topic_image


சரவண பவன் தேங்காய் சட்டினி,இட்லி சாம்பார் ரெசிபி தெரியுமா?
வீட்டில் செய்யும் இட்லி சாம்பார் அந்த டேஸ்ட் வருவதில்லை.


கவிதா சரவண பவா
மே 5, 2008 - 2:11am - வழங்கியவர் Jaleela Banu

கவிதா நீங்கள் சாம்பார் பகுதியை கிளிக் செய்யுங்கள் அங்கு சரவண பவா ஹோட்டல் சாம்பார் இருக்கு//

இல்லை கூட்டாஞ்சோறில் , பீவி, சிங்கபூர் அவர் கொடுத்துள்ளார் பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/
node/5325

ஜலீலா

ஜலீலா
மே 5, 2008 - 2:19am - வழங்கியவர் Janaki2411

ஜலீலா அறுசுவைக்கு வந்தற்கு நன்றி. எல்லோரும் கேட்கும் சந்தேகங்களுக்கு உடனே பதில் தரவதற்கு உங்களுக்கு நிகர் நீங்கள் தான். ரொம்ப நன்றி.

ஜானகி

ஜலீலாவுக்கு தெரியும்
மே 5, 2008 - 3:19am - வழங்கியவர் malathi

கவிதா கேட்டதிலிருந்து நானும் தெரிந்துகொள்ளலாமே என்று சரவணபவன் சாம்பாரை பற்றி யாராவது சொல்வார்களா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். ஜலீலா வந்து கரைக்டாக சொல்லிவிட்டார்கள். இதற்குத்தான் ஜலீலா வேண்டும் என்று சொல்கிறோம்.....தேங்க்யூ!

ஓடி ஓடித்தேடினேன்
மே 5, 2008 - 3:25am - வழங்கியவர் அதிரா

மர்ழியா,
எங்கே பதிவு போடலாம் என்று ஓடி ஓடித்தேடினேன். கண்ணில்பட்டது. இதுதான். கவிதாகண்ணன் கோபிக்க மாட்டார். அதனால் இங்கே கதைக்க வந்தேன். இது என்ன வம்பா போச்சு, எனக்கு இன்னும் இரட்டையர்கள் பிறக்கவில்லை. இந்த ஜலீலாக்காதான் அன்போடு அப்படி அழைப்பார். எனக்கு இரு மகன்கள். ஒரே உடுப்புதான் போடுவேன், அதனால் தான் அந்தப் பெயர் வந்துவிட்டது. ஆனால் எனக்கு இரட்டைப் பிள்ளகளில்(twins) நல்ல விருப்பம்.

மாலதியக்கா,
வறை, சுண்டல் செய்முறை - மஸ்ராட் இலையில் .
இலையை சுத்தமாக்கி மெல்லியதாக அரிந்து கொள்ளவேண்டும். அதற்குள் ஒரு பிடி தேங்காய்ப்பூ + உப்பு + மஞ்சள் / கறித்தூள் போட்டுப் பிரட்டி வைத்துக்கொண்டு. அடுப்பில் எண்ணெய் விட்டு விரும்பியபடி ( வெங்காயம்+மிளகாய்+ உங்கள் முறை) தாளித்து இந்த இலையையும் கொட்டிப் பிரட்டி இறக்குவது அவ்வளவுதான். எனக்கு இலைகளில் செய்யும் எந்த வறையாயினும் இருந்தால் ஒரு பொரியலும் சேர்த்து சாப்பிடுவேன். வேறு எதுவும் தேவை இல்லை. விரத நாட்களில் நிட்சயம் ஒரு சுண்டல் செய்வேன்.

ஜலீலாக்கா, எங்களுக்கு(in uk) இன்றுதான் "மேதினம்" விடுமுறை. அதாவது மே மாதத்தில் வரும் முதல் திங்கள். அதனால் ஊரே மயான அமைதி. இங்கு எல்லோரும் விடுமுறை என்றால் 11 மணிக்குமேல்தான் எழும்புவார்கள் (எங்கள் வீட்டில் அப்படியல்ல).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மாலதி யக்காவ்
மே 5, 2008 - 3:26am - வழங்கியவர் Jaleela Banu

மாலதி யக்காவ் பேசாமல் இருக்கலாம் என்று தான் இருந்தேன், யாராவது சொல்லி கொள்ளட்டும் என்று

நமக்கு தெரிந்த நல்லதை யாரவது கேட்ட உடனே சொல்லிடனும்.

உங்கள் அன்பு என்னை ஈர்க்கிறது

ஜலீலா

ஹி ஹி
மே 5, 2008 - 4:05am - வழங்கியவர் MarliyaNoohu

அதிரா ஓஹ் அப்படியா?ஹி ஹி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. :-(

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹாய் ஜலீலா
மே 5, 2008 - 7:10am - வழங்கியவர் DEVA

அறுசுவை உறுப்பினர்களின் கேள்விக்கு உடனடி பதில் கொடுப்பதற்கு அனைவருமே உங்களை வாழ்த்துவார்கள். இரண்டு பெண்கள் இருக்கும் இடத்தில் மூன்றாவதாக ஒரு பெண் வந்தாலே அடித்துக் கொள்வார்கள், புறம் சொல்லிக் கொள்வார்கள் என்று சொல்வதுண்டு. இதில் இத்தனை பெண்கள் உறுப்பினர்களாக உள்ள அறுசுவையில் இதுபோல் மனஸ்தாபங்கள் நடப்பது சகஜம். அவர் அப்படி, இவர் இப்படி என்று குறை கூறாமல் நாம் நமது வேலையை பார்ப்போம் என்று ஏன் பலர் நினைப்பதில்லை என்றுக்கூட தோன்றும். அப்படி எதாவது நடக்கும்போது அதற்காக துவளாமல் நான் நம் வேலையை செய்தாலே போதும். அப்படி ஸ்போர்ட்டிவ்வாக நீங்கள் உதவுவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். கடமையை செய், பலன் தானாக வரும் என்பது போல் நீங்கள் எழுதிய குறிப்புகளுக்கும், உங்கள் பதில்களுக்கும் எப்போதும் உங்களைத் தேடி எங்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வந்துக் கொண்டே இருக்கும்.

வெல்கம் ஜலீலா அக்கா....
மே 5, 2008 - 7:51am - வழங்கியவர் இலா

உங்கள் பதிவுகளை பார்த்தவுடன் மிகவும் சந்தோஷம்....

நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன்.. நலமாக மகிழ்ச்சியுடன் வாழ இறைவனிடம் வேண்டிகிறேன்...

ila

Hai ஜாலீலா
மே 5, 2008 - 9:21am - வழங்கியவர் arunkavi

kavitha
im Kavitha i have already send message to u regardin managkombu murrukku.im new to arusuvai.i have 3 yrs old chid.
அனுபீருக்கன் என்ன ப்ரப்ல்ம்னு தெரியது ஆனால் நீங்க மறுபடியும் வந்ததுகு ரொம்ப நன்றி.

ஹை
மே 8, 2008 - 6:53am - வழங்கியவர் meerancode

ஹை ஜலீலாஅக்கா அச்சலமு அலைகும் நான் பிரியானி பன்னுனா குலைந்து பொகுது என்ன பன்னனும் சொல்லுக