topic_image


இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில் தசாவதாரம் ஒலிநாடா வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் தொகுப்பினை காட்டினார்கள். விழாவினை காண்பித்த நேரத்தைவிட அதிகநேரம் விளம்பரங்களை காண்பித்தார்கள். ஒவ்வொரு இடைவெளியிலும் இரண்டு முறை வெளியான அந்த 10 விளம்பரங்களும் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. அவ்வபோது விஜய் டிவிக்கு மாறி வான் டேமி படத்தை பத்தாவது முறையாக பார்த்து ரசித்தாலும், அங்கே எதாவது முக்கிய காட்சிகள் போய்விடுமோ என்ற பயத்தில் சானலை மாற்றி மாற்றி பார்த்தது சுவாரஸ்யமான அவஸ்தை.

இரண்டு வருடங்களாக தயாரிக்கப்பட்டுவரும் இந்த படம் ஏற்கனவே ஏராளமான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்த முந்தைய கமல் படங்கள் சில எந்த மாதிரி வரவேற்பை மக்களிடம் பெற்றது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் பயமாக இருக்கிறது. நான் தீவிர கமல் ரசிகன் என்று சொல்லிக்கொள்பவன் அல்ல. ஆனால் கமலை தீவிரமாக ரசிப்பவன் :-) அவருடைய உழைப்பிற்கு சில நேரங்களில் பலன் இல்லாமல் போகும்போது, அந்த நல்ல கலைஞன் துவண்டுவிடக்கூடாதே என்று உண்மையாக வருத்தப்படுபவன். இந்த படத்தின் ட்ரெயிலர் பார்த்ததில் இருந்து அதன் ஞாபகமாகவே இருக்கின்றது. என்னால் இன்று வேறு வேலைகள் பார்க்க முடியாததால் இந்த பதிவை கொடுக்கின்றேன்:-)

ஜாக்கி சான்னை முக்கிய விருந்தாளியாக அழைத்திருந்தார்கள். ஜாக்கி சானை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவர் படங்களில் சண்டை மட்டுமில்லாமல் நல்ல நகைச்சுவையும் இருக்கும். பலநேரங்களில் சண்டையே நகைச்சுவையாய் இருக்கும். மிகவும் எளிமையாக வந்து அமர்ந்திருந்தார். முகத்தில் கடைசி வரை அதே குழந்தைத்தனமான புன்னகை. எல்லோர் பேச்சுக்கும் கைதட்டி கொண்டிருந்தார். கூட்டம் கமலஹாசன் பெயரைச் சொல்லும்போதெல்லாம் கைத்தட்ட, இவரும் தட்டிக்கொண்டிருந்தார். மேடையில் நடந்த இன்னொரு சுவாரஸ்மான விசயம் அந்த குள்ள மனிதரின் உயர்ந்த உள்ளத்தை வெளிக்காட்டியது.

கேசட் வெளியீட்டின் போது, கேசட் முகப்பு படத்தை ஒரு பெரிய அட்டையில் கொண்டு வந்து அதை கலைஞர் அவர்களிடம் கொடுத்தார்கள். அந்த அட்டையை ஒரு காக்கி பேப்பரை கொண்டு சுற்றி மறைத்து, அதை ரிப்பனால் கட்டியிருந்தார்கள். சுற்றியிருந்த பேப்பரையும், ரிப்பனையும் பிரித்துவிட்டு, அந்த கேசட் முகப்பு அட்டையை வைத்து எல்லோரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபின்பு அட்டையை மட்டும் எடுத்துக் கொண்டு செல்ல, அதை சுற்றி இருந்த காகிதமும் ரிப்பனும் கீழேயே கிடந்தது. சில நொடிகள்தான், ஜாக்கி சான் குனிந்து அவற்றை எடுத்துக்கொண்டு யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் மேடையின் மறுபுறத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். மேடையில் இருந்த வேறு சிலர் இதை கவனித்தாலும் அதை அவர்கள் யாரும் வாங்கவில்லை. கடைசியில் கமல் அதைப்பார்த்துவிட்டு சட்டென அவர் கையில் இருந்து வாங்கி அதை யாரோ ஒருவரிடம் கொடுத்தார். அவர் கொடுத்த விதத்தில் அந்த பேப்பர் ரிப்பன் எல்லாம் கீழே விழுந்தது மட்டும் தெரிந்தது. நீங்கள் ஏன் இதை செய்கின்றீர்கள், போய் அமருங்கள் என்பதுபோல் ஏதோ ஜாக்கி சானிடம் சொன்னார். அவர் ரிப்பனையும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு சென்றபோது கூட்டம் ஆரவாரம் செய்தது. ஆனால், கூட்டம் ஆரவாரம் செய்யவேண்டும் என்பதற்காக அவர் இதனை செய்யவில்லை. இயல்பாய் இருந்த செயல் அது. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி என்பதை காட்டியது. நம்மவர்கள் எத்தனை பேர் இப்படி செய்திருப்பார்கள் என்று யோசிக்க வைத்தது. ஒரு தெருமுனை கூட்டத்திற்கு மேடை போட்டு ஏற்றி உட்கார வைத்தாலே, நாற்காலியில் சாய்வாக அமர்ந்து, கையை கன்னத்திற்கு கொடுத்து தாங்கிக் கொண்டு, ஏதோ உலகை மாற்ற என்ன செய்யலாம் என்பது போல் தீவிரமாக சிந்திக்கும் ஞானிகளாக காட்டிக்கொள்பவர்கள் எங்கே. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, யார் என்ன பேசுகின்றார்கள் என்பது தெரியாத போதிலும் கடைசி வரை புன்னகை மாறாமல், எல்லோருடன் கைத்தட்டி ரசித்து, மிகவும் இயல்பாய் இருந்த அந்த சூப்பர் ஹீரோ எங்கே.. இதைத்தான் நிறைகுடம் ததும்பாது என்பார்களோ.. இன்று எனக்கு ஜாக்கி சானை ரொம்பவே பிடித்து போய்விட்டது.

இவ்வளவு பெரிய ஆடம்பர விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், அங்கே பேசுபவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை ஜாக்கி சானுக்கும், அமிதாப்புக்கும் மொழிபெயர்த்து சொல்ல ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஜாக்கி சான் அவரது பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் யாராவது மொழி பெயர்ப்பார்களா என்று சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அமிதாப்பும் என்ன நடக்கின்றது என்பது புரியாமல் ஒரே மாதிரி வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

கலைஞர் வழக்கம்போல் சில தகவல்களை திரட்டி வந்து மேடையில் படித்தார். கமலும் ஜாக்கி சானும் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள், இருவர் பிறந்த தேதியும் 7 என்பதை குறிப்பிட்டார். ஜாக்கி சான் பேசும்போது அமிதாப், கமல் உடன் நடிக்க விரும்புவதை தெரிவித்து, தசாவதாரம் படத்தைப் பற்றி சிம்பிளாக ஒரே வார்த்தையில் "வாவ்" என்றார்.

படத்தின் கதை என்னவென்று தெரியவில்லை. ராமனுஜராக 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, அவர், இவர்.. அமெரிக்க விஞ்ஞானி என்று 10 வேடங்களில் கமல் வருகின்றாராம். படத்தை சீக்கிரம் வெளிவிடுங்கள் என்று மேடையில் கமலை நோக்கி விஜய் வேண்டுகோள் வைத்தார். அதுதான் நல்லது என்று தோன்றுகின்றது. இதற்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்தால், வெறுப்பு வந்துவிடும். பின்னர் படத்தின் சிறிய குறைகளும் பெரிதாக பேசப்படும். எது எப்படியோ, விரைவில் தமிழில் ஒரு பிரமாண்டமான படத்தை பார்க்கலாம் என்று தோன்றுகின்றது.

அதுசரி, கமலின் நெருங்கிய நண்பர் ரஜினி அவர்களை விழாவிற்கு அழைக்கவில்லையே.. ஏன்?


நல்ல பாட்டு
ஏப்ரல் 27, 2008 - 10:57pm - வழங்கியவர் Vijitvm

நானும் கமல் ரசிகை அல்ல.ஆனால் எனக்கும் கம்ல் பிடிக்கும். எனக்கு பிடித்த நடிகர் ஜாக்கி. நான் அவரில் நிற்ய்ய படங்கள் பார்த்துள்ளேன்.நான் தசாவதார பாட்டை கேட்டேன். நன்றாக் உள்ளது.நிங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் பயமாக தான் உள்ளது.கண்டிப்பாக ஒரு மொழி பெயர்பாளர் வைத்திருக்க வேண்டும். எல்லாம் தெரிந்தவ்ர்கள் கூட சில சம்யம் ஒன்றும் தெரியாதவர்கள் போல் ஆகிவிடுவதுண்டு. என்ன பண்னுவது பாவம் ஜாக்கி.

ஸ்பீடு ப்ரேக்கர்
ஏப்ரல் 27, 2008 - 11:56pm - வழங்கியவர் malathi

எப்போது எனக்கு படத்தில் கமல்ஹாஸனை பார்த்தாலும் அவருடைய குருநாதர் ( விழாவுக்கு அழைக்கப்படாதவர்களில் இவரும் ஒருவர் ) கே. பாலச்சந்தர் கூறியதுதான் ஞாபகத்துக்கு வரும். " கமலுக்கு ஒரு ஸ்பீடு ப்ரேக்கர் வேண்டும். தான் அறிந்தவற்றையெல்லாம் ஒரு படத்தில் திணிக்கக்கூடாது " என்ற அர்த்தத்தில் ஒரு சமயம் கூறி இருந்தார்.. அது எத்துனை உண்மை. மக்களுக்கு லேட்டாக புரியுமாறு கமல் படமெடுப்பது ஒரு வருத்தம் கலந்த பெருமையாக இருக்கிறது.

என்ன என்ன ஆச்சு??
ஏப்ரல் 28, 2008 - 12:01am - வழங்கியவர் thalika

என்னவோ பேசிக்கரீங்க என்னது?

ஹஜ் த்ரெட்
ஏப்ரல் 28, 2008 - 12:14am - வழங்கியவர் thalika

அட்மினண்ணா அந்த ஹஜ் த்ரெட் எங்க போச்சு??அச்சசோ அதை படிச்சால் தான் கொஞ்சம் விஷயம் தெரிய வருமென்று எதிர்பார்த்தேன்....போய் வந்தவர்க்ளே சொன்னால் கொஞ்சம் தெளிவாக புரியும் என்று நினைத்தேன்...என்னாச்சு?

நீக்கப்பட்டுவிட்டது
ஏப்ரல் 28, 2008 - 12:20am - வழங்கியவர் admin

உங்களுக்கு ஹஜ் பற்றி தெரிய வேண்டும் என்றால் நான் பத்துக்கு மேற்பட்ட தளங்களின் முகவரிகளை உங்களுக்கு மின்னஞ்சல் செய்கின்றேன். அதற்கு மேலும் ஏதேனும் தகவல் வேண்டுமென்றால் ஜலிலா அவர்களின் மின்னஞ்சலையும் தருகின்றேன். அவரிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள்.

அட்மின் அண்ணா & ரூபி.
ஏப்ரல் 28, 2008 - 12:41am - வழங்கியவர் kr

அட்மின் அண்ணா,
10 இல்லேன்னாலும் ஒரு 2 அட்ரஸ் ஆவது எனக்கு சொல்லுங்கலேன்.
ரூபீ,மெயில் போட்டிருக்கேன் உங்களுக்கு.

இணையத்தளம்
ஏப்ரல் 28, 2008 - 12:45am - வழங்கியவர் admin

http://abumuhai.blogspot.com/
2005/01/1_13.html

இந்த இணையத்தளத்தில் இருந்துதான் அவர் நிறைய விசயங்களை எடுத்து கட் காப்பி பேஸ்ட் செய்திருந்தார்.

மேலும் தளங்களை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகின்றேன்.

மிகவும்
ஏப்ரல் 28, 2008 - 12:55am - வழங்கியவர் kr

மிகவும் நன்றி. உம்ரா சம்மந்தமான வலைதலம் முகவரி இருந்தால் கூருங்கள் அண்ணா.

அண்ணா,
ஏப்ரல் 28, 2008 - 1:20am - வழங்கியவர் kr

அண்ணா,
ஒரு 2 நாட்கலுக்கு மட்டுமாவது அந்த ஹஜ் சைட் போடுங்கலேன்.,

சிறிய பாடம்
ஏப்ரல் 28, 2008 - 1:28am - வழங்கியவர் admin

அன்பு தங்கைக்கு,

எல்லாவற்றிற்கும் ஏராளமான தளங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ஒவ்வொன்றாக எடுத்து கொடுப்பதற்கு பதில், இணைய பயன்பாட்டிற்கு தேவையான ஒரு சிறிய பாடத்தை இங்கே நடத்துகின்றேன். உங்களுக்கும் உங்களைப் போன்ற தேவை உள்ளவர்களுக்கும் அது பயன்படும்.

இணையத்தில் Google.com என்று ஒரு இணையத்தளம் இருக்கின்றது. இது இணையத்தில் தேடுதல் நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட தளம். இதை பயன்படுத்த வேண்டும் என்றால் உங்கள் ப்ரவுசரில் அட்ரஸ் கொடுக்கவென்று ஒரு பெட்டி இருக்கும். அதில் www.google.com என்று டைப் செய்யவும். கூகிள் உங்கள் ப்ரவுசரில் தோன்றும்.

அதில் உள்ள பெட்டியில் நீங்கள் என்ன வார்த்தையை கொண்டு இணையத்தை தேட விரும்புகின்றீர்களோ அந்த வார்த்தையை அப்படியே டைப் செய்யவும். இப்போது உங்கள் தேவை "உம்ரா" தானே.. அதை அப்படியே அங்கே டைப் செய்யுங்கள். அதற்கு கீழே google search என்று இருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு 13,900 பக்கங்கள் பட்டியிலடப்பட்டிருக்கும். அதில் எல்லாவற்றிலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றாலும், ஒரு 100 தளங்களிலாவது நீங்கள் எதிர்பார்த்த விசயங்கள் கிடைக்கும். உம்ரா என்று மட்டுமல்ல.. எதை வேண்டுமானாலும் அங்கே தேடலாம்.

மன்னிக்கவும்
ஏப்ரல் 28, 2008 - 1:40am - வழங்கியவர் admin

பலமுறை இது குறித்து பேசியாகிவிட்டது. பல்வேறு மதத்தினர் பார்வையிடும் இந்த தளத்தில் இது போன்ற விசயங்கள் வரும்போது, அதுசம்பந்தமான பதிவுகள் சிலருக்கு பயனுள்ளதாய் இருந்தாலும் பலருக்கு அதிருப்தியை தருவதாக இருக்கின்றது. நான்கு பேரா, நாற்பது பேரா என்று பார்த்துதான் நான் செயல்பட வேண்டியிருக்கின்றது.

முக்கியமான விசயம், அறுசுவையின் நோக்கம் ஆன்மீகம் பரப்புதல் அல்ல. மத, இன சம்பந்தமான உரையாடல்கள் இங்கே வேண்டாம் என்று பலமுறை விளக்கம் கொடுத்தாயிற்று. இது குறித்த என்னுடைய பழைய அனுபவங்கள் இன்றும் மறக்க முடியாதவை. அது தொடர்வதற்கு நான் அனுமதிக்க போவதில்லை. மன்றத்தில் உள்ள ஆன்மீகம் பகுதியையும் நான் நீக்க போகின்றேன். புதிய தளத்தில் அந்த பகுதி இருக்காது.

சகோதரி ஜலிலா அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால் அந்த பதிவு கடைசியில் எங்கே இட்டுச் செல்லும் என்பதை நான் அறிவேன். எனக்கு வந்த மின்னஞ்சல்கள் அடுத்து அங்கே என்ன மாதிரி பதிவுகள் விழும் என்பதை ஏற்கனவே உணர்த்திவிட்டன. நாளைக்கு ஒவ்வொருவரும், காசிக்கு செல்வது எப்படி, ராமேஸ்வரம் செல்வது எப்படி, இந்துக்களின் கடமை என்ன, கிறிஸ்துவர்கள் கடமை என்ன என்றெல்லாம் ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பமுடியுமா? பிரச்சனை உங்களுக்கல்ல. எனக்கு. என்னுடைய தளத்திற்கு.

இந்த தளத்தின் நோக்கம் தாண்டி வெளியாகும் பதிவுகளை நான் எதை பற்றியும் யோசிக்காமல் நீக்க முடிவு செய்துவிட்டேன். நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. உங்களுக்கே தெரியாது என்ன மாதிரி வலை பின்னப்படுகின்றது என்பது. வேண்டுமென்றால் இதற்கென தனியாக ஒரு தளம் ஆரம்பிப்போம். இங்கே இனி வேண்டாம்.

டியர் அட்மின்
ஏப்ரல் 28, 2008 - 3:51am - வழங்கியவர் Jaleela Banu

டியர் அட்மின்
சொல்லமல் கொள்ளாமல் நீக்கியது மிகவும் வருத்தம்

அப்படி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் முதல் நான் எழுதும் போது சொல்லியிருக்கலாம்

முதல் தடவை நன் அனுப்பியது என் சொந்த நடை,.
இரண்டாவதாக எல்லாம் கேட்டு கொண்டதால் அங்கேயே சொல்லி விட்டு தான் காப்பி பேஸ்ட் செய்தேன்.

ஆனால் இங்கு பல பேர் உறையடும் போது பாடல், பழமொழி இன்னும் மற்றது எல்லம் எங்கிருந்தோ எடுத்து காப்பி பேஸ்ட் செய்கிறார்கள் ஆகையால் தான் நான் செய்தேன்
அட்லீஸ்ட் நான்கைந்து நாட்கலாவது வைத்திருக்கலாம், அதுவும் இல்லாமல் ஆன்மீகம் என்ற பகுதியில் நிறை கோயில் குலம் , உங்களுடைய விரதங்கள் பற்றி எல்லாம் உரையாடி இருக்கிறீர்கள்.
அதேல்லாம் பார்த்து விட்டு தான் ரொம்ப யோசித்து தான் நான் போட்டேன்.

இப்போது கே ஆருக்கு மெயில் பண்ணி விட்டு வந்தேன்,

ஜலீலா

விளக்கம்
ஏப்ரல் 28, 2008 - 4:16am - வழங்கியவர் admin

// உங்களுடைய விரதங்கள் பற்றி எல்லாம் உரையாடி இருக்கிறீர்கள். //

இந்த "உங்களுடைய" என்பதற்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

உங்களுக்கு நான் சற்று முன்பு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதை படித்தபிறகு நீங்கள் இந்த பதிவை கொடுத்தீர்களா இல்லை அதற்கு முன்பே கொடுத்தீர்களா என்பது தெரியவில்லை. அதனை படித்த பிறகும் நீங்கள் இந்த பதிவை கொடுத்திருந்தால் நான் இதற்கு வரிக்கு வரி விளக்கம் தருகின்றேன்.

டியர் அட்மின்
ஏப்ரல் 28, 2008 - 4:21am - வழங்கியவர் Jaleela Banu

டியர் அட்மின்

இல்லை நான் இன்னும் படிக்க வில்லை
இதோ பார்க்கிறேன்

ஆனால் நீங்கள் தீடீரென்று செய்தது வர்த்தம் தான்.
ஜலீலா

பாபு அண்ணா,
ஏப்ரல் 28, 2008 - 9:35am - வழங்கியவர் MarliyaNoohu

சரிப்பா எல்லாம் நல்லபடியாக் முடிந்தது..எல்லாத்தையும் விடுங்க.
அண்ணா, நானும் வேலைக்கு இடையில் அப்பப்ப பார்த்தேன்..அதில் எனக்கு ரொம்ப கவர்ந்தவர் ஜாக்கிதான்..பாவமான முகம்(என்னை போல..சரி சரிடெங்ஷன் வேணாம்)அதில் பார்த்த இன்னொறு சுவாரஸ்ய்யமானது ஜாக்கி தமிழவர்களின் பெயரை சொல்லத்தெரியாமல் சொன்னது அதிலும் கே.எஸ் ரவி சந்திரன் அவர் பெயரை கடைசி வரை சொல்லத்தெரியாமல் திணரியது ரொம்ப சிரிப்பாக இருந்தது...அவ்லோதான் பாத்தேன்...

ஆமாம் இந்த நிகழ்சியை பார்த்தபிந்தான் அப்படி ஒருபடம் வர போகுறதே தெரியும் என் கணவ்ரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்...

படம் எப்ப வெளிவருகிறதுன்னு தெரியுமா?சும்மா தெரிஞ்சுக்கலாம்னு...பார்கனும்ன
ு ஆர்வமும் இருக்கு...

அன்புடன்,
மர்ழியாநூஹு