topic_image


பலரும் இதனைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தும் நேரமின்மையால் என்னால் எழுத இயலாமல் போய்விட்டது. இன்று பர்வீன்பானுவின் பதிவைப் பார்த்ததும் எழுதியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.

முதலில் பேஷியல் எதற்கு, அதனால் உண்டாகும் பலன்கள் பற்றி சொல்கிறேன். பேஷியல் என்றதும் ஏதோ ப்யூட்டி பார்லர் விஷயம் என்று நாம் ஒதுங்கிவிடத் தேவையில்லை. அந்த காலத்திலிருந்தே பேஷியல் வீடுகளில் செய்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் பேஷியல் என்ற பெயரை உபயோகப்படுத்தாமல் அது ஒரு ரொட்டீனாக இருந்தது. பேஷியலைப் பற்றி சாதாரணமாக சொல்வது என்றால் வாரம் ஒரு முறை முகத்தில் நன்றாக எண்ணெய்த் தேய்த்து, பாசிப்பருப்பு மாவு தேய்த்து குளிப்பதை சொல்லலாம். பேஷியல் செய்வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன. முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. முகத்தின் துளைகளில் தங்கும் அழுக்குகள் நீக்கப்பட்டு பருக்கள் உருவாகாமல் சருமம் பளிச்சென்று ஆகிறது. ஏற்கனவே பருக்களினால் உண்டான வடுக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சருமத்தை பொலிவுறச் செய்கிறது. மேலும் பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் என்று சொல்லப்படும் கரும்புள்ளிகளும் நீக்கப்படுகின்றன. இந்த பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் மூக்கு, தாடை ( chin) போன்ற இடங்களில் உருவாகின்றன.

சமையல் குறிப்பைப் போன்றே இதற்கு தேவையான பொருட்களை கொடுக்கின்றேன்.

பேஷியல் கிட் - காஸ்மெட்டிக் கடைகளில் கிடைக்கும். கிடைக்காதவர்களுக்கு முனை ஷார்ப்பாக இல்லாத ஸ்பூன் கூட போதும். இல்லாவிடில் பிளக்கரின் (Plucker) மறுமுனை போதும். ஆனால் எல்லாமே நன்றாக ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டிருப்பது அவசியம். சரியாக ஸ்டெரிலைஸ் செய்யப்படாவிட்டால் சிலருக்கு பேஷியல் முடித்தும் முகத்தில் பொரி பொரியாக சிகப்பாக தோன்றும் (அதனாலேயேஇன்றுவரை நான் பார்லர் சென்று பேஷியல் செய்து கொள்வதில்லை.). ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் அனைத்தையும் போட்டு கொதிக்க வைக்கவும். ஸ்பூனானாலும் இவ்வாறே செய்யுங்கள்.

முகம் பார்க்கும் சிறிய கண்ணாடி.

Apricot ஸ்க்ரப்பர் அல்லது எதாவது பேஷியல் ஸ்க்ரப்பர் - Steve's Formula, Clear Tone போன்ற பல வித பிராண்டுகளில் கிடைக்கின்றது.

மசாஜ் க்ரீம் - ஷியா பட்டர் க்ரீம் (Shea Butter) சருமத்திற்கு மிகவும் நல்லது. ஆலிவ் ஆயில் கூட உபயோகப்படுத்தலாம். ஆனால் ஷியா பட்டர்தான் பெஸ்ட்.

பேஷியல் டிஷ்யூ - தடிமனான டிஷ்யூக்கள் சருமத்திற்கு நல்லதல்ல. மென்மையான டிஷ்யூக்களை உபயோகப்படுத்துங்கள்.

Facial Sauna - மிக்சி போன்று இருக்கும். அதில் தண்ணீர் ஊற்றி ஸ்விட்சை ஆன் செய்தால் நீராவி வரும். அதில் முகத்தை காண்பித்து ஆவி பிடிக்கலாம். இது கிடைக்காதவர்கள் அல்லது இதற்காக செலவழிக்க விருப்பம் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது சமையல் செய்யும் பாத்திரம். வெந்நீர் வைக்கும் பாத்திரத்தையே உபயோகிக்கலாம்.

பேஷியல் பேக்: இதற்கான செய்முறையை எனது பயனளிக்கும் குறிப்பில் ஏற்கனவே கொடுத்துள்ளேன். அதில் சொல்லி இருப்பதைப் போன்று பொடி தயாரித்துக் கொண்டால் மிகவும் நல்லது. இல்லாவிடில் ஒரு ஸ்பூன் கடலைமாவு, 1/4 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 1/4 ஸ்பூன் சந்தனம், பன்னீர் 1 ஸ்பூன், முல்தானி மட்டி -1/2 ஸ்பூன் ( வறண்ட சருமம் இருப்பவர்கள் தவிர்க்கவும்), எலுமிச்சை சாறு- 10 சொட்டு, தயிர்- 1 ஸ்பூன்(எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் தவிர்க்கவும்) எடுத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கி பேஷியல் ஆரம்பிக்கும் முன் ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். முன்பே செய்து வைத்தால் மிகவும் காய்ந்து போய்விடும். ப்ரிட்ஜில் வைக்க வேண்டும் என்று சொல்வது முகத்திற்கு சில்லென்று இருக்கும் என்பதற்காக மட்டுமே. ப்ரிட்ஜில் வைத்தே ஆக வேண்டும் என்பதில்லை.

பேஷியல் செய்த பிறகு 8 மணி நேரம் போல முகத்திற்கு எதுவும் போடாதீர்கள். சோப் கூட வேண்டாம். எனவே பேஷியல் செய்ய மதியம் அல்லது சாயங்கால வேளைகளை தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் பேஷியல் செய்த சருமத்தில் துளைகள் சரியாக மூடாத பட்சத்தில் இப்படி உடனடியாக க்ரீமோ, சோப்போ உபயோகித்தால் பாதிக்கப்படும். மேலும் சூரிய வெளிச்சமும் அப்போது முகத்தில் படாமல் இருப்பது நல்லது. நான் முன்பே எனது பார்ட்டி மேக்கப் பதிவில் குறிப்பிட்டபடி பார்ட்டி விசேஷத்துக்கு முதல் நாள் பேஷியல் , ப்ளீச்சிங் முதலியவற்றை தவிருங்கள்.

பேஷியல் செய்முறை :
பேஷியலுக்கு ரெடியானவுடன் ஒவ்வொரு ஸ்டெப்பாக சரியாக செய்யுங்கள். மாற்றி செய்தால் பலனும் சரியாக இருக்காது. இதனை நான் டைட்டில் கொடுத்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக விவரிக்கிறேன்.

1) க்ளென்சிங் : தலை முடியை நன்றாக வாரி உச்சியில் கொண்டையாக க்ளிப் செய்து விடுங்கள். முதலில் கழுத்து, முகத்தை நன்றாக சோப் போட்டு கழுவுங்கள் அல்லது க்ளென்ஸிங் மில்க் கொண்டு கழுத்து, முகத்தை சுத்தமாக்குங்கள்.

2) இறந்த செல்கள் நீக்கம் : இப்போது ஸ்க்ரப்பரை முகம், கழுத்து போன்ற இடங்களில் தடவி கன்னங்களில் வட்ட வடிவமாகவும். மூக்கின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு விரல்களினால் மேலும், கீழுமாகவும், நெற்றியில் வட்ட வடிவமாகவும், தாடையில் அடிப்பகுதியை கீழ்ப்புறமாகவும், மேல் பகுதியை வட்ட வடிவமாகவும் ஸ்கரப் செய்யுங்கள். கழுத்தில் மேல் புறமாக ஸ்க்ரப் செய்யுங்கள். கண்ணை சுற்றிய பகுதிகள் மிகவும் மென்மையானவை. அந்தப் பகுதிகளில் ஸ்க்ரப்பிங் செய்யாதீர்கள். ஸ்க்ரப்பிங் செய்ததும் முகத்தை கழுவுங்கள். பல பார்லர்களில் இப்போதுதான் ஸ்க்ரப்பினை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்க்ரப்பிங் செய்வதே இறந்த செல்களை முற்றிலும் நீக்க சரியான வழி.

3) ரத்த ஓட்டம் அதிகரிக்க- இப்போது மசாஜ் செய்யும் முறை. மசாஜ் க்ரீமை கழுத்து,முகம் என்று அனைத்து இடங்களிலும் தடவுங்கள். இப்போது கன்னக்களை வட்ட வடிவமாகவும், கண்களை சுற்றி வட்ட வடிவில் மெதுவாகவும், தாடையை கீழிருந்து மேலாகவும், நெற்றியில் நடுவில் ஆரம்பித்து புருவம் முடியும் இடம் வரை கீழாகவும், மீண்டும் கன்னங்களை மேல் புறமாக நன்றாக அழுத்தமாகவும் , உதடுகளில் வட்ட வடிவில், உதடுகளின் ஓரங்களில் நீள்வட்டமாகவும் மசாஜ் செய்யுங்கள். கழுத்தில் எப்போதும் மேல் புறமாக செய்யுங்கள். மசாஜ் செய்யும் போதே முகத்தை செல்லமாக கிள்ளுவது போல விரல்களால் கிள்ளுவது போல் செய்யுங்கள் இதனால் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இவ்வாறு 10 நிமிஷம் போல செய்யுங்கள்.

4) முகத்தின் துளைகளை திறக்க : இப்போது பேஷியல் சானா அல்லது ஒரு பாத்திரத்தில் கொதிக்கின்ற தண்ணீர் எடுத்து அதில் முகத்தை காட்டி ஒரு துண்டால் உங்களை மூடி நன்றாக ஆவி பிடியுங்கள். முகத்திலிருந்து தண்ணீர் வியர்வை போல் கொட்டும் வரை ஆவி பிடியுங்கள்.

5) அழுக்கு, பிளாக் ஹெட்ஸ் நீக்குதல் - இப்போது பேஷியல் கிட்டில் இருக்கும் குச்சி போன்ற பிளாக் ஹெட்ஸ் ரிமூவரை அல்லது ஸ்பூனை எடுத்துக் கொண்டு, கண்ணாடியைப் பார்த்து, மூக்கின் ஓரங்களில் மெதுவாக அழுத்தவும். மூக்கின் நுனியில் இருக்கு பிளாக் ஹெட்ஸை இவ்வாறு நீக்க வேண்டும். ஒரு டிஷ்யூவை கையில் வைத்துக் கொண்டு அதனைக் கொண்டு அவ்வப்போது மூக்கையும், ரிமூவரையும்(அல்லது ஸ்பூனையும்) துடைத்துக் கொள்ளுங்கள். இதேபோல் தாடையில் இருக்கும் அழுக்கையும் நீக்குங்கள். அங்கே பெரும்பாலும் வொயிட் ஹெட்ஸ் தான் இருக்கும்.

6) துளைகளை மூட : இப்போது முகத்தில் பேக்கை போடவும். பேக் காயும்வரை வைத்திருந்து கழுவவும். பேக் போட்டிருக்கும் போது பேசவோ, முகத்தின் தசைகளை அதிகம் அசைக்கும் வண்ணம் சிரிப்பதோ வேண்டாம். ஏனெனில் பேக் முகத்தை இறுக்கமாக ஆக்கும்போது இவ்வாறு தசைகளை ஸ்ட்ரெயின் செய்தால் முகத்தில் சுருக்கம் விழும். பேக் போடுவதால் திறக்கப்பட்ட துளைகள் மூடிவிடும்.

இதுவே பேஷியல் செய்யும் முறை. இத்தனை விரிவாக எழுத வேண்டும் என்பதால்தான் நேரம் கிடைக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். இதில் எதுவும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.


தேவசேனா மேடம்! ஃபேஷியலில் ஒரு சந்தேகம்
டிசம்பர் 5, 2007 - 6:33am - வழங்கியவர் malathi

தேவசேனா மேடம்!.. ரொம்ப நன்றி. ஃபேஷியல் செய்யும் முறையை விளக்கமாக எழுதியிருந்தீர்கள். ஒரு சின்ன சந்தேகம் முகத்திற்கு ஆவி பிடித்த பிறகு ப்ளாக் ஹெட்ஸை ரிமூவ் பண்ணுகிறோம் அல்லவா, அதன் பிறகு ஐஸ் க்யூபை முகத்தில் தேய்த்து திறந்திருக்கும் துளைகளை மூடி விட்டு அதன்பிறகுதானே ஃபேஸ் பேக் அப்ளை பண்ணவேண்டும்? அல்லது துளைகள் திறந்திருக்கும் போதே அப்ளை பண்ணலாமா? தயவுசெய்து என் சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன்.

தோழி தேவாவுக்கு நன்றி,
டிசம்பர் 5, 2007 - 6:35am - வழங்கியவர் w3geetha

டியர் தேவா,
எப்படி இருக்கிறீகள்?,நான் ரொம்ப ஆர்வமாக உங்கள் குறிபுக்குக் காதிருந்தேன்.இது எனக்கு ரொம்ப பயனளிக்கும் மேடம். நன்றி.எனக்கு இன்னும் ஒரு கேள்வி தேவா,நான் சவூதியில் வசிக்கிறேன்.இ
ங்கும்,என் அம்மா வீட்டிலும் இருந்தால் எனக்கும்,என் 2வயது மகளுக்கும் தோல் நல்ல கலராக உள்ளது.ஆனால் என் கணவர் வீட்டில் இருக்கும் போது நாங்கள் இருவரும் கருத்து விடுகிறோம்.அங்கு குளிப்பதற்கு உப்பு மிக அதிகம் உள்ள தண்ணீர் தான்
உள்ளது்.நான் எவ்வாறு எனது மற்றும் என் மகளின் நிறத்தை பாதுகாப்பது.எனக்கும் ஏதாவது குறிப்புகள் கொடுத்து உதவுங்களேன்.நன்றி.

மிகவும் நன்றி தேவா .
டிசம்பர் 5, 2007 - 6:40am - வழங்கியவர் RSMV

கண்டிப்பா மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

தேவா மேடம்
டிசம்பர் 5, 2007 - 7:47am - வழங்கியவர் MarliyaNoohu

மிகவும் நன்றி தேவா மேடம்..னாங்க எல்லோருமே ஆவலாக இருந்தோம்....அன்புடன் மர்ழியாநூஹு

டியர் கீதா,
டிசம்பர் 5, 2007 - 7:48am - வழங்கியவர் thalika

தன்னி க்லைமேட் மாற நிறமும் மாறும்...நம்மால் தன்னியை மட்டும் கவனமா உவயோகிக்க முடியும்..மாமியார் வீட்டில் முகம் கழுக மட்டும் நல்ல தன்னீர் கொன்டு கழுகுங்க..ப்ரச்சனை குறையும்.
தேவா அருமையான பதிவு...கொஞ்சம் சந்தேகமும் ரெடியா இருக்கு..அப்ரம் கேக்கரேன்..தேவா ஜனகியின் ஐடியை நேரம் கிடைக்கும்போது அனுப்புங்க...என்னாச்சு பைய்யன்?தலை சரியாயிடுச்சா?

தேவா
டிசம்பர் 5, 2007 - 7:56am - வழங்கியவர் thalika

தேவா மசாஜ் க்ரீம் போட்டு மசாஜ் பன்னிட்டு க்ரீமை துடைச்சுட்டு ஸ்டீம் பன்னனுமா இல்ல அப்படியே ஸ்டீம் பன்னவா?

இது
டிசம்பர் 5, 2007 - 7:59am - வழங்கியவர் thalika

தேவா இது ஒரு கிருக்கு கேள்வி ஆனால் கேட்டுடரேன்...இந்த ஷியா பட்டரும் பார்மேர்ஸ் கொகொ பட்டர்(ஸ்ட்ரெச் மார்க்ஸ்) அதுவும் ஒரேமாதிரியா?

பதில் வேனும்
டிசம்பர் 5, 2007 - 8:28am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் எலோருக்கும்...என்னம் என சமையல் குரிப்பில் வந்து இருக்கு என்னம்னா என்ன அள்வு எடுக்கனும்?உடனே பிலீஸ்அன்புடன் மர்ழியாநூஹு

டவுட்
டிசம்பர் 5, 2007 - 8:35am - வழங்கியவர் shuba

Dear Deva,

Thanks for your effort.எனக்கு ஒரு கேள்வி.Shea butter cream எங்கு கிடைக்கும்.இந்தியாவிலா அல்லது வெளிநாட்டிலும் கிடைக்குமா? thalika ku இருக்குற அதே doubt தான் எனக்கும.கொக்கோ பட்டர் and Shea butter இரண்டும் ஒன்னா?

cheers
Shuba

என்னம் அப்படின்னா என்ன
டிசம்பர் 5, 2007 - 8:40am - வழங்கியவர் kavisiva

டியர் மர்ழியா என்னம் னா எண்ணிக்கை அவ்வளவுதான்.அதாவது முட்டை-2என்னம் அப்படீன்னா 2முட்டை அவ்வளவுதான்.

மிகவும் நன்றி தேவா!
டிசம்பர் 5, 2007 - 10:30am - வழங்கியவர் Parveen banu

உங்கள் பிஸி நேரத்திலும் எலுதியது மிகவும் சந்தோஷம்.ரொம்ப நன்றி.அழகு குறிப்புகள் ஒரு சிலர் ரகசியமா வச்சுக்குராங்க.எல்லோருக்கும் உதவட்டும்னு நீங்க பரந்தமனப்பான்மையுடன் எலுதுவது பாராட்டனும் தேவா.

ஒரு சின்ன சந்தேகம் இப்போ ஒரு பார்டிக்கு போகும் போது ஒரு வாரம் முன்பே செய்யனும்னு சொல்லியிருக்கீங்க.பிளீசிங்கும்
,பேசியமுல் ஒரே நாள் செய்து கொள்ளலாமா.
பியூட்டி பார்லரில் இந்தியாவில் பிளிச்சிங்கும் பேசியலும் ஒரெ னேரம் செய்து விட்டார்கள்.
அப்படி செய்யலாமா.

உங்கலுக்கு நேரம் கிடைக்கும் போது எலுதுங்க.

இன்னும் கொஞ்ஜம் சந்தேகம் இருக்கு.அப்பரம வந்து கேக்கிரேன்.

மிகவும் நன்றி.

காவி-கவி
டிசம்பர் 5, 2007 - 10:31am - வழங்கியவர் MarliyaNoohu

டியர் காவி சாரிம்மா நாக்கு தவறிட்டு கவி சந்தேகத்தை நீக்கியத்துக்கு தேங்ஸ்
அன்புடன் மர்ழியாநூஹு

கவி-தவி
டிசம்பர் 5, 2007 - 10:40am - வழங்கியவர் kavisiva

மர்ழியா,க வி ன்னு ரெண்டு எழுத்தையே இப்படி மாத்திட்டீங்களே.நீங்க பரவாயில்லை என் கசின் சின்ன வயசில் என்னை தவின்னு கூப்பிடுவா.தவி ன்னா மலையாளத்தில் கரண்டின்னு அர்த்தம்.நீங்க என்னை காவின்னதும் எனக்கு தவி ஞாபகம் வந்திடுச்சு

லைனில்தான் இருகீங்களா
டிசம்பர் 5, 2007 - 10:47am - வழங்கியவர் MarliyaNoohu

லைனில்தான் இருகீங்களா?என் பொன்னை தூங்கவைப்பதர்குல் படாதபாடு படவேன்டி இருக்கு,சாப்பிங் போனப்ப பனீர் வாங்கி வந்தேன்..2 , 3 நாள் ஆகுது...அப்படியே பிரிஜ்ஜில் தூங்குது..சிக்கனில்தான் சமைத்து இருக்கேன்..தனியாக பண்றாப்லெ யேதாவது தெரிங்சா சொல்லுங்கலேன்
அன்புடன் மர்ழியாநூஹு

மர்ழியா
டிசம்பர் 5, 2007 - 1:52pm - வழங்கியவர் kavisiva

மர்ழியா அப்போ போயிட்டு இப்போதான் வந்தேன்.திடீர்னு ப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்க அதான் சொல்லாம கொள்ளாம ஓடிட்டேன்.
அப்புறம் பனீர்ல நிறைய ரெசிப்பி இருக்கே.குருமாவில் தேடி பாருங்க நிறைய கிடைக்கும்.
நானும் தேடி லின்க் எழுதறேன்.

சந்தேகங்களுக்கு விளக்கம்
டிசம்பர் 6, 2007 - 12:43am - வழங்கியவர் DEVA

முதலில் அனைவரின் பாராட்டுக்கும் நன்றி. எல்லாருடைய சந்தேகங்களுக்கும் இங்கேயே பதில் அளித்து விடுகிறேன். பேக் போடும்முன்பு ஐஸ் வைக்க வேண்டிய அவசியமில்லை. பேக் போடுவதன் மூலம் துளைகள் மூடப்பட்டுவிடும். நாம் போடும் பேக் உள்ளே சென்று தீங்கு ஏற்படுத்தக்கூடியது அல்ல. மேலும் ஐஸ் வைப்பதின் நோக்கம் முகத்தின் துளைகள முற்றிலுமாக மூட அல்ல. நாம் பிளாக் ஹெட்ஸ் ரிமூவ் செய்யும்போது நமது சருமம் சிவந்துப் போய் காணப்படும். அதற்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐஸ் தடவுகிறார்கள். நான் கூறியப்படி ப்ரிட்ஜில் பேக்கை சிறிது நேரம் வைத்து உபயோகித்தால் இதமாக இருக்கும். நான் சொல்லி இருக்கும் பேக் நமது முகத்தில் துளைகளை மூட மட்டும் அல்ல. இந்த பேக் போடுவதின் மூலம் ஏற்கனவே உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் குணமாகும். எனவே இந்த பேக் துளைகளுக்குள் சென்று தீமை ஏற்படுத்தும் என்று நினைக்க வேண்டியதில்லை. மாறாக நன்மையே தரும்.

ஷியா பட்டரும் , பால்மர்ஸின் கோகோ பட்டரும் ஒன்றல்ல. இரண்டும் வேறு. காஸ்மெட்டிக் பொருட்கள் விற்கும் கடைகளில் சென்று கேட்டீர்களானால் ஷியா பட்டர் நிறைந்த க்ரீமை பரிந்துரைப்பார்கள். ஷியா பட்டர் நிறைந்த க்ரீம் என்று கேளுங்கள். ஷியா பட்டரை தனியாக வாங்கி உபயோகிக்கலாம் என்று சொல்லவில்லை. ஏனெனில் அப்படி ஷியா பட்டர் என்று தனியாக எங்கேயும் விற்பதாக தெரியவில்லை. அப்படி ஷியா பட்டர் க்ரீம் கிடைக்காவிட்டாலும், பேஷியல் மசாஜ் க்ரீம் என்று கேட்டு வாங்குங்கள்.

முகத்தில் க்ரீம் போட்டு மசாஜ் செய்துவிட்டு அப்படியே ஆவி பிடிக்கவும். முகத்தில் உள்ள க்ரீமை நீக்க வேண்டாம். ஆவி பிடித்த பிறகு முகத்தில் வழியும் நீராவியை டிஷ்யூ கொண்டு மெதுவாக துடையுங்கள்.

ஒரே நாளில் ப்ளீச்சிங், பேஷியல் செய்துக் கொள்ளலாம். தவறில்லை. இரண்டுமே ஹெர்பலாக இருக்கும் பட்சத்தில் ஒன்றும் ஆகாது. ஆனாலும் அடுத்தடுத்த நாட்களில் ப்ளீச்சிங், பேஷியல் செய்து கொள்வது சருமத்திற்கு நல்லது. இனி அவ்வாறே செய்து கொள்ளுங்கள்.

அழகுக்குறிப்பு என்பது ரகசியமாக வைக்க வேண்டிய விஷயம் இல்லை என்பது என் கருத்து. அவரவர் அழகு அவரவருக்கு. அடுத்தவர் அழகாக இருக்கிறார் என்று பொறாமைப் படுவதாலோ அல்லது நாம் அழகாக இல்லை என்று வருத்தப்படுவதாலோ ஒரு பிரயோஜனமும் இல்லை. என் நோக்கம் ப்யூட்டி பார்லருக்கு செல்ல நேரமில்லாத என்னைப் போன்ற பலருக்கு இந்த குறிப்புகள் பயன்பட வேண்டும் என்பதே. இன்னும் சொல்லப்போனால் என் அக்கா நான் என்னதான் போனில் சொன்னாலும் கேட்க மாட்டாள். அதுவே அருசுவையில் எழுதினால் படித்துவிட்டு ரொம்ப சின்சியராக பின்பற்றுகிறாள். ஏனென்று எனக்கு தெரியவில்லை. நான் ஆரம்ப காலங்களிலிருந்தே பார்லர் செல்வதைவிட வீட்டிலேயே இப்படிப்பட்ட குறிப்புகளை செய்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புவேன். அதற்கு முக்கிய காரணம் ஹைஜீன். இன்னொன்று எனக்கு தெரிந்த குறிப்பெல்லாம் செய்துப் பார்க்க வீட்டில் நிறைய ஸ்பெசிமென்கள் கிடைத்தார்கள். இன்னமும் வாக்சிங் என்று போனால் நம் ஊரில் துணிகளை உபயோகப்படுத்துகிறார்கள். அது ஒழுங்காக ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டதா என்று யாரும் கவனிப்பதில்லை. இதனால் நேரமில்லாமல் ப்யூட்டி பார்லர்களை நாடும்போது, டிஸ்போசபிள் ஷீட்ஸ் உபயோகப்படுத்தும் ஒரு சில பார்லர்களை மட்டுமே நம்பி போக முடிகிறது. இதேபோல் பல விஷயங்களில் சொல்லலாம். நமது முகத்துக்கு எது ஏற்றது, என்ன அலர்ஜி வரும், எப்படிப்பட்ட சருமம், எந்த ஹேர் ஸ்டைல் பொருந்தும் என்பதை நம்மைவிட யாராலும் சரியாக கணிக்க முடியாது என்பது என் கருத்து. என்னதான் ஹேர் ஸ்டைலிஸ்ட்டிடம் சென்று ஹேர் ஸ்டைலிங் செய்து கொண்டாலும் அதனை பராமரிக்க முடியுமா என்ற விஷயம் நமக்குதான் தெரியும். மலேஷியாவில் பல சலோன்களில் வெட்டிய முடிகளை அப்புறப்படுத்தாமல் சாயங்காலம் வரை அப்படியே வைத்திருப்பார்கள். பார்க்கும்போதே உள்ளே கால் வைக்கக்கூட முடியாது. இங்கே ஆஸ்திரேலியாவில் கூட எல்லாரும் ஹைஜீன் விஷயத்தில் பரவாயில்லை என்றுதான் சொல்ல முடியும்.

இனி நேரம் கிடைக்கும்போது இன்னும் சில விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன்.

தண்ணீரால் சருமம் பாதிக்கப்பட்டால்
டிசம்பர் 6, 2007 - 12:57am - வழங்கியவர் DEVA

ஹாய் கீதா,
இந்த பிராப்ளம் எங்க வீட்டிலும் இருந்தது. இப்படி உப்பு தண்ணீரால் சருமம் பாதிக்கப்படுவதற்கு சரியான தீர்வு என்று எதையும் சொல்ல முடியாது. முடிந்தால் உங்கள் மாமியார் வீட்டில் உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்ற என்று உள்ள சாதனத்தை பொருத்த சொல்லுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பெண் குளிக்க என்று தனியாக குடி தண்ணீர் ஒரு வாளி அளவிற்கு ஊற்றி அதில் குளிப்பாட்டுங்கள். நீங்களும் தளிகா குறிப்பிட்டபடி முகம் கழுவ நல்ல தண்ணீர் உபயோகியுங்கள். என் வீட்டில் நான் ஏற்கனவே எல்லாரையும் விட கலர் கம்மி என்பதால் என் அம்மா எனக்காக என்று தினமும் 3 குடம் நல்ல தண்ணீர் கொண்டுவர வைத்து அந்தத் தண்ணீரில்தான் என்னை குளிக்க சொல்வார்கள். என் பையன் பிறந்த போது வீட்டில் இருந்த போதும் அவனையும் குடி தண்ணீரில்தான் குளிப்பாட்டினேன். ஒரு வழியாக இப்போதுதான் இந்த உப்புத் தண்ணீர் பிரச்சனை தீர்ந்து விட்டது. இப்போது நல்ல தண்ணீராக வேறொரு இடத்தில் போர் போட்டு கிடைப்பதால் பிரச்சனையில்லை. நீங்களும் முடிந்தவரை நல்ல தண்ணீர் உபயோகிக்க பாருங்கள். உங்கள் சருமம் மிகவும் கருத்துவிட்டதாக தோன்றினால் Fade Out Cream உபயோகியுங்கள் குழந்தைக்கு எந்த க்ரீமும் உபயோகிக்க முடியாது. எனவே குழந்தைக்கு மட்டுமாவது நல்ல தண்ணீர் ட்ரை பண்ணுங்க.

மிகவும் நன்றி தேவா!
டிசம்பர் 7, 2007 - 3:51pm - வழங்கியவர் Parveen banu

அன்புள்ள தேவா
உங்க பதிலுக்கு மிகவும் நன்றி.நீங்க சொல்லிய்ய கருத்துக்கள் முற்றிலும் சரி .நமக்கு எது அழகு என்று நமக்கு தான் தெரியும்.இங்கு ஒரு முறை பார்லரில் சென்று ஹேர்ஸ்டைல் பன்னிகிட்டேன்.எனக்கு கொஞ்ஜமும் பிடிக்கவில்லை.இந்த நாட்டினருக்கு தெரியவில்லையோ என்ன்வோ.வந்தவுடன் அதை கலைத்துவிட்டுதான் வேர வேலை பார்த்தேன்.எனக்கு சின்ன வயசிலுருந்தே மேகப் பன்னிக்கிரது,நல்லா டிரஸ் பன்னிகிரது இதேல்லாம் எனக்கு பிடிச்ச விஷயங்கள்.இங்கு குப்பை போல கொட்டி கிடக்குது.எது செலக்ட் செய்ரதுன்னு தெரியாம இருந்தேன்.உங்க டிப்ஸ் தான் எனக்கு மிகவும் உதவி செய்தது.லிப்ஸ்டிக் எல்லாம் செலக்ட் செய்ய கத்துகிட்டேன்.அது போல சுத்தம் சுகாதாரம் என்று பார்க்கும் போது நமக்கு நல்லா தெரிந்தா நாமே நீங்க சொல்வது போல செய்துக்கலாம்.மிக்க நன்றி தேவா.

அன்புடன் பர்வீன்.

தேவா,தளிகாவுக்கு,
டிசம்பர் 7, 2007 - 5:48pm - வழங்கியவர் w3geetha

தேவா,தளிகா,
உங்கள் இருவருக்கும் மிகவும் நன்றி.உங்கள் குறிப்புகள் எனக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.நான் இப்பொழுது தான் உங்கள் குறிப்புகளைப் பார்த்தேன்.நீங்கள் இருவரும் நலமா?. தேவா உங்களின் பேஷீயல் குறிப்புகளை நான் முயற்சித்தேன்.அதற்கும் நன்றி.

shea butter cream
டிசம்பர் 18, 2007 - 12:40am - வழங்கியவர் rita

நன்றி தேவா மேடம். Jergens companyயின் shea butter cream உபயோகபடுத்தலாமா? தயைகூர்ந்து சொல்லவும்.

ஷியா பட்டர்
டிசம்பர் 18, 2007 - 3:38am - வழங்கியவர் DEVA

ஹாய் ரீட்டா, நீங்கள் குறிப்பிட்ட பிராண்ட் நல்லது. நிச்சயம் உபயோகப்படுத்தலாம்.

அட நேத்து
டிசம்பர் 18, 2007 - 5:56am - வழங்கியவர் thalika

அட நேத்து தான் ப்ரொமொஷம் பேபரில் இந்த ப்ரேன்டை பாத்ததும் இங்க வந்து எழுதனும்னு நெனச்சேன்..கரெக்டா ரீடாவும் கேட்டிருக்காங்க//நான் சொன்னதும் ஜெர்கென்ஸ் தான்.

ஹலோ தேவா மேடம்
டிசம்பர் 18, 2007 - 6:17am - வழங்கியவர் radharam

உங்க கிட்ட ஒரு கேள்வி எனக்கு இந்த branded items உபயோகிக்க பிடிக்கல மேடம் ஏதாவது natural beauty tips தாங்களேன் முகத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க. என்னுடைய முகத்தில் நிறைய dot dot வருது. நீங்க freeya இருக்கும் போது தாங்க மேடம்.
cheers,
radha

நன்றி.
ஜனவரி 9, 2008 - 6:53pm - வழங்கியவர் rita

அதாவது "க்ரெட் மைன்ட்ஸ் திங்க் அலைக்" அதுமாதிரி தான் இதுவும் :)

Mint Julep Masque
ஜனவரி 9, 2008 - 7:36pm - வழங்கியவர் KavithaKannan

Walgreens ல் கிடைக்கும். Just 3.5 dollars தான்.இது ரொம்ப நல்லா இருக்கு. இதை முகத்தில் pack மாதிரி நன்கு அப்பி வைக்க வேண்டும். 15 minutes கழித்து கழுவினால் முகம் 'பளிச்'.
இது US ல தயார் ஆகிற product. மற்ற இடங்களில் கிடைக்குமானு தெரியலை.
Deva நீங்கள் பொருமையா எழுதனதுக்கே உங்களுக்கு Thanks சொல்லனும்.

ஹாய் தேவா மேடம்
மார்ச் 31, 2008 - 8:32am - வழங்கியவர் vique

பேஷியல் செய்வது எப்படி என்று உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன்.ஒரு சிறு சந்தேகம்.facial க்கும்,face mask க்கும் இரண்டுக்கும் என்ன வித்தியாசம். நான் உங்கள் பதிவை பார்க்கும் முன் face mask தான் உபயோகித்தேன் .இதை பற்றி கொஞ்சம் சொள்ளுங்கள். நன்றி.

சந்தேகம்
மே 11, 2008 - 6:29am - வழங்கியவர் kuyil

ஹாய் மேடம்,
ஷியா பட்டர் க்ரீம் முடி-க்கு உரிய க்ரீம் இல்லையா? கடையில்"for hair care" ன்னு இருந்தது. முகத்திற்கு தனியாக உள்ளதா?

பேஷியல், பேஸ் மாஸ்க்
மே 11, 2008 - 7:50pm - வழங்கியவர் DEVA

ஹாய் vique,
பேஷியலுக்கும், பேஸ் மாஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் முகம் கழுவுவதற்கும், சோப்புக்கும் உள்ள வித்தியாசம்தான். நான் கொடுத்திருக்கும் குறிப்பை படித்தீர்கள் என்றால் தெளிவாக புரியும். முகத்தில் உள்ள அழுக்கு, கரும்புள்ளி முதலியவற்றை நீக்க நாம் செய்து கொள்ளும் அழகு முறையே பேஷியல். அதற்கு உபயோகப்படுவதுதான் பேஸ் மாஸ்க். இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஷியா பட்டர்
மே 11, 2008 - 7:54pm - வழங்கியவர் DEVA

ஹாய் kuyil ( நல்லா பாடுவீங்களா),
ஷியா பட்டர் முகத்திற்கு தடவ என்றே கடைகளில் கிடைக்கும். அப்படி கிடைக்காவிட்டால் பேஸ் மசாஜ் க்ரீம் அல்லது கோகோ பட்டரை உபயோகியுங்கள். நறுமணம் இல்லாத (scent free) காஸ்மெட்டிக்ஸ் எப்போதுமே சருமத்திற்கு நல்லது. முடிந்தால் அப்படிப்பட்ட க்ரீம்களை வாங்குங்கள்.

deva madam
மே 11, 2008 - 11:28pm - வழங்கியவர் balammu

can we use baby oil for massage in this facial??
wat is meant by bleaching?? how to do>>

39 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »