topic_image


அன்புள்ள அனைவருக்கும்,நாம் பல் வேறு நாடுகளில் இருந்தாலும்,ஊர்களில் இருந்தாலும் அருசுவை என்னும் அருமையான தலத்தில் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து இருக்கின்றோம்,நமக்குள் ஆலோசனைகள்,அரட்டைகள்,கஸ்டங்கள்,
சந்தேகங்கள் என என அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்...ஒன்றை தவிர்த்து அதுதான் ஆட்டோகிராப்...(ஏற்கனவே இருந்தால் சொல்லிடுங்க)

1.சிலர் நம் அருசுவையில் மறக்கமுடியாதவர்களாக இருக்கலாம்...
2.சிலர் நம் மனதை கவர்ந்தவர்களாக இருக்கலாம்...
3.சிலரின் கஸ்டங்கள் நம் மனதில் வடுக்கலாக இருக்கலாம்...
4.சிலரின் சந்தோசமான நிகழ்வுகள் என்றென்றும் மறக்கமுடியாத மகிழ்ச்சியாக அமைந்து இருக்கலாம்..
5.நம்மில் சிலரை யாராவது மிஸ் பண்ணி இருக்கலாம்...
6.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்(அது அவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கும்)அது மற்றவர்களுக்கு தெரிந்து இருக்கும் தெரிந்தவர்கள் அதை வெளிப்படுத்தலாம்..

இப்படிப்பட்டவைகளை மனசு விட்டு பேசிட்டு போங்க...மனதில் வைத்து எதுக்குங்க?நம்ம சேவிங்ஸா கூட போகுது...பேசினாலாவது நமக்குள் இன்னும் நெறுக்கம் அதிகரிக்கும்...அடுதவர்கள் புரிந்து கொள்ள முடியும்...கெட் ஸ்டாட் நவ்...யார் ஆரம்பிக்க போறது?எனக்கு இப்ப கொஞ்சம் டைம் இல்லை..வேலை பளு..டைம் கிடைத்ததும் நான் பதிவி போடுகிறேன்..


அருசுவையின் ஆட்டோகிராப்
ஏப்ரல் 18, 2008 - 10:10am - வழங்கியவர் MarliyaNoohu

அன்புள்ள அனைவருக்கும்,நாம் பல் வேறு நாடுகளில் இருந்தாலும்,ஊர்களில் இருந்தாலும் அருசுவை என்னும் அருமையான தலத்தில் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து இருக்கின்றோம்,நமக்குள் ஆலோசனைகள்,அரட்டைகள்,கஸ்டங்கள்,
சந்தேகங்கள் என என அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்...ஒன்றை தவிர்த்து அதுதான் ஆட்டோகிராப்...(ஏற்கனவே இருந்தால் சொல்லிடுங்க)

1.சிலர் நம் அருசுவையில் மறக்கமுடியாதவர்களாக இருக்கலாம்...
2.சிலர் நம் மனதை கவர்ந்தவர்களாக இருக்கலாம்...
3.சிலரின் கஸ்டங்கள் நம் மனதில் வடுக்கலாக இருக்கலாம்...
4.சிலரின் சந்தோசமான நிகழ்வுகள் என்றென்றும் மறக்கமுடியாத மகிழ்ச்சியாக அமைந்து இருக்கலாம்..
5.நம்மில் சிலரை யாராவது மிஸ் பண்ணி இருக்கலாம்...
6.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்(அது அவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கும்)அது மற்றவர்களுக்கு தெரிந்து இருக்கும் தெரிந்தவர்கள் அதை வெளிப்படுத்தலாம்..

இப்படிப்பட்டவைகளை மனசு விட்டு பேசிட்டு போங்க...மனதில் வைத்து எதுக்குங்க?நம்ம சேவிங்ஸா கூட போகுது...பேசினாலாவது நமக்குள் இன்னும் நெறுக்கம் அதிகரிக்கும்...அடுதவர்கள் புரிந்து கொள்ள முடியும்...கெட் ஸ்டாட் நவ்...யார் ஆரம்பிக்க போறது?எனக்கு இப்ப கொஞ்சம் டைம் இல்லை..வேலை பளு..டைம் கிடைத்ததும் நான் பதிவி போடுகிறேன்..
அன்புடன்,
மர்ழியாநூஹு

அதிராவையும் பிடிக்கும்
ஏப்ரல் 18, 2008 - 10:24am - வழங்கியவர் malathi

எனக்குத்தெரிந்து அருசுவையில் என்னுடைய சந்தோஷமான நிகழ்வு அந்த 'விடுகதை' எபிஸோடுதான். அதன் கதாநாயகியர்களான அஸ்மாவும், அதிராவும் பண்ணிய சேட்டைகளை இப்போது நினத்தாலும்.......அதுவும் பாவம் அதிரா இன்னும் 'விடுகதைக்கு' விடை யோசித்துக்கொண்டிருப்பதாக ' கேள்விப்படுகிறேன்.' என்னால் மறக்கமுடியாத சகோதரி என்றால் அது அதிராதான். நல்ல ஸ்போர்டிவ்னெஸ்.

அன்புள்ள மர்ழியாங்கோ.......
ஏப்ரல் 18, 2008 - 10:24am - வழங்கியவர் அதிரா

அன்புள்ள மர்ழியாங்கோ.......
நல்ல தலைப்பெல்லாம் சொல்லுறீங்களே? இதை எல்லாம் எந்த எக்கவுண்டில் சேவ் பண்ணி வச்சிருக்கீங்க.... ஆட்டோகிராப் என்றெல்லாம் கதைத்து கலக்குறீங்க... நானும் கொஞ்சம் பொறுத்து வாறேனுங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஐயோ மாலதியக்கா,
ஏப்ரல் 18, 2008 - 10:31am - வழங்கியவர் அதிரா

உதட்டால சொல்லுறீங்களா? இல்லை உள்ளத்தாலதான் சொல்லுறீங்களா என்று தெரியவில்லை... உண்மையாவா சொல்லுறீங்க? ஒருவர் சொன்னாலே 100 பேர் சொன்னதற்கு சமம்(சுப்பர் ஸ்டார் வசனம் மாதிரி) என எடுத்துக்கொள்கிறேன். என்னாலயும் அந்த பொன்னான நாட்களையும் அத்தனை அன்புச் சகோதரிகளையும் மறக்கவே முடியாது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் ஆட்டோகிராப்.... இலா ( அ) இலக்குமி ( அ) லக்ஷ்மி....
ஏப்ரல் 18, 2008 - 10:59am - வழங்கியவர் இலா

என்னை பற்றி....

அட்மின் பணி தான்... அலுவலகம்: நியுயார்க்... வசிப்பது பாஸ்டன் ( வந்து சில மாதம் ஆகிரது)... வீரா... என் கணவர்....

எப்படி அருசுவை அறிமுகம்:

வித்யாசமான சமையல் குறிப்பு தேடி கூகுளித்துக் ( athaangaa GOOGLE)கொண்டு இருக்கும் போது ஒரு நண்பி அருசுவை பற்றி சொல்ல... நானும் அருசுவை ஜோதியில் கலந்து விட்டேன்... தொடர்ந்து அருசுவையில் வர மிக முக்கியமான காரணம்.....

1) தமிழில் இருப்பது

தாய் மொழியில் வாசிக்கும் வேகம் இன்னும் எனக்கு பிற மொழிகளில் வரவில்லை....பின்னர் இங்கு உறுப்பினர்களின் பங்களிப்பு மீண்டும் மீண்டும் வர தூண்டியது.
அருசுவையின் அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது....

மெல்ல தொடங்கிய பழக்கம்.. விரைவில் இன்றியமையாததாக மாறி விட்டது...
அட்மின் அவர்களின் திருமணம்.... மற்றும் மன்றதில் ஒரு குடும்பமாக பழகியது... எனக்கு... ஒரு இனிமையான புத்த்கம் போல அமைந்தது.

உங்கள் அனைவரையும் மிக நெருங்கிய குடும்ப அங்கத்தினர் போல உணர்கிரேன்....
அருசுவை வெறும் உணவு சுவை மட்டும் எனக்கு அளிக்கவில்லை...
வாடிய காலங்களில் உங்கள் த்ரெட் என்னை புன்னகை செய்ய வைத்தன...

எனக்கு செல்விமா/ஜலீலாக்கா/மனோ ஆன்டி/ மனோஹரி மேடம்/தளிகா ( இன்னும் உன் சிக்கனை என் ரெசிபி என்று சொல்லி அலைகிறேன்)/மர்லியா ( இந்த த்ரெட்க்கு நன்றி)../அதிரா... மற்றும் மறந்துவிட்ட பலரும்... என் தினசரி வாழ்வில் ஒரு அங்கம்.....
ஓ!!! சொல்ல மறந்து விட்டேன்.. அருசுவை பார்த்து.. என் அண்ணன் செய்த கிறிஸ்மஸ் டின்னர்.. மறக்க முடியாதது...

என் வேலை பளு காரணமாக.. சில சமயம் வரவில்லை... ஆனாலும்.. ஒரு நிமிடம் எட்டி பார்த்துவிடுவேன்....
என்னை போல பலர் இருக்கிறார்கள்... உங்கள் நேரத்தில் சில நிமிடங்கள் செலவிட்டு உங்கள் முத்திரை பதித்துவிட்டு செல்லுங்கள்....

ஞாபகம் வருதே....
ஏப்ரல் 18, 2008 - 2:49pm - வழங்கியவர் sadaw

ஹாய் தோழிகளே

மிகவும் நல்ல பதிவி இது நன்றி மர்ழியா எனக்கும் அந்த விடுகதை த்ரெட்டை மறக்கமுடியாது இன்னும் யாரிடமும் அதிகம் பேசி பழக்கம் இல்லை அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் கண்டிப்பாக பதிவு போடுகிறேன் ..

எனது ஆட்டோகிராப்
ஏப்ரல் 19, 2008 - 2:31am - வழங்கியவர் அதிரா

அறுசுவையில் இன்னுமொன்று மறக்கமுடியாதது , அன்று சிரித்ததில் வயிறு வலியே எடுத்துவிட்டது.

இந்தியாவில் இரவு 1 மணியிருக்கும்... எங்கள் அட்மின் கொம்பியூட்டர் சம்பந்தமான சொற்களுக்கு விளக்கம் கொடுத்து ஒரு பதிவு போட்டார். அதைப் பார்த்த அமெரிக்கா- வின்னி சொன்னார் நான் போட நினைதேன் .. நீங்க போட்டிட்டீங்க(அப்படி ஏதோ), உடனே அட்மினின் பதில் -- தூக்கம் வரவில்லை அதுதான்.....
உடனே வின்னி... சொன்னார்.. முன்பென்றால் பறவாயில்லை இப்போ ?? இதைப்பார்த்துக்கொண்டு யூகே யில் இருந்த என் வாய் சொல்லுக் கேட்கவில்லை, நான் சொன்னேன்,,, வின்னி சூப்பர் பதில் என்று.... உடனே ,, அட்மின் --" எப்பவுமே முன்னுரிமை முதல்மனைவிக்குதான்... இது 2 வது மனைவிக்கும் தெரியும்... என்றார்.
எங்கள் சகோதரி யூ. ஏ. ஈ இல் ஒருவர் இருக்கிறார். அவர் தூக்கத்திலும் எழுந்து ஒரு தடவை அறுசுவையைத் தட்டுவார்... அப்படி செய்தவேளை... இதைப்பார்த்ததும்...

அவசரமாக, என்னப்பா 2 மனைவியா... என்னோட தூக்கமே போச்சே என்றார்.... அவ்வளவுதான் 2 நாட்கள் நினைத்து நினத்துச் சிரித்தேன்..... இங்குதான் எங்கோ அரட்டையில் அது உள்ளது... மிஸ் பண்ணினவர்கள் பாருங்கள்... என்ன எனக்கு சிரிப்பே வரவில்லை என்றும் சிலர் சொல்லலாம்... வந்தால் சிரியுங்கள்....

எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கு அறுசுவையில் உசாராக சொல்லிவிட்டார் ஆனால் வீட்டில் (அண்ணி கொடுத்த) நடந்த பூசையில் , இப்போ அடிக்கடி புது சர்வர் வரப் போகிறது, அதில் இங்குள்ள தேவையற்றவைகள் இருக்காது என்று சொல்வது காதில் கேட்கிறது... அழிந்து போவதற்கிடையில் எல்லோரும் பாருங்கள். இது எனது ஆட்டோகிராப் தானே அதனால் தவறிருந்தாலும் யாரும் கோபப்பட வேண்டாம்.... மர்ழியா இது உங்கள் பகுதி... என்னைக் காப்பாற்றிடுவீங்கதானே?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அருசுவையின் ஆட்டோகிராப்
ஏப்ரல் 19, 2008 - 9:29am - வழங்கியவர் MarliyaNoohu

அதிரா என் கையை புடிச்சுட்டு வாங்க காப்பாத்துறேன்,..அனைவருக்கும் நன்றி...எனக்கு நிறைய போடா வேண்டி இருக்கு..வேலை செய்யவும்,அப்பப்ப ஈ ஈ அருசுவக்கு பல் இலிக்கவும்தான் டைம் இருக்கு...எப்ப இதில் பதிவு போப்போறேன்னோ தெரியல..ஆனா அனைவரோடதும் படிக்க சுவாரஷ்யமா இருக்கு..
அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா-autograph
ஏப்ரல் 20, 2008 - 2:08pm - வழங்கியவர் thalika

மர்ழியா நல்ல த்ரெட்..ஏற்கனவே இருந்தால் சொல்லிடுங்கன்னு படிச்சதும் கொல்லுன்னு சிரிச்சுட்டேன்;-D
எழுத நிறைய இருக்கு ஆனால் எதுவும் கிட்டவில்லை...இங்கே வந்தப்ப இருந்த நானும் இப்ப இருக்கற எனக்கும் நிறைய வித்யாசம் இருக்கு..யார் எது எனக்கு சொல்லித் தங்களோ இல்லையோ நானா எதெதுலயோ ரொம்ப முன்னேறி இருக்கேன்னு எனக்கா தோனுது.
இப்ப எப்படி மற்றவர்களிடம் பேசுவது என்று தெரிந்து கொண்டேன் அதற்கு காரணம் தேவா,செல்வீ,மனோஹரி,மனோ,மாலதிக்
கா போன்ற அனுபவசாலிகள் ...அதில் என்னை மிகவும் கவர்ந்தது தேவா.ஏன்னா நான் எழுத்தை பார்த்ததும் ஒரு நடுத்தர வயது பெண் ஒரு குடும்பத்தலைவி,கட் அன்ட் ரைட்டா பேசும் ஒரு கண்டிப்பாண பெண்ணு மனசுக்குள்ள ஒரு கற்பனை இருந்தது...ஆனால் எனக்கு ஆச்சரியம் தேவா என்பவர் ஒரு சின்ன பெண்,ரொம்ப எளிமையான இன்னைக்கி புதுசா பழகினாலும் எவ்வளவோ நாள் பழகின மாதிரியான பேச்சு..அது எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது.
பிறகு செல்வீக்கா..என் அம்மாட்டா சொல்வது போல கதையளப்பேன்..என்ன ரீல் விட்டாலும் கேட்டுட்டு சலிக்காம பதிலும் சொல்வாங்க.என்ன வேலை இருந்தாலும் அதற்கிடையி வந்து நம்ம வயதுக்கேத்த மாதிரி பேசும் திறமை படைத்தவர்.
ஹர்ஷினி ,ஹேமாவை மறக்க முடியாது ஏனோ இந்த ரெண்டு பேரும் ஓடியே போயிட்டாங்க சொல்லாம கொள்ளாம.
பின் சமீபகாலமாக இன்னவர் என்று சொல்லமுடியாத மாதிரி மர்ழியா,ஜலீலாக்கா,அதிரா,கதீ,ரச
ியா,அஸ்மா,ஹிபா,ரீஹா,பர்வீன் என இன்னும் பலரும் அன்றாடம் எனது குடும்பத்தில் ஒருவர் போல ஆகிவிட்டார்கள்..
இதில் நான் அதிகம் பேசாத இரண்டு சகோதரிகள் வானதி,மாலி..ஆனால் இருவரும் நல்ல குணமுடையவர்கள்..ரெண்டு பேர்ருடைய எதார்த்தமும் எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது..அறுசுவையில் எனக்கு மிகவும் பிடித்தமான ஆள் என்றால் அது வானதி தான்.
இங்கே பல வருத்தமான நிகழ்விகளும் நடந்திருந்தாலும் அதற்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும் ஏன்னா அதனால் என்னை தைரியமா வச்சுக்க அதுவும் உதவி செய்தது..அதற்கு முக்கியமான காரணம் அட்மின் பாபுண்ணா..எப்ப நான் திட்ராங்க,ஒதக்கிராங்கன்னு பொலம்பினாலும் என்னை திருப்பி திட்டாம பொறுமியா தைரியம் கொடுப்பார்..அவருடைய தைரியமும் வாய் சாமர்த்தியமும் எனக்கு பிடித்திருக்கிறது...
பின் இங்கே மறக்க முடியாத சில சம்பவங்கள் என்றால் அது பிறந்த நாளுக்கு எனக்கு கிடைத்த வாழ்த்துக்கள்..வாழ்க்கையில் முதல் முறையாக கிடைத்தது..பின் காது குத்துவது சம்மந்தமான ஒரு விவாதம் முன்பு நடந்தது..அதன் பிறகு சுபா என்றால் எனக்கு கம்மல் நியாபகம் வந்து எப்ப நினைத்தாலும் சிரிப்பு வந்து விடும்.
அதன் பிறகு பலபல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்து விட்டது..
4 வருடமாக தமிழுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் பேசினால் கூட திக்கும் நிலமை வந்து விட்டது...அறுசுவைக்கு வந்தபின் மறந்து போன தமிழை திரும்ப கொண்டு வந்து விட்டேன் இப்பொழுது கணவில் கூட தமிழ் தான்.
பிறகு எனக்கு மிகவும் பிடித்தமான குழந்தை வளர்ப்பு&குழந்தையின் மனநலம் பற்றியவைகளை படிப்பதோடு நிறுத்தாமல் மற்றவர்களிடம் பைர்ந்து கொள்ளவும் மிகவும் உதவியது அறுசுவை.
என்ன மர்ழியா இதைத் தானே கேட்டீங்க??நான் சரியாத் தானே சொன்னேன்??

மர்ழியா,
ஏப்ரல் 20, 2008 - 4:08pm - வழங்கியவர் அதிரா

மர்ழியா,
என்னோட ஓட்டோகிராப்தானே... நான் ஏன் எழுதவேணும் என்றெல்லாம் சொல்லி "ஈ" காட்டினால் போதாது.... சிரித்தது அழுதது எல்லாவற்றையும் எழுதுங்க... நாளைக்கு எழுதிடுவீங்க இல்ல?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

யாரும்
ஏப்ரல் 20, 2008 - 9:37pm - வழங்கியவர் thalika

அய்யோ ஜெ ,திவ்யா வை மறந்துட்டேன்.நேத்து நைட் தூக்கமே போயிடுச்சு..என்ன யாரும் எழுத மாட்டேங்கரீங்க?

