topic_image


கார்டன் பற்றி அருசுவை தோழிகள் தாங்கல் வீட்டில் செய்த தோட்டங்கள் பற்றியும், கேட்டதை பற்றியும் தெரிந்தால் சொல்லுங்கள்
விதைடல் எங்கு கிடைக்கும். எபோட்து பயிர் செய்யலாம், வீட்டில் செய்யும் தோட்டம் பற்றி யாராவது தெரிந்தால் பகிர்ந்துக்கலாம்.


கார்டன் மாலதி மேம்
மே 2, 2008 - 7:51am - வழங்கியவர் Vijitvm

என்ன நிங்க தொடங்கி வையுங்க? உங்க கார்டன் பற்றி.

அருசுவை கார்டன்
மே 2, 2008 - 9:18am - வழங்கியவர் Vijitvm

கார்டன் பற்றி தெரிந்ததை விதைகள் சென்னயில் எங்கு
கிடைக்கும் சொல்லுங்களேன்.

நன்றி.

கார்டன் நாளை
மே 2, 2008 - 9:24am - வழங்கியவர் malathi

விஜி!....என்னுடைய கார்டன் அனுபவங்கள் ரொம்ப நீளமானவை. என்னுடைய குழந்தைகளை எந்த அளவு நேசிக்கிறேனோ அதே அளவு என் கார்டனையும் நான் நேசிப்பதாக எல்லோரும் சொல்வார்கள். ஸோ, இன்றைக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. ( இரண்டு நாட்களாக வீடு சரியாக க்ளீன் பண்ணாமல் கிடக்கிறது ) நாளை எழுதுகிறேன்.

வாவ் மாலதி மேம்
மே 2, 2008 - 9:29am - வழங்கியவர் Vijitvm

நான் ஆவலுடம் காத்திருப்பேன். நன்றி

அதிரா கார்டனுக்கு
மே 2, 2008 - 9:30am - வழங்கியவர் Vijitvm

வாங்க கார்டனுக்கு உங்க கார்டனை பற்றி எடுத்து விடுங்க.

செல்வி மேம்,ஜலீலா,குலசை ஸார்
மே 2, 2008 - 9:33am - வழங்கியவர் Vijitvm

வாங்க தளிகா, மனோ மேம், மற்றும் எல்லாரும் உங்களுக்கு தெரிந்த கார்டன் பற்றி சொல்லுங்க.தளிகா,ஜலீலா உங்களுக்கு உங்கம் நாட்டில் கார்டன் பண்ண முடியல்லை என்ற குறை வேண்டாம்.நிறய்ய இண்டோர் கார்டன் பற்றி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். உங்களுக்கு தெரிந்த்தை சொல்லாம்.

வீட்ல தோட்டம் போடறது
மே 2, 2008 - 10:00am - வழங்கியவர் aniaksh

வீட்ல தோட்டம் போடறது ரொம்ப ஜாலியான விஷயம். அந்த செடிகளை ஒவ்வொரு ஸ்டேஜ்ல பார்க்கும் போதும் சந்தோசம் தான். என்னதான் காய்கள் கடையில வாங்கினாலும் நம்ம வீட்ல போடற மாதிரி வராது. நான் ஒவ்வொரு தடவையும் தவறாம தோட்டம் போடுவேன். பீர்கங்காய், சுரக்காய்,அவரைக்காய், காராமணி , தக்காளி, மிளகாய், புதினா, வெந்தயகீரை, கருவேப்பிலை, வாழை மரம், மல்லிகை, ரோஜா எல்லாம் இருக்கு (உஸ் அப்பாடா மூச்சு வாங்குது)
இப்போ புதுசா தோட்டம் போடுறது எப்படின்னு பார்க்கலாமா?.
1. முதல்ல எங்கே தோட்டம் போடுறதுன்னு முடிவு செய்யனும். அந்த இடம் ரொம்ப சரிவா இருக்கக் கூடாது. அப்படி இருந்தா தண்ணீ விடும்போது மண் ஒரு ஓரமா போயிடும். அதுனால மேடான புதியில செடி வளராது.

2. இடம் முடிவானதும், அந்த இடத்தை நல்லா 2 இன்ச் கொத்திவிடனும். ஒருநாள் அப்படியே விட்டா காத்து நல்லா போய் மண்ணை பதமாக்கிடும். அப்புறம் மாட்டுச்சாணத்தாலான இயற்கை உரமண் போடனும். இது எல்லா கார்டன் கடையிலும் கிடைக்கும்.அதுல இருக்கிற மண்புழு மண்னை பதமா வைக்கும்.(மண்புழு உழவர்களின் நண்பன், நாம தான் இப்போ உழவர்கள் ஆயிட்டோமே)

3. கொடிவகை போடும்போது ரொம்ப அகலமான மண்படுக்கை தேவை இல்லை. இதர வகைகளுக்கு வேணும். அதேபோல மண் திக்னஸ் 4 அல்லது 5 இன்ச் இருக்கனும். மண் போட்டதுக்குப் பின் சுத்தி எட்ஜ்ஜிங் செஞ்சா மண் நல்லா செட் ஆயிடும்.

4.விதை தரமானதா இருக்கனும். வின்டர் முடிஞ்சதும் விதைக்கலாம். கொடி வகைகளுக்கு படருவதற்கு சப்போட் கொடுத்து பந்தல் போடனும். மாதம் ஒருமுறை உரம் போடனும்.

5. தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் இதெல்லாம் நடும்போது ஒவ்வொரு செடிக்கும் இடையில் 2 அடி இடைவெளி விடனும்.

6. புதினா, மல்லி, சோம்பு இதெல்லாம் தொட்டியிலெயே வைக்கலாம். வெந்தயம் கூட அப்படித்தான். வீட்டில் உள்ள காய்ந்த மிளகாய் விதைகளை தொட்டியில் தூவினா செடி நிறைய வரும். அதை கொஞ்சம் பெருசா ஆனதும் தனித்தனியா நடனும். நல்லா பழுத்த தக்காளி விதை கூட இது போல செய்யலாம்

இன்னும் வரும்..............
Rajini

ரஜினி தோட்டம்
மே 2, 2008 - 10:35am - வழங்கியவர் Vijitvm

வாவ் நன்றாக தோட்டம் போட்ட்ருக்கிங்க. பரவாயில்லை எனக்கு நிற்ய்ய சந்தேகம் இருக்கு நிங்க தான் சொல்லனும். வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் போடறாங்க உங்களுக்கு அதை பற்றி தெரிந்தால் சொல்லுங்க.அவரை, காராமணி அதை பற்றீ கறிவேப்பிலை அதன் காய் போட்டல் வள்ருமா,
நன்றி

ஹலோ விஜி
மே 2, 2008 - 11:58am - வழங்கியவர் aniaksh

ஹலோ விஜி,
ரொம்ப நன்றி. மொட்டைமாடியில் தோட்டம் போடுவது பற்றி நானும் படித்து இருக்கேன். ஆனா, அதைப் பற்றி ரொம்ப தெரியாது. அவரை, காராமணி விதை போட்டால் வரும். காராமணி செடி ஹோம் டிபோவில் கிடைக்கிறது. அந்த செடி மேல் உள்ள கார்டில் காராமணி படம் போட்டு இருக்கும். நான் பெயரை தெரிந்து சொல்கிறேன். கருவேப்பிலை விதை நல்லா காய்ந்து கீழே விழும் போதுதான் செடி வரும். நல்ல விதை இருந்தால் தாரளமா போடலாம். நீங்க அப்பார்ட்மென்ட்ல இருந்தா சின்ன சின்ன தொட்டியில மல்லி, வெந்தயம்,சோம்பு, புதினா எல்லாம் வைக்கலாம். மிளகாய் , தக்காளி கூட வைக்கலாம்.
Rajini

உரமண்ணோட பெயர்
மே 2, 2008 - 12:12pm - வழங்கியவர் vinnie

ரஜினி எனக்கு நீங்க போடும் அந்த உரமண்ணோட பெயர் வேணும். நானும் 3 வருஷமா தோட்டம் போடுறேன், போடுறேன். ஒரு காய் கூட கண்ணால பார்க்கலை:-( தக்காளி விதையை டைரக்டா மண்ணில் நடுவீங்களா இல்ல செடியா நடனுமா? கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

vinnie
மே 2, 2008 - 12:31pm - வழங்கியவர் Vijitvm

எப்பிடி இருக்கிங்க? விதை வருகிற பாக்கெட்டின் பின் புறம் மேப் இருக்கும் அதில் நிங்க எந்த இடத்தில் இருக்கிங்க என்பதை பார்த்து செய்யுங்க நான் அப்பிடி தான் செய்தென். நன்றாக வந்தது. தக்காள் விதை வாங்கி முதலில் வீட்டில் ஒரு தொட்டியோ அல்லது பளாஸ்டிக் சின்ன சின்ன கண்டெய்ன்ரொடயே ட்ரே கிடைக்கும் கறுப்பு கல்ரில் லொவ்ஸில் கிடைக்கும். வால் மார்டில் கூட கிடைக்கும்.அதில் மிராகிள் க்ரோ போட்டிங் சாயில் கிடைக்கும் அதை போட்ட்டு இந்த விதையை போட்டால் நன்றாக வள்ரும் கொஞ்சம் முளைத்தவுடன் குளிர் காலம் முடிந்தவுடன் மே மாதத்தில் அதை அப்பிடியே எடுத்து டைரக்டா மண்னில் நடவும். நன்றாக வநத்து. செய்து பாருங்கள்

ரஜினி
மே 2, 2008 - 12:40pm - வழங்கியவர் Vijitvm

தேங்க்ஸ் நான் வெந்தய்ம், கொத்தமல்லி, மிளகாய், எல்லாம் வைத்தேன். புதினா எப்பிடி பண்ணுவது? தெரியல்லை. துளசி வைத்து இருந்தேன் இப்ப் தான் போச்சு. வாழை இருக்கு நான் வீட்டினுள் தான் வைத்துள்ளேன்.நன்றாக வளருகிறது குட்டி கூட போட்டது.

எனக்கு செம்பருத்தி எங்கு கிடைக்கும் தெரிந்தால் சொல்லுங்க. நிங்க் எங்கு இருக்கிங்க. என்னுடையது வீடு தான் அப்பார்ட்மெண்ட் அல்ல.

நன்றி

ஹாய் வின்னி
மே 2, 2008 - 1:01pm - வழங்கியவர் aniaksh

ஹாய் வின்னி,
எப்படி இருக்கீங்க?. கஜினி முகமது மாதிரி முயற்சி செய்யறீங்க, வெற்றி காய்கள், வெற்றி கனிகள் எல்லாம் இந்த தடவை உங்க வீட்ல காய்க்கும். cow manure என்று ஹோம் டிபோட் கிடைக்கும். அதை ஒரு லேயர் போடுங்க. அப்புறம் மிரகிள் குரோ கலந்த மண் ஒரு லேயர் போடுங்க. இதுவே போதும். மாதம் ஒரு தடவை மிரகிள்குரோ உரம் போடுங்க. தக்காளி விதைகளை ஒரு தொட்டியில முதல்ல போடுங்க. நல்ல முளைத்து வந்ததும் , அதை எடுத்து தனித்தனியா நடுங்க.
Rajini

ஹாய் விஜி
மே 2, 2008 - 1:14pm - வழங்கியவர் aniaksh

ஹாய் விஜி,

புதினா கடையில் வாங்கினா, இலைகளை எடுத்துகிட்டு தண்டை நட்டு வையுங்க. நல்லா வளரும். வாழை கன்னு வந்தால் தனியா எடுத்து நட்டு வைங்க. ரொம்ப கூட்டமா இருந்தா பெரிசா வளராது. செம்பருத்தி வால்மார்ட், ஹோம் டிபோட் எல்லாம் கிடைக்கும்.
ஹைபிஸ்கஸ்ன்னு போட்டு இருக்கும்.நான் டாலஸ்ல இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?.
Rajini

ஹாய் விஜி
மே 2, 2008 - 1:32pm - வழங்கியவர் ramba

ஹாய் விஜி எப்படி இருக்கிங்க? எனக்கு தோட்டம் போடனும்னு ரொம்ப ஆசை.வீட்டுல இன்டோர் பிளான்ட் வள்ர்க்கிறேன்.எனக்கு காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய்,புதினா,கொத்தமல்லிஆகியவ
ை வளக்கனும் ஆசை.இந்த செடிகளை வீட்டுக்குள்ள வள்க்கலாமா/?எப்படி வளக்கனும்?கொஞ்கம் சொல்லுங்களேன்.

ஹாய் விஜி,ramba
மே 2, 2008 - 2:13pm - வழங்கியவர் anjali73

ஹாய் விஜி,ramba எப்படி இருக்கிங்க
எப்படி இருக்கிங்க? பச்சை மிளகாய்,புதினா,கொத்தமல்லிஆகியச
ெடிகளைவீட்டுக்குள்ள வள்க்கலாம் ஆனா நல்ல வெயிலுள்ள பால்கேனியா இருந்தால் நல்லவளரும்,மிள்காய் நல்லகாய்காய்க்கும்.விஜி செம்ப்ருத்தி செடி வால்மர்ட்,ஹொம்டிப்போ கடைகளில் கிடைக்கிற்து.
எனக்கு தோட்டம் போடனும்னு ரொம்ப ஆசை.
நான் இப்பதான் வால்மர்டிலிருந்து வெள்ளைகத்திரிக்காய் செடி வாங்கி அப்பார்ட்மென்ட் வீட்டு பால்கெனியின் வச்சுருகேன். நல்ல வளருத்து.

நன்றி
மே 2, 2008 - 6:58pm - வழங்கியவர் vinnie

ஹாய் விஜி & ரஜினி நான் நல்லா இருக்கேன்.

விஜி நீங்க இந்த த்ரெட்ட போட்டது ரொம்ப நல்லதா போச்சு. உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

ரஜினி உங்களின் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி. இந்த முறை நிச்சயம் வெற்றி காய்கனிகளை பறித்தே தீருவேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது. நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்.

என் தோட்டம்
மே 5, 2008 - 2:26pm - வழங்கியவர் அதிரா

இந்தத் தலைப்பை எப்போ பார்த்தேன், பதில் போடுவதற்குள் காணாமல் போய்விட்டது. நாளை விபரம் எழுதுகிறேன், என்னுடைய பகுதிக்கு வரட்டும் என்று இதை அனுப்பி வைக்கிறேன். என் தோட்டம்பற்றிய கதையையும் சொல்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

You can buy hibiscus at any
மே 5, 2008 - 3:18pm - வழங்கியவர் rumya

You can buy hibiscus at any garden centers. I usually buy it at walmart. Quality is good. I have 2 type of hibiscus. One is hardy. That is if you plant it outside it will come back year after year (most places).Other hibiscus var. is tropical. I have them in the pot. Once cold weather hits I bring them inside.

You can buy hibiscus at any
மே 5, 2008 - 3:18pm - வழங்கியவர் rumya

You can buy hibiscus at any garden centers. I usually buy it at walmart. Quality is good. I have 2 type of hibiscus. One is hardy. That is if you plant it outside it will come back year after year (most places).Other hibiscus var. is tropical. I have them in the pot. Once cold weather hits I bring them inside.

வேஸ்ட் டிஸ்போஸர்
மே 6, 2008 - 3:30am - வழங்கியவர் malathi

உங்கள் வீடுகளில் வேஸ்ட் டிஸ்போஸர் இருக்கிறதா? அதன் பயன்பாடு எப்படி இருக்கிறது? அயல் நாடுகளில் வசிப்பவர் வீடுகளில் இது முக்கியமாக இடம்பெறும் என்று கேள்விப்பட்டேன். உங்கள் எல்லொருடைய கருத்துக்களையும் சொல்லுங்களேன்.

வாங்கோ!! தோட்டம் பார்க்கலாம்...
மே 6, 2008 - 4:00am - வழங்கியவர் அதிரா

நான் பின் வளவில் ஒரு துண்டு காணி செலக்ற் பண்ணி, புலெடுத்துவிட்டு, சுற்றிவர பலகை போட்டு அதனுள் மண்போட்டு கீழே உள்ளவை நட்டுள்ளேன்.

உருளைக்கிழங்கு,கரட், புறோகோளி,வெங்காயம், பீற்றுட், பீன்ஸ், கபேஜ் இவ்வளவும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுள்ளேன்.
கத்தரி ,மிளகாய் வீட்டுக்குள் வளர்க்கிறேன் கொஞ்சம் வளர்ந்ததும் வெளியே நடப்போகிறேன். உணவிற்காக வாங்கிய டுபாய் பூசணி( butter nut) விதைகளை நட்டேன் ஒரே ஒரு கன்று மட்டும் நன்கு வளர்கிறது, இனிமேல்தான் வெளியே நடப்போகிறேன்.

இன்னும் குளிர் நன்கு குறையவில்லை அதனால் இனிமேல் நட்டால்தான் கெதியாக வளரும். சின்ன வெங்காயம் நட்டேன் மேலே குருத்து வரவில்லை பிடுங்கிப் பார்த்தேன் கீழே நிறைய வேர் ஓடியுள்ளது. குளிர்தான் காரணம். நான் அவசரப்பட்டு வெளியில் நட்டுவிட்டேனோ குளிர்போவதற்கிடையில் என்றுதான் யோசிக்கிறேன்.

ரஜனி நீங்கள் பெரிய தோட்டக்காரர் போல்தான் தெரிகிறது. எனக்கும் சரியான விருப்பம், இந்தமுறைதான் ஆரம்பம். பார்ப்போம் என்னவெல்லாம் காய்க்கிறதென்று.

வின்னி இங்கே நாங்கள் பாவிப்பது multipurpose compost மண்தான் இப்படி அங்கே கிடைத்தால் வாங்கி போட்டு நடுங்கள். கொஞ்சம் தூவினால் போதாது நிறைய மண்போடவேண்டும். மழை கழுவாமல் இருப்பதற்காக சுற்றிவர பலகை அல்லது ரப்பர் சீற் போடுங்கள் அணையாக.

விஜி நீங்கள் சுக்குணி நட்டுள்ளதாக கூறினீங்கள், போனமுறை எங்கள் அக்காவீட்டில் ஒரு சுக்குணி நட்டார்கள், அது எந்தப் பெரிய மரம். ஒரு இலை மட்டும் 1 1/2 அடி இருக்கும். நிறைய காய்த்தது. அதனால் பயிர்களுக்கிடையில் நடவேண்டாம் தனியாக நடுங்கள். ஒன்று போதும். நான் கியூ கம்பரும் போட்டிருக்கிறேன். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

விஜி! நீங்கள் சொன்ன அன்றே நான் வெந்தயம் வீட்டுக்குள் போட்டுவிட்டேன், இப்போ கிலுகிலு என்று எல்லாம் முளைத்திருக்கிறது. பார்க்கவே சந்தோசமாக இருக்கு.

கொத்தமல்லி மரமா? கொடியா? வெளியில் போட்டால் வளருமா?
அஞ்சலி நீங்க கத்தரி வீட்டுக்குள் வளர்க்கிறீங்களா? ஆச்சரியமாக இருக்கு. வெளியில் புதினா நட்டேன் வந்த குருத்தெல்லாம் பூச்சி அரிக்கிறதே! மருந்து அடிக்க வேண்டுமா? எவற்றிற்கெல்லாம் மருந்து அடிக்க வேண்டும். இங்கே உள்ள வெள்ளையரைக் கேட்டேன் அவர்கள் சொன்னார்கள் உருளை..., கரட், கபேஜ், பீன்ஸ் இவற்றிற்கு மருந்து தேவையில்லை என்று.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

குப்பை
மே 6, 2008 - 4:09am - வழங்கியவர் அதிரா

மாலதியக்கா நீங்கள் குறிப்பிடுவது, தோட்டத்தில் வரும் குப்பைகளையா? அல்லது வீட்டால் குசினியால் வருபவையா?
குசினி சிங்கில் ஏதோ மெசின் பொருத்தி கழிவுகளை உடைத்து அப்படியே அனுப்பும் வழி ஏதோ கேள்விப்பட்டேன் அதுபற்றி பெரிதாக தெரியாது.

ஆனால் தோட்டத்தில் வருபவற்றிற்கு இங்கே கடைகளில் பரல்கள் விற்கிறார்கள். அதை வைத்து அவற்றில் குப்பைகளை போட்டு நிரப்பினால் அடுத்தவருடம் இதனை பசளையாகப் பாவிக்கலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்னும் பேசுங்க அதிரா
மே 6, 2008 - 4:29am - வழங்கியவர் malathi

அதிரா!...நீங்க அழகு தமிழில் கூறி இருந்த பதிலை பார்த்தேன். கிச்சனில் உள்ள குப்பைகளை வெளியேற்றுவதற்காக ஸிங்கில் பொருத்தப்படும் கருவியை பற்றித்தான் கேட்கிறேன். ஒருவேளை யூ.எஸ் - ல் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்குமோ?
வாழையை நீங்க சுக்குணி என்று சொல்வீர்கள் போலிருக்கிறது. வெந்தயத்தை விதைத்தது போலவே கொத்தமல்லியையும் தூவிவிட்டால் முளைத்துவிடும்.

ஆமாம் அதிரா
மே 6, 2008 - 5:36am - வழங்கியவர் thalika

ஆமாம் அதிரா படிக்கவே மிக அழகாக இருக்கிறது..அதுவும் ரொம்ப சின்சியரா நீங்க சொல்ற பதில் அழகோ அழகு

நன்றி மாலதியக்கா, தளிகா
மே 6, 2008 - 7:31am - வழங்கியவர் அதிரா

உங்கள் பாராட்டைப் பார்த்து எனக்கு கண்ணால் நீரே வந்துவிட்டது.
மாலதியக்கா, சுக்குணி என்றால் வாழை அல்ல. அது ஒருவகை சைனாக்காரரின் மரமாம். கிட்டத்தட்ட கியூகம்பர்( வெள்ளரிக்காய் ) என்றே சொல்லலாம். சிறிய பூசணி என நினைத்து நட்டார்களாம். இப்படி வந்ததாம். பெரிய பெரிய மஞ்சள் பூ பூக்கும்.

இங்கு நான் கேள்விப்படவில்லை. அப்போ நான் மல்லி கொஞ்சம் வெளியே விதைத்துப் பார்க்கப் போகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மாலதி மேம்
மே 6, 2008 - 8:05am - வழங்கியவர் Vijitvm

கார்டன் பற்றி எழுதறேன் சொன்னிங்க. இன்னும் வரல்லை. கொஞ்சம் கொஞ்சமா எழுதுங்க. நாங்களும் தெரிஞ்சுக்கலாம். சுக்ணி என்பது வெள்ளரிக்கார்ய் (குக்கும்பர்) போல நீட்டமாக இருக்கும். இதை பச்சையாகவே கூட சாப்பிடலாம் நன்றாக இருக்கும். இங்கு இதை சாலட்டில் கூட போட்டு சாப்பிடுவார்கள். இதில் சுக்ணி ரைஸ் பண்ணலாம் ரொம்ப நன்றாக இருக்கும்.

அதிரா உங்க தோட்டம்
மே 6, 2008 - 10:18am - வழங்கியவர் aniaksh

அதிரா உங்க தோட்டம் ரொம்ப கலர்புல்லா இருக்கு. நீங்க சொன்னவிதம் அதைவிட கலர்புல்லா இருக்கு :)) சுக்கின்னி நம்ம ஊர் வெள்ளரிக்காய் மாதிரி இருக்கும். சாம்பார்ல போட்டா நல்லா இருக்கும்.

நீங்க கொத்தமல்லி மரமா, செடியா, கொடியான்னு கேட்டதும் ரொம்ப சிரிச்சிட்டேன். சாரிப்பா. கொத்தமல்லி செடிதான். கொத்தமல்லி விதை( முளு தனியா) யை தண்ணியில 2 மணி நேரம் ஊரவையுங்க. அப்புறம் வெந்தயம் போலவெ தொட்டியில போடுங்க. சூப்பர் கொத்தமல்லி இலை கிடைக்கும். ரொம்ப நாள் விட்டுட்டா செடி முத்தி பூ எடுத்து, அந்தப்பூ ம்ல்லியா மாறிடும். நல்லா காயவிட்டு மல்லியாவும் எடுக்கலாம்.
நேரம் இருந்தா வாங்க பழகலாம்
Rajini

விஜி எப்படி இருக்கீங்க?.
மே 6, 2008 - 10:31am - வழங்கியவர் aniaksh

விஜி எப்படி இருக்கீங்க?. கார்டன் பத்தி கேட்டாலும் கேட்டீங்க, அதிரா , வின்னி எல்லோரும் ஏரும் கலப்பையுமா சுத்திட்டு இருக்காங்க. ஒரு பசுமை புரட்சியே வந்திடுச்சு.
"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொளிலாளி
விவசாயி விவசாயி"
அப்பிடின்னு அதிரா பாடுவது இங்க கேட்குது. நீங்க என்ன செய்யறீங்க?
உங்க தோட்டம் எப்படி இருக்கு?.
Rajini

ரோஜா
மே 6, 2008 - 12:30pm - வழங்கியவர் KT

எனக்கு ஒரு சந்தேகம், நான் போன வருடம் ரோஜாகன்றுகள் வாங்கி நட்டேன். சம்மர் முடிந்து வின்ட்ரும் முடிந்து ஸ்பிரிங் ஸீச்னும் வந்தாச்சு இன்னும் துளிர் விடவில்லை. நான் BJ's wholesale கடையில் தான் வாங்கினேன். நான் மிராக்கிள் க்ரோ ரோஸ் ப்ளான்ட் food போட்டேன். வேறு என்ன பண்ணனும் என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்க.

59 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »