topic_image


நன்றி அ.சு.தோழிகள் நன்றாக நல்ல குறிப்புகள் குடுத்த எல்லாருக்கும், நம்ம Rajini க்கும் அதிரா அதுதான் எதையுமே ஒரு போரடிக்காமல் எல்லாரையும் நல்ல் அதிர வாய் குலுங்க சிரிக்க வைக்கும் தன்மை கொண்ட அதிராவுக்கு நன்றி.

இது இரண்டாம் பகுதியாக தொடர்கிறது.


ரஜினி கார்டன்
மே 7, 2008 - 7:49am - வழங்கியவர் Vijitvm

வாவ் ரொம்ப நன்றி ரஜினி. நான் இந்த தடவை தான் நிற்ய்ய தோட்டபயிர் போட்டுள்ளேன். அதாவது கீரை,சிவப்பு கல்ர் முள்ளங்கி,தக்காளி,ஸுக்கினி,கத்
திரிக்காய் ஆனுவல் பூக்கள்,போட்டுள்ளேன் எது வரும் தெரியாது. ஆனால் எல்லாம் சின்ன சின்ன செடி முளைத்துள்ளது. முல்லை எங்கு கிடைக்கும், ரஜினி சொல்லுங்க, செம்பருத்தி உள்ளே வைக்கலாமா, எப்பவும் உள்ளே தான் வைக்கனுமா, நான் பாஸ்டனில் உள்ளேன். இங்க இப்பவௌன் லைட்டா குளிர் இருக்கு.

அ.சு.கார்டன்
மே 7, 2008 - 7:58am - வழங்கியவர் Vijitvm

ஆகா இந்த வருடம் நம்ம கார்டன் விருப்பம் உள்ள எல்லா அ.சு. நன்பர்கள் வீட்டில் நல்ல தோட்டகலை செய்ய போகிறார்கள். எல்லாரும் அப்பிடியே அவங்வங்க வீட்டில் விளைந்த காய், பூத்த பூக்கள் எல்லாவற்றையும் பற்றி எப்ப எப்ப டைம் கிடைக்கும் போது தெரிவித்தால் எல்லாருக்கும் நன்றாக இருக்கும்.
அப்பிடியே அருசுவயில் அவங்கவ்ங்க வீட்டில் பயிர் செய்த காய்களை வைத்து சமைத்து அந்த ரெசிப்பிஸை அனுப்புங்க.

நன்றி

நன்றி அதிரா
மே 7, 2008 - 8:15am - வழங்கியவர் mali

நன்றி அதிரா, ஆனால் எனக்கு தூக்கி போட மனது வரமாட்டெங்குது, ஏனென்றால் போன மதர்ஸ்டேக்கு என் பசங்க வாங்கி கொடுத்த ரோஜாசெடிகள் அவை. ரோஜா செடி பற்றிய உங்கள் கருத்து ஆச்சர்யமாக உள்ளது.
உங்கள் கிலுகிலு வெந்தயசெடிபற்றி படித்தவுடன் எனக்கும் வெந்தயம் பயிரிட ஆசை வந்துவிட்டது.

விஜி
மே 7, 2008 - 8:16am - வழங்கியவர் aniaksh

விஜி எப்படி இருக்கீங்க?. நீங்க இந்த த்ரெட்டை ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சீங்க அறுசுவையே ஓரே "வயலும் வாழ்வும்" மாதிரி போய்கிட்டு இருக்கு.
முல்லை ஹோம்டெபொட், லோவ்ஸ் ல கிடைக்கும். செம்பருத்தி செடியை வின்டரில் மட்டும் உள்ளே வைச்சா போதும். மற்றபடி சன்லைட் படும் இடமா பார்த்து வையுங்க.
Rajini

kt ஆமாம் ரொம்ப
மே 7, 2008 - 8:25am - வழங்கியவர் Vijitvm

ஸிம்பிள். நான் நிற்ய்ய போட்டு அப்பப்ப பறித்து விடுவேன். அதிராவை காணவில்ல. ஒரு வேளை கார்டனிலேயே உறங்கிட்டாங்களோ? என்னவோ?
பார்க்கலாம் வருகிறார்களா என்று.

நன்றி ரஜினி
மே 7, 2008 - 8:29am - வழங்கியவர் Vijitvm

ஆமாம் என்ன 2 பேர் உங்களுக்கு, ஏதாவது ஸ்பெஷல் எனக்கு ஒரு டவுட் செம்பருத்தி செடியா தான் வாங்கனுமா, எப்பவுமே தொட்டியில் தான் வைக்கனுமா.

ஸாரிப்ப திரும்பதிரும்ப கேட்பதற்க்கு, எனக்கு செம்பருத்தி ரொம்ப பிடிக்கும் அதனால் தான். சிவப்பு கல்ர் கிடைக்குமா?

நன்றி ரஜினி

மேனகா எப்படி இருக்கீங்க
மே 7, 2008 - 8:32am - வழங்கியவர் aniaksh

மேனகா எப்படி இருக்கீங்க?. உங்க கூட பேசறதுல ரொம்ப சந்தோசம். கத்திரிக்காய் விதை போடலாம் நல்லா வரும். வெள்ளரி , குடைமிளகாய் போடலாம். இந்தியா காய்விதைகள்(அவரை, சுரை, பாகற்காய், பீர்க்கை,) கிடைச்சா போடுங்க. இந்தியன் ஸ்டோர்ல பச்சை மஞ்சள் கிடைக்கும், அதை நட்டு வையுங்க. அடுத்த வருஷ பொங்கலுக்கு உங்க வீட்டுலயே மஞ்சள் செடி இருக்கும். சீசனுக்கு ஏத்த மாதிரி பூ செடி வைக்கலாம். இது போதுன்னு நினைக்கிறேன். என்ஞ்சாய் பண்ணுங்க:)
Rajini

விஜி
மே 7, 2008 - 8:39am - வழங்கியவர் aniaksh

விஜி,
குழப்பம் வேண்டாம். ரஜினி தான் என் பெயர். செம்பருத்தி செடிதான் கிடைக்கும். சிகப்பு கலர் இருக்கு. நான் முதல்ல தரையில தான் செம்பருத்தி வைச்சேன். ஒரு ஸ்னொ, அவ்வளவு தான் என் செடி போயே போயிந்தி. அதுனால அடுத்த தடவை உசாரா தொட்டியில வைச்சுட்டேன். வின்டர் சமயம் செடி உள்ள வந்துடும்.
Rajini

நன்றி ரஜினி
மே 7, 2008 - 8:42am - வழங்கியவர் Vijitvm

நான் இந்த வாரம் போய் வாங்க போறேன்.

செம்பருத்தி
மே 7, 2008 - 9:09am - வழங்கியவர் mali

விஜி எங்க தோட்டத்தில கூட ஒரு செம்பருத்தி செடி இருக்கு(தொட்டியில் அல்ல) . வீடு வாங்கும்போதே இருந்தது. ஊதா கலர் அடுக்கு செம்பருத்தி. வின்டரில் போய்விடும்,அடுத்த ஸ்பிரிங் சீசனில் திரும்ப துளிர் விடும். நான் இருப்பது பாஸ்டனில்.

அனைத்து அறுசுவைதோழிகளுக்கும் ,
மே 7, 2008 - 9:30am - வழங்கியவர் anjali73

அனைத்து அறுசுவைதோழிகளுக்கும் காலை வணக்கம்!

எப்படியிருகிங்க?
நல்லாயிருகிங்களா!

என்னைய் மறந்துடிங்களா?ok,நான் உங்கள மறக்கிலிங்கோ!

பூக்கள் பிடிக்காத பெண்கள் உண்டா?

புன்னகை சிந்தாத மலர்கள் உண்டா?

அன்புயில்லாத அன்னையுண்டா?

அறுசுவையில்லாத அரட்டைஅரங்கம் உண்டா?
தோட்டமும், தோட்ட்கலையும் வளர வாழ்த்துக்கள் ............வாழ்த்துக்கள் !hai,viji and rajini

உங்களை மறக்க முடியுமா?
மே 7, 2008 - 9:38am - வழங்கியவர் Jaleela Banu

அஞ்சலி நீங்கள் தான் எங்களை மறந்து விட்டீர்கள்
உங்களை மறக்க முடியுமா?

ஜலீலா

பாஸ்டனா... நீங்களுமா.....KT
மே 7, 2008 - 9:42am - வழங்கியவர் இலா

ஹெலோ மாலி என்கிற KT

பாஸ்டனில் எங்கே இருக்கிங்க.... நான் QUNICYயில் இருக்கிறேன்.. வந்து 2 மாததிற்க்கும் குறைவு தான்....
I am still gettig used to living in boston. We live close to the exit 12 on I-93S in the apt building you can see on Rt-3 S if you are going to the Wallaston beach. I also posted a message for Vijitvm who lives in northborough,MA.

hmm... When I lived in my own house i did not do any gardening , Once I moved to boston, i want to do it but no space.

Enjoy you all. I own a bamboo plant my friend ramya gave me and a MoneyTree from chinese co worker.

When you all get good vegetables call me i will help you to harvest it.

ila

மறக்க முடியவில்லை
மே 7, 2008 - 9:46am - வழங்கியவர் இலா

மறக்க முடியவில்லை.. மறக்கத்தான் நினைக்கின்றேன்.. மறக்க முடியவில்லை..... என்னோட பேவரிட் பாடல்...

வாவ் இளா
மே 7, 2008 - 9:53am - வழங்கியவர் MarliyaNoohu

வாவ் இளா எனக்கு பிலாஷ் பேக்லாம் போகுது...எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்..அதின் ஒவ்வொரு வரிகளும் அழகா இருக்கும்
அன்புடன்,
மர்ழியாநூஹு

ஜலீலாக்கா.
மே 7, 2008 - 9:54am - வழங்கியவர் anjali73

ஜலீலாக்கானு இப்படி நானும் உங்களை செல்லமா கூப்பிடலமா? ஒகே.
அக்கா யாரை மறந்தாலும் உங்கள மற்க்க முடியுமா?
உங்கரெஞ்சே தனி!
சமையல் குறிப்பென?
வீட்டுகுறிப்பென?
மருத்துவ குறிப்பென? ,
மற்றவருகளிடம் அன்பாக பழக்கவும், பேசவும் விதமென இப்படி சொல்லிகிட்டே போகலாமுக்கா உங்களபத்தி.சரிக்கா நிங்க துபாயிலாயிருகிங்க!

அஞ்சலி அஞ்சலி...அம்மம்மா
மே 7, 2008 - 10:06am - வழங்கியவர் Vijitvm

எனக்கு அஞ்சலி மூவி ஞபாகம் வருகிறது. எப்பிடி இருக்கிங்க தோட்டமெல்லாம் எப்பிடி போகிறது.
வாங்க தோட்டதுக்கு.

KT/ ilaveera
மே 7, 2008 - 10:08am - வழங்கியவர் Vijitvm

இலா நான் உங்களுக்கு மெயில் போட்டேன். வந்த்தா.

ஆமாம் கே.டி நிங்க எங்க இருக்கிங்க? நான் பாஸ்டனில் இருக்கேன். நம்ம இலா சொல்லிட்டாங்க.

தோட்டம்.
மே 7, 2008 - 10:17am - வழங்கியவர் sasi12

எல்லோரும் நலமா? நான் அறுசுவை அரட்டைக்கு புதுசுங்கோ....

எனக்கும் கார்டெனிங் என்றால் மிகவும் விருப்பம் நான் செம்பருத்தி மரம் வீட்டுக்குள்ளே கடந்த 5 வருடங்களாக (5/6 மரம்) வளர்த்து ஒன்றும் சரிவரவில்லை. ஏதோ கறுப்பாக தண்டில் வருகிறது என்ன செய்யலாம்? வீட்டுக்குள் மருந்து அடிக்க பயமாக இருக்கிறது (குழந்தைகள் இருப்பதால்) சமருக்கு வெளியில் வைக்க நன்றாக வருகிறது வின்டெர் க்குதான் பிரச்சனை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

நான் வெளியில் வைக்கும் செம்பருத்தி மரம் என்று ஒன்று வைத்திருக்கிறேன் அது இலை எல்லாம் வித்தியாசம் அது நன்றாக வளர்கிறது.

நான் ஒவ்வொரு சமருக்கும் மரக்கறி மரங்கள் வைக்கிறனான். தக்காளி (beef stake, italian tomato) கத்தரி (chiness egpalnt, italian eggplant) கறி மிளகாய் இந்தளவும் வைக்கிறனான். நன்றாக வரும். இங்கு மரங்கள் இன்னும் வைக்கவில்லை குளிர் குறைய தான் வைப்பேன்.

குறிப்பாக குழந்தைகள் மரக்கறி சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி மரங்கள் நட்டு அவர்களை தண்ணி ஊற்றி வளர்க்க சொன்னால் அவர்கள் ஆனந்தப்படுவர்கள். மரக்கறி காய்த்ததும் பறித்து "நீங்கள் வளர்த்த மரத்தில் இருந்து சமைத்தது" என்று கொடுங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். நான் அப்படித்தான் செய்யிறனான். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

அதிரா கடுகு மரம் பற்றி எழுதியிருந்தீர்கள் நானும் உங்கள் குறிப்பை பார்த்தவுடன் கடுகு, வெந்தயம், கொத்தமல்லி விதை தூவி விட்டிருக்கிறேன் எப்படி வருகிறதென்று பாப்பம்.
நீங்கள் றோஜாச் செடி பற்றி சொன்ன கருத்து ஆச்சர்யமாக உள்ளது.. நான் போன வருடம் ஒரு றோஜா மரம் நட்டேன் பட்டு விட்டது . என் மகனுக்கு றோஜா மரம் என்றால் நல்ல விருப்பம். உங்கள் கருத்தை படித்த பிறகு பார்த்து வைக்கலாம் என இருக்கிறேன்.

சசி.

அஞ்சலி மூவிஞாபக வைச்சிரிகிங்களே
மே 7, 2008 - 10:31am - வழங்கியவர் anjali73

எப்படியோ என்னை மறந்தாலும்,என்பெய்ரிலுள்ள மூவி ஞாபக வைச்சிரிகிங்களே ரொம்ப சந்தோஷ்ம் விஜி!
தோட்டம் தானே சூப்பரா இருக்கு!
துளிர் விடும் பசுமையான இலைகள் பார்க்க 2கண்போதாது!

மறக்கவில்லை
மே 7, 2008 - 10:38am - வழங்கியவர் Vijitvm

மறக்கவும் முடியாது.

thanks rajini
மே 7, 2008 - 10:39am - வழங்கியவர் menaga

ரொம்ப சன்தொசமா இருக்கு ரஜினி என் கூட பேசுனதில்.னிங்க சொன்ன மாதிரி செய போரேன்.னிங்க எப்படி இருகிங்க.னிங்க எங்கு இருகிங்க.நான் பாரிசில் இருகேன்.

Time is gold

மேனகா
மே 7, 2008 - 11:10am - வழங்கியவர் aniaksh

மேனகா,
எனக்கும் உங்க கூட பேசினது ரொம்ப சந்தோசம். நான் நல்லா இருக்கேன். நாங்க USA இருக்கோம்.
Rajini

விஜி தப்பு நடந்து போச்சு
மே 7, 2008 - 11:50am - வழங்கியவர் அதிரா

,
கார்டன் பகுதி- 2 தொடங்குகிறபோது, பகுதி - 1 இல் சொல்லுங்கோ அப்பத்தான் என்போன்ற ரியூப் லைற்றெல்லாம் பத்திக் கொள்ளும்.

அப்பா... என்னோட உருளைக்கிழங்கு, நான் அடிக்கடி அதை உற்றுப்பார்ப்பதைப் பார்க்க முடியாமல், குருத்து வரத் தொடங்கிவிட்டது.... டும்...டும்...டும்... மேளம் அடிங்கோ.

எல்லோருக்கும் சொல்லுறேன், சின்ன வெங்காயம் கறிக்கு வாங்குவதில் ஒரு பத்தெடுத்து நடுங்கோ. நாற்பது நாட்களில் வந்துவிடுமாம். சின்ன வயதில் மணலில் ஒரு விளையாட்டு விளையாடுவோமே, கீச்சு மாச்சு தம்பலம்... கீயா மாயா... தம்பலம்... மாச்சு மாச்சு தம்பலம்...மாயா...மாயா.... தம்பலம் என்று.... உங்களுக்கு தெரியுமோ, அதற்கு ஒரு வரம்புபோல் மண்ணால் கட்டி அதனுள் பொருட்களை ஒழிப்போம். அப்படித்தான் வரம்பு கட்டி வரம்பில் வெங்காயம் நட வேண்டுமாம். நான் நட்டேன் குருத்து வருது.....குருத்து.......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புத் தோழிகளே
மே 7, 2008 - 11:56am - வழங்கியவர் அதிரா

அன்புத் தோழிகளே
என்னுடைய அன்பான வேண்டுகோள். எதுக்காக, இந்த பெயர் வரவேண்டிய இடத்திலெல்லாம் ஆங்கில எழுத்தைப் போட்டிருக்கிறீங்க. ஒவ்வொரு முறையும் புறொபைல் செக் பண்ண வைக்கிறீங்களே.... இனியாவது முடிந்தால் உங்கள் பெயர் வரக்கூடியவாறு மாற்றி விடுங்களேன். ஏதோ ஒரு பெயர் போடுங்களேன். கோபித்திடாதீங்க.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா
மே 7, 2008 - 12:18pm - வழங்கியவர் aniaksh

அதிரா,
ஒரு பெரிய காய்கறி மார்கெட்டே இருக்கு போலருக்கே. கிச்சுகிச்சு தாம்பாளம் ஆடிகிட்டே நீங்க வெங்காயம் நட்ட கதை படிச்சதும் ஒரே சிரிப்புதான். மறந்து போன பாட்டின் வரிகளை ஞாபகப்டுத்தியதுக்கு நன்றி. போன வாரம் ஏதோ பேச்சுவாக்கில் கிச்சுகிச்சு தாம்பாளம் பத்தி என் ஃப்ரன்டு கூட பேசினேன். பாட்டு ஞாபகம் வரலை. இப்போ நீங்க எடுத்து கொடுத்துட்டீங்க.
Rajini

அதிரா பாட்டு
மே 7, 2008 - 2:39pm - வழங்கியவர் Vijitvm

அதிரா வர்ல்லை என்றால் அருசுவை தூங்குகிறது. அப்பிடிய இந்த தடவை நம்ம எல்லோருக்கும் உருளை கிடைத்துடும். இனிமேல் பஞ்சமில்லை. பாட்டு கூட ரொம்ப நல்லா இருக்கு.நானும் உங்களை பார்த்து வெங்காயம் போடலாம் என்றுள்ளேன்.
என்ன அதிரா உருளை எல்லாம் ப்யிறிட்ங்க நிறய்ய வெஜிடெபிள்ஸ் போடுங்க. நல்லது. உருளை தான் இங்கு நமக்கு நன்றாகவே நிறய்ய கிடைக்கிறது.

tomato
மே 7, 2008 - 3:11pm - வழங்கியவர் swetha

ஹாய் பிரண்ட்ஸ் பாஸ்டன் இல் இருப்பவங்களுக்கு தக்காளி செடி பற்றி சொல்லுகிறேன் பிப்ரவரி மாதத்தில் செடி போட ஆரம்பித்து விடவும் விட்டினுள் ஜன்னல் அருகில் வைத்தால் மே மாத கடைசியில் பூ பூக்க ஆரம்பிக்கும் ஜுனில் காய் வர ஆரம்பிக்கும் ஜுலை கடைசியில் நல்ல பழம் பழுத்து விடும் இப்ப செடி வாங்கி வைத்தால் செடி நல்லா வரும் ஆனால் பழம் வரும் போது செப்டம்பர் வந்து விடும் உங்களால் அந்த பயனை அனுபவிக்க முடியாமல் போய் விடும் பாஸ்டன் குளிர் பற்றி தான் உங்களுக்கு தெரியுமே இது ஹோம் டிப்போட்டில் சொன்னது 90 நாட்கள் தேவை பழம் வருவதற்கு எந்த காய்க்கும் இந்த முறையில் செய்தால் நல்ல பலன் உண்டு நான் பெப்பர்,தக்காளி,ஆனியன் போட்டு இருகிறேன் இதே முறையில் தான் ஒவ்வொரு வருடமும் போடுவேன் நான் இந்தியன் காய் போட்டது இல்லை எங்கு விதை கிடைக்கும் சொன்னால் உதவியாக இருக்கும் நன்றி

ரஜினி ,அதிரா
மே 7, 2008 - 4:30pm - வழங்கியவர் Parveen banu

அன்புள்ள ரஜினி அதிரா மற்றும் விஜி,சசி,சுவாதா..அனைத்து தோழிகலுக்கும் நன்றி.இன்று மீண்டும் வெந்திய செடி போட்டேன்.என் பொதினாவையும் தூசி தட்டி கவனித்தேன்.கொத்தமல்லியும் போட இருக்கிறேன்.நீங்கள் சொல்லிய்யபடி தக்காளி மிளகாய் தான் இந்த வார இறுதிக்குள் போடனும்.இல்லாவிட்டால் செடியாக வாங்கியாவது வைக்கனும்.அடுத்த வருடம் உசாராக எல்லாம் பிப்ரவரிலேயே ஆரம்பிக்கனும்ன்னு சொல்லுரீங்க .அதன் படி செய்ரேன்.ம்ம்..புலுவா நானான்னு பார்திடலாம்.எனக்கு கார்டனிங்கில் விருப்பம் இருக்கு ஆனால் அதை பற்றி பேச ,கிலுகிலுப்பா சொல்ல எண்னை சுற்றி யாரும் இல்லை.ரஜினி ,அதிரா உங்கள் இருவருக்கும் எனது அன்பான நன்றி.உங்களால்தான் மீண்டும் எனக்கு ஆர்வம் வந்தது.
அன்புடன் பர்வீன்.

அருசுவை உழவர் பண்ணையில்
மே 7, 2008 - 5:18pm - வழங்கியவர் இலா

சுவேதா... பர்வீன்.... மற்றும் அருசுவை உழவர் பண்ணையில் இருக்கும் பலரும்... உங்களுடைய இந்த த்ரெட் மூலம்... எனக்கு அட.. ஒரு வெந்தய கீரையவாவது போடணுமுன்னு தோனுது.
இன்னைகே வீட்டையாவ கூட்டிகிட்டு லாம்பெர்ட்ஸ் போகபோறேன்...

77 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »