது, ஸ்கூலில் நமது குழந்தைகள் மனதில் தோன்றும் எண்னங்களை முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமலிருப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாக இங்கே குறைந்த படிப்பு படித்தவனும் நமது வேலையைப் பார்ப்பான். அதில் அவன் செய்யும் தவறுகள் பெரிது படுத்தப் படாது. நம் நாட்டில் சிபாரிசில் வேலைப் பார்ப்பவனாக இருந்தாலும் அவனுக்கு குவாலிபிகேஷன் முக்கியம். கணவரிடம் இதனைப் பற்றிக் கேட்டால் நிச்சயம் புரியும். எனக்கு ஆஸ்திரேலியாவில் எல்லாம் பிடிக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவிலேயே என் வாழ்க்கையை தொடர வேண்டும் என்று நினைக்க முடியவில்லை. காரணம் நான் பிறப்பாலும், வளர்ப்பாலும் ஆஸ்திரேலியன் இல்லை.

நம் நாட்டில் உறவினர்கள் வீட்டில் தங்க முடியாத கதை இருக்கட்டும், நாம் இங்கே வெளிநாட்டில் நமது வீட்டிற்கு யாரவது இந்தியாவிலிருந்து சொந்தம்( அப்பா, அம்மா தவிர) வந்து ஒரு 30 நாள் தங்குகிறேன் என்றால் ஒத்துக் கொள்வோமா. அப்படியே அவர்கள் வந்து தங்கினாலும் எத்தனை புலம்பல், எத்தனை எரிச்சல் வரும். நாங்களே இரண்டு பேரும் வேலைப் பார்க்கிறோம், இங்கே செலவு அதிகம் , இதில் இவர்களின் தொல்லை வேறு என்பதுதான் பலரின் புலம்பலாக இருக்கக்கூடும். அதே நிலைதான் நமக்கும் இந்தியாவில் ஏற்படுகிறது. கணவன் வழி சொந்தங்களில் இந்த நிலைமை அதிகமாகவே இருக்கும். குற்றம் பார்க்கின் சுற்றம் பாழ் என்பது வெளிநாட்டில் இருந்தாலும் சரி, இந்தியாவில் இருந்தாலும் சரியே. வெளிநாட்டில் பல வருடமாக வசித்து வருபவர்கள் , தனது குழந்தைகள் பெரியவர்களாக ஆனவுடன் , பெண் , மாப்பிள்ளை தேடும்படலத்தை ஆரம்பிப்பார்கள். அப்போது இந்தியாவில்தான் தனது தேடலை நடத்துகிறார்கள். பலருக்கு அப்போது உறவினர்கள் தயவு இல்லாமல் மிகவும் கடினம். அவர்கள் படும் கஷ்டங்களை அவர்களிடம் கேட்டால் தெரியும். வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்பதால் நம் நாட்டில் அத்தனை தொடர்புகள் இல்லாமல் , அங்கு வசிக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உதவியை நாட வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் அப்போது பிரச்சனைகளே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயமிருக்கிறது. ஆனால் அதில் பல விஷயங்கள் நாம் பிறந்தது முதல் பார்த்து பழக்கப்பட்டது. நமது வீட்டிலும் நாட்டிலும் ஒரே கலாச்சார முறைதான். பழக்க வழக்கங்கள் சிறிது வேறுபட்டாலும் அடிப்படையான விஷயங்கள் அனைவருக்கும் ஒன்றுதான். அங்கே ரோடு சரியில்லை, தண்ணீர் இல்லை என்று சொன்னால அப்போது நம் நாட்டில் வசிப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா. நம் பெற்றோர் அங்கேதானே இருக்கிறார்கள். இந்தியாவில் யாரும் சந்தோஷமாக இல்லையா? நாமும் அங்கிருந்து வந்தவர்கள்தானே. கண்ணகியை விட்டுவிட்டு, மாதவியிடம் சென்ற கோவலன,எல்லாம் இழந்து மனைவியிடம் திரும்பி சென்ற நிலைமையைப் போல், வயதானவுடன் பலருக்கு உண்மைகள் புலப்படலாம்( ஒரே வித்தியாசம் நாம் இழப்பது பணமாக இருக்காது.). அப்போது மனம் ஏங்கலாம். பல வருடங்களாக வெளிநாட்டில் வசிக்கும் பல இந்திய தம்பதியினரைப் பார்த்திருக்கிறேன். நம்மைப் பார்த்தால் பேசுவார்கள். தொடர்ந்து சிலரிடம் பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் சுற்றம், உறவு என்று வாழ எத்தனை ஆசையாக இருக்கிறார்கள் என்பது தெரியும்.அவர்களிடமெல்லாம் செல்வம் கொட்டிக் கிடக்கின்றது. ஆனாலும் சந்தோஷமில்லை. குழந்தைகள் வெளிநாட்டிலேயே வளர்ந்தவர்கள் என்பதால் நம் நாட்டினரைப் போல பாசத்தை வெளிப்படுத்தவும் தெரியாது. வெளிநாட்டில் குப்பைத் தொட்டியை தேடிச்சென்று குப்பை போடும் நாம் நம் நாட்டில் அப்படி செய்ய வேண்டும் நினைத்திருக்கிறோமா. பெண்களுக்கு ஏற்படும் செக்ஷுவல் அப்யூஸ் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. கணவனோடு வீட்டில் வசிக்கும்போது அத்தனை தெரியாது. அதற்காக அது வெளிநாட்டில் இல்லை என்று சொல்ல முடியாது. ஓட்டு போடப் போகாமல் வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு நாம் அரசியல்வாதிகளை குறை சொல்லி பலனும் இல்லை. என் நாடு இப்படிதான். அது எப்படி இருந்தாலும் நான் அங்கே ராஜா. முதல் குடிமகன். வெளிநாட்டில் எத்தனை பெரிய பதவி வகித்தாலும் வீட்டில் வேலைக்காரியாய் எல்லாம் நாம்தான் செய்ய வேண்டும். அங்கே ஓட்டுப் போடும் உரிமை கூட கிடையாது. அக்கம் பக்கம் புறம் பேசும் பேச்சை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் போதும். இந்தியா சொர்க்கம்தான். வெளிநாட்டில், அவர்களைப் போலவே 100% மாறி வாழ்ந்தால் மட்டுமே வெளிநாடு சொர்க்கமாக இருக்கும் என்பது என் கருத்து.

எது பிடிக்கும் என்ற கேள்விக்கே இத்தனை பெரிய பதில் அடித்துவிட்டதால் பிடித்த இந்தியாவில் என்ன செய்தால் மாற்றம் ஏற்படும் என்பதை எழுத நேரமில்லாமல் போய்விட்டது.

