topic_image


எல்லாரும் கற்பனையில் ஒரு டூர் போகலாமா.தேவா கூட்டிட்டு போவாங்கன்னு நினைச்சேன்.நடக்கலை.அதான் நானே கூட்டிட்டு போறேன் போகலாமா.இந்த டூரில் வர முடியாதவங்க எல்லாம் அடுத்த முறை சரியா.


அருசுவை டூர் பாகம்2
பிப்ரவரி 16, 2008 - 12:46pm - வழங்கியவர் kavisiva

இது முழுக்க முழுக்க கற்பனையே.யாரையும் புண் படுத்த அல்ல.
அருசுவை தோழிகளே நானும் தேவா டூர் கூட்டிட்டு போவாங்க ஜாலியா போகலாம்னு காத்துக்கிட்டு இருந்தா அவங்க எல்லாரையும் கழட்டி விட்டுட்டு தனியா ஆத்துக்காரரோட கிளம்பிட்டாங்க.நாம விட்டுடுவோமா நாம எல்லாரும் அதே கொடைக்கானலுக்கு தேவா போற அதே நாள் போகபோறோம்.போகலாமா.

// ஜலீலாக்கா பெரிய மூட்டை முடிச்சுகளோட வர்றாங்க.
மர்ழியா: என்ன ஜலீலாக்கா மூட்டை ரொம்ப பெரிசா இருக்கு.
ஜலிலா:ஆமா மர்ழியா எல்லாருக்கும் சாப்பாடு வேணாமா அதான் மட்டன் பிரியாணி,இறால் முட்டை,மசாலாகோழி,பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் செய்து எடுத்துட்டு வர்றேன்.
தளிகா:மர்ழியா மூட்டையையே முறைச்சு பாக்காதீங்க,என்ன ஜலிலாக்கா கையில் காயம் இன்னும் ஆறலியா?
ஜலிலா:அன்னிக்கு எண்ணெய் பட்டது சரியாயிடுச்சு.இது இன்னிக்கு ஹி..ஹி..
கவிசிவா:ஜலிலாக்கா தளிகாகிட்டயிருந்து கொஞ்சம் விலகியே நில்லுங்க.இல்லேன்ன கைக்கு மருந்து போடறேன்னு பட்டர் தடவி உருளைகிழங்கு தேய்ச்சு சாப்பிட்டுடுவாங்க. ஆமா ஹர்ஷு எங்க காணோம்.
தளிகா:அவங்க ரொம்ப பிசி.அதனால அவங்க நமக்கு முன்னாடி கொடைக்கானலுக்கு வந்து எல்லாருக்கு வாழ்த்து எழுதி வச்சுட்டு போயிட்டாங்க.
(செல்விக்கா அப்போதான் கிளம்பி ரூமிலிருந்து வெளியே வர்றாங்க)
தளிகா:செல்விக்கா எங்க நம்ப அருசுவை மன்னனும் மன்னியும்?
செல்வி:பாபு அருசுவை பிரச்சினையை சரி செய்ய ஊரிலேயே இருந்துட்டார்.தலைவன் இல்லாம தலைவி வருவாங்களா அதான் பாப்பியும் வரலை.
///காட்சி சென்னைக்கு செல்கிறது
பாபு:தப்பிச்சோம்டா சாமி!இந்த வானரங்களோட கொடைக்கானல் போனா என் நிலைமை என்னாகறது.அருசுவையை சொல்லி தப்பிச்சோம்டா.
பாப்பி:ஆமாங்க கல்யாணம் ஆனதிலிருந்து இதுங்க கண்ணுல படாம டபாய்ச்சுகிட்டு இருந்தோம்.எங்கடா இப்ப போய் மாட்டிக்குவொமோன்னு நினைச்சேன்.காப்பாத்திட்டீங்க.
//ரெண்டு பேரும் கிளம்பி ஊட்டிக்கு ஜாலி ட்ரிப் போயிட்டு இருக்காங்க
///காட்சி மீண்டும் கொடைக்கானலுக்கு:
தளிகா:ஆமா.அருசுவைதானே முக்கியம்.
வின்னியும் ஜானகியும் கிளம்பி வெளியில் வருகிறார்கள்.
வின்னி:எங்களை விட்டுட்டு போயிடாதீங்கப்பா.இதோ வந்துட்டோம்.
ஒருவழியாக எல்லாரும் கிளம்பி ஹோட்டலில் இருந்து வெளியே வருகிறார்கள்.
தளிகா:சுபா எங்கேப்பா காணோம்?
கவிசிவா:ரூமில் லேப்டாப்பும் கையுமாக இருப்பதை பார்த்தேன்.ஏதோ குறிப்பும் கவிதையும் ஞாபகம் வந்துச்சாம்.டைப் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.இன்னும் வரலியா?
தளிகா:இங்க வந்தும் குறிப்பா நான் போய் கூட்டிகிட்டு வர்றேன்.
//தளிகா சென்று சுபாவை கையை பிடித்து இழுத்து கொண்டு வருகிறார்கள்.
சுபா:தளிகா குறிப்பை சேவ் பண்ணலை சேவ் பன்ணிட்டு வந்துடறேன்.டைப் பண்ண 3 மணிநேரம் ஆச்சு தெரியுமா?
தளிகா:வந்து இன்னொருவாட்டி டைப் பண்ணிக்கலாம்.
மர்ழியா:என்னப்பா தேவா கூட இங்கதான இருக்காங்க.
கவிசிவா:ஆமா.ஆனா எந்த ஹோட்டலில் இருக்காங்கன்னு தெரியலியே.
//அப்போ ரெண்டுபேர் தலையில் முக்காடோடு பதுங்கி பதுங்கி ஹோட்டல் ரெசப்ஷனிலிருந்து வெளியே வருகிறார்கள்.
செல்வி:ஹேய் அவங்களை பாரு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.
//செல்வி நன்றாக உற்று பார்க்கிறார்
செல்வி:ஏய் அது தேவாவும் டாக்டரும்.
வின்னி தளிகா மர்ழியா கவிசிவா நால்வரும் ஓடிப்போய் அவர்கள் முன் நிற்க
தேவா:ஹி…ஹி..ஹி…நீஈஈஈங்க எல்லாரும்… இங்க… எப்படி…..(அசடு வழிய)
மர்ழியா:நாங்க மட்டும் இல்ல அருசுவையே இங்கதான்.அங்கே பாருங்க.உங்க பையனும் அம்மாவும் உங்களை விட்டாலும் நாங்க விடுவோமா?அதான் எல்லாரும் கிளம்பி வந்துட்டோம்.
தேவா:செல்வி,ஜானகி யூ டூ
ஜலீலா:ஐடியா கொடுத்ததே அவங்க தானே
//ஒரு ஆட்டோ வந்து நிற்க அதிலிருந்து ஜெயந்தி மாமி வருகிறார்கள்
ஜெயந்தி:ஆஃபிஸ் முடிஞ்சு கிளம்பற நேரம் பாஸ் ஒரு ஃபைலை கேட்டார் எடுத்து கொடுத்துட்டு வர்றதுக்குள்ள என்னை விட்டுட்டு வந்துட்டீங்கள்ல.ஆனாலும் விடுவேனா வந்துட்டோம்ல.
//எல்லாரும் கிளம்பி சில்வர் ஃபால்ஸ் பார்க்க செல்கிறார்கள்.வேறு வழியில்லாமல் தேவாவும் டாக்டரும் சேர்ந்து கொள்கிறார்கள்
//சில்வர் ஃபாள்ஸில்
எல்லாரும் சில்வர் ஃபால்ஸில் குளிக்க ரெடியாக
தேவா:தண்ணி ரொம்ப சில்லுன்னு இருக்கும்ப்பா.குளிச்சா அப்புறம் ஸ்கின் ட்ரை ஆயிடும்.குளிக்க வேண்டாம் போட்டோ மட்டும் எடுத்துக்கலாம்.
துபாய் சூட்டில் வெந்து போய் குளிர்ந்த தண்ணீரை பார்த்து ஜொள் விட்டு கொண்டிருந்த தளிகா,சுபா,ஜலீலா எல்லாரும் ஏக்கப்பார்வை பார்க்க
ஜெயந்தி:சரி சரி அழுவாதீங்க என்கிட்ட மாய்ச்சரைசிங் லோஷன் இருக்கு.கவலை படாம ஆசை தீர 10 நிமிஷத்துல குளிச்சுட்டு வாங்க.
//அவர்கள் குளிக்க மற்றவர்கள் போட்டோ எடுப்பதில் பிஸியாக செல்விக்கா எல்லாருக்கும் மிளகாய் பஜ்ஜி வாங்கிட்டு வர்றாங்க
செல்வி:எல்லாரும் வாங்க.சூடான மிளகாய் பஜ்ஜி இருக்கு.
கவிசிவா:குளிருக்கு சூப்பரா இருக்கு.இன்னொண்ணு கிடைக்குமா?
செல்வி:எத்தனை வேணும்னாலும் சாப்பிடலாம்.
ஜலீலா:வீடில் செய்யற பஜ்ஜி இன்னும் சுவையா இருக்கும்.அடுப்பும் சட்டியும் எடுத்து வந்திருந்தால் நானே செய்து கொடுத்திருப்பேன்.
சுபா:தேவா எங்கப்பா?
தளிகா,மர்ழியா:ஆகா ரெண்டுபேரும் எஸ்கேப் ஆயிட்டாங்கய்யா எஸ்கேப் ஆயிட்டாங்க.
தளிகா:சரி சரி என்ஜாய் பன்னிட்டு போகட்டும்.
கவிசிவா:திரும்பவும் நம்ம கண்ணுல மாட்டாமயா போவாங்க.முதல்லேயே நம்மள எல்லாம் டூர் கூட்டீட்டு போயிருந்த இப்போ டிஸ்டர்ப் பண்ணியிருப்போமா?
வின்னி:கூல் டவுன் கவி.அவங்க பிஸியாயிருந்திருப்பாங்க
ஜானகி:ஆமா கவி
கவிசிவா:அதுவும் சரிதான்.
//ஒரு குரல் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.
ஜெயந்தி:எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!
ஜானகி:ஹேஏஏஏஏஏய் அதிரா.நீங்க எப்போ இங்கே வந்தீங்க
அதிரா:வீட்டிலுள்ள வாலுகளுக்கு சொக்கா போட்டு வர்றதுக்குள்ள நீங்க என்னை விட்டுட்டு வந்துட்டீங்க.இங்க வந்து என் ட்ரேட் மார்க் வசனத்தை சொல்லிகிட்டு இருந்தா எப்படியும் உங்கள் கண்ணில் நான் படுவேன்னு நினைச்சேன் அதே போல நடந்திடுச்சு. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.
மர்ழியா:அப்போ இந்த சினிமாவில் பாடற குடும்ப பாட்டுகள் கூட நிஜம்தான் போல
ஜலீலா:சரி சரி நின்னு பேசிக்கிட்டு இருக்காம எல்லாரும் கிளம்புவோம்.அடுத்து எங்கப்பா?
கவிசிவா:அடுத்தது லேக் போகலாம்
//லேக் அருகில்
ஜலீலா:ரோயிங் போட் எடுக்கலாம்ப்பா.அப்பதான் சேஃபா இருக்கும்.
சுபா:ஆமாம்.போட்டில் போகும் போது கவிதை வந்துச்சுன்னா டைரியில் எழுத வசதியாயிருக்கும்.
தளிகா:இல்லை பெடலிங் போட்டில் போகலாம்.அது கால் தசைகளுக்கு நல்ல எக்சசைஸ்னு www.pedalingboat.com வெப் சைட்டில் போட்டிருக்கு.
செல்வி:ரெண்டு டைப் போட்டும் எடுக்கலாம்.யாருக்கு எது விருப்பமோ அதில் போகலாம்.
//போட்டிங் முடிந்து வெளியே வரும் போது குதிரை சவாரி செய்து கொண்டிருந்த டாக்டரும் தேவாவும் மீண்டும் கண்ணில் மாட்ட தேவா மீண்டும் வழிய
ஜெயந்தி:சொல்லிகிட்டே தனியா போயிருக்கலாம்ல.கவிசிவா கொதிச்சுகிட்டு இருக்காங்க.அவங்க கண்ணுல படாம ஓடிடுங்க பை பை
விட்டால் போதும்னு ரெண்டு பேரும் ஓடியே போயிட்டாங்க.
ஜலீலா:என்னப்பா நான் கொண்டு வந்த சாப்பாடெல்லாம் அப்படியே இருக்கு.வாங்க சாப்பிடலாம்
//எல்லாரும் சாப்பிட்டு முடித்து அடுத்து சூசைட் பாயிண்ட் பார்க்க செல்கிறார்கள்.
மர்ழியா:அப்பா…. எவ்வளவு பெரிய பள்ளம்!
சுபா:எவ்வளவு பெரிய பள்ளம்
கொள்ளை போகுது உள்ளம்
ஹை கவித கவித
வின்னி:சுபா டைரியில் எழுதிக்கோங்க.
தளிகா:ஃப்ரெண்ட்ஸ் அதுதான் பில்லர் ராக்.3தூண் மாதிரி இருக்குல்ல அதான் அந்த பெயர்.
ஜெயந்தி:இதை எந்த வெப்சைட்டில் பார்த்தீங்க
தளிகா: (அப்பாவியாக)
www.kodaikanal.com/pillar_rock
கவிசிவா:சரி சரி எல்லாரும் கிளம்புங்க.இப்பொ கிளம்பினாதான் நாளை காலையில் சென்னை போய் சேர முடியும்.என் மாமியார் வர்றாங்க எனக்கு ஊருக்கு போகணும்.
//மறுநாள் காலை சென்னை பேருந்து நிலையத்தில் எல்லாரும் பஸ்ஸிலிருந்து இறங்க ஊட்டியிலிருந்து வந்த பஸ்ஸிலிருந்து பாபுவும் பாப்பியும் இறங்குகிறார்கள்.
தளிகா:என்ன அட்மின் சர்வர் ப்ரச்சினையை சரியாக்க ஊட்டி வரைக்கும் போக வேண்டியிருந்துச்சா?
பாபு,பாப்பி:ஹி..ஹி…
செல்வி:ட்ரிப் நல்லா எந்த தொந்தரவும் இல்லாம ஜாலியா இருந்துச்சா?
மற்ற எல்லாரும்:செல்விக்கா அப்போ உங்களுக்கு முதல்லேயே தெரியுமா?
செல்வி:எந்த பஸ்ஸில் போராங்க எந்த இடத்தில் தங்கறாங்க எல்லாம் தெரியும் பாபு யார்கிட்டயும் சொல்ல வேனாம்னு சொன்னதால சொல்லலை.
மற்ற எல்லாரும்:பயங்கற ஆளுப்பா நீங்க.
எல்லாரும் பிரிய மனமில்லாமல் அவரவர் ஊருக்கு செல்கிறார்கள்.

(ஒரு கற்பனை நயம்)ஹி ஹி ஹி ஹி
பிப்ரவரி 16, 2008 - 1:26pm - வழங்கியவர் Jaleela Banu

கவி சிவா என்ன ஒரு கற்பனை நயம், என்னை சாப்பாட்டு ராமியா ஆக்கிட்டீங்களே.
எப்படிப்பா இவ்வ்ளோ டைப்பண்ணீங்க
இது நிஜாமவே இருக கூடாதா நான் ஒரு நிமிடம் கண்ணை மூடி கொண்டு அங்கு உங்கள் எல்லோருடனும் போய் வந்து விட்டேன்.
ஹி ஹி ஹி ஹி
ஆபிஸில் ஒருத்தர் வந்து என்ன தனியாக் சிரிகிறீங்க

ஜலீலா

அன்னமிட்ட கை
பிப்ரவரி 16, 2008 - 1:32pm - வழங்கியவர் kavisiva

என்ன ஜலீலாக்கா உங்களை போய் சாப்பாட்டு ராமின்னு சொல்லுவேனா.அன்னமிட்ட கையின்னுல்ல சொல்லியிருக்கேன் நல்லா பாருங்க

கவி சிவா நான்
பிப்ரவரி 16, 2008 - 1:43pm - வழங்கியவர் Jaleela Banu

கவி சிவா நான் தப்ப எடுத்துக்கல
சும்மா தான் நீங்க ரொம்ப free yaa இருக்கீங்க போல இருக்கு.
பாவம் ரொம்ப போர் அடித்து தனிகாட்டில் மக்களை தீடிரென பார்த்தால் எப்படியோ அப்ப்டி இருக்கு உங்கள் நயம்.
ஜலீலா

ஆமா ஜலீலாக்கா
பிப்ரவரி 16, 2008 - 1:47pm - வழங்கியவர் kavisiva

ஆமா ஜலீலாக்கா இன்னிக்கு எந்த வேலையும் இல்லை.இன்னிக்கு சமையல் கூட இல்லை.அதான்.

ஹஹஹஹாஅ
பிப்ரவரி 16, 2008 - 1:49pm - வழங்கியவர் thalika

ஹஹஹஹாஅ..கவீ..சுத்தமா எதிர்பார்க்கல கவிக்கு இப்படி கூட திறமை இருக்குன்னு...நான் முதலில் கெக்கெ கெக்கேனு சிரிச்சுக்கிட்டே படிச்சாலும் கடைசி ரெண்டு வரி படிக்கிரப்பா ஏதோ டூர் முடிஞ்சு வீட்டுக்கு திரும்பி வர்ரப்பா மூஞ்சி வாடியிருக்குமே அது போல் ஆகிவிட்டது..அய்யோ டூர் முடிந்து விட்டதேன்னு....எனக்கு சிரிப்பே தாங்கல..அய்யோ நான் வறேன் அப்ரம்..இப்ப சிரிக்கத் தான் நேரமிருக்கு.நிஜத்தில் டூர் போன ஒரு ஃபீலிங்

என்ன தளிக்கா,கவி
பிப்ரவரி 16, 2008 - 2:07pm - வழங்கியவர் Jaleela Banu

என்ன தளிக்கா அம்மணியை காலையில் இருந்து காணும்.
நான் அந்த டூரிலேயே மூழ்கிவிட்டேன் கவி சமையல் வேலை இல்லை என்றால் விரதமா

இல்லை பழசுகள் எல்லம் இன்று அட்ஜஸ்ட் மெண்டா
ஜலீலா

ஜலி,தளி
பிப்ரவரி 16, 2008 - 2:40pm - வழங்கியவர் kavisiva

விரதம்லாம் இல்ல ஜலீலாக்கா.இன்னிக்கு அவரோட டின்னெர்க்கு வெளிய போறேன்.அதான்.மற்ற வேலையெல்லாம் மெய்ட் வந்து செஞ்சுட்டு போயாச்சு.

தளிகா ரொம்ப நாளா இப்படி எழுதணும்னு ந்னைச்சுகிட்டு இருந்தேன் ஆனா எதுவுமே எழுத தோனலை.இன்னிக்கு என்னவோ கொஞ்சம் உளறியாவது ஒப்பேத்த முடிஞ்சுது.

நான் கூட கொடைக்கானலில் எல்லாரும் இருப்பது போலவே விஷூவலைஸ் செய்து எழுதினேன்.முடிச்சு பை பை சொன்ன போது கஷ்டமாகதான் இருந்தது.

கவி சிவா
பிப்ரவரி 16, 2008 - 3:01pm - வழங்கியவர் Jaleela Banu

கவி சிவா நீங்க சொன்ன து நெஜம் எங்க போனாலும் சாப்பிட பிள்ளைகளுக்கு இல்லாமல் போகமாட்டேன், ஒரு தன்ணீ பிஸ்கேட்டாவது ,
ஜலீலா

எப்படி கவி?
பிப்ரவரி 16, 2008 - 5:05pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு கவி,
எப்படி இப்படியெல்லாம்? சூப்பர், போ! ஆனாலும் உனக்கு ரொம்பவே குறும்பு. பாபுவோட திருமணத்தை தெரிஞ்சும் சொல்லலைன்னு இதில வாரியிருக்கே! சரி, உண்மை இருக்கிறதால பிழைச்சுப் போ. ஜலீலா பத்தி எழுதுனதுதான் ரொம்ப சிரிப்பா இருந்துச்சு. தளிகா பின்னாடி குறும்பு பண்ணிகிட்டே இருந்ததை நீ சரியா கவனிக்கலை போல. எல்லாரையயம் அவங்க அவங்க இயல்போட சித்தரிச்சிருந்த விதம் அருமை. மாமியார் சரியில்லை கவி உனக்கு, இல்லைன்னா, இப்படி ஒரு டூர் கூட்டிப் போற அளவு உனக்கு நேரம் இருக்குமா:-))
நல்ல கற்பனை. வளரட்டும். அடுத்த டூர் எப்ப கவி:-))
அன்புடன்,
செல்வி.

ஜாலி டூர்
பிப்ரவரி 16, 2008 - 5:07pm - வழங்கியவர் vinnie

கவி தளிகாவும், செல்விக்காவும் தோ கம்பு எடுத்துட்டு வர்றாங்க. அப்பா நீங்களாவது டூருக்கு கூட்டிட்டுபோனீங்களே. தேவாவுக்கு நல்லா பனிஷ்மன்ட் குடுத்தாச்சு எல்லோருடன் கொடைக்கானல் போய் வந்த மாதிரி இருக்கு. எப்படி கவி இப்படியெல்லாம். தளிகா, செல்விக்கா, அதிரா இவர்களோட டயலாக்ஸ் super. கஷ்டப்பட்டு அறுசுவைய ஒப்பன் பண்ணி சிரிச்சுட்டு இருக்கேன்.

ஹாய் கவி
பிப்ரவரி 17, 2008 - 9:00am - வழங்கியவர் seyedkatheeja

என்ன இப்படி பண்ணீட்டீங்க தேவாதான் என்னை டூருக்கு கூட்டிட்டு போகாம ஏமாத்தீட்டாங்கன்னு பார்த்தா இப்ப நீங்களும் என்னை விட்டுட்டு போய்டீங்களே நான் உங்க கூட பேசமாட்டேன் கோபம் என்னை அடுத்த வாட்டி மறக்காம கூட்டிப்போனா தான் பேசுவேன் சரியா (சும்மாதான்) உங்கள் கற்பனை திறனுக்கு ஒரு ஓ போடனும். எங்க எல்லருமா சேர்ந்து கவிக்கு ஒரு ஓ போடுங்க பார்க்கலாம் ஓ ஹோ. அப்புறம் படிச்சுட்டு தன்னால சிரிக்கிறேன் என் பையன் பார்த்து என்னன்னு புரியாமல் அவனும் சிரிக்கிறான் . எல்லாரையும் கொஞ்ச நேரம் சிரிக்க வைத்ததுக்கு நன்றி.எப்படிப்பா இப்படிலாம் எழுத தோனுது நானும் நிறைய கற்பனை செய்து எழுதலம்னு நினைக்கும் போது வேற ஏதாவது வேலை வந்துடும் அதோட விட்டுடுவேன். இவ்வளவு பொருமைய டைப்பண்ணி அதை அறுசுவையில் போட்ட உங்களுக்கு எனது பாராட்டுக்கள். மேலும் நிறைய எழுதுங்கள்.

அன்புடன் கதீஜா.

கதீஜா
பிப்ரவரி 17, 2008 - 9:55am - வழங்கியவர் kavisiva

கதீஜா உங்களை போய் மறந்து விடுவேனா.நீங்களே குளிருக்கு பயந்து இன்னும் ஜப்பான் திரும்பாம இருக்கீங்க.உங்களுக்கு கொடைக்கானல் குளிர் ஒத்து வருமா.அதான் ஞாபகமா கூட்டிட்டு போகலை.(நல்லா சமாளிக்கறேன்ல :D).அடுத்தவாட்டி டூருக்கு ஹீரோயினே நீங்கதான்.

கவி-தவி
பிப்ரவரி 17, 2008 - 1:19pm - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் கவிதா என்னப்பா இது என்னால் முடியல...இப்படிலாம் எப்படி கற்பனை வருது ஒரு நிமிடம் என்னயே மறந்துவிட்டேன்..கற்பனை பண்னி பார்த்துக்கொண்டே வாசித்தேன்...இனிமையா இருந்தது...ஆனால் தளிகா,ஜலீலாக்கா இருவரும்தான் முழு உருவத்துடன் தெரிகின்றீர்கள்...
மற்ற அனைவரும் இருட்டாக தெரிகிறீர்கள் ஏன்னா மற்ரவங்களை பார்த்தது இல்லையே ஹா ஹா
உங்கள் ஐடியை தாங்க...இஸ்டம் இருந்தால்

அன்புடன்,
மர்ழியாநூஹு

செல்வி மேடம்
பிப்ரவரி 17, 2008 - 2:05pm - வழங்கியவர் mptindira

ஹாய் செல்வி மேடம். நலமா? நான் தான் உங்க பக்கத்து ஊரு பொண்ணு இந்திரா.
தங்களின் உடல் நிலை எப்படி உள்ளது? உங்க உளுந்து வடை ரொம்ப நல்லா இருந்தது.
உங்களுக்கு ஒரு சந்தோசமான விஷயம். நான் திசிஸ் சப்மிட் பண்ணியாச்சு. வரும் வியாழன் அன்று பட்டமளிப்பு விழா. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி (ரொம்ப சிக்கரமா நன்றி சொல்றேன் இல்ல. ரொம்ப பிசி அப்போ- திசிஸ் சம்மிஷனுக்காக; ரொம்ப பிசி- இப்போ - இந்தியா போக பேக்கேஜ் அண்ட் கடைசி நேர வேலைகள் etc...)
இப்படிக்கு
முனைவர். இந்திரா

செல்விம்மா
பிப்ரவரி 17, 2008 - 3:24pm - வழங்கியவர் kavisiva

செல்விம்மா எப்படி இருக்கீங்க?பேசி ரொம்ப நாளாச்சு.நான் எழுதியதை படிச்சுட்டு எல்லாரும் சிரிச்சா ரொம்ப சந்தோஷம்.
மாமியார் இன்னும் இங்க வரலை சிங்கபூரில் அவங்க மகளோட இருக்காங்க.

ஹாய் மிரள்ரியா
பிப்ரவரி 17, 2008 - 3:27pm - வழங்கியவர் kavisiva

ஹாய் மிரள்ரியா சே சே மர்ழியா சிரிச்சு முடிச்சாச்சா?மரியம் எப்படி இருக்கறா?
என் ஐ டி தளிகாகிட்ட இருக்கு வாங்கிக்கோங்க.மெயில் பண்ணுங்க

வாழ்த்துக்கள் இந்திரா
பிப்ரவரி 17, 2008 - 3:29pm - வழங்கியவர் kavisiva

வாழ்த்துக்கள் இந்திரா.இப்பதான் உங்க கிட்ட பேசறேன்.அருசுவை தோழி முனைவர் பட்டம் வாங்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.மேலும் பல பட்டங்கள் பெற வாழ்த்துக்கள்

டியர் கவி
பிப்ரவரி 17, 2008 - 4:13pm - வழங்கியவர் MarliyaNoohu

அய்யோ கவி என் பெயரை நீங்க மிரள்ரியான்னு சமீபத்தியக் கருத்துக்கள் லில் பார்த்ததும் எனக்கு சிரிப்பு தாங்கலப்பா....யாராக இருக்கும்?யாராவது புது வரவா கத்தான் இருக்கும்...அதனால்தான் பெயரை சரியா எழுத தெரியாமல் எழுதி இருப்பார்கள்னு நினைத்துட்டே ஓப்பன் பண்ணினா அம்மனி நீங்களா?ஹா ஹா....
இன்னுமந்த டூர் மேட்டரில் இருந்து வரல போல...
சரி வாங்கிக்கறேன்
என் பொன்னு இப்ப 7 மணியில் இருந்து 7.30 மனிக்குள் 8 தடவை டிரஸ் மாற்றி விட சொல்லி என்னை ஒரு வலி பண்ணிட்டாள் தெரும்பவும் இப்பதான் வீட்டை பெருக்கினென்...மறுபடியும் அம்மா மேல் உள்ள அளவுக்கு அதிகமான பாசத்தை பொழிந்து பெருக்க வைத்து விட்டாள்....போதக்குறைக்கு பாத்ரீமில் வேற எப்பலாம் யூரின் போகனுமோ அப்பலாம் பிரஸ் பண்ணிக்குறா...
இப்ப பி..சி யை தான்னு அடம் அவலுக்கு டிக்டா,குவா குவா வாத்து போடனுமாம்...கெஞ்சி கூத்தாடி அவளிடம் இருந்து வாங்கி இருக்கேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

கவி டூர்
பிப்ரவரி 18, 2008 - 1:34am - வழங்கியவர் Janaki2411

ஹய் கவி எப்படி உங்களால் மட்டும் இப்படி முடியுது? இது கற்பனை இல்லை கவி நிஜமாவே டூர் போன மாதிரி இருந்தது. நிஜமாவே அப்ப அப்ப படிச்சு பார்த்து சிரிச்சு கிட்டு இருக்கேன். எனக்கு டைம் இருக்காது இவ்வளவு கற்பனையும் வராது. கவி அப்ப அப்ப டூர் கூட்டிட்டு போக ப்ளீஸ். ஏன் கேட்கிறீர்களா? வேறு எதற்கு வேலையின் பளுவில் சிரிக்க தான். உங்கள் கற்பனை வாழ்க.

ஜானகி

தேங்க்ஸ் டு அட்மின் அண்ட் அறுசுவை தோழிகளே!!!!!!!!!!!!!!!!
பிப்ரவரி 18, 2008 - 2:33am - வழங்கியவர் mptindira

ஹாய் கவிசிவா,
வாழ்த்துகளுக்கு நன்றி நன்றி நன்றி. ஆமாம் இதுதான் முதல் முறை நான் தங்களிடம் பேசுவது. இப்படி கொஞ்ச பேரிடம் ஆரம்பித்தேன். பட் இட்ஸ் வெரி டிபிகில்ட் டு கன்ட்டினு, பிகாஸ் ஆப் லேக் ஆப் டைம் டு டைப் பட் ஐ குட் பைண்டு டைம் டு ரீட் ஆல் ரைடிங்க்ஸ்.
உங்க டூர் ரொம்ப ரொம்ப இயல்பா, காமடியா இருக்கு. சும்மா சொல்லக்கூடாது, அறுசுவை உங்கள மாதிரி தோழிகளின் சமையல் குறிப்புகளை தாங்கி என்ன மாதிரி அயல் நாடு வந்து படிப்பவர்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கு.
தேங்க்ஸ் டு அட்மின் அண்ட் அறுசுவை தோழிகளே!!!!!!!!!!!!!!!!
my email id is just my username at gmail or yahoo.com. if u (kavitha) wish we could continue through email too. since, i wish to see u all. hope, from u i could get others id too.

இப்படிக்கு
Dr. இந்திரா

கவி மேடம்
பிப்ரவரி 18, 2008 - 5:23am - வழங்கியவர் deepaarunkumar

நேற்று வர முடியல உடம்பு முடியல ரொம்ப பீவர். இன்னக்கி வந்து பார்த்தா ஒரு பெரிய டூரே போய்ட்டு வந்திருக்கீங்க. என்ன ஒரு கற்பனை திறன் மேடம் உங்களுக்கு. ஏன் மேடம் புதுசா வந்தவங்கல எல்லாம் டூர்ல சேர்த்துக்க மாட்டீங்களா? நாங்களும் நல்ல கம்பெனி கொடுப்போம் மேடம் அடுத்த டூர்ல இருப்போம்னு நினைக்கிறன்.அத படிக்கும் போது இதுப்போல உங்க கூட நானும் இருக்க கூடாதான்னு இருக்கு மேடம். நல்லா யோசிச்சு ரொம்ப நல்லா ப்ரேம் பன்னியிருக்கீங்க சூப்பர் மேடம்.

வாழ்த்துக்கள்
பிப்ரவரி 18, 2008 - 5:24am - வழங்கியவர் deepaarunkumar

இந்திரா மேடம் உங்களுக்கு என்னோட உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

விசயம்
பிப்ரவரி 18, 2008 - 6:45am - வழங்கியவர் MarliyaNoohu

செல்விக்கா உங்கள் உடம்புக்கு என்ன?சகோதரி இந்திரா சொல்லி இருக்காங்க?

அப்புறம் டியர் பிரன்ஸ்,அக்காமார்கள்,தங்கைமார்
கலுக்கெல்லாம் ஒரு விசயம் பொறுங்கப்பா சொல்லுறென்....

இன்னும் இரு நாட்களில் நான் ஊருக்கு போகிறேன்...உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணிட்டு போறேன்...செல்விக்காவை தவிர செல்விக்கா முழிக்காதீங்க நீங்கதான் அடிக்கடி போன் பண்ணிப்பீங்களே அதான் அப்ப்டி சொன்னேன்...நான் இல்லமால் கொஞ்ச நாளைக்கு பெருமூச்சு விட்டுட்டு நிம்மதியா இருங்க...
என் அக்கா டெலிவரிக்கு ஹெல்ப் பண்ணதான் போகிறேன்...
நல்லபடியாக எந்த குறையும் இல்லாத பிள்ளையை பெற்ரு எடுக்க துஆ கேளுங்கபா பிளீஸ்... எனக்கு டெங்ஷனா இருக்கு...என் அக்கான்னா எனக்கு உயிர்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

பூண்டு பால், சுக்கு பால், முட்டை சோறு
பிப்ரவரி 18, 2008 - 7:08am - வழங்கியவர் Jaleela Banu

மர்லியா நல்ல படியாக போய் விட்டு வாங்க ,
அக்காவுக்கு நல்ல படியா சுகப்பிரசவம் ஆகும்.
கவலை வேண்டாம் என்னுடைய தூவாக்கள் என்றும் உண்டு
போவதற்கு முன் என்னுடைய பூண்டு பால், சுக்கு பால், முட்டை சோறு எல்லாம் பார்த்து விட்டு போங்க உங்க அக்காவுக்கு செய்து கொடுக்க
நீங்க இல்லை நா நல்ல இருக்காது சரி அட்ஜெஸ்ட் பண்ணி கொள்கிறோம்
உங்க பொண்ணையும் நல்ல பார்த்து கொள்ளுங்கள்.

ஜலீலா

சிசேரியந்தான்.
பிப்ரவரி 18, 2008 - 7:33am - வழங்கியவர் MarliyaNoohu

இல்லைக்கா அவங்க்ளுக்கு பிறந்த இரு குழந்தைகளும் சிசேரியந்தான்.. 3 வது பிள்ளையும் சிசேரியன்னு டாக்டர் சொல்லிட்டாங்க....
கண்டிப்பாக பார்க்கிறேன்....
மர்ழியாநூஹு

மர்ழியா அக்கா
பிப்ரவரி 18, 2008 - 10:10am - வழங்கியவர் deepaarunkumar

அக்கா சரி ஊருக்கு போறீங்கள் வாட்ச் உமன் கிட்ட பர்மிசன் வாங்குனீங்களா? என்னா போங்க கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல அக்கா உங்களுக்கு. அக்கா உங்க அக்காவுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க. நல்ல படியா குழந்தை பிறக்க ஆணடவனிடன் நான் வேண்டிக் கொள்கிறேன் அக்கா. நீங்களும் பத்ரமா போய்ட்டு வாங்க உங்க மகளா பார்த்துக்கோங்க அக்கா.
நீங்க இல்லா அறுசுவை கலக்கட்டாதே பரவயில்ல கொஞ்ச நாள் தான அட்ஜஸ் பன்னிக்கிறோம்.

வந்தாச்சே வந்தாச்சே
பிப்ரவரி 19, 2008 - 10:37am - வழங்கியவர் thalika

வந்தாச்சே வந்தாச்சே வராத அறுசுவை வந்தாச்சே

தளிகா:-)

ஹய்யா வந்தாச்சு
பிப்ரவரி 19, 2008 - 12:18pm - வழங்கியவர் MarliyaNoohu

ஹய்யா வந்தாச்சு..
என்னடா இது நான் ஊர் போனபிந்தான் ஓப்பன் ஆகும்னு நினைத்து இருந்தேன் ஓப்பன் ஆகிட்டு :-))))) ரொம்ப சிரிக்குறேனோ?சை அடக்கி வாசிக்குறேன்...ஹாய் தீபா..நலமா?வாட்ச் உமன் மைல் தந்தாச்சு...இருந்தாலும் அவங்களிடம் ஏன் சொல்லனும்?அவங என்ன அவங்க ஜாபை ஒழுங்கா கவனிக்கவா செய்றாங்க?
எப்பபார் ஒர்ரேயா தண்ணி போட்டுட்டு வாரதே இல்லை எங்கோ ஓரமா விழுந்து கிடக்க வேண்டியது.அப்புறம் நாமெல்லாம் தட்டி எழுப்பனும்..உங்கள் வாழ்த்துக்கு நன்றிஅன்புடன்,
மர்ழியாநூஹு

மீண்டும் ஒரு சர்வர் மாற்றம்
பிப்ரவரி 19, 2008 - 12:34pm - வழங்கியவர் admin

நமது புதிய சர்வர் பராமரிப்பவர்கள், அதிக பளுவினை காரணம் காட்டி, இரண்டு மூன்று எச்சரிக்கை கொடுத்து, பின்னர் ஒரேடியாக அறுசுவையை நிறுத்திவிட்டார்கள். இது இருமுறை நடந்துவிட்டது. அறுசுவைக்கு இந்த சர்வர் எல்லாம் போதவில்லை. இதை மீண்டும் பெரிய அளவிலான சர்வருக்கு மாற்றவேண்டும். சர்வர் மாற்றம் நடைபெறும்வரை அறுசுவையை பார்வையிட இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன்.

46 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »