ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
சுல்தானண்ணா நீங்க சொல்லிட்டீங்க.கேட்கரப்ப சந்தோஷம் தான். பாவம் ஏழை வீட்டு பெண்கள் 30 வயசிலும் பாக்கெட் போட பின்னூசி செய்யன்னு வேலை செய்து ஏக்கத்துடன் பெற்றொர் பாத்துட்டிருப்பாங்க.
அதாவது இப்பொழுது நடப்பது glorified dowry sustem ..அதனை நிறுத்த ரொம்ம்ப கஷ்டம்..பைய்யன் வீட்டில் அந்த காசு,நகையால் எந்த ப்ரியோஜனம் இல்லாட்டாலும் அடுத்தவங்ள்ட இவ்வளவு பைய்யனுக்கு கிடைச்சதுன்னு சொல்ல வேண்டும்..அது மட்டும் தான் நோக்கம். எங்களுக்கு காசு,பணம் வேண்டாம் உங்க பொண் மட்டும் போதும் என்று பேசிட்டு தேடி அலைவது இவங்களை விட வசதி படைத்த வீட்டிலுள்ள பெண்...
அண்ணா அனுப்புங்கள்..சரி தான் அதான் காரணம். எனக்கு நினைத்தாலே பயமாக இருக்கிறது..தமிழாட்டில் கூட நல்ல மாற்றம் வருகிறது..பிள்ளைகள் திருந்திக் கொண்டு வருகிறார்கள்..கேரளம் சுத்த மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.. சமீபத்தில் எங்கள் சொந்தத்தில் நடந்த திருமணத்தில் பெண்ணுக்கு கொடுத்தது 300 பவனும்,10 லட்ஷம் ரூபாயும் ,ஒரு ஸ்கார்பியோவும்...கேட்டதிலிருந் து ஜன்னியே வந்து விட்டது....ஆம்பிளைகள் வெறும் money making machines ஆக மாறி விட்டார்கள் பாவம். இது எங்கப் போய் முடியுமோ தெரியலை..சென்ற முறை டிவியில் ஒரு மலையாள சானலில் இதனைப் பற்றி கல்லூரி மாணவர்களிடம் கேட்க 90% மாணவர்கள் வரதட்சனை வாங்குவதில் தப்பே இல்லை ..அந்த பெண்ணை வாழ்நாள் முழுக்க பாக்க கிடைக்கிரதில் என்ன தப்பு என்று கேட்கிரார்கள்..அதை பார்த்ததிலிருந்து ஆத்திரமும் வருத்தமும்
நாங்க வாங்க மாட் டோம். மஹர் கொடுத்து செய்வோம்.இன்ஷா அல்லா.
சபாஷ் அண்ணா ..இன்னும் நிறைய அனுப்பி சாட்டையடி கொடுங்கள். ..ரொம்ம்ப யோசித்து வருந்தி விட்டேன்..இப்பொழுது ஒரு தமாஷ்...குலசை என்ற உங்கள் ஊர்பெயர் மறந்து காலையில் சுடலைசுல்தான் என்று type செய்து அனுப்பும் நேரத்தில்; தான் நியாபகம் வந்து மாற்றினேன்..நல்ல வேளை
வரதட்சணை
பெற்று சீராட்டி வளர்த்த மக்களை மாக்களாக விற்கிறோம் திருமண சந்தையிலே!
கூட்டமாக நிற்கும் மாக்கள் தான் - மந்தையிலே!! நாமும் தான் மாறவேண்டும் நிந்தையிலே!!
குழந்தையில் ஏது பேதம் வளர்ந்த பின் - அது பெருகிறது சாபம் வரதட்சணை எனும் சாபம்...
கவிதை : வரதட்சணை! - கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]
மணச் சந்தை - மானம் ஈனம் சூடு சுரணை சுயமரியாதை ஆண்மை எல்லாமெ விற்பனைக்கு!
படிப்பு பட்டம் பணி பாரம்பரியம் தகுதி தராதரத்துக் கேற்ப விலைகளும் பேரங்களும்!
மனசாட்சியைத் தொலைத்து விட்டுக் கை யெழுத்தாகிறது மண ஒப்பந்தம்! சாட்சியாய் சொந்தங்கள் பந்தங்கள்!
கந்துவட்டிக்காரர்களாய் உருவெடுக்கிறார்கள் பிள்ளை வீட்டார்! கொத்தடிமை ஆக்கப்படுகிறாள் மணப் பெண்!
பெண்ணைப் பெற்ற கடன் .... கேட்கும் போதெல்லாம் கொடுக்கும் நிர்ப்பந்தத்தில் பெண் வீட்டார்!
பிள்ளையைப் பெற்ற கடனும்.... வளர்த்த செலவும் வசூலிக்கும் நிலையில் பிள்ளை வீட்டார்!
பொன் முட்டையிடும் வாத்தாய் இருத்தல் வேண்டும் மணப் பெண்! அன்றேல் விளக்கேற்ற வந்தவளின் வாழ்க்கை விளக்கு...?
மண்ணிலே பிறந்த பெண்ணுக்கு மண்ணெண்ணெய் செந் தீயால் அபிஷேகம்!
பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அநீதிகள்! பெண்களே காரணமாய் இருக்கும் நிலைமைகள் அவலங்கள்!
மனிதம் செத்துவிட்ட சமுதாயத்தில் மானங் கெட்டவர்களின் பெருக்கம்!
பணத்துக்காக விலை போகும் பெண்ணை சமூகம் அழைக்கும் பெயர்.. வேசி!
வரதட்சணையின் பெயரில் பணத்துக்கும் பொருளுக்கும் விலை போகும் ஆண்களையும் அவர்களுக்கு உடந்தையாய் இருப்போரையும் என்னென்று அழைப்பது...?
வரதட்சணை பற்றி கவிதை ஒன்று! படித்ததில் பிடித்தது நீங்களும் படிக்க இங்கு இணைக்கின்றேன்.
எம்மாடியோவ், எனக்கு கவிதை எல்லாம் வராது//
நாங்க கொடுக்கவும் மாட்டோம், வாங்கவும் மாட்டோம். வரதட்சணை கொடுக்க முடியாமல் தவிக்கும் பெண் வீட்டாரை கண்டு என் மணமும் துடிக்கும். வரதட்சணை கேட்கும் வீட்டாரை கண்டால் சாட்டையால் நாலு சாத்து சாத்தலாம் முன்னு தூணும். ஜலீலா
சுபா, சுல்தான் அங்கிள் கவிதை அருமை. பெண்கள் நினைத்தால்தான் வரதட்சணையை ஒழிக்கலாம். மகன் கேட்காவிட்டாலும் தாய்தானே கேட்கிறார் 'கவுரவத்திற்காக' வரதட்சணை.
ஒரு கவிதை, பல லட்சங்கள் வாங்கி மணம் முடித்தவர் இன்று மேடை மேடையாய் முழங்குகிறார் வரதட்சணையை ஒழிப்போம் என்று ஏனெனில் அவர் மூன்று பெண்களின் தந்தை
ஒரு SMS joke உன் தந்தை ஏழை என்றால் அது உன் விதி- உன் மாமனார் ஏழை என்றால் அது உன் முட்டாள்தனம்
நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
சுல்தான் அங்கிள் என்னைப் பொறுத்தவரை... ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உண்மையில் கணவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் குடும்ப நிர்வாகம் என்பது பெண்கள் கையிதான் இருக்கிறது. எந்த வீட்டிலும் பாருங்கள் அந்தக் குடும்பத் தலைவியின் சொற்படிதானே குடும்பம் இயங்குகிறது. கணவனும் சரி, பிள்ளைகளும் சரி தாய்(மனைவி) சொல்லைத் தானே கேட்கிறார்கள். எங்காவது ஓரிரண்டு ஆண்கள் இருக்கலாம் எனக்கு சீதனம் வேண்டும் என்று கேட்பதற்கு, ஆனால் 90 வீதமும் தாய்தானே மகனுக்காக கேட்கிறார். அந்தத் தாய் மகனிடம் சீதனம் வாங்க வேண்டாம் குணமுள்ள பெண்தான் முக்கியம் எனக் கேட்டால் அதை அந்த மகன் தட்டுவாரா? எமது நாடுகளைப் பொறுத்தவரை தந்தை ஏதாவது சொன்னால்கூட தாயிடம் முறையிடுவார்கள் ஆனால் தாய் சொன்னால் அதை உடனடியாக ஏற்றுக் கொள்கிறார்கள்(பிள்ளைகள்).
போன கிழமை ஒருநாள் எனது கணவர் வேலையால் வந்ததும் எனக்கு சொன்னார்... ஏதோ தனது நண்பன், யாருக்கோ சொன்ன கதை, மாறி, இவரது காதிற்கு, வேறு விதமாக கேட்டிருக்கிறது , அது இவருக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது.. சற்று கோபமாகவும் இருந்தது. நான் அதற்குச் சொன்னேன் "அவர் அப்படி நிட்சயம் சொல்லியிருக்க மாட்டார்,,, ஏதோ கதை மாறுபட்டு உங்கள் காதிற்கு வந்திருக்கிறது, அதை பெரிது படுத்தாமல் மறந்துவிடுங்கள்" என்றேன். அவர்(hus) மேலே போய் உடை மாற்றி வந்து, எனக்குச் சொன்னார் " நீங்கள் அப்படிச் சொன்னது என் மனதிற்கு எவ்வளவோ ஆறுதலாக இருக்கிறது , ஒருவேளை நீங்கள், (மாறுதலாக)... அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்?, என என்னிடம் சொல்லியிருந்தால், எனக்கு இன்னும் கோபம் அதிகமாகியிருக்கும்" என்றார். இதைக் கேட்டதும் எனக்கு பெருமையாக இருந்தது. நான் சாதாரணமாகத்தான் சொன்னேன்.. ஆனால் அதனால் எவ்வளவு பெரிய மாற்றம் என.
எல்லாக் குடும்பங்களிலும் மனைவிதானே கணவனுக்கு மந்திரி. அதைக் கணவன்மார் கேட்கிறார்கள். ஆனால் நாம் சொல்வது செய்வது நல்ல விதமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மனைவி நினைத்தால் சீதனத்தை ஒழிக்கலாமா? முடியாதா? அங்கிள் உண்மையைச் சொல்லுங்கள், உங்கள் மனைவியின் நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்வீர்களா இல்லை நீங்கள் வைப்பதுதான் சட்டமா?
என் கணவர் வரதட்சணை வாங்க இல்லை. என் எல்லா சகோதரிகளின் கனவர்களும் அதேமாதிரி தான்.
உண்மைதான்,பெண்கள்தான் முக்கால்வாசி வரதட்சனைக்கு காரணம்,அதில் தேவையை விட அலட்டலும்,பெருமையும் தானிருக்கும். சமீபத்தில் எங்கள் மகன்கள் எல்லாம் ஆறு அடிக்கும் மேல் உயரம் என்பதால் அவர்களுக்கு பெரிய அளவில் கட்டில்கள் செய்தோம் வீட்டுக்கு புதுமனை புகுவிழாவிற்க்கு வந்த எங்கள் உறவுப் பெண்கள் கேட்ட கேள்வி என்னது இது மருமகள்கள் சீராக கட்டில் கொண்டு வருவதற்க்குள் நீங்களே செஞ்சுட்டிங்க என்பதுதான் அதற்க்கு என் கணவர் அளித்த பதில்"யார் வீட்டு பொண்ணோ கட்டில் கொண்டு வரும் வரை என் பையன் தரையிலதான் படுக்கணுமா?அவள் கொண்டுவரும் கட்டிலில் என்மகன் படுக்கலாம்,நாங்கள் செஞ்சு போட்ட கட்டிலில் மருமகள் படுத்தா தப்பா? என்று கேட்டார். அதற்க்கு ஊரில் இருக்கும் வழமைதானே,ஊரோடு ஒத்து போறதுதான் நல்லது என்கிறார்கள்
இவர்களும் திருந்த மாட்டார்கள்,மற்றவர்களையும் குறைசொல்வார்கள்
அன்பு சகோதரிகளுக்கு, வரதட்சணை என்பது கண்டிப்பாகா நிறுத்தப்பட வேண்டிய ஒன்று எங்கள் ஊரில் இது ரெம்பவும் அதிகமாக இருந்தது ஒரு காலம். ஆனால் அல்ஹம்துலில்லாஹ் இப்பொழுது யாரும் வாங்குவதும் இல்லை கொடுப்பதும் இல்லை.ஒட்டு மொத்தமாக வரதச்சணை வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டாதா என்று தெரியாது சிலர் வாங்குவதாகவும் கேள்வி. ஆனால் எனது கணவர் வாங்கவில்லை எனது சகோதரிக்கும் அப்படியே. அதே போல் நாங்களும் எனது தம்பிக்கும் வாங்க மாட்டோம் என்று சொல்லி தான் இப்ப நிச்சயதார்த்தம் பண்ணினோம். வீட்டில் இருக்கும் பெண்கள் நினைத்தால் கண்டிப்பாக இந்த வரதட்ச்சணை என்ற கொடிய நோயை விரட்டி விடலாம். ஒரு பெண்ணை திருமணம் முடிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் பெற்றவர்கள் என்று தெரியும் அப்படி இருக்க அவர்களிடத்தில் தான் பெற்ற பிள்ளையை விலை பேச எப்படி மனம் வருகிறது. யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என் மனதில் தோன்றிய ஒன்று இப்பொழுது நிறைய பிள்ளைகள் பெற்றவர்களை முதியோர் இல்லத்திற்க்கு அனுப்புவது அதிகமாகிவிட்டது நான் சந்தித்த எங்கள் சொந்தத்தில் கூட தாய்மார்களை மகன்கள் அதிகமாக மதிப்பதில்லை ஏன் என்றால் கல்யாணம் முடிந்த பின்னால் எப்படியாவது ஒரு சூழ்நிலையில் மனைவிமார்கள் கணவரிடம் ஆமா நீங்கள் என்னை வரதட்ச்சணை வாங்கிதானே கால்யாணம் செய்தீர்கள் என்று சொல்லிக்காட்டும் போது அந்த கணவனுக்கு எப்படி இருக்கும் நம்ம வீட்டில் இப்படி செய்துட்டாங்களே என்று தானே கோபம் வருகிறது பெற்றவர்கள் மீது. தாய்மார்கள் இடத்தில் அம்மா ஏன் இப்படி வரதட்சணை கேட்கிறீர்கள் என்று கல்யாணத்துக்கு முன்னாடியே எந்த ஒரு மகன்களும் சொல்வதில்லை ஏன் என்றால் ஆமா கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பெண்வீட்டுக்கு சப்போர்ட் பண்றியே என்கிற பேச்சு வரும் அதனால் தான் பிள்ளைகள் வாய்தொறப்பதில்லை என்று நினைக்கிறேன். இது வீட்டில் உள்ள பெண்களே நம்ம பசங்களுக்கு கொடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது என்று முடிவு எடுத்துவிட்டால் எவ்வளவு நல்லது. முதிர் கன்னிகளே இருக்கமாட்டார்கள். 35 வயது கடந்தும் எத்தனை பெண்களை இந்த வரதட்ச்சணையினால் கல்யாணம் முடித்துக்கொடுக்க முடியாமல் பெற்றவர்கள் தவிக்கிறார்கள்.என்னடா இவள் சொல்லவந்ததையே சொல்லலைன்னு யோசிக்கிறீங்களா கடைசியாக என்னுடைய கருத்து எல்லா பெண்களும் தங்கள் பிள்ளைகளை விற்க்கமாட்டோம் என்ற முடிவு எடுத்தாலே போதும். பிள்ளைகளும் கல்யாணம் என்கிற பேச்சு வர முன்னாடியே எனக்கு திருமணத்துக்கு வரதட்ச்சணை வாங்க மாட்டேன் என்று பெற்றோரிடம் சொல்லிவைப்பது நல்லது. நானும் எனது கணவரும் பேசி முடிவும் எடுத்துட்டோம் நம்ம பையனுக்கு வாங்க கூடாது என்று அதே போல பெண் பிள்ளை பெற்றாலும் வரதட்ச்சணை கொடுக்கவும் கூடாது என்று வரும் மருமகள் நம்ம பிள்ளையுடன் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கனும். அவள் சந்தோஷமில்லாமல் வரதட்ச்சணை கொடுத்து வந்த்தாள் அந்த குடும்பத்தின் மேல அவளுக்கு மதிப்பும் மரியாதையும் எப்படி ஏற்ப்படும்.அவளை பெற்றவர்கள் பட்ட வேதனை தானே அவளுக்கு நினைவுக்கு வரும். திருமணம் முடிந்து எத்தனை பெண்கள் சந்தோஷமாக முதலிரவு கொண்டாடி இருப்பார்கள் என்று தெரியாது எத்தனை கனவுகள், சந்தோஷத்துடன் ஆரம்பிக்க வேண்டிய திருமண வாழ்க்கை இந்த வரதட்ச்சணை வாங்குவதால் அவர்கள் வாழ்க்கைக்கு கவலையும்,கண்ணீரோடும் தான் அடியெடுத்து வைக்கிறார்கள். இனியும் இந்த கொடுமை தொடராமல் இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆதங்கம். நான் எழுதிய கருத்து யார் மனதையாவது வருத்தபட வைத்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
அன்புடன் கதீஜா.
அதிரா எனக்கு உங்கள் மேல் ரொம்ப மரியாதை வந்து விட்டது..நான் கூட அந்த நிலமையில் எப்படி சொல்லியிருப்பேன்னு தெரியாது...ஆனால் நீங்கள் நிதானமாக புத்திசாலித்தனமாக பேசியது கேட்டு நான் பெரும் யோசனையில் ஆழ்ந்து விட்டேன்..நான் அப்படி தான் சொல்லியிருப்பேனா என்று யோசிக்கிறேன்.
எல்லோரும் அருமையான கவிதைகளை அள்ளி வீசியிருக்கிரீர்கள்..சுல்தான் அண்ணா நீங்கள் எங்களுடன் பேசி உங்கள் அறிமுகம் கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.
உங்களின் நீண்ட கருத்து கண்டு மலைத்தேன்.என்னால் எழுத்துதவி மூலம் எழுத முடியவில்லை.எப்ப்டி என்று தெரிவிக்கவும். என்றென்றும் அன்புடன், ஆசியா உமர்.
பண ஆசையால் நடந்த ஒரு கதையை இங்கு சொல்கிறேன். எனது ஹஸ்'இன் நண்பர் அவரும் ஒரு டாக்டர்தான். வசதியானவர்கள்தான். இருப்பினும் பெற்றோருக்கு நிறைய ஆசை ,நிறைய சீதனம் வாங்க வேண்டுமென்று. அப்போ மகனுக்கு பெண் தேடினார்கள், மகனுக்கு தேவை அழகான பெண், தாய் தந்தையருக்கு தேவை பணம்.. இரண்டும் பொருந்திவருவது கொஞ்சம் கஸ்டம்தானே... அந்த நண்பரே என் ஹஸ் க்கு சொல்லியிருக்கிறார் எனக்குப் பெண் பிடித்திருக்கிறது ஆனால் என் பெற்றோர் சீதனம் போதாதென்று குழப்பிவிட்டார்கள் என.
இப்படி இருக்கும்போது,ஓரிடத்தில் பொருந்திவிட்டது. பெண்ணும் பறவாயில்லை,, சீதனம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கொடுத்தார்கள். பெண் வீட்டார் வசதியானவர்கள், ஒரே ஒரு பெண்தான், அண்ணன்மார்கள் இருந்தார்கள். எப்பவும் எமது ஊரில் அல்லது அயலூரில் தானே திருமணம் பேசுவார்கள் ஏனெனில் விசாரிப்பது கஸ்டமென்று. இது பெண் வேறு ஊர். அதனால் யாரும் தெரிந்தவர்கள் இருக்கவில்லை விசாரிக்க. புறோக்கரை நம்பி ஒத்துக்கொண்டார்கள். city இல் வீடும் வாங்கிக் கொடுத்தார்கள்.
மாப்பிளை வீட்டாருக்கு தொகை போடாது செக்(blank cheque) கொடுத்தார்கள் திருமணச் செலவிற்கு.(பெண் வீட்டினர் வசதி என்றால் மாப்பிள்ளை நல்ல தொழில், குணம் என்றால் தவறிவிடக் கூடாதென இப்படியெல்லாம் நடப்பதுதான்) இருப்பினும் மயங்கி விடக் கூடாதுதானே. விசாரிக்க வேண்டும்.
பொருந்தியவுடன் பெண்வீட்டினர் சொன்னார்கள், ஒரு மாதத்தினுள் நாள் வைக்கவேண்டும் ஏனெனில் வெளிநாட்டிலிருந்து வருகிறார்கள். அவர்களால் திரும்ப வர முடியாதென்று. இலங்கையில் ஒரு வழக்கம் இருக்கிறது. திருமணம் பொருந்திவிட்டால், முதலில் எழுத்து வைப்பார்கள். பின்னர் 6 மாதமாவது இடைவெளிவிட்டுதான் திருமணம் நாள் குறிப்பர்கள். அந்த இடைவெளியில் மாப்பிள்ளை பெண்வீட்டிற்கு வந்து கதைத்துப் போவார். அப்போ ஒரு புரிந்துணர்வும் வந்துவிடும், பிடிக்காது போனாலும் குழப்பபட்டுவிடும்.
இப்போ வெளிநாட்டுத் திருமணங்களால் எல்லாம் fast food போலாகிவிட்டது.
இந்த நண்பர் எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொண்டார். பெண்வீட்டிற்கு போனபோது பெண்ணுடன் தனியே கதைக்க பெண்ணின் அண்ணா வசதி செய்யவில்லை. தானே முன்னின்று கதைத்து அனுப்பிவிடுவாராம். குறுகிய காலத்தில் திருமணம் என்பதால் அடிக்கடி போகவும் இவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இந்த நண்பர் வடிவானவ்ர், அமைதியானவர், நல்ல குணம், அதனாலோ என்னவோ எதையும் பெரிதுபடுத்தவில்லை.
திருமணத்திற்கு நாங்களும் போயிருந்தோம். அப்போ அந்தப் பெண்ணின் பார்வை சிரிப்பு எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நானும் என் ஹஸ்'ம் இதுபற்றி எமக்குள் கதைத்துக் கொண்டோம். திருமணத்தின் பின் தேனிலவு எல்லாம் பெரிய ஹோட்டலில் ஒழுங்கு படுத்திக்கொடுத்தார்கள். 3 நாட்களின் பின் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்துவிட்டார்கள். மாப்பிள்ளை வீட்டில் பெரிய வரவேற்பு ஏற்பாடு பண்ணினார்கள். காட் அடித்துக் கொடுத்தார்கள்.(மாப்பிள்ளைவீட்ட ார்).
பெண்வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீடு தூரம். இரவு வந்தார்கள் அடுத்தநாள் வரவேற்பு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது, தனது ஹொஸ்பிட்டல் ஆட்களெல்லோரையும் அழைத்திருந்தார். அப்போ இரவு பெண் சாப்பிட மறுத்துவிட்டாராம். பின் படுக்கவில்லையாம் விழித்துக்கொண்டிருந்தாவாம். அப்போ நண்பரும் படுக்கவில்லையாம். சாமமாகிவிட்டது திடீரென ஓடிவந்து இவரது தோழில் கடித்துவிட்டார். ரத்தம் வரத்தொடங்கிவிட்டதாம். இவர் சமாளிப்பதற்கிடையில் மீண்டும் கடிக்க வர இவர் அடித்திருக்கிறார். அப்படியே படுத்து உறங்கிவிட்டார்( பெண்).
விடியும் வரை நண்பர் விழித்திருந்து விடிந்ததும் பெண்ணின் அண்ணனை வரச்சொல்லியிருக்கிறார். காட் கொடுத்தவருக்கெல்லாம் வரவேண்டாமென போன் பண்ணி பந்தல் எல்லாம் கலைத்து. பெரிய அலங்கோலம். பின் அண்ணன் வந்தாராம் என் தங்கைக்கு எந்த வருத்தமும் இல்லை இது என்ன புதுக் கதை எனக் கூறி கூட்டிப்போய் விட்டார். அந்தப் பெண்ணிற்கு கடுமையான மனநோயாம் மருந்து கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். திருMஅணத்தின் பின் தனியே கூப்பிட்டு மருந்து கொடுக்க முடியவில்லை. மாப்பிள்ளை டாக்டர் தானே இனி சமாளிப்பார் என நினைத்துவிட்டார்கள். அத்துடன் டிவோஸ் எடுக்க முடியவில்லை. நண்பரும் அப்படியே இருக்கிறார். ஆனால் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து வளர்க்கிறாவாம். பண ஆசையால் அவரது வாழ்க்கை பாழாகி விட்டது.
விடியும் வரை நண்பர் விழித்திருந்து விடிந்ததும் பெண்ணின் அண்ணனை வரச்சொல்லியிருக்கிறார். காட் கொடுத்தவருக்கெல்லாம் வரவேண்டாமென போன் பண்ணி பந்தல் எல்லாம் கலைத்து. பெரிய அலங்கோலம். பின் அண்ணன் வந்தாராம் என் தங்கைக்கு எந்த வருத்தமும் இல்லை இது என்ன புதுக் கதை எனக் கூறி கூட்டிப்போய் விட்டார். அந்தப் பெண்ணிற்கு கடுமையான மனநோயாம் மருந்து கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். திருமணத்தின் பின் தனியே கூப்பிட்டு மருந்து கொடுக்க முடியவில்லை. மாப்பிள்ளை டாக்டர் தானே இனி சமாளிப்பார் என நினைத்துவிட்டார்கள். அத்துடன் டிவோஸ் எடுக்க முடியவில்லை. நண்பரும் அப்படியே இருக்கிறார். ஆனால் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து வளர்க்கிறாவாம். பண ஆசையால் அவரது வாழ்க்கை பாழாகி விட்டது.
Excellent poem. I really enjoyed each word. Thank you.
சர்மி, நேற்று உங்கள் பெயரை நான் கவனிக்கவில்லை, சுபாவிற்கும் சுல்தான் அங்கிளுக்கும்தான் கவிதை நல்லதென்று சொன்னேன் இப்போதான் பார்த்தேன் நீங்களும் அனுப்பியுள்ளீர்கள்...மன்னித்து க் கொள்ளுங்கள்..உங்கள் கவிதையும் அருமை..
வரதட்சனை பெண்களை பாதிக்கிறது என்று நாம் பேசும் அதே சமயம் அதே வரதட்சனை சில பெண்களை சொந்த காலில் நிற்க வைத்தும் இருக்கிறது.
தந்தையில்லாத என்னுடைய தோழி ஒருவருக்கு நாற்பது பவுன் போட்டு திருமணம் ஆனது.நான்கு வருடம் சந்தோஷமாக சென்ற வாழ்வில் சோதனை வந்தது,தன் கணவருக்கு பிசினஸில் நஷ்டம் வந்ததும் அவள் நகைகளை தந்து உதவினாள்.இது அவள் பிற்ந்தவீட்டுக்கும் தெரியும்.திடீரென ஒர் நாள் அவள் கணவர் சாலை விபத்தில் இறக்க,இரண்டு குழந்தைகளுடன் தனியாக நின்றாள்.மாமியார் வீட்டில் என் மகனே போயாச்சு இனி இவளோ இவள் பெத்த பிள்ளைகளோ எங்களுக்கு தேவையில்லை என, அண்ணனும்,அண்ணியும் நாங்கள் தந்த நகையும் பிடுங்கிட்டீங்க,ஒண்ணுக்கு ரெண்டு குழந்தையுமாச்சு,இதுங்க படிப்பு செலவு,துணிமணி,மருத்துவசெலவு இதெல்லாம் யார் பொறுப்பு என்று ஒதுங்கிவிட ,அவள் அம்மாவோ மகளின் நிலமை கண்டு அழ,என் தோழி உறுதியாக ஒரு முடிவு எடுத்தாள்.ஒரு வாரம் முன்பு தான் அவள் கணவர் கட்டிய சீட்டு ஒன்று முடிந்து,நகைகளையும் மீட்டு இருந்தார். அந்த நகைகளை விற்று துரைபாக்கம் தாண்டி ஒரு பெட்ரூம் பிளாட்டை வாங்கி குடியேறினாள்.தன் தாயாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, ஐ டி கம்பெனியில் வேலை செய்யும் பத்து பேருக்கு,முன்றுவேளை உணவு கேரியர் அனுப்ப ஆர்டர் பிடித்தாள்.சப்பாத்தி சப்ஜி தேவை என்று கேட்பவர்களுக்கு தயாரித்து தந்தாள்.மாதம் பத்தாயிரம் குறையாமல் சம்பாதித்து சொந்தகாலில் தைரியமாக நிற்கிறாள்.
இது அனைத்துக்கும் உதவியது அவளுக்கு கல்யாணத்தில் தரப்பட்ட நகைகள்தான்.அது இல்லையென்றால் மாமியார் வீட்டிலோ ,அண்ணன் வீட்டிலோ தன் குழந்தைகளுடன் ஒரு அடிமை வாழ்வுதான் வாழ்ந்திருக்க வேண்டும். பெண்ணுக்கு சொத்துரிமை இல்லாதபோது வந்த வழக்கம் இந்த சீர்வரிசை.பேராசை,பெருமை இவற்றிற்காக இல்லாமல் பெண்ணின் எதிர்கால பாதுகாப்பிற்காக பெண்ணின் பெற்றோர்கள் மனமுவந்து தருவது ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்றுதான். ஆனால் இதையே காரணமாக வைத்து மணமகனின் நெற்றியில் ஒட்டாத குறையாக 100 பவுன்2லட்சரூபாய் சீர்வரிசை,கார்,வீடு என்பது மிக மிக கேவலமான ஒன்று. இதை போன்றவர்களு ஆண் குழந்தை பிறந்தவுடன் ,தொட்டிலில் குழந்தையை பார்க்கும்போது அதன் அழகிய முகம் தெரியுமா அல்லது எதிர்காலத்தில் வசுலாகப்போகும் சீர்வரிசைகள் கட்டு கட்டாக பணமாக தொட்டில் முழுவதும் தெரியுமா கடவுளுக்குதான் வெளிச்சம்
பானு சபாஷ்..என் அபிப்ராயமும் அது தான்..
சுல்தான் அண்ணா, உங்கள் பதிவை பார்த்தேன்,பதில் அளிக்க எண்ணியிருந்தேன்,ஆனால் என் அறுசுவை வாழ்க்கையிலேயே முதல் முறையாக வரதட்சனைக்காகதான் பெரிய பதிவு டைப் பண்ணினேன்,அதனால் டயர்ட் ஆகி போயிட்டேன்(சும்மா ஜோக்கு)
ஒரு பதிவில் என் மனைவியே அறிவுரை சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியிருந்தீர்கள்,உண்மையிலேயே அதற்க்காகவே உங்களைப் பாராட்டி ஒரு பதிவு போடவேண்டும் என்று இருந்தேன்.பெண்களின் சொல்லுக்கு மாற்றாக நடப்பது சுன்னத்து என்று கூறும் முஸ்லீம் ஆண்கள் மத்தியில் மனைவியின் கருத்துக்கு மதிப்பளிக்கும் நீங்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்.
அண்ணா எங்களுக்கு பூர்வீகம் கமுதி.இருப்பது சென்னையில் திநகரில்,என் கணவ்ர் ரங்கனாதன் தெருவில் கடை நடத்தி வருகிறார்.
உங்கள் கவிதைகள் படித்தேன்,மிகவும் அருமை.
சுல்தான்ஜி,
இடத்து பக்கத்தில் மேலே சமீபத்திய பதிவுகள் என்று ஒரு லின்க் இருக்கும். அதை க்லிக் செய்தால், உங்களுக்கு வந்த சமீபத்திய பதிவுகளை பார்க்கலாம் :-)
அன்புடன் ஹர்ஷினி :)
என்னப்பா தளிகா, பானு(அக்கா) சீதனம் கொடுப்பது தவறு.... சரி.... என்றெல்லாம் சாலமன் பாப்பையா மாதிரி (இருபக்கமும்)தீர்ப்புக் கூறுறீங்க.
பெற்றோர் தமக்கென எதையும் வைத்திருப்பதில்லை, எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கே கொடுத்துவிடுவார்கள். அவர்களாகக் கொடுப்பது.... அன்பளிப்பு அல்லது நன்கொடை என்று கூடச் சொல்லலாம். ஆனால் கொடுமை எனக் கதைப்பது பேரம் பேசி வாங்குவதைத்தானே சொல்கிறோம். அதுதானே வேண்டாமென்கிறோம். பிள்ளை நல்லா இருக்கவேண்டுமென்று கேட்டதையெல்லாம் கஸ்டப்பட்டு, கடன்பட்டு, இருப்பதையெல்லாம் விற்றுக் கொடுத்துவிட்டு கலங்குகிறார்களே அதுதான் கொடுமை. ஆனால் இதுவெல்லாம் இப்போ வெகுவாக குறைந்துவிட்டது. இலங்கையைப் பொறுத்தவரை முக்கால்வாசியும் போயேவிட்டது. அதற்கொருகாரணம் வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரித்து விட்டதாலும் எனக்கூறலாம். வெளிநாட்டுமாப்பிள்ளைகள் சீதனம் கேட்பதில்லை.. கேட்டால் மரியாதைக் குறைவு என்றாகிவிட்டது.
இருப்பினும் எனக்கொரு இந்திய நண்பர் உள்ளார் அவரிடம் இதுபற்றிக் கதைத்தபோது சொன்னார்.. எங்கள் கிராமப்புறங்களில் நடப்பவை உங்களுக்குத் தெரியாது... மகளிற்கு சீதனம் கொடுத்து திருமணம் முடித்து, பின்னர் மகள் தாய்வீடு வருகிறபோது கணவன் இல்லாத சமயம் பார்த்து தாய், மகளுக்கு... திருமணத்தால் தந்தை பட்ட கடனையும் அதனால் அவர் பட்டுக்கொண்டிருக்கும் அவமானங்களையும் சொல்லச் சொல்ல குடும்பமே அழுகின்ற கதைகள் எத்தனையோ இருக்கிறதென்று. இதனைக்கேட்க என் இதயத்தில் ஏதோ செய்தது... இப்படியான நிலைமைதான் யாருக்கும் வரக்கூடாது.
ஆனால் வருங்காலத்தில் இவையெல்லாம் ஒழிந்துவிடும். இங்கு எனது உறவினர் ஒருவர் இங்கேயே பிறந்து வளர்ந்தவர் (14 வயது) , அவர்கள் வீட்டில் வேறு யாருக்கோ திருமணம் பேசி பெண்பார்க்க படம் கொடுத்திருக்கிறார்கள். அதை பார்த்த இந்தத்தம்பி கேட்டாராம்.. புறப்போசல் மரீச் என்றால் என்ன? அது என்ன பொம்பிளை பார்ப்பது?.. ஏன் இன்னமும் மீற் பண்ணாமலா திருமணம்? இப்படியெல்லாம் கேட்கிறாராம்... இதையெல்லாம் பார்க்கிறபோது வருங்காலத் தலைமுறையினர் இதை அறவே ஒழித்துவிடுவார்கள் என்றே நான் நம்புகிறேன்.
வணக்கம் நான் புதிய மெம்பர், உங்களுடைய தலைப்பு பிடிச்சிருக்கு, என்னுடைய சிந்தனை
சில்லரைகளை கொட்டி சிறை பட்டுச் செல்லும் அப்பாவி !!!