தேவாவை வழிமொழிகிறேன்
அக்டோபர் 19, 2007 - 5:38am - வழங்கியவர் Janaki2411

இந்த விவாதத்தில் நான் தேவாவை வழிமொழிகிறேன். இங்கு பிரைவிசி இருந்தாலும் பெற்ற 1 மாத குழந்தையை கூட தனி ரூமில் வைக்கிறார்கள். இங்கேயும் குற்றங்கள் நடக்க தான் செய்கிறது. இங்கு இவர்கள் என்ன Rules சொன்னலும் நாம் பின் பற்றுகிறோம் ஆனால் இந்தியாவில் இருந்தால் அதை செய்வது இல்லை.

ஜானகி

தளிகா நியூஸ் பேப்பர் படிப்பதில்லையா?
அக்டோபர் 19, 2007 - 7:36am - வழங்கியவர் vidhubha

வாக்கெடுப்பில் மட்டும் இந்தியா பக்கம் கை போயிடிச்சு, இதுதான் தேசப்பற்றான்னு கேட்டுட்டு இப்போ இந்தியாவில் கஷ்டப்படும் சொந்தங்களுக்காக வருத்தப்படுறேன்னு சொல்றீங்களே, இது என்ன நியாயம்???

எனக்கென்னவோ நீங்க வெளிஉலகம் தெரியாம ஒரு தீவு மாதிரி இருக்கீங்களோன்னு தோணுது தளிகா...அபுதாபில எத்தனை வருஷம் இருக்கீங்கன்னு எனக்குத்தெரியல.இந்தியாவில் நடக்கும் எல்லா குற்றங்களும் இங்கேயும் இருக்குது.

ஊருக்கு வெளியே பாலைவனத்தில் கொண்டுபோய் கூட்டமாய்க் கூடி ஒரு பெண்ணைக் கெடுத்ததைப் படிக்கவில்லையா? கொஞ்சம் நாட்களுக்குமுன் 3 வயதுப் பெண் குழந்தையை சிதைத்து கன்ஸ்ட்ரக்ஷன் குப்பைத்தொட்டி அருகில் போட்டிருந்த செய்தி தெரியாதா? பெண் குழந்தைகள் மட்டுமில்லை ஆண்குழந்தைகளும் கூட இதற்குத் தப்பமுடியவில்லை என்பதாவது தெரியுமா?

லிஃப்டில் கூட குழந்தைகளை ஒற்றையாக அனுப்பமுடியவில்லை தெரியுமா உங்களுக்கு?இதையெல்லாம் வெளியில் சொல்லக்கூட பயம் சிலருக்கு.... காரணம், நாமே பொழைக்கவந்தவங்க நமக்கு ஏன் வம்பு என்பதுதான். குளிர் கண்ணாடியில் உலகத்தைப் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.கொஞ்சம் வெளியேவந்து பாருங்கள்...

இன்னமும் சொன்னால் மனது பதைக்கும் விஷயங்களெல்லாம் உண்டு. ஆனால் சொல்லத் தயங்குது மனசு.

எல்லை தாண்டா பெண்மணி
அக்டோபர் 19, 2007 - 7:40am - வழங்கியவர் T S JAYANTHI

எனக்கு இந்தியாதான் பிடிக்கும். ஏன்னா நான் தான் இந்திய எல்லையைத் தாண்டியதில்லையே. அதுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. அதில ஒண்ணும் பெரிய வருத்தம் இல்ல. அதுவும் உங்களுடைய எண்ணங்களைத் தெரிந்து கொண்டதும் கொஞ்சம் கூட இல்லை.
வாழ்க்கையில காம்ப்ரமைஸ் பண்ணிண்டுதான் ஆகணும். இல்லேன்னா கஷ்டம்தான். எத்தனை பேர் மனைவியை, குழந்தைகளை இந்தியாவில் விட்டு விட்டு வெளிநாட்டிற்குப் போய் சம்பாதிக்கிறார்கள். அதற்கு குடும்பத்துடன் வெளி நாட்டில் வசிப்பது பரவாயில்லை அல்லவா?
இந்தியாவைப் பொறுத்தவரை
1. முழு முதல் குற்றவாளி அரசியல்வாதி. ஏன்னா நன்றாக அப்பாவி மக்களை ஏமாற்றத் தெரிந்துகொண்டிருக்கிறான்.
2. ஒவ்வொரு குடிமகனும் - ஒரு அரசன் அமாவாசை இரவில் தொட்டியில் பால் ஊற்றச் சொன்ன கதைதான். நான் கொஞ்சம் தப்பு செய்தால் குடியா முழுகி விடும் என்ற மனப்பான்மை. அந்நியன் போன்ற படத்திற்கே ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிச் செல்வான்.
3. சுயநலம்.
4. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை
5. தட்டிக்கேட்க பயம்
6. போலீஸ் சாம்ராஜ்யம்
7. ரௌடிகளின் ராஜ்ஜியம்
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளுமை. எல்லோரும் சமர்த்தா வருத்தப்படாம இருக்கற இடமே (தாய்நாடோ, வெள்நாடோ) சொர்க்கம்ன்னு இருங்க கண்ணுங்களா, வரட்டா
அன்புடன்
ஜெயந்தி

குற்றம் செய்யாத மனிதர்கள்???
அக்டோபர் 19, 2007 - 7:53am - வழங்கியவர் vidhubha

இந்தியாவில் சட்டம் சரியில்லை,ஓட்டைகள் அதிகம்...நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் வெளிநாட்டில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டுவாழும் நாமே இந்தியாவிற்குச் செல்லும்போது எந்தச் சட்டத்தையும் மீறாமல் இருக்கிறோமா,இல்லையே...காரணம், நம்ப ஊர் தானே என்னும் சுதந்திரம்.

இந்தியாவை ஒட்டியிருக்கும் அண்டைநாடுகளையே எடுத்துக்கொள்ளுங்கள்...அவர்களை
விட நாம் சௌகர்யமாகவே இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றும் உங்களுக்கு.

எண்ணையும் தண்ணீரும் போலத்தான்
அக்டோபர் 19, 2007 - 9:07am - வழங்கியவர் shantha

நல்லாச்சொன்னீங்க தேவா!!!,
"உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?" இங்கு ஊர்க்குருவியை குறைத்தும் பருந்தைக் கூட்டியும் நான் சொல்ல வரவில்லை, ஆயிரம் வசதி வாய்ப்புக்கள் இருக்கலாம்; ஆனாலும் மனதளவில் எண்ணையும் தண்ணீரும் போலத்தான். வெளி நாட்டுப்பிரஜா உரிமை பெற்றிருந்தாலும்(அது இல்லாவிடில் ஏற்படும் /எதிர்நோக்கவேண்டிய பிரச்சனைகள் வேறு) நீங்கள் இங்கு இரண்டாம் தரப் பிரஜைதான். வெளிப்படையாக யாரும் சொல்லத்தேவையில்லை, இவர்களின் செயல்களைப்பார்த்தே புரிந்துகொள்ளலாம்.
சுய கௌரவம்/தன்மானம் இதையெல்லாம் விட்டு இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு இங்கேயே இருக்கமுடியுமா?

கதை சொல்லுங்கள்....
அக்டோபர் 19, 2007 - 11:46am - வழங்கியவர் Subha Jayaprakash

ஹாய் ஜெயந்தி'க்கா,
எப்படி இருக்கீங்க?
சாரி சூப்பரா டாபிக் போகுது....
ஆனால் ஒரு கேள்வி கேட்கப்போறேன்....
" அது என்ன ராஜா அமாவாசையில் பால் ஊத்தும் கதை"
ப்ளீஸ் இல்லை மண்டை வெடித்து விடும்.

ஊருக்கு போறோம் அல்லவா? குழந்தையை டாக்டரிடம் கூட்டி செல்கிறேன். 5 மணிக்கு அப்பாயின்மெண்ட் .. அதுக்குள் ஒரு குட்டி விசிட்...
கதையை மறக்காமல் சொல்லுங்கள்....
எனக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும்.....

அமெரிக்கா
அக்டோபர் 19, 2007 - 1:20pm - வழங்கியவர் ambika_dt

திரை கடல் ஓடியும் திரவியம் தேட வந்திருக்கிறோம். இந்தியாவில் வேலை கிடச்சதனால அமெரிக்கா(பேரிக்கா,ச்ச ஹேமா வேலைய வாங்கிட்டு சீக்கிரமா வாங்க) வந்திருக்கிறோம்.என் கணவருக்கு அவங்க ஆபீஸில் அப்ளை செய்யர வரைக்கும் H1 விசாவைப் பற்றி தெரியாதாம்.அவரோட சேவை அமெரிக்காவிற்கு தேவைன்னு அவங்க கம்பெனி நினைச்சு அனுப்பியதாக விளையாட்டா சொல்லுவார்.

உண்மையில் நான் இங்கு வருவதற்கு முன் நினைத்த அமெரிக்கா வேறு, நான் பார்ப்பது வேறு. எனக்கு தெரிந்து அமரிக்கா பலரும் விரும்பும் நாடா இருக்குதுன்னா அதுக்கு காரணம் இந்நாட்டின் சட்ட திட்டங்கள்.பிறகு வரி.இங்க நாடே வரிப்பணத்தில் தான் ஓடுது.அதை சரியா பயண்படுத்தறாங்க.விட்டா மூச்சு விடறதுக்கு கூட பில் போட்டு,டாக்ஸும் சேர்த்து கட்ட சொல்லு வாங்க போல.$2 டாலர் வரி கட்டலன்னா $2000 டாலர் பெனாலிடி கட்டனும். அதனால இவங்க வரி செலுத்திடறாங்க. இங்கு லஞ்சம் குடுத்து பார்த்ததில்லை.அவங்கவங்க வேலையை சரியா செய்யுறாங்க.போலீஸை பார்த்து பயப்பட தேவையில்லை. அவங்கதான் நம்மள மேடம்னு கூப்பிடுறாங்க.ஆச்சர்யமா இருக்கு.

பெங்களூரில் யமஹா வண்டியை சேரு சகதிகள்,மேடு பள்ளங்களுக்கிடையில் ஓட்டுவதை விட vw jetta ஓட்டுவது நன்றாக இருக்கிறதென்று சொல்கிறார்.இந்த காரை வாங்கு வதற்கு முன் எனக்கு இதன் ஸ்பெல்லிங் கூட தெரியாது.நல்ல ரோடு,மின்சார வசதி,நிம்மதியான வாழ்க்கை.எல்லாம் ஒகே எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில்...

நம்ம ஊரில் காய்ச்சல் என்றால் அப்பொழுதே எந்த மருத்துவ மனையிலும் போய் சிகிச்சை பெறலாம்.இங்கு அப்படி முடியாது .அப்பாய்ட்மென்ட் கிடைக்க குறைந்தது 20 நாட்கள் ஆகும்.அதுக்குள்ளார காய்ச்சல் சரியாயிடும்.நம்ம ஊருல தூங்கற டாக்டரை எழுப்பி சிகிச்சை பார்க்க சொல்லலாம்.குழந்தைக்கு சீரியஸ் ஆகி இறந்துடுச்சுன்னா டாக்டரை எதிர்த்து போராட்டம் பன்னலாம்.முன்னாடியே சிகிச்சை செய்ய மாட்டோம்.

தேவா கூறியது போல் இங்கு செலவு அதிகம் , சேமிப்பு கம்மி.வீட்டில் இருக்கு மனைவிகளுக்கும் தெரியும்.ஏன்னா நாமதானே சேர்த்து வைக்கிறோம். என்னை பொருத்தவரை திரவியம் தேடி மருபடியும் வீட்டுக்கு வந்திடனும். குழந்தைக்கு 3 வயதாகி அமெரிக்க வாழ்கையை பற்றி தெரிவதற்குள்ளாகவே இந்தியாவிற்கு தூக்கிட்டு போயிடலாமென்று இருக்கிறோம்.நாட்டுப்பற்றை விட எங்கள் மேல் உள்ள பற்றுதான் காரணம். தேவா கூறியது போல,அமெரிக்க - இந்திய குழந்தைகள் எந்த நாட்டையும் பின்பற்ற முடியாமல் ரெண்டுங்கெட்டானாக இருக்கிறார்கள். இரண்டாவது கலாச்சாரம். மற்ற நாடுகளை விட நம்ம ஊர் பரவாயில்லை.ஆனா இருபது வருடம் கழித்து எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது.எங்களுக்கே குழப்பமாகத்தான் இருக்கிறது.

இங்கு உள்ளவர்களுடன் ஒத்து போக முடிந்தால் இங்கயே இருக்கலாம்.எனக்கு தெரிந்து சிலர் 20,25 வருஷமாக இருக்கிறார்கள்.போகிவரைக்கும் போகட்டும்.பார்போம்..இப்பவே 39 ரூபாய் ஆயிடுச்சு.எதுக்கும் ,ரெடியா இருப்போம்.

