![]() காஸ்மெட்டிக்ஸ் உபயோகம்பற்றி சில கருத்துக்களை இங்கே சொல்லி இருக்கிறேன். 2) ப்ளீச்சிங் மாதம் ஒரு முறை செய்தால் போதும். முகத்தில் உள்ள முடியின் நிறம் மாறும்போது செய்தால் கூட போதும். முடிந்தவரை ஹெர்பல் ப்ளீச்சிங் செய்வது நல்லது. ப்ளீச்சிங், பேஷியல் போன்றவற்றை முடிந்தவரை சாயங்கால அல்லது இரவு வேளைகளில் செய்து கொள்வது நல்லது. ஏனெனில் அதற்கு பிறகு சருமத்தில் சோப், க்ரீம் போன்றவை உபயோகப்படுத்தாமலும், சூரிய ஒளி படாமல் வைத்திருப்பதும் அவசியம். 3) க்ளென்சிங் மில்க்கை அதிக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம். அதற்கு பதிலாக ஆயில் ப்ரீ அல்லது மற்ற தண்ணீரைப் போன்று நிறமற்ற க்ளீனிங் சொல்யூஷனை உபயோகிக்கலாம். 4) இரவு உறங்கும் முன் முகம் கழுவிவிட்டு தூங்கினால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும். மிகவும் மைல்டான க்ரீமை வேண்டுமானால் இரவு உபயோகிக்கலாம். எக்காரணம் கொண்டும் ஸ்ட்ராங்கான க்ரீமை உபயோகிக்காதீர்கள். 5) மேக்கப்பை அகற்ற பேபி ஆயில் அல்லது சிறந்த பிராண்டுகளில் கிடைக்கும் மேக்கப் ரிமூவரை உபயோகப்படுத்துங்கள். இப்போது கிடைக்கும் காஸ்மெட்டிக்ஸ் முக்கியமாக ஐலைனர், காஜல், லிப்ஸ்டிக் போன்றவை வெறும் சோப் மட்டும் கொண்டு கழுவினால் போகாது. 6) அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும் என்று நினைப்பவர்கள் சோப் மற்றும் பேஸ் வாஷ்க்கு பதிலாக மைல்டான பேபி லிக்விட் சோப்பை உபயோகிக்கலாம். முகம் வறண்டு போகாது. 7) கண் சம்பந்தப்பட்ட மேக்கப் அயிட்டங்களை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றுவது நல்லது. காலாவதி ஆகும் தேதி பார்த்து உபயோகிப்பது மிகவும் அவசியம். இது லிப்ஸ்டிக் போன்ற மற்ற காஸ்மெட்டிக்ஸ்க்கும் பொருந்தும். 8)கண்களுக்கு உபயோகப்படுத்தும் பன்னீரை தெரியாத பிராண்டுகளில் வாங்காமல் Dabur போன்ற தரமான பிராண்டுகளில் வாங்குவது நல்லது. 9) இரவு வாயைக் கொப்பளித்துவிட்டு அல்லது பல் விளக்கிவிட்டு தூங்குவது பல்லில் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கும். அதேபோல் வாரம் ஒரு முறை Colgate Professionl Clean Tooth Paste போன்றவை உபயோகித்து பற்கள், ஈறுகளை நாமே வீட்டில் சுத்தம் செய்துக் கொள்ளலாம். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உபயோகித்தால்கூட போதுமானது. 10) உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க ஹேர் ரிமூவிங் க்ரீமைவிட வேக்சிங், எபிலேட்டர் போன்றவை நல்ல பலன் தரும். Anne French, Veet போன்ற ஹேர் ரிமூவரில் ஒரு வித ஸ்மெல் வரும். நிறைய பேருக்கு அது பிடிக்காது. அதற்கு பதிலாக ஸ்மெல் இல்லாத ஹெர்பல் ஹேர் ரிமூவிங் க்ரீமை உபயோகப்படுத்தலாம். ரேசரை கை, கால்களுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. முடியின் வளர்ச்சியும் அதிகமாகி, கை, கால்களில் மென்மையும் போய்விடும். பிரெக்ணண்ட் ஆக இருப்பவர்கள் அல்லது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் முடிந்தவரை அந்தரங்க உறுப்புகளுக்கு ஹேர் ரிமூவிங் க்ரீமை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதற்கு பதிலாக எபிலேட்டர், வாக்சிங் ( அதிக வலி என்று நினைத்தால் அது கூட வேண்டாம்), ரேசரை உபயோகிக்கலாம். 11) சில பெண்களுக்கு அவர்களின் வாய் துர்நாற்றத்தை பற்றியும், உடல் துர்நாற்றத்தைப் பற்றியும் எந்த வித விழிப்புணர்வும் இருக்காது. நம்மை நாமே இந்த விஷயத்தில் சோதித்துக் கொள்வது அவசியமாகிறது. வாய் துர்நாற்றத்திற்கு பல்லில் இருக்கும் பிரச்சனைகள் மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் பிரச்சனைகள் கூட காரணமாக இருக்கும். அவர்கள் மவுத் வாஷ் போன்றவற்றை மட்டும் உபயோகிப்பதை விடுத்து டாக்டரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது. உடல் துர்நாற்றத்திற்கு Roll On, Body Spray, Perfume என்று பல இருந்தாலும் நமது சருமத்திற்கு உகந்தததா என்று பார்த்து வாங்குவது நல்லது. சிலருக்கு Roll On ஒவ்வாமை ஏற்படுத்தும். முக்கியமாக Underarms ல் ஹேர் ரிமூவ் பண்ண நாட்களில் Roll On, Body Spray போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் அன்று பெர்பியூம், டால்கம் பவுடர் போன்றவை உபயோகப்படுத்துவது நலம். என் பிரெண்ட் ஒருத்திக்கு அப்படி ரோல் ஆன் உபயோகித்ததில் Under Arms முழுதும் அலர்ஜி வந்து மிகவும் கஷ்டப்பட்டாள். வாய் துர்நாற்றத்திற்கு மவுத் வாஷ் மட்டுமின்றி, Fresh Strips, Spray உபயோகிக்கலாம். Mentos, Tit bits பிடிக்காதவர்களும் மேலே குறிப்பிட்டவற்றை உபயோகிக்கலாம். 12) நெயில் பாலீஷ் போடும் முன் பேஸ் கோட்டிங் என்று கடைகளில் கிடைக்கும். தண்ணீர் போன்று நிறமற்று இருக்கும். இதனை ஒரு கோட்டிங் கொடுத்து , பிறகு நெயில் பாலீஷ் போட்டு, அதன் மேல் மீண்டும் ஒரு முறை கோட்டிங் கொடுத்தால் மிகவும் அழகாக நீண்ட நாட்களுக்கு நெயில் பாலீஷ் உரியாமல் இருக்கும். மெனிக்யூர் அன்றுதான் செய்துக் கொண்டதைப் போல் புதிதாக இருக்கும். கால்களுக்கும் அவ்வாறே செய்யலாம். 13) லிப் லைனர் இல்லாமல் லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ் ஷேப் நன்றாக எடுப்பாக தெரியாது. லிப் லைனர் சிறிது டார்க்காகவும், அதைவிட ஒரு ஷேட் குறைத்து லிப்ஸ்டிக்கும் போட்டால் நன்றாக இருக்கும். முகம் டார்க்காக இருப்பவர்கள் லைட் ஷேடுகளை தவிர்ப்பது நலம். 14) நகப்பாலிஷை எடுக்க செய்ய உதவும் நெயில் பாலீஷ் ரிமூவர் நல்ல தரமானதாக இல்லாவிடில் நகங்கள் மஞ்சள் நிறமாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே வாங்கும்போதே தரமானதாக வாங்கினால் பிறகு ஸ்கின் டாக்டர் கன்சல்டேஷனுக்கு பணம் செலவழிக்காமல் இருக்கலாம். இது எல்லாவித காஸ்மெட்டிக்ஸ்க்கும் பொருந்தும். 15) முகத்தை க்ளீன் செய்யும்போதே தினமும் கழுத்து, Under Arms பகுதிகளையும் க்ளென்சிங் மில்க் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இதனால் அந்த இடங்கள் கறுத்துப் போகாமல், அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும். ஏப்ரல் 25, 2008 - 4:08am - வழங்கியவர் DEVA
|

