![]() சிம்ரன் Vs விஜய் ஆதிராஜ் சண்டை (நாடகம்) - மேலும் ஆலோசனைகள் தமிழ் தொலைக்காட்சி சானல் ஒன்றில் நடைபெற்ற சிம்ரன் Vs விஜய் ஆதிராஜ் சண்டையை ரசித்தீர்களா? உங்களில் எத்தனை பேர் இதை உண்மை என்று நினைக்கின்றீர்கள்? ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தொடரும் இதுபோன்ற நாடகங்கள் நமக்கெல்லாம் உணர்த்துவது என்ன? மக்கள் மற்றவர்களின் பிரச்சனையை, நேரடி குடுமிப்பிடி சண்டையை ரசிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றார்கள் என்ற பலவீனத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றார்களா? அல்லது அப்படி ஒரு பலவீனம் நம்மீது திணிக்கப்படுகின்றதா? எது எப்படியோ அவர்கள் ரேட்டிங் தற்காலிகமாக உயர்கின்றது. ஆனால் ஒரே மாதிரி வாய்ச்சண்டையையும், கோவித்துக்கொண்டு போய்விட்டு பிறகு சமாதானம் ஆகி வருவதையும் மீண்டும் மீண்டும் எல்லா சானலிலும் காண்பித்துக்கொண்டிருந்தால் கொஞ்சம் காலத்திற்கு பின்பு மக்கள் வெறுத்துப் போய்விடுவார்கள். பாவம், நமது தொலைக்காட்சி சானல்காரர்களுக்கு ஐடியாஸ் பஞ்சம் இருக்கிறது. நாம் கொஞ்சம் உதவலாமே.. என்னவெல்லாம் செய்தால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பரபரப்பாக்கி, பிரபலமாக்கலாம் என்று உங்களுக்கு தோன்றும் ஐடியாக்களை இங்கே அள்ளிவிடுங்கள். ஆலோசனைகள் நகைச்சுவையாக இருக்கட்டும். உருப்படியான, உண்மையான ஆலோசனைகள் இருந்தாலும் கொடுங்கள். பரவாயில்லை.. பிழைத்துப்போகட்டும். ஏப்ரல் 22, 2008 - 2:04am - வழங்கியவர் babu
|

