topic_image


அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.

ஒருவழியாக வீட்டை கட்டி முடித்து விட்டோம். இன்னும் சில வேலைகள் மீதமுள்ளன.

வரும் 26 ந்தேதி (மே - 2008) திங்களன்று காலை 11 மணியளவில் புது மனை புகு விழா நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று வருகை தர வேண்டுமென அழைக்கிறோம்.

உதவிக்குறிப்புக்கள் வழங்கிய அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டு வேலைகளும், புது மனை புகு விழாவும் முடியும் வரை என்னால் அறுசுவைக்கு வர இயலாதென நினைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.


வாழ்த்துக்கள் செல்வி
மே 4, 2008 - 10:25pm - வழங்கியவர் Manohari

வாழ்த்துக்கள் செல்வி தங்களின் புதுமனை புகு விழா நிகழ்வு சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விழாவிற்கு எங்களில் பல பேரால் வந்து கலந்துக் கொள்ள முடியாது என்று தெரிந்திருந்தாலும் எங்களை மறக்காமல் அழைத்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது மிக்க நன்றி. உனது கனவு இல்லம் நினைவானதுப் போல், அதில் நீயும் உனது குடும்பமும் இன்று போல் என்றென்றும் ஆனந்தமாய் வாழ வாழ்த்தும் அன்பு தோழி மனோகரி.

செல்வி!..வாழ்த்துக்கள்
மே 5, 2008 - 1:13am - வழங்கியவர் malathi

செல்வி!..... வீடு கட்டுவது நல்லபடியாக நிறைவடைந்துவிட்டதா? என்னுடைய மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். வீட்டிற்கு பெயர் ஏதாவது செலக்ட் பண்ணி இருக்கிறீர்களா? புதுமனை புகு விழாவிற்கு எல்லோரையும் அழைத்ததற்கு நன்றி. விழா நல்ல முறையில் மகிழ்ச்சியுடன் நடைபெற வாழ்த்துக்கள்!

செல்வி மேடம் நலமா?
மே 5, 2008 - 1:38am - வழங்கியவர் Jaleela Banu

செல்வி மேடம் நலமா?

ஒருவழியாக வீட்டு வேலையை முடித்து விட்டீர்கள்.வீட்டை கட்டுவதென்ன லேஸ் பட்ட விஷியமா ?

அப்பா நிறைய வேலை இருக்கும் இல்லையா?

இனி நல்ல படியாக நீங்கள் நினைத்தவிதம் இன்பமாக அங்கு வாழ வாழ்த்துகிறேன்.

வீட்டை கட்டுவதும், ஒரு பெண்ணை கலாயானம்
கட்டி கொடுப்பதும் ஒன்று என் கிரான் மா அடிக்கடி சொல்வார்கள்.

நல்ல படியா பேரன் பேத்தியோடு சந்தோஷமா நீங்கள் நினைத்த படி சந்தோஷமாக உங்கள் எண்ணம் போல் வாழ என் மணமார்ந்த வாழ்த்துக்கள்.

ம்ம் சீக்கிரம் விருந்து ரெடி பண்ணுங்க வரேன்.

ஜலீலா

செல்விக்கா
மே 5, 2008 - 2:40am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் செல்விக்கா எப்படி இருக்கீங்க?நானும் அருசுவை இல் சில பிரட்சனையினால் கொஞ்சநாள் வராமல் போஇ விட்டேன்...அது போகட்டும்..வீட்டு வேலை முடிஞ்சு விட்டதா?ரொம்ப சந்தோஷம்..சென்னைக்குலாம் வரபோறதா சொன்னீங்களே?அங்கேயே பட்ஷ்ஸ்லாம் முடிச்சாச்சா?
நல்லபடியாக இருக்க என் வாழ்த்துக்கள்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

புதுமனைப் புகுவிழா
மே 5, 2008 - 2:47am - வழங்கியவர் அதிரா

நான் இப்போதான் பார்த்தேன். செல்வியக்கா வீட்டு வேலை முடிந்து விட்டதா? குடிபுகுதலை விட வீட்டை ஒழுங்கு பண்ணி முடிக்க வேண்டுமே அதுதானே பெரிய வேலை. நல்லது, சந்தோசம். புது மனையில் சகல சந்தோஷங்களுடன் வாழ வாழ்த்துகிறோம். முடிந்தால் பிறகு படம் அனுப்புங்கள்.

ஆ.... மர்ழியா நீங்க இங்கதான் இருக்கிறீங்களா? நான் தேடினேனே....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா
மே 5, 2008 - 2:56am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் அதிரா நலமா?
உங்களுக்கு இரட்டை குழந்தையா?இப்பதான் பதிவை பார்த்தேன்..வயது என்ன இருக்கும்?ரொம்ப சந்தோஷம்ப்பா..பாவம்ப்பா அந்த மாலதிக்க இப்படி கேள்விகேட்டு கொல்லுறீங்களே?இது நியாயமா?உங்க இலங்கை தமிழை கொட்டுங்க...
:-)
அன்புடன்,
மர்ழியாநூஹு

வாழ்த்துக்கள்!
மே 5, 2008 - 4:19am - வழங்கியவர் Asma

அன்புள்ள செல்வியக்கா! வீட்டு வேலைகள் முடிந்தாலும் குடிபுகுந்து சிலநாட்கள் வரை வேலைகள் அதிகமாகதான் இருக்கும். இப்போது இன்னும் டென்ஷனாக இருப்பீர்கள். எல்லாம் நல்லபடி நடந்தேற என் வாழ்த்துக்கள்!

உங்கள் வீட்டின் ஃப்ரென்ட் விவ் (Front View) கிட்டத்தட்ட எங்க வீடு மாதிரி தெரிந்தது ஃபோட்டோவில்! :) எத்தனை ஸ்கொயர் ஃபீட்ஸ் மொத்தம்? 1 ஸ்கொயர் ஃபீட் ரேட் எவ்வளவு? மொட்டை மாடியா அல்லது ஃபஸ்ட் ஃப்ளோர் உண்டா? உங்கள் வேலைகளுக்கிடையில் உடனே பதில் தரவேண்டாம். பொறுமையாக பதில் தந்தால் போதும்.

வாழ்த்துக்கள்
மே 5, 2008 - 4:28am - வழங்கியவர் tajprak

அன்புள்ள செல்வி.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் செல்வி அக்கா
மே 5, 2008 - 6:54am - வழங்கியவர் DEVA

தாங்கள் புதுமனைப் புகுவிழாவை சிறப்பாக நடத்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் வீட்டில் இன்றுபோல என்றும் சந்தோஷம் நிறைந்திருக்க அறுசுவை உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம். வாழ்த்துக்களோடு, தங்களிடம் புறப்படும்போது பேச முடியாமல் போனதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டு முறை பதிவாகிவிட்டது
மே 5, 2008 - 6:54am - வழங்கியவர் DEVA

எப்படி என்று தெரியவில்லை. ஒரே பதிவு இரண்டு முறை பதிவாகி விட்டது. எனவே அதனை நீக்கி இதனை எழுதியிருக்கிறேன். மர்ழியா எனக்கு அனுப்பிய பதிவும் கூட இப்படி இரண்டு முறை வந்தது. ஏனென்று தெரியவில்லை. அப்படி இரண்டாவது முறை வந்த பதிவை நீக்க முடியுமா இல்லையா என்பதை அட்மின் அவர்கள் நேரம் கிடைக்கும்போழுது சொல்ல வேண்டும்.

வாழ்த்துக்கள்
மே 5, 2008 - 7:17am - வழங்கியவர் gk

புதுமனை புகுவிழா இனிதே நடைபெற நல்வாழ்த்துக்கள். ஆட்சேபணை இல்லை என்றால் எந்த இடம் என்று கூறமுடியுமா? நானும் அந்த ஊரை சேர்ந்தவள் என்பதால் தெரிந்து கொள்ள ஒரு ஆவல்.

நன்றி செல்வி
மே 5, 2008 - 7:20am - வழங்கியவர் Parveen banu

அன்புள்ள செல்வி நலமா ?உங்கள் இல்ல அழைப்பிற்க்கு எங்கோ தொலைவில் இருக்கும் எங்களை எல்லாம் அழைத்தர்க்கு மிகுந்த சந்தோஷம்.
உங்கள் இல்லத்தில் என்றென்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.அழைபிற்க்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன் பர்வீன்.

செல்வி மேடம்
மே 5, 2008 - 7:30am - வழங்கியவர் Nandhini29

நல்ல படியாக வீட்டை கட்டி முடிச்சா மேடம்,congrats. இனி தான் நிறைய வேலையே இருக்கும் பராமரிப்பது, அழகுபடுத்துவது போன்றவை.
உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் எனது புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள். உங்கள் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளவும்.

வாழ்த்துக்கள் செல்விமா...
மே 5, 2008 - 7:56am - வழங்கியவர் இலா

Selivimaa..

Moving into a new house is one of the most exciting events in life. It is in a way starting a new life because Home is where your story begins.
We wish you and your family years of happy times in Your new home.

Thanks for inviting all of the Arusuvai family to Celebrate this special moment in your life.

On this day and the days to come, may your home be fragrant with love and affection of all of us here.

என்றும் அன்புடன்

இலா

அன்புள்ள செல்வியக்கா,
மே 5, 2008 - 8:04am - வழங்கியவர் thalika

சொல்லி சொல்லி தோ இப்ப வீடு கட்டி முடிச்சாச்சு.ரொம்ப சந்தோஷம் இனி நீங்கள் நினைத்தது போல் அலங்கரிக்கனும்.ஓபென் டெர்ரேஸ் ஸ்பேசை நிரப்புவதை பற்றி நிறையவே கற்பனை பன்னி வைத்திருப்பீர்கள்..வாழ்த்துக்க
ள்..விழா முடிந்ததும் இயன்றால் எங்களுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அனைவருக்கும் நன்றி...
மே 5, 2008 - 12:55pm - வழங்கியவர் senthamizh selvi

அனைவருக்கும் நன்றி.
தனித்தனியாக பதில் சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும்.
முதன்முதலில் வாழ்த்திய தோழி மனோகரிக்கு மிக்க நன்றி. நேரில் வந்து கலந்து கொள்ள முடியாவிட்டாலும் மானசீகமாக நீங்கள் எல்லோரும் வருவீர்கள் என்ற நம்பிக்கை தான்:-))

நிறைய பெயர் மனதில், இன்னும் முடிவாகவில்லை. உங்களையெல்லாம் விட்டா எனக்கு உறவினர்னு சொல்லிக்க யார் இருக்கா? முதல்ல உங்களை எல்லாம் தான் அழைத்துள்ளேன் மாலதி. வாழ்த்துக்கு மிக்க நன்றி.

ஐ ஜலீலா, நலமே. கல்யாணம் செய்வது சுலபம். வீடு கட்டுவது? அப்பா, கதையே சொல்வேன். விருந்து தயாரிக்க ஜலீலா இருந்தா நல்லாயிருக்கும். பேரன், பேத்தி எடுத்து சீக்கிரம் வயதாக வைக்கிறீர்களே:-)

மர்ழியா, சென்னை இன்னும் வரலை, வருவேன் இந்த வாரம் கூட. எப்பன்னு தெரியலை. வாழ்த்துக்கு நன்றி.

அதிரா, வீட்டு வேலை முழுசும் முடியலை. ஜூனில் முழுசும் முடிந்ததும் வீடு மாறுவோம். இப்ப கிரகப்பிரவேசம் மட்டும். கண்டிப்பாக படம் அனுப்புகிறேன். வாழ்த்துக்கு நன்றிப்பா.

அஸ்மா, நலமா? மொத்தம் 2400 சதுர அடி. முதல் தளமும் சேர்த்து கட்டியுள்ளோம். சதுர அடிக்கு 650 ரூபாய்(நாங்க போன வருடமே பேசியது, பழைய ரேட், இப்ப 1100). வேறு போட்டோ அனுப்புகிறேன். வாழ்த்துக்கு நன்றி.

நன்றி பிரியா.
நன்றி தேவா(ஆனாலும் கோபம் தான் வீட்டுக்கு வராம போனதற்கு).

கோதை, நன்றி, முருங்கப்பாக்கம் இடம். தெரியுமா?
நீங்க எந்த இடம்?

நன்றி பர்வீன், இப்பன்னு இல்லை. எப்ப இந்தியா வந்தாலும் வீட்டுக்கு வரலாம்.

நூற்றுக்கு நூறு சரி, இனிதான் வேலையே. உடம்பையும் கவனித்துக் கொள்ள சொன்ன அன்புக்கு நன்றி நந்தினி.

அருமையான வார்த்தைகள். நன்றி இலா.

ஒருவழியாக ரூபி. பார்த்தால் பிரமிப்பாக இருக்கு. ஓடிஎஸ்ஸை எப்படி நிரப்புவது என்பதை யோசித்துக் கொண்டே இருக்கோம். கண்டிப்பாக படங்கள் வரும். உங்களுடன் இல்லாமல், யாரிடம் பகிர்ந்து கொள்வேன். நன்றி ருபி.

வாழ்த்திய, வாழ்த்தப் போகும் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

வாழ்த்துக்கள் செல்வி அக்கா
மே 5, 2008 - 1:29pm - வழங்கியவர் rasia

நலமாக இருகீங்களாக்கா?ரொம்ப நாளாச்சு பேசி!உங்கள் வீட்டு வேலைகள் முடிந்து கிரகப்ரவேசம் செய்வது அறிந்து மிக்க மகிழ்ச்சி!உங்கள் புதிய இல்லத்தில் சந்தோஷம் மட்டும் நிலைத்திட எனது வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன்
ரஸியா

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
மே 5, 2008 - 1:40pm - வழங்கியவர் gk

செல்வி
சில வருடங்களுக்கு முன் ரெயின்போ நகரில் இருந்தோம். முருங்கப்பாக்கம் தெரியும். மானசீகமாக ஒரு முறை பாண்டிச்சேரியை வலம் வந்தேன். நன்றி

புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்!
மே 5, 2008 - 3:20pm - வழங்கியவர் Joel

சகோதரி செல்வி அவர்களுக்கு,
புது இல்லம் செல்ல இருக்கும் உங்கள் குடும்பத்திற்கு என்னுடைய மனதார்ந்த வாழ்த்துக்கள்.புது இல்லத்தில் சகல சந்தோசங்களும்,நல்ல ஆரோக்கியமும்,ஐசுவர்யமும் உங்கள் குடும்பத்திற்கு என்றென்றும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

ஜோயல்

வாழ்த்துக்கள்
மே 5, 2008 - 3:30pm - வழங்கியவர் vinnie

செல்வி அக்கா புதிய வீடு கட்டி முடித்தது குறித்து மிகவும் சந்தோஷம். உங்கள் புதிய இல்லத்தில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அப்படியே உங்கள் உடல்நிலையையும் கவனித்துக் கொள்ளவும். உங்கள் வீட்டை தாண்டித்தானே என் மாமியார் வீட்டிற்குப் போக வேண்டும். அப்போது உங்களையும், உங்கள் கனவு இல்லத்தையும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும் என நம்புகிறேன்.உங்களை என்றாவது ஆன் லைனில் பிடிக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். இன்று மிஸ் பண்ணி விட்டேன் என்று நினைக்கிறேன்

