![]() இந்த உலகில் உயிரனங்கள் உருவானதா, படைக்கப்பட்டதா என்பது குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, அப்படி உருவான/படைக்கப்பட்ட உயிரனங்களை (பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிர்கள்) மனிதன் தனது பசிக்கு கொன்று இரையாக்கிக் கொல்லுதல் ஏற்புடையதா? மரம், செடி கொடிகள் போன்று ஓரறிவும் இல்லாமல், மனிதன் போன்ற ஆறறிவும் இல்லாத இந்த ஜீவன்களை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்ளுதல் நியாயமா? அசைவ உணவுகள் என்று ஒன்று இல்லாவிட்டால் உலகம் என்னவாகும்? எல்லோரும் சைவர்களாக இருத்தல் இயலுமா? எது உண்மையில் சைவம்? எதில் நன்மை அதிகம்? இதைப் பற்றியெல்லாம் இங்கே விவாதிக்கலாம். ஒரு சைவராகவோ, அசைவராகவோ இருக்கும் நீங்கள் உங்களின் நிலை பற்றி மற்றும் இங்கே குறிப்பிடவும். நீங்கள் சாப்பிடுகின்றீர்களா, இல்லையா? அப்படி சாப்பிடுவதில் உங்களுக்கு ஏதேனும் சஞ்சலங்கள் இருக்கின்றதா? அசைவம் சாப்பிடுகின்றவர்கள் தாங்கள் செய்வது தவறு என்ற குற்ற உணர்வுடன் சாப்பிடுகின்றீர்களா? சைவம் சாப்பிடுகின்றவர்கள் வேறு வழியில்லாமல் சைவம் மட்டும் சாப்பிட வேண்டியுள்ளதே என்று என்றாவது வருந்தியிருக்கின்றீர்களா? குடும்பத்தினர் அனைவரும் ஒரு நிலை சார்ந்து இருக்கும்போது தாங்கள் மட்டும் வேறு ஒரு நிலை எடுத்து இருக்கின்றீர்களா.. இவற்றை பற்றியெல்லாம் சுவாரசியமாக இங்கே உரையாடலாம். முக்கிய குறிப்பு: இது எங்கள் மதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது, இதை எங்கள் மதம் வேண்டாம் என்கின்றது என்று மதங்கள் சொல்வதை யாரும் இங்கே சொல்லவேண்டாம். இதில் உங்கள் கருத்து என்ன என்பதை மட்டும் தெரிவிக்கவும். நீங்கள் சார்ந்துள்ள மதம், வேதங்கள் சொல்வதை இங்கே குறிப்பிட்டு விவாதிக்க வேண்டாம். அவை விவாதத்தை திசை திருப்பும். அப்படிப்பட்ட பதிவுகள் உடன் நீக்கப்படும். நவம்பர் 4, 2007 - 9:22am - வழங்கியவர் admin
|

