![]() நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாக்கெடுப்பினை ஒட்டிய ஒரு விவாதத்தை இங்கே தொடங்குகின்றோம். சீனா, இந்தியா போன்ற நாடுகள் இன்று மக்கட்தொகை எண்ணிக்கையில் உலகளவில் முறையே முதல், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றது. அரசாங்கம் மக்கட்தொகையை கட்டுப்படுத்த பல திட்டங்கள், அறிவிப்புகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றது. நமது நாட்டின் நிலை இப்படி இருக்க, வளர்ந்த நாடுகள் பலவற்றில் மக்கட்தொகை எண்ணிக்கை, வளர்ச்சி விகிதம் குறைந்தபடி இருக்கின்றது. அந்நாடுகள் மக்கள் எண்ணிக்கை வளர்ச்சிக்கு பல திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெருகி வரும் மக்கட்தொகை பலமாக இருக்கின்றதா, இடையூறாக இருக்கின்றதா? 100 கோடிக்கும் மேல் மக்கள் இருப்பதால் நாம் அடைகின்ற பயன்கள் என்ன, சந்திக்கின்ற பிரச்சனைகள் என்ன? இப்போது இருக்கும் இதே விகிதத்தில் மக்கள் தொகை வளர்ச்சி இருந்தால் எதிர்காலத்தில் அவை என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்? இதை குறைக்க வேண்டுமா, அதிகரிக்கவேண்டுமா? குறைப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆலோசனை என்ன? இரண்டு பக்க நன்மை தீமைகளையும் பட்டியலிட்டு, உங்கள் தரப்பு விளக்கத்தை இங்கே தாருங்கள். வழக்கமான விதிமுறைகளை இந்த விவாதத்திலும் கடைபிடிக்கவும். தனிநபர், மதம், தேசத் தாக்குதல் கூடாது. விவாதம் ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பிப்ரவரி 6, 2008 - 5:59pm - வழங்கியவர் admin
|