செல்வி மேம்
மே 5, 2008 - 3:59pm - வழங்கியவர் Vijitvm

வாழ்த்துகள். நானும் உங்களை போல் இப்பதான் புது மனை விழா முடித்தேன். ரொம்ப களைப்பா இருந்தது 3 நாடக்ளுக்கு பிறகு நம்ம ரொட்டின் வேலைகள் துடங்கிவிட்டன். பாவம் நிங்க வேலைக்கும் போய் கொண்டு வீட்டையும், நம்ம அருசுவையும் பார்த்து கொண்டிருக்கிங்க ரொம்ப களைப்பா தான் இருக்கும்.

வாழ்வில் எல்ல லஷ்மி கடாஷ்மும் பெற்று வாழ்வில் எல்லா சந்தோஷம் பெற்று நல்லபடியா பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறேன்.

வாழ்த்துகள்
மே 5, 2008 - 5:12pm - வழங்கியவர் Nila2006

எமது மனமார்ந்த வாழ்த்துகள் செல்வி அக்கா.
-நர்மதா :)

புதுமனை புகுவிழா
மே 5, 2008 - 7:55pm - வழங்கியவர் ManiSara

செல்விமாவுக்கு புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள். புது இல்லத்தில் எல்லா செல்வங்களும் பெற்று பேரன் பேத்திகளுடன் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

அன்புடன்
மணிமேகலை.

வாழ்த்துக்கள்
மே 5, 2008 - 9:50pm - வழங்கியவர் Janaki2411

செல்வி அம்மா வீடு முடிந்து விட்டது என்று கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இனி தான் சிறு சிறு வேலைகள் ரொம்ப இருக்கும். வேலையின் மத்தியிலும் உடம்பையும் கொஞ்சம் பார்த்துங்கோ! எங்களை எல்லாம் அழைத்தற்கு நன்றி. கண்டிப்பாக நான் வந்து பார்ப்பேன் என்று நினைக்கிறேன். நான் மே 24ந்தேதி இந்தியா வருகிறேன். கண்டிப்பாக முடிந்தால் வருகிறேன். அந்த வீட்டில் எல்லா சந்தோஷங்களும் பெற்று, நோய் நொடின்றி வாழ வாழ்த்துக்கள்.

ஜானகி

சகோ.செல்வி!
மே 6, 2008 - 1:46am - வழங்கியவர் kulasaisulthan

சகோ.செல்வி!
கொஞ்சம் லேட் டாக வந்துவிட்டேன். வாழ்த்துக்கள். புது மனை புகு விழாவிற்கு! localல் அழைப்பு எதும் உண்டா?

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

அன்புள்ள செல்வி அக்காவிற்கு.
மே 6, 2008 - 8:03am - வழங்கியவர் Girl From Oz

இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் :) உங்களுக்கு பிறகு ஈமெயில் அனுப்புகிறேன். நிச்சயம் உங்கள் புது வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அன்புடன் உங்கள் தங்கை
உமா

செல்விமா
மே 6, 2008 - 8:24am - வழங்கியவர் pradeebala

செல்விமா எப்படி இருக்கீங்க அப்பா நலமா? உங்க வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு எங்கள் வாழ்த்துகள்.உங்ககிட்ட பேசி ரொம்ப நாளாச்சு வேலைகளுக்கு நடுவில் உடம்பையும் பாத்துக்குங்க
அன்புடன் தீபா

செல்விக்கா
மே 6, 2008 - 8:32am - வழங்கியவர் KT

செல்விக்கா புதிய வீட்டில் எல்லா வளங்கள் பெற்று மகிழ்சியாக வாழ வாழ்த்துகிறேன். இனிமே அறுசுவையில் அடிக்கடி உங்களை பார்க்கலாம்.அடுத்து உங்கள் கைவண்ணத்தால் வீட்டை அழகு படுத்துங்கள்.

மாலி

அன்பு உள்ளங்களுக்கு நன்றி...
மே 6, 2008 - 12:48pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு மாலி,
நலமா? என்னை வாழ்த்தவே அறுசுவைக்கு வந்தது போல் இருக்கிறது(ரொம்ப நாள் கழித்து).

இப்போதே அப்படித்தான். ஹை சீலிங்கில் மேலே உள்ள ஜன்னலுக்கு பெயிண்டிங் செய்த கண்ணாடி வேண்டும். பாண்டியில் நல்லாவே இல்லை. விலையும் ரொம்ப கூட. அதற்கு இப்ப என்னோட கைவண்ணம் தான்(எவ்வளவு மோசமாக இருந்தாலும்). கண்டிப்பாக போட்டோ வரும்.

இல்லை, இன்னும் கொஞ்ச நாள் அறுசுவைக்கு சுத்தமாக வரவே மாட்டேன்.
அன்புடன்,
செல்வி.

அன்பு உள்ளங்களுக்கு நன்றி...
மே 6, 2008 - 1:08pm - வழங்கியவர் senthamizh selvi

ரஸியா,
ஆங், பேசி ரொம்ப நாள் தான் ஆச்சு. இன்னும் வேலைகள் பாக்கி இருக்கு. வாழ்த்துக்கு நன்றி.

அன்பு சகோதரர் ஜோயல்,
என்னை வாழ்த்துவற்காக நீங்கள் மன்றத்திற்கு வந்தது சந்தோஷமாக இருக்கு. மிக்க நன்றி.

அன்பு வின்னி,
ஆமாம், உனக்கு போகும் வழியில் தான் வீடு உள்ளது. கண்டிப்பாக வரணும். முடிந்தால் இடையில் பேசுவோம். வாழ்த்துக்கு நன்றி.

விஜி,
ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. ஆபீசுக்கு லீவு போட்டுட்டு வீடே கதின்னு இருக்கோம். இன்னும் இன்விடேஷன் அடிக்கலை. டிரஸ் எடுக்கலை. ஹெல்புக்கும் ஆள் இல்லை. ஒண்னும் புரியலை. 20 நாட்களில் எது முடியுமோ, அதுதான். ரொம்ப நன்றிப்பா.

மிக்க நன்றி நர்மதா. நலம்தானே?

மணிமேகலை,
அதிகம் பேசியதில்லைன்னாலும் பாராட்டியதற்கு மிக்க நன்றி. உங்களுக்கு ஒரு பதிலும் கொடுத்டுள்ளேன்.

ஜானு,
ஆஸ்திரேலியாவில் இருக்கிறவங்க எல்லாரும் ஏமாத்தறவங்கன்னு பேர் வாங்காம ஒழுங்கா வர்ற வழியப் பார். மெயில் அனுப்பினேன். அப்பா நம்பரில் கூப்பிடு. உடம்பை பார்த்துக்க சொன்ன அன்புக்கு மகிழ்கிறேன்.

சகோ. குலசை சிலதான் அவர்களே,
மிக்க நன்றி.. இது ஒன்றும் லேட் இல்லை. நான் தான் ரொம்ப முன்பாக சொல்லி விட்டேன். லோகல் அழைப்பு உண்டு. அட்ரஸ் தாருங்கள்.

அன்பு உமா,
ரொம்ப பிசியோ? வாழ்த்துக்கு நன்றி. போட்டோ கண்டிப்பாக வரும். மெயிலில் பேசுவோம்.

அன்பு தீபு,
நலமா? எல்லோரும் நலமே. ரொம்ப நாளாச்சு பேசி. ஏன்? வாழ்த்துக்கும், உடம்பை பார்த்துக்க சொன்னத்ற்கும் நன்றி.
அனைவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

71 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »