topic_image


அன்பர்களே,

சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு சென்று திரும்புகையில் ஒரு இரும்பு வானலி [தண்டவாள வானா என்று அழைக்கப்படும்] வாங்கி வந்தேன்.

முதல் உபயோகத்திற்கு முன், இதை எவ்வாறு சுத்தம் செய்வது என தெரியவில்லை.

கடைக்காரர் சொன்னபடி செய்து பார்த்தேன் - ஆனாலும் அந்த இரும்பு துகள்கள் சரிவர போகவில்லை.

உங்கள் அனுபவம் மற்றும் யோசனை ஏதேனும் பகிர்ந்து கொண்டால் மிக்க நன்றி.

அன்பன்,

ஸ்ரீனி


டியர் ஸ்ரீனி
ஏப்ரல் 15, 2008 - 1:28am - வழங்கியவர் Jaleela Banu

டியர் ஸ்ரீனி
இரும்பு வானலியில் அரிசி களைந்த தண்ணீர், சோறு வடித்த சுடு கஞ்சி உற்றி ஊற்றி வைக்கனும்.
டெய்லி எண்ணை தடவி வைக்கனும்.
ஜலீலா

நன்றி ஜலீலா
ஏப்ரல் 16, 2008 - 3:07pm - வழங்கியவர் ஸ்ரீனி

தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி, ஜலீலா. சில நாட்கள் கழித்து, update தருகிறேன்.