இன்னொன்னு சொல்றேன்
அக்டோபர் 19, 2007 - 1:58pm - வழங்கியவர் ambika_dt

இன்னொன்னு எனக்கு இங்க புடிச்சது தொழிலாளர்களை மதிப்பது.. இங்க பேங்கில் வேலை செய்பவர் சனி,ஞாயிறுகளில் ஹோட்டலில் பகுதி நேர வேலை பார்ப்பார்கள். என் கணவர் ஆபீஸில் கழிவறை சுத்தம் செய்த பெண் நல்ல காஸ்ட்லியான காரில் வந்தாளாம். சாதாரணமான வேலை (அப்படி எதுவும் இல்லைன்னு சொல்றீங்களா? ) செய்பவர்களுக்கும் மரியாதை தருவார்கள்.

நம்ம ஊரில் வீட்டு வேலை செய்பவர்களை அந்த வீட்டு வாண்டு கூட பேர் சொல்லித்தான் அழைக்கும்.

TO VIDHUBA
அக்டோபர் 19, 2007 - 4:07pm - வழங்கியவர் mubeenamohideen

சகோதரி விதுபா அவர்களே,
வெளிநாட்டில் சட்டம் கடுமை.அதனால்தான் நாம் பின்பற்றுகிறோம்.இங்கே பண்த்தை காட்டி தப்பிக்க முடியாது என்ற பயம்..இங்கும் வளைக்ர மாதிரி இருந்தால் கெட்டவர்கள் சும்மா இருப்பார்களென்று நினைக்ரீர்களா?கெட்டவர்கள் எல்லா இடங்களிலும் கெட்டவர்கள்தான்.கடுமயான் சட்டத்தை கொண்டு ஒடுக்கி வைக்கலாம்.அல்லது கடுமயின்(தண்டனையின்) காரண்மாக திருந்தி விடலாம்..இந்த இரண்டுமே மக்களை பாதுகாக்கும்.
நம்ப ஊர்தானெ என்ற சுதந்திரம்,,பெண்கள் இரவில் தனியாக செல்லும் போது இருக்க வேண்டும்.குழந்தைகள் பாதுகாப்பாக எங்கு சென்ராலும் திரும்பிவிடும்.நமக்கு ஒரு ஆபத்து என்றால் சட்டதை நாடிச் சென்றால் சரியான தீர்ப்பு கிடைத்திடும்...இந்த சுதந்திரம்தான் வேண்டும்
மற்றபடி ரோட்டிலே என் இஷ்டப்படி காறிதுப்புவேன்,குப்பயை கொட்டுவேன்,பெண்களை பார்த்து சைட் அடிப்பேன்,(அவனது குடும்பத்தை தவிர மற்ற பெண்களை பார்த்து என்ன சயநலம்)அவள்து மேனியய் ரசிப்பேன்.முடிஞ்சா தொட்டும் பார்பேன்..சாலை மரியல் செய்வென் (வண்டி உள்ளே பிரசவ வேதனயால் ஒரு பெண் துடித்து கொண்டிருப்பாள்.அதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாது) பஸ்ஸை கொளுத்துவேன், இன்னும் நிரய்ய இதல்லாம் ஒரு சுதந்திரமா?இந்த சுதந்திரம் தேவயா?நல்லா யோசிங்க சகோதரியே!
நாம் செய்திகளை பார்க்கும் போதும்,படிக்கும் போதும் உணர்வு தெரிவதில்லை,,நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் அடிபடும் போது உள்ளம் கொதித்துவிடும்தானே?அனனவரும் சகோதர சகோதரிகலாகத்தான் இஸ்லாம் பார்க்க சொல்கிரது.அந்த உணர்வுதான் என் மனதில் இருக்கிறது..
சட்டத்தின் கடுமை எவ்வளவு முக்கியம் என புரிந்ததா?சகோதரியே?ஒரு நாட்டின் வளர்சிக்கும். நலனுக்கும் சட்டம் மிக முக்கியம்.
உலகத்திலேயே அதிகமாக குற்றங்கள் நடக்கும் நாடு அமேரிக்கா (மனிதனுடய சட்டம்) குற்றங்கள் குறைவாக நடக்கும் நாடு சவூதி அரேபியா(இறைவனால் இறக்கப்பட்ட வேதத்தின் சட்டம்) என ரஷ்ய பத்திரிக்கை ஆய்வுத் தகவலில் சொள்ளியுள்ளது.
ஒரு படகில் சிறு துளை ஏற்பட்டாலும் எவ்வளவு ஆபத்தோ.,அதே போல்தான் சட்டத்தில் கடுகு அளவு ஓட்டை இருந்தாலும் நாட்டிற்கும் ,மக்களுக்கும் ஆபத்து

அண்டை நாடு
அக்டோபர் 19, 2007 - 4:38pm - வழங்கியவர் mubeenamohideen

ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு தன்னுடய நிலயயை சீராக்கிக் கொள்ள வேண்டுமானால்,தனக்கு கீழ் உள்ள மனிதனைப் பார்த்து தனது மனதால் திருப்தி பட்டுக் கொள்வது ஆரோக்கியமான விஷயம்
ஒரு நாட்டை குறிப்பிட்டு பார்க்கும் போது, தன்னை விட தொழில் வளர்ச்சியாலும்,அதிக மக்கள் பாதுகாப்பு,அமைதி கருதி செல்வதும்,இப்படி வளர்ச்சி நிலையை பார்க்க வேண்டும்.இப்படி பார்தால்தான் நாம் முன்னேரலாம்.
கீழுள்ள நாட்டைப் பார்த்து திருப்தி பட்டுக் கொண்டால்,,ஒரு அடி கூட முன்னேற முடியாது.பிறகு நாம் கீழ் நோக்கி விறைந்து செல்ல வேண்டியதுதான்..பிறகு அந்த நாடு நம்மை பார்த்து பரிதாபப்படும் நிலைமைக்கு போய் விடுவோம்

வெளிநாடுதான், அதுவும் அமெரிக்காதான்
அக்டோபர் 19, 2007 - 7:27pm - வழங்கியவர் malar

இந்தியாவை விட்டு வந்ததால நான் இழந்தது கொஞ்சம்தான். இப்ப என் சொந்தங்கள்ல பாதி பேர் இங்கதான் இருக்காங்க. தேவா சொன்ன மாதிரி அடுத்த வீட்டு நெருக்கம், ஆபத்துன்னா உதவி இந்த மாதிரி சில விசயங்கள் இங்கே பிரச்சனைகள்தான். ஆனா பிள்ளைங்க வளர்ப்பில பிரச்சனை எனக்கு இல்லை. ரெண்டு கல்சர் குழப்பம் இருக்கும். அது இந்த ஒரு ஜெனரேசனுக்கு கொஞ்ச வருசத்துக்கு இருக்கும். அடுத்த ஜெனரேசன்ல அதுவும் இருக்காது. டாக்டரை பார்க்கணும்னா 20 நாளைக்கு முன்னாடியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறது எந்த நாட்டுலன்னு தெரியல. இங்க அவசரத்துக்கு ஏத்த மாதிரி எப்ப வேணும்னாலும் பார்க்கலாம். இதுவே நாங்க ஹாலந்துல இருந்தப்ப டாக்டர்ஸ் வீடு தேடி வருவாங்க. ஏமாத்தாத டாக்டர்ங்க. போலி டாக்டர்ஸ் இல்ல.

லஞ்சம், அராஜகம், மோசமான வாழ்க்கை, சண்டைகள், அரசியல் இதெல்லாம் அங்க பிறந்ததினால நமக்கு பழக்கமாயிடுச்சுன்னு அதை ஏத்துக்க முடியாது. அவ்வளவு பிரச்சனைகளை ஏத்துக்கிற மனப்பக்குவம் இருந்துச்சுன்னா இங்க இருக்கிற சின்ன சின்ன பிரச்சனைகளை ஏத்துக்க முடியாதுன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு. மொழிப்பிரச்சனை நாம எந்த ஊர்ல இருக்கோமோ அந்த மொழி தெரிஞ்சிக்கிட்டா பிரச்சனையே கிடையாது. தமிழ்ல பேசணும்னா இந்தியா வில தமிழ்நாட்டுல மட்டும்தான் முடியும். நீங்க அடுத்த ஸ்டேட்டுக்கு போனாக்கூட மொழிப்பிரச்சனைதான். நம்ம குடியுரிமைய வச்சி நாம அதிகபட்சமா செய்யிறது ஓட்டு போடுறது ஒண்ணுதான். அது இங்க இல்லாததுனால நாங்க இழந்ததும் ஒண்ணுமில்ல. கிரீன் கார்டு எங்களுக்கு போதுமானதா இருக்கு.

இந்தியாவில சின்ன சின்ன சந்தோசங்கள் நிறைய இருக்கு. அதைவிட அதிகமா பெரிய சந்தோசங்கள் இங்க இருக்கு. இந்தியாவிலேயே நிறைய சம்பாதிக்கலாம், செலவு குறைச்சின்னு சொல்றவங்க இந்தியாவிலேயே இருக்கலாமே. ஏன் இங்க வர்றோம். என்னோட ஒரு மாச சம்பளத்துல நான் எனக்கு மட்டுமில்ல, என் வீட்டுக்கு தேவையான பொருட்கள் அத்தனையும் இங்க வாங்கிக்க முடியும். இந்தியாவில வேலை பார்த்தப்ப ஒரு வருச சம்பளத்தை செலவு போக கொஞ்ச கொஞ்சமா சேர்த்துதான் ஒரு ஏசி வாங்க முடிஞ்சுது.

ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியே வந்தவுடனே ஆரம்பிக்கிற டென்சன் மறுபடி ஊர் திரும்ப ப்ளைட் ஏர்ற வரைக்கும் குறையாது. ஆட்டோக்காரன்கிட்டே சண்டை, கடைக்காரன்கிட்டே சண்டை, வாங்குற ஒவ்வொரு பொருளையும் அது டூப்ளிக்கேட்டா, ஒரிஜனலா, இவன் ஏமாத்துறானா, உண்மைய சொல்றானா, இது எத்தனை நாளைக்கு வரும், பிரச்சனைன்னா திரும்பி எடுத்துப்பானா.. இப்படி சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் டென்சன்,.. டென்சன் டென்சன் டென்சன்..

நான் பொறந்ததுனால எனக்கு இந்தியாவை பிடிச்சிருக்கு. நான் வாழறதுக்கு அமெரிக்காதான் எனக்கு பிடிச்சிருக்கு. நல்லது கெட்டது எல்லா இடத்திலயும் இருக்கு. அது நாம யாருங்கிறதை பொறுத்து நம்ம மனசை பொறுத்து குறைச்சலாவோ அதிகமாவோ இருக்கும். எனக்கு இந்தியாவைவிட அமெரிக்காதான் பெட்டர்.

புரிஞ்சுதான் எழுதுறீங்களா???
அக்டோபர் 19, 2007 - 8:01pm - வழங்கியவர் vidhubha

நீங்க சொல்றதப் பாத்தா இந்தியாவில யாரும் சட்டத்தை கடைப்பிடிக்காதீங்கன்னு நான் அறிக்கைவிட்ட மாதிரியில்ல இருக்கு....

நீங்க இந்தியாவில வந்து இருக்கணும்ன்னு யாரும் கட்டாயப்படுத்தவும் இல்லை. எங்கே குற்றம் குறைவா இருக்கோ அங்கே போய் வாழ்ற சுதந்திரம் உங்களுக்கு இருக்கு.

அம்மா,உலகத்திலே அதிகமான மக்கள்தொகை ,அரசியல் பித்தலாட்டங்கள், கல்வியறிவின்மை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் இவையெல்லாம் கலந்தது தான் இந்திய தேசம். நீங்க நினைக்கிற மாதிரி கண்ணிமைக்கிற நேரத்தில் எல்லாம் மாறும்படி மாயாஜாலமெல்லாம் செய்யமுடியாது.

வயிற்றுக்குள் பெருகும் பசி நெருப்பையெல்லாம் சட்டம் போட்டு அடக்கமுடியாது.
மற்றபடி ஒழுக்கக்குறைவுகள் எல்லா சமுதாயத்திலும் இருக்கத்தான் செய்கிறது. வீட்டு வேலைக்கென்று கூட்டிச்செல்லப்படும் பெண்கள் சில இடங்களில் படும் சித்திரவதைகளை வாய்விட்டுச்சொல்லக்கூடமுடியாது

பக்கத்து நாடுகளோடு ஒப்பிடச்சொன்னது தீவிரவாதம்,அதனால் அங்குள்ள மக்கள்படும் துயரம் இவற்றிற்கு மட்டும் தான்...

மாற்றங்கள் வரக் கொஞ்சம் காலம் பொறுத்திருக்கத்தான் வேண்டும். பொறுத்திருக்கமுடியவில்லை என்றால் பிடித்த புண்ணிய பூமியில் போய் வாழலாம். அது அவரவர் விருப்பம்.

சட்டங்கள்
அக்டோபர் 19, 2007 - 9:05pm - வழங்கியவர் admin

சகோதரி முபீனா அவர்களுக்கு,

உங்களுடைய எல்லா கருத்துக்களிலும் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடே. ஒன்றே ஒன்றைத்தவிர..

சட்டத்தை பற்றி மட்டும் குறிப்பிடலாமே. அது இறைவனால் இறக்கப்பட்டதா, மனிதனால் எழுதப்பட்டதா என்பதெல்லாம் இந்த விவாதத்திற்கு தேவையற்றது. அது விவாதத்தின் போக்கை மாற்றிவிடுமே.

அத்தனை கடுமையான சட்டங்கள் இருந்தும் அது குற்றங்களே இல்லாத நாடு இல்லையே? குறைவான குற்றம் அவ்வளவுதானே. வசிக்கும் மக்கள் தொகை, அதற்கு அங்கு நடக்கும் குற்றங்கள் இரண்டையும் ஒப்பிட்டு எத்தனை சதவீதம் என்று பார்த்தால் வாடிகனில் குற்றங்களே இருக்காது. சிங்கப்பூரில் கூட குற்றங்கள் குறைவாக இருக்கும்.

கருத்து சொல்லுங்கள். அது பிரச்சனையல்ல. இதுபோன்று எங்கள் இறைவன் இறக்கிய சட்டத்தை கடைபிடிக்கும் நாட்டில்தான் குற்றங்கள் குறைவு என்று சொல்வது, மற்ற அனைவரையும் பாதிக்கும் வார்த்தைகள். புரிந்துகொள்ளுங்கள். இது மதச்சார்பற்ற தளம்.

மாவட்டம் என்றுதான் சொல்லவேண்டும்!
அக்டோபர் 19, 2007 - 9:11pm - வழங்கியவர் vidhubha

நம் நாட்டுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இது நம் ஒரு மாநிலத்தின் அளவு கூட இருக்காது. இதை எப்படி 100 கோடி மக்கள் உள்ள நாட்டுடன் ஒப்பிடமுடியும்?

ஆஹா என்ன பொறுமை
அக்டோபர் 19, 2007 - 10:17pm - வழங்கியவர் thalika

எல்லார் காதுக்கும் இனிமையாக பிடிச்சமாதிரி பேசனும்னா எதுக்கு ஒரு வாக்கெடுப்பு ஒரு மன்றம்??பொய்யை சொல்லி போலியா இருக்கரதை விட எதையும் எழுதவேன்டாம்னு ஒதுங்கிடுவேன்.
உன்மையா நெஞ்சை தொட்டு சொல்லுன்க??உங்களுக்கு பாதுகாப்பு இல்லை??இங்கே ஆஙளை விட பெண்கள் மதிக்கப் படுவதில்லை??ஒரு கியூவில் நின்னா பெண்ணை முதலில் கூப்பிடுவாங்க..அந்தளவுக்கு மரியாதை இங்க...குற்றமே இல்லாத நாடு எது??அதுக்காக நடக்கர கொஞ்சம் குற்றத்தை வெச்சுட்டு குத்தம் சொன்னா உலகத்தில் எங்கயும் வாழவே முடியாது.
எது தேசப்பற்று???க்ரிகெட் பார்ப்பதையே விட்டு விட்டேன்..ஏன்னு தெரியுமா??இப்பல்லாம் இந்தியா பாகிஸ்தான் மேச் முடிஞ்சு இந்தியா ஜெயிச்சதுக்காக இல்லை வெடி வெச்சு கொன்டாடராங்க..பாகிDதான் தோத்ததுக்காக?இதுவா தேசபற்று..பற்றுக்கும் வெறிக்குமே வித்யாசம் தெரியாம பெரிய்ய நாயம் பேசராங்க நம்ம ஆளுக.
கற்பழிப்புக் கேசுகள் நடப்பது உன்மை தான்..அது பெறுகி வருவன்தும் உன்மை தான் ஆனால் தப்பு நடந்தா சோர் போடர நாடுன்னு பயந்துகிட்டு சும்மாவா இருக்கோம்??நல்ல யொசிச்சு சொல்லுங்க உங்களுக்கு இங்க பாதுகாப்பே இல்லைன்னு தான் தோனுதா??
போன வாரம் ஒரு நியூஸ் வந்துதே இல்லீகல் டேக்சியில் பயனம் செய்த ஒரு ஃபாரினரிடம் 30 டிர்ஹம் வர வேன்டிய இடத்தில் 500 டிர்ஹம் வாங்கிக் கொன்டு வன்டி கிளன்பி சில மனிநேரத்தில் போலீஸ் உதவியுடன் டேக்சியை கன்டுபிடித்து 5000 டிர்ஹமாக முகாலிஃபா அடங்க திருப்பு காசை கொடுத்தார்க;....இதை நம்ம ஊர் காசு படியே 5000 வேனாம் 50,000 நே வெச்சுப்போம்..கானாம் போனா திரும்ப கிடைக்கும்கரீங்க??போலீஸ்ட போனா கன்டுபுடிச்சுடுவாங்க?
இங்க பாதுகாப்பு இல்லைன்னு நீங்க சொன்ன அதுக்கு ரென்டு காரனமா இருக்கலாம் ஒன்னு "நான் ஒரு வெள்ளை காகிதத்தில் உள்ள கரும்புள்ளியை மட்டுமே"பார்ப்பேன் ந்னு நீங்க சொல்ரீங்க
அதுவுமில்லாட்டி நீங்கள் வளர்ந்த பிறந்த ஊரில் உங்களுகு அந்தளவு பாதுகாப்பும்,பாசமும் ,சொந்தமும் கிடைச்சிருகுன்னு அர்த்தம்.
நான் வளர்ந்த கோவை 15 வருடத்துக்கு முன்னால் என்ன பசுமையாக இருந்தது தெரியுமா....அன்னக்கி இந்த மரத்தில் பச்சை நிறம் கூட இன்னக்கி மங்கித் தான் தெரியுதோன்னு சந்தேகம் எனக்கு....எப்ப அந்த பாழாப் போன போம்ப் ப்லாஸ்ட் நடந்துதோ அன்னக்கி அந்த நகரமே தொலஞ்சது..இன்னக்கும் அந்த பீதி எல்லார் மனசுலயும் இருக்கு....ஒரு பாம்ப் வெடிக்கிரப்ப ஜன்னல் கன்னாடி குலுங்கும்.என்னுடன் படித்த இரண்டு பேர் இரன்ந்து போய் அவர்களுடைய உடம்பு நிலத்திலும் வயிறு முள் மரத்திலுமாக தான் எடுத்தாங்க..இந்த ஒரு சம்பவம் போதும் வாழ்நாள் பூறா மறக்காமலிருக்க.
உங்களுக்கு எப்படியோ எனக்கு நான் இப்ப இங்க நடக்கர என் மதவழக்கப்படி நடக்கர வேஷத்தில் என் ஊரில் சுதந்திரமா நடக்க முடியாது...இப்படி ஹிஜாபை போட்டுடு ஒரு முறை லைசென்ஸ் எடுக்க போனப்ப என்னை ஆஃபிசர் பன்னின கின்டலும் இது போல் பல சம்பவங்களும் இன்னும் மறக்கலை....போன வெகேஷனுக்கு எங்கப்பா கூட ரோடில் நின்னுட்டிருந்தப்ப அங்க ஒரு போலீஸ் வன்டி வந்து நின்னுது...என் அப்ப முன்னாடியே ஒரு போலீஸ்காரம் என்னை பாத்து என்ன ஜாடை காமிச்சான் தெரியுமா?கூனிக் குருகிப் போயிட்டேன்.அப்பாவும் ஆத்திரம் வந்தாலும் நம்மால் ஒன்னும் செய்ய முடியாதுங்கரதால என்னை கூட்டிட்டு வன்டியை வீட்டுக்கு இருக்கர ச்ப்பிடையெல்லாம் கூட்டி கொன்டு போய் விட்டார்.....இங்க அப்படியா??
வாயை பொளந்தா முதலை ஏறினாலும் தெரியாத மாதிரி பக்குர ஆளுங்க இங்கையும் இருக்காங்க....ஆனா "ஷூ ஹபீபி:"ன்னு ஒரு சத்தம் போதும் பறந்து ஓட மாட்டாங்க??
லூப் ஹோல்ஸ் எங்க இருக்கோ அங்க குற்றம் நிறைய் நடக்கும்..துபாஇயில் பிசினெஸ் ஜெனெரேட் பன்னனும்னா கொஞ்சம் லூப் ஹோல்ஸ் விட்டு தான் ஆகனும்..அதனால தான் இந்த மாதிரி குற்றங்கள் பெருகி வருது.....ஒரு 15 வருடத்தில் நம் நாட்டை போல இங்கயும் ஆனாலும் அது ஒன்னும் ஆச்சரியப் படுவத்ஹற்கில்லை..
துபாஇக்கும் அபு தாபிக்கும் கூட நிறைய வித்த்யாசம் இருக்கு தெரியுமா?இங்க அங்க நடக்கும் அளவுக்கு குற்றம் இல்லை..முசஃபா ,பனியாஸ் போன்ற உள்ப்ரதேசங்களில் தான் நடக்குது..அதனாலேயே அங்க இருந்து இங்க மாறினோம்...நான் நீட்டில் என் நகைகளை வெச்சிருப்பது ட்ரெஸ்ஸிங் டேபிலில்..ஒரு பூட்டு கூட இல்லை..வாக்கிங் போகும்பொது வீடை பூட்டுவது கூட இல்லை.சும்மா சாத்திட்டு போயிடுவேன்.நம்ம ஊரில் இந்த பாக்கியம் கிடைச்சால் அது போல் சொர்கம் வேறு ஏதும் இல்லை.
ஆக இன்னும் பொறுத்துக் கொள்ள முடியாத சில சம்பவங்கள் குடும்பத்தில் ஏற்பட்டிருக்குது....பாதிக்கப்ப
ட்டவனுக்குத் தான் அதன் வேதனை தெரியும்..என்னை பொறுத்தவரை ரொம்ப ரொமப் முக்கியம் சேஃப்டி..அது இங்க கிடைக்காதுங்கர நிலமை வரும்பொழுது இங்க காலி பன்னி போக வேன்டியது தான்.

பகுத்தறிவுப் பகலவி விதுவுக்கான பதில்

இங்க வந்து 4 வருடம் ஆகுது..அம்மா அப்பாவைத் தவிர இங்க மத்த சொந்தங்கள் எல்லாம் வந்து 35 வருடத்துக்கும் மேல் ஆகுது
2)நான் கஃப் நியூஸ் படிக்கிரதில்லை ...சரிதான் நான் கலீஜ் டைம்ஸ் தான் படிக்கிரேன்..ஹிஹி ஹீஇ
3)எனக்கும் அப்படி தான் தோனுது ..யாரும் ஒரு வட்டத்தை விட்டு வெளியே வந்து யோசிக்க மாட்டேங்கராங்களேன்னு....என்னுட
ைய கருத்து மத்தவங்க
ளுடன் ஒத்து போவாதப்ப ஒரு வேளை இப்படி தான் எல்லருக்கும் தோனுமா விது?
எது எப்படியோ என்னை முட்டாள்னு சொல்லாம சொன்னதுக்கு மனசுக்குள்ளயே நல்ல திட்டிடேன்..அப்பா இப்ப தான் நிம்மதி

தளிகா

என்னமோ சொல்றீங்க
அக்டோபர் 19, 2007 - 11:01pm - வழங்கியவர் babu

தளிகா, என்னமோ கிரிக்கெட் பத்தி சொன்னீங்க.. எனக்கு சரியா புரியலை. வெடி வெடிக்கிறாங்கன்னு கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறதை விட்டுட்டீங்களா? ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கோ..? :-)

செமி பைனல்ல ஆஸ்திரேலியாவை ஜெயிச்சப்பவும்தான் வெடி வெடிச்சோம். ஒரு நேரத்தில கென்யாவை ஜெயிச்சதுக்குகூட வெடி வெடிச்சிருக்கோம். எங்கங்க.. இப்ப எல்லாம் நாம வெடி வைக்கிறதுக்கு சான்ஸே ரொம்ப அபூர்வமாத்தான் கிடைக்குது. வைச்சிட்டு போகட்டுமே.. :-)

கிரிக்கெட் ரசிகர்கள் மீது குற்றம் சொன்னதால, ஒரு உண்மையான கிரிக்கெட் ரசிகனான என்னால கொஞ்சம் ஏத்துக்கமுடியல.

இந்தியா பாகிஸ்தானை ஜெயிச்சதுக்கு இந்தியாவில வெடி வெடிக்கிறது தப்பே கிடையாது தங்கச்சி. இது நாட்டுப்பற்றுதான். அதே பாகிஸ்தான் இந்தியாவை ஜெயிச்சா இந்தியாவில வெடி வெடிக்குது பாருங்க.. அதுதான் ரொம்ப தப்பு. அதுவும் நாட்டுப்பற்றுதான். அந்நிய நாட்டுப்பற்று.

1999 ஜனவரியில சென்னை சேப்பாக்கம் MAC ஸ்டேடியம்ல, இந்தியா பாகிஸ்தான் இடையே டெஸ்ட் மேட்ச். அந்த சீரியஸ்ல முத மேட்ச். அந்த மேட்சுக்கு நான் ஸ்டேடியத்தில இருந்து ஸ்கோரிங், ஆன்லைன் கமெண்டரி கொடுக்கிறேன். மொத இன்னிங்க்ஸ்ல டக் அடிச்ச டெண்டுல்கர் ரெண்டாவது இன்னிங்க்ஸ்ல ரொம்ப அருமையா விளையாடி, செஞ்சுரி அடிச்சு, தனி ஆளா ஜெயிக்கிற நிலைமைக்கு கொண்டு வந்து, கொஞ்சம் அவசரப்பட்டு அவுட் ஆயிடுறாரு. அதுக்கப்புறம் மேட்ச் ஒவ்வொரு ஓவருக்கும், பாகிஸ்தான் இந்தியா, பாகிஸ்தான் இந்தியான்னு வெற்றி வாய்ப்பு மாறிகிட்டே இருக்கும். அவ்வளவு அருமையான மேட்ச். கடைசியில நாம 12 ரன்ல தோத்தோம். எல்லாரையும் ஸீட் நுனியில உக்கார வைச்சு, ரொம்ப பரபரப்பை உண்டாக்கி, இதயத்துடிப்பை அதிகமாக்கி, கடைசி விக்கெட் விழுந்த அந்த ஒரு நொடி ஸ்டேடியமே நிசப்தமா போச்சு. எல்லாம் ஒரு செக்ண்ட்தான். அடுத்த விநாடியே, அரங்கமே அதிரும்படியான கைதட்டல். ஒருத்தர்கூட ஸீட்ல உக்காரலை. எல்லாரும் எழுந்து நின்னு கைதட்டுறாங்க. யாரும் கைதட்டுங்கன்னு அறிவிப்பு கொடுக்கலை. எல்லாருமே தன்னிச்சையா செய்தது. நான் அந்த இடத்தில இருந்ததால எனக்கு தெரியும்.

அந்த கைத்தட்டு இந்திய வீரர்களுக்கு அல்ல.

இந்தியாவில் பாதுகாப்பு
அக்டோபர் 20, 2007 - 5:08am - வழங்கியவர் DEVA

இங்கே பலரும் குறிப்பிடும் விஷயம் இந்தியாவில் அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பற்றிய பயம். எப்படி இத்தனை எளிதாக மற்றொரு நாட்டுடன் இந்தியாவினை ஒப்பிட முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. நம் நாட்டில் இல்லாத இண்டெலிஜன்ஸ்சா, ராணுவமா இல்லை போலீஸ் திறமையா. தமிழ்நாட்டு போலீஸ்சின் திறமையை இப்படி சிலரின் போக்கைக் கொண்டு பொத்தாம்பொதுவாக சொல்லிவிட முடியாது. எத்தனையோ சிக்கலான பிரச்சனைகளில் அவர்களின் துப்பறியும் திறனும், திறமையும் அனைவருக்கும் புலப்படும்.

முக்கியமாக நான் சொல்ல விரும்புவது, மற்றவர்கள் குறிப்பிடும் அத்தனை நாடுகளிலும் ஒரே மதத்தை சார்ந்தவர்கள் குடிமகன்கள். இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சேர்ந்தே இந்தியாவின் குடிமகன்கள். பல பிரச்சனைகளின் வேரும் அதுதான். அதற்காக இந்தியாவை ஒரே மதத்தின் கீழாகவும் அறிவிக்க முடியாது, மற்றவருடன் விரோதம் பாராட்டவும் முடியாது. மற்ற நாட்டைப் போல மதம் ஒன்றாக இருந்திருந்தால் இந்தியாவில் நீங்கள் குறிப்பிடும் பாதுகாப்பு பயம் இந்த அளவு இருந்திருக்காது. இந்தியாவின் பெருமையே இந்த வேற்றுமையில் ஒற்றுமைதானே. அதுதான் நம் நாட்டில் நடக்கும் பல பாம்பிளாஸ்ட்டுகளுக்கும் , பாதுகாப்பு மீறுதலுக்கும் காரணமாகவும் இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையிலும் சிறு துரும்பை வைத்துக்கொண்டு உயிரை பணயம் வைத்து, குற்றவாளிகளை பிடிக்க போராடும் நமது காவல் துறையை பாராட்டாவிட்டாலும் , இப்படி ஒட்டு மொத்த பழிசொல்லும் சொல்லாமல் இருப்பது நலம். ஒப்புக் கொள்கிறேன் உலகில் Safest Place On Earth நீங்கள் குறிப்பிடும் நாடுகள்தான். காரணம் என்னவென்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் புரியும். அங்கேயும் பிரச்சனைகளை வெடிக்க வைக்கலாம். எப்படி என்றால் மற்ற மதத்தினரையும் அங்கே குடியேற்றி அவர்களுக்கும் சம உரிமைகளை அளிக்க வைத்துவிட்டு பிறகு பார்க்கலாம் அங்கே என்ன நடக்கிறது என்று.

அண்டைய நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இப்படி மதம், இனம் சம்பந்தப்பட்ட சண்டைகளே அந்த நாடுகளின் பாதுகாப்புப் பற்றி கேள்வி எழுப்பிகிறது. இவ்வளவு ஏன், எங்கள் குடும்ப நண்பர் ஒருவரே கிரிக்கெட் பார்க்கும்போது இந்தியா மற்ற நாடுகளுடன் விளையாடினால் இந்தியாவிற்கும், இந்தியா பாகிஸ்தானோடு விளையாடினால் பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டாகவும் பேசுவார். ஏன் என்று கேட்டால் அது அப்படித்தான் , எங்க வீட்டில் நாங்கள் அனைவரும் அப்படித்தான் என்றும் சொல்வார். இப்படி நம் நாட்டில் படித்து, டாக்டராகி, நம் நாட்டு வளங்களில் வாழ்ந்து அந்நிய நாட்டு பாசம் வைத்திருந்தால் பிறகு இந்தியா என்ன அமைதிப் பூங்காவாகவா இருக்கும்.

இந்தியாவில் மட்டும்தான் பாதுகாப்பு இல்லையா? மனித வாழ்வுக்கு யார்தான் உத்திரவாதம் கொடுக்க முடியும். அமெரிக்கா வளாந்த நாடுதான். அதன் பாதுகாப்பு முறை சரியில்லை என்று யாரும் குற்றம் சொல்ல முடியுமா? அப்படி இருந்தும் அங்கே நடந்த ட்வின் டவர் தாக்குதலுக்கு என்ன காரணம்? எங்கே எத்தனை பாதுகாப்பு இருந்தாலும், எவ்வளவு திறமையான போலீஸ், ராணுவம் இருந்தாலும் புல்லுருவிகள் எல்லா இடத்திலும் இருக்கத்தானே