topic_image


தாமரைத் தண்டு சமைப்பது எப்படி என்று சொல்ல முடியுமா?


தாமரைத் தண்டு
டிசம்பர் 22, 2007 - 8:16am - வழங்கியவர் T S JAYANTHI

எங்க பாட்டி தாமரைத் தண்டு வற்றல் செய்து வைப்பார்கள். பொரித்துத் தின்போம். பார்க்க வெண்டைக்காய் துண்டுகள் போல் இருக்கும்.
தாமரைத் தண்டை சிறு துண்டுகளாக வெட்டி மோரில் உப்பு போட்டு ஊற வைத்து வெய்யிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு தேவையானபோது பொரிக்கலாம்.
அன்புட்ன
ஜெயந்தி மாமி

தாமரை தண்டு
டிசம்பர் 22, 2007 - 8:18am - வழங்கியவர் Jaleela Banu

Jaleela Kamal
ஜெ மாமி எனக்கு தாமரை தண்டு பற்றீ தெரியாது யாரும் பதில் தரவில்லையெ என்று நினத்தேன் நீங் கொடுத்து விட்டீர்கள்.
ஜலீலா

தாமரைத் தண்டு
டிசம்பர் 22, 2007 - 8:51am - வழங்கியவர் கமலா

தாமரைத் தண்டை நறுக்கி, கைகளால் பிழிந்து விட்டு, அத்துடன் கடலைமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து பிசைந்து, பக்கோடா போல் எண்ணையில் பொரித்து எடுக்கவும்.