topic_image


பழமொழிகள், கணக்குகளை இங்கே கேட்போம்.


எல்லோரும் தூக்கமா? வேண்டாமே...
ஏப்ரல் 9, 2008 - 6:23am - வழங்கியவர் அதிரா

எல்லோரும் தூக்கமா? வேண்டாமே...
பகலில் தூக்கம் ஆகாது. குழந்தைகளைத் தூங்க வையுங்கள்.. அதனால் அவர்கள் நன்கு வளர்வார்கள், பொலிவாக இருப்பார்கள், சந்தோசமாக இருப்பார்கள், ஆனால் தாய்மார்களே!! நீங்கள் தூங்கிட வேண்டாம் பின்னர் யானைக்குட்டிபோல் ஆகிவிடுவீர்கள். மூளையை அப்படியே வைத்திருந்தால் அதுகூடத் துருப்பிடித்துவிடும் எனவே கொஞ்சமாவது யூஸ் பண்ணி என் வினாவிற்கு விடை தாருங்கள்.

இது என் அம்மம்மா எனக்குச் சொன்ன விடுகதை, கொஞ்சம் சிந்திக்க வேண்டும்....
"கறியைக் கறி தின்ன, கறி உடையான் சூ....சூ.... என்றதும்,
கறி முறியப் பாய்ஞ்சதாம் கறி"

எனக்கு பேசிட வேண்டாம், சிந்தியுங்கள் ...

எங்கே சுல்தான் அங்கிள் கணக்குகளைக் கொண்டுவாருங்கள்.... அஸ்மா தங்களுக்குத்தான் கணக்குப் பிடிக்குமே அதற்கு மட்டும்தானே வருகிறீர்கள்... எல்லோரும் வாருங்கள், பதிலையும் சொல்லுங்கள் உங்களுக்குத் தெரிந்த விடுகதையையும் கேளுங்கள்...... பகலில் தூங்க வேண்டாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா
ஏப்ரல் 9, 2008 - 6:51am - வழங்கியவர் Nandhini29

நல்ல யோசனை அதிரா. மூளைக்கு வேலை. ஆனால் அதிரா இதை பார்த்தால் ஏதோ திருக்குறள் போல இருக்கு. அது என்ன துப்பார்க்கு துப்பாய அந்த குறள் போல அதிரா.

இதோ பழமொழி
ஏப்ரல் 9, 2008 - 7:00am - வழங்கியவர் malathi

பழமொழிகளை நான் ஆரம்பித்து வைக்கவா?

1. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

2.அழுதாலும் தொழுதாலும் அவதான் பிள்ளை பெறனும்.

3.அஞ்சிலே வளையாதது அம்பதில் வளையுமா?

4. சிறுவர் இட்ட வெள்ளாமை விளஞ்சாலும் வீடு வந்து சேராது.

5. அம்மாவை ஆத்தங்கரையில் பார்த்தா பிள்ளையை வீட்டுல போய் பார்க்கவேண்டாம்.

6. நூலைப்போல சேலை தாயை போல பிள்ளை.

7. உரலு போயி மத்தளத்துக்கிட்ட முறையிட்டதாம்.

8. அரை காசு உத்தியோகமாக இருந்தாலும் அரசாங்க உத்தியோகமாக இருக்கனும்.

இன்னும் யோசித்து பிறகு எழுதுகிறேன்.

வந்தேன் அதிரா....!
ஏப்ரல் 9, 2008 - 7:52am - வழங்கியவர் Asma

என்ன அதிரா...எப்படியிருக்கீங்க? நான் மதியம் தூங்குவதில்லைப்பா! இப்பவே இந்த உடம்பை தூக்கிட்டு நடக்கமுடியல...:) கொஞ்சம் வெளி வேலைகள் அதிகமானதால், அலைச்சல்! அறுசுவைக்காக 2 பதிவுகள் டைப் பண்ணியதில், ஒன்று முழுமை பெறாமல் உள்ளது. அதை முடித்துவிட்டு பதியலாம் என்றிருந்தேன். அதற்குள் உங்கள் அழைப்பு... :) பதில் சொல்லிட்டு போகலாமே என்று வந்தேன். உங்களின் வினாவிற்கு பதில் சொல்லவா? அல்லது பொறுத்திருக்கணுமா? ஓ.கே. சொன்ன பிறகு, அடுத்த பதிவில் விடையளிக்கிறேன்.

ஐயையோ.....
ஏப்ரல் 9, 2008 - 8:40am - வழங்கியவர் அதிரா

ஐயையோ..... நந்தினி, மாலதியக்கா... என்னை கொஞ்சம் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக் கொள்ளுங்க... என்னுடையது பழமொழி இல்லை..... விடுகதை.... பதில் தெரிஞ்சால் சொல்லுங்க. மாலதியக்கா உங்கள் பழமொழிகள் அருமை... இன்னும் எழுதுங்க தெரிஞ்சவங்களெல்லாம் விடுகதை, பழமொழி எல்லாமே எழுதுங்க.

அஸ்மா... நான் சொன்னது சரிதான், போட்டி என்றவுடன் உடனேயே வந்திட்டீங்க... இது கொஞ்சம் சிந்திக்க கஸ்டம் அதனால் உடனே பதில் சொல்லுங்க.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சில பழமொழிகள்
ஏப்ரல் 9, 2008 - 9:01am - வழங்கியவர் அதிரா

என் மனதில் உள்ள சில பழமொழிகள்

* பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை
* ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன்பிள்ளை தானே வளரும்----- இதற்கு ஒரு ஜோக் இருக்கிறது இதை இப்படி மாற்றியிருக்கிறார்கள்.....
"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , உங்க பிள்ளையை என்ன கோடைக்கானலா வளர்க்கும்"-- இப்படியெல்லாம் பழமொழிகளைக் கொல்கிறார்கள்.

*முற்பகல் செய்யப் பிற்பகல் விளையும்
*யானைக்கும் அடி சறுக்கும்
*எறும்பூரக் கற்குழியும்
*தென்னையில் தேள் கொட்ட, பனையில் நெறி ஏறிக்கொண்டதாம்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆ அங்கிள் கரெக்டா
ஏப்ரல் 9, 2008 - 9:05am - வழங்கியவர் அதிரா

ஆ அங்கிள் கரெக்டா சொல்லிட்டீங்களே... நான் நினைத்தேன் ஒருவருக்கும் தெரியாதென்று, சரி இந்தப் பதிலையும் சொன்னால் பட்டம் தருவேன். என்ன பட்டம் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்,

ஓடுவான் ஆடுவான் கந்தப்பன், ஒற்றைக்காலில் நிற்பான் கந்தப்பன் அவன் யார்?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்றைய விடுகதை வித்தகர்
ஏப்ரல் 9, 2008 - 9:15am - வழங்கியவர் அதிரா

மாடேறி மேயாத மகிழம்பூத் திட்டியிலே, மண் ஏறி மடி குடிக்கிறது--- இது என்ன?

அண்ணனுக்கு எட்டும் தம்பிக்கு எட்டாது அது என்ன?

இந்த நான்கு விடுகதைக்கும் யார் முதலில் விடையளிக்கிறார்களோ அவர்கள் எமது இன்றைய விடுகதை வித்தகர் பட்டத்தைப் பெறுவார்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அங்கிள் உங்கள்
ஏப்ரல் 9, 2008 - 9:21am - வழங்கியவர் அதிரா

அங்கிள் உங்கள் பதிலும் பொருந்துகிறது, ஆனால் எனது விடை வேறு வைத்திருக்கிறேன்.

ஆண் பற்றி பழமொழி சொல்கிறீர்கள், பெண் புத்தி, பின் புத்தி தெரியுமோ..... அதாவது ஊசி போல் கூர்மையானது..... ஹா......ஹா.....ஹா.......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மீண்டும் பிஸி
ஏப்ரல் 9, 2008 - 9:47am - வழங்கியவர் Asma

அதிரா! மீண்டும் கொஞ்சம் பிஸி! வருவதற்குள் சுல்தான் சார் பதில் சொல்லியாச்சு! என் பதிலும் அதுதான், அதற்கு வேற பதில் தெரியாது எனக்கு.

ஓடுவான் ஆடுவான் கந்தப்பன், ஒற்றைக்காலில் நிற்பான் கந்தப்பன் - பம்பரம். சரியா?

அண்ணனுக்கு எட்டும் தம்பிக்கு எட்டாது அது என்ன? - உதடுகள்

3 க்குத்தான் தெரியும்
ஏப்ரல் 9, 2008 - 9:47am - வழங்கியவர் அதிரா

கண் கலங்கும்.... வெங்காயம்

முக்கண்ணன் ------- தேங்காய்

சட்டை கழட்டுவான் --- பாம்பு

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஏப்ரல் 9, 2008 - 9:52am - வழங்கியவர் arthi

இன்னும்.....

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

அடி உதவுவது போல் அண்ணண் தம்பி கூட உதவ மாட்டர்கள்

சுல்தான்
ஏப்ரல் 9, 2008 - 9:53am - வழங்கியவர் Asma

சுல்தான் சார், பதில்கள்!

அதிரா சொன்னது போக மீதி பதில்கள்:-

வாயை பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்? - போஸ்ட் பாக்ஸ்
அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது? - மாடு

அங்கிள் , அஸ்மா
ஏப்ரல் 9, 2008 - 9:57am - வழங்கியவர் அதிரா

அங்கிள் பட்டமெல்லாம் இல்லை. தரமாட்டேன். சரி எனது "மாடெறி...." இதற்குச் சொன்னால் தருகிறேன்...

அஸ்மா உங்கள் பதிலும் சரி,
ஆனால் எனக்குத் தெரிந்த பதில் கதவு. பறவாயில்லை. அந்த விடுகதைக்கு 3 பதில்கள் பொருந்துகிறது... பட்டம், பம்பரம், கதவு.
அது என்ன அப்படி பிஸி நானும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளலாமா?
அங்கிள் புரிந்ததா? அண்ணன் என்று சொல்லுங்கள் உதடுகள் முட்டாது... தம்பி என்றால் முட்டும் அதேதான். என்ன பழமொழி சொல்லி உங்களை விழுத்தலாம் என யோசிக்கிறேன்... ஒன்றும் வரமாட்டேன் என்கிறதே... அவசரத்திற்கு...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

-
ஏப்ரல் 9, 2008 - 9:58am - வழங்கியவர் arthi

தையல் சொல் கேளேல்

என்ன ஆர்த்தி இப்படி
ஏப்ரல் 9, 2008 - 10:03am - வழங்கியவர் அதிரா

என்ன ஆர்த்தி இப்படி சொல்லிட்டீங்க, நான் அங்கிளை விழுத்த பழமொழி யோசிக்கிறேன் நீங்கள் "தையல் சொல் கேளேல்" என்றால் பெண்ணின் சொல்லைக் கேளாதே என்றுதானே அர்த்தம்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தையல் சொல்
ஏப்ரல் 9, 2008 - 10:05am - வழங்கியவர் arthi

தையல் சொல் கேளேல்
இதன் பொருள்:- தையல் என்றால் பெண். கேளேல் என்றால் கேட்டு நட என்று அர்த்தம். அதாவது பெண்களின் சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்று அர்த்தம்.

கேளேல்
ஏப்ரல் 9, 2008 - 10:11am - வழங்கியவர் arthi

கேளேல் என்பதை பிரிக்கணும் "கேள்+ஏல்" இதை சொன்னது ஔவையார். அவஙக்க அப்படி சொல்ல மாட்டாங்க தானே. என்ன அதிரா?

ஓ அப்படியா
ஏப்ரல் 9, 2008 - 10:14am - வழங்கியவர் அதிரா

ஓ அப்படியா ஆர்த்தி? இப்பதான் நெஞ்சில் தண்ணி வந்தது போல் இருக்கிறது, இனி என்ன சொல்லப் போகிறார் அங்கிள்.

ஒரு கதை சொல்கிறேன்.

ஊரில் ஒருநாள் வானில் போனபோது நடந்தது. பொது வாகனங்களில் பயணம் செய்கிறபோது எப்பவும் பெண்கள், குழந்தையுடன் ஏறுபவர்கள், வயோதிபருக்கு... யாராவது எழுந்து இடம் கொடுப்பது வழக்கம். அப்போ ஒரு வானில் நிறைய சனம் முட்டிவிட்டது. ஒரு ஓரளவு வயதான பெண் ஏறினார், நிற்க முடியாமல் கஸ்டப்பட்டார். அவருக்கு பக்கத்து சீற்றில் இருந்தவர் எழுந்து இடம் கொடுக்கவில்லை. அப்போ நின்றவர்களில் ஒருவர் சொன்னார்-- " பெண் என்றால் பேயும் இரங்குமே" நீங்கள் எழுந்து இடம் கொடுக்காமல் இருக்கிறீர்களே என்றார், அந்த இருந்தவரைப் பார்த்து. இருந்தவருக்குக் கோபம் வந்துவிட்டது, அவர் உடனே சொன்னார்... "அது பேய்தான் இரங்கும், நான் இரங்க மாட்டேன் " என்று... வானில் ஒரே சிரிப்பாக இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்னுமொன்று
ஏப்ரல் 9, 2008 - 11:08am - வழங்கியவர் அதிரா

என்னுடைய விடுகதைக்கு ( மாடேறி.....) நாளை பதில் தருகிறேன். வேறு யாராவது சொல்கிறார்களா என்று பார்ப்போம்.

இன்னுமொன்று, முடிந்தால் சொல்லுங்கள்,

செத்த கிழவியைக் காவ 5 பேர் வந்தார்களாம், 2 பேர் காவிப்போனார்களாம், மூவர் சும்மாவே திரும்பிப்போனார்களாம்.... இது என்ன?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

யோசித்து சொல்கிறேன்
ஏப்ரல் 9, 2008 - 11:34am - வழங்கியவர் Asma

அதிரா! உங்களின், "மாடேறி..." விடுகதையை யோசித்து,யோசித்து மண்டை சூடேறிவிட்டது :-) சுல்தான் சார் வேற 'நீங்க தான் வித்தகர் ஆச்சே!'ன்னு ஒரு போடு போட்டுவிட்டார். :( இருந்தாலும் அதற்கான விடை, 'கரையான் புற்று + பாம்பு'- இப்படி இருக்குமான்னு நினைத்தேன். சரியாக இருந்தால், சொல்லிடுங்க. இல்லாவிட்டால் மீண்டும் யோசிக்கிறேன். அதுவரை என் விடுகதைகள்:

1.எரிப்பான், எரிய மாட்டான். அவன் யார்?

2.கண்ணுக்குத் தெரியாதவன், உயிருக்கு உகந்தவன். அவன் யார்?

3.விடுமுறை இல்லாத கடை எது?

4.காத தூரம் போனாலும், கைக்கடுக்காத சுமை. என்ன சுமை?

5.உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?

தெரிந்தவர்கள் சொல்லலாமே....!

அஸ்மா,
ஏப்ரல் 9, 2008 - 12:03pm - வழங்கியவர் அதிரா

அஸ்மா, பதில் தவறு.

உங்களுக்கு பதில்

1.எரிப்பான், எரிய மாட்டான். அவன் யார்?--சூரியன்

2.கண்ணுக்குத் தெரியாதவன், உயிருக்கு உகந்தவன். அவன் யார்?--- காற்று
5. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?--தீக்குச்சி

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கேளேல்
ஏப்ரல் 9, 2008 - 12:05pm - வழங்கியவர் thalika

கேளேல் என்றால் கேட்காதே என்று அர்த்தம்
ஏனென்றால் சொல்லேல்,கைவிடேல் இப்படி ஆத்திச்சூடியில்முடியும் அதற்கு சொலி விடாதே ,செய்யாது விடாதே என்று பொருள் தரும்பொழுது கேளேல் என்றால் கேட்காதே என்று வருமென்று நானே சொல்லிக் கொள்கிறேன்

மாடு மச்சான்.... புது மொழி
ஏப்ரல் 9, 2008 - 12:26pm - வழங்கியவர் இலா

கேட்கிற்வன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்ப்ளேன் ஏறுமாம்.......

ஏர் ஓட்டுறவன் ஏமாந்தவனாக இருந்தால் மாடு மச்சான்குமாம்

இது எப்போவோ ரேடியோவில் கேட்டது

பழமொழிகள்
ஏப்ரல் 9, 2008 - 12:41pm - வழங்கியவர் seyedkatheeja

உழைப்பு இன்றி ஊதியம் இல்லை.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

போன வினாடி திரும்பாது.

குரைக்கிற நாய் கடிக்காது.

இனம் இனத்தை சேரும்.

தன் வீட்டில் எலியும் புலி.

விதை விதைப்பவன் விதை அறுப்பான்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு.

ஆபத்தில் உதவுபவன் நண்பன்.

இருகை சேர்ந்தால் ஓசை வரும்.

மொளனம் சம்மததிற்க்கு அடையாளம்.

மனக்கோட்டை வாழ்க்கைக்கு உதவாது.

உண்மையே வெல்லும்.

கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேப்பையிலும் நெய்வடியுமாம்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.

கேளேல்
ஏப்ரல் 9, 2008 - 1:20pm - வழங்கியவர் vinnie

தளிகா சொன்னது சரியே. கேளேல் என்றால் கேட்காதே என்றுதான் பொருள். ஆனால் அவ்வையார் சொன்ன 'தையல் சொல் கேளேல்' என்பதன் பொருளை யாராவது விளக்குங்களேன்.

இலா சொல்லியுள்ள புது மொழிகள் போல இந்த கால பேச்சு முறைக்கும், வாழ்க்கை முறைக்கும் ஒத்து வரும் புது மொழிகளையும் எடுத்து விடுங்க.

hello,அதிரா
ஏப்ரல் 9, 2008 - 1:43pm - வழங்கியவர் anjali73

hello,அதிரா உங்கள் மெயில் கிடைத்தது.ஆலோசனைக்கு நன்றி!ஒரு புதிர் விடைதெரிந்தால் கூறவும்?

அட்டைக்கு ஆயிரம் கண்
முட்டைக்கு மூன்று கண்
அது என்ன?

பழமொழிகளை
ஏப்ரல் 9, 2008 - 1:46pm - வழங்கியவர் அதிரா

உண்மையில் இங்கு புதுப் புது பழமொழிகளைப் பார்க்கிறபோது, சந்தோசமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது.

தளிகா, வினி நீங்கள் சொல்வதுபோல்தான் நானும் எண்ணினேன். இப்போ நினைக்கிறேன். ஒளவை எம்மை விட்டுக் கொடுக்க மாட்டார். அதனால் அந்த வாக்கியம் -- " தையல் சொல் கேளீர்" என்று இருக்குமோ? கேளீர் என்றால் கேளுங்கள் என்றுதானே அர்த்தம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வானதி, ருபீனா, அதிரா!
ஏப்ரல் 9, 2008 - 2:42pm - வழங்கியவர் Asma

'தையல் சொல் கேளேல்'

இதற்குப் பொருள் பெண் சொல்வதைக் கேட்காதே என்பது கிடையாது!

"தையல் சொல் கேள் ஏல்" என்று பிரித்துப் படிக்கவேண்டும் என்றும், பெண்களின் நல்ல சொல் கேட்டு அதன்படி நட என்று அதற்கு பொருள்படும் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், நான் படித்ததில் அதைவிட மிகச் சரியானதாக எனக்கு தோன்றியதை இங்கே கூறுகிறேன்.

அதாவது பெண்களின் பருவத்தை 5 வயது முதல் 40 வயது வரை 7 பருவங்களாக அந்த காலத்தில் பிரித்து வைத்திருந்தனர்.

1) 5 முதல் 7 வயது வரை - 'பேதை'
2) 8 முதல் 11 வயது வரை - 'பெதும்பை'
3) 12 முதல் 13 வயது வரை - 'மங்கை'
4) 14 முதல் 19 வயது வரை - 'மடந்தை'
5) 20 முதல் 25 வயது வரை - 'அரிவை'
6) 26 முதல் 31 வயது வரை - 'தெரிவை'
7) 32 முதல் 40 வயது வரை - 'பேரிளம்'

இவற்றில், 5 வயது முதல் 11 வயதுக்குள்ளான பருவத்தை, அதாவது, 'பேதை' மற்றும் 'பெதும்பை'யை சேர்த்தாற்போல் 'தையல்' என்றும் கூறுவர். தையல் பருவத்தில் பெண்கள் சிறுமிகள் என்பதால், அந்த வயதில் பொது அறிவு என்பது அவ்வளவாக வளர்ந்திருக்காது என்று கருதி, அத்தகைய சிறிய பருவத்து பெண்கள் அதாவது சிறுமிகளால் சொல்லப்படுவதை ஆராயமல் கேட்கக் கூடாது என்பது ஒளவை பாட்டி சொன்ன 'தையல் சொல் கேளேல்' என்பதின் கருத்து.

இதில் வேறு ஏதும் ஆட்சேபனை உள்ளதா?

dear thalika, appo
ஏப்ரல் 9, 2008 - 2:44pm - வழங்கியவர் arthi

dear thalika,
appo avayarum pen(lady) thane? appo avanga solrathayum kekka koodatha? "kelel" adhai pirikkanum.so, kettu ettru nada endru than artham. "put" "but" rendukkum difference irukilla.
adhu maadhiri than.

150 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »