கோடை காலத்திற்கேற்ற உணவு வகைகளை பற்றி இந்த புதிய ' த்ரட்டில் ' பேசுவோமா? கோடைக்கேற்ற உணவு வகைகளில் சமைப்பதற்கு எளிதாகவும் அடுப்பில் வேக வைக்கத்தேவை இல்லாத அல்லது அதிக நேரம் அடுப்பருகே நின்று சமைக்கத்தேவை இல்லாத உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். மற்றபடி கோடை காலத்தில் உடல்நலம் காப்பது பற்றியும் பேசலாம்.
நானே ஆரம்பித்து வைக்கிறேன்.
-----------------------
1.வேக வைக்கத் தேவைஇல்லாத சாலட் வகைகள்:
கேரட், தக்காளி, வெள்ளரி, வெங்காயம் சேர்த்தது.
2.பழ சாலட்கள்
பழங்களை நறுக்கி தயிரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
3. அவலை ஊறவைத்து வெல்லம் மற்றும் பழங்கள் சேர்த்து சிற்றுண்டியாக உண்ணலாம்.
4.மற்றும் தயிர் அவல், பாலில் ஊறவைத்த அவல் இவற்றை அடுப்பில்லாமலே தயாரித்து சாப்பிடலாம்.
அடுத்து எளிய முறையில் தயாரிக்கும் ரெஸிப்பீஸ்:
1.தயிர் சேமியா ( இது என்னுடைய குறிப்பில் உள்ளது.)
2.பாசிப்பருப்பு சுண்டல்
3. மோர்குழம்பு
4.அவல் உப்புமா
5. ஜவ்வரிசி உப்புமா ( இதுவும் என்னுடைய குறிப்பில் உள்ளது.)
இன்னும் உங்களுக்கெல்லாம்தான் நிறைய தெரியுமே. எழுதுங்கள் சகோதரிகளே!