இதோ ஆட்டோக்ராஃப்
ஏப்ரல் 21, 2008 - 12:20am - வழங்கியவர் malathi

ஓ!...... அது இப்படி விளக்கமா எழுதனுமா? முதலில் இந்த அருசுவையை என்னை தொடர்ந்து படிக்க வைத்தவர் மனோகரி.
அவருடைய சமையல் குறிப்புகள் என்னை ஆச்சர்யப்பட வைத்தது. அப்புறம் அவர் எழுதிய ஆர்டிக்ள்ஸில் இருந்த நுட்பமும், மொழி பிரவாகமும், தெளிவும் எனக்கு பிடிக்கும். நாம் அவருக்கு போடும் பதிவுகளுக்கு நிச்சயமாக பதில் கொடுக்கும் அந்த சின்சியாரிட்டியும் என்னை கவர்ந்து என்னுடைய தோழிகளில் மிக முக்கியமானவராக மனோகரி ஆகிவிட்டார்.
ஜெயந்தி மாமி: இவர் இப்போது அடிக்கடி வராதது அருசுவைக்கு ஒரு இழப்புதான். இவருடைய குறிப்புகளும் எனக்கு பிடிக்கும்
ஜலீலா: மின்னல் வேகத்தில் குறிப்புகள் பறந்து வரும். யாருக்கு எந்த சந்தேகமாக இருந்தாலும் தனக்கு தெரிந்தததை உடனே சொல்லி உதவி செய்யும் பாங்கும், எல்லோரிடமும் நட்பு பாராட்டும் குணமும் எனக்கு பிடிக்கும். அவர் என்னை "மாலதியக்காவ்...." என்று உரிமையுடன் கூவி அழைப்பதும் பிடிக்கும்.
தளிகா: இவருடைய வயதுக்கு மீறிய விஷய ஞானமும், குழந்தை வளர்ப்பும், சுறுசுறுப்பும், கூடவே ஊடாடும் அந்த குறும்பும் என்னை கவர்ந்துவிட்டவை.
அப்புறம் அதிரா: அதுதான் சொன்னேனே அந்த ஸ்போர்டிவ்னஸ், அவருடைய பாஷையும் பிடிக்கும். அதில் அவர் எழுதும்போது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா அல்லது அவரின் ஸ்லாங் அப்படியா என்று தெரியாமல் நாம் குழம்பிப்போய் படிக்கும் அந்த இனிமையான அனுபவம் பிடிக்கும். விளையாட்டுகளில் அவருக்கு இருக்கும் ஆர்வம் பிடிக்கிறது.
மர்ழியா: எஸ்!......முதல் தடவையாக அவருடைய பெயரை ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்- லேயே கரைக்டாக எழுதிவிட்டேன். இவரும் நல்ல ஃப்ரன்ட்லியாக மூவ் பண்ணுவார். இவருடைய குழந்தையும் இப்ப நம்மை கவர்ந்து மனசில் தங்கிவிட்டார்.
செல்வியிடம் கொஞ்சம் தான் பேசி இருக்கிறேன். சமையலில் நல்ல அனுவம் தெரிகிறது.
அஸ்மாவிடம் ' விடுகதை 'யின் போதுதான் பழக்கம். நல்ல உழைப்பும், தமிழ் மொழியில் ஆர்வமும், விடாமுயற்சியும் தெரிகிறது. நல்ல ஃப்ரண்டாக்கிக்கொள்ளலாம்.
ப்ரதிபாலா, நந்தினி, வின்னீ, இன்னும் யாராவது விடுபட்டிருந்தால் பிறகு எழுதுகிறேன்.

தளிகா!... கிடைச்சிதா?
ஏப்ரல் 21, 2008 - 2:05am - வழங்கியவர் malathi

தளிகா!..... 16, 17, இப்ப 21 தேதிகளில் அனுப்பிய மெயில் கிடைத்ததா?

ஆட்டோகிராப்
ஏப்ரல் 21, 2008 - 5:21am - வழங்கியவர் அதிரா

இலக்குமி(இளவீரா), தளிகா, மாலதியக்கா, நீங்கள் எல்லோரும் அழகாக நன்றாக ஆட்டோகிராபை அழகுபடுத்தியுள்ளீங்கள். சாதவ்வும் நானும் ...... ஏதோ எங்களால் முடிஞ்சது அவ்வளவுதான்.

என்ன தளிகா... சிலபெயரை எழுத மறந்திட்டீங்களா? தூக்கம் வரவில்லையா? உண்மைதான், நாம் எதையாவது தவறவிட்டால், இரவில்தான் நினைப்பு வரும் பின்னர் தூக்கமே வராது. அன்று பார்த்து விடியவும் மாட்டுது.
நான் கூட சகோதரிகள் என்றுதான் போட்டேன்... பாபு அண்ணா, சுல்தான் அங்கிள்... எம்முடன் உரையாடிய யாரைத்தான் மறக்கமுடியும்.

ஆனால் இப்படி எழுதுகிறபோது... ஏதோ படிக்கிறகாலத்தில் அழுதழுது எழுதியவைகள் ஞாபகத்திற்கு வந்து... இங்கு ஏன் இப்படி எழுதவேணும் ஒருவேளை பிரியப் போகிறோமோ என்றுகூட எண்ணிப் பயமுறுத்துகிறது...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மாலதிக்கா
ஏப்ரல் 21, 2008 - 6:48am - வழங்கியவர் thalika

அதிரா ஆமாம் ..இங்கே பிசி ஆஃப் ஆகிக் கொண்டே இருக்குது..ஒன்னும் செய்ய முடியல..அவருடைய லேப்டாப் கிடைத்தால் தான் வரமுடியும்.நேற்று இரவு அதான் இதை மட்டும் போட்டு விட்டு போய்விட்டேன்..நிஜம் தான் ஜெ வை எப்படி விட்டேன் என்று யோசித்தே தூங்கவில்லை..எனக்கு இந்த வரிசையா எல்லார் பேரும் எழுதர வேலை ஆகாது எப்பவும் மொத்தமா சொல்லிட்டு ஓடிடுவேன்..நேத்து என்னமோ தோனிச்சு எழுதிட்டேன்.
மாலதிக்கா உங்களுக்கு 2 முறை பாதிக்கும் மேல் டைப் பன்னி பிசி ஆஃப் ஆயிடுச்சு..மீதம் பிறகு ஆஃப் ஆயிடும்.

ஈ காட்ட மாட்டேனுங்கோ
ஏப்ரல் 21, 2008 - 11:48pm - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் அதிரா,
கடந்த 2 நாட்களாக என் உடம்பு சரி இல்லாமல் போகிவிட்டது..அதனால்தான் அருசுவை ஐ எட்டிக்கூட பார்கமுடியல...கண்டிப்பாக என் பதிவும் வரும் இன்னும் கொஞ்சம் சரியானதும் வருகிறேன்...என் ஆட்டோகிராபில் உங்கள் பேட்சு இருக்கே யப்பா மறக்க முடியுமா?அதையும் தீட்ட வருகிறேன்...
அன்புடன்,
மர்ழியாநூஹு

ஆட்டோகிராப்
ஏப்ரல் 22, 2008 - 3:52am - வழங்கியவர் kr

நான் முதலில் சொல்லனும்னா அது ரூபி தான்,அவங்க தான் எனக்கு முதலில் அறிமுகம் ஆனவங்க.எனக்கு ஹிபா என்று பெயர் வைத்தவர்களும் அவர்களே.அந்த பெயரில் அருசுவையில் அழைக்கப்படுவதையும் விரும்புகிரேன்.ரூபி,உங்க லிஸ்டில் என் பெயரையும் சேர்த்தது மிக்க மகிழ்ச்சி.என்க்கு மிகவும் பிடித்த தோழிகளில் இவருக்கே முதல் இடம்.அதற்கு காரணம் பலபல...
நம் ஜலீலக்கா என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.உண்மையில் அவருக்கு நிகர் அவரே.அனைவருக்கும் உதவும் nature எல்லோரிடமும் இருக்காது,ஆனால் அவரை பற்றி நம் அனைவருக்கும் தெரியுமே.நமக்கு ஒரு நல்ல சகோதிரி அவர்.
நான் மற்றவரிடம் அதிகம் பேசியது இல்லை,ஆனாலும் திருமதி.மனோகிரி,தேவா,மனோ,ஜெயந்
தி,
செல்வி மாலதி.........இன்னும் பலரை
(திருமதி அனைவருக்கும்) நான் அமைதியாக ரசிப்பது உண்டு.
உணவு மட்டும் இன்றி எத்தனையோ விஷயம் பற்றி நாம் பேசுகிறோம்.
முன்பெல்லாம் ஏதாவது சந்தேகம்னா ஊருக்கு டக்குனு போன்,இப்போயெல்லாம் நம்ம அருசுவை தான்,நான் தனியா கேட்கனும்னு இல்லை,ஏற்க்கனவே நம்மில் யாராவது கேட்டிருப்போம்,அதற்கு எத்தனை விதமான பதில்கள்.
அதிரா,மர்ழியா,வானதி,சுபா இன்னும் பலர் அருசுவைக்கு அணிகலன்னாக இருக்கிரார்கள்.
இதில் ஒரு ஓரத்தில் .. நான்,silent spectatorராக....

ஒன்றும் அவசரம் வேண்டாம்
ஏப்ரல் 22, 2008 - 4:28am - வழங்கியவர் அதிரா

தளிகா கெதியா பிசியைத் திருத்துங்க... மர்ழியா.. உடல் நலமில்லையா.... ஒன்றும் அவசரம் வேண்டாம் ஆறுதலாக.... நன்றாக .... நலமடைந்ததும் வாங்கம்மா..... ஏன் தெரியுமா.... என்னையும் ஏதோ எழுதப்போறேன் என்றீங்களே... அதுதான் நடுக்கமாக இருக்கு....

இதோ ஹிபாவும் எழுதியாச்சு.... ஒவ்வொருத்தரா...யோசிச்சு யோசிச்சுதான் வாறாங்க....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அஸ்மா, கதீஜா
ஏப்ரல் 22, 2008 - 5:26am - வழங்கியவர் kr

அல்லல்லா......................
.நான் எப்படி அஸ்மா அவர்களையும் கதீஜாவையும் விட்டேன்.சே..சே..அவர்களோட பங்களிப்பு அறுசுவைக்கு மகுடம் அல்லவா?

மர்ழியாவின் ஆட்டோகிராப்.....
ஏப்ரல் 25, 2008 - 10:36am - வழங்கியவர் MarliyaNoohu

அப்பா இதை எழுதுறப்பா ஏதாவது ஒருவேலை..இப்ப முடிவோடு உட்கார்ந்துட்டேன்...
அருசுவையை எனக்கு காண்பித்த என் அன்பு கணவருக்கு ஒரு சல்யூட்...

இங்கு வந்ததும் நல்லபிள்ளை போல் பாவமாக எனக்கு தெரிஞ்ச,நான் முதலில் கருத்து சொன்ன ஒரு பெண் அதான்பா தளிகா(இப்ப இவளையா பாவம்னு நினைத்தோம்னு ஒரு பீலிங்)இப்ப எனக்கு திக் பிரண்ட்....நிறைய பேசி இருக்கோம் அதை மற்றவங்க கேட்டால் லூசாப்பா நீன்னு கேட்பாங்க ஹா ஹா...

அடுத்ததா என்னை திரும்பி பார்க்க வைத்த சூப்பர் வுமன்(புது பட்டம் கம்பீரமா நில்லுங்க) நம்ம ஜளீலாக்கா...மனதில் ஒன்னும் கிடயாது எல்லாத்தையும் கொட்டிடுவாங்க...நல்ல அக்கா.....

அடுத்து அதிரடி ஹீரோயின் செல்விக்காதானுங்கோ என்னமா லுக் கொடுக்குறாங்க...மாஷாஅல்லாஹ் ...ஆனாலும் என்னை இங்கு வந்த புதிதில் ஓட விட்டீங்க பாருங்க அதுக்கு இருக்கு ஒருநாள் காட்சிலா கதைலாம் சொல்லுவியான்னா கேட்டீங்க மறக்க மாட்டேன்.அதில் மூன்று சந்தோஷம் அதனால் பொறுந்திக்கொண்டேன்
1.என் இணை பிரியா தோழி இருப்பதை உங்களால் தெரிந்து கொண்டேன்
2.இதன் மூலம் நாம குலோஸ் ஆனோம்
3.நீங்க புதிர் போட்ட அந்த நேரத்தில் குழம்பியது நான் மட்டும்னுதான் நினைத்தேன் என்னுடன் பல பேர் குழம்பி இருக்காங்க..

கதீஜா,நம் பிரன்ஷிப் பல வருடம் கடந்து விட்டது..ஆனாலும் இன்னும் புது பொலிவுடந்தான் நாம் இருக்கிறோம்

அடுத்து உலக அழகி தேவா மேடம் ,
சோலை மேடம் ஏனோ காணவில்லை :-(
ஜானகி,வித்யா,முபீனா,ஹேமா,மாலதி அக்கா,சுஜா,தீபா,வின்னி,ஜுலைஹா,
அஸ்மா..பாத்திமா,அன்னு,அஞலி,(இன
்னும் யாரையாவது விடுப்பட்டு இருந்தால் பிளீஸ் மன்னிக்கவும்...யாரையும் என்னால் மறக்க முடியாது

என்னை கவலை கொள்ள வைத்த சில சகோதிரிகள் இருக்காங்க நல்லதை பற்றி பேசலாம் இதை பற்றி சொன்னால் கவலைதான் மிஞ்சும்...எனவே பெயர் சொல்ல விரும்பல...அவர்களின் வாழ்கை அவர்கள் எண்ணம் போல அமைய வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுகிறேன்

அடுத்து அதிரா (அதிர வைக்கும் பேட்சு)அலகான வார்த்தைகள்..இலங்கைத்தமிழ்..கவ
ி நம்மை டிரிப்க்கு அழைத்து போனப்ப அதிரா பற்றி வந்திருக்கு வாசகம் இன்னும் மறக்க முடியாது இப்ப கூட சிரிப்பு வருது...அடுத்ததா விடுகதையில் அதிரடியா களம் இறங்கியது..அந்த விஷயம் நான் மட்டும் இல்லை நம் யாராலும் ம்
அறக்க முடியாது..அஸ்மாவையும்,அதிராவைய
ும்..

மறக்க முடியாத சம்பவங்கள் :
1.கவிதாவின் அந்த அருமையான டிரிப் மறக்க முடியாதது.அவங்களைதான் காணோம் அடுத்த டிரிப் அழைத்து செல்ல ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க போல...
2.பாபு அண்ணன் ஏமாற்றியது பற்றிய கலக்கலான அந்த திரட்..
3.சுவாரஸ்யமான பல நிகழ்ச்சிகள்..
4.அருமையான சமையல்கள்..
5இதன் மூலம் கிடத்த நிறைய சினேகிதிகள்,அக்காமார்கள்,தங்கை
மார்கள்...

அருசுவை என்னும் பல்சுவைகளும் நிறைந்து விள்ங்கும் என் புது குடும்பமான இந்த அருசுவையை என்றேன்றும் என்னால் மறக்க முடியாது...இதை நமக்கு கொடுத்த அருமை அண்ணா,சிங்கிள் சிங்கம் (அதான் வாராருள்ள கொஞ்சம் வழி விடுங்கம்மா)
நம்ம பாபு அண்ணை எப்போதும் மறக்க முடியாது...அவங்களுக்கு ஒரு ஓ போடுங்க ஓ ஓ....

அன்புடன்,
மர்ழியாநூஹு

எனது ஆட்டோகிராப்
மே 23, 2008 - 11:25am - வழங்கியவர் seyedkatheeja

மர்ழியா முதலில் உனக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும் நல்ல த்ரெட் ஆரம்பித்து அதன் மூலம் நம் அறுசுவை சகோதரிகளின் நினைவுகளை அசை போட வைத்து இருக்கிறாய்.

முதலில் எனக்கு அறுசுவையை அறிமுகம் செய்த எனது கணவருக்கு நன்றி சொல்லனும் இதன் மூலம் நான் எவ்வளவு அக்கா,தங்கை,தோழிகளை பெற முடிந்தது.

நான் அறுசுவையை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வந்தாலும் நான் பெயர் பதிவு செய்து 1 வருடம் மேல் ஆகிறது. இங்கு எனக்கு முதலில் அறிமுகமானவர் மனோஹரி மேடம் தான் நான் முதலில் அவர்களிடம் மட்டும் தான் பேசியது உண்டு.தனியாக இருக்கும் நான் முன்னாடி எல்லாம் ரெம்பவும் பயந்தசுபாவம் உடையவள் மனோஹரி மேடம் உடைய பதில் எல்லாம் நல்ல தைரியம் தரக்கூடியதாக இருக்கும். அவர்கள் என்ன பதிவு போட்டாலும் அதற்க்கு பதில் போடுவது முதலில் நான்தான் தினமும் அறுசுவையை பார்த்துவிட்டு அவர்கள் எது எழுதி இருந்தாலும் அதை என் கணவரிடம் சொல்லாத நாள் இல்லை அந்த அளவுக்கு அவர்களை எனக்கு ரெம்பவும் பிடிக்கும். யாருக்கும் ஏதாவது ஒன்று என்றால் ஒரு தாயாக,தோழியாக,சகோதரியாக அவர்கள் பதில் தரும் விதம் ரெம்பவும் அருமை என்னை கவர்ந்த அன்பான,அழகான,அறிவான ஒரு பெண். அவர்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இந்த த்ரெட் முடிந்துவிடும்.

அடுத்தது நம்ம பாபு அண்ணன்.என்னுடைய குறிப்புகளை கூட்டாஞ்சோறு பகுதியில் சேர்த்ததை மறக்கமுடியாது.அதன் பிறகு யாரும் சமைக்கலாமில் என்னுடைய முதல் ரெசிபி வந்தது.இன்று வரை எல்லாருடனும் ஒரு சகோதர பாசத்துடன் பழகி வருவது பிடித்து இருக்கிறது எந்த வெப்சைட்டிலும் இந்த அளவுக்கு எல்லாரும் சகோதரத்துவத்துடன் பழகுவாங்களா என்று தெரியாது.அறுசுவைக்கு குறிப்பு கொடுக்க ஆரம்பித்ததில் இருந்து இதுவரை அறுசுவையே கதி என்று கிடக்கும் அளவுக்கு அறுசுவை ஒரு அங்கமாகிவிட்டது. எப்ப பிரவுஸ் பண்ண வந்தாலும் முதலில் ஓபன் பண்ணுவது அறுசுவையை மட்டும் தான். என் பையன் 2 வயசுல இருந்தே சொல்வான் மம்மி எந்த வெப்சைட்டுக்கு போவாங்க என்று என் ஹஸ் கேட்டால் அறுசுவை.காம் என்று சொல்லுவான்.அவனுக்கு தமிழ் எழுத்தை எதிலாவது பார்த்தால் கூட மம்மி அறுசுவை என்பான்.இப்பதான் தமிழ் எழுத்து என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறான்.அறுசுவை என் குடும்பம் போல ஆகிவிட்டதால் நான் அறுசுவைக்கு வராத நாட்களில் ரெம்பவும் அறுசுவையை மிஸ் பண்ணுகிறேன்.

அப்புறம் நம்ம செல்வி அக்கா முதலில் அவங்க அறுசுவையில் கொடுத்த குறிப்பை செய்து பின்னூட்டம் தந்த நாளில் இருந்து பழக்கம் இன்றுவரை என் அம்மா சொல்வதை போல தான் எனக்கு அட்வைஸ் சொல்லுவாங்க. எனக்கு ரெம்பவும் பிடிக்கும். அவங்களோட தைரியம்,என்றும் இளமை,அவங்களுடைய அனுபவம் எல்லாம் பிடிக்கும்.அவங்க கிட்ட இருந்து நான் நிறை கத்து இருக்கிறேன்.

அப்புறம் என் உயிர் தோழி மர்ழியா அவளை நான் முதலில் அடையாளம் கண்டு செல்வி அக்கா அவளை கலாய்ச்சியது மறக்க முடியாது.

அப்புறம் மனோ மேடம் இவங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும். இவங்க ரெசிபி அப்புறம் வெளிநாடா,இந்தியாவா த்ரெட்ல இவங்க கருத்து எனக்கு பிடித்து இருந்தது.

அதன் பிறகு அறுசுவையின் மூலம் எனக்கு அறிமுகம் ஆன தோழிகள் ஹவ்வா, பாயிஜா,அஸ்மா,ரஸியா,ஜுலைஹா, இவர்களையும் மறக்கமுடியாது.

அதன் பிறகு நம்ம தளிகா இவங்களை எனக்கு ரெம்பவும் பிடிக்கும் நல்ல மெச்சூர்டா பேசுவாங்க சின்னவயசு என்று போட்டோ பார்த்ததும் ஆச்சர்யம்.

அதன் பிறகு தேவா பிடிக்கும் இவங்களையும் ஏதோ பெரிய ஆள் என்று நின்னைக்கும் அளவுக்கு நல்ல திறமை வாய்ந்தவர். மேக்கம் டிப்ஸில் தொல தொல நைட்டி பற்றி எழுதியது மறக்கமுடியாது.

பின் ஜலீலா அக்கா இவங்களை அறுசுவை குடும்பத்தில் பிடிக்காதவங்களே இருக்கமாட்டார்கள். யாருக்கு ஒரு உதவி என்று கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் குணம் பிடிக்கும். மனசுல எதுவுமே இல்லாத ஆள்.

அப்புறம் ஜெயந்திமாமி,மாலதி மேடம்,அதிரா,இவங்க தமிழ் பேசுறதே ஒரு அழகுதான். அதிராவின் விடுகதை த்ரெட் மறக்கமுடியாது. நானும் இதில் புலம்பி இருப்பேன்.

அப்புறம் தங்கை செம்பருத்தி, ஜானகி,பானுகனி,வின்னி,ஹிபா,இப்ப புதுசா வந்ததுல இலா,விஜி,அஞ்சலி இவங்களையும் பிடிக்கும்.

அடேங்கப்பா இவ்வளவு பெரிய பதிவான்னு பார்த்து திட்டாதீங்கப்பா எனக்கு பிடித்த யாரையும் விட்டுடக்கூடாதே அதனால் தான்.

ஹேமா,ஹர்ஷினி,வாணிரமேஷ்,ஓவியா,ச
ிந்து இந்த 5 பேரும் எங்க போனாங்க.

யார் பெயராவது விட்டு போய் இருந்தால் மன்னிக்கனும்.

அன்புடன் கதீஜா.

கதீஜா என்னை விட்டுட்டீங்க
மே 23, 2008 - 11:34am - வழங்கியவர் pradeebala

ஹாய் கதீஜா என்னப்பா என்னை விட்டுட்டீங்க. பிடிக்காதா உங்களுக்கு என்னை
அன்புடன் தீபா

ஹாய் தீபா
மே 23, 2008 - 11:38am - வழங்கியவர் seyedkatheeja

உங்க பெயரை தீபா என்று டைப்பண்ணினேன் எப்படியோ விட்டு போய்டிச்சி உங்களை பிடிக்காமல் போகுமா சாரிப்பா. நான் சாப்பிட்டு வருகிறேன் பை.

அன்புடன் கதீஜா.

கதீஜா
மே 23, 2008 - 11:42am - வழங்கியவர் pradeebala

கதீஜா சும்மா தாம்ப வம்பு பண்ணினேன் உங்ககிட்ட.எனக்கு தெரியும் உங்களுக்கு என்னை பிடிக்கும் என்று
அன்புடன் தீபா

இதான் அருசுவை கதை
மே 24, 2008 - 8:29am - வழங்கியவர் Jaleela Banu

ஆ இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன்.
என்னபா தளிகா, கதிஜா, மாலதி யக்காவ், மர்லியா, கே.ஆர். எல்லாம் என்னை ரொம்பவே புகழ்ந்து இருக்கிறீர்கள் உங்கள் அனைவருடைய உள்ளத்தில் நீங்காதா இடம் பெற்றுள்ளேன் என்று நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

நான் முதலில் முட்டை கீமா பரோட்டா, கட்லெட்,எல்ல பிரியாணியும், கிரீம் ஆப் சிக்கன் சூப் இதேல்லாம் நல்ல செய்வேன், தக்க்டி ஆ , கால் பாய.(மசால் வடை, பகோடா, பஜ்ஜி, சிக்கன் பகோடா)
அப்போது துபாய் வந்து புதிதில் எந்த கடையிலாவது கேளுங்கள்
செய்து தருகிறேன் என்பேன் அவர் முடியாது என்று சொல்லிவிட்டார்.
கடைசியில் வீட்டி இருந்த படி எட்டு வருடம் வீட்டில் இருந்த படி சம்பாதித்தேன்,
பிறகு இப்போது ஆபிஸ் வேலை 7 வருடம்
இந்தியாவில் இருந்த போதும் எதையாவது கற்று கொண்டும் ,மற்றவர்கலுக்கு கற்று கொடுத்து கொண்டும், சம்பாதித்து கொண்டும் தான் இருந்தேன்.

பிறகு இஸ்லாம் கல்வி அந்த சைட்டை பார்த்து கொண்டிருக்கும் போது அருசுவை அறிமுகமானது.
ஆனால் பார்வை யிட முடியல வேறு இடத்தில் போய் பொய்ய் பார்ப்பேன், எப்படி கூட்டங்சோறு கிளிக் செய்வது, எப்படி யாரும் சமைக்கலாம் கிளிக் செய்வது என்று கூட தெரியாது,

பிறகு ஒவ்வொருநாள் ஓவ்வொரு ரெஸிபி வரும் போதும் ஆ எனக்கு தெரிந்தாவே இருக்கே எப்படி அனுப்புவது என்று தெரியலையே என்று ஒன்னறை வருடமா பார்வையிட்டு மட்டுமே வந்தேன்,

கடைசியில் எப்படியோ கண்டு பிடித்தேன், அதில் சேர்ந்தது நோன்பி, அப்போது ஆபிஸ் அரை நாள் ரொம்ப சுலமா போயிற்று

நோன்பி 30நாளும் 30 வித விதமாக செய்வேன்,
டெய்லி கஞ்சி, வடை (அ) பகோடா , சிக்கன் பஜ்ஜி, சூ , இரவு சாப்பாடு, மாலை நோன்பு திறக்க ஜூஸ், சுண்டல், பூரூட் சேலட், டிபன் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று வேறு பட்டு தான் செய்வேன்,
அப்ப 30 நாளில் ஒரு நாளைக்கு 12 ரெஸிபி என்றால் பார்த்த்க்கொள்ளுங்கள்.

அன்று அன்று செய்வதை அப்படியே கொடுத்து வந்தேன், அதே சமையம் வெஜ் (நான் வெஜ் ) எல்லோரும் பார்வையிட்வதால் இடை இடையே வெஜ்ஜும் கொடுத்து வந்தேன்,
இப்பை கொடுக்க ஆரம்பித்தது தான் மற்றவர்களை பார்த்து தான் நான் வியந்து இருந்தேன்,

நான் முதல் முதல் கொடுக்க ஆரம்பித்ததும் செய்து பார்த்து சட்பி கேட் கொடுத்தது செல்வி மேடமும், தளிக்காவும் பிறகு ஒகே மற்றவர்கல் செய்யும் அளவ்க்கு இருக்கு என்ரு கொடுக்க ஆரம்பித்தேன்,

///நான் ரெஸிபி கொடுப்பது பட்டம் வாங்கவோ, பாராட்டை பெறவோ, கிடையாது.//

நிறைய பேர் சமையலில் டீ கூட போட தெரியாமல், ஹாஸ்டலிலேயே தங்கி படித்து அப்படியே கல்யாணம் ஆகி வெளியூர் வந்து தத்தளிக்கிறார்கள்,
அந்த மாதிரி நிறைய பேருக்கு நான் போன் முலம் உதவி இர்யுக்கிறேன்.

அதே போல் இங்கு உள்ள சகோதரிகலுக்கும் உதவட்டும் என்ற நல்ல எண்ணம் தான்
சரியாக சமைக்க தெரியாமல் குப்பையில் போடுபவர்கல் நிறைய பேர் இருக்கிறார்கள்.
சாப்பாடு வேஸ்ட் பண்ண எனக்கு பிடிக்காது.

//எவ்வளவோ சகோதரிகள் செய்ய தெரியாமல் கணவன் மணைவி தகாறாறு, நிம்மதியின்னை இந்த மதிரி சகோதரிகளுக்கு பயன் படட்டும் என்பது தான் என் ஆசை.
//
நிறைய பேருக்கு ஞாபக மறதி என் அம்மாவே இப்போது என்னிடம் அளவு கேட்கிறார்கள்.
என் குறிப்பு இதில் இருந்தா ஒரு காலத்தில் எனக்கே மறந்து போனாலும் இதிலிருந்து டக்குன்னு பார்த்து கொள்ளலாம்.

எனக்கும் சுலபம், நமக்கு தெரிந்த நல்லதை உடனே நாலு பேருக்கு சொல்லிடனும்.

இதான் அருசுவை கதை அப்ப டைப்பண்ணி கை வலிக்குது.

என்றும் உங்கள்

ஜலீலா

இங்கேயுமா ?ஏங்கா இப்படி?
மே 24, 2008 - 8:41am - வழங்கியவர் MarliyaNoohu

யா அல்லாஹ் என்னால் முடிலய இப்போதான் வந்தேன் ஆட்டோகிராப் யாரு கொடுத்து இருக்கானு பார்கலாம்னு பார்த்தா நீங்க ஏங்கா பிக்னிக் போனாலுதான் அடுப்பை தூக்கிட்டு போறீங்க இப்பா ஆட்டோகிராபிலுமா?ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆ ஆரம்பத்தை பார்த்ததும் எனக்கு ஒரே சிரிப்பு .இதிலும் முதல் இடம் சமையலுக்குதான் நல்ல அக்கா போங்க ஹா ஹா..அடுத்ததைலாம் இன்னும் பார்கல இருங்க பார்த்துட்டு வாறேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

யக்கா ஜலிலாக்கா :-D
மே 24, 2008 - 8:47am - வழங்கியவர் MarliyaNoohu

யக்கா இது ஆட்டோ கிராப்..நல்ல பிள்ளையாட்டம் அதை பற்றி சொல்லுங்க யாரை பற்ர்ரியும் சொல்லல எல்லாம் ரெஸிபிஸ்,அனுபவம் இப்படிதான் போங்கக்க எனக்கு ஏமாற்றம்தாம்..பிளீஸ் கொஞ்ச நேரம் கையில் இருக்கும் அடுப்பை ஒரு ஓராமா வைத்துட்டு இந்த தலைப்புக்கு ஏற்ற பதிலை போடுங்க..இல்லை நாங்கலாம் சட்டியை தூக்க வேண்டியது வரும் ஆமா...

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஒன்னுமே இல்லை
மே 24, 2008 - 8:58am - வழங்கியவர் thalika

ஜலீலக்கா எனக்கு கொஞ்சம் சங்கடமா கூட ஆகிடுச்சு..எதை அமுக்கன்னே தெரியாம இருந்த நீங்க இப்ப எப்படிமுன்னேறியாச்சு.
இந்த வார்த்தைகள் உங்கள் மனசிலிருந்து வருவதை நல்ல புரிந்து கொள்ள முடிகிறது.உங்கள் முன்னால் நாங்கல்லாம் ஒன்னுமே இல்லை.

தளிகா
மே 24, 2008 - 9:05am - வழங்கியவர் MarliyaNoohu

அது கண்டிப்பாக தளிகா உண்மையில் ஜலிலக்கா மனதளவிலும் சரி,சமையல் இப்படி எதிலுமே கிரேட் தான்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஆஹா.. அக்கா பலே பலே...
மே 24, 2008 - 9:30am - வழங்கியவர் இலா

ஜ்லீலா அக்கா / கதீஜா உங்க ரெண்டு பேரோட ஆட்டோகிராப் ரொம்ப சூப்பர்...

51 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »