topic_image


ஜலீலா அக்காவிற்க்கு வித விதமாக 400 குறிப்புகள் கொடுத்து எங்களை அசத்திய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதே போல் மேலும் பல நூறு குறிப்புகள் கொடுக்கனும்னு மனதார வாழ்த்துகிறேன்.குறிப்பு மட்டுமில்லாமல் யாருக்கு என்ன சந்தேகம் என்றாலும் உடனே வந்து உதவும் உங்கள் மனதிற்க்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து.

அன்புடன் கதீஜா.


ஹாய் ஜலீலா மேடம்
ஏப்ரல் 15, 2008 - 4:45am - வழங்கியவர் Nandhini29

அறுசுவையே அசந்து போய் இருக்கிறது. பல அலுவல்களுக்கிடையில் 400 குறிப்புகளைக் கொடுத்து ஜமாய்த்துக் கொண்டிருக்கும் ஜலீலா மேடம்க்கு(rhymingங்கா இருக்குல்ல) என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்புகள் மட்டுமல்லாமல் தங்களின் ஆலோசனைகளையும் வழங்கி அறுசுவை சகோதரிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஜலீலா மேடம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

ஜலீலாக்கா
ஏப்ரல் 15, 2008 - 5:02am - வழங்கியவர் thalika

ஜலீலாக்கா இந்த புத்தாண்டு நல்ல ராசியானது போல பல சுவாரசியமான விஷயங்கள் நடக்குது..400 குறிப்பையும் கொடுத்து விடாம எல்லோருக்கும் பதிலும் கொடுக்கரீங்க...இதே சுறுசுறுப்பு என்றும் உங்களுக்கு கிடைக்கனும்..வாழ்த்துக்கள்

athira - help me pls if u can
ஏப்ரல் 15, 2008 - 5:17am - வழங்கியவர் krithikanna

yen magal pasikum pothum.thoongum pothum vayil kai vaithukonday irukirall ithai thadupathrku yethachum vedai sollunga pls., aval pagarkai,neem matrum anaithum thadavi vitu parthachu onum mudiayla .
pls help my child to overcome from this problem.
keerthi

க்ரிதிக்கா
ஏப்ரல் 15, 2008 - 5:20am - வழங்கியவர் thalika

ஓஹ் சொல்லுங்களேன் க்ரிதிக்கா

thakika
ஏப்ரல் 15, 2008 - 5:35am - வழங்கியவர் krithikanna

hai yenapa yenaku yarumeya response panna matinkuranga yellarum vidukathai vilaiyatu moodula irukingala
keerthi

சத்தமில்லாமல் சதங்கள்
ஏப்ரல் 15, 2008 - 5:41am - வழங்கியவர் T S JAYANTHI

நான் ஓய்வாக இருக்கும் போது நெட் கிடைப்பதில்லை.
நெட் கிடைக்கும் போது எனக்கு ஓய்வில்லை.
குறிப்புகள் கொடுக்கவும் முடியவில்லை
குட்டிக்கதைகளும் கொடுக்க முடியவில்லை.
பரவாயில்லை. சத்தம் இல்லாமல் அரை ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தோழியருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

விரல் சூப்பும் குழந்தை
ஏப்ரல் 15, 2008 - 5:45am - வழங்கியவர் T S JAYANTHI

க்ருத்திகா உங்கள் குழந்தைக்கு என்ன வயது என்று சொல்லவில்லையே. என் அக்காள் பெண் நடு விரல், மோதிர விரல் இரண்டையும் போட்டுக் கொள்வாள் 3, 4 வயது வரை. பிறகு சொல்லிச் சொல்லி சரியாகி விட்டது. மாற்ற முடியாதது எதுவும் இல்லை. கவலைப்படாதீர்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

