topic_image


மிகவும் சுவை மிக்க கப்ஸா எனும் அரபிய நாட்டு சாதத்தை எப்படி தயாரிப்பது என அங்கு வாழும் நம்மவர்கள் கொஞ்சம் குறிப்பினை தந்தால் நம் சகோதரிகளும் பயனடைவார்கள் அல்லவா? ரெம்பவும் சுவை மிக்க உணவு அது. நன்றி...குலசை சுல்தான்


kabsa rice
மார்ச் 11, 2008 - 2:47pm - வழங்கியவர் asiya omar

naan ingu knorr kabsa mix vangi use pannuven,en opposite flat arabi family irukanga,kettu therivikiren.

கப்ஸா விடுகிறார்
மார்ச் 11, 2008 - 4:21pm - வழங்கியவர் இலா

உண்மையில் நண்பர் குலசை.. கப்ஸா விடுகிறார் என்ட்று நினைத்தேன்... புதிய கப்ஸா குறிப்புக்காக காத்திருக்கிறேன்

குலசை சுல்தான்கப்சா ரைஸ்
மார்ச் 11, 2008 - 11:36pm - வழங்கியவர் Jaleela Banu

அஸ்ஸலாமு அலைக்கும் குலசை சுல்தான்
எனக்கு தெரியும் நீங்கள் கேட்கும் கப்சா ரைஸ்,
முதலே கொடுகலாம் என்று எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்று தான் கொடுக்கவில்லை,
ஜலீலா

kabsa
மார்ச் 11, 2008 - 11:51pm - வழங்கியவர் thalika

http://www.nestle-family.com/
maggi/eng/
maggi_member_recipes.aspx

சுல்தான் நீங்கள் சொல்லிக் கேட்டதும் ஆசையில் தேடினேன்..ஈசியாக தெரியவே நேற்று இரவே சமைத்தேன்..சுவையாக இருக்கிறது.

சகோதரி ஜலீலா அவர்களே
மார்ச் 12, 2008 - 1:56am - வழங்கியவர் kulasaisulthan

சரி. இப்போதாவது குறிப்பினை கொடுங்களேன். மற்றவர்கள் பயனடையட்டுமே. இன்னும் ஏன் தயக்கம்.

கப்சா
மார்ச் 12, 2008 - 2:01am - வழங்கியவர் Jaleela Banu

கப்சா

கொஞ்ச வேலையாக உள்ளது பிற்கு கொடுக்கிறேன்
இன்று (அ) நாளை

ஜலீலா

கப்ஸா
மார்ச் 12, 2008 - 2:53am - வழங்கியவர் kulasaisulthan

மறக்காமல் கொடுத்தால் சரி.
தேங்காய்(சரக்கு)சோறு குலசேகரன்பட்டினம்,காயல் பட்டினம் போன்ற கடற்கரை ஊர்களில் ரெம்பவும் பிரசித்தம். இதற்கு முள் வாளை மீன் ஆனம்(குழம்பு) சரியான காம்பினேசன். நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். தங்களுக்கு செய்முறை குறிப்பு தெரிந்தால் பதிவு செய்யுங்களேன்.

thalika அவர்களே! (கப்ஸா ரைஸ்)
மார்ச் 12, 2008 - 2:58am - வழங்கியவர் kulasaisulthan

"யாம் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறட்டுமே" என்பதிற்கு ஏற்ப, உங்களது குறிப்பினை கொடுங்களேன்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

தேங்காய் சோறு, மீன் ஆணம் சூப்பர் காம்பினேஷன்
மார்ச் 12, 2008 - 3:12am - வழங்கியவர் Jaleela Banu

குலசை சுல்தான் அவர்களே தேங்காய் சோறு, மீன் ஆணம் சூப்பர் காம்பினேஷன் அப்படி தான் நாங்களும் செய்வோம்.

தேங்காய் சோறு என் ரெஸிபியில் இருக்கு, கிளங்கா மீன் சால்னா(ஆணம்) அதை அப்ப்டியே உங்க வாளைமீன் முள் ஆணமாக மாற்றவும்.
எனக்கும் இப்பவே சாப்பிடனும் போல் உள்ளது நாளைக்கு அதுதான்.செய்ய போறேன்
ஜலீலா

சகோ குலசை சுல்தான்
மார்ச் 12, 2008 - 3:16am - வழங்கியவர் thalika

அதை குறிப்பாய் கொடுத்தால் சிலர் அடித்து விடுவார்கள்..லின்கை கொடுங்கள் ஏன் குறிப்பாக ஏதோ நீங்களே கண்டுபிடித்தது போல்ன்னு கேட்டு இம்சை:-(
லின்கை கொடுத்தால் உங்களை போன்றவர்களுக்கு குறிப்பாக வேண்டும்...கொஞ்சம் பொருத்துக் கொள்ளுங்கள்..என் குழந்தையை தூங்க வைத்த பின் வந்து கொடுக்கிறேன்.

சலாம் ஜலீலாக்கா
மார்ச் 12, 2008 - 3:18am - வழங்கியவர் thalika

ஜலீலாக்கா அதை ஏன் இப்ப சொன்னீங்க?தேங்காய் சோறும் கப்சா ரைஸும் ஒன்னா?

தேங்காய் சோறு வேறு
மார்ச் 12, 2008 - 4:23am - வழங்கியவர் Jaleela Banu

தேங்காய் சோறு வேறு கப்சா ரைஸ் வேறு
தளிக்கா மேலே அவர் கேட்டுள்ளார் ஆகையால் தான் சொன்னேன்,என்னுடைய குறிப்பை கிளிக் பண்ண முடியல ஆகையால் தான் காபி பேஸ்ட் செய்யவில்லை.

ஜலீலா

மேகி கப்சா ரைஸ்
மார்ச் 12, 2008 - 4:36am - வழங்கியவர் thalika

ஓஹ் இப்ப தான் பாத்தேன்...எனக்கு மேகி கப்சா ரைஸ் குறிப்பு தான் கெடச்சுது..உங்கள்ட இந்தியன் வெர்ஷன் குறிப்பு இருந்தா அனுப்புங்க..அதையும் செய்து பார்க்கிறேன்

அது என்ன கப்ஸா ரைஸ்
மார்ச் 12, 2008 - 4:41am - வழங்கியவர் Nandhini29

ஹா ஹ ஹா பெயரை கேட்டாலே காமடியா இருக்கு. கப்ஸா ரைஸ்னா என்ன காலையிலிருந்து எல்லாரும் அத பத்தி பேசிகிட்டு இருக்கீங்க. யாராவது சொல்லுங்களேன்.

ரூபி
மார்ச் 12, 2008 - 4:46am - வழங்கியவர் kr

ரூபி,நான் போட்ட பதிவுக்கு பதில் எங்கேப்பா? (yesterday)

ஹாய் அம்மா ஆஃப் ஆத்திகா
மார்ச் 12, 2008 - 4:55am - வழங்கியவர் thalika

எங்கே?எதைப் பற்றி?

தளிகா:-)

தேடினேன்,கிடைக்கலே, ரூபீ.
மார்ச் 12, 2008 - 6:19am - வழங்கியவர் kr

தேடினேன்,கிடைக்கலே, ரூபீ.

help
மார்ச் 12, 2008 - 6:21am - வழங்கியவர் kr

PLS tell me how to make the upper portion of the samasa crispy?

ஹாய் நந்தினி
மார்ச் 12, 2008 - 6:36am - வழங்கியவர் felcia Rajan

நலமா. கப்ஸா ரைஸ் என்றால் கப்ஸா விடுவது இல்லை. இது அரேபிய நாடுகளில் செய்யப்படும் பிரியாணி அரிசி போன்றது

ஹலோ பெல்சியா மேடம்
மார்ச் 12, 2008 - 6:58am - வழங்கியவர் Nandhini29

நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? உங்க கூட பர்ஸ்ட் டைம் பேசுறேன் மேடம். ரொம்ப சந்தோஷம் மேடம் நீங்க எங்க இருக்கீங்க. பசங்க இருக்காங்களா? ஓ அப்படியா அப்போ நம்ம இங்க புழுங்கல் அரிசி, பச்சரிசி சொல்வது போல் அங்க கப்ஸா ரைஸா. நல்ல பேரு காமடியா இருக்கு. நன்றி மேடம் புரிய வச்சதுக்கு.

நந்தினி
மார்ச் 12, 2008 - 7:03am - வழங்கியவர் felcia Rajan

லைனில் தான் இருக்கிறீர்களா. நாங்கள் சவுதி அரேபியாவில் இருக்கிறோம். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். உங்களுக்கு?