topic_image


எங்களது திருமணத்திற்கு தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும், மன்றம் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. நடந்த கதையை முழுமையாக இங்கே சொல்ல இயலாததால், ஆவலுடன் கேட்ட கர்ப்பிணி சகோதரிக்கு எனது இயலாமையை மட்டும் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன். எனது திருமணம் மிகக்குறுகிய காலத்தில் எடுத்த முடிவு. யாருமே எதிர்பாராத வண்ணம், எல்லாமே மிக விரைவாக நிகழ்வுற்றது. எங்கள் இருவருக்குமே நடந்தவை அனைத்தும் கனவு போல் இருக்கின்றது. ஆரம்பக்கால சோதனைகள் முடிந்து, இனி நல்லவை மட்டுமே நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் எங்கள் திருமண வாழ்க்கையை தொடங்குகின்றோம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் என்ற பழமொழியைக் குறிப்பிட்டு, புதுப்பெண்டாட்டியுடன் போதும் உல்லாசம் என்பதுபோல் அறிவுறுத்தி மின்னஞ்சல் அனுப்பியிருந்த சகோதரிக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்பும் தகவல் இதுதான். நீங்கள் நினைப்பதுபோல், இங்கே நான் கடமை மறந்து, உல்லாசமாக பொழுதை கழித்துக் கொண்டு, மகிழ்ச்சியாக நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கவில்லை. எனது நிலையை வெளியில் சொல்ல முடியவில்லை. நான் சந்தித்து வரும் பிரச்சனைகள், அதனால் உண்டாகும் மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து என்னை அறுசுவைக்கு பணியாற்ற முடியாமல் செய்துவிட்டன. பிரச்சனைகளை பேசுவது, சமாளிப்பது, எதிர்கொள்வது என்பதிலேயே பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தன. இதனால்தான் நான் குறிப்பிட்டவாறு என்னால் அறுசுவையில் மாற்றங்கள் கொண்டு வர முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கோருகின்றேன். பிரச்சனைகள் எனக்கு மட்டும் என்றில்லாமல், அறுசுவையில் பணியாற்றுபவர்களுக்கும் இருந்த காரணத்தால், அறுசுவை பணிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டது. தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ளோம். விரைவில் அறுசுவைக்கு புதிய பொலிவைக் கொடுக்கும் முயற்சியில் இறங்குவோம்.

எனக்கு தனிமின்னஞ்சல்கள் நிறைய வந்திருக்கின்றன. என்னால் யாருக்கும் பதில் கொடுக்க முடியவில்லை. இயன்ற அளவிற்கு கொடுக்க முயற்சிக்கின்றேன். தற்போது எனது மெயில் சர்வரை செயல் இழக்கச்செய்திருப்பதால், உடனே பதில் கொடுத்தல் சிரமம். விரைவில் அதனை சரிசெய்து அனைவருக்கும் பதில் கொடுக்கின்றேன்.

திருமணப் படங்களை வெளியிடச்சொல்லி நிறைய சகோதரிகள் கேட்டிருந்தனர். எங்களது திருமணம் கோயிலில் நடைபெற்றது என்பதால் படங்கள் அதிகம் எடுக்கவில்லை. எடுத்த படங்களை மீண்டும் டிஜிட்டல் கேமராவில் எடுத்து, கீழ்க்கண்ட லிங்க்கில் சில படங்களை கொடுத்துள்ளேன். படங்களின் தரம் மோசமாக இருக்கும். கோபித்துக்கொள்ள வேண்டாம்.

திருமணப் படங்கள்

சரி, இப்போது முக்கியமான விசயத்திற்கு வருகின்றேன். எனது திருமணம் நான் உட்பட யாருமே எதிர்பாராத வண்ணம், திடீரென நடைபெற்றுவிட்டது. யாருக்கும் அழைப்பு கொடுக்க இயலவில்லை. அதனால் திருமண வரவேற்பினை அழைப்பு கொடுத்து கொண்டாட முடிவு செய்துள்ளோம். இப்போதுதான் தேதியை முடிவு செய்தோம். வரும் ஜனவரி 13 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நாகையில் வரவேற்பு விழா நடைபெறவுள்ளது. இது ஒரு முன் தகவல். முறையான அழைப்பினை அழைப்பிதழ் தயாரான பின்பு இங்கே கொடுக்கின்றேன். சகோதர சகோதரிகள் அனைவரும் நாகை பயணத்திற்கு தயார் செய்துகொள்ளவும்.

வரவேற்பின்போது இரவு விருந்தினை வித்தியாசமாக கொடுக்க நிறைய திட்டங்கள் போட்டு வருகின்றோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாய் இருக்கும் உணவுகள் பலவற்றை அங்கிருந்து வரவழைக்கவுள்ளோம். உதாரணமாக, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, சாத்தூர் சேவு, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலைமிட்டாய்.. இப்படி தென் தமிழக சிறப்பு பலகாரங்களை கொண்டு வர ஏற்பாடுகள் செய்துள்ளோம். வேறு என்னவெல்லாம் கொடுக்கலாம், என்ன மாதிரி மெனு வைக்கலாம் என்பதற்கு உங்களின் ஆலோசனைகளை வாரி வழங்குங்கள். மற்ற தகவல்களை பின்னர் தெரிவிக்கின்றேன்.

மீண்டும் எனது நன்றிகள் :-)


its ok admin,we understand ur situation
டிசம்பர் 27, 2007 - 8:21am - வழங்கியவர் sundhari78

வாழ்த்துக்கள் ,சோதனை பல கடந்தாலும் இருவரும் இனி வரும் காலத்தில் குடும்ப வாழ்கையில் சாதனை பல படைக்க வாழ்த்துக்கள். இப்போது உங்களால் சொல்ல முடியாமல் போன கதையின் முழு உரிமையை எனக்கு கொடுத்தால் 10 வருடம் கழித்து ஒரு படம் எடுப்பேன். கதை கண்ணாமூச்சி ஏஆனட ஸ்டைலில் இருக்கும் என்ற நம்பிக்கையில் ராயல்டி கேட்கிறேன்.
Be happy always and enjoy life.

Wish you a Happy Married life
டிசம்பர் 27, 2007 - 8:48am - வழங்கியவர் Jaleela Banu

டியர் அட்மின்
பாபு தம்பி & பாப்பி

முதலில் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
கவலை வேண்டாம் திருமண் வரவேற்பு நல்ல படியாக நடைபெறும்.
கூடவே தலை பொங்கல் வாழ்த்துக்களும்.

உங்களுக்கு டைம் இருக்க இல்லை என்று தெரியவில்லை.
டிப்ஸ்ஸுக்கென்று தனி தலைப்பு போடுங்கள் அவர் அவர்களுக்கு தேரிந்த்தௌ போட்டட்டும்.
ஏனென்றால் நான் கொடுத்த இஞ்சி சாறு, ஜலதோஷத்திற்கு எல்லாம் யாரும் மறுபடியும் தேடி பிடித்ஹ்டு படிக்க மாட்டர்கள்.
அதேல்லாம் எங்க பாட்டி உடைய அம்மா சொன்னது, எல்லோருக்கும் பயன்படனும்.

ஜலீலா

Wishes
டிசம்பர் 27, 2007 - 9:07am - வழங்கியவர் Sujatha Karthikeyan

Hi Admin,

Your Marriage pictures remembers my marriage because even we didn't smile in any picture, same ours also love marriage. But now we lead happy life with two kids. So i Pray for you guys.
Sujatha Karthikeyan

அன்புள்ள அண்ணா & அண்ணி,
டிசம்பர் 27, 2007 - 9:12am - வழங்கியவர் Yuvarani

தங்கள் திருமண படங்களை அறுசுவை சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. திருமண படங்கள் நன்றாக அமைந்திருக்கிறது.நீங்கள் சொன்னது போல் "ஆரம்பக்கால சோதனைகள் முடிந்து, இனி நல்லவை மட்டுமே நடக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்" . மனதில் மகிழ்ச்சியுடனும் அருகில் எப்பொழுதும் அண்ணியுடனும் அறுசுவை என்றும் தடையுறாது வெற்றியை நோக்கி செல்ல வாழ்த்துக்கிறேன்..உங்கள் இருவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்.
டிசம்பர் 27, 2007 - 9:26am - வழங்கியவர் Parveen banu

அன்புள்ள அண்ணா திருமணபோட்டோ காட்டியது மிகவும் சந்தோஷம்.அதே சமையம் நீங்க வார்த்தயால பிரச்சனை என்று சொல்லியது போட்டோவை பார்த்தவுடன் தெரிந்தது.சகோதரி சொல்வது போல படத்தில் சிரிப்பை கானோம்.நடந்தவைகலை எல்லாம் மறந்து இனி வாழ்க்கையில என்றும் சந்தோஷமாக இருக்க இறைவன் அருள் புரிவானாக.இனி ரிஷப்ஷன் போட்டோவில் சந்தோஷ முகத்துடன் பார்க்க ஆவல்.

அன்புடன் பர்வீன்.

வாழ்க வளமுடன்
டிசம்பர் 27, 2007 - 9:29am - வழங்கியவர் T S JAYANTHI

பாபு, பாப்பி பெயர் பொருத்தம் இருக்கு. அதே மாதிரி எல்லாம் பொருத்தமாய் இருந்து நன்றாய் நலமாய் இனிதே வாழ்க்கை நடத்த வாழ்த்துக்கள்.
பாப்பியின் பிள்ளையார் என்றும் துணை இருப்பார்
போட்டோ எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.
அன்புடன்
ஜெயந்தி மாமி

hello admin sir
டிசம்பர் 27, 2007 - 4:43pm - வழங்கியவர் vidyavasudevan

anbudanஹல்லோ அட்மின்,

எப்படி இருக்கீங்க? திருமண புகைப்படங்கள் அருமையாக உள்ளது. என்ன ஒரு சிறிய புன்னகை இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்.புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் கொண்டு வரும், அருசுவை சகோதரிகளின் வாழ்த்துக்களும் வேண்டுதல்களும் என்றும் உங்களுக்கு.
உண்டு.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்று அன்புடன்,
வித்யாவாசுதேவன்..

hai sujatha
டிசம்பர் 27, 2007 - 4:49pm - வழங்கியவர் vidyavasudevan

anbudan
hai sujatha
how are u and your family, yours is love marriage
and mine is also love cum arranged marriage. vidvas at ya...... i think u can understand, keep in touch,take care,bye for now.

ever loving,
vidyavasudevan.

வாழ்வாங்கு வாழ்க!!
டிசம்பர் 27, 2007 - 4:51pm - வழங்கியவர் vinnie

அட்மின், உங்க திருமணப் படங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளது. உங்கள் வாழ்வில் என்றென்றும் இன்பம் நிறைந்திட ஆண்டவனிடம் வேண்டுகிறேன். உங்கள் இருவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். இதோ நாகைக்கு வர ரெடி ஆகிகிட்டே இருக்கோம்:-)

மேலும் உங்கள் கவனத்திற்கு: சில நாட்களுக்கு முன் சகோதரி ஜலீலா அவர்களும் இருநூறு குறிப்புகளை கொடுத்தார். அவரையும் முகப்பில் வாழ்த்திவிடுங்கள்.

hi vinnie
டிசம்பர் 27, 2007 - 4:54pm - வழங்கியவர் vidyavasudevan

anbudan
hai vinni,
are u online?i saw only one photo?
how to see the other photos?
take care later ill send a mail
keep in touch.

ever lolving,
vidyavasudevan.

vidya
டிசம்பர் 27, 2007 - 5:01pm - வழங்கியவர் vinnie

vidya, press 'view photos' then press 'play' under the photo

vinnie
டிசம்பர் 27, 2007 - 5:03pm - வழங்கியவர் vidyavasudevan

anbudan

ok vinnie, ill see then i will mail u,
take care, bye.

love,
vidvas.

வண்ணப்படங்கள் அனைத்தும் அருமையா வந்திருக்கு :-)
டிசம்பர் 27, 2007 - 5:06pm - வழங்கியவர் harshini

பாபு அண்ணா,

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு அண்ணா. சிரிப்பு மிஸ்ஸிங் ஆனாலும், ஏதோ ஒரு அழகு அந்த படங்கள்ல இருக்கு. கிராமத்து மணம் கமழ்ந்திட்டு இருக்கு உங்க ரெண்டு பேரு முகத்துலயும். நீங்க ரெண்டு பேரும் இந்த ப்ரெச்சனைகளெல்லாம் விலகி, எப்பவும், எல்லா நிமிஷம், வினாடின்னு சந்தோஷமா இருப்பீங்க. வாழ்த்துக்கள் அண்ணா :-)

அன்புடன்
ஹர்ஷினி :)

வானு, உன்னைத்தான்..
டிசம்பர் 27, 2007 - 5:09pm - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் வானு,
நலமா? என்னோட மெயில் பார்த்தியா? பதிலே இல்லை. பிசியா?
அன்புடன்,
செல்வி.

hai selvi
டிசம்பர் 27, 2007 - 5:12pm - வழங்கியவர் vidyavasudevan

anbudan

selvi,
eppati irukkiinga?
udal nalam thevalama?
en mail vandhutha,
take care, again ill mail u.

ever loving,
vidyavasudevan.

hai selvi
டிசம்பர் 27, 2007 - 5:12pm - வழங்கியவர் vidyavasudevan

anbudan

selvi,
eppati irukkiinga?
udal nalam thevalama?
en mail vandhutha,
take care, again ill mail u.

ever loving,
vidyavasudevan.

உன்னைத் தானே
டிசம்பர் 27, 2007 - 5:12pm - வழங்கியவர் harshini

என்னக்கா,

எனக்கு மட்டும் போட்டோஸ் அனுப்பவே இல்ல. நீங்க. போங்க உங்க பேச்சு டூ. ஆமா, என்ன மெயிலே பண்ணமாட்டேங்கிறீங்க:-(. வானு அக்கா, தங்கச்சி மேல கோவமா :-(. கோவப்படலாமா ?

அன்புடன்
ஹர்ஷினி :)

majidha don't worry
டிசம்பர் 27, 2007 - 5:14pm - வழங்கியவர் Jaleela Banu

majitha pls wait

இப்பத்தான்...
டிசம்பர் 27, 2007 - 5:33pm - வழங்கியவர் senthamizh selvi

வித்யா,
கொஞ்சம் முன்னதான் பதில் மெயில் அனுப்பினேன். பாரேன் வந்ததான்னு.
அன்புடன்,
செல்வி.

Hi
டிசம்பர் 27, 2007 - 9:33pm - வழங்கியவர் Sujatha Karthikeyan

Hi Vidhyavasudevan,
Got your message, ya ours is love marriage. Now we are doing good.
Thanks,
Sujatha Karthikeyan.

வாழ்க பல்லாண்டு
டிசம்பர் 28, 2007 - 12:59am - வழங்கியவர் Janaki2411

எங்களுக்காக உங்கள் படங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நட்ந்தது, நடப்பது எல்லாம் நன்மைக்கே. அதனால் எதை பற்றியும் கவலைபடாமல் வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்குகள். வாழ்வில் எல்லாம் வள்மும் பெற ஆண்டவனை பிரத்திகிரேன். எங்களை எல்லாம் வர்வேற்பிற்கு அழைத்தற்கு மிகவும் நன்றி.

ஜானகி

நன்றி
டிசம்பர் 28, 2007 - 9:15am - வழங்கியவர் admin

வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரிகள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

சகோதரி சுந்தரி அவர்களுக்கு, கதை உரிமையை உங்களுக்கு கொடுப்பதில் எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், இது ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே வழக்கில் இருக்கும் ஒரு சாதாரண கதை. 10 வருடங்கள் கழித்து எடுக்கும் அளவிற்கு இதில் புதுமை எதுவும் இருக்காது. உங்களுக்கு வேண்டுமானால் ஒரு ரகசியம் சொல்கின்றேன். யாரிடமும் சொல்லாதீர்கள். அறுசுவையில் பங்கேற்கும் சில சகோதரிகளின் கதையை கேட்டீர்கள் என்றால், இன்றே படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிவிடுவீர்கள். கேட்டு இப்போதே ரைட்ஸ் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

சகோதரி ஜலிலா அவர்களுக்கு, டிப்ஸ் பகுதியை விரைவில் கொண்டு வருகின்றேன். முன்பே வேலைகளை தொடங்கினோம். இடையில் கொஞ்சம் தடைபட்டுவிட்டது. வெகு விரைவில் கொண்டு வருகின்றேன்.

சகோதரி சுஜாதா கார்த்திகேயன் அவர்களுக்கு, உங்களின் பிராத்தனைக்கு எங்களது நன்றிகள். எங்களுடையதும் காதல் திருமணம்தான் என்று சொல்லியிருக்கின்றீர்கள். மன்னிக்கவும், எங்களது காதல் திருமணம் அல்ல. சத்தியம். நம்புங்கள்.

தங்கை யுவராணி அவர்களுக்கு, உங்களது மின்னஞ்சலுக்கு பதில் கொடுத்தேன். என்னுடைய மெயில் சர்வர் பிரச்சனையால் அது செல்லவில்லை. எனது முகவரி, 7, பெருமாள் வடக்கு மடவிளாகம், நாகப்பட்டினம். 611001 (போன், 04365-220111, 9443651329, 9952528028). நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ரிசப்ஷன் போது அவசியம் வரவும். நிறைய சகோதரிகள் வருவதாக வாக்கு கொடுத்திருக்கின்றனர்.

சகோதரி பர்வீன் அவர்களுக்கு, கண்டிப்பாக ரிசப்ஷன் போட்டோவில் சிரிக்க முயற்சி செய்கின்றோம். திருமணத்தின் போது இருவர் முகங்களிலும் ஒரு இறுக்கம் இருந்தது உண்மை. எனக்காக என்னுடைய சகோதரி மட்டும் வந்திருந்தார். பாப்பிக்காக வந்தவர்கள் என்று யாரும் இல்லை. மற்ற அனைவரும் தெரிந்தவர்கள்தான். எனவே, எங்கள் முகங்களில் இருந்த இறுக்கம் தவிர்க்க முடியாதது.

சகோதரி ஜெயந்தி அவர்களுக்கு, பாப்பி தான் செய்த பிள்ளையாரைத்தான் தினமும் வேண்டிக்கொண்டிருந்தது. எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று. எதிர்பாராத நிகழ்வுகளுடன் எதிர்பார்த்தவைகளும் நடைபெற்றன என்பதில் பாப்பிக்கு சந்தோசம்தான்.

சகோதரி வித்யா அவர்களுக்கு, அடுத்த முறை முகத்தில் புன்னகை பூசிக்கொள்கின்றோம். (வரவேற்பை சொன்னேங்க :-))

சகோதரி வின்னி அவர்களுக்கு, ஜலிலா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முகப்பு பக்கத்தில் மாற்றங்கள் செய்து வெளியிட்டு பார்த்தேன். என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. அந்த பக்கத்தினை சேர்க்கவே முடியவில்லை. நேற்று இரவிலிருந்து முயற்சி செய்தேன். முகப்பு பக்கத்தில் எந்த மாற்றங்கள் செய்தாலும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவழியாக சற்று முன்பு சேர்த்துவிட்டேன். நாகை என்று வருகின்றீர்கள் என்பதை முன்பே எனக்கு தெரியப்படுத்தவும். முன்னேற்பாடுகள் செய்யவேண்டும்.

சகோதரி ஹர்ஷினி அவர்களுக்கு, பட்டிக்காட்டானாட்டம் இருக்கீங்கங்கிறதை எவ்வளவு அழகா "முகத்தில கிராமத்து மணம் கமழுது"ன்னு சொல்லியிருக்கீங்க:-) இருந்தாலும் இவ்வளவு குசும்பு கூடாது.

சகோதரி ஜானகி அவர்களுக்கு, வரவேற்பிற்கு அழைத்ததற்கு நன்றி மட்டும் தெரிவிச்சா போதாது. இங்கே வர்றதுக்கு முயற்சி பண்ணனும் :-) இல்லேன்னா அங்க நாங்க வந்துடுவோம். சீக்கிரம் நேரில் சந்திக்கலாம்.

வாழ்த்துக்கள் இருக்கட்டும். மாலை விருந்துக்கு மெனு கேட்டிருந்தேனே.. யாருமே மூச்சுவிடக் காணோம்.
சீக்கிரம் சொல்லுங்க. மெனுவை முடிவு பண்ணிட்டுதான் சமையல் யாருன்னு முடிவு பண்ணனும்.

அறுசுவை ' டல் ' லடிக்குது சார். கவனியுங்க.
டிசம்பர் 28, 2007 - 11:13am - வழங்கியவர் malathi

வாழ்த்துக்கள்!...... அறுசுவை ' டல் ' லடிக்குது சார். அதை கொஞ்சம் கவனியுங்க. புது வருடத்தில் நிறைய புது விஷயங்களை சேர்ப்போம். உதாரணமாக.. எந்தந்த ஹோட்டல்களில் என்னென்ன ஐட்டங்கள் ஃபேமஸ், அதை எப்படி செய்வது என்று முடிந்தால் ஃபோட்டோவும் எடுத்து போடலாம். இன்னும் சகோதரிகளிடம் நிறைய ஆலோசனைகள் இருக்குமே சொல்லுங்களேன் மேடம். எல்லோரும் புத்தாண்டு கொண்டாட்ட பிஸியில் இருக்கிறீர்களா. நன்றி.வாழ்த்துக்கள்!...... அறுசுவை ' டல் ' லடிக்குது சார். அதை கொஞ்சம் கவனியுங்க. புது வருடத்தில் நிறைய புது விஷயங்களை சேர்ப்போம். உதாரணமாக.. எந்தந்த ஹோட்டல்களில் என்னென்ன ஐட்டங்கள் ஃபேமஸ், அதை எப்படி செய்வது என்று முடிந்தால் ஃபோட்டோவும் எடுத்து போடலாம். இன்னும் சகோதரிகளிடம் நிறைய ஆலோசனைகள் இருக்குமே சொல்லுங்களேன் மேடம். எல்லோரும் புத்தாண்டு கொண்டாட்ட பிஸியில் இருக்கிறீர்களா. நன்றி.வாழ்த்துக்கள்!...... அறுசுவை ' டல் ' லடிக்குது சார். அதை கொஞ்சம் கவனியுங்க. புது வருடத்தில் நிறைய புது விஷயங்களை சேர்ப்போம். உதாரணமாக.. எந்தந்த ஹோட்டல்களில் என்னென்ன ஐட்டங்கள் ஃபேமஸ், அதை எப்படி செய்வது என்று முடிந்தால் ஃபோட்டோவும் எடுத்து போடலாம். இன்னும் சகோதரிகளிடம் நிறைய ஆலோசனைகள் இருக்குமே சொல்லுங்களேன் மேடம். எல்லோரும் புத்தாண்டு கொண்டாட்ட பிஸியில் இருக்கிறீர்களா. நன்றி.வாழ்த்துக்கள்!...... அறுசுவை ' டல் ' லடிக்குது சார். அதை கொஞ்சம் கவனியுங்க. புது வருடத்தில் நிறைய புது விஷயங்களை சேர்ப்போம். உதாரணமாக.. எந்தந்த ஹோட்டல்களில் என்னென்ன ஐட்டங்கள் ஃபேமஸ், அதை எப்படி செய்வது என்று முடிந்தால் ஃபோட்டோவும் எடுத்து போடலாம். இன்னும் சகோதரிகளிடம் நிறைய ஆலோசனைகள் இருக்குமே சொல்லுங்களேன் மேடம். எல்லோரும் புத்தாண்டு கொண்டாட்ட பிஸியில் இருக்கிறீர்களா. நன்றி.

வாழ்த்துக்கள் பாபு அண்ணா
டிசம்பர் 28, 2007 - 2:41pm - வழங்கியவர் sujibalaji

ஹலோ பாபு அண்ணா,
எப்படி இருக்கிறிர்கள், இப்பொழுது தான் உங்கள் கல்யாண புகைப்படங்களை பார்த்தோம்(நானும் என்னுடய கணவரும்) மிகவும் நன்றாக இருந்தது. நான் தான் உங்களை ரொம்ப லேட்டாக வாழ்த்துகிறேன் என்று நினைக்கிறேன் அதுக்கு ஒரு சாரி முதலில் சொல்கிறேன். இப்பொழுது வாழ்த்து "வாழ்க்கையில் இனி என்றும் சந்தோசம் மட்டும் காண எங்களுடய மனமார்ந்த வாழ்த்துக்கள்" . லேட்டா சொன்னாலும் உங்க கல்யாண போட்டோ பார்த்த பிறகு லேட்டஸ்டாக வாழ்த்துகிறேன்.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

