topic_image


அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் இரண்டு என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

வாருங்கள்..நன்றி :-)


குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் இரண்டு
மே 8, 2008 - 8:34am - வழங்கியவர் MarliyaNoohu

(குழந்தைகள் ஆலோசனை மையம் ஒரு முன்னோட்டம்..புதிதாய் இணைந்து இருப்பவர்கள் பயன் பெற போட்டுள்ளேன்..)

புத்துணர்ச்சியுடன் இருக்கும் அருசுவை இல் நம் வீட்டு புத்துணற்வு தரும் நம் செல்வங்களை(குழந்தைகள்) வளர்க்கும் முறை,நம் அனுபவங்கள் பற்றி பேசலாமே?

சில பேருக்கு குழந்தை வளர்ப்பு பற்றி சரிவர தெரியாமல் இருக்கலாம்,சில பேர்க்கு இதில் சந்தேகங்கள் இருக்கும்...இப்படி தெரிஞ்சவங்க ஆலோசனை சொல்லவும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கவும் பயனுல்லதாக அமையும் மேலும் தாய்மை அடையும் பெண்களும் பயன் பெற முடியும்...

ஏன் என்றால் பிள்ளையை பெறுவதை விட அதை பேணி வழற்பதுதான் கடினம்..அதிலும் நாம் வெற்றி பெற வேண்டும் இல்லயா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
மே 8, 2008 - 9:06am - வழங்கியவர் aniaksh

மர்ழியா,
எப்படி இருக்கீங்க?. இன்னைக்கு ஷாப்பிங் எல்லாம் இல்லையா?. குழந்தைகள் ஆலோசனை மையம் 1 சூப்பரா இருந்தது. பாகம் 2 ல நம்ம தோழிகள் என்னவெல்லாம் சொல்லராங்கன்னு பார்ப்போம். உங்களோட சேர்ந்து நானும் வைட் செஞ்சுட்டு இருக்கேன்.
Rajini

வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமிருக்கு
மே 8, 2008 - 9:13am - வழங்கியவர் Jaleela Banu

வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமிருக்கு என்றால் அது நம் குழந்தைகள்தான்
அது விலைமதிப்பிடமுடியாத பொக்கிஷம் என்னிடம் இதற்கு நிறைய பதில் இருக்கு ஆனால் இப்ப டைம் இல்லை எல்லாம் எழுதுங்கள் நான் சனிக்கிழமை பார்க்கிறேன்
மர்லியா சூப்பர் திரெட் எல்லா மர்லியாவுக்கு ஒரு ஓ போட்டு அவங்க அவங்க் பதிவை இங்கு போடுங்க பா

ஜலீலா

ஹாய்
மே 8, 2008 - 9:17am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் ரஜினி!
நேற்று என் கண்வர் சொன்னார் இந்த வெயிலில் உனக்கு சாப்பிங்லாம் முடியாது..பேசம ஏவ்னிங் போன்னு நாந்தான் இல்லை நான் ரொம்ப திடகத்தமா இருக்கேன் அப்படி இப்படின்னு எங்க கம்பெனியில் வொர்க் பண்ணும் பெண்ணை கூட்டிட்டு போனேன்(காரணம் போன டைம் எனக்கு டிரஸ் எடுத்தேன்..அது சின்னதா இருந்தது அதை ரிட்டன் பண்ணனும்..அதோட சைடில் இன்னும் கொஞ்சம் டிரஸ் எனக்கும் என் பொண்ணுக்கும்(எக்ஸ்டா பிட்டிங் ஹா ஹா)யப்பா பெண்டு கழந்துட்டு வெயிலில் என்னமா வெயில் இங்கே ஒரே மயக்கம்..இப்ப வரைக்கும் எனக்கு சரியாகல..பாவம் வேலைக்கு போகுறவங்கலாம் எப்படிதான் தினமும் இந்த வெயிலில் அதும் மூட்டை எடுத்துட்டு போறவங்க ரொம்ப பாவம்ப்பா...

எவரிடம் காட்டிகல..தேவையான்னுகேட்பாரே அதுக்குதன் :-)) படுத்த படுக்கைதான் போங்க...அப்பப்ப சாட்டிங்,அருசுவை,கிச்சனுக்கு விசிட்

அன்புடன்,
மர்ழியாநூஹு

குழந்தைகள் ஆலோசனை மையம்
மே 8, 2008 - 9:27am - வழங்கியவர் anjali73

எப்படி இருக்கீங்க?. மர்ழியாநூஹு,Rajini
மர்ழியானிங்க சொன்னது சரிதான் பிள்ளையை பெறுவதை விட அதை பேணி வழற்பதுதான் கடினம்.வெற்றி பெற தோழிகள் என்னவெல்லாம்ஆசோசனை சொல்லராங்கன்னு பார்ப்போம். தெரிஞ்சுக்க உங்களோட சேர்ந்து நானும் வைட் செஞ்சுட்டு இருக்கேன்.
நானும் வைட் செஞ்சுட்டு இருக்கேன்

மர்ழியா நல்ல தெரெட்
மே 8, 2008 - 9:34am - வழங்கியவர் Vijitvm

எனக்கு இங்கு டாக்டர்கள் & டிச்சர்கள் சொன்னது .
குழந்தைகள் அழைத்தால் உடணேயே போய் பார்க்கவும். அப்போது தான் அந்த குழந்தைக்கு ரொம்ப சந்தோஷம் ஆக இருக்கும். எக்காராணம் கொண்டும் அதை மறுக்க கூடாது. சின்ன விளையாட்டு கூட நம்க்கும் அதுக்கும் எல்லாம் புதிது. அதை மறுக்காமல் ஏற்று கொள்ள் வேண்டும்.டாய்ஸ் குடுத்தால் மட்டும் போதாது. அது கூட கொஞ்ச நேரம் விளையாட வேண்டும்.சின்ன சின்ன வேலைகள் கூட குடுத்து ஹெல்ப பன்ன சொல்லுங்க ஸ்பூன் எடுத்த இடத்தில் வைக்க பழகுவது.சின்ன சின்ன குப்பைகள் கொண்டு போய் போடுவது. தன்னுடைய ட்ரஸ்களை கொண்டு போய் அடுக்கி வைப்பது அவர்களை கேட்டு பிடித்த கலரில் வாங்கி குடுப்பது அந்த மாதிரி..எல்லாவற்றையும் அடுத்தவ்ர்களோட பகிர்ந்த்து கொள்ள கூடியது சொல்லி குடுக்க வேண்டும். எவ்வளவோ இருக்கு தொடரும்... இது இங்குள்ள டாக்டர்கள் சொல்வது.
இங்கு குழந்தைக்கு தான் முதல் மரியாதை.

சுட்டிதனமான ரகளை
மே 8, 2008 - 9:54am - வழங்கியவர் anjali73

ஜலீலாக்க சூப்பரா அழகாக வர்ணிச்சிடுங்க நம்மை குழந்தைகளை
மர்லியாவுக்கு ஒரு ஓ ................ஹோ
சரி எனக்கு 4 பையனிருக்கான்.
அவன் எப்படினான காலையில எழுந்தா பல் தேய்கிறது அவனுக்கு பிடிக்காத விஷயம்.எப்ப்டியோ பிரெஸ்,பேஸ்ட் அவன் வாய் அதுக்கூட போராடி ஒரு வழியா பல் தேய்ச்சு முடிச்சுடுவேன். அதுக்கு பொய் ரொம்ப,சொல்லனும் அது எப்படின்னா பல்தேய்யும்போது,உவாயிலருந்து கீரின்,எல்லொ,ரெட்,பர்பிள்,பிங்
க்,புளு கலர் பூச்சி வரும் வெளியில வந்தும் தண்ணி ஊத்தியிடலாம் சொன்னபோதும் கொஞ்சமாவது தேய்க்கவிடுவான் என் மகன் காலையில் என் குட்டி பையனின் சுட்டிதனமான ரகளை இது.மேலும் தொடரும்,விடாது கருப்பு மாதிரி[டி.வி.சீரியல்]

மர்ழியா
மே 8, 2008 - 9:59am - வழங்கியவர் aniaksh

மர்ழியா

நீங்க சொல்றதை பார்த்தா, ஷாப்பிங் போயி நீங்க மயக்கம் ஆயிட்டிங்க. ஆனா நீங்க ஷாப்பிங் போனாலே உங்க வீட்டுக்காரர் மயக்கமாயிடுவார் போல இருக்கே:)) சும்மா ஜோக்காதான் சொன்னேன். நல்லா ரெஸ்ட் எடுங்க. அப்பப்ப அறுசுவைபக்கமும் வாங்க.
Rajini

பிர்ன்லி விளையாடனும்
மே 8, 2008 - 10:15am - வழங்கியவர் anjali73

அவர்பிடிச்ச அகாரதை கேட்ட உடனே செஞ்யுடுக்கனும் குழந்தைகள்மனசுக்குரொம்ப சந்தோஷத்தை தரும்,அதுமட்டுல்ல பிர்ன்லி விளையாடனும், அவங்க கூட டான்ஸ் பன்னனும்,அவங்க கூட ஜம்ப் பண்ண்னும் குழந்தைக்கு ரொம்ப சந்தோஷம் ஆக இருக்கும்
படுக்கும்போது ஒரு குட்டி கதை சொன்னனும்,சொல்லிமுடிச்சுட்டு,எ
ங்க நீ ஒரு கதை சொல்லு அம்மாவுக்கு சொன்னபோதும் அவன்ங்கலும் நமக்கு கொஞ்சி,கொஞ்சி கதை சொல்லுவாங்க அதன் அழகே தனிங்க இப்படி சொல்லிகிட்டெ போகலாங்க அவங்கலபத்தி

குழந்தைகள் ஆலோசனை
மே 8, 2008 - 4:16pm - வழங்கியவர் arunkavi

kavitha

விஜி im Kavitha நீங்க சொல்றது 100 பெர்சன்ட் கரக்ட்.அதுமட்டும் இல்ல்காம நாம வீட்டுக்கு யாரவது வந்தால் எப்படி அவர்களிடம் பேசவேண்டும்னு சொல்லிதரனும்.நாம அவங்களை செல்ல பெயர் சொல்லி கூப்பிடறத்தன் விரும்பிகிறார்கள்.என்னுடைய பெண்ணுக்கு chellamnu கூப்பிட்டாதான் பிடிக்கிறது.அவ எனக்கு பெறிய மனுஷி மாதிறி சொல்லிதறா.என்ன பண்ணறதுன்னு ஒன்னும் புரியல
இப்ப எல்லாம் குழந்தைங்க 3 வயது ஆனவுடன் அவங்க வேலையை அவன்களே செய்ய விரும்பிகிறார்கள்.நாம்ப encourage பண்ண வேண்டும். நிறைய சொல்லிகொடுத்தல் ஈஸியா புரிந்துஈகொள்கிறார்கள்.நிறையை இருக்கு.அப்புறம் வறேன்..Dinner prepare பண்ணவேண்டும்.bye for all.viji,marliya,jalila எல்லாத்துக்கும் bye.

குழந்தைகள் ஆலோசனைமையம்
மே 8, 2008 - 11:59pm - வழங்கியவர் aniaksh

ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு ஆர்டிகிள் படிச்சேன். அதுல , குழந்தைங்களை பத்தி டிஸ்கஸ் செஞ்சு இருந்தாங்க. நார்மலா அவங்க ஏதாவது ஒரு வேலையை செய்யும் போது நாம பாராட்டுவோம். குட் ஜாப், யூ டிட் இட்ன்னு எல்லாம் சொல்லுவோம். சில சமயம் I AM SO PROUD OF YOU சொல்லுவோம் இல்லையா, அதுக்கு பதிலா YOU SHOULD PROUD OF YOURSELF என்று சொல்லனுமாம்.

காரணம் என்னன்னா, நாம அவங்களை நெனைச்சு பெருமை படரதுக்கு முன்னாடி அவங்க செஞ்ச வேலைக்கு உரிய கிரடிட்டை அவங்களுக்கே கொடுக்கனும். அந்த பெருமைதான் அவங்க செஞ்ச காரியத்து மேல அவங்களுக்கே ஒரு தைரியத்தை கொடுக்கும். அதுனால அவங்க செல்ப் கான்பிடன்ஸ் அதிகமாகும். நாம செஞ்சா சரியா இருக்கும்ங்ற தைரியத்தோட, பயப்படாம செய்வாங்களாம்.

இன்னொரு விசயம், குழந்தைகள் நம்மள பாத்து எப்பவுமே பயந்துகிட்டே இருக்கக்கூடாது. ரொம்ப அரட்டி, உருட்டிகிட்டே இருந்தா நாளைக்கு ஏதாவது தெரியாம தப்பு செஞ்சா கூட நம்மகிட்ட மறைக்கப்பாப்பாங்க. அப்புறம் அதுக்காக பொய் சொல்ல ஆரம்பிப்பாங்க. பொய்யின்னு தெரிஞ்சு கேட்டாக்கூட அதை ஒத்துக்க பயந்து அடுத்த ஆயுதமா அடம் பண்ண ஆரம்பிப்பாங்க. அதுனால அவங்க வயசுக்கு ஏத்த மாதிரியே பழகனும்.

சில சமயம் பார்த்தீங்கன்னா, ஸ்கூல்ல பசங்களுக்கு ஏதாவது ஒரு விசயத்துல சண்டை(EX:OUR KIDS BULLYING BY OTHERS) வரும். அந்த மாதிரி சமயத்துல நாம நம்ம பசங்களை நம்பனும். மாறாக, அவங்களை திட்டக்கூடாது. ஞாயமான விஷயத்துக்காக சண்டை போட்டு இருந்தா நாம எப்பவும் அவங்களுக்கு சப்போட்டா இருப்போம்னு அவங்களுக்குப் புரிய வைக்கனும். அதுக்காக நாம உடனே வரிஞ்சு கட்டிகிட்டு போய் நிக்கக்கூடாது. முதல்ல நம்ம பசங்களே போய் டீச்சர் கிட்டயோ, அந்த பையனோட பேரன்ஸ் கிட்டயோ தனக்கு நடந்ததை சொல்லட்டும். அப்பதான் பயமில்லாம பிரச்சனையை அவங்களால எதிர்நோக்க முடியும். அதே சமயம் தப்பான விசயாமா இருந்தா செல்லம் கொடுக்காம கண்டிக்கவும் செய்யனும். மொத்தத்தில தராசு மாதிரி பேலன்ஸ்டா இருந்து அவங்களுக்கு நல்லது, கெட்டதை புரிய வைக்கனும்.
Rajini

நன்றி
மே 9, 2008 - 1:27am - வழங்கியவர் sivavel

நன்றி , இதைத்தான் தெடினென்.இதை பற்றி யெதாவ து லின்க் அனுப்பமுடியுமா?
I told her boodham lam onnum illa , dont get scred now she's telling me, amma bayapdathey boodhamlam onnum illa.

she use to call me and all va, po
not vaanga, ponga
nowadays i started calling her "siva inga vaanga"
she also calls all now with respect

Diary
மே 9, 2008 - 4:06am - வழங்கியவர் sivavel

Dear marliya, your tips are realy nice.thanks for sharing .I just go thru part 1.
உங்கள் குழந்தை பிறந்தது முதல் அவர்கள் செய்வதை தனி டையரியில் எழுதி வையுஙள் ,some times we will forget wat they do exactly in last yr.

குழந்தைகளுக்கு மசாஜ்
மே 9, 2008 - 4:51am - வழங்கியவர் sivavel

யாரவது குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது எப்படி என்று சொல்லுங்கலென் பாரம்பரிய முறை , குளிக்கும் பொது மசாஜ் செய்வது எப்படி ,இரவு தூங்கும் முன் மசாஜ் செய்வது எப்படி

அல்லது இங்கு வெளிநாடுகளில் டாக்டர்கள் சொல்லும் முறை பட்றியும் சொல்லுங்கலென்.

ஆலோசனை மையம் part 2
மே 9, 2008 - 8:05am - வழங்கியவர் MarliyaNoohu

வாழ்த்தி இருக்கும் ஜலிலாக்கா,அங்சலி,விஜி,ரஜினி,தி
வ்யா,அனைவருக்கும் என் நன்றி...

ஜலிலாக்கா என்ன ஆன்லைனில் காணோம்?

ரஜினி என்னப்பா இப்ப்டி சொல்லிட்டீங்க?சாப்பிங் போனதை விட என் பொண்ணு என்னை படுத்தியதுதான் ரொம்ப டயர்ட்..அங்கு ஓடுறா இங்கு ஓடுறா டிரஸை பார்த்தா இவ காணாமல் போஇடுவா அய்யோன்னு தேடினா 6 பேர்(எல்லாம் கடை பசங்க)நடுவில் இவ உக்கார்ந்து (தரையில்)அரட்டை அடிச்சுட்டு இருப்பா அவங்களும் இவ கை,கால் ஆட்டி பேசுறதை ரசித்துட்டு இருப்பாங்க..இப்பன்னு இல்லை எப்பௌம்தான்..அதோட பாவம்னு வெளியே கூட்டிபோனா என் பக்கத்தில் இருப்பது இல்லை யாராவது சின்ன பிள்ளைகள் வந்தா பின்னாடியே போஇடுவா..அதனாலயே எனக்கு பாதி டயர்ட் ஆகிடும்...ஒருமுறை மாலில் இவளைதான் ஹேண்டி கேமில் எடுத்துட்டு இருந்தேன்..அந்த டைம் வேலந்தைன்ஸ் டைம் சோ மால் சூப்பரா இருந்தது மாலையும் எடுக்கலாம்னு எடுத்துட்டு பார்த்தா இவளை காணோம்..அப்புறம் பார்த்தா ஒரு இங்லீஸ் கார ஆளுடன் ஜமுன்னு சேரில் இருந்து தலையை ஆட்டி,ஆட்டி பாட்டு கேட்டுட்டு இருக்கா..ஹெட் போன் இவ காதில் ஒன்னு அந்த ஆள் காதில் ஒன்னு..என்னத்த சொல்லப்பா சொல்லிட்டே போகலாம் இவ லூட்டியை...சொல்லி மாலாது

இல்லைப்பா என் கணவருக்கு எப்பவும் பாரம் தர மாட்டேன்..என் பொண்ணுக்கு மட்டும் ஆசை பட்டதை வாங்கிடுவேன் எதுவானாலும்(இதுதானே பெண்களின் தாய்மை உள்ளம் நான் மட்டும் விதி விலக்கா?)மற்றபடி எனக்கு ஏதாவது ரொம்ப ஆசைனா மட்டும் அவரிடம் சொல்லுவேன் அவருக்கு எப்ப தோதுபடுமோ அப்ப கண்டிப்பா வாங்கி தருவார்....தரவில்லை என்றாலும் விட்டுடுவேன் ரொம்ப அலைச்சலில் இருப்பார் பாவம் நானும் ஏன் தொல்லை கொடுக்கனும்னு...

ஹாய் வித்யா இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறென் உங்களிடம் பேசுறது....
நலமா?இவ ஆரம்ப ஸ்டேஜில் டைரியிலும்,கேமிலும் பதிவு பண்ணினேன் ..இப்ப டைம் இல்லை சோ அப்பப்ப கேமில் மட்டும் எடுத்து வைத்துடுவேன்..பிறந்ததில் இருந்து இப்ப வரை இவ முதல் முதலா தவள ஆரம்பித்தது பேசிய வார்த்தைகள்..தனியா செய்யும் வேலை,பண்ணும் லூட்டி இப்படி எல்லாம் கேமில் இருக்கு..இப்பவரை...
அன்புடன்,
மர்ழியாநூஹு

சிவாவேல்
மே 9, 2008 - 8:11am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் திவ்யா சுத்தமான தேங்காய் எண்ணைய் அல்லது ஆலிவ் ஆயிலை அடுத்து உடம்பு முழுவதும் தேய்கனும் ஆமா குழந்தையின் வயதை முதலில் கொடுங்க அப்பதான் விளக்கமா சொல்ல வசதியாக இருக்கும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
மே 9, 2008 - 9:15am - வழங்கியவர் aniaksh

மர்ழியா,

நான் சும்மா விளையாட்டுக்குதான் சொன்னேன். ஆனா உங்க பொண்னு உங்களுக்கு சூப்பரா விளையாட்டு காட்ரா போல இருக்கே. இந்த மாதிரி அவ லூட்டி அடிக்கும் போது தனியா எக்சர்சைஸ்ன்னு ஒன்னு உங்களுக்கு தேவையே இல்லை. இப்போ அவளுக்கு என்ன வயது?. பேர் என்ன?. நீங்க கேன்டிகேம்ல எடுத்து வைக்கறதை எல்லாம் அவ கொஞ்சம் பெரியவள் ஆனதும் காமிச்சா, அவளுக்கே ஆச்சர்யமாவும், சிரிப்பாவும் இருக்கும்.

என் பையனோட லீலைகளை அவன் கிட்ட காமிச்சப்போ, அவனுக்கு ஒரே வெக்கம். ஏன் மம்மி நான் FUNNY YA இப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்னு என்கிட்டயே கேக்கறான். நானும் இப்போ திரும்பவும் அதே வேலைதான் செஞ்சுட்டு இருக்கேன். என் பொண்னு இப்போதான் தவழ ஆரம்பிச்சு இருக்கா. அதுனால பிசியோ பிசி.
Rajini

ரஜினி
மே 9, 2008 - 10:09am - வழங்கியவர் MarliyaNoohu

அய்யோ நான் ஒன்னும் தப்பா நினைக்கலமா...நானும் நார்மலாகதான் சொன்னேன்..இரண்டரை வயது ஆகிறது அடுத்த மாதம் பிலே ஸ்கூலில் போடுறதா இருக்கொம்(2 அல்லது 3 மணி நேரம்)..பாவமா இருக்கு அவளை பார்த்தால் அவ ஏஜ் பசங்களோடு விளையாட ஆசை படுறா..என் பொண்ணு பெயர் மரியம்..இப்பவே தன்னை தானே பார்த்து ரசித்துகுறா ரொம்ப தேவைதான் இவளுக்கு :-))

ஆமாம் எனக்கு அதுதான் ஆசை அப்புறம் இவளின் வருங்கால கணவரிடம் போட்டு காட்டனும்..இப்படிலாம் இமேஜன் இருக்கு ஹா ஹா...ஓஹ் உங்களுக்கு 2 பிள்ளைகளா?நல்லது அவங்க வயது?சொல்லுங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
மே 9, 2008 - 10:46am - வழங்கியவர் aniaksh

மர்ழியா,
நீங்க சொன்ன "அப்புறம் இவளின் வருங்கால கணவரிடம் போட்டு காட்டனும்.." ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே. உண்மையிலேயே இதைவிட நல்ல கிப்ட் இருக்க முடியாது. ப்ளே ஸ்கூலுக்கு முதல் தடவை அனுப்பும் போது நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். நானும் என் பையன் அழுகக் கூடாதுன்னு ரொம்ப வேண்டிக்கிட்டே, அவன் கிட்டயும் ப்ளே ஸ்கூல் பத்தி ஆஹா ஓஹோன்னு சொல்லி கூட்டிட்டு போனேன். அவன் சீக்கிரம் எல்லாருடனும் பழகிடுவான். ஸ்கூல் போனதும் சின்ன சின்ன குட்டிகளை பார்த்து ரொம்ப குஷி ஆயிட்டான். அவங்க டீச்சர் வந்து ஹாய் சொல்லி கூப்பிட்டதும் சந்தோசமா போய்ட்டான். எனக்கும் டாடா சொன்னான், உடனே அவங்க மிஸ் என்னை போக சொல்லிட்டாங்க. எனக்குத்தான் ரொம்ப அழுகை அழுகையா வந்தது. கார்ல வந்து அழுது தீர்த்துட்டேன். மதியம் அவனை பார்கிறவரை மனசே சரியில்லை. இதைத்தான் "பெத்த மனசு பித்துன்னு" சொல்லுவாங்க போலருக்கு. இப்போ என் பையனுக்கு 7 வயசு. பேர் அனிருத். பொண்னுக்கு 7 மாசம் ஆகுது, பேர் அக்ஷிதா.
Rajini

ரஜினி
மே 9, 2008 - 12:06pm - வழங்கியவர் MarliyaNoohu

நான் ஊர் போனப்ப கொஞ்சநாள் எனக்கு தெரிஞ்சவங்க ஸ்கூலில் விட்டுட்டு மறைந்து இருந்து நோட்டமிட்டு வந்தேன் 2 நாளில் பழகிட்டா அனைவருடனும்(அப்படி விட காரண்ம் இங்கு புது ஸ்கூலில் சேர்க்குறப்ப என் பொண்ணு எப்படி அதை பேஸ் பண்ணுவாளோன்ன பயம்தான் காரணம் அதோட நானும் நின்னு பார்க முடியாது,விட மாட்டாங்க..மனசு ரொம்ப கஸ்டமாகிடும் அதனால் கொஞ்சம் இப்படி தெரிஞ்சவங்க ஸ்கூலில் விட்டு பிடிச்சா என்னன்னுநானே தெரிஞ்சுக்கலாமே,நினைத்த டைமில் என் பொண்ணை பார்த்துக்கலாம்...அதற்காகதான் விட்டு பிடித்தேன் சிரமம் பார்ர்காமல்...பின் என் பொண்ணை பார்த்து கொள்ளும் மிஸ்ஸிடம் ஒரு செல்லை(cell) கொடுத்து வைத்துட்டு வந்துட்டேன் 2 நாள் கழித்து...அப்பப்ப போன் பண்ணி கேட்டேன் எப்படி இருக்கானு ஜாலியா இருப்பதாக சொல்வாங்க அதோட அவளையும் பேச வைப்ப்பாங்க எனக்கு மனசு ரிலாக்ஸா இருக்கும்...பின் செம மழை வந்ததது அதனால் அவளை ஸ்கூல் அனுப்பல...இடைவேளி விழுந்து போச்சு..அதிலிரும்ந்து ஒரே அழுகைதான்...நான் ரிட்டன் வர 3, 4 நாள் இருப்பதால் சரின்னு ஸ்கூல் அனுப்பல...இப்ப எப்படின்னு பயமாகதான் இருக்கு...இறைவந்தான் துணை இருக்கனும்...உங்க பிள்ளைகள் பெயர் இரண்டும் ரொம்ப நல்லா இருக்கு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

anbu marliya
மே 10, 2008 - 3:22am - வழங்கியவர் sivavel

அன்பு marliya என் பெண்ணின் வயது 2(siva ranjani) , அவளுக்கு உரிய massage சொல்லவும். அப்படியெ பிறந்தது முதல் எப்படி செய்ய வெண்டும் என்பதயும் சொல்லவும்.என் அன்பு தொழி ஒருத்திக்கு இந்த மாதம் குழந்தை பிறக்க உள்ளது(I too follow for my next baby).

நான் என் பெண்ணின் முதல் blanket அவள் பிறக்கயில் அவளை வாங்கியது, முதல் வளயல்,முதல் உடை, பொன்றவற்றை வைதுல்லஎன், எல்லாம் அவள் கணவரிடம் , அவள் குழன்தையிடம் காட்டலாமெ என்று

ஆமாம் ரஜினி
மே 10, 2008 - 2:48pm - வழங்கியவர் Vijitvm

நான் கூட ரொம்ப அழுதேன். இன்றக்கு நினத்தாலும் எனக்கு அந்த நாள் மறக்க முடியாது. என் தோழிகளிடம் ஊர்ல் இருக்கற அம்மா,அப்பா எல்லார்ட்டேயுன் நான் போன் பண்னி அழுதேன். அவன்க எல்லாம் சொன்னங்க நீ பார் இன்னும் அடுத்த போன்ல சொல்வே பார் நான் சரியாயிட்டேன். என்று.அந்த மாதிரி நம்ம குழந்தைகளை சொல்வதற்க்கு முடிவே இல்லை. ரஜினி என் பெண் கூட் 7 வயது அக்ஷ்யா, திவ்யா - 23 மாதம்.
2 வதொ ரொம்ப சுட்டி வால். தாங்க முடியல்லை.
சரியாக இருக்கு எனக்கு.நான் சில நேரத்தல் சாப்பிட கூட முடியாமல் போகிறது.
இன்னும் தொடரும்.

என் குழந்தயின்
மே 10, 2008 - 2:56pm - வழங்கியவர் Vijitvm

என் கனவர் என் குழந்தைகளின் முதல் முடி, முதல் பிக்சர், முதல் காதணி, முதல் ட்ரெஸ், முதல் செருப்பு,முதலில் எழுதின எழுத்து, படம், இப்படி எல்லாம் சேர்த்து வைத்துள்ளோம். அதை எல்லாம் scrapbook ஆக வைத்துள்ளோம்.எல்லாரும் அந்த மாதிரி செய்யலாம். நாள் அவங்க வளர்ந்து இதை பார்த்து சந்தோஷ படுவார்கள். இப்ப கூட என் மாமியார் என் கணவருக்கு முதல்ல யுஸ் பன்ணின ஸில்வர் கிண்ணம், ஸ்பூன்,தட்டு, சங்கு இதெல்லாம் எனக்கு குடுத்து யூஸ் பண்ண சொன்னாங்க. நானும் அதை தொடருகிறேன்.

தொடரும்...

குழந்தைகள் மையம்
மே 11, 2008 - 4:38am - வழங்கியவர் அதிரா

நான் ஏற்கனவே என் மகனின் முதல் நேசறி பற்றி இங்கு எங்கேயோ கதைத்துவிட்டேன், எங்கே எனத் தெரியவில்லை. யாராவது கண்டால் தயவுசெய்து, அது எங்கிருக்கிறது என்பதை இங்கே எழுதிவிடுங்கள்... கோடி புண்ணியம் கிடைக்கும்.

இன்னுமொன்று, குழந்தை வயிற்றிலிருக்கும்போது , 7 மாதத்தின் பின் துடிப்பை உணரலாம் என நினைக்கிறேன். சிலர் சொன்னார்கள் அதிகமாக துடித்தால் அது ஆண்குழந்தை எனவும் குறைவாக இருந்தால் பெண்குழந்தை எனவும் ஓரளவுக்கு சொல்லலாம் என்று. ஏனெனில் சிலர் பயப்படுவார்கள், துடிப்பு மிகவும் குறைவாக இருக்கிறதே என்று. வேறு மருத்துவ ரீதியான காரணங்களும் உண்டு. ஆனால் பெண் குழந்தைக்கும் குறைவாக இருக்கும் என்கிறார்கள். யாராவது அனுபவத்தில் தெரிந்தால் சொல்லுங்கள்.

(வயிற்றிலிருந்தபோது) என் 2வது மகன் கடுமையாக உதைக்கவில்லை. ஆனால் மூத்தவரின் உதைகள் இருக்கிறதே.... என்னால் மறக்கவே முடியாது. உதையத் தொடங்கிவிட்டால் நான் படுத்துவிடுவேன், அவ்வளவு கழைப்பு வந்துவிடும் எனக்கு. ஒருநாள் 8 வது மாதம் நான் வெஸ்பாவில் போய்க்கொண்டிருந்தேன், என் வயிற்றில் அவன் உதைந்தது அப்படியே என் ஹஸ்ப...னின் முதுகில் இடித்தது, அவர் திடுக்கிட்டு கேட்டார் என்ன குழந்தை உதைத்ததா என்று. ஆனால் மூத்தவர் இப்பவும் அதேபோல் ஸ்ரோங்... சும்மா அவரின் கை என்னில் இடிபட்டாலே எனக்கு நோகும். நிறைய எழுதிவிட்டேன்.. பின்னர் தொடரும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

புதிய ஆடை
மே 11, 2008 - 4:51am - வழங்கியவர் thalika

ஹ்ம்ம் ஒரு விஷயம் சொல்லி விட்டு போகிறேன் இப்ப...
முக்கியமாக குழந்தைகளுக்கு எந்த துணியாக இருந்தாலும் புதியதை அப்படியே அணிந்து விடாதீர்கள்..நல்ல சுடு நீரில் துவைத்து காயவிட்டு பிறகு போட்டு விடுங்கள்.
துணி தயாரிக்கும் கம்பெனிக்கு போய் பார்த்தால் ஆஹா..அவ்வளவு கெமிகலும் துணியில் இருக்கும்..போஹ்டாததுக்கு ஆயிரம் கை மாறி மாறி வரும் எல்லா கிருமிகளும் இருக்கும்.
இன்று சரியாக ஒரு மெயிலும் வந்தது அதனால் தவறாமல் இங்கு போட வந்தேன்.

டியர் வித்யா
மே 11, 2008 - 12:49pm - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் இரண்டு வயதா? சிவ ரஞ்சனி அழகான பெயர்..ஆலிவ் ஆயில்,அல்லது சுத்தமான தேங்காய் எண்ணைய் எடுத்து முகம் தவிர்த்து மேலில் இருந்து கீழ் நோக்கி மசாஜ் கொடுக்கனும்..ஒரு ஹாப் ஹவர் அப்படியே ஊற விடனும் பிள்ளைக்கு பொறுமை இல்லைனா 15 நிமிடம் போதும்..அஜீரண கோளாரு பிள்ளையின் எழும்பு இதுகெல்லாம் நல்லது...என் பொண்ணு விட மாட்டா...குழந்தைக்குன்னா மெதுவா மாசாஜ் கொடுக்கனும் அழுத்தி தேய்க்க கூடாது...இதே போல்தான் ஆனால் அவர்களை ரெப்ப்ர் சீட்டில் ஏதாவது ஒரு(குழந்தையின் துணிதான்)போட்டு அதில் போட்டு பின் குளிப்பாட்டனும்...

அழகான ஆர்வம் உங்களுக்கு நான் ரொம்ப செண்டி மெண்ட்டான டிரசை மட்டும் என் அக்கா பொண்ணுக்கு வைத்து இருக்கேன்,அவளுக்கு போட்டு அழகு பார்ப்பென்..என் பொண்ணிடமும் சொல்வேன் இது உன் டிரஸ் பாரு தங்கச்சிக்கு எவ்லோ நல்லா இருக்குன்னு அவளும் பூட்டிபுல்(அதான் பியூட்டி புல்)அப்படி சொல்வாள்..மேலும் அவளுக்கு காது குத்திய பொழுது போட்ட கம்மல் பத்திரமாக இருக்கு..செயிந்தான் அந்து போச்சு..வளையல்,கொளுசு இப்படி ஜுவல்ஸ்லாம் இருக்கு அழிக்காமல் வைத்துட்டேன்..அக்கா பொண்ணுக்கு போட்டுட்டேன் அடுத்து அனேகமா பொண்ணுனா அதுக்கு வரும் இல்லை ஸ்ற்றைட்டா என் பொண்ணின் மகளுக்குதான் ஹா ஹா

அன்புடன்,
மர்ழியாநூஹு

மசாஜ்
மே 11, 2008 - 11:59pm - வழங்கியவர் thalika

மசாஜ் செய்யும் முறையை நானும் நெட்டில் இருந்து படித்து தான் செய்து கொண்டிருந்தேன்.இப்பொழுது மறந்துவிட்டது. ஏனென்றால் இவளுக்கு கடந்த 1 வருடமாக அதற்கு பொறுமையில்லை.
கொஞ்சம் நியாபகம் வந்ததை சொல்கிறேன்.பிறகு பார்த்து சொல்கிறேன்.
எண்ணை நாம் மசாஜ் செய்யும்பொழுது மென்மையாக வழுக்கிவிட்டு வருவதற்காகத் தான்..அதற்கு தேங்காய் எண்ணை,ஆலிவ் எண்ணை அல்லது பேபி ஆயில் அல்லது ஆல்மன்ட் ஆயில் தடவலாம்.
முதலில் எண்ணை தேய்த்தபின் குழந்தையை கொண்டு போய் குளிக்க வைக்க தேவைப்படும் பொருட்களை ரெடியாக வைத்து விட்டு வாருங்கள்
பின் ஒரு ரப்பர் ஷீட் விரித்துக் கொண்டு அதன் மேல் ஒரு காட்டன் துணி விரித்துக் கொள்ளுங்கள்...இதற்கென்றே 3 காட்டன் துணி வைத்து மாறி மாறி துவைத்து பயன்படுத்துங்கள்.டைரெக்டாக எண்ணை தேய்த்து ஷீட்டில் போடுவது சிறிதும் நல்லதல்ல.
அதன் மேல் குழந்தையின் ஆடையைக் களைந்து படுக்க வைய்யுங்கள்..அறையின் வெட்பம் குழந்தைக்கு சரியாக இருக்கும்படி அதிக குளிரில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கை சில்லென இருக்காமல் உரசி சூடு படுத்திக் கொள்ளுங்கள்.பிறகு கொஞ்சம் எண்ணையை கைய்யில் தடவிக் கொண்ள்ளுங்கள்.பிறகு கழுத்து முதல் பாதம் வரை இடது புறமும் வலது புறமும் நீளமாக தடவுங்கள்..இப்பொழுது அதற்கு விருப்பமில்லையென்றால் அழுகத் தொடங்கும்...அழுதால் நிறுத்தி விடுங்கள்..அழுக வைத்து செய்தால் செய்ததற்கான பலன் கிடைக்காது.
பிறகு குழந்தையின் ஒரு கைய்யை நமது ஒரு கைய்யால் பிடித்துக் கொண்டு மறு கைய்யால் மேலிருந்து கீழ் நோக்கி உள்ளங்கை குழந்தையின் கைய்யை சுற்றிய விதம் தடவுங்கள்..திரும்ப கீழிருந்து மேல் நோக்கி தடவுங்கள்..
இது போலவே காலுக்கும் உள்ளங்கைய்யை சுற்றி பிடித்து அழுத்தாமல் மென்மையாக கீழிருந்து மேல் மேலிருந்து கீழ் என மசாஜ் செய்யுங்கள்.
முகத்திற்கு கட்டை விரலால் மூக்கின் கீழிருந்து மேல் நெற்றி வரை வருடுங்கள்...குழந்தைக்கு தூக்கம் வரும்பொழுதும் இப்படி செய்தால் நல்ல சுகமாக அசந்து தூங்கும்
வயிற்றுக்கு செய்ய விரலால் சின்ன கமா போடுவது போல் மென்மையாக க்லாக்வைசில் குழந்தையின் வயிற்றில் செய்யுங்கள்.
குழந்தையின் கழுத்தில் சப்போர்ட் கொடுத்து சாப்பிட்டவுடன் திருப்பி வைப்போமே அது போல் போட்டு முதுகையும் மேலிருந்து கீழாக மசாஜ் செய்யலாம்
தலைக்கு லேசாக குட்டி குட்டி பொட்டு வைப்பது போல் தலையை சுற்றி விரலால் தொட்டு தொட்டு விடுங்கள் போதும்
இன்னும் என்னெனவோ முறைகள் உண்டு அவை எனக்கு தற்பொழுது நியாபகம் இல்லை
மேலே சொன்ன எல்லாம் செய்யும்பொழுது வயிறு முட்ட குழந்தையின் வயிற்றை நிரப்பி செய்யவும் வேண்டாம் ரொம்ப காலியாக்க செய்யவும் வேண்டாம் குழந்தை சாப்பிட்டு 20 நிமிடம் கழித்து செய்யவும்
மேலே சொன்ன மசாஜ் எல்லாம் செய்து ஒரு 10 நிமிடம் கசித்தோ அல்லது அப்பொழுஹே கூட குளிக்க வைக்கலாம்..எண்ணை தேய்த்த உடலானதால் நல்ல வழுக்கும்..அதேகாட்டன் எண்ணைபடிந்த துணியாலேயே சுற்றிக் கொண்டு பாத்ரூமுக்கு எடுத்து செல்லவும் அல்லது அருகிலுள்ள பாத் டப்பில் குளிக்க எடுக்கவும்
இந்த பாட்டிக்களை கொண்டு ஊரில் பாரம்பரியம் என்று செய்யப்படும் முறையும் குழந்தை வீரிட்டு அழும் பார்க்கவே அது கொடுமையாக இருக்கும்..
அந்த வெத்திலைப் போட்ட வாயால் குழந்தையின் காதில் ஊதுவார்கள் சுத்தமாகுதாம்??!
காலைப் பிடித்துக் கொண்டு தலைகீழாக குழந்தையை குலுக்குவார்கள்..நல்ல வளருமாம்??
இன்றைய இளம் தாய்மார்கள் கூட அப்படியெல்லாம் மசாஜ் செய்வதைக் கண்டு ஆஹா என் புள்ளை எப்படி வளரும் பாருங்க என்று பெருமையாக நின்று ரசிப்பதைக் கண்டுள்ளேன்.(அறியாமை)..அதனால் தயவு செய்து கூடுமானவரை குழந்தையின் எல்லா காரியங்களையும் அம்மாக்களே கற்றுக் கொண்டு செய்ய பழகுங்கள்..