ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
"கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் 2" - வது பாகம் நீளமானதால் இது 3 - வது பாகமாகிவிட்டது. அங்குள்ள பதிவிற்கான பதில்களை இங்கே தொடர்வோம்.
மாலதிக்கா...! நான் இறைவன் அருளால் நல்லாவே இருக்கேன் :) நீங்க நலமா? உடம்பு கொஞ்சம் சரியில்லாத மாதிரி ஒரு பதிவில் பார்த்தேன். எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுக்கு நாளை சொல்கிறேன். இப்போது இங்கு டைம் 23:30 ஆகிவிட்டது, அதனாலதான் இப்போ முடியல. ஸாரி..!
ஆமாம் மாலதிக்கா..! அது என்னோடு சேர்ந்து பிறந்த குணம். கணக்கு, விடை தேடுவது என்றால் அவ்வளவு பிடிக்கும்! சிலசமயம் விடை கிடைக்க தாமதமானால், விடையை யோசிப்பதுபோல் கனவில் கூட வரும் :-) விடையே தெரியாமல் போனால், ஏதோ தவறு செய்ததுபோல் உறுத்தும். :) நீங்கள் கேட்டதுபோல், 'படிக்கும்போது கணக்கில் புலியா?' ன்னு தளிகா 2,3 தடவை கேட்டுவிட்டார்கள். என்னைப்பற்றி நானே சொல்வதா..ன்னு யோசித்தே பதில் சொல்லாமல் இருந்துவிட்டேன் :) அப்படிதான்னு வச்சுக்கோங்களேன்......:-) உண்மையாகவே இருப்பதைக்கூட குறைவாகதான் சொல்லணும். ஏனென்றால் நம்மைவிட எத்தனையோ திறமைசாலிகள் இந்த அறுசுவையிலேயே இருப்பார்கள் அல்லவா? :)
நன்றி சுல்தான் ஸார்! அல்ஹம்துலில்லாஹ், நான் நலம். நீங்கள், மெஹர் மேடம், மற்றும் உங்கள் அமீரா நலமா? நேரமாகிவிட்டது. பிறகு பேசுகிறேன்.தூக்கமா வருது..
நான் இப்பதான் நீங்க கொடுத்த பதிலயே பார்த்தேன், வெளியில போய்ட்டேன். சூப்பர் மேடம் உடனே பதில் கொடுத்துடீங்க சூப்பர் மேடம். நான் சும்மா கொஞ்சம் entertaining இருக்கட்டுமேன்னு கொடுத்தேன், ஆனா உடனே நீங்கள் பதில் கொடுத்தது சந்தோஷம்.
இடமிருந்து வலம்: இது ஒரு ஐந்து எழுத்து வார்த்தை, பஜகோவிந்தத்தை இயற்றியவர் மேலிருந்து கீழ்: விசுவின் படத்தின் முதல் பாதி
விளையாடலாம் வாங்க இதை போல உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்லுங்களேன்
இடமிருந்து வலம் சங்கரர் மேல் இருந்து கீழ் சம்சாரம் Rajini
ஹே.... சூப்பர், மேடம் இந்த குறுக்கெழுத்து போட்டினா எனக்கு ரொம்ப பிடிக்கும் சரி அதான் நம்ம ப்ரண்ட்ஸ் கூட பகிர்ந்துகலாமேன்னு கொடுத்தேன். நாம இப்பதான் முதல்ல பேசுறோம் எப்படி இருக்கீங்க ரஜினி? இத தொடரலாமா?
இது ஒரு மேஜிக் கணக்கு! :) விருப்பம், ஆர்வம் உள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் 3 ஸ்டெப்ஸ்:-
ஸ்டெப் 1 : ஒரு பேப்பரில் ஒரு வட்டம் வரைந்து, அதனுள் உங்களுக்கு விருப்பமான ஒரு எண்ணை எழுதுங்கள். இதுதான் இந்த மேஜிக் கணக்கில் முக்கியமான எண்.
ஸ்டெப் 2: அந்த எண்ணின் இடம், வலம், மேல், கீழ் பக்கங்களில் அதாவது, வட்டத்தின் வெளியேயுள்ள 4 பக்கங்களிலும் நீங்கள் நினைக்கும் ஏதாவது 4 எண்களைப் போடவும்.
ஸ்டெப் 3: (a)சுற்றியுள்ள 4 எண்களின் கூட்டுத் தொகையையும், (b)இடமிருந்து வலமாக இருக்கும் 3 எண்களின் கூட்டுத் தொகையையும், (c)மேலிருந்து கீழாக உள்ள 3 எண்களின் கூட்டுத் தொகையையும் கூட்டுத் தொகை (a) ......... கூட்டுத் தொகை (b) ......... கூட்டுத் தொகை (c) .........என்று நீங்கள் சொல்லவேண்டும். இப்போது நீங்கள் வட்டத்திற்குள் முதலில் போட்ட அந்த எண் என்னவென்று நான் உங்களுக்கு சொல்வேன்.:) மற்றவர்களும் சொல்ல முயற்சி செய்யலாம்.
குறிப்பு:- கூட்டுத் தொகைகளை a, b, c என்று சரியாக குறிப்பிடவும். நீங்கள் கூட்டியது சரிதானா என்பதை சரிபார்த்து சொல்லவும். ஓ.கே, கேம் ஸ்டார்ட் நவ்.....! :)
சரி நான் கலந்துக்கறேன்.
a.84 b.61 c.62
உடனே நீங்கள் கலந்துக்கொண்டமைக்கு நன்றி விஜி! ஆனால் உங்களின் கூட்டுத்தொகையில் ஏதோ சிறு தவறு உள்ளது. சரிபார்த்து சொல்லவும். ப்ளீஸ்!
முழுமையான எண்ணை பயன்படுத்தினால் நல்லது. அதாவது இரண்டரை, மூன்றேகால் என்றெல்லாம் வேண்டாம். அப்படி அவ்வாறு பயன்படுத்த நீங்கள் விரும்பினால், முழுமையற்ற எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடவும். என்னால் பதில் சொல்ல முடியும் :)
அவசரத்தில் தப்பாக எழுதிவிட்டேன்.
84 60 62
விஜி! வட்டத்தினுள் நீங்கள் எழுதிய எண் 19. சரியா?
எப்பிடி என்று சொல்ல முடியுமா? தெரிஞ்சுக்க ஆசை
அஸ்கு.....புஸ்கு.....! சொல்லமாட்டேனே...:)) நான் தான் இது 'மேஜிக்' கணக்குன்னு சொன்னேனே! கவனிக்கலையா? உங்களின் ஆர்வத்தை பாராட்டுகிறேன். ஆனா எப்படின்னு நீங்களே கண்டுபிடிங்க. கண்டுபிடித்தால் அது எப்படின்னு இங்கே சொல்லாதீங்க. அப்போதான் மற்றவர்களும் எப்படின்னு யோசிக்க முயற்சி செய்வார்கள். அதனால்தான்! :) கண்டுபிடிக்க வழியை சொன்னால் அதில் சுவாரஸ்யமே இருக்காது. ஸாரி விஜி...! என் மீது கோபமில்லையே...?
ஹாய் கோதை, நான் நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?. சாரி நேத்து பதிவை கொடுத்ததும் தூங்க போய்ட்டேன். அதுனாலதான் உங்க பதிலை பார்க்க முடியலை. எனக்கும் குறுக்கெழுத்துப் போட்டின்னா ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா தொடரலாம் Rajini
மேடம் இது நல்லா இருக்கே எனக்கு இதுப்போல கேட்க பிடிக்கும், நானும் நம்பர் சொல்லவா? a) 100 b) 75 c) 55
இங்க விடுகதை கணக்கு எல்லாம் கேட்பது போல என்னோட ப்ரண்டுகிட்ட கேட்டு நேத்து மெயில் அனுப்பினேனா அதுக்கு அவ கரைக்டா பதில் சொல்லிட்டா, அவ வேற ஒரு கேள்வி கேட்டா அதுக்கு எனக்கு பதில் தெரியல நானும் நேத்து நைட்ல இருந்து யோசிக்கிறேன் சரி அதான் நம்ம ப்ரண்ட்ஸ் கிட்ட அவங்களயும் குழப்பலாம்னுட்டு இங்க வந்துட்டன், நானே போடலாம்னு தான் பார்த்தேன் ஆனா வரமாட்டேங்குது. கணக்கு: 4:3 என்ற விகிதத்தில் நீளம், அகலம் உள்ள ஒரு செவ்வக மைதானத்தை சுற்றி, புறப்பட்ட இடத்திற்கு வர ஒருவர் எடுத்துக் கொண்ட நேரம் 42 நிமிடங்கள். அவர் அந்த மைதானத்தின் ஒரு மூலையில் இருந்து எதிர் மூலைக்கு குறுக்காக(diagnol) நடந்தால் அவர் எடுக்கும் நேரம் எவ்வளாவு?
கோதை! உங்களுக்கான விடை எண் 15. சரிதானே? :)
எப்படி இது கொஞ்சம் சொல்லி கொடுங்களேன் நானும் மத்தவங்க கிட்ட கேப்பேன மேடம். சரி நானே கண்டு பிடித்து பார்க்கிறேன். முயற்சி செய்வோம்
15 நிமிடங்கள் என நினைக்கிறேன்.
Asma, உங்கள் மேஜிக் கண்க்கிற்கு என்னால் விடை சொல்ல முடியும். நீங்கள் விரும்பினால் இங்கு தெரிவிக்கிறேன். சோதிக்க நீங்கள் வேண்டுமானால் 3 நம்பரை சொல்லுங்கள்.
அன்புடன், Ishani
அன்புள்ள இஷானி! இங்கே நீங்கள் தெரிவிக்கவேண்டாம், ப்ளீஸ்! எல்லோரையும் கொஞ்சம் சிந்திக்க வைக்கலாமே? ஓ.கே. வா? சரி, டெஸ்ட்டுக்காக உங்களுக்கு நான் சொல்லும் எண்கள் இதோ: (a) 10 (b) 76 (c) 76 வட்டத்தினுள் உள்ள எண்ணை சொல்லுங்கள்!
விடை: 71 சரியா?
ஆஹ்....சரிதான். அப்போ உங்களுக்கும் இந்த மேஜிக் கணக்கு தெரிந்துள்ளது. :) சந்தோஷம். மற்றவர்களும் இதை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கட்டும். நாமே சொன்னால் நல்லா இருக்காது.
ஹாய் கோதை, விடை 15 நிமிடங்கள் சரியா?. Rajini
அன்புள்ள கோதை! உங்களின் ப்ரெண்ட் கேட்ட கேள்விக்கான விடை 15 நிமிடங்கள்தான். ஏற்கனவே இஷானியும் ரஜினியும் சரியாக சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் தைரியமாக உங்கள் ப்ரெண்டுக்கு இந்த விடையை சொல்லி பதில் மெயில் அனுப்புங்க.
அதற்கு விளக்கம் கேட்டால் நான் சொல்லி தருகிறேன் :)ஓ.கே.?
ஹலோ அஸ்மா, மேஜிக் கணக்கு எப்படின்னு எனக்கும் தெரிஞ்சிடுச்சு :)) நீங்க 3 நம்பர் சொன்னா, நான் பதில் சொல்றேன். Rajini
ஓ.கே ஓ.கே தோ இப்பவே மெயில் பண்றேன். ஆனா நான் இன்னும் அதற்கு விடை கண்டுபிடிக்கலாயே, விளக்கம் கேட்டா என்ன பண்றது.
வந்தவுடனே கணக்குக்கு விடை கண்டு பிடிச்சிட்டேன். கோதை நீங்க தைரியமா விடை சொல்லலாம். விடை 15 நிமிடம் என்பது சரியே. ரஜினி மேடம், அஸ்மா மேடம், இஷானி மேடம் சொன்னது எல்லாம் ரைட் விளக்கம் தானே விளக்கம் சொல்ல அஸ்மா மேடம் இருக்காங்க, நான் இருக்கேன்.
அன்புள்ள ரஜினி! இப்போ உங்களுக்கான எண்கள்: (a) 6 (b) 68 (c) 68 வட்டத்தினுள் என்ன எண்? :) இப்படியே ஒவ்வொருவராக இந்த மேஜிக் கணக்கை கண்டுபிடிப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.
விஜிதான் என் மேல் வருத்தப்பட்டுக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.அப்படியா விஜி?
நந்தினி! கோதைக்கான விளக்கத்தை நீங்களே சொல்லிடுங்க! யார் சொன்னால் என்ன, அவங்களை காப்பாற்றணும், அவ்வளவுதான் :)
ஹாய் அஸ்மா,
உங்கள் கேள்விக்கான விடை 65. வட்டத்தைச் சுற்றியுள்ள எண்கள் 1,2,3,0 அல்லது 1,2,1,2 or 3,0,3,0 Rajini
சரியான விடை ரஜினி! இன்னும் யார் கண்டுபிடிக்கிறார்கள் என பார்ப்போம்.
கோதை & விஜி! வாங்க கண்டுபிடிக்க......கொஞ்சம் யோசித்தால் முடியும்பா! ட்ரை பண்ணுங்கள்.