hi krithikanna
ஏப்ரல் 15, 2008 - 5:58am - வழங்கியவர் seyedkatheeja

உங்க குழந்தைக்கு எத்தனை வயது ஆகுது. எனது சொந்தகாரங்க வீட்டு குழந்தைக்கும் இதே போல இருக்கு 3 ஆகுது இப்ப கூட பசி வந்தாலும், தூக்கம் வந்தாலும் கைவிரல் வாய்க்கு போய்விடுது. அவங்க கிட்ட கேட்டதுக்கு எப்பவுமே கைய வாயில வச்சிட்டு இருந்தால் தான் கவலை படனும் இது பசிக்கும் போதும், தூக்கம் வரும் போதும் மட்டும் தானே அதனால சீக்கிரம் சரியாகிடும்னு சொன்னாங்க. அதனால நீங்க கவலை படாதீங்க சீக்கிரம் அந்த பழக்கம் மாறிடும் நீங்க உங்க குழந்தை வாயில கைய வச்ச உடன் அது பசின்னா சாப்பாடு கொடுத்துடுங்க. இல்லை தூக்கம்னா தூங்க வச்சி கைய எடுத்து விடுங்க. என் பையன் 6 மாச குழந்தையா இருக்கும் போது வாயில் விரலை வைத்துக்கொள்வான் அப்ப நான் கிளவுஸ் போட்டு விடுவேன் ஒரு கைல போட்டால் மறுகையை வாயில வைப்பான் அதனால 2 கைலயுமே கிளவுஸ் போட்டு வச்சிடுவேன். அழுது கத்துவான் விரலை வாய்ல விட முடியலைன்னு 5 நாள் தொடர்ந்து அதே போல செய்தேன் மறந்து விட்டான். ஆனால் கிளவுஸ் போட்டால் கவனமாக இருக்கனும் அது வாயில வைத்து ஈரமானால் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கனும். என்னுடைய பதில் உங்களுக்கு உபயோகமா இருக்கான்னு பாருங்கள்.வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.

அன்புடன் கதீஜா.

வாழ்த்துக்கள் ஜலீலா
ஏப்ரல் 15, 2008 - 6:02am - வழங்கியவர் Parveen banu

அன்புள்ள ஜலீலா
அஸ்ஸலாமு அலைக்கும்.மாஷா அல்லாஹ்.உங்கள் குறிப்புகள் ,டிப்ஸ்,உங்கள் சுறுசுறுப்பு அனைத்தும் பாராட்டப்பட வேண்டியது.எனது அன்பான வாழ்த்துக்கள்.இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும் அருள்புரிவானாக.

அன்புடன் பர்வீன்.

ungal magal viralil neem oil
ஏப்ரல் 15, 2008 - 6:19am - வழங்கியவர் devisundhar

ungal magal viralil neem oil ie vepa ennai thadavi vidungal kaspu thanga mudiyamal kai vaika matal. sorry i m week in tamil so kindly adjust.

வாழ்த்துக்கள்
ஏப்ரல் 15, 2008 - 8:22am - வழங்கியவர் pradeebala

ஹாய் ஜலிலா அக்கா 400 குறிப்புகள் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் இன்னும் இதுபோல் பலநூறு குறிப்புகள் கொடுக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
அன்புடன் தீபா

ஹாய் தீபா
ஏப்ரல் 15, 2008 - 8:33am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் தீபா நலமா?என்னப்பா அளையே கணோமே?என்ன ஜலீலாக்கா 400 முடிச்சுட்டாங்களா?அய்யோ கவனிக்கலயே இதை சாரிக்கா என் அன்பு ஜலீலாக்காக்கு இன்னும் அதிக குறிப்பு கொடுக்க என் மனமார்ந்த துஆ உண்டு
அன்புடன்,
மர்ழியாநூஹு

வாழ்த்துகள்
ஏப்ரல் 15, 2008 - 8:45am - வழங்கியவர் Vijitvm

மேலும் மேலும் நல்ல நிறய்ய ரெசிபிகள் குடுக்க அருசுவை சார்பில் வாழ்த்துகிறேன்.

கதிஜா,தளிக்காவும்,நிருப்பமா
ஏப்ரல் 15, 2008 - 9:06am - வழங்கியவர் Jaleela Banu

கதிஜா அஸ்ஸலாமு அலைக்கும் பலநூரு குறிப்புகளா ஆ நான் போதும் போதும் என்று நினைப்பேன் ஆனால் ஏதாவது வந்து கொண்டே இருக்கும்.
என்ன சாட்டில் உங்களை ரொம்ப நாளா காணும்.
இப்ப எங்க இருக்கீங்க
எங்க உம்மவும் நல்லபடியாக ஹஜ் போய் வரனும்.

இன்னும் ஒரு விஷியம் 378 க்கு மேல் குறிப்பு கொடுக்க வேண்டாம் என்று தான் இருந்தேன், ஆனால் இங்கு ஒரு ஜீவன் 400 சதம் போடதான் செய்யனும் என்று சொன்ன அன்பு தொல்லையால் மீதியை கொடுக்க ஆரம்பித்தேன்.

அது நிருப்பமா தான் சமையலில் அனுபவம் இல்லாத நிருப்பமா இப்போது நல்ல எக்ஸ்பேட் ஆகி கொண்டு இருக்கிறார்.
என்னுடைய குறிப்பிலிருந்து பகாறா கானா, மிளகு சிக்கன், பாதம் ஹல்வா, சிக்கன் பிரியாணி, ஷீர் குர்மா, இன்னும் பல இதெல்லாம் பார்டிகும், வீட்டுக்கு வந்த கெஸ்டுக்கும் செய்து கொடுத்து மிகுந்த பாரட்டை பெற்றிருக்கிறார், அவங்க கணவரிடமும்.
ரொம்ப சந்தோஷமாக இருக்கு இதை கேட்கும் போது.

//அதோடு தளிக்காவும் ஒரு காரணம்.//

வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

ஜலீலா

தளிக்கா, பிரதீபா, விஜி , நந்தினி
ஏப்ரல் 15, 2008 - 9:13am - வழங்கியவர் Jaleela Banu

தோழிகள் தளிக்கா, பிரதீபா, விஜி, நந்தினி
எல்லோருக்கும் மிக்க நன்றி உங்க எல்லோரின் ஊக்கமும் ஒரு காரணம்.

மர்லியா உங்க கிட்ட அன்று கேட்டேனா ஞாபகம் இருக்கா?
அன்றே கொடுக்க வேன்டியஹ்டு விசா ஸ்டேம்ப் ஆகாத டென்ஷனில் விட்டு விட்டேன்.

ஜலீலா

வாழ்த்துக்கள்
ஏப்ரல் 15, 2008 - 12:00pm - வழங்கியவர் vinnie

ஜலீலா குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பயன்படும் நானூறு குறிப்புகள் கொடுத்து சாதனை புரிந்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புள்ள ஜலி,
ஏப்ரல் 15, 2008 - 12:10pm - வழங்கியவர் Subha Jayaprakash

அன்புள்ள ஜலி,
வாழ்த்துக்கள் ...
நல்ல குறிப்புகளை மேலும் மேலும் தொடருங்கள்...

ஜலீலா அக்கா வாழ்த்துக்கள்!!! அப்பிடியே!!! செல்விமா காணோம் அறிவிப்பு
ஏப்ரல் 15, 2008 - 3:21pm - வழங்கியவர் இலா

ஜலீலா அக்கா .. 400 சத வாழ்த்துக்கள்.... உங்கள் சுவை தொண்டு தொடரட்டும்....

அப்பிடியே... செல்விமா எந்த மன்ற இழையிலும் காணவில்லை... வந்து ஒரு "உள்ளேன் ஐயா" போட்டு விட்டு செல்லுங்கள்....

வாழ்த்துக்கள் ஜலீலா...
ஏப்ரல் 15, 2008 - 10:30pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு ஜலீலா.
ஒரு வாரமா பிசி ப்ராப்ளம், நெட் கிடைக்கலை.கெஸ்ட் வருகை. உள்ளே வந்து பார்த்தா எங்கியோ போய்கிட்டிருக்கு.
முதலில் மக்கா, மதீனா போய் வந்ததுக்கு வாழ்த்து்க்கள்.
400 குறிப்புகள் தந்து சாதனை படைத்ததற்கு பாராட்டுகள். சாதனை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

உள்ளேன் இலா...
ஏப்ரல் 15, 2008 - 10:32pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு இலா,
நலமா? ரொம்ப தேங்க்ஸ்ப்பா, எல்லாருமே மறந்துட்டாங்கன்னு நினைச்சேன். பரவாயில்லை, நீயாவது ஞாபகம் வச்சிருக்கியே:-))

நிறைய பிரச்னைகள், சிந்திக்கக்கூட நேரம் இல்லை. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் வர்ரேம்மா.
அன்புடன்,
செல்வி.

வினி,சுபா,இலவீரா
ஏப்ரல் 15, 2008 - 11:53pm - வழங்கியவர் Jaleela Banu

வினி,சுபா,இலவீரா எல்லாம் நலமா?
குழந்தைகள் நலமா?
வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
ஜலீலா

செல்வி மேடம் நலமா?
ஏப்ரல் 15, 2008 - 11:59pm - வழங்கியவர் Jaleela Banu

செல்வி மேடம் நலமா?
நான் ஊரில் இல்லை இப்ப தான் இரண்டு நாளா பிரெசென்ட்.
நேற்று கூட உங்க தக்காளி ரசம் தான் செய்தே உங்களை நினைக்காமலா செய்தேன்.

என்ன பிரச்சனை அருசுவைக்கு வாங்க ரிலாக்ஸ் ஆகுங்க.
ஆண்டவன் உங்க பிரச்சனையை சுலபமாக தீர்க்க துணை புரியட்டும்.
வாழ்த்து தெரிவித்ததற்கு மிகவும் நன்றி.

என்னுடைய கறி தக்குடிக்கு பிறகு வேறு எதுவும் செய்து பார்க்கவில்லையா?
ஜலீலா

அக்கா ஜலீலாக்கா,
ஏப்ரல் 16, 2008 - 3:22am - வழங்கியவர் அதிரா

அக்கா ஜலீலாக்கா,
நேற்று எப்படித்தான் இந்தப் பகுதி என் கண்ணில் படாமல் போச்சோ என்று கவலையாக இருக்கிறது. நீங்கள் இல்லாதபோது நாங்கள் கதைத்தோம் 307 குறிப்பிற்கு வந்துவிட்டா, இனி 3 கொடுத்தால் பெரியதொரு வாழ்த்து... ஏன் விருந்தே தரலாம் என்று. ஆனால் நீங்கள் வந்தவேகத்துடன் மீதி 3 ஐயும் கொடுத்ததை நான் கவனிக்கவில்லை. அதற்கிடையில் கதீஜா, ஆரம்பித்துவிட்டார்....சந்தோசம்

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா, நானூறு சமையல் குறிப்புகள் என்றால் சும்மாவா? உண்மையில் இப்படி அதிகப்படியான குறிப்புகளை கொடுத்த நீங்களெல்லோரும் க்றேட் தான். ஒரு குறிப்பனுப்புவதே எவ்வளவு கஸ்டமென்பது எனக்கு இப்பதான் தெரியுது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா உங்கள்
ஏப்ரல் 16, 2008 - 4:13am - வழங்கியவர் Jaleela Banu

அதிரா உங்கள் மணமார்ந்த வாழ்த்துக்கு நன்றி.
உங்க இரண்டு வாண்டுகள் நலமா?
நீங்க எப்படி இருக்கீங்க.
உங்க எல்லோருடைய அன்பின் காரணமாக தான் சீக்கிரம் கொடுத்து முடித்தேன்.
என்ன என்ன்னால் நீங்க எல்லோரும் கதைக்கும் நேரம் என்னால் கதைக்க முடியல.

ஜலீலா

வாழ்த்துக்கள்
ஏப்ரல் 16, 2008 - 10:13am - வழங்கியவர் Manohari

வாழ்த்துக்கள் திருமதி ஜலீலா. ஸாரிம்மா எனக்கிருந்த பிரச்சனையில் நேற்று உங்களை வாழ்த்தாமல் சென்று விட்டேன். நான்கு சதங்களைக் கொடுத்து மாபெரும் சாதனையாளராகிவிட்டீர்கள் பாராட்டுக்கள். உங்களுக்கிருக்கும் திறமைக்கும் சுறுசுறுப்பிற்கும் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே நினைக்கின்றேன் உங்கள் சேவை அறுசுவைக்கு என்றுமே தேவை என்பதால் இதுப் போலவே தொடர்ந்து உங்கள் சேவையைத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் நன்றி.

எப்போ வேணுமின்னாலும் வாங்க...
ஏப்ரல் 16, 2008 - 10:15am - வழங்கியவர் இலா

எப்பிடி மறக்க!!!! மறக்க முடியவில்லை....

நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும். உடல் நலனையும் கவனித்துகொள்ளுங்கள்

இலா

Hope is just the part of the equation

வாழ்த்துகள்
ஏப்ரல் 16, 2008 - 12:29pm - வழங்கியவர் Vijitvm

அசத்தல் ராணி ஜலீலா மேம் வாழ்த்துகள் அசத்திட்டிங்க போங்க... உங்க 400 குறிப்புகளும் ரொம்ப நல்லா இருக்க்கு. என்னால் நேற்று வாழ்த்து சொல்ல முடிய்ல்லை. சர்வர் ப்ராப்ளமா தெரியல்லை. என்னால் அருசுவையில் உள்ளே வர் முடியல்லை. 5000 ற்க்கு செல்ல வாழ்ர்த்துகள். இதேபோல் என்றும் அசத்துங்க். என்றென்றும் உங்கள் தோழி விஜி

இந்த விஜிக்காக நிற்ய்ய வெஜ் ரெசிப்பிஸும் குடுங்கள்.

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா!!
ஏப்ரல் 16, 2008 - 12:40pm - வழங்கியவர் Nirupama

டியர் ஜலீலா அக்கா,

400 என்ற இமாலய இலக்கை எட்டிய தங்களுக்கு மனதார்ந்த வாழ்த்துக்கள்.மேலும்,இதே போல் பல பயனுள்ள குறிப்புகளை கொடுத்து அனைவரையும் ஊக்குவியுங்கள் அக்கா.
எக்ஸ்பெர்ட் ஆகிக் கொண்டு வருகிறேன் என்று நீங்கள் கூறியிருப்பதைக் கேட்கும் போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.அனைத்துக்கும் காரணம் உங்களின் ஊக்கமும்,கற்றுக் கொள்ள தாங்கள் செய்யும் உதவியும்,உடனடி பதிலும் தான்.அதற்கு உங்களுக்கு நன்றி.
என்னைப் போன்ற ஆரம்ப கால சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கு,அறுசுவை தளம் ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.தளத்தை நிர்வகிக்கும் அட்மின் அவர்களுக்கும்,அறுசுவைக்கும் மிக்க நன்றி.
ஜலீலாக்கா,கடந்த இரு நாட்களாக இந்த பக்கத்தினுள் நுழைய முடியவில்லை.ஏனென்று தெரியவில்லை.அதனால் தான் வேறெங்கோ தெரிவிப்பதற்கு பதில் உங்கள் 400 வது ரெஸிபியின் கீழ் தெரிவிக்கலாமே என்று தெரிவித்திருந்தேன்.இப்போது தான் நுழைய முடிந்தது.

அன்புடன்,
நிருபமா

அட்மின்
ஏப்ரல் 16, 2008 - 3:40pm - வழங்கியவர் thalika

அட்மின் மேலே பாருங்க..இப்படி தான் அடிகக்டி யாராவது அங்கே நுழைய முடியவில்லை என்பார்கள் அதனால் தான் எல்லோருக்கும் ப்ரச்சனை உண்டு என யூகித்தேன்..உங்கள் கவனத்திற்காக அழைக்கிறேன்.

வாழ்த்துக்கள் ஜலீலா
ஏப்ரல் 17, 2008 - 12:30am - வழங்கியவர் DEVA

400 குறிப்புகளை இத்தனை குறுகிய காலத்தில் எழுதிய தங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்க தினமும் உங்க வீட்டு சமையல் என்னன்னு மன்றத்தில் சொல்லும்போதே , எப்படித்தான் இத்தனை அயிட்டங்களையும் சமைக்கிறீங்களோன்னு மலைப்பா இருக்கும். யார் எந்த சந்தேகம் கேட்டாலும் உடனே பதிலளித்து உதவும் உங்கள் குணத்தை பாராட்டியே ஆகவேண்டும். தாங்கள் இதுபோல் இன்னும் பல குறிப்புகள் அளித்து அனைவருக்கும் உதவ என் வாழ்த்துக்கள்.

46 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »