topic_image


அறுசுவை தோழிகளுக்கு ,
வணக்கம்.நான் அறுசுவையில் புதிதாக இணைந்துள்ளேன்.நீங்கள் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.எனக்கு திருமணம் முடிந்து ஐந்தாவது ஆண்டு ஆரம்பித்து விட்டது.1979-ல் பிறந்தேன்.குழந்தைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.இந்தியாவில் பல டாக்டர்களை சந்தித்தாகி விட்டது,21/2 வருடமாக.யாருமே சரியாக டயக்னைஸ் பண்ணாமல் PCO இருக்கிறது என்று மட்டும் கூறி OVALATION க்காக மாத்திரை மட்டும் கொடுத்தார்கள்.கருத்தரிக்கவில்ல
ை.
கடந்த மூன்று மாதங்களாக வெளிநாட்டில் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இங்கு எங்களுக்கு பழைய ரிப்போர்ட் எல்லாம் வேண்டாம் என்று கூறி முதலிருந்து ஆரம்பித்தார்கள்.முதலில் பிளட் டெஸ்ட் எடுத்தார்கள்.அதில் எனக்கு LH ஹார்மோன் 11,4 mlU/ml, FSH ஹார்மோன் 6,3 mlU/ml என்று கூறி PCO இருப்பதாக கூறினார்கள்.மேலும் Sugar Test செய்து விட்டு வாருங்கள்,பின்பு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் என்று சொன்னார்கள்.சுகர் டெஸ்ட் செய்த போது initial stage of diabetics என்று கூறி,Metformin 500mg tabletஒரு நாளைக்கு இருமுறை எடுக்கச் சொல்லி,home sugar test kit கொடுத்து sugar test செய்யச் சொன்னார்கள்.Metformin 500mg tabletசாப்பிட்ட ஒரு வாரத்தில் test -ல் morning எழும்பும் போது உள்ள bloog sugar அளவுகளை தவிர மற்ற அனைத்தும் நார்மலாக இருக்கிறது என்று கூறி Metformin 500mg tablet (morning 1),Metformin 850mg tablet(night 1)தற்போது எடுக்கச் சொல்லி மூன்று வாரம் கழித்து மறுபடியும் LH ஹார்மோன்,FSH ஹார்மோன் value எடுத்து பார்த்து ovalation tablet கொடுத்து,ultrasonic மூலமாக ovalation date கண்டுபிடிப்போம் என்று கூறி உள்ளார்கள்.
Metformin 500mg (morning 1),Metformin 850mg(night 1)சாப்பிட்டதற்கப்புறம் முன்பு உள்ள upperlip,chin hairgrowth 75% குறைந்துள்ளதாக உணர்கிறேன்(இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியவில்லை,maybe pco or hormonal imbalance).

எனக்கு கருத்தரிக்க வாய்ப்புள்ளதா?நான் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டுமா.எந்த விதமான உணவுப்பழக்கங்கள்,நடைமுறைப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.Metformin tablet சாப்பிடுவது எதற்காக(இங்கு டாக்டர்களிடம் கேட்க முடியவில்லை).

மேலும் தனிப்பட்ட முறையில் மிகுந்த மனக்குழப்பங்கள்,டிப்ரஸன் வேறு இருக்கிறது.இது தீர்வதற்கு வழியில்லை.இது கூட குழந்தைப் பேற்றை பாதிக்குமா,எந்த விதத்தில்?

தனிமை வேறு ரொம்ப.இவர் காலையில் 9 மணிக்கு அலுவலகம் சென்று விட்டு இரவு 12 மணிக்கு திரும்புகிறார்.குழந்தைக்கு முயற்சி செய்யும் போது yoga class,meditation classபோலாமா?இரண்டில் எது Best.உங்கள் அனைவரையும் என் குடும்ப உறுப்பினர்கள் போல் நினைத்து என் மனக் கஷ்டங்களைக் கூறி விட்டேன்.எனக்கு பதில் தந்து உதவுவீர்களா?

With love,
Anupa Twinkle


Hello Anupa
மே 7, 2008 - 1:43pm - வழங்கியவர் Ishani

One of my friend had PCOS and her OBGN suggested to do two things to get pregnant

(1) Taking Metformin 500mg (twice a day)
Metformin is not a pregnancy drug. It is used to treat type II diabetes and insulin resistant issues. But it is very effective to get pregnant in case of PCOS for most of the people.

(2) Reduce her weight (BTW, she was not overweight, she was 5 feet and 110 lbs when doctor asked her to reduce weight).
(a) For that she did exercise (brisk walking about 2 miles every day and did little bit of indoor cyclying)
(b) Doctor also asked her to be in diet program. She suggested to follow 'SOUTH BEACH DIET'- Phase 2 during those period.

In three months with the help of Metformin, diet, and execise she got pregnant. (she came to 100 lbs in 3 months)

You can find lot of imformation about use of metformin in pregnancy in the internet.

I hope this might help you little bit. Let me know if you have questions here. GOOD LUCK.

Sorry for not typing in Tamil.

Regards,
Ishani

Thanks a lot,Ishani
மே 7, 2008 - 1:52pm - வழங்கியவர் Anupa

Hi Ishani,
Thanks for your immediate and useful reply.I will do as per your advise.Sorry,i don't understand what is meant by type II diabetes and insulin resistant issues.
She suggested to follow 'SOUTH BEACH DIET'- Phase 2 during those period- i don't get you.

Please clearify me.

With love,
Anupa Twinkle

Hello Anupa
மே 7, 2008 - 2:13pm - வழங்கியவர் Ishani

South Beach Diet is healthy diet plan to reduce unwanted weight. There are some controversies for this method. In my opinion you dont need to follow this strictly. But get an idea from that. You can buy the book in amazon.com. Chech these websites

http://www.amazon.com/South-
Beach-Diet-Delicious-Doctor-
Designed/dp/031231521X/
ref=pd_bbs_1?ie=UTF8&s=books&qid=1210187392&sr=8-1

http://secure.agoramedia.com/
sbd2/index_sbd.asp?np=1&promo=D3FF6F34-B304-4CBE-9A62-D81A65C344ED&email=

I think type II diabetes is non insulin related diabetes ( I am not 100% sure). Insulin resistant is the condition that our body is not able to use the insulin we produce naturally.

Regards,
Ishani

அனுபா
மே 7, 2008 - 2:33pm - வழங்கியவர் அதிரா

கவலைப்படவேண்டாம். எங்கள் குடும்ப உறவினர் ஒருவருக்கு PCO இருந்தது. இதற்கு மாத்திரைகளுடன் முக்கியமாக டயட் கொன்றோல் செய்ய வேண்டும். அவர் அப்படி செய்து 2 வருடத்தில், குழந்தை கிடைத்தது. இப்போ 2 வது குழந்தையும் கிடைத்துவிட்டது. எனவே கவலைப் பட வேண்டாம். நீங்கள் எந்த வகையான டயட்டில் இருக்கிறீங்கள் எனத் தெரியவில்லை.

PCO இருப்பதால் ஹோமோன்ஸ் control இல்லாமல் இருக்கும். இதனால் டயபற்றிஸ், அதனுடன் வேறு பிரச்சனைகளும் ஏற்படும். மெற்றோபின் எடுப்பது உடம்பின் சுகரைக் கொன்றோல் பண்ணுவதற்காக. சுகர் கொன்றோலுக்கு வந்தால் உடம்பில் normal function ஏற்படும்.

PCO க்கு மாத்திரைகள் எடுத்தால் மட்டும் போதாது. டயற் கொன்றோல்தான் முக்கியம்.

முக்கியமாக சுகர் கொன்றோல் பண்ணக் கூடிய உணவுகளை உண்ணுங்கள். ஒயில், கொழுப்பு உணவுகளை கைவிடவும், முடிந்தால் மரக்கறிகளையே அதிகம் உண்ணுங்கள். இப்படி செய்தால் ஒருசில மாதத்திலேயே மாற்றம் தெரியும். இனிப்புகளை அறவே தவிர்த்துக் கொள்ளுங்கள்.

PCO இருப்பதால் டிப்பிறசன் ஏற்படலாம். நீங்கள் மேலே கூறியபடி செய்துவர எல்லாமே நோர்மலாகும். ஆனால் உணவில் கட்டுப்பாடாக இருக்க தொடங்கினால் பெரிதாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். அதனால் டிப்பிறசன்கூட அதிகமாகலாம். எனவே முடிந்தால் கொஞ்சம் நடவுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். சந்தோசமாக இருங்கள். சீக்கிரம் குழந்தை கிடைக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Thanks Ishani
மே 7, 2008 - 3:11pm - வழங்கியவர் Anupa

Dear Ishani,

Thanks for the reply.Sure,i will get the book and try.What is meant by non insulin related diabetes.Please clearify me when u have time.
PCO-விற்கும் ,Diabetes -க்கும் தொடர்பு உண்டா?PCO இருப்பதினால் தான் Diabetics ஏற்படுகிறதா?PCO Permanent-ஆக தீர ஏதேனும் வழி உள்ளதா?எனக்கு,என் lifetime-ல் திருமணம் ஆன பிறகு உள்ள ஒரு வருடம் வரை பீரியட்ஸ் நார்மலாக தான் இருந்தது.குழந்தைக்கு பிளான் பண்ணும் போது இர்ரெகுலர் ஆகி விட்டது.

நன்றி.

With love,
Anupa Twinkle

அதிரா
மே 7, 2008 - 3:16pm - வழங்கியவர் Ishani

அதிரா, அருமையான வார்த்தைகள். மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். முதலில் நானும் தமிழில் எழுத நினைத்து பின் சிரமத்தால் ஆங்கிலத்திற்கு மாறினேன். ஆலோசனையுடன் ஊக்கமும் சேர்ந்த உங்கள் பதிவு பாராட்டற்குரியது. நன்றி.

அன்புடன்,
Ishani

Thanks athira akka
மே 7, 2008 - 3:24pm - வழங்கியவர் Anupa

உங்களின் அன்பான பதிலுக்கு நன்றி.நீங்கள் எந்த வகையான டயட்டில் இருக்கிறீங்கள் எனத் தெரியவில்லை எனக் கேட்டுள்ளீர்கள்.எனக்கு எந்த வகையான டயட்டில் இருக்க வேண்டும் என்றே தெரியவில்லை.இந்தியாவில் ட்ரீட்மெண்ட் எடுத்த வரை எனக்கு சுகர் இருக்கிறது என்றே தெரியாது.
டயட்டுக்கு,குறிப்பாக எந்த உணவுகளை நன்கு சாப்பிடலாம்,எந்த உணவுகளை அறவே சாப்பிடக்கூடாது என்று குறிப்பிட்டு கூறுவீர்களா?Pregnent ஆகி விட்டால் Metformin உடனே நிறுத்தி விட வேண்டும் என்று டாக்டர் சொன்னார்.அதை தவிர வேறு ஒன்றுமே எனக்கு புரியவில்லை.Metformin சாப்பிட் ஆரம்பித்தால் உடனே பீரியட்ஸ் ரெகுலர் ஆகி விடுமா?ஏனெனில் எனக்கு ஒரு வாரம் பிந்தியிருக்கிறது.

Thanks again for your timely help.

With love,
Anupa Twinkle

அனுபா,
மே 7, 2008 - 3:58pm - வழங்கியவர் Ishani

அனுபா, டயட் மற்றும் எடை குறைப்பு சம்பந்தமாக அருசுவை சகோதரிகளே நிறைய விளக்கம் கொடுத்துள்ளனர். முக்கியமாக கார்போஹைட்ரேட், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைக்கவும்.
Pregnant ஆனவுடன் Metformin நிறுத்துவதில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் உடன் நிறுத்திவிடுவர் (Because it is assumed that Meformin has some sideeffects to the unborn baby), சிலர் முதல் மூன்று மாதம் எடுப்பர் மற்றும் சிலர் கடைசிவரை எடுப்பர் (Because some studies show that Metformin reduces the chance of miscarriage for PCOS women).

மனம் தளராமல் நம்பிக்கையுடன் மேற்கூறியவைகளில் உங்கள் சூழ்நிலைக்கு ஒத்துவருவனவற்றை கடைபிடித்து பாருங்கள். யாவும் நலமுடன் நடந்தேற வாழ்த்துக்கள். PCOS எப்படி வருகிறது என்பது புதிராக இருந்தாலும் மன உளைச்சல் ஒரு காரணமாக கருத்தப்படுகிறது. சந்தோசமாக இருங்கள்.

அன்புடன்,
Ishani

அதிரா அக்கா,
மே 8, 2008 - 5:03am - வழங்கியவர் Anupa

நான் எந்த பழங்கள் எல்லாம் நன்கு சாப்பிடலாம்,எந்த பழங்கள் சாப்பிடக் கூடாது என்று சொல்வீர்களா.

அநேக குடும்பப்பிரச்சனைகள்,குழந்தையி
ன்மை போன்றவற்றால் மிகவும் மன உளைச்சலாக உள்ளது.மன அமைதிக்காக yoga class,meditation class போகலாமென்று நினைக்கிறேன்.குழந்தைக்கு முயற்சி செய்யும் போது yoga class,meditation classபோலாமா?இரண்டில் எது Best.பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

With love,
Anupa twinkle

கவலை வேண்டாம் அனுபா
மே 8, 2008 - 5:32am - வழங்கியவர் malathi

அனுபா!...என்ன இது மனசு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கீங்க? முதலில் கவலைப்படாமல் இருங்க. இதைப்பற்றியே நினைப்பதை விடுங்க. நீங்க படித்திருக்கிறீர்களா? அப்படி என்றால் முதலில் ஏதாவது வேலைக்கு போங்க. டாக்டர் நீங்க ரெஸ்டில் இருக்கவேண்டும் என்று எதுவும் சொல்லவில்லை அல்லவா? அப்ப இதை மறந்துவிட்டு வேறு எதிலாவது மனதை ஈடுபடுத்துங்க. நம்முடைய மனநிலைக்கும் யூட்ரஸ் ஃபங்ஷனிங்குக்கும் சம்மந்தம் இருக்கிறது. அதனால் முதலில் சந்தோஷமாக இருங்க. எனக்கு தெரிந்து எத்தனையோ பேருக்கு லேட்டாக குழந்தை பிறந்திருக்கிறது. உங்களுக்கும் கண்டிப்பாக பிறக்கும்.
அதிரா சொல்வதுபோல நான் வெஜ் ஐட்டங்களை தவிர்த்துவிட்டு நிறைய பழம் காய்களை எடுத்துக்கொள்ளுங்க. சுகர் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்க.

மாலதி அக்கா,
மே 8, 2008 - 5:51am - வழங்கியவர் Anupa

உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.நான் B.E. Computer Science முடித்திருக்கிறேன்.நான் இப்போது வெளிநாட்டில் Dependent Visa -ல் வந்திருக்கிறேன்.அதனால்,வேலை இங்கு பார்க்க முடியாது.Yoga class,meditation class பற்றி கேட்டிருந்தேன்.அதற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்.மீண்டும் நன்றி.

With love,
Anupa twinkle

அனுபா..டாக்டர்
மே 8, 2008 - 6:29am - வழங்கியவர் malathi

உங்கள் டாக்டரிடமே கேளுங்களேன் அனுபா. வேலைக்கு போகமுடியாவிட்டால் வேறு ஏதாவது க்ளாஸஸ் போகலாமே. சந்தேகத்துடனே ஏன் யோகா, மெடிடேஷன் போகவேண்டும்? யோகாவில் சில நிலைகள் கூடாது என்று சொல்வார்கள். மெடிடேஷனில் எந்த பிரச்சனையும் இருக்காது.

அன்புள்ள அனுபா,
மே 8, 2008 - 6:48am - வழங்கியவர் அதிரா

முதலில் இசானி பாராட்டுக்கு நன்றி. இங்கே அட்மின் அவர்கள் கடுமையாக சொல்லியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதவேண்டாம் என்று. அதனால் நான் முடிந்தவரை தமிழிலேயே எழுதுகிறேன். எனக்கு சிரமமில்லை பழகிவிட்டது.

அனுபா, நீங்கள் மன உளைச்சலில் இருப்பதால் மெடிரேசன் செய்யுங்கள். யோகாவும் செய்யலாம். எதுவாயினும் கடுமையாகச் செய்ய வேண்டாம். PCO இருப்பவர்களுக்கு, உடலில் ஹோமொன்களின் தன்மை மாறுபடும், சிலது கூடும், அதனால் தேவையில்லாமல் முடி முளைக்கும், நாடியில் மீசையில் எல்லாம். மெற்போமின் எடுப்பதால் சுகர் கொஞ்சம் கட்டுப்பாடாக, ஹோமோனின் நிலையும் ஓரளவு நோர்மலுக்கு வரும், இதனால் முடி (நாடி....) கொட்டியது என்றீர்கள், அதிலிருந்து தெரிகிறது ஹோமோன்ஸ் நோர்மலாகிறது... இதனால் பீரியட்ஸும் நோர்மலாகும்.

நீங்கள் முட்டை, இறைச்சி வகையை தவிர்க்கலாம் அல்லது இருந்துவிட்டு ஒரு தடவை ஆசைக்கு சாப்பிடுங்கள். சின்ன மீன்/ மீன் சாப்பிடுங்கள். அதிகமாக மரக்கறி இலைவகை சாப்பிடுங்கள். ஸ்ரார்ச் உணவுகளை தவிர்க்கவும். உருளைக்கிழங்கு, வெள்ளை அரிசி... இப்படியானவை வேண்டாம். எண்ணெய் கொழுப்பு வேண்டாம். இனிப்பு அதிகமுள்ள திராட்சை போன்றவற்றைத் தவிர்த்து ஏனைய பழங்கள் உண்ணலாம். குழந்தையை எதிர்பார்க்கும்போது அன்னாசி கூடாது.

குழந்தை கிடைக்கும்வரைதானே என நினைத்து மனதைக் கட்டுப்படுத்துங்கள்.... எந்த இனிப்பும் வேண்டாம். கேக்... இனிப்பு பிஸ்கட் ...புடிங்..... சுகர்... எதுவும் தொட வேண்டாம். மாலதியக்கா சொன்னதுபோல் மனதில் டென்சன் வேண்டாம்... அதுவும் குழந்தை தங்குவதை தடைசெய்யும்... சாதாரணமாக இருங்கள்...

நாள் தள்ளிப்போனால் வீட்டிலேயே ரெஸ்ட் செய்யலாமே. சரிவராவிட்டாலும் ஏங்கவேண்டாம்... உணவுக்கட்டுப்பாட்டை ஆரம்பியுங்கள்... மருந்தையும் தொடருங்கள். நீங்கள் எங்கிருக்கிறீங்கள் எனத் தெரியவில்லை, வெளிநாட்டில் என்றால்... குழந்தை தங்கிவிட்டால் பின்னர் பயப்பட வேண்டாம்.. அவர்கள் (டொக்ரேர்ஸ்) சொல்வதை பின்பற்றுங்கள். இங்கே நிறைய புது மருந்துகள் இருக்கிறது எப்படியும் குழந்தை கிடைக்கும். கவலையை விடுங்கள்...

இங்கே அறுசுவையில் உணவுபற்றி, குழந்தை பற்றி.. நிறைய விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக ஆறுதலாக வாசியுங்கள். உணவுமுறை எல்லாம் புரியும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Anupa
மே 8, 2008 - 6:54am - வழங்கியவர் Dsen

If you can find a good yoga trainer, you can tell him your problem & he'll tell you those poses that can be done by ppl trying for baby & that shouldn't be done... Also, there are poses that can improve fertility & help cure health issues pertinent to women & even for hormonal problems... But once u find out u r preg, you have to stop doing yoga for the first 3-4 months... & after that if you want, you can go for yoga classes that are there for pregnant women... When preg, it's not advisable to do yoga without a trainer...

Meditation is very safe to practice even during pregnancy. Just sit a position you are comfortable with & meditate for as long as you can.

Athira akka,Dsen
மே 8, 2008 - 7:18am - வழங்கியவர் Anupa

உங்கள் இருவரின் உபயோகமான பதிலுக்கு மிகவும் நன்றி.கண்டிப்பாக பின்பற்றுகிறேன்,நீங்கள் கூறியுள்ளவற்றை.நான் ஜெர்மனியில் வசிக்கிறேன்.

நான் பால் சாப்பிடலாமா.திராட்சை,அன்னாசி தவிர ஏனைய பழங்கள் அனைத்தும் சாப்பிடலாமா.

நன்றி.

With love,
Anupa twinkle

அனு ஜெர்மணியில்
மே 8, 2008 - 7:29am - வழங்கியவர் Jaleela Banu

அனு ஜெர்மணியில் இருக்கீறீர்களா உங்கள் பேரை கேட்டதும் எனக்கு நிருபமா நினைவு வந்து விட்டது,
அவரும் ஜெர்மனி தான் ,
நீங்கள் சூடான அயிட்டம் ஏதும் சாப்பிட கூடாது.
அப்படி சாப்பிட்டால் உடனே குளுமையான பழம் (அ) காய் சாப்பிடனும்.
பழம் என்றால் பப்பாளி,கொய்யா,அன்னாச்சி இது ஓவர் சுடு.
இறால், சிக்கன் கூட ரொம்ப சூடு தான் அதேல்லம் கம்மியாக சாப்பிடவும்.
ரசத்தில் பெருங்காயம், குழம்பில் சோம்பு சேர்த்து கொள்ளாதீர்கள்.
ஏனென்றால் இதேல்லாம் வயிற்றை கலக்கு அயிட்டம்.

ஏனென்றால் இதேல்லாம் வயிற்றை கலக்கு அயிட்டம்
பால் நல்ல குடிங்க அது ஒன்றும் செய்யாது, ஐஸ்கிரீம் சிறைய சாப்பிட வேண்டாம் வெயிட் போட்டு இருந்தால் அதை குறைத்து கொள்ளிங்கள்

ஜலீலா

ஜலீலா

hai anupa
மே 8, 2008 - 7:29am - வழங்கியவர் lakshmi priya m...

am also waiting for baby,i was married before 2 years.i have lot of mind tension and depression
because am also suffering from PCOS.but i have no diabetties.my wait is also increased day by day.
how u control ur weight plz tell me any tips.

அனுபா!...டயட் சார்ட்
மே 8, 2008 - 7:40am - வழங்கியவர் malathi

அதிரா வழக்கம்போல் அழகாக சொல்லி இருக்கிறார். எவ்வளவு ஈடுபாட்டுடன் கூறுகிறீர்கள் அதிரா!..... ' கோபம் ' வந்தால் பொரிந்து தள்ளுவீர்களே அது இன்னும் அழகாக இருக்கும். அனுபா! உங்களுக்கு ஹாஸ்பிட்டலில் டயாபட்டிக் டயட் சார்ட் கொடுக்கவில்லையா? உங்களுக்கு டயாப்பட்டீஸ் என்று டையக்னோஸிஸ் செய்த டாக்டரின் ஹாஸ்பிட்டலில் கேட்டால் கொடுப்பர்கள். அதில் நீங்கள் எந்த மாதிரியான பழங்கள், காய்கள், மற்றும் உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம் என்று போட்டிருக்கும். வெப் ஸைட்- ல் பார்த்தாலும் விவரமாக தெரிந்துகொள்ளலாம். உங்களுடைய சுகர் அளவை பொருத்துதான் நீங்கள் டயட் எடுக்கவேண்டும். அதனல் ஹஸ்பிட்டல் சார்ட்தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Hai lakshmi priya,
மே 8, 2008 - 7:58am - வழங்கியவர் Anupa

How are you? Have you checked for diabetics? Here,doctors say people having pcos have the higher chance of having diabetics.I am not scaring you.Because in india i have been under treatment for 21/2 years and i never knew that i have diabetics.Now,i am taking metformin(twice a day) and i feel like my harmones are getting balanced and doctor is saying that he is happy with my sugar test report and he is also telling me that PCO may also be cured because of this(I am going for PCO test on may 19th)and i have the chances of getting pregnency soon.
It's very sad to say,but it's true.In india they are not diagonising well.That too,i went for all famous gynochologists.This is my personal opinion.

When they took blood test for me here first time,they said it's too high for my age.
If you have never been to sugar test before,do it.If you know the problem, u can solve it easily.

Regarding diet,i myself don't know.See this full forum,i am asking so many questions.Ishani is suggesting one book and i am going to get that try.You also try with it.GOOD LUCK.

Cheers,
Anupa twinkle

Hello Anupa
மே 8, 2008 - 9:10am - வழங்கியவர் anjali73

Hello Anupa
அனு ஜெர்மணியில் இருக்கீறீர்களா , பால் சாப்பிடலாம் ,குளுமையான பழம்சாப்பிடலாம் .
முட்டை, இறைச்சி,மீன் வகையை தவிர்க்கலாம்.பொரொசனோ,பிரஷோ மீன் சாப்பிடதிங்க,ஏன்ன அதுல மெக்னீயம் பவர் இருக்குனு சொல்லுராங்க.

நிறைய பழம் காய்களை எடுத்துக்கொள்ளுங்க. சுகர் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்க.
சுகர் கொன்றோல் பண்ணக் கூடிய உணவுகளை உண்ணுங்கள்.
ஒயில், கொழுப்பு உணவுகளை கைவிடவும், முடிந்தால்தண்ணீர் சத்துள்ள காய்க்கறிகளையே அதிகம் உண்ணுங்கள்.

குழந்தையின்மை போன்றவற்றால் ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க நிறை பிரன்சை சேர்த்துகிட்டு ஜாலியா நல்ல அரட்டை அடிங்க. தனியாயிருக்காதிங்.
,ஒவ்வொரு நாளும் பிரன்சையோட கலப்பாக சிரிச்சுகிட்டெயிருங்க,மனதை ரொம்பரொம்ப சந்தோசமாக வைச்சுருங்க அதுல,மன அமைதிக கிடைக்கும்.
லீவுநாள்ல உங்களுக்கு பிடிச்ச இடங்களுக்கு கணவருடன் நல்ல சுத்தி பாருங்க, கவலைவிடுங்க.

உங்கள் டாக்டரிடமே கேளுங்களேன் அனுபா சந்தேகத்தை,பிரச்சனை துருவி,துருவி கேளுங்க
டாக்டரிடமே மனசை நல்லதெளிவுபடுத்திகோங்க,நான்க சொல்லரதவிட உங்க டாக்டர் சொன்னா ரொம்ப நம்பிக்கையாகயிருக்குல Anupa .
டாக்டர் ஆலோசனை கேட்டு நடந்துகோங்க.
யாருமேயில்லையே,தனியாயிருகோமே எண்ணம் வரவேகூடாது.நல்ல காலையும்,மாலையும் வாக் போங்க அப்பகூடபிரன்சை கிடைப்பங்க .

மனம் தளராமல் நம்பிக்கையுடன் சந்தோசமாக இருங்கள்
நானும் கண்டிப்பாக வேண்டிகொள்கிரேன் கடவுளிடம்.
அடுத்த 6மாசத்திலே பாருங்க எங்களுக்கு சந்தோஷமான் செய்தி சொல்லுவீங்க.அடுத்த வருஷம் அழகான குழந்தை முத்து உங்க மடியிலGOOD LUCK

மாலதி அக்கா,
மே 8, 2008 - 10:14am - வழங்கியவர் Anupa

மாலதி அக்கா,

பதிலுக்கு நன்றி.சார்ட் என்று கொடுக்கவில்லை.ஆனால்,படங்களைக் காட்டி,இது சாப்பிடலாம்,இது சாப்பிடக்கூடாது என்று சொன்னார்கள்.ஆனால்,அவ்வளவும் ஜெர்மன் ரெஸிபிக்கள்.இந்திய உணவு வகைகளை தானே நான் சாப்பிடுகிறேன்.அதனால் ,அது எனக்கு பயன்படவில்லை அக்கா.அதனால் தான் இந்த திரெட்டில் என் சந்தேகங்களைக் கேட்டேன்.

With love,
Anupa twinkle

அனுபா, லக்ஷ்மி
மே 8, 2008 - 10:21am - வழங்கியவர் அதிரா

ஐயோ மாலதியக்கா, எனக்கு எப்பவுமே கோபம் வந்ததில்லை, எல்லாம் நகைச்சுவையாக கதைப்பேன் அவ்வளவுதான்.

அனுபா, இங்கே நிறையப்பேர் நிறைய அறிவுரைகள் சொல்லியுள்ளார்கள், அவற்றைக் கேட்பதோடு நிறுத்தாமல் இன்றே ஆரம்பியுங்கள்.

லக்ஸ்மி, உங்களுக்கு சுகர் இல்லையெனில், நீங்கள் டயற் கொன்றோல்தான் செய்யுங்கள். வெயிற்றைக் குறைக்க வேண்டும். PCO இருந்த நிறையப் பேருக்கு டயற் கொன்றோல் பண்ணி குழந்தை கிடைத்திருக்கிறது. எனவே கொழுப்பு , எண்ணெய், ஸ்ராச் உணவுகளைத் தவிர்க்கவும், இனிப்பைக் கூட தவிர்ப்பது நல்லது. முதலில் ரத்தப்பரிசோதனை செய்து, சுகர் , தைரோயிட் உள்ளதா எனப் பாருங்கள். தைரோயிட் இருந்தாலும் கொன்றோல் இல்லையெனில் குழந்தை தங்காது. உடலும் நாளுக்குநாள் பெருக்கும். எனவே முதலில் blood test செய்யுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Dear anjali,
மே 8, 2008 - 10:32am - வழங்கியவர் Anupa

உங்க பதிலை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப தெம்பா இருக்கு.என் மேல அக்கறை காட்ட கூட ஒருத்தர் இருக்காங்களான்னு சந்தோஷமா இருக்கு.என்னை உங்க ப்ரெயர் -ல நினைச்சுக்கோங்க.குழந்தை உண்டாகி தான் ஊருக்கு போகனுங்கற தீர்மானத்தோட தான் இருக்கேன்.நீங்க சொன்ன அறிவுரைகளையெல்லாம் நான் கண்டிப்பா கடைபிடிக்கிறேன்.அடுத்த வாரம் மெடிடேஷன் போய் விசாரிச்சுட்டு ஜாயின் பண்ணலாமுன்னு இருக்கேன்.எனக்கு இங்க பிரெண்ட்ஸ் யாருமில்லை.எங்க அபார்ட்மெண்ட்டில் எல்லாம் ஜெர்மன்ஸ் தான்.என் கணவரும் அதையே தான் சொல்லி என்னை சத்தம் போடறார்,வீட்டிலேயே இருக்காதே,வாக்கிங் போ,பிரெண்ட்ஸ் கிடைப்பாங்கன்னு.ஏதோ நல்லது நடந்தா சரி தான்.மறுபடியும் நன்றி,உங்க அன்பான,அக்கறையான பதிலுக்கு.

With love,
Anupa twinkle

அனுபா! வாகிங்
மே 8, 2008 - 11:08am - வழங்கியவர் malathi

அனுபா!.. இங்கு இந்தியாவில் உள்ள உங்கள் உறவினர்கள் யாரையாவது இங்குள்ள ஹாஸ்பிட்டலின் டயட் சார்டை வாங்கி உங்களுக்கு அனுப்பசொல்லுங்க. நாங்களும் எங்களுக்கு தெரிந்ததை சொல்கிறோம். நான் ஒரு டயாபட்டிக் பேஷண்ட் என்பதால் எனக்கு ஓரளவு தெரியும். ஆனால் உங்கள் கையில் சார்ட்டும், அளவுகளும் இருந்தால் நல்லதுதானே. மா, பலா, வாழை சேர்த்துக்கொள்ளாதீர்கள். கிழங்கு வகைகள் மற்றும் அரிசி உணவு வேண்டாம். மன நிம்மதிக்காக இல்லாவிடினும் சுகர் கண்ட்ரோலுக்காவது நீங்கள் அவசியம் வாக்கிங் போகவேண்டுமே.

ஹாய் அனுபா...
மே 8, 2008 - 11:19am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் அனுபா...அனைவர்ம் அழகான முறையில் உங்களுக்கு ஆலோசனைகள் சொல்லி இருக்காங்க அதை பாலோ பண்ணுங்க...மிக முக்கையமாக உங்கள் கருத்தரிப்பதற்க்குள்ளான பிரட்சனையில் உங்களிடம் உடல் ரீதியாக பிரட்சனை (PCO)இருக்கலாம் ஆனால் அது மருந்தால் குணப்படுத்தலாம்..ஆனால் மன ரீதியாக பிரட்சனையை தீர்க்க எந்த மருந்தும் கை கொடுக்காது...நமக்கு ஒரு காய்சல்ன்னு வைத்துக்கலாம்..அப்ப மாத்திரை மட்டும் எடுத்துட்டு மனதளவில் நாம சோர்ந்து போனா காய்ச்சல் சீக்கிரம் குறையாது...மனிதனுக்கு நோய்க்கு பாதி காரணம் மனதுதான் என்பேன் நான்...மனதை ரிலாக்ஸாக வைத்துக்கங்க கவலை வருவது மனிதனின் இயல்பு...கவலை இல்லாமல் யாரும் கிடையாது..எவ்வலவு பெரியவராக இருந்தாலும் அவருக்கும் ஒரு கவலை இருக்கும்...சரி மர்ழியா அப்ப எப்படி கவலையை மனதில் இருந்து எடுக்க?மறக்க நினைத்தாலும் மறக்க முடியலன்னு சொல்லுறீங்களா?
சிரிங்கப்பா..வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்னு சும்மாவா சொன்னாங்க?புன்னகைதான் மனக்கவலைக்கு மருந்து...யோகாவைலாம் ஓரம் கட்டுங்க....கணவருக்கு வாய்க்கு ருசியா என்னலாம் சமைக்கன்னு இண்ட்றஸ்ட் எடுத்து,ரசித்து சமைத்து போடுங்க...கை வேலையில் இந்த்ரஸ்ட் இருந்தால் அதை பண்ணுங்க...இப்படி எதிலாவது இந்த்ரஸ்ட் இருந்தால் பண்ணுங்க...அப்படியே டேப்லட்டையும்,தேவையான டயட்டையும் கண்டினீவ் பண்ணுங்க..இதுவே போதுமனது..கடவுள் அருலால் நிச்சயம் குட் நியூஸ் சொல்லுங்க,சொல்வீக்க ஆல் த பெஸ்ட்
அன்புடன்,
மர்ழியாநூஹு

Anupa
மே 8, 2008 - 11:52am - வழங்கியவர் anjali73

Anupa ஜெர்மன்ஸ் தானாலும் சும்மா பேசுங்க,நாலு பேரை பார்த்து பேசுனாலே மனசுக்கு தெம்பு வரும், புது உற்சாகம் வரும்.எப்போதும்,உங்களை பிசியா,சந்தோஷமா வச்சுகோங்க.தனிமையை தவிர்திடுங்கல்
நான் floridala இருக்கேன், இங்க பேச ஆளே கிடையாது எல்லாம் ஆங்கிலேயர்தான்,ஆனாலும் அவங்க கூட பேசுவேன்,வேற வழி ஊரு விட்டு வந்த அவங்க பாஷை பேசிதானேயாகனும்
என் 4வயசு பையந்தான் பெஸ்டுபிரன்ட் அவன் கூடையும்,சாட்ல பிரன்சுகுடையுதான் என் பொழுதே போகுது.என் அனுபவத்தை தான் வரிகளாக எழுதினேன்
வெளிநாட்டி வாழும் பலரிடமும் தனிமையாழ்ந்து கிடைக்கிரது
நல்லது நடந்தா சரி தான் உங்க அன்பான பதிலுக்கு நன்றி,anjali

Diabetes
மே 9, 2008 - 7:23pm - வழங்கியவர் abinavi

hi Anuba
Diabetes இரு வகை உண்டு.
1)type one (Insulin Dependent Diabetes Mellitus)
இன்சுலின் அறவே இல்லாமல் அல்லது கம்மியா இருக்கும். இன்சுலின் injection கொடுப்பார்கள்.

2)type two (Non Insulin Dependent Diabetes Mellitus)
இன்சுலின் கம்மியாகவோ அல்லது bloodடிலிருந்து sugerஐ செல்களிற்கு மாற்ற முடியாமலோ இருக்கும். அதற்கு மாத்திரை கொடுப்பார்கள்.
metformin ஒரு antidiabetic மாத்திரை. இது blood டிலுள்ள குளுகோசின் அளவை கட்டுப்படுத்தும்.

Abi

hai
மே 14, 2008 - 12:57am - வழங்கியவர் johnsily

what is pco

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்