topic_image


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிய தமிழ் புத்தாண்டில் அறுசுவை மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். அறுசுவை மேலும் மேலும் வளர வாழ்த்தும்

சரவணகுமார், மணிமேகலை, செல்வ இலக்கியா,


தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஏப்ரல் 12, 2008 - 11:09pm - வழங்கியவர் DEVA

அறுசுவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
ஏப்ரல் 13, 2008 - 2:55am - வழங்கியவர் Mrs.Mano

அனைத்து அறுசுவை சகோதர, சகோதரியர் அனைவருக்கும் அனைத்து வளங்களுடன் இந்த புத்தாண்டில் மகிழ்ந்திருக்க என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஏப்ரல் 13, 2008 - 3:01am - வழங்கியவர் pradeebala

அறுசுவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன் தீபா

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஏப்ரல் 13, 2008 - 3:09am - வழங்கியவர் seyedkatheeja

அறுசுவையின் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் கதீஜா.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஏப்ரல் 13, 2008 - 3:48am - வழங்கியவர் SUGU

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஏப்ரல் 13, 2008 - 4:08am - வழங்கியவர் அதிரா

அனைவருக்கும் இப்புதிய ஆண்டில் நினைப்பவை எல்லாம் இனிதே நிறைவேற வாழ்த்துகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஏப்ரல் 13, 2008 - 7:54am - வழங்கியவர் rasia

எனதருமை அருசுவை சகோதர சகோதரிகள் மற்றும் எனதன்பான தோழிகள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துங்கள்!

நல்வாழ்த்துக்கள்!
ஏப்ரல் 13, 2008 - 8:16am - வழங்கியவர் Asma

அறுசுவை தோழியர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

vதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ஏப்ரல் 13, 2008 - 9:29am - வழங்கியவர் senthamizh selvi

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். (ஆனால், தமிழ் புத்தாண்டு தான் தை ஒன்று என மாற்றி விட்டார்களே, அதில் எனக்கு உடன்பாடு இல்லை, உங்களுக்கு?)
அன்புடன்,
செல்வி.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஏப்ரல் 13, 2008 - 2:05pm - வழங்கியவர் Manohari

உலகெங்கிலும் வாழும் அனைத்து அறுசுவை அன்பு நேயர்களுக்கும், எங்கள் பாசத்திற்க்குரிய சகோதரர் அட்மின் அவர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷுக்கனி நல் வாழ்த்துக்கள்.

ஹலோ செல்வி புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்டி இருக்க?நானும் நினைத்தேன் தமிழ் புத்தாண்டு தான் தை ஒன்றாயிற்றே என்று, என்ன காரணத்திற்காக அதை மாற்றினார்களோ தெரியவில்லை,ஆனால் எனக்கு அவ்வாறு தை ஒன்று அன்றைக்கு தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடுவதில் ஆட்சேபனை ஒன்றுமில்லை.ஏனெனில் தைப் பிறந்தால் வழிப்பிறக்கும் என்று கூறுவது வெறும் கூற்று அல்ல உண்மையும் கூட. நடைமுறையில் பார்த்தோமானால் நமது நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் கிராமங்கள் செல்வ செழிப்பாக பூத்துக் குலுங்கும் அறுவடை மாதத்தில் தமிழர்களின் வருடப்பிறப்பை தொடங்குவது பொருத்தமாகவும், அந்த நாளில் கிராமங்கள் முதல் நகர்புறங்கள் வரை ஒட்டுமொத்த தமிழ் நாடே கோலாகலமாக கொண்டாடுவதே புத்தாண்டிற்க்கும் நல்ல அர்த்தம் சேர்ப்பதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் நாட்டினருக்கும் அது இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையும் என்பதும் என் கருத்து. அதில் உனக்கு ஏன் உடன்பாடு இல்லை என்று கூறமுடியுமா? தொடர்ந்து பேசுவோம்.நன்றி

புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஏப்ரல் 13, 2008 - 2:54pm - வழங்கியவர் babu

வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரிகளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நீண்ட நாட்கள் கழித்து மனோகரி மேடத்தின் பதிவை பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கிறது.

தமிழ் வருடப்பிறப்பை மாற்றிவிட்டார்கள் என்ற விபரமே எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியாது. சமீபத்தில்தான் தெரிய வந்தது. அதன்பிறகுதான் அது சம்பந்தமான பழைய செய்திகளை எல்லாம் படித்து பார்த்தேன். ஒரு சாரார் இதனை ஆதரித்து இருந்தாலும் நிறைய பேர் இதை எதிர்த்து இருக்கின்றார்கள்.

இது சம்பந்தமான ஒரு கட்டுரை ஒன்றை கீழ்கண்ட முகவரியில் படித்தேன்.

http://groups.google.com/
group/muththamiz/msg/
603e5a4395a36846

படிக்க நன்றாகத்தான் இருக்கின்றது. ஆனால் இதன் பின்னணி ஏதோ ஆரிய, திராவிட மறைமுக யுத்தமாக தெரிகின்றது.

மக்கள் நம்பிக்கை சார்ந்த விசயம், காலம் காலமாக வழக்கில் இருக்கும் ஒன்றை சட்டமிட்டு மாற்றுதல் முறையானதாக தெரியவில்லை. அதற்கான அவசரம், அவசியமும் புரியவில்லை. இன்றைக்கு சட்டம் போட்ட இந்த அரசு நாளை மாறியவுடன் அடுத்து வருபவர்கள் மீண்டும் சித்திரைக்கோ இல்லை மாசிக்கோ மாற்றலாம். இது ஒரு விளையாட்டாய் போகும் என்பது எனது கணிப்பு. இந்த சட்டத்தால் இந்த அரசுக்கு புதிதாக ஆதரவு கூடவில்லை. எதிர்ப்புகள் கூடியிருக்கின்றன.

நான் தமிழ் மாதங்களை அதிகம் பயன்படுத்துவதில்லை. எனக்கு தெரிந்து கிராமங்களில் நிறைய பேர் இன்னமும் தமிழ் மாதங்களில்தான் தேதி சொல்கின்றனர். எனக்கு தமிழ் தேதி என்னவென்பதெல்லாம் தெரியாது. சில சமயம் என்ன தமிழ்மாதம் என்பது கூட தெரியாது. என் போன்றவர்களுக்கு தமிழ் வருடப்பிறப்பு தையில் இருந்தாலும் சரி, ஆடியில் இருந்தாலும் சரி. ஏதோ ஒரு மாதம். அவ்வளவுதான். (இனி தமிழ் வருடப்பிறப்பிற்கு என்று தனியாக விடுப்பு கிடையாது. பணியில் இருப்பவர்களுக்கு ஒருநாள் விடுப்பு குறையலாம் :-( )

என்னுடைய தனிப்பட்ட கருத்து, இத்தனை வருடங்களாக சித்திரையாக இருந்தது அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே.. மாதத்தில் நல்ல மாதம் கெட்ட மாதம் என்றெல்லாம் இருக்கின்றதா என்ன? இத்தனை நாட்கள் சித்திரை, வைகாசி என்ற வரிசையில் மாதங்களை சொல்லிவிட்டு இனி தை, மாசி என்று தொடங்கி மார்கழியில் முடித்தல் வித்தியாசமாக இருக்கும். பழக்கமாகும் வரை.

தமிழ் புத்தாண்டின் மாற்றம்
ஏப்ரல் 14, 2008 - 11:34am - வழங்கியவர் Manohari

நன்றி அட்மின். எனக்கும் தினமும் அறுசுவையில் பங்கெடுக்கத்தான் ஆசை அதிலும் யாரும் சமைக்கலாமில் பங்களிப்புச் செய்ய முடிவதில்லையே என்று வருந்துவதுண்டு, கூடிய விரைவில் அதிலும் பங்கெடுப்பேன் என்று நம்புகின்றேன். நீங்க எப்படி இருக்கீங்க? என் பொண்ணு செண்பகவள்ளி எப்படி இருக்காங்க?

தமிழ் புத்தாண்டின் மாற்றத்தைக் குறித்து எனக்கு நான்கு வருடங்களுக்கு முன்பே தெரியும், ஆனால் அது தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று தெரியாது. கனடாவில் இலங்கைத் தமிழர்களால் நடத்தப்பட்டுவரும் தொலைக்காட்சி சேனல் செய்தியில் அவர்கள் தை ஒன்று அன்று விளக்கேற்றி தமிழ்வ்ருடப்பிறப்பை அறிவிப்பு செய்திருந்தார்கள். அதன்பிறகு திருமதி செல்வியின் பதிவைப் பார்த்த பிறகு தான் அதை உறுதிசெய்து எனது கருத்தைக் கூறினேன். அந்த மாற்றத்தைப் பற்றி உங்களின் கருத்தாக நீங்கள், "மக்கள் நம்பிக்கை சார்ந்த விசயம், காலம் காலமாக வழக்கில் இருக்கும் ஒன்றை சட்டமிட்டு மாற்றுதல் முறையானதாக தெரியவில்லை." என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த மாற்றம் எந்த விதத்தில் நம்பிக்கைச் சார்ந்தவர்களை பாதிக்கும் என்று புரியவில்லை, வருடப் பிறப்பு என்பது காலத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு விழா தானே. சட்டங்கள் என்பது மாறக்கூடியது உண்மைதான், அதை யார் வேண்டுமானால் எப்போது வேண்டுமானால் மாற்றிக் கொண்டு இருக்கலாம்,ஆனால் வரலாறு கூறும் உண்மையை மாற்றமுடியாதே. இளவேனிர் காலத்தில் தான் பண்டையத் தமிழன் புத்தாண்டை கொண்டாடினான் என்ற உண்மை இருக்கின்றது என்றால் அதை யார் கூறினாலும் எந்த ஆட்சி அதை அமுல்படுத்தினாலும் அதை ஏற்றுக்கொள்வதில் நம்மக்கள் தயக்கம் காட்டுவதேன்.இதனால் தாங்கள் கூறியுள்ள ஒரு நாள் விடுப்பிற்கு வேண்டுமானால் தமிழ் நாட்டில் மக்கள் பாதிக்கப்படலாம். உண்மையை யார் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் தேவையில்லை என்பது என் கருத்து. என்னைப் பொருத்தவரையில் வந்தாரை வாழவைக்கும் இளிச்ச வாய் தமிழன் இருக்கும் வரை இதுப் போன்ற எதிர்ப்புகள் எதற்கெடுத்தாலும் வந்தவண்ணமிருக்கும் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 14, 2008 - 1:27pm - வழங்கியவர் babu

//இளவேனிர் காலத்தில் தான் பண்டையத் தமிழன் புத்தாண்டை கொண்டாடினான் என்ற உண்மை இருக்கின்றது என்றால் அதை யார் கூறினாலும் எந்த ஆட்சி அதை அமுல்படுத்தினாலும் அதை ஏற்றுக்கொள்வதில் நம்மக்கள் தயக்கம் காட்டுவதேன்.//

நான் இதைப் பற்றி ஆராய்ந்து எதையும் படிக்கவில்லை. இருந்தாலும் சில கேள்விகள் என் மனதில் இருக்கின்றது.

பண்டைய தமிழன் தை மாதத்தில் கடைசியாக புத்தாண்டு கொண்டாடியது எப்போது? எத்தனை வருடங்களுக்கு முன்னால்?

தை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடிய தமிழர்கள் சித்திரை மாதத்திற்கு மாறியது ஏன்? எப்போது? எப்படி?

அப்போது யாரேனும் சட்டம் போட்டு இனி சித்திரைதான் தமிழ் வருடத்தில் முதல் மாதம் என்று சொல்லி ஒரே நாளில் மாற்றினார்களா? அல்லது அந்த மாற்றம் காலத்தால், மக்கள் நம்பிக்கை அடிப்படையில் சிறிது சிறிதாக நடைபெற்றதா?

இதற்கெல்லாம் விடை தெரிந்தால் என்னால் நிறைய விவாதிக்க முடியும். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

இன்று நடந்துள்ளதுபோல் அன்றும் யாரோ ஒரு அரசன் ஒரு சட்டம் இயற்றி வலுக்கட்டாயமாக மாற்றியிருந்தால், இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு அதை மாற்றியமைப்பதில் பெரிதும் குறை சொல்ல முடியாது. ஆனால், மக்களாகவே சிறிது சிறிதாக மாறியிருந்தால், அது ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் என்பதுதான் காரணமாய் இருக்க முடியும்.

விக்கி பீடியா - தமிழ் மாதங்கள்

இந்த விக்கிபீடியா பதிவில் தமிழ் மாதங்கள் எப்படி, எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன என்ற விபரம் இருக்கின்றது. ஏதோ ராசி, நட்சத்திரம், சூரியன், சந்திரன் என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. ஆனால், இதைத்தானே இன்று இலட்சோப இலட்சம் பேர் நம்புகின்றார்கள். இதைத்தான் நம்பிக்கை சார்ந்த விசயம் என்கின்றேன்.

சங்க காலத்தில் தமிழன் இளவேனிற் காலத்தில் கொண்டாடினான். ஆரியர்
வரவிற்கு பிறகு மாறினான். ஆரியர்களின் திருநாட்களை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடிமையாகிவிட்டான் என்பது போன்ற விவாதங்கள் எனக்கு சிறுபிள்ளைத்தனமான விவாதங்களாக தோன்றுகின்றது. ஆரியர் வரவினால் திராவிடர்கள் வாழ்வில், வாழ்வு முறையில் நிறைய மாற்றங்கள் தோன்றின என்பது மறுக்க முடியாத உண்மை. வரலாற்றில் எந்த ஒரு சமூகம், இனம், நாட்டை எடுத்துக்கொண்டாலும் அங்கேயெல்லாம் இத்தகைய மாற்றங்கள் நடந்திருக்கின்றது. பண்டைய தமிழனுக்கு மட்டும் நடக்கவில்லை. ஆரியரினால் மட்டுமா மாற்றங்கள் நடைபெற்றது. கடையாக நம்மை ஆக்ரமித்த ஆங்கிலேயர்களால் நம் இனத்தில் நடைபெறாத மாற்றங்களா? இன்று யாருடைய ஆதிக்கமும் இல்லாமல், வெறும் தொலைத்தொடர்பினாலேயே எத்தனை மாற்றங்கள் நடந்துள்ளன.. யோசித்துப் பாருங்கள்.

உண்மையை சொல்லுங்கள். தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுகின்றதா? ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுகின்றதா? ஒரு 25 வருடங்களுக்கு முன்னால் லவ்வர்ஸ் டே எந்த நாள் என்று நம் யாருக்காவது தெரியுமா? இன்று நாம் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, வாழும் வாழ்க்கை, பயன்படுத்தும் பொருட்கள் எல்லாவற்றிலும் மாற்றங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் சட்டம் போட்டு, திட்டம் போட்டு கொண்டு வரப்பட்ட மாற்றங்களா?

பண்டைய தமிழன் செய்தான், பண்டைய தமிழன் அப்படி வாழ்ந்தான்.. என்று பண்டைய தமிழன் செய்தவற்றையெல்லாம் இப்போது கொண்டுவர முடியுமா? பண்டைய தமிழன் தினமும் கம்பங்கூழும், கேப்பங் கஞ்சியும் குடித்தான். ஆண்கள் வெறும் துண்டைக் கட்டிக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்க, பெண்கள் வெறும் கச்சை கட்டிகொண்டு சமைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தி மாலையில் பனங்கள்ளை அள்ளி குடித்துவிட்டு பண்டைய தமிழர்கள் குப்புற கவிழ்ந்து கிடந்தார்கள். நான் பண்டைய தமிழன் வாழ்க்கையை வாழ்கின்றேன் என்று சொல்லிவிட்டு, இன்று புரவியில் ஏறி தலைவர்கள் யாராவது நகர்வலம் வருவார்களா?

ஆரியர் தாக்கம் என்பதால் அதை நீக்க வேண்டும். ஆங்கிலேயர் தாக்கம் என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்பது இவர்களின் நியாயமாக இருக்கின்றது. எனக்கு தெரிந்து ஒரு 25 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும்பாலும் பெண்கள் தாவணிதான் அணிந்தார்கள். தாவணிப் பருவம் முடிந்தவுடன் அடுத்து சேலைதான். இப்போது தாவணி அரிதாக அணியும் ஆடையாகிவிட்டது. இதற்குகூட சில அமைப்புகள் அவ்வபோது எதிர்ப்பு தெரிவிப்பது உண்டு. தமிழ் பெண்கள் தமிழர் உடையாகிய தாவணியை மறந்துவிட்டார்கள் என்று. அப்போது சிரிப்புதான் வரும். அட மடையர்களே, தாவணியை தமிழ் பெண்கள் ஒரு நூறு வருட காலமாகத்தான் அணிந்து வருகின்றார்கள். அதற்கு முன்பு அவர்கள் அணிந்த உடை இப்படி இருக்கவில்லை. இன்னும் 100 வருடம் சென்றதென்றால் அப்போது தமிழ் பெண்கள் டூ பீஸ் உடையிலோ அல்லது அதுவும் இல்லாமலோ சுற்றிக் கொண்டிருக்கலாம். அப்போதைய தலைவர்கள் தமிழ்பெண்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையாகிய சுடிதாரை மறந்துவிட்
டார்கள் என்று புலம்பலாம்.

நன்றாக யோசித்துப் பாருங்கள். காலாச்சாரம், பாரம்பரியம் என்பதெல்லாம் காலம் சம்பந்தபட்டவை. இந்த காலத்தில் தமிழர்களாகிய நாம் எப்படி வாழ்கின்றமோ அதுதான் இன்றைய தமிழ் கலாச்சாரம், இன்றைய தமிழர் பண்பாடு. இவை மாற்றத்துக்கு உட்பட்டவை. மாற்றங்கள் மெதுவாக நடைபெறும். ஒரே நாளில் நடைபெற்றுவிடாது. மக்கள் தானாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் மாற்றங்களை தவிர்க்கவும் முடியாது. நான் பள்ளியில் படித்த காலத்தில் மாணவிகளை சுடிதார் அணிந்து வரக்கூடாது, தாவணியில்தான் வரவேண்டும் என்று சட்டம் போட்டிருந்தார்கள். இப்போது அதே பள்ளியில் மாணவிகள் கண்டிப்பாக சுடிதார் அணிய வேண்டும். சால் அணியவேண்டும் என்று சட்டம் போட்டிருக்கின்றார்கள். மக்கள் தங்களுக்கு பிடித்ததை, வசதியானதை வெகு விரைவாக ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள் அப்படி ஏற்றுக்கொள்ளும் விசயத்தை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது.

//இளவேனிர் காலத்தில் தான் பண்டையத் தமிழன் புத்தாண்டை கொண்டாடினான் என்ற உண்மை இருக்கின்றது என்றால் அதை யார் கூறினாலும் எந்த ஆட்சி அதை அமுல்படுத்தினாலும் அதை ஏற்றுக்கொள்வதில் நம்மக்கள் தயக்கம் காட்டுவதேன். //

பண்டைய தமிழர்கள் கொண்டாடினார்கள் என்பது உண்மையானால் அதை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் என்ற கேள்விக்கு என்னுடைய கேள்வி யார் பண்டைய தமிழர்கள்? சங்க காலத்தில் வாழ்ந்தவர்களா? இல்லை அதற்கு முன்பு வாழ்ந்தவர்களா? அப்படியென்றால் நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த நமது மூதாதையர்கள், நமது தாத்தா, பாட்டி எல்லோரும் தமிழர்கள் கிடையாதா? அவர்கள் கொண்டாடியதை நாம் ஏன் மறுக்க வேண்டும்.

//இதனால் தாங்கள் கூறியுள்ள ஒரு நாள் விடுப்பிற்கு வேண்டுமானால் தமிழ் நாட்டில் மக்கள் பாதிக்கப்படலாம்.//

இந்த மாற்றத்தால் பாதிப்பு என்று சொல்வதற்கு நான் குறிப்பிட்ட விடுமுறை என்ற ஒரு சின்ன காரணமாவது இருக்கின்றது. இந்த மாற்றத்தால் நிகழ்த்தப்படும் சாதனை, அதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்பதை யாராவது சொல்ல முடியுமா? ஆரியர்கள் மாற்றியதை மீட்டு விட்டோம் என்று கெக்கலிப்பார்களோ..? இன்றைக்கு கோயில்கள், பூசைகள், ஜாதகங்கள் என்று மக்கள் நம்பிக்கை சார்ந்த நிறைய விசயங்கள் ஆரிய பாதிப்புதானே.. அதற்கெல்லாம் சட்டம் போட்டு தடை செய்து மீண்டும் தமிழனை சங்க காலத்திற்கு அழைத்துச் செல்வார்களா? ஆரிய தாக்கத்தை கலைந்த பிறகு, அடுத்து ஆங்கிலேய தாக்கம், இஸ்லாமிய தாக்கம், ஏன் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து பரவிய தாக்கம் என்று ஒவ்வொன்றாக கலைந்து, தமிழனை மீட்டு தொல்காப்பிய வருடத்திற்கு இட்டுச் சென்றால் எனக்கு மிகவும் சந்தோசம்தான்.

(இந்த ஆய்வுக் கட்டுரையும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றது. படித்துப் பாருங்கள்.

தமிழ் ஆண்டு

)

மனோகரி நலமா?
ஏப்ரல் 15, 2008 - 12:14am - வழங்கியவர் malathi

தமிழ் புத்தாண்டு எந்த மாதத்தில் தொடங்கினாலும் பஞ்சாங்கம் ஜாதகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை. ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும் உழவர்களை பெருமை படுத்துவதற்காக தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
மனோகரி நீங்க இங்க இருக்கீங்களா? அங்கிட்டு உங்களை விடுகதை போடுற பக்கம் தேடிகிட்டு இருக்காங்க.

உழவர் திருநாள்
ஏப்ரல் 15, 2008 - 9:07am - வழங்கியவர் babu

தை முதல்நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடினால் எந்தவிதத்தில் அது உழவர்களுக்கு பெருமை சேர்க்கும் என்பது புரியவில்லை. ஏற்கனவே உழவர்களுக்கு ஒரு தினத்தை ஒதுக்கி உழவர் தினமாக கொண்டாடி வருகின்றோம். தை முதல் தேதியையும் பொங்கல் தினம், தமிழர் திருநாள் என்றும் கொண்டாடி வருகின்றோம்.

இனி இரண்டு பண்டிகையும் ஒரே நாளில் வந்தால் மக்கள் கண்டிப்பாக பொங்கல் பண்டிகையைத்தான் கொண்டாடப் போகின்றனர். வருடப்பிறப்பிற்கென்று தனியாக எதுவும் செய்யப் போவதில்லை. நாளடைவில் வருடப் பிறப்பு கொண்டாடுவது என்பதே மறைந்து போகும் என்பதுதான் எனது எண்ணம்.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? இன்னும் 50 வருடங்கள், அவ்வளவு கூட வேண்டாம், 25, 30 வருடங்கள் கழித்து உழவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இப்போதே உழவிற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. கிராமங்களில் அடுத்த தலைமுறையினர் ஏர்கலப்பையை ஒதுக்கிவிட்டு, மலேசியா, சிங்கப்பூர் என்று பணிக்கு போய்விட்டார்கள்.

இனி இயந்திரங்களின் ஆதிக்கம்தான் எதிர்காலம். விதை தெளித்து, நாற்று நட்டு, மருந்து அடித்து, அறுவடை செய்து, அரைத்து எடுப்பது வரைக்கும் இயந்திரங்கள்தான் செய்யப் போகின்றன. இப்போதே பாதி இயந்திரமயமாக்கப்பட்டுவிட்டது. அந்த இயந்திரங்களை இயக்குபவர்களைத்தான் இனி உழவர்கள் என்று அழைக்கப்போகின்றோம்.

உங்கள் கருத்துக்கள் -
ஏப்ரல் 15, 2008 - 3:40pm - வழங்கியவர் இலா

உங்களை மாதிரி அதிகமாக தமிழில் இன்னும் தட்டச்சிட பழகவில்லை. ஆனால் உங்கள் கருத்துக்கள் நல்லா இருக்கு.

உங்களுக்கு தெரியுமா இல்லையா ..உங்களை மாதிரி அதிகமாக தமிழில் இன்னும் தட்டச்சிட பழகவில்லை. ஆனால் உங்கள் கருத்துக்கள் நல்லா இருக்கு.

உங்களுக்கு தெரியுமா இல்லையா நம்ம ஊரில் கூட இயற்கை முறை ( Organic) பழம் மற்றும் காய் கறிகள் சாகுபடி செய்கிரார்கள்...
near ulundurpettai
தங்கிலீசில் தட்ட முடியவில்லை!!!!

I still feel and know that there is one group of people who still work in the land and earn thier bread.

earlier using ஏர் was supposed to increase the fertility of the lands. Now every one wants to use tractor cos it is faster and gets done in a day. The youngsters are interested in instant gratification. They dont beleive in the fact that it will still take 10 months to make a healthy baby.... that is nature.. we all want to go faster and get better and forget to slow down and smell the flower.

My friend's family is from a faming community in taiwan.. they produce organic fruits and vegetable.

So what is that our farmers are doing or even the govt is doing to increase the same level. We hardly see anything .

As the world changes we do adapt the change but we forget our roots.

If I have to do all over again .. I would have done agriculture engineering...

This changing of thami new year to pongal shows our politicians ignorance. They want to store wealth for thier family and none of the leaders have the vision for the future.

PS: This is my personal opinion and experience.

சித்திரையா? தையா?
ஏப்ரல் 15, 2008 - 10:54pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு தோழி மனோகரிக்கு,
நலமா? டைகர் நலமா? இப்ப எங்க வீட்டிலும் ஒரு செல்லம் வந்துருச்சி.
இப்ப சமீபமாகத்தான் தமிழ் புத்தாண்டை தை முதல் தேதின்னு மாத்தினாங்க. எதுவுமே விஷேசமே இல்லாத ஒரு நாளுக்கு மாற்றியிருந்தாலும் ஒரு நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக நினைக்கலாம். ஆனால், ஏற்கனவே பொங்கல், தமிழர் திருநாள்னு கொண்டாடிகிட்டு இருக்கிற ஒரு நாளுக்கு மாற்றுவதால் பொங்கல் என்பது தான் பெரிதாக இருக்குமே தவிர, புத்தாண்டு நினைவு வருவது அரிதே.
திராவிடன், ஆரியன் என்றெல்லாம் கதை. யார் திராவிடன், யார் ஆரியன் பிரித்து பார்க்க முடியுமா இப்போது? நம் முன்னோர்கள் செய்த நிறைய காரியங்களுக்கு ஒரு அர்த்தம் இருந்தது. சித்திரை முதல் தேதியை வருடப்பிறப்பாக கொண்டாடியதற்கும் ஏதாவது காரணம் இருந்திருக்க வேண்டும். சட்டம் போட்டு மாற்றினால், புத்தாண்டு வழிவழியாக கொண்டாடுபவர்கள் மாற்றிக் கொள்வார்களா? அவர்கள் அப்படியேதான் கொண்டாடுவார்கள். அதை மாற்றியதால் அவர்கள் அடைந்த லாபம் என்ன? ஒரு அரசு விடுமுறை தினத்தை குறைத்ததை தவிர.
நிறைய பேசணும், டைம் தான் இல்லை. இப்போதைக்கு என் ஆதங்கம் அதுதான்.
அன்புடன்,
செல்வி.

நன்றி மாலதி
ஏப்ரல் 16, 2008 - 10:55am - வழங்கியவர் Manohari

ஹலோ மாலதி, நான் நலம் நாடுவதும் அதுவே. தைத் தமிழ் புத்தாண்டைக் குறித்த உங்க கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதைப் பற்றி விரிவாக உங்களுடன் பேசத்தான் நேரம் இல்லாமல் இருக்கின்றது,அறுசுவையின் மூலம் உங்க நட்பு கிடைத்ததற்கு மிக்க நன்றி சந்தர்ப்பம் கிடைக்கும்போது மீண்டும் உங்களுடன் பேசுகின்றேன்.

செல்வி வாழ்த்துக்கள்
ஏப்ரல் 16, 2008 - 11:04am - வழங்கியவர் Manohari

டியர் செல்வி வாழ்த்துக்கள். உங்க வீட்டிலும் ஒரு செல்லம் வந்துவிட்டது என்பதைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன். பொண்ணா, பையனா? பெயர் என்ன? என்ன பிரீட்?பிறந்து எவ்வளவு நாளாகிறது? தெரிந்துக் கொள்ள் ஆவல். வெட்னெரி கிளீனிக் அருகில் இருக்கின்றதா, மிகவும் கவனமாக பார்த்துக் கொள். டையப்பாவின் பேபி ஃபோட்டோக்கள் எப்போது பார்த்தாலும் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்து விடும். உனது செல்லத்துடன் நன்றாக எஞாய் செய், உருவத்தில் மிகவும் சீக்கிரமாக வளந்துவிடுவார்கள் பிறகு தூக்கக் கூட முடியாது. ஏதாவது டிப்ஸ் தேவைப்பட்டால் என்னிடம் கேள் சரியா நன்றி

தையிலா? சித்திரையிலா?
ஏப்ரல் 17, 2008 - 2:37am - வழங்கியவர் malathi

தமிழ் புத்தாண்டு தையிலா? சித்திரையிலா? தையில் கொண்டாடுவதற்கு நல்ல பல காரணங்கள் இருக்கிறதே.

மகளிர் தினம், அன்னையர் தினம், தாய்ப்பால் தினம் இதெல்லாம் கொண்டாடுவது எதற்காக? பெண்களின் பெருமைக்கு பெருமை சேர்ப்பதற்காக. நன்றி கூறுவதற்காக என்று கூட சொல்லாலாமே!.. பெண்கள் தங்கள் தோள்களில் தாங்கி நிற்கும் வீடுகள்தான் பொலிவுடன் திகழும். குடும்ப பொருப்புகளில் இருந்து நழுவும் சோம்பேறி பெண்கள் உள்ள வீடுகளின் நிலை மாட்சிமையுடனா இருக்கிறது?

குடும்பத்தை பேணிக்காத்து கணவனின் வெற்றிக்கு தூண்டுகோலாக, உறுதுணையாக நின்று அடுத்த தலைமுறையையும் சிறந்த முறையில் உருவாக்குபவள் பெண்தானே? அவளது பெருமைக்கு சிறப்பு சேர்க்கும் முகமாக ( நன்றி தெரிவிக்கும் ? ) மகளிர் தினம் அன்னையர் தினம், தாய்ப்பால் தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறோம்.

அதுபோல்தான் இந்த உலகுக்கு சோறுபோடும் உழவர்களை பெருமைபடுத்த தை திங்களை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் உழவர்களே இல்லாமல் போய்விடக்கூடிய அபாயம் எதுவும் வராது. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உழவன் எந்த காலத்திலும் இயந்திரத்தினால்தான் உழவு செய்தான். அந்த காலத்தில் கலப்பையால் உழுதான் பிறகு ட்ராக்டரினால்....நாளை வேறு இன்னும் நவீன இயந்திரத்தால் உழுவான். ஆனால் கலப்பையாலும் ட்ராக்டராலும் உழுதபோதும் அவன் பேர் உழவன் தான். நாளை வேறு கருவியால் உழும்போதும் அவன் பேர் உழவன் தான். அதனால் உணவுப்பொருள்களிருக்கும்வரை உழவுத்தொழிலும் இருக்கும் உழவனும் இருப்பான். எண்ணிக்கை வேண்டுமானால் குறையலாம். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் சிங்கம் சிங்கம்தானே? அந்த சிங்கங்களை பெருமைபடுத்த களஞ்சியங்கள் நிறைந்து அவன் மனமும் நிறைந்திருக்கும் தை மாதத்தில் தமிழ் புத்தாண்டு வருவதில் நமக்கெல்லம் மகிழ்ச்சியே.

அணுவை துளைத்து அதில் ஏழ் கடலைப்புகுத்தி
குறுத்தரித்த குறள்.

தந்த வள்ளுவன் பிறந்த மாதமாக தமிழ் அறிஞர்கள் கூறும் தைத்திங்களில் தமிழ்புத்தாண்டை கொண்டாடி நம்மை நாமே உயர்த்திக்கொள்வோமே.

மனோகரி! குறிஞ்சிப்பூவா
ஏப்ரல் 17, 2008 - 3:27am - வழங்கியவர் malathi

நான் எழுதி இருக்கும் தைத்திங்கள் கருத்துகள் உங்களுக்கு சரியாக இருக்கிறதா மனோகரி? ஓரளவுதான் விரிவாக எழுதி இருக்கிறேன். உங்கள் எண்ணங்களை. எழுதுங்கள். பிறகு விரிவாக பேசலாம். சுகர் கொஞ்சம் அதிகமாகி விட்டதால் கன்டினியூஸாக கம்பியூட்டரில் உட்கார்ந்தால் சோர்வாகி விடுகிறது. என்ன ரொம்ப பிஸியாக இருக்கீங்களா? அத்திபூத்தாற்போலத்தான் வருகிறீர்கள். பிறகு பேசலாமா?

வந்துட்டீங்களா தளிகா
ஏப்ரல் 17, 2008 - 8:05am - வழங்கியவர் malathi

தளிகா!...மெயில் கிடைத்தது. யூனிகோட் யூஸ் பண்ணி ஃபான்ட் ஃபாலோ பண்ணுவதற்குள்..........அதற்கு பதிலாக நீங்கள் பேசாமல் நம்ம அட்மின் சொன்ன 'விடுகதை' மாதிரி இரண்டு விடுகதை சொல்லி இருந்தால் விடைகூட கண்டுபிடித்திருப்பேன். எனக்கு எப்படி யூஸ் பண்ணி படிப்பது என்று தெரியலையே தளிகா!...... வேலையெல்லாம் முடித்துவிட்டு பொருமையாக படித்து பார்க்கனும்.

குறிஞ்சிப்பூ அல்ல மனோரஞ்ஜிதம்
ஏப்ரல் 17, 2008 - 10:25am - வழங்கியவர் Manohari

குறிஞ்சிப்பூ அல்ல மனோரஞ்ஜிதம் அது அம்மாவிற்கு மிகவும் பிடித்த மலரும்கூட, பிறகு எப்படி மனோகரி ஆனாய் என்று நினைக்கின்றீர்களா அது அம்மாவின் தோழி ருக்மணி ஆன்ட்டி செய்த மாற்றம். ஆமாம் மாலதி ரொம்ப பிஸியாகிவிட்டேன் ஆகவே மன்றத்தில்கூட இனி என்னை பார்க்கமுடியாது நேரம் கிடைத்தால் யாரும் சமைக்கலாமில் மட்டும் வருவேன் எனது எல்லாக் குறிப்பையும் படங்களாக கொடுக்க வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தேன். உங்களுக்கு சுகர் இருப்பதாக கூறியுள்ளீர்கள் உடம்பை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் அதைக் கொண்டே சுகரைக் கட்டுக்குள் வைக்கலாம். அறுக்கம்புல் ஜூஸை தினமும் குடிக்கலாம் நல்ல பலன் கிட்டும். என்னை மறக்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன் ஞாபகம் வந்தால் என்னைநோக்கி ஒரு பதிவு போடுங்கள் நீச்சயம் பதிலளிக்கின்றேன் நன்றி.

வாங்க மனோகரி
ஏப்ரல் 17, 2008 - 10:55am - வழங்கியவர் malathi

மனோகரி!.. உங்களை மறக்க முடியாது. என்ன? வேலையில் ஏதாவது ஜாயின்ட் பண்ணி இருக்கிறீர்களா? அல்லது மன்றத்திற்கு வர ப்ரியமில்லையா? மன்றத்தில் கான்ட்ரவர்ஷியலாக பேச வேண்டிவருமோ என்று தயங்குகிறீர்களா? அந்த மாதிரி தயக்கம் எல்லாம் வேண்டாம் மனோகரி. சரி பரவாயில்லை. ரெசிப்பீஸ் மூலம் உங்களை சந்தித்துக்கொள்கிறோம். நிறைய விஷயங்களில் உங்கள் கருத்துக்கள் என்னுடன் ஒத்து போகிறது. இப்ப இந்த தமிழ் புத்தாண்டு விஷயத்தில் கூட......

காணவில்லை...
ஏப்ரல் 17, 2008 - 11:06am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு தோழி மனோகரி,
நலமா? நாங்க நலமே.
நேற்றே உங்கள் பதிவுக்கு பதில் போட்டேன். இப்ப அதை பார்த்தா காணவில்லை. என்ன ஆச்சுன்னு புரியலை.
எங்க வீட்டு செல்லம் பையன் தான். இப்ப 50 நாட்கள் ஆகிறது. வீட்டுக்கு வரும் போது 40 நாள். வெட்னரி கிளீனிக் பக்கமாத்தான் இருக்கு, ஒன்றும் பிரச்னை இல்லை. லசாப்சோ & டெரியர் கிராஸ் பிரீட். வந்ததும் டிவார்மிங் பண்ணிட்டோம். இந்த வாரத்தில் வேக்ஸிங் போடணும். வந்தவுடன் இடம் ஒத்துக்காம டயரியா, ஃபீவர், மூணு ஊசி போட்டோம். இப்ப நல்லா இருக்கான். வெளியில் இருந்து வந்ததும் அவனை கொஞ்சிட்டு தான் வேறே வேலை பார்க்கணும்.

அதல்லாம இன்னும் இரண்டு செல்லங்களும் இருக்கு. லவ்பேர்ட்ஸ்:-)அதுல பெண் குட்டி என் மடியிலும், தோளிலுமே வளர்ந்தது. அது இப்ப மூணு முட்டை வச்சிருக்கு. அது முதல் முட்டை வச்சதும் என்னை கூப்பிட்டு காண்பிச்சது. ரெண்டோ. மூணோ அறிவுள்ள பறவைகளுக்கு இவ்வளவு பாசமான்னு நினனச்சா ஆச்சரியமா இருக்கு. முடியும் போது போட்டோ போடறேன். பிறகு பேசுவோம்.
அன்புடன்,
செல்வி.

haai everybody
ஏப்ரல் 18, 2008 - 4:55am - வழங்கியவர் kothai.R

hai,wish u a very haapy and prsperous tamil new year i dont know where to introduce myself. this is kothai.i saw this site from morning itself only. what a site is this? all the informations and the topics discussed are very interesting and useful. i want to bea part of it.i read the site from morning. i couldnt disconnect myself from this site. hereafter i am going share my opinion with u all. all are very experienced members. i like the way of answering the questions. anyone of u pls help me to type in tamil.

தளிகா! என்ன செய்வது?
ஏப்ரல் 18, 2008 - 10:40am - வழங்கியவர் malathi

தளிகா! நீங்க அனுப்பிய மெய்லை படிக்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறேன். ஏதாவது செய்யுங்கள். பிக்னிக் எப்படி இருந்தது?