topic_image


நர்சரி செல்லும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவு கொடுத்துடுவது?அவர்களே எடுத்து சாப்பிடும்படியாகவும் கையில் அதிகம் ஒட்டாமலும் இருக்க வேண்டும்.அனுபவசாலிகள் வந்து பதில் கொடுங்கப்பா........


னோ அனுபவம்
மே 12, 2008 - 2:54am - வழங்கியவர் thalika

னோ அனுபவம் சோ ஃபார்

ஆனால் மனோஹரி அவர்களின் பேன் கேக் கொடுத்தனுப்பலாம்

சப்பாத்தியை நல்ல மெல்லியதாக பரத்தி அதனுள் காய்கறி வதக்கியதோ,அல்லது நான் வெஜ்ஜோ வதக்கி மசாலா போல் செய்து உள்ளெ வைத்து சப்பத்தியை மூடி வெண்ணை தடவி சுட்டு கொடுக்கலாம்.ச்மெல் வராது

கோதுமை மாவை கரைத்து தோசை போல் சுட்டு அதன் மேல் நெய் ,சர்க்கரை தூவி மூடி அதை கொடுத்தனுப்பலாம்

ப்ரெடின் நடுவில் பேரீச்சம்பழத்தை வேக வைத்து இருபுறமும் சுட்டு கொடுத்தனுப்பலாம்

கொழுக்கட்டை போல் டிசைன் டிசைனாக செய்து கொடுத்தனுப்பலாம்

ப்ரெட் புட்டிங் செய்து கொடுத்தனுப்பலாம்

இட்லியில் பாலக் கூஸ்,கேரட் ஜூஸ்,பீட்ரூட் ஜூஸ் சேர்த்து மூன்று கலரில் இட்லி ஊற்றி அதற்கு தொட்டுக் கொள்ள தேன் அல்லது ஜாம் கொடுக்கலாம்

chinagrass கொதிக்க வைத்து ஜெல்லி போல் ஆக்கி அதனுடன் பழத்துன்டுகளை சேர்த்து செட் ஆக்கிய பின் கொடுத்தனுப்பலாம்

ரவையால் கேசரி செய்வோமே அது போல் பால் சேர்த்து ஆனால் அந்தளவுக்கு நெய்யும் ,இனிப்பும் அதிகம் சேர்க்காமல் வெட்டி வெட்டி கொடுத்தனுப்பலாம்

சப்பாத்தியிலேயே உள்ளே விதவிதமாக ஸ்டஃபிங் வைத்து கொடுத்தனுப்பலாம்

பாஸ்மதி அரிசியை குக்கரில் இட்டு 1/2 கப்ப்புக்கு 1 கப் தண்ணீர் சேர்த்து வெந்ததும் அதில் வெல்லம் ,தேங்காய் துருவல் கலந்து கொடுத்தனுப்பலாம்.

nursery lunch
மே 12, 2008 - 4:19am - வழங்கியவர் Dsen

You can also try calzone using whole wheat flour & veg or non-veg stuffing... or try the traditional italian style calzone with greens,vegs, cheese etc...

எல்லொரும் வாங்க இங்கே....
மே 12, 2008 - 5:12am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் ரேனுகா ரொம்ப அருமையான திரட்பா இது என் பொண்ணை அடுத்த மாதம் ஸ்கூலில் சேர்கலாம்னு இருக்கேன்..எனக்கு இது இப்ப் ரொம்ப யூஸ் பில்லா இருக்கும்...இதுல் உங்களுக்கு தெரிஞ்ச பதிவை போடுங்கப்பா அதிரா,ஜலீலாக்கா,விஜி இப்படி எல்லொரும் வாங்க இங்கே....அப்பப்ப மண்டையை போட்டு உடத்துக்க தேவை இல்லை இதை பார்த்தே மெனு எடுத்துப்பேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

குழந்தைகள் லன்ச்
மே 12, 2008 - 6:12pm - வழங்கியவர் vinnie

சீஸ் சேண்ட்விச் - இரண்டு ப்ரெட்டிற்கு நடுவில் பிடித்த சீஸை வைத்து டோஸ்ட் செய்து குடுக்கலாம்

ஒரு வட்டமான சப்பாத்தியின் நடுவில் ஏதேனும் காய்களையோ அல்லது ஸ்க்ராம்பிள் செய்த முட்டையும், துறுவிய சீஸ் சேர்க்க. அந்த கலவையை சப்பாத்தியின் நடுவில் வைத்து அரை வட்டமாக மூடி தோசைக்கல்லில் சிறிது நேரம் வாட்டி(சீஸ் உருகும்வரை) எடுக்கவும்.பிறகு அதை இரண்டாக கட் செய்து குடுக்கவும்.

பீனட் பட்டர் அன்ட் ஜெல்லி சாண்ட்விச் செய்து அப்படியோ அல்லது ஏதேனும் குக்கி கட்டர் இருந்தால் அந்த வடிவத்தில் கட் செய்தோ குடுக்கலாம்.

தொடரும்..

குழந்தைகள் லன்ச்
மே 12, 2008 - 7:28pm - வழங்கியவர் VidhyaSaravanan

பூரி தேய்த்து ஒரு டப்பா மூடி வைத்து சின்ன சின்ன வட்டமாக வெட்டி பொரிக்கலாம். அதில் தளிகா இட்லிக்கு சொன்னா ஐடியாவைப் பின் பற்றி கேரட்/பீட் ரூட் ஜூஸ் சேர்த்து மாவு பிசைந்து கலர் புல்லாக பண்ணலாம்.

கொண்ட கடலை/ ராஜ்மா/ சோயா சிறிது உப்பிட்டு வேக வைத்து, அதனுடன் நல்ல மெலிதாக நீளமாக கேரட், குடை மிளகாய் மற்றும் மற்ற காய்கறி கலந்து தரலாம். குழந்தைக்குப் பிடித்தால் சிறிது மயனைஸ் கலக்கலாம். மற்ற காய்கறிகளை கலக்கும் போது காய்களை ஆவியில் வேக வைக்க வேண்டும். உதாரணமாக பீன்ஸ். இன்னும் இதனுடன் அவித்த நூடுல்ஸையும் கலக்கலாம். இன்னும் picky eaterக்கு இதனுடன் சிப்ஸ் பொடித்து தனியாக வைத்து சாப்பிடும் போது கலக்க சொல்லவும் (சிப்ஸ் மட்டும் சாபிட்டுவிட்டு வந்தால் என் மகன் போல் நான் பொருப்பல்ல).

பழங்களை நறுக்கி அதன் மேல், whipped cream/ fresh cream சேர்த்து தரலாம்.

அவித்த முட்டை, ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers குறிப்புக்கு
http://www.arusuvai.com/tamil/
node/5638 அல்லது http://www.arusuvai.com/tamil/
fish_fingers பார்க்கவும்.), கோழிக்கறி நக்கெட்ஸ் (Chicken nuggets குறிப்பிற்கு http://www.arusuvai.com/tamil/
node/1322 பார்க்கவும்.), USசில் இது frozen கிடைக்கிறது. நல்ல தரமானதாக வாங்கி பொரித்து தரலாம்.

மலர வடித்த சாதம், ஒரமாக பாசி பருப்பு சேர்த்து செய்த பொரியல் (கேரட்/ பீன்ஸ்/ ப்ராக்கிலி) வைத்து தரலாம் - அதாவது சேர்த்துப் பிசையாமல் தனியாக வைத்து. சிறிய குழந்தைகளுக்கு வெறும் சாதம்/வெள்ளை சாதம் பிடிக்கும். என்னை நம்புங்கள். சிறிது வயறு இடங்கேடு ஆனால் இவ்வாறு தரலாம். சாதத்தில் சிறிது நெய்யும் கலக்கலாம்.

Crackers - சீஸ் அதனுடன் deli meat வைக்கலாம்.

வறுத்த முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, பேரீச்சை அதனுடம் சிறிது gems மாதிரி மிட்டாய் - அல்லது fruit loops/ ceerios மாதிரி காலை cereal கலந்து தரலாம்.

பனீர் விரும்பும் குழந்தைகளுக்கு சதுரமாக அரிந்த பனீர், காய்கறிகளை ஒரு tooth pick சொருகி டிக்கா மாதிரி செய்து தரலாம். இதேமுறையில் பழங்களையும் உதரணமாக ஒரு பச்சை திராட்சை, ஒரு பப்பாளி துண்டு , ஒரு கருப்பு திராட்சை, ஒரு ஆரஞ்சு என மாற்றி மாற்றி சொருகி தரலாம். ஆனால் குழந்தைகளுக்கு எப்படி சாப்பிடுவது என்று சொல்லி தரவும், வாயில் குத்திக் கொள்ளும் அபாயம் உண்டு.

நியாபகம் வரும் சமயம் இன்னும் சொல்கிறேன்.

தளிகா
மே 13, 2008 - 11:30pm - வழங்கியவர் Renuka

தளிகா சப்பாத்தியில் என்று இல்லை சாததிலேயே காய்கள் தென்பட்டால் என் பையன் அப்படியே திப்புவான்,காய் இல்லாமல் தர சொல்லுவான்.இதில் நான் எப்படி ஸ்டஃபிங் செய்து அனுப்புவது.இனிப்பும் அதிகம் விரும்பமாட்டான்.டேட்ஸில் ஈரானியன் டேட்ஸை வேகவைத்தால் நன்றாக இருக்குமா?இந்த குழப்பங்களையேல்லாம் சற்று தீர்த்து வையுங்கள்

மர்ழியா
மே 13, 2008 - 11:34pm - வழங்கியவர் Renuka

மர்ழியா நீங்களும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க,பிரேன்ஞ் டோஸ்ட்,சப்பாத்தி,இட்லி இது தான் 3 நாளா கொண்டு போறான்.கூடவெ திராட்சை,பிஸ்கட்,மாதுளைன்னு எதாவது கொடுத்துடுவேன்.

வினி
மே 13, 2008 - 11:38pm - வழங்கியவர் Renuka

வினி காய்கள் நறுக்கு நறுக்குன்னு இருக்க கூடாது,அரைத்து ஜாம் போல் தடவி தந்தாலும் பிடிப்பதில்லை.பினட் பட்டர் அண்ட் ஜெல்லி சான்விட்ச் எங்கு உள்ளது அதன் லின்க் தர முடியுமா?

பூரி சென்னா சூப்பர்ன்னு
மே 13, 2008 - 11:41pm - வழங்கியவர் Jaleela Banu

ரேனுகா என்னுடைய தளத்தை பாருங்கள் அங்கு குழந்தைகலுக்கு என நிறைய கொடுத்துள்ளேன்.

பூரி சப்பாத்தி தான் எல்லகுழந்தைகளுக்கும் பிடிக்கும், அதை வித வித மா செய்து கொடுக்கலாம்.

கோதுமை அப்பம், பிரெட் சாண்ட் விச் அதுவும் பல வகை உண்டு (தக்காளி ஹல்வா, பீட்ரூட் ஹல்வா,கேரட் ஹல்வா) போன்றவை செய்து வைத்து இட்லி,தோசை, பிரெட்.பன்னில் தடவி கொடுக்கலாம் அந்த கலருக்கே சாப்பிடுவார்கள்.

இப்பவும் என் பசங்க டிபன் பாக்ஸில் இரண்டு முன்று பேர் சாப்பிடும் அளவுக்கு தான் வைப்பேன் எல்லாம் இன்னைக்கு என்னது இன்னைக்கு என்னது என்று ஆவலுடன் இருப்பார்கள்.

முந்தாநேற்று பூரி சென்னா , எல்லம் சாப்பிட்டு விட்டு ரொமப் சூப்பர்ன்னு சொன்னாங்களாம்.

பாருங்க ஒன்னு ஒன்னா டிரை பன்னுங்கள் பிடித்தால் செய்து கொடுங்கள்.

ஜலீலா

வித்யா
மே 13, 2008 - 11:46pm - வழங்கியவர் Renuka

வித்யா கொண்டைகடலை,ராஞ்மா,சோயா போன்றவற்றை என் பையன் திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறான்.வேர்கடலை வேகவைத்து கொடுத்தால் சாப்பிடுகிறான்.2 1/2 வயது குழுந்தைக்கு வேர்கடலை தரலாமா?காயே திங்காதவன் கடந்த மூன்று நாளாக பச்சைபட்டாணி மட்டும் சாப்பிடுகிறான்.பச்சை பட்டானியை அவன் தான் எங்கள் உறிப்பான்.கோகுல் உறிச்ச பட்டானி என்று சொல்லிக் கொடுத்தால் சாப்பிடுகிறான்.

ஜலிலா அக்கா
மே 13, 2008 - 11:51pm - வழங்கியவர் Renuka

ஜலிலா அக்கா நீங்கள் சொல்வது சரிதான்.இன்று சப்பாத்திதான் கொடுத்து அனுப்பினேன்.டிசைனாக கட் செய்து தான் கொடுத்தனுப்பினேன்.அக்கா உங்களுடைய தளம் என்றால் உங்கள் குறிப்புகளில் தானே சொல்றீங்க.

ஆமாம் ரேணுகா,
மே 13, 2008 - 11:59pm - வழங்கியவர் Jaleela Banu

ஆமாம் ரேணுகா, கூட்டாஞ்சோறில் என் குறிப்பில் உள்ளது வேண்டுமானால் கேளுங்கள் எடுத்து காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

ஜலீலா

ஹாய் ரேனுகா
மே 14, 2008 - 12:12am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் ரேனுகா அப்புறமா பதிவு போடுறேன்..இப்ப வேலை,,வீட்டை பார்க்க தலை சுற்றுது

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹாய் ரேணுகா
மே 14, 2008 - 12:18am - வழங்கியவர் VidhyaSaravanan

என் பையனுக்கு மூன்று வயது ஆகப் போகிறது. அவனும் காய்கறி சாப்பிடமாட்டான் சாப்பாத்தியில் வேக வைத்து உப்பு, மிளகு (கிடைத்தால் கர்லிc பவுடர்) சேர்த்து மசித்து சாப்பாத்தியின் உள் வைத்து தாங்க.

நான் சப்பாத்தி மாவு பிசையும் போது அவகாடோ, டோபு (மிக்ஸ்யிலில் கூல் ஆக்கி) போன்றவற்றை சேர்த்து பிசைவேன். சுவையில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இருக்காது, நாம் சொன்னால் தான் அவை மாவில் சேர்திருப்பது தெரியும். இப்படியும் காய்கறி சேர்க்கலாம்.

சோயா பச்சை பட்டாணி போல் தான் அதுவும் பச்சை தோலுடன் இருக்கும் (எடம்மமெ Edamame) என்று கடையில் இருக்கும், அதையும் கோகுலையே உறித்து தர சொல்லுங்கள். கீழே உள்ள லின்கில் பார்க்கவும்.
http://en.wikipedia.org/wiki/
Edamame

கடலை ஒத்துக் கொண்டால் தாங்க. ஆனால் மேல் தோல்/ஓடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அது குடலில் சொருகும் என்பார்கள்.

என் குழந்தை காய் சாப்பிடாததால் நான் எப்பொழுதும் பாசி பருப்பு சேர்த்து பொரியல் செய்து, அதை ரசம் ஊற்றி மசித்து (நல்ல பருப்பு கடைந்ததைப் போல்) சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து தருவேன். பருப்பு சாதம் போன்று தான் இருக்கும். நீங்களும் try பண்ணி பாருங்கள்.

கொண்டைகடலை சாப்பிடாவிட்டாலும் நீங்க அந்த குழம்பு செய்யும் போது எல்லாம் தாங்க. கஜினி முகமதை நினைத்துக்கோங்க, அவர்கள் புதிய உணவை ஏற்க சிறிது காலம் ஆகும்.

ஜலீலாக்கா
மே 14, 2008 - 12:33am - வழங்கியவர் VidhyaSaravanan

ஜலீலாக்கா குறிப்பில் உள்ள குழந்தைகளுக்கான் ரெசிபி எல்லாம் நல்ல இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

குட்டீஸ்க்கு ரெசிபி
மே 14, 2008 - 12:59am - வழங்கியவர் T S JAYANTHI

ரேணுகா நேற்று இரவு தக்காளி, உருளை பூரி செய்தேன். எங்கள் வீட்டு 'நாக்கு நீண்ட தேவதைகளுக்கு' ரொம்ப பிடித்திருந்தது. ரெசிபி கொடுத்திருக்கிறேன்.
குட்டி பூரி, குட்டி இட்லி, குட்டி சப்பாத்தி இவையெல்லாம் குட்டீஸ்க்கு ஏற்ற லஞ்ச். பொதுவாக குழந்தைகள் சாப்பிடும்போது கையில் ஒட்டாமல் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.
ரேணுகா காய் சாப்பிடாவிட்டால் வெந்த காயுடன் கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி, பூரி செய்து கொடுங்கள்.
அரிசி, சிறிது பயத்தம்பருப்பு சேர்த்து ரவையாக உடைத்து அத்துடன் காய்களை வேகவைத்து (குக்கரில் வைத்தால் காய்கள் உரு தெரியாமல் வெந்துவிடும்) உப்பு, நெய் சேர்த்து செமி சாலிடாக கொடுக்கலாம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

சாண்ட்விச்
மே 14, 2008 - 1:50pm - வழங்கியவர் vinnie

ஹாய் ரேணு பீனட் பட்டர் சாண்ட்விச் வேறு ஒன்றுமில்லை. இரண்டு ஸ்லைஸ் ப்ரெட் எடுத்து ஒரு பக்கம் பீனட் பட்டர்(எல்லா க்ரோஸரி கடைகளிலும் கிடைக்கும்) மற்றொரு பக்கம் பிடித்த ஜாமை தடவி கொள்ளுங்கள். பிறகு இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்து மூடி விட வேண்டும் அவ்வளவுதான்.பிறகு முக்கோண ஷேப்பில் கூட கட் பண்ணி குடுக்கலாம்.

சப்பாத்தியுனுள் துறுவிய சீஸை மட்டும் கூட வைத்து மூடி சீஸ் மெல்ட்டாகும் வரை தோசைக் கல்லில் வைத்து எடுக்கவும். பிறகு இதையும் முக்கோண ஷேப்பில் கட் பண்ணி குடுக்கலாம்.

ரேனு
மே 14, 2008 - 11:47pm - வழங்கியவர் thalika

ரேனு என் பொண்ணு போல உங்க குழந்தையும் எப்பாடு பட்டாலும் காய்கறி சாப்பிடாது போல.
நான் இப்பல்லாம் சாம்பாருக்கான எல்லாகாய்களையும் ஒன்றாய் வேக வைத்து அந்த தண்ணீரால் பருப்பை வேக வைத்து பருப்பு கலந்து கொடுப்பேன்..எல்லா சத்தும் தண்ணீரில் இருக்கும்.

ஹாய் தளிகா
மே 15, 2008 - 5:53am - வழங்கியவர் Renuka

நம்ம பிள்ளைங்க மட்டும் இல்ல நாட்டு முக்காவசி பிள்ளங்க அப்படி தான் இருக்காங்க.நான் முதல் சாப்பாட்டை ஊட்டி விடுவேன்.பிறகு ஒவ்வொரு காயாக வைத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொல்லி ஊட்ட் ஒரு மணி நேரம் வேனும்.சில சமயம் மிரட்டி சாப்பிட வைப்பேன்.நான் சாப்பிடரேன் பாரு நீயும் சாப்பிடு ஒன்னும் பன்னாது என்று சொல்லி கொடுக்கனும்.இது எதுவுமே இல்லாமல் சும்மா காய் கொடுத்தா அப்படியே திப்புவான்.

ஹாய் ரேணு
மே 15, 2008 - 7:25am - வழங்கியவர் Vijitvm

இதே கதை தான் என் வீட்டிலும் என்னோட சின்ன குட்டி 23 மாதம் ஆகிறது. எல்லா காயகறியும் துப்புவா. ஆதனால் நான் குழந்தைகளுக்காக தனியாவே பருப்புடன் காலிப்ரவர்,உருளை,கேரட்,பின்ஸ்,
முள்ளங்கி, ஒரோ நாள் ஒரோ வெஜ் போடு 3 விசில் வரை போட்டு நன்றாக வெந்து இருக்கும் அதை தான் சாததுடன் குடுக்கறேன். வெஜ் கண்னில் தெரியாத மாதிரி இருந்தால் தான் சாப்பிடுகிறது. மற்றபடி பழவகைகள் எல்லாம் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அதில் பால் கொஞ்சம் வெனிலா ஐஸ்க்ரிம் போட்டு குடுப்பேன். கொஞ்சம் உள்ளே போகும். கொஞ்சம் தரைக்கு ட்ரஸ்க்கு எல்லாம் போய் மிச்சம் 3 ஸ்பூன் உள்ளே போகும்.

நர்சரி லன்ச் என்றால் ப்ரட் சாண்ட்விச்,சப்பாத்தி ரோல்,ப்ரைட் இட்லி, சின்ன விரல் துண்டுகளாக கட் செய்த்டு எண்னெயில் ப்ரை செய்து குடுங்க கண்டிப்பா சாப்பிடும். அதே மாதிரி காரட்,உருளை,சீஸ் ஸ்டிக்ஸ், நான் வெஜ் என்றால் சிக்கன் ப்ரை, பிஷ் ஸ்டிக்ஸ், இந்த மாத்ரி குடுக்கலாம்.

குட்டி இட்லி, குட்டி தோசை, குட்டி பூரி
மே 15, 2008 - 8:05am - வழங்கியவர் Jaleela Banu

பொதுவா குழந்தைகளுக்கு யாருக்குமே வெஜ் பிடிக்காது.

அது போட்டது தெரியாமல் இருக்கனும் எல்லாம் துருவி சேர்த்துவிடுங்கள். என்ன போட்டுள்ளோம் என்பது தெரிய கூடாது.

குட்டி இட்லி, குட்டி தோசை, குட்டி பூரி எதுவுமே பார்க்க அழகா இருக்கனும்.

கீரையெல்லாம் வடை செய்து கூட அதில் நல்ல பைனாக சாப் பன்னி போடலாம்.

சுண்டல், வேர்கடை வேகவைத்து. விஜி இன்று நான் கொடுத்துள்ள பச்சை வெஜ் குருமா செய்ய்ங்கள் கண்டிபா உங்க மகளுக்கு பிடுக்கும்.

ஏ,பி,சி,டி சோசையும்
மே 15, 2008 - 10:03am - வழங்கியவர் MarliyaNoohu

ஹா ஹா ஜலிலாக்கா நானும் அப்படித்தான் கொடுப்பேன் அன் அக்கா,அண்ணன் பொண்ணுங்கலுக்கெல்லாம்..அதோட ஏ,பி,சி,டி சோசையும் போடுவ்வென்..ரொம்ப ஜாலியா சாப்டுவாங்க வீட்டுக்கு வந்தாலே கேட்பாங்க...ஆனா இதோ இருக்காலே எதுக்கும் மசிமாடிக்குறா...

அன்புடன்,
மர்ழியாநூஹு