topic_image


நான் குழந்தை எதிர்பார்து கொண்டிருக்கேன். எனக்கு regular periods . periods ன் போது எனக்கு அதிகமாக வயிற்று வலி இருக்காது .இந்த மாதம் வயிரு வலிக்கிறது.இதற்கு என்ன காரணம் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.


help plzzzz
மே 16, 2008 - 10:22am - வழங்கியவர் Sunantha

Hi all

I have already planned to go to India not knowing that I'll get pregnant.Just a few days remaining for my journey to start.Is it ok to travel when I am confirmed??

Thank you in advance

ஹாய் சுனந்தா
மே 16, 2008 - 11:54am - வழங்கியவர் VidhyaSaravanan

முதல் மூன்று மாதங்களுக்கு பயணங்களை தவிர்ப்பது மிகவும் நன்று. என் மருத்துவர் என்னை ஒரு ஆறு மணி நேர ரயில் பயணத்தையே தவிர்க்க சொன்னார். அவசியம் பயணம் செய்ய வேண்டும் என்றால் தங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். என் தோழி தான் உண்டாகி இருக்கும் விசயம் தெரியாமலே பழனி மலை ஏறி இரங்கி உள்ளார், அத்துடன் USசும் வந்தார், அவருக்கு அறுபது நாள் கடந்து தான் தான் உண்டாகி இருப்பதே தெரியும். இது தங்கள் உடல் கூறை போருத்தது, மருத்துவரிடம் அலோசியுங்கள்.

Hi Vidhya
மே 16, 2008 - 9:39pm - வழங்கியவர் Sunantha

Thanks so much for ur reply.Here no one seems to mind to answer particularly to new members queries.Bcoz i see almost every member continuing their topics.SO sad.I came here to get some suggestions.

ஹாய் சுனந்தா
மே 17, 2008 - 12:26am - வழங்கியவர் VidhyaSaravanan

இங்கு கூப்பிட்ட குரலூக்கு ஒடோடி வர நிறையப் பேர்கள் இருக்கீறார்கள். சற்றுப் பொறுங்க மற்ற தோழிகளும் வருவாங்க. தவறாக நினைக்காதீங்க.

ஐயையோ!சுனந்தா
மே 17, 2008 - 1:20am - வழங்கியவர் kr

ஐயையோ!சுனந்தா,
இப்படி சிறு பிள்ளை போல் கோபம் கொள்ளவேண்டாம்.
நீங்கள் வெள்ளிகிழமை பதிவு போட்டிருப்பதினால் தான் பதில் கிடைக்க தாமதம்.நமது தோழிகளில் பலர், வெள்ளிகிழமை விடுமுறை இருக்கும் நாடுகளில் வசிக்கின்றனர்.
தளிகா,மாலதிக்கா,ஜலீலாக்கா,மர்ழ
ியா,தேவா,அதிரா,விஜி இன்னும் எத்தனையோ சகோதிரிகள் உங்களுக்கு ஆலேசனை சொல்வார்கள்.சரியா,இப்போ எங்கே சிரிங்க பாக்கலாம்.
ம்ம்ம்ம்............. வெரி குட்..

வாங்கப்ப எல்லோரும்..........
மே 17, 2008 - 1:27am - வழங்கியவர் kr

எங்கப்பா எல்லோரும் ஒட்டு மொத்த்மா கானோம்.எல்லோரும் வந்து சுனந்தா என்ற புது தோழிக்கு பதில் சொல்லுங்கப்பா.ரொம்ப கோபமா இருக்காங்க.
ஜலீலாக்கா இப்போ தான் ஆன்லைன்ல பார்த்தேன்,எங்கே அதுக்குள்ள டிஸப்பியர் ஆயிட்டீங்க
சுனந்தாக்கு பதில் போடுங்கக்கா

சுனந்தா கொஞ்சம் பொறுங்கள்.
மே 17, 2008 - 2:12am - வழங்கியவர் Jaleela Banu

சுனந்தா இது உங்களுக்கு முதல் குழந்தையா, கூடுமான வரை பயணத்தை தவிக்கவும், தோழி வித்யா சொன்ன மாதிரி .
சிலருக்கு கர்ப்ப பை லேசாக வீக்காக இருக்கும், குழந்தை என்பது நமக்கு முக்கியம், அதை கண்ணை இமை காப்பது போல் காக்கனும்.
இங்கு நிறைய தோழிகள், தளிக்கா, மர்லியா மற்றும் மாலதி யக்கவ் எல்லோரும் உங்கலுக்கு பதில் அளிப்பார்கள்.
நானும் இப்ப கொஞ்சம் பிஸி பிறகு வரேன்.

எல்லோருக்கும் லீவு ஆகையால் கொஞ்சம் பொறுங்கள்.

ஜலீலா

ஹாய் சுனந்தா...
மே 17, 2008 - 2:30am - வழங்கியவர் அதிரா

ஹாய் சுனந்தா, எனக்கு இன்று நேரமே இல்லை விருந்தினர் வருகிறார்கள், இருப்பினும் இதைப் பார்த்ததும் பதில் போடாமல் இருக்க முடியவில்லை. வித்தியா ஏற்கனவே பதில் தந்துவிட்டார். அதை விட வேறு என்ன இருக்கிறது சொல்ல?.

3 மாதம் வரை பிரயாணங்களை முக்கியமாக பிளேனில் தவிர்ப்பது நல்லது. 3 மாதத்தின் பின் டொக்ரேசின் அனுமதி லெற்றருடன் தான் பிரயாணம் செய்ய வேண்டும். இல்லையெனில் பிளேனில் அனுமதி தரமாட்டார்கள்... ஏனெனில் தப்பித்தவறி பிளேனுக்குள் ஏதாவது நடந்தால் அவர்களுக்குத்தானே பொறுப்பு. முதல் 3 மாதகாலம்தானே குழந்தையின் வளர்ச்சியின் முக்கிய பகுதி, அந்த நேரம் பிளேனில் பிரயாணம் செய்கிறபோது, பிளேனிலுள்ள ரேடியேசன் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கலாம். குறைபாடுகள் கூட சிலநேரம் ஏற்படலாம்... இதனால்தான் 3 மாதம்வரை தவிர்க்க வேண்டும். நான் உங்களை வெருட்டவில்லை. டொக்ரேர்ஸ் இப்படித்தான் சொல்வார்கள்.

தெரியாமல் தவறுகள் நடக்கலாம்... தெரிந்துகொண்டு செய்கிறபோது மனப்பயமே பாதிப் பிரச்சனைக்கு காரணமாகிவிடும். இனி உங்களைப் பொறுத்தது, அதிலும் நீங்கள் இருப்பது அமெரிக்கா, குறைந்தது 2 பிளேனாவது எடுக்க வேண்டும். நிறைய நடக்கவேண்டிவரும் , எல்லாவற்றையும் யோசியுங்கள். முடிந்தால் ரிக்கட்டை மாற்றுங்கள். டொக்ரேசைக் கேட்டால் போகவேண்டாம் என்றுதான் சொல்வார்கள். நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். என்னைப் பொறுத்து பிரயாணம் நல்லதல்ல.

இனிப் போவதோடு மட்டும் முடியாதே திரும்ப வரப்போகிறீர்கள்தானே? அது எப்போ உடனேயா? மொத்தத்தில் தவிர்ப்பதுதான் நல்லது. குழந்தைதான் முக்கியம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் சுகந்தா
மே 17, 2008 - 5:07am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் சுகந்தா தாயாக போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...

அடுத்து நாங்க யாரும் உங்க பதிவை பார்கவில்லை..பார்த்து இருந்தால் கண்டிப்பாக பதில் போட்டு இருப்போம்...

நீங்க கண்ஸீவா இருப்பதால் முதல் 3 மாதத்திற்க்கு கண்டிப்பாக பயணம் கூடாது..கொஞ்சம் தாமதமாக போனால் உங்களுக்கும்,உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது...மைண்டை,உடம்பை ரொம்ப பிரீயா வைத்துக்கனும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹாய் சுனந்தா
மே 17, 2008 - 6:47am - வழங்கியவர் thalika

வித்யா 2 வரியில் சரியா சொல்லியாச்சு..தவிர்ப்பது நல்லது ஆனால் தவிர்க்கமுடியாதென்றால் மருத்துவரின் அனுமதியுடன் செல்லுங்கள்.
டென்ஷனாகிட்டீங்க போல..எத்தனையோ புதிய உறுப்பினர்களுக்கு எத்தனையோ பேர் பதிலளித்திருக்கிறார்கள்.பின்ன அவரவர் சவுகரியமும் ,கேள்வி கேட்ட சீரியஸ்னஸ் வைத்த்தும் பதில் கிடைக்காமல் போகலாம்.இதுக்கெல்லாம் கவலைபட்டால் முடியுமா.
ஒரு கட்டணத்தளமாக இருந்தால் வருந்தலாம்.முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் தளம் யாரும் எந்த ப்ரதிபலனும் எதிர்பார்க்காமல் தான் பலரும் பல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.இதுக்கெல்லாம் சங்கடப்படாதீங்க.

ஹாய் ஜோன்சில்லி
மே 17, 2008 - 6:53am - வழங்கியவர் thalika

ஹாய் ஜோன்சில்லி.காரணம் தெரீல..பொறுக்க முடியும் வலின்னா விட்டுடுங்க..நல்ல வலி அடுத்த முறையும் இருந்தால் மருர்த்துவரை பாருங்க.
கர்ப்பமானால் கூட மாதவிலக்கு வருவது போலவே வயிறு வலிக்கும்..அதனால் கொஞ்சம் கவனமாக இருங்க.

Sunantha
மே 17, 2008 - 7:48am - வழங்கியவர் Vijitvm

ரொம்ப நல்ல சந்தோஷமான விஷ்யம்
இங்கு அமெரிக்காவில் இருக்கிங்க என்றால் டாக்டர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். நிங்கள் தைரியமாக போகலாம். ஒன்றும் ஆகாது அதுவும் ப்ளைட்டில் தானே அங்கு ஹெல்ப்கும் ஆள் இருப்பாங்க. நிங்க கவலை படாமல் தாராளாம நிம்மதியா போய் வாங்க. என்ன நம்ம இந்தியாவிலே பக்க்கத்து ஊருக்கு பஸ்ஸில் மேடும் பள்ளமும் இருக்கிற ரோடிலே போறாங்க.

ரொம்ப ஹெவி திங்க்ஸ் மட்டும் தூக்காமல் போய் வாருங்க பெட்டி எல்லாம் நிங்க தூக்க வேண்டாம்.
இங்கு டாக்டர்கள் 6 மாதத்திற்க்கு பிறகு தான் ட்ராவல் செய்ய கூடாது என்பார்கள்.
நம்ம இந்தியாவில் முதல் 3 மாதம் கவனமா இருக்கு சொல்வார்கள். ஹெவி திங்க்ஸ் எடுக்கவேண்டாம் எதற்க்கும் நல்ல புளிப்பா கேண்டி கையில் வைத்து இருங்கள். ப்ளைட்டில் மேலே போக போக சிலபோது வாந்தி வர சான்ஸ் இருக்கு, அதற்க்கா கைவசம் ஒரு ப்ளாஸ்டிக் பேக், நல்ல ஆரஞ்ஜூஸ் கேட்டு வாங்கி வைத்து அப்பப குடிய்ங்க.

என் தோழி கூட போய் வந்தாங்க, இப்போ நல்ல படியா இருக்காங்க.

ஆல் தெ பெஸ்ட்

sunandha
மே 17, 2008 - 8:28am - வழங்கியவர் thalika

ஆன் இப்ப விஜி பாசிடிவா ஒரு பதில் கொடுத்திருக்காங்க சுனந்தா..பாத்தீங்களா 10 பதிலுக்கு மேல வந்தாச்சு.இப்ப நீங்க பதில் பதிவு கொடுக்கலேனா கொட்டு தான்.;-)
இப்ப டாக்டர்ட்ட போனீங்கல்ல?போனால் ஸ்கேன் பன்னுவாங்க..பன்னி ரிசல்ட் நார்மல்னா நீங்க தாராளமா போலாம்..இல்ல சின்னதா ஏதாவது உடம்பு வீக் அப்படி இப்படின்னா ரெஸ்ட் எடுக்கனும் பயனம் வேண்டாம் என்பாங்க.

ஹாய் kr, Vidhya, Jaleela, Thalika, Viji, Athira, Marliya
மே 17, 2008 - 9:58am - வழங்கியவர் Sunantha

இப்போது தான் பார்த்தேன்.ஹையா எத்தனை பேர் எனக்கு கருத்து கூறி உள்ளீர்கள்.நன்றிகள் பல.

Sunantha கூல்
மே 17, 2008 - 10:48am - வழங்கியவர் MarliyaNoohu

யாப்பா Sunantha கூல் ஆகியாச்சா எவ்லோ பேர் சொல்லி இருக்கோம் உங்க ஒப்பீனியன் சொல்லுங்க..நன்றி மட்டும் போதாது எஸ்கேப் ஆகலாம்னு பிலான்லாம் கூடாது...என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..இதெல்லாம் சொல்லோனும் ஆமா...விஜி நீங்கதான் உல்டா பதில் ஹா ஹா ஒரே சிரிப்பு எனக்கு...

அன்புடன்,
மர்ழியாநூஹு

Sunantha
மே 17, 2008 - 12:16pm - வழங்கியவர் Ishani

CONGTATS! Sunantha.

Even though it is safe for most of the women, Since this is your first baby, it is hard to read how your body handles the pregnancy related changes. Thats why (as Jaleela akka and others said) it is safe to avoid long travels in first three months (specially for the first baby). For most of the women nothing will happen.
US doctors are different, they assume that the person is completely healthy and safe to carryout a pregnancy until third failure happened.

I really hesitated to write my last sentence. But I guess thats reality.

Regards,
Ishani

sunnantha
மே 17, 2008 - 3:13pm - வழங்கியவர் Vijitvm

எப்பவுமே பாஸிட்டிவ சொல்லுவது பழக்கமாகிட்டது. அதனால் சுமந்தாவுக்கும் சொல்லி பார்க்கலாம். அப்பிடியாச்சும் நல்ல செய்தி சொல்வாங்க என்று எதிர்பார்க்கிறேன்.

வடிவேலுக்கு குடிமி மாதிரி வீங்கி
மே 17, 2008 - 11:57pm - வழங்கியவர் Jaleela Banu

தளிக்கா நேற்று நான் இருந்த சூழ் நிலையில் பதில் போடமுடியாம இருந்த பிறகு மனதில் உள்ள கவலையை மூட்டை கட்டி வைத்து விட்டு வந்து பதில் போட்டேன் சுனந்தாவிற்கு,
நான் கொடுக்க வேண்டிய கொட்டை நீங்க கொடுத்து விட்டீர்கள். பிறகு நான் வேறு கொட்ட மிதீ பேர் எல்லம் அவரவர் பங்குக்கு வது கொட்டி, என்ன படம்னு தெரிய வடிவேலுக்கு குடிமி மாதிரி வீங்கி நிற்கும் சுனந்தாவிறகு ஹா ஹா ஹி ஹி .

பரவாயில்லை ஒரு கொட்டே போதும்.

ஜலீலா

ஹாய் சுனந்தா,
மே 18, 2008 - 2:12am - வழங்கியவர் Subha Jayaprakash

ஹாய் சுனந்தா,
நான் கன்சீவாக இருக்கும் போது மாடி கூட ஏற வேண்டாம்... என்று சொல்லிவிட்டார்கள்..
மாவு அரைத்து கிரைண்டரை கூட தூக்க கூடாது என்றார்கள்..

2 கிலோ வெயிட் கூட தூக்கவேண்டாம் என்றார்கள்...
எனக்கு ஒன்றுமே புரியலை...
ஒவ்வொருத்தரின் கர்பப்பையின் நிலையும் வேறு வேறு மாதிரி அதான்...

எனக்கு 5 மாதம் ட்ராவலே வேண்டாம் என்றார்கள்....

நல்லா டாக்டரிடம் ஒரு முறைக்கு 100 முறை பேசி முடிவு செய்து ஊருக்கு கிளம்புங்க!!

நோ சுனந்தா!
மே 18, 2008 - 11:37pm - வழங்கியவர் malathi

ஜலிலா!, அதிரா!, தளிகா!, மர்ழியா!, விஜி! இன்னும் இரண்டொரு நாட்கள் அருசுவைக்கு நான் லீவு. என் மகன் லீவில் வந்திருக்கிறார். ஸோ, கம்பியூட்டர் கிடைக்காது. மேலும் அவருக்கு பிடித்தமானதையெல்லாம் செய்து கொடுக்கப் போகிறேன். அதனால் டைமும் சரியாக இருக்கும்.
சுனந்தா!....என்ன கேட்டீர்கள்? மூன்று மாதத்தில் ட்ராவல் பண்ணவேண்டாமே!.... இப்ப குழந்தை பெற்றுக்கொள்வதுதான் முக்கியம். எதற்கு ரிஸ்க்!.... ட்ராவல் ஐ அவாய்ட் பண்ணுங்க.

ஜோன்சில்லி
மே 19, 2008 - 1:16am - வழங்கியவர் thalika

ஜோன்சில்லி வயிற்று வலி மாறிடுச்சா?

மாலதிக்கா
மே 19, 2008 - 1:26am - வழங்கியவர் kr

மாலதிக்கா,
ம்ம்ம்ம்......எஞ்ஜா அக்கா.இப்படி ஒரு அம்மா கிடைக்க உங்க மகன் கொடுத்து வச்சுருக்கனும்.இதை கேட்கும் போது எனக்கு என் அம்மா நியாபகம் வருது அக்கா.எல்லா அம்மாக்களும் இப்படி தான் இல்லையா?
சரி அக்கா,நீங்க நல்லா சமைத்துபோடுங்க.பிறகு வந்து எங்களுடன் பகிர்ந்துக்களுங்கள் அவருக்கு எப்படி சமைத்து போட்டு கவனித்தீர்கள் என்று.சரியா அக்கா?

ரூபி,
மே 19, 2008 - 1:27am - வழங்கியவர் Subha Jayaprakash

ரூபி,
இப்போ காய்ச்சல் பரவாயில்லையா?
ரீமா குட்டி எப்டி இருக்கா??
அடுத்த வீக் கெண்ட்டுக்கு வீட்டுக்கு வாங்களேன்,..
அட்ரஸை மெயில் பண்ணுகிறேன்...

மாறிடுச்சு சுபா
மே 19, 2008 - 1:38am - வழங்கியவர் thalika

காய்ச்சல் மாறிடுச்சு சுபா..பசி தான் இன்னும் சுத்தமா இல்லை.ஆன் சரி கொஞ்சம் உடம்பு குறைஞ்சா சரி;-)
பொண்ணு நல்ல இருக்கா..இந்த பதிவோட போயிடுவேன் சுபா.அவ அந்த ரூமுக்கு ஓடிட்டா.பைய்யன் பேசலைன்னி கவலை வேனாம்..ஆடோமேடிக்கா அவன் பேசுவான்.இப்ப பேசுவதை கேட்க அழகா இருக்குமில்லையா.
ரீமாக்கு பாட்டுன்னா அவ்வளவு இஷ்டம்.நாள் முழுக்க ரைம்ஸ் தான்.
போன வாரம் துபாய் வழியாவே 4 முறை பாஸ் பன்னினேன்.ஆனால் எனக்கு தலைசுத்துதப்பா துபாய் பாத்தா.
அவ்வழி வரும்போது ஃபோன் பன்னிட்டு வரேன்..ஒரு விருந்து ரெடி பன்னி வைய்யுங்க.ஆனால் இன்னொரு 2 மாசத்துக்கு நோ துபாய்.
இனி லோகல் அபுதாபி மட்டும் தா...இப்ப சூடு ஆகிட்டதால முன்னப் போல மூட் இல்ல.நீங்க அபு
தாபி வருவதில்லையா?

அபுதாபியா?
மே 19, 2008 - 1:45am - வழங்கியவர் Subha Jayaprakash

அபுதாபியா?
பக்கத்து சூப்பர்மார்கெட் கூட போவதில்லை அவருடன் போவதில்லை...
அவர் எம்பிஏ எக்ஸாம், ப்ராஜக்ட் வொர்க்கில் பிஸியாக இருக்கிறார்..
இருந்தாலும் கார்டனுக்காக கூட வந்து மண், பாட் வாங்கி கொடுத்தார்...

மாலதிக்கா,செல்விக்கா
மே 19, 2008 - 4:39am - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் மாலதிக்கா ச்ந்தோசமா உங்க மகனுடன் நேரத்தை செலவு செய்யுங்கள்...நிதானமா வாங்க...

செல்விக்கா உங்க இன்வடேஷன் வந்தது ரொம்ப சந்தோஷம்...நாங்க வரலாம்னு இருக்கோம் இருந்தாலும் அந்த டைமில்தான் தெரியும் இவர் வேலை அப்படி இருக்கு..அப்படியே நான் வராட்டாலும் என் வாழ்த்து எப்பௌம் உண்டு...

அன்புடன்,
மர்ழியாநூஹு

எங்கே உங்களைக் காணவில்லையே !!
மே 19, 2008 - 6:42am - வழங்கியவர் அதிரா

மாலதியக்கா,
எங்கே உங்களைக் காணவில்லையே என நினைப்பேன். ஒருவேளை நான் இல்லாதபோது வந்தொ போறீங்களோ என்று நினைத்தேன். ஓகே பிஸியாகிவிட்டீங்கள். நல்ல சமையலெல்லாம் செய்து அசத்துங்கள். முடிகிறபோது எங்களுடனும் பேசுங்கோ.

மர்ழியா, இந்த நொண்டிச் சாட்டெல்லாம் வேண்டாம். எனக்கும் இன்விடேஷன் கிடைத்தது. தமிழ்நாடென்றால் நிட்சயம் போயிருப்பேன். நீங்க போய் எங்களுக்கும் சேர்த்துச் சாப்பிட்டு வாங்கோ....................... (என்ன அப்படி பார்க்கிறீங்க கோபிக்க வேண்டாம்...)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தளிகா, காய்ச்சல்
மே 19, 2008 - 6:48am - வழங்கியவர் அதிரா

தளிகா, காய்ச்சல் பற்றி கேட்க நினைத்து இன்னமும் கேட்கவில்லை. எனக்கும் நேரம் கிடைக்குதில்லை இப்போ.
உங்கள் பதிலில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்துவிட்டது...... (எப்படியென்றாலும் உடம்பு குறைந்தால் சரி...... ) உண்மைதான் நானும் சிலவேளை சொல்வதுண்டு. ஒரு காச்சல் வந்தாலாவது உடம்பு கொஞ்சம் குறையுமே என்று. என் கணவர் சொல்வார் பகிடிக்கும் அப்படிச் சொல்ல வேண்டாம் என்று. இங்கே நாங்கள் தவறாமல் flu jab எடுப்போம். அதனால் கொஞ்சம் விடுதலை, வந்தாலும் பெரிய தாக்கமிருக்காது. நிறைய தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் தான் முதல் மருந்து.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா
மே 19, 2008 - 6:51am - வழங்கியவர் MarliyaNoohu

அஹா அதிரா செல்விக்கா சும்மா இருந்தாலும் நீங்க ஏற்றி கொடுக்குறீங்க இது சரி இல்லை..போகும் பிளேனில் இருக்கோம் அந்த டைமில்தான் முடிவு தெரியும்..இந்த சம்மர் லீவில் ஊட்டி கொடைக்கானல்,கொச்சின்,மூணாறுலாம
் போக இருந்தோம் கடைசி டைமில் அவருக்கு திடீர்னு அதிக வேலை புரோகிராம் கேன்சல் பன்ணியாச்சு..அதனால் எதையும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியல..என்னப்பா இது போஇ வாழ்த்திட்டு வாங்கன்னாவது பரவா இல்லை சாப்டூட்டு வாங்க சொல்லுறீங்க அதும் உங்களுகெல்லாம் சேர்த்துனா என் நிலமை என்னவாகும்? செல்விக்கா நிலமையும் அந்தோ பரிதாபம் ஆகிடும்..

குலசை அண்ணன் என்னை முறைச்சுட்டு இருப்பாங்க அங்கு பதிவு போடலன்னு போட்டுட்டு வாரேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

என்ன மர்ழியா
மே 19, 2008 - 7:00am - வழங்கியவர் அதிரா

என்ன மர்ழியா இந்த சின்ன உதவியைக்கூட எங்களுக்காகச் செய்ய முடியாதா என்ன? இப்படியான விஷேஷ வைபவங்களை நினைத்தால் எனக்கு முதலில் நினைவிற்கு வருவது அந்த உணவுதான். அதன் சுவை ஒரு தனியாகத்தான் இருக்கும். சரி சரி எதற்கும் ஆயத்தமாக இருங்க.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்