topic_image


அன்பு நேயர்களே அறுசுவையின் நீண்ட நாளைய உறுப்பினரும், அன்பிற்குறிய சகோதரியுமான திருமதி அஸ்மா அவர்கள் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தகவல் அறிந்து உங்களுக்கும் அதை தெரிவிக்கின்றேன். நாம் அனைவரும் அவருக்கு, அவர்களின் உடல்நிலை கூடிய விரைவில் சரியாவிடும் என்ற நம்பிக்கையையும், உற்சாகத்தையும் மேலும் குறைந்த ரத்த அழுத்தத்திற்கான உங்களுக்குத் தெரிந்த மருத்துவ ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.


கவலைப்பட வேண்டாம் சரியாகிவிடும்
ஜனவரி 22, 2008 - 8:54pm - வழங்கியவர் Manohari

அன்புத் தோழி அஸ்மா இப்ப எப்படி இருக்க? சகோதரி ரஸியா அவர்கள் கூறியதிலிருந்து மனசே சரியில்லை. டாக்டர் கூறிய படியே ஒழுங்கா மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிடு, சாப்பாடு விசயத்திலும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படியே சாப்பிடு. எதர்க்கும் கவலைப்படாமல் நன்கு ஓய்வெடுத்துக்கோ எல்லாம் சரியாகிவிடும். வருவது வரட்டும் என்று மனதையும் திடமாக வைத்துக்கொள் சரியா. கூடிய விரைவில் உனது சுகச்செய்தியை எதிர்பார்க்கும் அன்புத் தோழி மனோகரி.

டியர்
ஜனவரி 22, 2008 - 9:12pm - வழங்கியவர் balammu

டியர் அஸ்மா .. நான் இதுவரை தங்களிடம் பேசியது இல்லை .. தங்கள் உடல் நிலை மிக விரைவில் குணம் அடைய கடவுளை வேண்டுகிறேன் ..
மேலும் low B.P என் அம்மா வுக்கும் உண்டு .. அவருக்கு கூறிய அறிவுரை ..
sweet and salt சேர்த்து கொள்ள சொன்னார்கள் .. என் அம்மா வும் சில மயக்கம் வருவது போல் இருந்தால் உடனே ஒரு ஸ்வீட் எதாவது ..சாக்லேட் கூட இருக்கலாம் .. சாபிடுவர்கள் ..
மேலும் high B.P விட LOW B.P ullavarkal மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ..
உங்கள் வருவு அறுசுவை க்கு விரைவில் உண்டு .. கவலை வேண்டா

அன்புள்ள அஸ்மா,
ஜனவரி 23, 2008 - 6:42am - வழங்கியவர் janu

அஸ்ஸலாமு அலைக்கும். தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்தேன். தங்களுக்கு பூரண குணமாக வல்ல ஏகனிடம் துவா செய்கிறேன். மருத்துவரின் ஆலோசனைகளை கடைப்பிடிக்கவும். நன்றி.

அஸ்மா
ஜனவரி 23, 2008 - 6:48am - வழங்கியவர் Janaki2411

அஸ்மா உங்களுக்கு பூரண குணமடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன். டாக்டர் சொன்ன படி மருந்துகளை தவறாமல் எடுக்கவும். எதை பற்றியும் கவலை படாதிருங்கள்.

ஜானகி

அன்புள்ள அஸ்மா!
ஜனவரி 23, 2008 - 6:51am - வழங்கியவர் Mrs.Mano

அன்புள்ள அஸ்மா!

திருமதி.மனோகரி எழுதியிருந்த தகவல் என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. கவலைப்படாதீர்கள். கவலையும் குழப்பங்களுமே உடல் நிலையை மிகவும் பலவீனமாக்கும். மனதை தைரியமாக, 'நமக்கு ஒன்றும் இல்லை' என்று நினைத்துக் கொள்வது' மனோத்தத்துவ ரீதியில் உடலை நன்றாக ஆக்கும். யுனானி மருத்துவம் தெரிந்த நீங்கள் இதற்கான நல்ல மருந்துகளை எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். ஹீமோகுளோபின் அதிகரிக்க இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளும் பழங்களும்- முக்கியமாக மீன், ஆட்டுக்கறி-இவை காய்கறிகளை விடவும், பழங்களை விடவும் இரும்புச் சத்து அதிகம் கொண்டது. இரும்புச்சத்தின் ஆளுமையைக் குறைக்கச் செய்யும் காப்பி, டீ, Canned and processed food containing EDTA, soft drinks, Foods high in oxalates such as spinach, Dairy products such as cheese, yogurt, ice cream, and milk, முட்டை இவற்றை கூடியவரை தவிர்க்கவும். பழங்கள், காய்கறிகள் மட்டுமே உள்ள dietம் இரத்த அழுத்தத்தை குறைக்கும். தகுந்த மருத்துவ ஆலோசனைகளுடன் நீங்கள் விரைவில் உடல் நலம் தேற பெரிதும் விரும்புகிறேன்.

" லாயிலாஹா இல்லல்லாஹ்"
ஜனவரி 23, 2008 - 8:45am - வழங்கியவர் Jaleela Banu

அஸ்மா சகோதரி என்ன ஆயிற்று

ஆரஞ்சு ஜூஸ் உப்பு, சர்க்கரை போட்டு குடிங்க.
புதினா டீ, புதினா துவையல். கீரீன் துவையல்கள் சாப்பிடுங்கள்.
சரியா சாப்பிடாமல், கவலையுடன் இருந்தால் கூட அப்ப்டி இருக்கும்.
சீக்கிரம் குணம் ஆக துவா செய்கிறேன், அதை விட சிறந்த மருந்து " லாயிலாக இல்ல அந்த சுபுஹானக்க இன்னி குந்து மினல் லாலிமீன்"
இதை ஓதுங்கள்.
முடியலா " லாயிலாஹா இல்லல்லாஹ்" அது மட்டுமாவது ஓதுங்கள்.
அல்லாஹ் சீக்கிரம் உங்களை ராகத்தாக்கட்டும்.
ஜலீலா

அஸ்மாவுக்கு...
ஜனவரி 23, 2008 - 8:46am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு சகோதரி அஸ்மா,
என்னாச்சு? அதான் ரொம்ப நாளா அறுசுவைக்கே வரலயா? நான் உங்களுக்கு மெயில் கூட அனுபிச்சேன். உடம்ப பாத்துக்கோங்க. இப்ப எப்படியிருக்கு?
எனக்கு ஹீமோகுலோபின் குறைவா, பீபி லோன்னு சொன்ன போது நீங்க எவ்வளவு அட்வைஸ் சொன்னீங்க, இப்ப நீங்களே உடம்ப கவனிச்சுக்காம இருக்கலாமா?
உங்களுக்காக ப்ரார்த்தனை செய்யறேன். கவலப்படாம உடம்ப பாத்துக்கோங்க. சீக்கிரமே உடம்ப குணமாயிடுச்சுங்கற நல்ல சேதிய சொல்லுங்க.
அன்புடன்,
செல்வி.

அன்புள்ள அஸ்மா
ஜனவரி 23, 2008 - 9:18am - வழங்கியவர் MarliyaNoohu

அன்புள்ள அஸ்மா
நான் உங்களிடம் பேசியது இல்லை..உங்கள் உடல்நிலை குறித்து வருத்தம் அடைந்தேன்..அல்லாஹ் பரிபூரண சிபா தருவான்..கவலை பட வேணாம்..மனசே பாதி நோயை வரவைக்கும்..அல்லாஹ் இடத்தில் உங்களுக்காக துஆ கேட்கிறேன் இன்ஷாஅல்லாஹ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புள்ள அஸ்மா
ஜனவரி 23, 2008 - 2:11pm - வழங்கியவர் Parveen banu

அஸ்மா உங்களை ரொம்ப நாளா காணல.ஜுலைகாவையும் காணல.உங்களுக்கு வேலையோன்னு நினைத்தேன்.மனதிர்க்கு சங்கடமா இருந்திச்சு.நலம் ஆனதும் வந்து மெயில் செய்ங்க.
இறைவன் அருளாள் நிச்சயம் குணம் அடைவீர்கள்.

அன்புடன் பர்வீன்.

அஸ்மா சீக்கிரம் குணமடைய பிராத்திக்கிறேன்
ஜனவரி 23, 2008 - 3:48pm - வழங்கியவர் pradeebala

அன்பு அஸ்மா சீக்கிரம் குணமடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்.மாத்திரை,மருந
்துகளை கரெக்டாக எடுத்து கொள்ளவும்.சாப்பாட்டிலும் கவனம் செலுத்தவும்
அன்புடன் தீபா

Low Blood Pressure
ஜனவரி 23, 2008 - 4:09pm - வழங்கியவர் vinnie

அன்பு அஸ்மா உங்கள் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளவும். www.mayoclinic.com என்ற தளத்தில் இருந்து இதை இங்கு பேஸ்ட் செய்கிறேன். உங்களுக்கு உதவுமா என்று பார்க்கவும்:

Self-care

Depending on the reason for your low blood pressure, you may be able to take certain steps to help reduce or even prevent symptoms. Some suggestions include:

Drink more water: Water combats dehydration and increases blood volume.

Follow a healthy diet: Get all the nutrients you need for good health by focusing on a variety of foods, including whole grains, fruits, vegetables, and lean chicken and fish. If your doctor suggests increasing your sodium intake but you don't like a lot of salt on your food, try using natural soy sauce — a whopping 1,200 milligrams of sodium per tablespoon — or adding dry soup mixes, also loaded with sodium, to dips and dressings.

Go slow: You may be able to reduce the dizziness and lightheadedness that occurs with low blood pressure on standing by taking it easy when you move from a prone to a standing position. Before getting out of bed in the morning, breathe deeply for a few minutes and then slowly sit up before standing. Sleeping with the head of your bed slightly elevated also can help fight the effects of gravity. If you begin to get symptoms while standing, cross your thighs in a scissors fashion and squeeze or put one foot on a ledge or chair and lean as far forward as possible. These maneuvers encourage blood to flow from your legs to your heart.

Eat small, low-carb meals: To help prevent blood pressure from dropping sharply after meals, eat small portions several times a day and limit high-carbohydrate foods such as potatoes, rice, pasta and bread. Drinking caffeinated coffee or tea with meals may temporarily raise blood pressure, in some cases by as much as 3 to 14 millimeters of mercury (mm Hg). But because caffeine can cause other problems, check with your doctor before increasing your caffeine intake.

பலஹீனமான நிலையிலும்.......
ஜனவரி 27, 2008 - 3:36pm - வழங்கியவர் Asma

பலஹீனமான நிலையிலும் (சிறுதுளி பெருவெள்ளமாக) கொஞ்சம் கொஞ்சமாக டைப் பண்ணி சேர்த்த என் பெரிய பதிவு!

ஜனவரி 22
==========
நாம் உலகின் பல திசைகளில் பரவி வாழ்ந்தாலும், சிற்சில வேறுபாடுகளையும் கடந்து, நேருக்கு நேர் முகம் காணாமலே பரஸ்பரம் நம் பாசங்களை பரிமாறிக் கொள்ளும் இந்த அறுசுவையிலே..... என் அருமை தோழிகள், சகோதரிகளின் அன்பு, பாசங்களைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன். ஒரு பதிவாவது போடலாம் என்றுதான் பலஹீனமான இந்த நிலையிலும் இங்கு வந்தேன்.

ஜுலைஹா என்னை டெலிஃபோனில் விசாரித்துவிட்டு சொன்ன பிறகுதான், என் இயாலமையை உதறிவிட்டு அறுசுவையைக் காண ஆவலாய் வந்தேன். அறுசுவையும் ஓபன் ஆகவில்லை, உடல்நிலையும் ஒத்துழைக்காமல் மீண்டும் படுக்கை. அதே இரவு ரஸியாவின் டெலிஃபோன் மூலம் அறுசுவை சர்வரை சரிசெய்யும் பணியினால் 2 நாட்கள் அறுசுவையை பார்வையிட முடியாத நிலையை கேள்விப்பட்டேன்.

ஜனவரி 23
==========
இன்று என் உடன் பிறவா சகோதரிகள், அருமைத் தோழிகளின் பதிவுகளை காணும்போது ஒருவித புத்துணர்ச்சி வந்தது! உங்கள் அனைவரின் பாசங்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் உண்மையில் நான் கொடுத்து வைத்துள்ளேன். இந்த பாசங்களை நிரந்தரமாக்கி வைக்க இறைவனை வேண்டுகிறேன்.

சிறுவயது முதலே, எனக்கு லோ ப்ரஷ்ஷர் எப்போதாவது தொல்லைக் கொடுக்கும். ஸ்கூலில் சிலமுறை மயங்கி விழுந்ததுண்டு. ட்ரீட்மெண்ட் எடுக்கும்போது சரியாகுவதும் சற்று இடைவெளிக்கு பிறகு திடீரென மீண்டும் வருவதுமாக இருந்தது. ஆனால் இப்போது அடிக்கடி இதுபோல் ஏற்படுவதும், அதனால் வரக்கூடிய பாதிப்புகள் அதிகமாகவும் உள்ளது. முக்கியமாக, எந்நேரமும் தலைசுற்றல், மயக்கம், இதய படபடப்பு(Pulpitation), கை கால்கள், தலை, முகமெல்லாம் மரத்துப் போதல், தலைக்குள் ஒருவித அழுத்தம் என்று ரொம்ப கஷ்டமாக உள்ளது. எவ்வளவுதான் மனதை திடப்படுத்திக் கொண்டு தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தாலும்,சிலநேரங்களில் நம் ஆயுள் இன்னும் எத்தனை காலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது:( என் மகனைப் பார்த்து பார்த்து யாருக்கும் தெரியாமல் அழுது முடிக்கிறேன்:(( சிறிது நேரம் வெளியில் சென்றால் கூட பலமுறை (கணவரிடம்)டெலிஃபோன் பண்ண சொல்லி,நான் எப்போது வருவேன் என்று கேட்டுக்கொண்டேயிருப்பான்.

இப்போதெல்லாம் தனியாக வெளியில் செல்வதில்லை. அதிக நேரம் வீட்டில்தான். கணவருக்கு இப்போது (நானும் என் மகனும்) இரண்டு குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு! பொறுமையும் பொறுப்புமுள்ள கணவர் எனக்கு இறைவன் தந்த வரம்! அதனால்தான் இந்த நிலையிலும் அடுத்தவர்களின் உதவியின்றி குடும்ப பொறுப்புகளை சமாளிக்க முடிகிறது. அறுசுவைக்குதான் வர இயலவில்லை:( இறைவன் நாடினால் உங்களின் பிரார்த்தனைகளோடு எனக்கு பூரண கிடைத்த பிறகு மீண்டும் அறுசுவைக்கு வருகிறேன். அதுவரை உங்கள் ஒவ்வொருவரோடும் சுருக்கமாக பேச ஆசைப்படுகிறேன்.இதற்கு மேல் இன்று இயலவில்லை. நாளை தொடர்கிறேன்.

ஜனவரி 24
==========
மை டியர் மனோகரி!
தைரியமும் ஆலோசனைகளும் வழங்குவதற்காக எனக்காகவே ஒரு த்ரெட் ஆரம்பித்து ஆறுதல் அளித்தமைக்கும் உன் பாசமிகு ஆர்வத்திற்கும் மிக்க நன்றிப்பா! உனது அன்பான விசாரிப்புகளை ரஸியா மற்றும் ஜுலைஹா மூலம் அறிந்து மகிழ்ந்தேன். நான் ஓரளவு நல்ல நிலையில் இருந்தபோது உன்னை அறுசுவையில் காணவில்லை. தோழியர் சங்கத்தில் 3 முறை பதிவு போட்டுத் தேடினேன். உன் பதிலில்லாமல் சோர்ந்துப் போனேன். இப்போது மீண்டும் உன் வருகை, மிக சந்தோஷமானது.

மருந்துகளை அதிகாலைப் பொழிதிலிருந்து ஆரம்பித்து (மணிக்கணக்கு வைத்து) இரவு வரை தொடர்ந்து சாப்பிட்டுதான் வருகிறேன். இறைவன் நாடினால் குணமாகும். அப்போது மீண்டும் பழையபடி அறுசுவையிலே சந்திப்போம். மீண்டும் என் நன்றிகள்!

டியர் பாலம்மு!
நீங்கள் என்னிடம் பேசியதில்லையென்றாலும் உங்களின் அக்கறையான ஆலோசனைகளைக் கேட்டு மகிழ்ந்தேன். நன்றிமா!

அன்புள்ள ஜவஹர் பானு!
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...! எனக்காக கண்டிப்பாக துஆ செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் நலமானவுடன் நிறைய பேசலாம்.

அன்பு நிறைந்த மனோ மேடம்!
நீங்கள் கூறியிருந்த அறிவுரைகளுக்கு மிக்க நன்றி மேடம். நான் எடுத்துக் கொள்வதெல்லாம், ஹோமியோ, ஆயுர்வேதிக் மாத்திரைகள், யூனானி மற்றும் மூலிகை டானிக்குகள்தான். அனைத்தையும் தவறாமல் எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் சொன்னதுபோல் சத்துணவாக பார்த்துதான் சாப்பிடுகிறேன். இவ்வளவையும் உடம்பு சரிவர கிரகிக்காத காரணம்தான், குணம் தெரிவதில் தாமதம் என்று சென்னையில் உள்ள எங்கள் குடும்ப வைத்தியர் கூறியதால், ஹெர்பல் லிவர் டேப்லட்டும் எடுத்து வருகிறேன். அனைத்திற்கும் இறைவனே போதுமானவன்!

ஜனவரி 25
==========
அன்புள்ள ஜலீலாக்கா!
தங்களின் ஆலோசனைகளைப் படித்தேன். அவற்றையும் மேற்கொள்ள இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன். நீங்கள் சொன்ன திக்ரு மற்றும் தஸ்பீஹ்களை ஓதிதான் வருகிறேன். இதய படபடப்பு ஓவராக இருக்கும்போது உதட்டளவில் மட்டுமாவது என்னால் முடிந்தவரை ஓதுகிறேன். குணமாக இறைவன் நாடும்போதுதானே நடக்கும். எனக்காக துஆ செய்யுங்கள். தங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி ஜலீலாக்கா!

அன்பு செல்வி மேடம்!
உங்கள் மெயிலை நீங்க சொன்ன பிறகுதான் பார்க்கிறேன். தினமும் மெயிலை ஓபன் பண்ணிவிடுவேன். உடல்நிலைதான் இவ்வளவு நாட்கள் பார்க்காமல் இருந்துவிட்டதற்கு காரணம். மன்னிக்கவும். அத்துடன் சுபா, வித்யாவுடைய மெயில் எல்லாம் வந்திருந்தது. கொஞ்சம் நலமானவுடன் அனைவருக்கும் பதில் அனுப்புகிறேன். உங்களுக்கு நான் சொன்ன அட்வஸை நானும் செயல்படுத்துகிறேன் செல்வி மேடம்:). அத்துடன் மயக்கம், பல்பிடேஷன் காரணமாக அதிகமாக படுக்கையில் இருப்பதால், எழுந்த பிறகு என்னால் முடிந்த லேசான உடற்பயிற்சிகளையும் தினம் 2 முறை செய்கிறேன். குணமாகதான் தாமதமாகிறது. என்ன செய்வது! உங்களின் பிரார்த்தனைக்கும் பாசத்திற்கும் மிக்க நன்றி மேடம்!

ஜனவரி 26
=========
அன்புள்ள மர்லியா!
இதுவரை நாம் பேசியதில்லைதான். ஆனால் உங்களின் முதல் பேச்சே எனக்கு ஆறுதலாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ், துஆ செய்யுங்கள். நீங்கள் கதீஜாவின் ஃபிரெண்ட்தானே? அவர்களோடு பேசினால் என் சலாம் சொல்லுங்கள்!

அன்புள்ள பர்வீன்!
முன்பு அவ்வப்போது உடம்பு முடியாமல் போனதால், அடிக்கடி அறுசுவைக்கு ஆப்சென்ட் ஆனேன். ஆனால் அறுசுவை குடும்பத்தில் யாரிடமும் சொல்லவில்லை. இப்போது ரொம்ப முடியாமல் போன பிறகுதான், ரஸியா மூலமாக உங்களுக்கெல்லாம் தெரியவந்துள்ளது. உங்கள் எல்லோருடைய துஆவுக்கும் அன்புத் தோழி மனோகரியும், அருமை சகோதரி ரஸியாவும்தான் காரணம் என்று நினைக்கிறேன். இந்த வகையில் மனதிற்கு ஆறுதலும் ஓரளவு தைரியமும் கிடைத்துள்ளது. இன்ஷா அல்லாஹ் நலமானவுடன் மீண்டும் வருகிறேன்.

அன்பு தீபா!
தங்களின் கனிவான பதிவுக்கு சந்தோஷம் கலந்த நன்றி!

அன்பு வானதி!
தாங்கள் தந்த குறிப்புகள் மிக உபயோகமானவையே. தங்களைப் போன்ற அன்பு சகோதரிகளின் பாசமழையில் என் கஷ்டங்களை மறக்கிறேன்.மிக்க நன்றி வானதி!

ஜனவரி 27
==========
லாகின் பண்ண முடியாமலும் சில நேரம் பதிலளிக்கும் ஆப்ஷன் கிடைக்காமலும் 2 நாட்களாக தவிக்கிறேன். இன்றுதான் இதை போஸ்ட் பண்ண முடிந்தது. தாமதமாக பதில் கொடுத்ததாக யாரும் வருத்தப்படவேண்டாம்.

உங்கள் அனைவருக்கும் செய்யும் நன்றிக்கடனாகவே இவ்வளவையும் டைப் பண்ணினேன். டைரி குறிப்பு போன்று தேதியிட்டுக் கொண்டு,நான்கைந்து நாட்களாக சற்று சிரமத்தோடு இதை டைப் பண்ணி முடித்தாலும்,இதனால் உங்கள் அனைவரோடும் பேசியதின் பலனை சந்தோஷமாக உணர்கிறேன்.முன் சொன்னதுபோல், இறைவன் நாடினால் நலமானவுடன் மீண்டும் வருகிறேன்.நன்றியுடன் விடை பெறுகிறேன்.

ஜனவரி 27, 2008 - 4:25pm - வழங்கியவர் thalika

அடக்ககடவுளே என்னெனம்மோ இங்க பேசிக்கிரீங்க யாருக்கு என்ன ஆச்சு ஒன்னும் புரியாம இருந்தேன்...அஸ்மா ச்சே சே உடம்பு நம்மை படுத்த விடக் கூடாது...உடம்பை விட ரொம்ப வலிமையானது மனசு தான்(பெரிய இவ நானு அப்டி தான் அறிவுரை சொல்வேன்..ஹிஹிஹீ)
என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம நானும் ஏதோ மூட்ல இருந்தேன் இப்ப தான் சந்தோஷமா இருக்கேன்...எதுவாக இருந்தாலும் இறவன் உங்களுடன் இருப்பார்...ஒன்னும் கவலப் பட வேண்டாம் சரியா...இவ்ளோ பெரிய பதிவை எல்லாம் போட வேனாம் அஸ்மா..படிச்சா போதும்...நான் சொல்றேன் பாருங்க வேனா இன்னும் கொஞ்ச நாள்ள சரியாயிரும்..அப்ரம் எப்பவும் போல வாங்க சரியா..நல்ல சாப்டு தூங்கி,ரெஸ்ட் எடுத்து ஜாலியா இருங்க..(இத விட வேற என்ன வேனும்:-)) ..டேக் கேர்

அன்பு அஸ்மா..
ஜனவரி 27, 2008 - 5:01pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு அஸ்மா,
நலம் பெற வேண்டுகிறேன். இவ்வளவு இயலாமைக்கு இடையில் எங்களுக்கு பதில் தர வேண்டுமா? நீங்கள் பதிவைப் பார்த்து உற்சாகம், ஊக்கம் பெற்று விரைவில் குணமாக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கண்டிப்பாக விரைவில் பூரண குணமாகி எங்களுடன் பேச வருவீர்கள். வேறு எதுவும் சொல்லாதீர்கள். மனதிற்கு கஷ்டமாக உள்ளது. இவ்வளவு பேரின் பிரார்த்தனை வீணாகாது.
அன்புடன்,
செல்வி.

அன்புள்ள அஸ்மா
ஜனவரி 27, 2008 - 7:21pm - வழங்கியவர் Parveen banu

உங்கலை குழந்தைபோல பார்த்துகொண்டிருக்கும் அன்பான கனவன் குழந்தையிருக்கும் போது நீங்கள் எதர்க்கும் கவலைபட வேண்டாம்.ஒரு ஆத்மாவை அது தாங்கிக் கொள்ளும் அளவுக்குத்தான் இறைவன் சோதிப்பான்.இந்த வாக்கியத்தை அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.நல்ல ரெஸ்ட் எடுங்க.என்றும் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளூங்கள்.சந்தோஷமா இருங்க.நியாபகம் வரும்போதெல்லாம் நிச்சயம் துவா செய்கிறேன்.

அன்புடன் பர்வீன்.

நீயும் நம்பிக்கையாய் இரு
ஜனவரி 27, 2008 - 9:14pm - வழங்கியவர் Manohari

ஹாய் அஸ்மா உன் பதிவு ஒரு விதத்தில் நிம்மதியை அளித்தாலும், இவ்வளவு பலஹீனமாக இருந்துக் கொண்டு உன்னை யார் பதில் எழுத சொன்னது?மேலும் அதில் தாமதத்திற்க்கு விளக்கம் வேறு!! அதைப் பார்த்தவுடன் கோபம் வந்து விட்டது அதற்கு தான் இந்த திட்டு.எங்களுக்கு தேவை உனது சுகச் செய்தி தானேயொழிய உனது பதில் அல்ல சரியா, வேண்டுமானால் சகோதரி ரஸியாவிற்கு மற்றும் சகோதரி ஜுலைக்காவிற்க்கும் உனது நன்றியை கூறிக் கொள், அவர்களால் தான் இத்தனை அன்புள்ளங்களின் பிராத்தனைகளும், மேலும் உனது ஆசை கணவரின் அன்பும், உனது அன்பு குழந்தையின் அரவணைப்பும், உனக்கு பரிபூரண சுகத்தை அளிக்கபோகின்றது என்று நாங்கள் நம்புகின்றோம், அதைப் போல் நீயும் நம்பிக்கையாய் இரு. அடிக்கடி அறுசுவையை பார்வையிட முயற்ச்சி செய் ஆனால் பதிவுகளை, உடல் நன்கு தேறிய பிறகு போட்டுக் கொள்ளலாம் ஒன்றும் அவசரமில்லை, மீண்டும் வந்து உன்னை சந்திக்கின்றேன்.

டியர் அஸ்மா
பிப்ரவரி 1, 2008 - 12:34pm - வழங்கியவர் பானு ...

டியர் அஸ்மா மன்னிக்க வேண்டும். உங்கள் உடல் நிலையை பற்றி இப்போது தான் தெரியும்.
அஸ்மா, தைரியமான கருத்துக்களை தெளிவாக கூறும் நீங்கள் இப்படியா தைரியம் இழப்பது?
உடல்நலக்குறைவிலும் அறுசுவைக்கு வந்து தோழிகளுக்கு பதில் எழுத உங்களுக்கு பலம் வந்தது அல்லவா? அதேபோல் உங்கள் முழு ஆரோக்கியமும் சீராகி இன்னும் சிறிது நாளில் அறுசுவையில் வந்து கலக்க போறீங்க பாருங்க.
அதுவரை உங்களை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் உங்கள் அன்புத்தோழி
பானு கனி

ஆகா அஸ்மா இப்பதான் இந்த பதிவை பார்த்தேன்
பிப்ரவரி 1, 2008 - 1:56pm - வழங்கியவர் Jaleela Banu

ஆகா அஸ்மா இப்பதான் இந்த பதிவை பார்த்தேன்.//

லாயிலாஹா இல்ல அண்த சுப்ஹானக்க இன்னி குன் து மினல் லால்லிமீன்//

இதை மட்டும் ஓதுங்கள் போதும் உஙகள் மூச்சே இதே தான் இருக்கனும்.

யாருக்கும் அல்லா அவர்கள் தங்க முடியாத துன்பங்கள் தர மாட்டார்,
லோ பிரெஷ்ருகு நல்ல சாப்பிடுங்கள் உப்பு நல்ல சேர்த்து கொள்ளுங்கள்.
நபில் தொழு கை நிய்யத் வையுங்கள். உங்க ஹஸை உங்களுக்காக இரண்டு ரஅத் தஹஜ்ஜத் தொழுக சொல்லுங்கள் 40 நாள் தொடர்ந்து,
இன்ஷா அல்லா சையாகி விடும்.

பெண்களே வீனாக கவலை படுவதில் உங்க ஹெல்த் தான் பாதிக்கும்,

ஆனால் எல்லாத்தையும் விட்டு விடுங்கள், அதுக்கு பையனை பார்த்து அழுகிறீர்கள் அதற்கு பதில் அல்ல விடம் தூவ கேளுங்கள்,

எல்லாம் அவன் என்ன நினக்கிறானோ அது தான் நடக்கும், அதை நாம் தடுக்கவும் முடியாது,ஆற்ற்றவும் முடியாது,
ஆகையல் அவனிடம் மட்டும் தான் அழுது கேட்கனும்.
மற்ற படி வெறு ந்த கண்ணீரும் உங்களுக்கு வரக்கூடாது.
குழந்தைகள்,கணவன் முன் சிரித்த முகத்துடன் இருங்க.
மாத்திரை மருந்துகளுக்கு ஏற்றவாறு நல்ல சாப்பிடுங்கள்.

உங்களுக்கு தெரிந்தால் சலவாத்து நாரியா ஓதுங்கள்.
கை கண்ட பலன்.
இருக்கு
பார்த்து விட்டு மனசு கேட்கலா எனக்கு தெரிந்தது எல்லம் சொல்லி விட்டேன்,
அஸ்மா இந்த பதிவை பார்க்கிறார்களா இல்லை யான்னு தெரியலா.
அருமை சகோதரிகள் ஜுலைகா, ரஸியா

அஸ்மாவிடம் தயவு செய்து தெரிய படுத்துங்கள்.

உஙகல் நலன் விரும்பி,

சிரிங்க பா அட சிரிங்க பா

jaleela

அஸ்மாவின் சுகச்செய்தி
மார்ச் 3, 2008 - 2:03pm - வழங்கியவர் Manohari

ஹலோ மை டியர் சிஸ்டர் ரஸியா எப்படி இருக்கீங்க?குடும்பத்தில் அனைவரும் சுகமா? இதற்கு முன்பு உங்களின் ஒரு பதிவில் அஸ்மாவின் சுகச் செய்தியை பார்த்தேன், பல்வேறு காரணங்களால் உடனே அதற்க்கு பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. நமது அன்புத் தோழியின் அந்த சுகச்செய்தி மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அதை தெரிவித்த உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள். பாவம் அஸ்மா ரொம்ப கஷ்ட்டப்பட்டிருப்பார்கள், அவர்கள் வணங்கும் கடவுளின் அருளும், நமது சகோதரிகளின் பிராத்தனையும் பலித்துவிட்டது, சந்தோசமாக இருக்கின்றது. முடிந்தால் அஸ்மாவை, எங்களை வந்து சந்திக்கச் சொல்கின்றீர்களா? நன்றி டியர் மீண்டும் சந்திப்போம்.

அன்புள்ள மனோகரி அக்கா
மார்ச் 5, 2008 - 6:58am - வழங்கியவர் rasia

நலமாக இருக்கிறீர்களா?உங்கள் பதிவை பார்த்து உடன் பதில் அளிக்க முடியவில்லை!நான் உங்கள் விசாரிப்பை அஸ்மாவிடம் தெரிவித்தேன்,அவர்களால் இன்னும் உட்கார்ந்து பதிலளிக்க கொஞ்சம் சிரமளிப்பதால் இன்னும் கொஞ்சம் உடல் நலமானதும் உங்களுக்கு பதிலளீப்பதாக சொன்னார்கள்!மேலும் உங்களைய்யும் அருசுவைசகோதரிகள் யாபேர்களைய்யும் விசாரித்ததாக கூறினார்கள்.உங்கள் அன்பான விசாரிப்பிர்க்கு ரொம்ப நன்றி!

அன்புள்ள அஸ்மா
மார்ச் 5, 2008 - 7:35am - வழங்கியவர் rahini

நல்ல கணவர் அமைந்தாலே வாழ்வில் இன்பம்தானே
கவலை இன்றி வாழ என் பிராத்தனைகள் எப்பவும் உண்டு
கவலையை விடுங்கள் சந்தோசமாய் வாழ்க.
அன்புடன்.
ராகினி

haai banu gani medam,
மார்ச் 28, 2008 - 6:01pm - வழங்கியவர் vidyavasudevan

anbudanஹாய் பானு கனி மேடம்,

எவ்வாறு இருக்கிறீர்கள்? குடும்பத்தினர் நலமா?, நலமே. உங்கள் புகைப்படம் மற்றும் உங்கல் குடும்பத்தினர் புகைப்படமும் போட்டோ பக்கெட் ல் சென்று பார்த்தேன். அழகாக உள்ளீர்கள். ஆனாலும் உங்களுக்கு தைரியம் மிக அதிகம்...அனைவரும் பார்க்கும் வகையில் போட்டு உள்ளீர்கள் மீண்டும் பேசுவோம்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

ஸ்பெஷல் அழைப்பு :)
ஜூன் 14, 2008 - 11:54am - வழங்கியவர் Asma

பாசத்தோடு என் உடல் நலம் விசாரித்து, எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனையும் பண்ணி ஆலோசனைகளும் கூறிய மனோகரி, மனோ மேடம், ஜானகி, ஜவஹர் பானு, பாலம்மு, ஃபர்வீன் பானு, மர்லியா, செல்விக்கா, ஜலீலாக்கா, ருபீனா, தீபா, பானுகனி, வானதி, ராஹினி, வித்யா வாசுதேவன், விஜி உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, நன்றிக்கடனாக ஸ்பெஷல் அழைப்பு விடுக்கிறேன் :) அநேகமாக ஜூலை மாத கடைசியில் புது இல்லம் குடிபோவோம் என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு வர முடிந்தவர்கள் கண்டிப்பாக வந்து கலந்துக்கொள்ளும்படி அன்போடு அழைக்கிறேன். தேதி இன்னும் குறிக்கப்படவில்லை. குறித்த பிறகு எப்படியாவது தேதியை அறிவிப்பு செய்கிறேன்.

பிரியாவிடை
ஜூன் 14, 2008 - 8:15pm - வழங்கியவர் Manohari

அஸ்மா டியர் ஊருக்கு கிளம்பியாச்சா,புதுமனை புகு விழாவின் ஸ்பெஷல் அழைப்பிற்கு மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக் கொண்டேன். விழாவிற்கு என்னால் வர முடியாது என்பதில் வருத்தம் தான் இருந்தாலும் பரவாயில்லை இன்னொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் சந்திக்கலாம். ஊரில் நீங்கள் செய்ய நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடித்து, விழாவைச் சிறப்பாகச் செய்து புது வீட்டில் நீயும் உனது குடும்பமும் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு சீரும் சிறப்புமாய் ஆனந்தமாய் வாழ மனதார வாழ்த்துகின்றேன். அங்கு உனக்கிருக்கும் அலுவல்களுக்கிடையே உனது உடல் நலத்தையும், உன் கணவர் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். நிச்சயம் விழாவின் தேதியை எங்களுக்கு அறிவித்து விடு கட்டாயம் மானசீகமாய் செல்வியின் வீட்டிற்கு சென்றதுப் போல் உங்கள் வீட்டிற்கும் பறந்து வந்துவிடுவோம் சரியா,நன்றி மீண்டும் சந்திப்போம்.