topic_image


இங்கு ஒரு ரெஸ்ரோரன்டில் கல் தோசை & மூன்று வகையான சட்னி (சிவப்பு, பச்சை & மிளகு சேர்த்த ஒன்று) சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. கல் தோசைக்கு என்று ஸ்பெஷலான குறிப்பு ஏதும் இருக்கா? அல்லது சாதாரணமான தோசை மாவில் செய்யலாமா? மற்றது, மிளகு போட்டு செய்த அந்த சட்னி மிகவும் நன்றாக இருந்தது. அது எப்பிடி செய்வது என்று தெரியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...நன்றி.
-நர்மதா :)
பி.கு: அறுசுவையில் தேடினேன் கல்தோசை மற்றும் மிளகு சட்னி குறிப்பு கிடைக்கவில்லை. :(


நர்மதா
மே 11, 2008 - 12:10pm - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் நிலா பெண்ணே!
எனக்கு தெரிஞ்சு கல் தோசைக்குன்னு ஸ்பெஷல் ந்னு சொல்லுறது நான் ஸ்டிக் யூஸ் பண்ணாமல் இரும்பு சட்டியில் சுடனும்..அடுத்து நல்லெண்ணை தடவனும் தனி டேஸ்ட் கொடுக்கும்..மாவு மொது,மொதுன்னு இருக்கனும்..இப்ப்டி வார்த்து சுட்டு பாருங்க...பெரிதா சுற்றாமல் நடுத்தனமா ஊற்றனும்...
ரெஸ்டாண்டை விட சூப்பரா வீட்டு டேஸ்ட் கொடுக்கும்..டிரை பண்ணிட்டு பதில் தாங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

கல் தோசை
மே 11, 2008 - 5:50pm - வழங்கியவர் vinnie

ஆமா நர்மதா, மர்ழியா சொல்றதுதான் சரின்னு நான் நினைக்கிறேன்.வெந்தயம் சேர்த்து அரைக்க வேண்டும் என்று செல்விக்கா எங்கோ சொல்லி இருந்தாங்க. ஊரில் கிடைக்கும் தோசைக்கல்லுதான் இதற்கு உபயோகிக்க வேண்டும். உங்க கிட்ட அந்த மாதிரி கல்லு இருக்கா. இல்ல இங்க வாங்கனும் என்றால் cast iron pan/griddle தான் சரி வரும் என நினைக்கிறேன்.

அப்புறம் எது கூட மிளகு சேர்த்து அரைத்து இருந்தார்கள் என்று சொன்னால் என்ன சட்னி என்று நான் சொல்ல மாட்டேன்,வேறு யாராவது சொல்வாங்க:-)

தோசை
மே 12, 2008 - 7:17pm - வழங்கியவர் Nila2006

ஹலோ மர்ழியா & வானதி,

பதிலுக்கு மிகவும் நன்றி. நான் வெந்தயம் சேர்த்துதான் மா அரைத்து செய்தேன் வானதி. மர்ழியா சொன்னது போல மொது மொது என்றுதான் அரைத்தேன் (தண்ணியாக்காமல்). ஸ்டீல் பானில்தான் நான் தோசை சுடுவது. ஆனாலும் கடையில் வாங்கியது போல அந்த சுவை வரவில்லை. கடைசியாக தளிகாவின் குறிப்பில் உள்ளதுபோல வெங்காய தோசையாக சுட்டு சாப்பிட்டோம். அது நன்றாக இருந்தது. :)

எனது அம்மா உளுந்து:அரிசி = 1:2 or 1:3 என்ற அளவுதான் போடுவா. வழக்கமக நானும் அப்படித்தான் போடுவன். இம்முறைதான் உளுந்து:புழுங்கலரிசி:பச்சரிசி = 1:2:2 என்று போட்டேன். இந்த அளவு சரியா அல்லது வேறு அளவு போட வேணுமா?

மிளகை எதனுடன் சேர்த்து அரைத்தார்கள் என்று தெரியவில்லை. என்னால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை (may be their secret ing.) வானதி :)
-நர்மதா:)

தோசை வேணுமா தோசை... :-))
மே 13, 2008 - 1:12am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் வின்னி நீங்க சொல்லுறாப்ல வெந்தயம் கண்டிபா சேர்கனும்..அவங்க வார்க்குறதை பற்றி கேட்டாங்கன்னு சொன்னேன்..ஊற போடுறதை சொல்லல.
நிலா பெண்ணே! வார்ப்பதில் இன்னுரு முக்கியம் மாவு ரொம்ப கட்டியாகவோ,தண்ணியாகவோ இருக்காமல் தொசை மாவின் பதத்தில் மாவை கரைத்துக்கனும்...நான் சொன்னது கனமாக இருக்கும் அந்த இரும்பு சட்டி அதையா யூஸ் பண்றீங்க?அதுதான் இதுக்கு ரொம்ப முக்கியம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

தோசைக்கல்
மே 13, 2008 - 2:31am - வழங்கியவர் T S JAYANTHI

நான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து நல்ல கெட்டியான இரும்பு தோசைக்கல் வாங்கி வந்து யூஸ் பண்ணறேன். நல்ல கனமான பெரிய தோசைக்கல். தோசை மாவிலும் இருக்கிறது சூட்சுமம். 4 பங்கு பச்சரிசிக்கு 1 பங்கு உளுத்தம்பருப்பு, 1 டீஸ்பூன் வெந்தயம், 1/2 கப் அவல் - இந்த காம்பினேஷன் நல்லா வரும்.
தளிகா சொன்னது போல் நான் ஸ்டிக் என்றால் சிம்மில் வைத்துத் தான் தோசை வார்க்க வேண்டும்.
இரும்புக் கல்லில் தோசை விண்டு போனால் ஒரு பெரிய வெங்காயத்தைக் குறுக்கே நறுக்கி ஒவ்வொரு தோசை வார்க்கும் முன்னும் கல்லில் வைத்த்துத் தேய்த்தால் பட்டுப் பட்டாக தோசை வரும்.
நான் ஸ்டிக் தோசைக்க்கல் வைத்திருக்கிறேன். ஆனால் எங்கள் வீட்டில் சாதா இரும்புக்கல்லுக்குத்தான் எல்லார் ஓட்டும்.

மிளகு எதில் சேர்த்தார்கள். இந்தப் பதிவில் இருந்து எனக்கு புரிந்து கொள்ளமுடியவில்லை. மறுபடியும் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்த வரை பதில் சொல்கிறேன்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஓஹ் ஜெயந்தி மாமி...
மே 13, 2008 - 3:04am - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் ஜெயந்தி மாமி... 4 பங்கு பச்சரிசிக்கு 1 பங்கு உளுத்தம்பருப்பு, 1 டீஸ்பூன் வெந்தயம், 1/2 கப் அவல் இது எனக்கு புதுசா இருக்கு இட்லிக்கும் இப்படி போடலாமா>?அல்லது தோசைக்கு மட்டுதானா?

நான் இட்லி,தோசைக்கு புழுங்க அரிசிதான் போடுவேன்...இதுகூட நல்லா வரும்..உங்கள் பதில் கிடைத்ததும் அடுத்த முறை டிரை பண்ணனும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

கிரிக்கெட் பால்
மே 13, 2008 - 3:58am - வழங்கியவர் T S JAYANTHI

மர்ழியா கண்ணு, பச்சரிசி 4 பங்குக்கு 1 பங்கு உளுந்து போட்டு இட்லி செய்தா கிரிக்கெட் பால் தான். பச்சரிசி இட்லிக்கு சரிக்கு சரி, அதாவது 4 பங்கு பச்சரிசிக்கு 4 பங்கு உளுந்து போடணும். பச்சரிசி இட்லி பண்டிகை நாளில் செய்வோம் நாங்க. மத்தபடி புழுங்கல் அரிசி இட்லி தான். தோசைக்குத்தான் பச்சரிசி. தோசைக்கு ஒரு கை துவரம் பருப்பையும் ஊறவைத்து அரைத்தால் ஹோட்டல் தோசை போல் வரும். தோசைக்கு அரிசியை தனியாகவும், மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகவும் ஊறவைத்து, அரிசியைக் களைந்தும், மற்றவற்றை ஊற வைத்த தண்ணீருடனும் சேர்த்து அரைத்து தோசை வார்க்கவும்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

Milagu chutney
மே 13, 2008 - 9:26am - வழங்கியவர் KavithaKannan

In which city and which restaurant did u have? Tell me the name of the restaurant please.

Tilda
மே 13, 2008 - 10:25am - வழங்கியவர் thalika

விஜி என்னால் பிரியாணி அரிசி பதிவில் நுழைய முடியல...Tilda iz the bestஅதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனக்கு நல்ல பூ போல வெள்ளையா வரும்/.பிறகு முறை சொல்கிறேன்

ஜெயந்தி மாமி
மே 13, 2008 - 1:32pm - வழங்கியவர் MarliyaNoohu

ஹி ஹி அப்படியா!விபரமா சொன்னதுக்கு தேங்ஸ் மாமி ஆமா அது என்ன பண்டிகை நாள் மட்டும் பச்சரிசி?அது புளுங்களை விட டேஸ்டா வருமா?விருந்தாளிகள் வாரப்ப பண்ணத்தான் கேட்கிறேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

தோசை
மே 13, 2008 - 2:43pm - வழங்கியவர் Nila2006

மர்ழியா, அடி கனமான (copper base) ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பானில்தான் சுட்டேன். என்னிடம் இரும்புச்சட்டி இல்லை. அடுத்த முறை நீங்க சொன்ன மாதிரி முயற்சிக்கிறேன்.

ஜெயந்தி மாமி, கல் தோசைக்கு தந்த அந்த சட்னியில் மிளகு நிறையவே இருந்தது. கரகரப்பாக சுவையாக இருந்தது. வெள்ளைகலர் சட்னிதான். வேறு என்ன சாமான்கள் சேர்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. (பொட்டுக்கடலை(?) சேர்த்திருப்பார்களோ தெரியாது ) அதுதான் கேட்டன். மிளகு சேர்த்து செய்யும் சட்னி வகை நிறைய இருக்கா?

கவிதா கண்ணன், நான் ஸ்பைஸ் ரூட் என்ற ரெஸ்ரோரன்டில் (சியாட்டிலில்) சாப்பிட்டேன்.
-நர்மதா :)

மிளகுச் சட்னி
மே 13, 2008 - 11:46pm - வழங்கியவர் DEVA

ஹாய் நர்மதா, அப்படி இருக்கீங்க? உங்க குட்டிப் பாப்பா எப்படி இருக்கு? உடம்பை நல்லபடியா கவனிச்சுக்குங்க. நீங்கள் சொல்லும் சட்னி இதுதானா என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் வீட்டில் செய்வோம். தேங்காய், பொட்டுக்கடலை, மிளகு( பச்சை மிளகாய்க்கு பதில் மிளகு வைத்து அரைக்கும் தேங்காய் சட்னி இது.), உப்பு. இதை பல விதமாக செய்யலாம். பொட்டுக்கடலைக்குப் பதில் 1/4 ஸ்பூன் எண்ணெயில் 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து அரைப்பதுண்டு. இதனோடு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி சேர்க்கலாம். தாளிக்காமல்தான் இந்த சட்னி செய்வார்கள். தாளித்தாலும் நன்றாக இருக்கும். இதுதானா என்று சொல்லுங்கள்.

ஜெயந்தி மேடம் சொன்ன தோசை மாவு ஆப்ப மாவைப் போல நல்லா சாப்ட்டாக வரும். ஹோட்டலில் அரைக்கும் தோசை மாவில் கடலைப்பருப்பு சேர்த்து அரைப்பார்கள். அதுவே சுவையில் வித்தியாசம் கொடுக்கும். என் சித்தி வீட்டில் பாதி புழுங்கலரிசி, பச்சரிசி போட்டு 1:4 ratio வில் உளுந்து, வெந்தயம் ஒரு பிடி போட்டு கெட்டியாக இல்லாமல் அரைத்து தோசை செய்வார்கள். நன்றாக இருக்கும். ட்ரை செய்து பாருங்கள். இதெல்லாம் நேரம் கிடத்தால், சோம்பேறித்தனம் இல்லாட்டி செய்து பார்ப்பதுண்டு. மற்றபடி என் வீட்டில் 1:4 புழுங்கலரிசி, உளுந்து மட்டும் போட்டு அரைத்து அதுவே இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று உருவம் மாறும். நல்ல புழுங்கலரிசி பல நாடுகளில் கிடைப்பதில்லை. நாம் முன்பு வசித்த நாடுகளில் கிடைக்கும் புழுங்கலசியை மட்டும் உபயோகித்தால் இட்லி பிசின் போல வரும். அதனால் அப்போது பாதி புழுங்கலரிசி, பச்சரிசி உபயோகித்தேன். இட்லி சாப்ட்டாக வரும். ஆனால் சுவை சுமார் ரகம்தான். அந்த மாவில் செய்யும் தோசை டேஸ்ட் மிகவும் நன்றாக இருக்கும்.

நிலா
மே 15, 2008 - 9:51am - வழங்கியவர் MarliyaNoohu

ஊர் போனால் முதலில் அந்த சட்டியை வாங்குங்க அப்புறம் அதுக்கு பெஸ்ட் ஆயில் இதயத்திற்க்கு இதமான இதயம் நல்லெண்ணை தான்..அதை போட்டாலே ஒட்டாது..அதை ந்ன்கு பழக்க படுத்திக்கனும் அப்பதான் சுடும் போது பழம் போல வரும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியாநூஹு
மே 15, 2008 - 10:03am - வழங்கியவர் இலா

உங்களுக்கெல்லாம்.. அந்த நிலாதான் நர்மதா என்று தெரியாதா??!!!! பரவாயில்லை... உடல் நலமில்லாமல் இருந்தது என்று சொன்னீர்களே.. இப்போ பரவாயில்லயா... தளிகா வேறு சுகமில்லை என்றார்கள்... என்ன ஆச்சு???

Hope is just the part of the equation

jayanthi மேம்
மே 15, 2008 - 10:15am - வழங்கியவர் Vijitvm

எனக்கு ஒரு சந்தேகம். எதுக்காக துவரம் பருப்ப்பு சேர்க்கறிங்க. அதன் பயன் சொல்லுங்க. அவல் சேர்க்கலாமா? இடலிக்கும் அவல் சேர்க்கலாமா? சிலர் கேசரி கலர் சேர்க்கிறார்கள். அது எதுக்கு?

மர்ழியா
மே 15, 2008 - 10:17am - வழங்கியவர் Vijitvm

அப்புறம் நிங்க புளித்த மாவை என்ன செய்திங்க. சொல்லுங்கக அப்ப தான் நாங்களும் செய்யலாம்.

இலா,விஜி
மே 16, 2008 - 8:35am - வழங்கியவர் MarliyaNoohu

அய்யோ விஜி அதை கேட்காதீங்க என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியல உடம்பு வேற சரி இல்லயா கோபத்தில் என்னலாமோ பண்ணினேன்... ஹா ஹா நியாபகம் வந்தா சொல்லுறேன் கண்டிப்பா ஓகேவா...

ஹி ஹி இலா அவங்க பெயர் நர்மதாவா இனி சொல்லிடறேன் நர்மதா,நர்மதா ஒக்கேவா... :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அய்யோ இரு
மே 16, 2008 - 8:36am - வழங்கியவர் MarliyaNoohu

அய்யோ இரு முறை பதிவாகிட்டு..

ஆசை தோசை
மே 19, 2008 - 2:24am - வழங்கியவர் T S JAYANTHI

1. துவரம் பருப்பு சேர்த்தால் தோசை மொறு மொறுவென்று வரும்.
2. அவல் இட்லி, தோசை இரண்டுக்கும் சேர்க்கலாம். அவல் சேர்ப்பதால் மெத்து மெத்து இட்லி, தோசை கியாரண்டி.
3. மாவு புளித்தால் மாவில் நிறைய தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து தெளிந்ததும் மேலே தெளிந்திருக்கும் நீரை கீழே ஊற்றி விட்டு மாவை ஊத்தப்பமாக சுட்டு எடுக்கலாம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

டியர் தேவா
மே 19, 2008 - 5:33pm - வழங்கியவர் Nila2006

டியர் தேவா,
நான் நலம். நீங்க எப்படி இருக்கிறீங்க. குட்டிப் பாப்பா நல்லா உதைக்க தொடங்கீட்டா :)
நீங்க சொன்ன மாதிரி சட்னி செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். போன கிழமையே பதில் போட நினைத்தென். உள்நுழைய முடியவில்லை. தாமதமான பதிலுக்கும் மன்னிக்கவும். நன்றி
-நர்மதா :)

Milagu Chutney- Deva
மே 19, 2008 - 9:30pm - வழங்கியவர் Dsen

Dear Deva, I tried this milagu chutney today & it was quite a good change from the normal coconut chutney... we liked it a lot...esp with egg dosai... Thanks a lot for the recipe...:)