topic_image


என் கணவர் நேற்று சப்போட்டா வாங்கி வந்தார். ஆனால் எல்லாம் காயாக உள்ளன. அவற்றை பழுக்க வைக்க ஏதும் வழி உள்ளதா?


சப்போட்டா
மே 6, 2008 - 1:47am - வழங்கியவர் justforfunchat

என் கணவர் நேற்று சப்போட்டா வாங்கி வந்தார். ஆனால் எல்லாம் காயாக உள்ளன. அவற்றை பழுக்க வைக்க ஏதும் வழி உள்ளதா?

சப்போட்டா எனக்கு பிடிக்கும்
மே 6, 2008 - 2:19am - வழங்கியவர் Jaleela Banu

சப்போட்டா (எனக்கும் என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும்)

ஒரு துணி பையில் போட்டு வெளியில்மாட்டி வைய்ங்கள்.

(அ) அரிசி வைக்கும் பக்கெட்டில் போட்டு வைக்கவும் இரண்டு முன்று நாட்கள் கழித்து பாருங்கள்
ஜலீலா

chikkoo
மே 6, 2008 - 2:25am - வழங்கியவர் thalika

ஆம் அதனை அரிசி போட்டு வைக்கும் பாத்திரத்திற்குள் வைத்தால் 2 நாளில் பழுக்கும்.அதில் ஜூஸ் மிக அருமையாக இருக்கும்

தளிக்கா அஸ்ஸலாமு அலைக்கும்
மே 6, 2008 - 2:29am - வழங்கியவர் Jaleela Banu

தளிக்கா அஸ்ஸலாமு அலைக்கும்

அவன் எங்கு வெளியில் போய் சாப்பிட்டலும் சிக்கு மில்க் ஷேக் தான்
நான் கடைக்கு போனாலும் அவனுக்கும் எனக்கும் நாலு பழம் வாங்கி வருவேன்,ஏனென்றால் இது வரை இங்கௌம் ரொமப காய உள்ளது தான் கிடைக்கும்.
அத வாங்கி வந்து பழுக்கவைத்து சாப்பிடும் அளவுக்கு பொறுமை எங்க இரண்டு பேருக்கும் கிடையாது.

ஜலீலா

ஜூஸா
மே 6, 2008 - 2:30am - வழங்கியவர் kothai.R

என்னது சப்போட்டா ஜூஸா தளிக்கா அக்கா என்ன இதுல ஜூஸ் செய்யலாமா? இங்க நிறைய கிடைக்குது எப்படி ஜூஸ் செய்வதுன்னு சொல்றீங்களா தளிகா அக்கா. சப்போட்டா வாங்கி சும்மா கட் செய்து விதையை எடுத்துட்டு சாப்பிடுவோம் அவ்வளவு தான்

டியர் கோதை
மே 6, 2008 - 5:33am - வழங்கியவர் MarliyaNoohu

டியர் கோதை சப்போட்டவை பழுக்கவைக்க ஜலிலாக்கா,தளிகா சொன்னது போல அரிசியில் புதத்து வைத்தால் சீக்கிரம் பழுக்கும்...

சப்போட்டா ஜூஸ் வேற் ஒன்னும் இல்லை பாலில் தேவையான சீனி போட்டு சப்போட்டவை கட் பண்ணி போடுங்க.மிஸியில் நல்லா அடிங்க,பின் வடிக்கட்டுங்க சப்போட்டா ஜூஸ் ரெடி...கூலா வேனும்னா பாலை கூலா ஓத்தி அடிங்க..இல்லைனா பாலை பிரீஜரில் போட்டு வைத்து கல்லானதும் போடுங்க..ஜில்லுன்னு இருக்கும்..ஜலீல்லாக்கா எனக்கு வாய் ஊறுதுக்கா கைவசம் இல்லை..எனக்கு உயிர் சப்போட்டா ந்னா..கோதை எனக்கும் அன்னுப்புங்கப்பா நான் இருக்கும் பக்கம் ஒரு பிரூட்ஸும் வராது..சூப்பர் மார்கட்தான் போகனும்...இல்லைனா பேரிஸ் பக்கம் போனால் மட்டும் உண்டு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா அக்கா
மே 6, 2008 - 5:40am - வழங்கியவர் kothai.R

அக்கா எப்படி பழுக்க வைப்பதுன்னு நான் கேக்கலை. ஜூஸ் தானே உங்களுக்கு வேணும் தோ அனுப்பிடுறேன். இக்கட சூடண்டி.
சப்போட்டா ஜூஸ் சப்போட்டா ஜூஸ் இது மர்ழியா அக்காவுக்கு மட்டும் தான். ஜூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
பாருங்க அக்கா வந்துகிட்டே இருக்கு அப்படியே எடுத்துக்கோங்க ஓகே.அக்கா நான் இந்த சப்போட்டா ஜூஸ் குடித்ததே இல்ல நாளைக்கு தான் பழம் வாங்கி வந்து செய்யனும்

மர்ழியா!
மே 6, 2008 - 5:51am - வழங்கியவர் kulasaisulthan

சென்னையில் சப்போட்டா எங்கு காணினும் கொட்டி கிடக்கிறது என்றே சொல்லலாம். பாரிஸ் என்று இல்லாமல் எங்கும் கிடைக்கிறதே. அதுவும் இப்போ சப்போட்டா சீசன். சப்போட்டா கிடைக்காத இடம் சென்னையில் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லையே! எவ்வளவு வேண்டும் சொல்லுங்கள். ஒரு மணி நேரத்தில் உங்க வீட்டில் இருக்கும்.
குலசை சுல்தான்.
வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

சப்போட்டா
மே 6, 2008 - 5:58am - வழங்கியவர் harigayathri

அட சப்போட்டா ஜூஸ், இதுவர இந்த சப்போட்டா என்ன செய்ய முடியும்னு தெரியாமல் இருந்தேன் ஜூஸ் செய்ய முடியுமா நன்றி ஜலீலா மேடம். இது தான் சப்போட்டா சீசன் ஆச்சே பிறகு என்ன நாளைக்கே செய்து விட வேண்டியது தான்

ஜெயஸ்ரி,குலசை அண்ணா
மே 6, 2008 - 6:46am - வழங்கியவர் MarliyaNoohu

அதுசரி ஜெயஸ்ரி மெத்தட் சொன்னது நான் நன்றி ஜலிலாலக்காக்கா?பேஸ்,பேஸ் ரொம்ப நல்லா இருக்குப்பா...

சலாம் குலசை அண்ணா நான் இருக்கும் பக்கம் ஒன்னும் கிடைக்காது..பிரஷஅனா காய்கறிகள் கூட கிடைக்காட்து

அன்புடன்,
மர்ழியாநூஹு

அனைவருக்கும் சப்போட்டா சார்பில் ஹாய்
மே 6, 2008 - 6:49am - வழங்கியவர் அதிரா

எல்லோரும் புகழ்ந்து தள்ளுறீங்களே... எனக்கும் கொஞ்சம் சொல்ல முடியுமா சப்போட்டா என்றால் என்ன? அதற்கு வேறு ஏதாவது பெயர்கள் உண்டா?

நான் "வருஷமெல்லாம் வசந்தம்" படத்தில்தான் முதன்முதலாக அந்தப் பெயரையே கேட்டேன், அங்கிள் ,கோதை,எனக்கும் கொஞ்சம் கொரியரில் அனுப்புங்கள். நேற்று, இன்று எங்களுக்கு சூப்பர் வெதர் நான் இவ்வளவு நேரமும் காடினில்தான் நின்றேன். சப்போட்டாவின் நல்ல குணங்களையும் கொஞ்சம் எடுத்து விடுங்கோ

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கோதை
மே 6, 2008 - 6:52am - வழங்கியவர் MarliyaNoohu

கோதை சாரிப்பாஅ தூக்க கிரக்கதில் வந்தேன் அதான் பெயர் மாற்றி குழப்பிட்டேன் :-)..அது சியாமா அவங்க கேட்டது நான் இரண்டும் நீங்கதாஅன்னு அனுப்பிட்டேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அதிரா
மே 6, 2008 - 6:57am - வழங்கியவர் MarliyaNoohu

ஆஹா வந்த்துட்டாங்கப்பா...வந்துட்டா
ங்க..அதிரா சிக்கோதான் சப்போட்டா..ஆங்கில பெயர் புரிந்ததா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

என் சப்போட்டா.....ர் மர்ழியா.....
மே 6, 2008 - 7:00am - வழங்கியவர் அதிரா

எனக்குப் புரியவே இல்லம்மா.... நான் நினைக்கிறேன் அது இங்கே இல்லை. ஆனால் இலங்கையிலும் நான் கேள்விப்படவில்லையே....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா!
மே 6, 2008 - 7:00am - வழங்கியவர் kulasaisulthan

அதிரா! நீங்கள் நம்ப மாட்டீர்கள். இந்த பதிவு போடும் போது ஒரு கையில் சப்போட்டா ஜூஸ் இருக்கிறது. சென்னையில் இப்போ சீசன்.மார்க்கெட்டில் கொட்டி கிடக்கிறது. விலையோ ரெம்ப மலிவு. ஒரு பெரிய சைஸ் பழம் ரு.1 தான். தினமும் ஜூஸ் தான். சம்மர் முடிந்த பிறகு தான் sugar எகிறி இருக்கா என்று பார்க்க வேண்டும்.
ஒரு ஸ்வீட்டான பழம் என்று மட்டும் தெரியும். மருத்துவ குணங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லலாமே?

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

ஆகா.....அங்கிள்
மே 6, 2008 - 7:06am - வழங்கியவர் அதிரா

சும்மா இருக்கிற சங்கையெல்லாம் ஊதிக்கெடுக்கிறீங்களே.....
சப்போட்டாவே தெரியாமல் தவிக்கிறேன் நான் , நீங்க வேற யூஸ் குடிக்கிறீங்களா? சப்போட்டா என்ன பெரிய பழமா? இந்த வெயிலுக்கு இதமாகத்தான் இருக்கும்.... குடியுங்க குடியுங்க... எங்களையும் ஒருதடவை நினைச்சுக் குடியுங்க...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மர்ழியா!
மே 6, 2008 - 7:07am - வழங்கியவர் kulasaisulthan

மர்ழியா!
நீங்கள் தாம்பரம் பக்கத்தில் வசிப்பவராக இருந்தால், தாம்பரம் பஸ் ஸ்டாண்ட், ரெயில்வே ஸ்டேஷனுக்கு இடையில் எல்லா விதமான பழங்கள், காய் கறிகள் ரெம்பவும் மலிவாக கிடைக்கின்றது. ஒரு விஸிட் அடியுங்களேன்.
வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

சப்போட்டாவை வடிகட்ட கூடாது
மே 6, 2008 - 7:12am - வழங்கியவர் Jaleela Banu

மர்லியா ஆளையே காணும்

கலையில் இருந்து எங்கே போய்விட்டீர்கள்.

சப்போட்டாவை வடிகட்ட கூடாது.

நல்ல கழுவி விட்டு தோலை பிரித்து விட்டு உள்ளே உள்ள கொட்டையை ம்ட்டும் எடுத்து விட்டு அப்படியே பால் சர்க்கரை ஊற்றி மிக்சியில் நல்ல அடித்து குடிக்கனும்,
இதில் ஐஸ் கியுப்,ஐஸ்கிரீம்,ஏதாவது எஸன்ஸ் எல்லாம் போட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

ஜலீலா

அதிரா!
மே 6, 2008 - 7:16am - வழங்கியவர் kulasaisulthan

அதிரா!
பயந்து விடாதிர்கள். மங்குஸ்தான் என்று ஒரு பழம் இருக்கிறது. மலை பிரதேசங்களில்(குற்றாலம்,ஊட்டி) கிடைக்கும். எங்க சிங்கார சென்னையிலும் எப்போதும் கிடைக்கும். பழத்தை உடைத்தவுடன் உள்ளே 3x4 வெண்மையான சுளைகள் இருக்கும். ரெம்பவும் ருசி. குளிர்ச்சிக்கு நல்லது. குளிரைப் பற்றி அங்கு இருக்கும் உங்களிடம் சொல்ல வேண்டியதில்லை. இங்கு நாங்கள் வெயிலில் காய்ந்து கருவாடாக ஆகி கொண்டிருக்கிறோம்.
வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

மங்குஸ்தான்
மே 6, 2008 - 7:21am - வழங்கியவர் அதிரா

எனக்கு தெரியுமே, மிகவும் சுவையான ஒரு பழம். அது இங்கு தமிழ்க் கடைகளில் மட்டும் சீசனுக்கு கிடைக்கும். அப்படித்தானா சப்போட்டா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா!
மே 6, 2008 - 7:24am - வழங்கியவர் kulasaisulthan

அதிரா!
இல்லை சப்போட்டாவை தோல் மட்டும் நீக்கி சாப்பிடலாம். மங்குஸ்தானை ஓட்டை உடைத்து உள்ளே உள்ள சுளைகளை மட்டும் சாப்பிடலாம்.
ஒரு தடவை சென்னைக்கு வாருங்கள். வரவேற்கிறோம்.வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

யக்காவ்.விஜி
மே 6, 2008 - 7:27am - வழங்கியவர் MarliyaNoohu

இருக்கேன்க்கா வேலை மெய்ல் போட்டுட்டே இருக்கேன் பாருங்க உங்களுக்கும் தளிகாக்கும் ஒரே இச்ரிப்புதான் போங்க...

கொஞ்ச நேரம் முன்பு நான் என்னவாவேன்னோன்னு பயம் அப்பா பாத்திம்மாக்க்கு பதில் கொடுத்து முடிச்சதும் பயங்கர காது வலி வந்துட்டு எனக்கு பயம் ஆ..வூன்னு கத்திட்டு ஹாலுக்கு ஓடிட்டேன்..அப்பாவிடம் தண்ணீர்,கார்லிக் லாம் யூஸ் பண்ணி இப்ப தேவை இல்லை..ஆன் லனில் இருக்கீங்களானு உங்களைதான் தேடினேன் நீங்க இல்லை...

இல்லைக்கா நாங்க நல்லா கழுவிட்டு மிஸில் போட்டு அப்புறம் சூப் வடிக்கட்டியால் வடிக்கட்டுவ்வோம் அப்புறம்தான் குடிப்போம்..

ஹாய் விஜி உங்க பதிவை எங்கோ பார்த்தேன்..அப்ப வேலையால் பதில் போட முடியல...நான் வரும் டைம் நீங்க இருப்பது இல்லை..எப்படி இருக்கீங்க விஜி?

அன்புடன்,
மர்ழியாநூஹு

மங்குஸ்தான் பழம்
மே 6, 2008 - 7:31am - வழங்கியவர் Jaleela Banu

மங்குஸ்தான் பழம் நல்ல சாப்பிடலாம், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

ஜலீலா

ஆஹா மங்குஸ்தான் பழமா?
மே 6, 2008 - 7:36am - வழங்கியவர் MarliyaNoohu

சப்போட்டா கூட மூளை வள்ர்ச்சிக்கு நல்லது... ஜலிலாக்கா..ஆஹா மங்குஸ்தான் பழமா?என்னப்பா இப்படி வாயை ஊற வைக்குறீங்கஏ நியாயமா?சப்போட்டாவை விட ஒரு படி மேலாக பிடிக்கும் இது...யார் குற்றாலம் போறேன்னு சொன்னாலும் இதை தான் எனக்கு வாங்கி வர சொல்லுவேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

சப்போட்டா
மே 6, 2008 - 7:38am - வழங்கியவர் gk

இது பார்க்க கிவி பழம் போல இருக்கும். ஆனால் உள்ளே சதைப்பற்றாக இருக்கும். அங்குள்ள srilankan/indian கடைகளில் கிடைக்கும்

போங்க மர்ழியா, நானும் போறேன்....
மே 6, 2008 - 7:41am - வழங்கியவர் அதிரா

போங்க மர்ழியா, நானும் போறேன்....
இருப்பவரையெல்லாம் விட்டுவிட்டு இல்லாதவரைத் தேடலாமோ.... விஜிக்கு இப்பத்தான் விடிஞ்சுகொண்டிருக்கு... பல் விளக்கி முகம் கழுவ வேண்டாமோ.... கொஞ்சம் பொறுங்க வந்துடுவா.... சரி நானும் போகப்போறேன்.

இன்று செவ்வாய்க்கிழமை அதனால் மரக்கறி. கத்தரிக்காயை எடுத்து வைத்துவிட்டு வந்து தடவினேன் சுபாவின் "கத்தரிக்காய் சப்ஸ்" என்னிடம் மாட்டிக் கொண்டது. செய்யப்போகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சப்போட்டா ஜூஸ்
மே 6, 2008 - 7:44am - வழங்கியவர் justforfunchat

பழுக்க வைக்க கேட்டா ஜூஸ் செய்யவே சொல்லிட்டீங்க. ரொம்ப நன்றி ஜலீலா அக்கா.

நன்றி தளிகா.

மர்லியா, பழுத்தவுடன் ஜூஸ் செய்து அனுப்புகிறேன்.
காத்திருங்கள், எதிர்பார்த்திருங்கள்

சரியாக சொன்னீங்க
மே 6, 2008 - 7:44am - வழங்கியவர் MarliyaNoohu

சரியாக சொன்னீங்க gk ஆனால் அதிரா கிவி பிளிக்கும்...சப்போட்டா இனிக்கும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

gk (ஹிபாதானே)
மே 6, 2008 - 7:44am - வழங்கியவர் அதிரா

இனிப்போனால் தேடிப்பார்க்கிறேன் சப்போட்டாவை. நேற்றுத்தான் போய் வந்தோம். கவனிக்கவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

போகாதீங்க அதிரா போகாதீங்க
மே 6, 2008 - 7:49am - வழங்கியவர் MarliyaNoohu

அதிரா இருங்கப்பா..நானே இப்பதான் வந்திருக்கேன்..நீங்க இல்லனா எப்படி?விஜி எனக்கு 2 நாள் முன்பு பதிவு போடதா நியாபகம் அப்ப ரொம்ப பிஸி அதனால் உடனே பதில் கொடுக்க முடியல அதான் இப்பா...சும்மா உல்லாலயிதானே அதிரா...கொஞ்ச நேரம்தான் அதோட தோ என் பொண்ணு முழிச்சுடுவா அப்புறம் போஇடுவேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

45 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »