topic_image


நான் வாழைக்காய் பஜ்ஜி போட்டால் மாவு காய்மேல் ஒட்டவே மடேன்கிறது.
என்ன செய்தால் இது சரியாகும்.


வாழைக்காய் பஜ்ஜி
மார்ச் 15, 2008 - 1:28pm - வழங்கியவர் ramravi

வாழைக்காய் பஜ்ஜி :

செய்முறை: கடலைமாவு - 1 கப், அரிசிமாவு - 1 குழிகரண்டி, உப்பு,பெருங்காயம் தேவையான அளவு கொஞ்சம் சமையல் சோடா- 1 ஸ்பூன், நெய் - 3 ஸ்பூன்.

மேற்சொன்ன எல்லாவற்றையும் தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொண்டு பஜ்ஜி செய்தால் நன்றாக வரும்.

"Always Keep Smiling"

மதிமணி
மார்ச் 15, 2008 - 1:39pm - வழங்கியவர் thalika

மதிமணி என் செய்முறை

2 வாழைக்காயை ஸ்லைசாக்கி அதனை 1 ஸ்பூன் உப்பு சேர்த்த 1 கப் தண்ணீரில் இட்டு 20 நிமிடம் வைக்கவும்
பின் கடலை மாவு - 3/4 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பேகிங் பவுடர் - 1/4 ஸ்பூன் போட்டு கலக்கி
அதனுடன் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக இட்லி மாவை விட கெட்டியாக இருந்தால் தான் காயில் மாவு ஒட்டும்.
பின் காயை இந்த மாவில் முக்கி எண்ணையில் பொரித்து எடுங்கள்

bajji
மார்ச் 20, 2008 - 4:00am - வழங்கியவர் vijaya51

இட்லி தோசை மாவில் ஒரு கரண்டி சேர்த்து பஜ்ஜி மாவுடன் சிரிது சூடாக காய்சிய எண்ணயை சேர்து பஜ்ஜி போட்டால் crispudanநன்ட்ராக இருக்கும்.