மாஜிதா (சலாம் )
டிசம்பர் 28, 2007 - 2:42pm - வழங்கியவர் Jaleela Banu

மாஜிதா (சலாம் )
மாஜிதா ஹாஸ்பிட்டல் போய் விட்டு வந்தேன் பரவாஇல்லை துவா கேளுங்க, இன்னும் ICU vil தான் இருக்கிறார், இன்னும் முன்று நாள் ஆகும் நார்மல் வார்டுக்கு வர.நல்ல கவனிக்கிறாங்க
ஜலீலா

அட்மின் அண்ணாவிற்கு
டிசம்பர் 28, 2007 - 2:53pm - வழங்கியவர் mali

அட்மின் அண்ணாவிற்கு, உங்க திருமண படங்கள் அருமை. நடந்தவற்றை மறந்து நல்லதையே நினைப்போம். வரவேற்புல ஜமாய்ச்சுடலாம்ல!! நிறய்ய சகொதரிகள் நல்ல நல்ல ஐடியா கொடுப்பாங்க!

மாலினி

hello jayanthi mami
டிசம்பர் 28, 2007 - 2:59pm - வழங்கியவர் vidyavasudevan

anbudanஹெல்லோ ஜெயந்தி மாமி,

சௌக்கியமா? குடும்பத்தினர் அனைவரும நலமா? நலமே கானா வில் இருந்து வித்யா. எழுதுகிறேன். என் ஐடி செல்வி இடம் உள்ளது. முடிந்தால், விரும்பினால் தொடர்பு கொள்ளவும். மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் அன்புத்தோழி

வித்யாவாசுதேவன்.

Dear Babu Anna and Babby,
டிசம்பர் 28, 2007 - 5:06pm - வழங்கியவர் Subha Jayaprakash

அன்புள்ள அண்ணா அன்ட் பாப்பி அண்ணி(!),
என்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அண்ணனை கட்டியவர் ஆயிற்றே!! அதான் அண்ணி....
இருந்தாலும் பாப்பி என்றாலும் பாஃபி (ஹிந்தி) என்றே கூட அழைக்கலாம்...
பாபு... பாஃபி.. எப்டி???

போட்டோ சூப்பர்...
பாப்பி சேலை சூப்பர்...
சேலையிலும் சூப்பர்...

அண்ணா, அண்ணி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இன்னும் பல பல இனிய நிகழ்ச்சிகள் வாழ்வில் நடந்து நலமுடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறோம்...

(கேட்கலாமா வேண்டாமா என யோசித்து கேட்கிறேன்...
என்ன காரணம் பாப்பி வீட்டிலும் யாரும் வரலை அண்ணாவோட அம்மா என்ன ஆனார்கள்??? புரியவில்லை...)

அட்மின் அவர்களுக்கு
டிசம்பர் 28, 2007 - 7:22pm - வழங்கியவர் vinnie

உங்களுக்கு மறுபடியும் முகப்பை மாற்றும் வேலை வந்துவிட்டது:-)

எங்கப்பா போனீங்க எல்லாரும்(ஜெயந்தி மாமி,செல்விக்கா, ஜலீலா, தளிகா, ஹர்ஷினி, சுபா மற்றும் அனைவரும்) நம்ம அட்மினுக்கு சீக்கிரம் ஒரு மெனுவ சொல்லிட்டு போங்கப்பா. நானும் யாராவது சொல்வீங்கன்னு பாக்கிறேன். ஒருத்தரும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்களே.

மீண்டும் போராட்டம்
டிசம்பர் 28, 2007 - 8:17pm - வழங்கியவர் admin

சகோதரி வானதி அவர்களுக்கு,

முகப்பினை மாற்ற நானும் அரை மணி நேரமாய் போராடிக்கொண்டிருக்கின்றேன். முடியவில்லை. பிரச்சனைக்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன்.

112 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »