topic_image


French fries செய்வது எப்படி?
முத்துமாரி


French fries
நவம்பர் 30, 2007 - 7:25pm - வழங்கியவர் Nila2006

அன்பின் முத்துமாரி,

உருளைக்கிழங்கை மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டி ஐஸ் தண்ணீரில் 1 மணித்தியாலம் போட்டுவிடுங்கள் . பின்னர் அவற்றை எடுத்து ஒரு பேப்பரால் ஈரம் ஒற்றிவிட்டு நன்கு கொதிக்கும் எண்ணெயில் போட்டு 5 நிமிடங்களுக்கு பொரித்து எடுத்து விட்டு மீண்டும் எண்னெயை நன்கு சூடாக்கி இரண்டாம் முறை போட்டு நன்கு சிவக்கும்வரை பொரியுங்கள். பின்னர் வடித்தெடுத்து சூடாக இருக்கும் போதே சிறிது உப்பு தூவி குலுக்கி விடுங்கள். இதுதான் French Fries. மிகவும் சுவையாக இருக்கும். இதற்கு பேக் பண்னுவதற்கு பயன்படுத்தப்படும் Russet Potatoes சுவையாக இருக்கும்.
-நர்மதா:)

நன்றி!
டிசம்பர் 2, 2007 - 9:47am - வழங்கியவர் simuke

மிக்க நன்றி நர்மதா French fries செய்து பார்த்து சொல்கிரேன்

French fries
டிசம்பர் 8, 2007 - 12:56pm - வழங்கியவர் simuke

ஹலோ நர்மதா நீங்க சொன்ன French fries மாதிரி செய்து பார்த்தேன் ஆனால் ஒழுங்கா வரலை. frenchfries strip ஆக வரலை 1 மணி நேரம் ஐஸ் தண்ணியில போட்டு வைத்து பிறகு அரை பதத்திற்கு எண்ணெயில் பொரித்து எடுத்து பிறகு கொஞ்ச நேரம் கழித்து பொரித்து பார்த்தேன் ஆனால் சரி ஆக வர வில்லை வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் நர்மதா

Simuke (French fries)
டிசம்பர் 8, 2007 - 1:07pm - வழங்கியவர் Jaleela Banu

ஹலோ பொரித்த உடனே சாப்பிடனும் இல்லை சாப்பிடும் போது சூடு படுத்தி கொள்ளனும்.
ஹலோ சிமுகே
கட் பண்ணுவது சுலபம்.
உருளை கிழங்கை இரண்டு சைடையும் வெட்டி விடுங்கள் இப்போது ஒரே அளவாக நீட்டாக குருக்கும் நெடுக்க்குமாக வெட்டுங்கள்.
இல்லை என்றால் பொரித்து வீட்டு உப்பு போட்டு குளுக்குங்கள், ரொம்ப நேரம் ஊற போடவேண்டாம்.
ஜலீலா
ஜலீலா

ஜலீலாவுக்கு வணக்கம்
டிசம்பர் 9, 2007 - 3:50pm - வழங்கியவர் simuke

ஜலீலா அக்காவுக்கு வணக்கம்! நீங்க சொன்ன முறையில் எல்லாம் செய்து பார்த்து விட்டேன். நானே வேறு பல முறையையும் பயன் படுத்தி பார்த்துவிட்டென் எதுவும் ஒழுங்காவரலைங்க யாராவது சரியா சொல்லுங்கப்பா French fries செய்றது அவ்வளவு பெரிய விஷயமா இருக்கே என்ன செய்றது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்
முத்துமாரி

French fries
ஜனவரி 2, 2008 - 9:28pm - வழங்கியவர் Nila2006

அன்பின் முத்துமாரி,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் இப்பிடிதான் செய்வேன் நன்றாக வந்தது. உருளைக்கிழங்கை நீளவாக்கில் பாதியாக வெட்டிவிட்டு பின்னர் நீளவாக்கிலேயே மெல்லிய துண்டுகளாக வெட்டுங்கள். சரியாக வரும். முதற்தடவை பொரிக்கும் போதும் துண்டுகள் கலகலக்கும் வரை ( ஒன்றுடன் ஒன்ரு ஒட்டாது இருக்கும்படி) விட்டு எடுக்கவும். அத்தோடு ஒரே தடவையில் நிறைய துண்டுகளை பொரிக்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரிக்கவும்.
-நர்மதா:)

பிரெஞ்ச் பிரைஸ் - கடைகளில் கிடைப்பது போன்று செய்ய
ஜனவரி 3, 2008 - 5:59am - வழங்கியவர் DEVA

எந்த ஷேப்பில் வேண்டுமானாலும் உருளைக்கிழங்கை வெட்டி ( நீள வாக்கில் அலது வெட்ஜஸ் போன்று எந்த ஷேப்பிலும்) அதனை அரை வேக்காடாக ஆவியிலோ அல்லது சிறிது தண்ணீர் ஊற்றியோ வேக விடுங்கள்.ரொம்ப நேரம் வேக விடக்கூடாது. குழைந்து விடும். சாப்பிட்டுப் பார்த்தால் நறுக் நறுக்கென்று இருக்கும். இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள். கடைகளில் விற்பதைப் போன்றே இருக்கும். வித்தியாசமே தெரியாது. எண்ணெயும் குடிக்காது. பிறகு உப்பு, மிளகுத்தூள் தூவி சாப்பிடுங்கள். அரை வேக்காட்டில் உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது கடைகளில் கிடைக்கும் அதே க்ரிஸ்பி மற்றும் உள்ளே சாப்ட்டாகவும் இருக்கும். இது நான் ஒரு பழைய சமையல் புக்கில் படித்தது. இதே முறையில்தான் நான் எப்போதும் செய்வேன். நன்றாக இருக்கும்.

மிக்க நன்றி தேவா!
ஜனவரி 4, 2008 - 11:01am - வழங்கியவர் simuke

தங்கள் கருத்துக்கு நன்றி! ஆனாலும் ஒரு சந்தேகம் உருளைகிழங்கு வாங்கும் பொழுது ஃபிரென்ச் பிரைஸ் க்கு என்று தனியாக இருக்குமா அல்லது எல்லா உருளைக்கிழங்கையும் பயன்படுத்தலாமா?