topic_image


அருசுவை சகோதரிகள் அனைவரும் நலமா?சீனாவில் நில நடுக்கம் என்று அறிந்தேன்!மனம் பதரியது!மேலும் நம் அருசுவை சகோதரி மகா அங்குதான் வசிக்கிறார்.


சகோதரி மகா ப்ரகதீஸ்
மே 13, 2008 - 2:19am - வழங்கியவர் rasia

மகா எப்படி இருக்கீங்க?அங்கு நிலவரம் எப்படி உள்ளது?மேலும் ஒலிம்பிக் கொன்டாட்டத்தை வரவேர்க்க குதூகலத்துடன் காத்திருந்த மக்களுக்கு இப்படி ஒரு வேதனை!

ஆம் ரசியா..
மே 13, 2008 - 2:56am - வழங்கியவர் thalika

ஆம் ரசியா..தற்பொழுது 2 வினாடிக்கு முன்பு ரெஸ்கியூ படம் பார்த்தபொழுது என்னவோ ஒரு கேள்விக்குறி போல உள்ளது..சீனாவில் வசிக்கும் அருசுவையாளர்கள் ஆன்லைனில் இருந்தால் தாங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்னும் செய்தியை மட்டும் அறிந்தால் போதும்.எங்களது ப்ராத்தனைகள் தொடரும்

ரூபி
மே 13, 2008 - 3:02am - வழங்கியவர் rasia

மேலும் 10000 பேருக்கும் அதிகமாக பலியாகி உள்ளதாக செய்தி படித்தேன்,மேலும் பள்ளிகட்டிடங்கள் இடிந்ததால் பல மாணவமணிகள் மாட்டியுள்ளதாகவும் அறிந்து மிக்க கவலயாக உள்ளது இறைவன் தான் எல்லோறயும் காப்பாற்றனும்!பிரார்த்தனகளுடன்
ரஸியா

ஆம் ரசியா
மே 13, 2008 - 3:18am - வழங்கியவர் thalika

ஆம் ரசியா பள்ளிக் குழந்தைகள் மாட்டிக் கொண்டதைக் கண்டேன்.
இப்பொழுது தான் ஒரு மிகப்பெரும் இழப்பு மியன்மாரில் நடந்தது...அதை யோசிக்கவே முடியவில்லை..ஒரு நகரமே அழிந்து மனிதக் குவியல்களாக கிடந்திருக்கும்..என்ன கொடுமையில் இறந்திருப்பார்கள்..அங்கும் இங்கும் எறியப்பட்டு வேதனைப்பட்டிருப்பார்களே என்று என் கனவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் இப்பொழுது இது.
இப்பொழுதெல்லாம் இப்படி கொத்துக் கொத்தாய் மரணங்கள் அதிகம் நடக்கிறது போல

ரசியா மற்றும் ரூபி,
மே 13, 2008 - 3:27am - வழங்கியவர் kr

ரசியா மற்றும் ரூபி,
நாங்கள் அனைவரும் நலம்.சிச்சுவான் என்ற மாகானதில் உள்ள செங்து என்ற இடத்தில் தான் இந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அல்லாவின் கருனையால் புதைந்திருப்போர் உயிருடன் மிட்க துஆ செய்வோம்.நாங்கள் வசிக்கும் ஷங்காய் நகரில் பாதிப்பு இல்லை.விசாரித்த உங்களுக்கு நன்றி.

அன்பு kr
மே 13, 2008 - 3:44am - வழங்கியவர் rasia

தாங்கள் பாதுகாப்பாக இருப்பது அறிந்து மிக்க நிம்மதி புதையுண்டவர்களை உயிறுடன் மீட்க அல்லாஹ் இடத்தில் துவா செய்வோம்!
ரூபி நீங்கள் சொல்வது போல் கூட்டம் கூட்டமாக மனித அழிவுகள்!மனதை கனமாக்குகிறது!
k r தாங்கள் உடன் எங்களுக்கு பதிளலித்ததர்க்கு மிக்க நன்றி!அல்லாஹ் எல்லோரயும் பாதுகாப்பான் எனது துவா எல்லோருக்கும்.

நானும் அனைவருக்குமாக பிரார்த்திக்கிறேன்
மே 13, 2008 - 3:53am - வழங்கியவர் அதிரா

நானும் அனைவருக்குமாக பிரார்த்திக்கிறேன். இலங்கையிலும் நாளுக்குநாள் நடக்கும் அவலச் செய்திகளைக் கேட்டு மனம் விறைத்துக் கொண்டிருக்கிறது. உலகமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது. இன்று இருக்கிறோம். நாளை எப்படியோ தெரியாது. அப்படி இருக்கிறது உலகம். இன்னும் குறிப்பிட்ட வருஷங்களில் உலகமே இருக்காதாம். என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது உண்மை என்பதை இப்படியான சம்பவங்கள் நிரூபிக்கிறதே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நிலநடுக்கம்
மே 13, 2008 - 4:34am - வழங்கியவர் Asma

நிலநடுக்கம், சூறாவளி, சுனாமி, எரிமலைத் தாக்குதல்.....போன்ற இயற்கைத் சீற்றங்கள் சமீபகாலமாக அடிக்கடி நடந்துக்கொண்டிருக்கின்றன :( அதல்லாமல் மனிதர்கள் ஒருவருக்கொருவர் மோதி, தன் இனத்தின் அழிவுக்கு காரணமாயிருக்கிறார்கள். இன்னும் விமான விபத்துகள், ரயில் விபத்துகள், தண்ணீரில் மூழ்கி மடிதல், கரண்ட் மற்றும் ட்ராஃபிக் ஆக்ஸிடெண்ட்டுகள்... என்று எதிர்ப்பாராத கோர விபத்துகளால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேதான் போகின்றன. //இன்னும் குறிப்பிட்ட வருஷங்களில் உலகமே இருக்காதாம்// என்று அதிரா சொன்னதுபோல், உலகமே அழியக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை சகோதரிகளே!

நம் கண்முன் நடக்கும் அழிவுகளைக் கண்டு மனம் பதறுகிறது! ஒன்றை மறப்பதற்குள் அடுத்த நிகழ்வு! இவையனைத்தையும் நம் அனைவரும் முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, நம் வாழ்வில் நல்ல எண்ணங்கள் மற்றும் நற்செயல்களைக்கொண்டு நம்மை தூய்மையாக்கி, அதுபோன்ற இன்னல்கள் நமக்கும், நம்மைப் போன்ற மனித இனம் முழுமைக்கும் ஏற்படாமல் இருக்க பிரார்த்திப்போமாக!

சீனாவில் வாழும் நமக்கு அறிமுகமான சகோதரிகளில் ஹிபா இங்கு வந்து பதிவு கொடுத்தது மிக்க சந்தோஷமாக உள்ளது. அதுபோல், சகோதரி மகா அவர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் எந்த ஆபத்துமில்லாமல் இருக்கவும், உயிருடன் சிக்கிக்கொண்ட மற்றவர்கள், உயிருடனே மீட்கப்படவும் பிரார்த்திக்கிறேன்.

அஸ்மா அஸ்ஸலாமு அலைக்கும்
மே 13, 2008 - 5:03am - வழங்கியவர் kr

அஸ்மா அஸ்ஸலாமு அலைக்கும்.
உடல் நிலை நலமா?உங்களின் ஆதங்கமான பதிவிற்க்கு நன்றி.
மஹா வசிக்கும் இடத்தில் அல்லாவின் கிருபையால் ஆபத்து இல்லை.அவர்கள் ஷௌஷிங் (shouxing)என்னுமிடத்தில் இருக்கிரார்கள்,கண்டிப்பாக நமக்கு இந்த பதிவுகளை பார்த்துவிட்டு பதில் அளிப்பார்கள்,கவலை வேண்டாம்.

மன நடுக்கம்
மே 13, 2008 - 5:46am - வழங்கியவர் T S JAYANTHI

அங்கு நில நடுக்கம். அந்தக்காட்சிகளைக் கண்ட நமக்கு மன நடுக்கம். ஒரு பள்ளி இடிந்து 900 குழந்தைகள் மரணம். இக்காலத்தில் கொத்து கொத்தாகத்தான் மரணம் சம்பவிக்கிறது. மியான்மரில் புயலால் எத்தனை மரணம்? மனம் வலிக்கிறது.
இயற்கைச் சீற்றம் என்கிறோம் - ஆனால் நாம் செய்வது!

என் கவிதை

"தொழிற்சாலைப் புகை கொண்டு ஓசோனில் ஓட்டையிட்டோம்.
வாகனப் புகை கொண்டு வான மண்டலத்தை அசுத்தமாக்கினோம்.
காடுகளை அழித்து மழையைத் தடுத்தோம்.
இயற்கை சீறும்போது மட்டும் இயற்கையைச் சாடினோம்".

எங்கள் தெருவில் எப்போது பார்த்தாலும் யார் வீட்டிலாவது போர் போட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏரியை எல்லாம் தூர்த்து வீடு கட்டியாச்சு. அப்புறம் பூமா தேவி எங்கிருந்து தண்ணீர் கொடுப்பாள்.
பக்கத்து ப்ளாட்டில் 24 மணி நேரமும் ஏசி ஓடிக்கொண்டிருக்கிறது. அலுவலகத்தில் ஆள் இல்லா இடத்தில் பேன் ஓடினால் அறையலாம் போல் கோபம் வருகிறது.

சமூகப் பிரக்ஞை இல்லா மனிதன் எப்போது மாறுவான்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

Ohm Nama shivaya
மே 13, 2008 - 8:22am - வழங்கியவர் Gobi

Oh the God Siva.. its all your thiruvilaiyadal. padaithal kaaththal aliththal ellaam un velai. Please forgive our mistakes and let there be peace on this earth. I express my deep condolence to the affected people of China.

Ohm Nama Sivaya

ஓம் முருஹா
மே 13, 2008 - 9:11am - வழங்கியவர் ohm_muruga

முருகன் அருளால் சீனாவில் வாழும் அறுசுவை அன்பர்கள் KR மகா எல்லாரும் நலமாக இருக்கவேண்டி அந்த ஆறுமுகப்பெருமான் துணைபுரிய கூட்டுப்பிராத்தணை செய்வோம். முருகன் நம்பினவர்களை என்றைக்கும் கைவிடமாட்டான். ஓம் முருகா

சீனாவில் நில நடுக்கமா?
மே 13, 2008 - 1:21pm - வழங்கியவர் MarliyaNoohu

யா அலாஹ் சீனாவில் நில நடுக்கமா?நான் இப்பதான் பார்கிறேன் கொஞ்ச நாளாக நியூஸ் பேப்பர்,டிவி நியூஸ் பார்கல அதனால்தான் நாட்டின் நிலவரம் தெரியாமல் போச்சு...கேட்கவே மனசு ரொம்ப கஸ்டமா இருக்கு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

சீனாவின்
மே 13, 2008 - 1:33pm - வழங்கியவர் VidhyaSaravanan

சீனாவின் நிலநடுக்கம் அறிந்து மனதிற்கு கஷ்டமாக இருந்தது. அதிலும் ஆரம்ப பள்ளி இடிந்து விழுந்ததை அறிந்து, பாவம் குழந்தைகளுக்கு என்ன செய்வது என்று கூட புரிந்திருக்காது.
இனி உலகின் எந்த முலையிலும் இவ்வாறு நடக்காமல் இருக்க பிராத்திப்போம்.

கண்டிப்பாக வித்யா
மே 13, 2008 - 1:40pm - வழங்கியவர் MarliyaNoohu

கண்டிப்பாக வித்யா எந்த நாடா இருந்தா என்ன?மதமா இருந்தா என்ன? எந்த மொழியா இருந்தா என்ன? அனைவரும் மனிதரிகள்தானே நம்மைப்போன்ற உணர்வுகள் தானே அவர்களுக்கும் இருக்கும் நினைக்க கூட முடியல எத்தனை பேர் தாய்,தங்கை,பிள்ளை,தகப்பன் இப்ப்டி உறவுகளை இழந்து எங்கோ ஒரு மூலையி இருப்பாங்க அய்யோ என்னால் கர்பனை கூட பண்ண முடியலப்பா..

அன்புடன்,
மர்ழியாநூஹு

இயற்க்கை சீற்றம்
மே 13, 2008 - 2:13pm - வழங்கியவர் rasia

இயற்க்கை சீற்றம்! இது ஒருபுறமிருக்க மனிதர்களே மனிதர்களை அழிக்கிறார்கள்!ஏன் எதர்க்காக?புரியவில்லை!
ஜெய்ப்பூரில் பாம் வெடித்து 80 பேர் இறந்துவிட்டதாக,விபரம் தெரியவில்லை ஃப்ரென்ச் டி வியில் ஃப்ளாஷ் நியூஸ் பார்த்தேன் விபரம் தெரிந்தால் தெரிவியுங்கள்.

அய்யோ ஐ... ஐய்யோ
மே 13, 2008 - 3:32pm - வழங்கியவர் anjali73

ஐ... ஐய்யோ அய்யோ இது என்னகொடுமை ஒருபக்கம் இயற்கை மனிதனை அழிக்கிற்து மறுபக்கம் மனிதனே மனிதனை சாவடிக்கும் அவலம் என்னால் தாங்கமுடியவில்லை............
சீனாவில் நில நடுக்கமா? அதிலும் ஆரம்ப பள்ளி குழந்தைக்கள் கேட்கவே மனசு ரொம்ப கஸ்டமா இருக்கு!

ஜெய்ப்பூரில் பாம் வெடித்தா? 80பேரா?கர்பனை கூட பண்ண முடியலப்பா
இயற்க்கை சீற்றதால்தால் உறவுகளை இழந்து தங்கள் உடைமைஇழந்து தவிக்கும் மக்களுக்குகாக பிராத்திப்போம்.

ஹிபா,மஹா குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பது அறிந்து சிறிது ஆறுதலாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பதபதைது பரிதவிக்கிறது
கடவுளே!
அனைவரையும் காப்பாயாக!
ஆண்டவனே உம்மால் தான் முடியுமைய்யா!
மனித உயிர்களை காப்பாயாக!
நம்மால் உதவமுடியென்றாலும் ஒரு நிமிடம் மனதுருகி பிரார்திபோம்
ஹிபா,மஹா இப்போது நிலைமை என்ன?
உங்க குழந்தைக்கள் பயப்படாதவாறு ஆறுதலான வார்த்தை பேசி அவர்களை தேற்றவும்.

குழந்தைகள்..
மே 13, 2008 - 5:47pm - வழங்கியவர் vinnie

எந்த இயற்கை சீற்றத்திலும் பாதிக்கப் படும் குழந்தைகளை பார்க்கும்போது மனது கஷ்டமாகிறது. மியன்மாரில் ஒன்றுமறியா பிஞ்சுகளின் உடல்கள் கேட்க ஆளின்றி அனாதையாக கிடப்பதை பார்க்கும்போது அய்யோ என்ன கொடுமை என்று மனது பதறுகிறது. தப்பி பிழைத்த குழந்தைகளின் முகத்திலோ குழந்தைத் தனமே மறந்து போய் வெறித்த பார்வையே மிஞ்சி உள்ளது..

என்னதான் வேண்டுமாம் அவர்களுக்கு
மே 14, 2008 - 1:10am - வழங்கியவர் T S JAYANTHI

பிங்க் சிடி ரெட் சிடியாச்சு

மனம் பதைக்கிறது. யார் மேல் கோவத்தையோ ஒரு பாபமும் அறியாத அப்பாவி மக்கள் மேல் காண்பிக்கிறார்களே. இது என்ன நியாயம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

save all resources
மே 14, 2008 - 1:17am - வழங்கியவர் sivavel

ஜெய்பூர் ல் குண்டு வெடிப்பு, பார்க மனம் பதருகிறது , ஜெயந்தி அவர்கள் சொன்னது பொல், தண்ணீர் , பொன்ற மற்ற other resources
வீணடிக்க கூடாது.

Atleast we should not throw food , because it is not good taste or left over.
If u waste something your children in future will suffer.
As u save money for them , save all resources
for them.(water, food, current, fuel, etc..).
prayers for victims of Myanmar cyclone, china earth quake, jaipur victims.

மனம் வேதனை படுகிறது...
மே 14, 2008 - 1:21am - வழங்கியவர் MarliyaNoohu

அவங்களுக்கு தேவையானது மதவெறி,இன வெறி..அரசியல் வெறி இதுக்காகாக பண்றாங்க இதில் பாதிக்கபடுவது அப்பாவி மக்கள்..எரும்பை மித்தித்தால் கேஸா போடமுடியும் அதுபோல்தான்...இது மாதியான சமூக விரோதிகளுக்கு நாமெல்லாம் எரும்பு போல் ஆகி இருக்கோம்..அவர்களின் ஆத்திரத்தை தீர்ர்க...மனம் வேதனை படுகிறது...

அன்புடன்,
மர்ழியாநூஹு

இயற்கை சீற்றம்
மே 14, 2008 - 3:31am - வழங்கியவர் babu

கருத்து சொல்லக்கூடாது என்று மூளை சொன்னாலும், கை சும்மா இருக்கமாட்டேங்குது.

நிலநடுக்கம், புயல், சுனாமி... போன்ற இயற்கையின் கோரதாண்டவங்களை தடுத்து நிறுத்தும் சக்தி இப்போதைக்கு மனிதனுக்கு கிடையாது. கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். நிலநடுக்கம் எப்போது வரும் என்பதை சொல்வதற்கு இப்போதைய அறிவியல் வளர்ச்சி போதவில்லை. ஆனால் எந்த இடங்களில் நிலநடுக்கத்திற்கு வாய்ப்புகள் உள்ளது என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. (அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரிய நிலநடுக்கம் வரலாம்.) ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் அதற்கு தகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அங்கே கட்டப்படும் கட்டிடங்கள் இயற்கை சீற்றங்களை கருத்தில் கொண்டு கட்டப்பட வேண்டும். பிரச்சனைகள் வந்தால் குறைந்த நேரத்தில் அதில் இருந்து தப்புவதற்கான வசதிகளை செய்ய வேண்டும். வெகுமுக்கியமாக அங்கே இருக்கும் பிரச்சனைகள் என்ன, அதை எதிர்கொள்வது எப்படி என்பதை தெளிவாக அப்பகுதி மக்களுக்கு போதிக்க வேண்டும். என்றோ ஒருமுறை, எப்போதோ ஒருமுறை வருவதுதானே என்று நாம் காட்டும் அலட்சியம், இப்படி ஏதேனும் விபரீத நிகழ்வுகள் நடந்தபிறகுதான் நம்மை கண் திறக்க வைக்கின்றது. ஆனால் அதற்குள் நாம் இழந்திருப்பது ஏராளமாக இருக்கும். எந்த இழப்பையும் ஈடு செய்து விடலாம். உயிரழப்பிற்கு ஈடு உண்டா?

மேலே சொன்னவற்றால் சீற்றங்களின் விளைவுகளை முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும், குறைக்க முடியும். உங்களுக்கு ஒன்று தெரியுமா? கடந்த 2004 சுனாமியில் நாகையில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள். (இது அரசாங்க கணக்கு. எங்களுக்கு தெரியும் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று.) நாளை அதே அளவில் சுனாமி மீண்டும் நாகையை தாக்குகின்றது என்று வைத்துக்கொள்வோம். எத்தனை உயிர்கள் போகும் என்ற சொல்ல முடியுமா? கண்டிப்பாக சொல்லலாம். ஒரு உயிரும் போகாது. இனி சுனாமி நாகையை தாக்கினால் பொருட்சேதம் ஏற்படுமே தவிர, உயிர்ச்சேதம் ஏற்படாது.

நாகையை சுனாமி தாக்குவதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரங்கள் வரை கால அவகாசம் இருக்கின்றது.(இலங்கைக்கும் கிட்டத்திட்ட இதே அளவு கால அவகாசம் இருக்கின்றது) இப்போதைய சூழலில், இந்த நேரத்திற்குள் ஒரு ஊரையே காலி செய்துவிடமுடியும். இதில் யோசித்து பார்க்கவேண்டிய விசயம் என்னவென்றால், அன்றும் ஒரு உயிர் கூட போகாமல் காத்திருக்க முடியும். குறைந்தது இந்த 12 ஆயிரத்துக்கும் மேல் என்ற எண்ணிக்கையையாவது குறைத்து இருக்க முடியும். ஆனால் தோற்றுவிட்டோம்.

உங்களுக்கும் எனக்கும் சுனாமி என்ற வார்த்தை 2004 முன்பு கேள்விபடாத புதிய வார்த்தையாக இருக்கலாம். ஆனால், Geology துறை சம்பந்தமானவர்களுக்கு இது பற்றி நன்கு தெரியும். அதற்கென நிறைய அமைப்புகள் உள்ளன. அரசாங்க துறைகளும் இருக்கின்றன. இருந்தும் கோட்டை விட்டோம். காரணம் - அறியாமை, அலட்சியம்.

வாழ்க்கையின் முக்கிய தேவைகள் மனிதர்களுக்கு போதிக்கப்பட வேண்டும். ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் என்று வாழ்க்கையில் ஒருமுறை கூட பயன்படுத்தாத சூத்திரத்தை பத்து வருடங்களாக மாணவர்களுக்கு போதிக்கும் பள்ளிகள், அத்தியாவசியமான, உடல் வளர்ச்சிக்கு உதவிடும் நீச்சலை போதிப்பதில்லை. அதற்கான வசதிகளும் இங்கே இல்லை. இதன் விளைவு, சுற்றுலா சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி சாவு செய்திகள். கிணற்றில் மூழ்கி சிறுவர்கள் சாவு என்ற செய்தியை கடந்த ஒரு வாரத்தில் நிறைய படித்துவிட்டேன்.

Global warming குறித்த எச்சரிக்கையை பல வருடங்களுக்கு முன்னரே பிரச்சாரம் செய்தனர். அப்போது இதை யாரும் பெரிதுபடுத்தவில்லை. அதன் விளைவுகளை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பிக்கும்போதுதான் எல்லோரும் கவலைப்படுகின்றனர். (அல்லது கவலைப்படுவது போல் நடிக்கின்றனர்.) நமது வாழ்க்கை முறையில் இனி சில விசயங்களை தவிர்க்க முடியாது. தொழிற்சாலைகள் வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால் தொழிற்சாலைகளால் உண்டாகும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. நீர் இல்லாமல் எப்படி வாழ்வது? நீரை எடுக்கும்போதே, நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும். இரண்டு லிட்டர் தண்ணீர் நிலத்தில் சேருவதற்கு வழி செய்த பின்னர்தான் ஒரு லிட்டர் தண்ணீர் நாம் எடுக்க வேண்டும்.

ஆடு காய்ஞ்சா என்ன? காடு எரிஞ்சா என்ன? எனக்கு தீனி கிடைச்சா போதும் என்று இப்போதைக்கு நாம் சந்தோசமாக இருக்கின்றோமா.. அது போதும்.. என்ற மனிதனின் மனப்பாங்குதான் அவனது அழிவிற்கு பெரிய காரணம். எல்லாம் அவன் செயல் என்று மேல் நோக்கி கை காட்டிவிட்டு, கீழே நமது தவறுகளை தொடர்வது நமக்கு நாமே அழிவை தேடிக்கொள்ளும் எளிய வழி. இனி அடுத்த தலைமுறையினருக்காவது நல்லவற்றை கற்றுக் கொடுப்போம்.

வணக்கம்
மே 14, 2008 - 4:55am - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பார்ந்த நெஞ்சங்கள் அனைவருக்கும்

மிக்கநன்றி,நான் மற்றும் குடும்பத்தில் அனைவரும் நலம்,இந்த பூகம்பம் சீனாவில் நான் இருக்கும் இடத்தில் இருந்து 400கீ.மீ தொலைவில் நடந்துள்ளது.நிகழ்ச்சி நடந்த நேரம் மதியம் 2.30 மணி இருக்கும்.அதன் அதிர்வு இங்கும் உணர்ந்துள்ளன்ர் சிலர்,நானும் உணர்ந்தேன்,எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது உடனே சோபாவில் உட்கார்ந்தேன்,எனது கணவர் கண்ணை மூடிக்கொள் என்றார்,கண்ணை மூடியதும் தண்ணீர்ருக்குள் இருப்பதுப்போல் ஒரு உணர்வு நான் எனது கண்ணவ்ரிடம் கூறினேன்,அது ஒன்றும் இருக்காது என்றார்.எல்லாம் ஒரு 10 செc உணர்வு தான்.பிறகு 3 மணியள்வில் அவர் ஆபீஸ் சிலர் கூறிய பின் தான் தெரியவந்தது,அதன் பிறகு எல்லா ஆபீஸ் அன்று மூடிவிட்டனர்,
எல்லாம்வல்ல இறைவன் அருளால் காப்பாற்றப்பட்டோம்,சம்பவம் நடந்த குழந்தைகளை நினைக்கையில் மிகவும் வேதனையாக தான் உள்ளது.
மறுபடியும் எங்களைப்பற்றி நினைத்த அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறோம்.
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அன்பு மகா
மே 14, 2008 - 5:14am - வழங்கியவர் rasia

தங்கள் பதிவு பார்த்து மிக்க நிம்மதியாக இருக்கிறது!ஏற்க்கனவே ஹிபா அவர்கள் மூலம் தாங்கள் நன்றாக இருப்பதாக அறிந்தாலும் தங்கள் பாதுகாப்பாக இருப்பது தெரிவித்தது அறிந்து மிக்க நிம்மதி!கடவுளுக்கு நன்றி!அப்புறம் மகா ஒரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டால் தொடர்ந்து அதிர்வுகள் நிகழும் என்று சொல்வார்கள் தாங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.தொலைக்காட்சியில் போனவாரத்திலிருந்து கூட்டம் கூட்டமாக மனித அழிவுகள் தான் பார்க்கிறோம்!மியான்மரில் நர்கீஸ் வந்து கொண்டுபோனது,இப்போ அங்கு நில நடுக்கம்,ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்பு, விலைமதிப்பில்லாத உயிர்கள்! திரும்பபெறமுடியாத,ஈடு செய்ய முடியாத இழப்பு! எங்களால் மனமாற ப்ரார்த்தனை தான் செய்யமுடிகிறது.

Think Positively
மே 14, 2008 - 9:16am - வழங்கியவர் anjali73

அட்மின் சொன்னவார்த்தைகள் நூற்றுநூறு உண்மை இய்ற்கை சீற்றம் வந்தால் நம்மால் என்ன செய்யமுடியும்.......என்று பேசி கொண்டிருப்பதை விட
அறிவியல் வளர்ச்சி மூலம் எந்த இடங்களில் நிலநடுக்கத்திற்கு வாய்ப்புகள் உள்ளது என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.இயற்கை சீற்றங்களின் விளைவுகளை கருத்தில் கொண்டு அலட்சியம் காட்டாமல் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணிகளைசெய்யவதே நல்லது .

எதோரு பத்திரிக்கையில் படித்த ஞாபகம் இலங்கையில் சுனாமிவ்ருவத்ற்கு[ பல மணிநேரத்தற்க்கு ] முன்னால் ஐந்தறிவு உயிரினங்களெல்லாம் ஒரே கூச்சலிடு ஒலமிட்டு பயங்களை வெளிகாட்டி அந்த இடத்தைவிட்டே ஒடிபோனதாம் எவ்வள்வு முன்னெச்ச்ரிக்கை அதற்கு.ஐந்தெறிவு படைத்த உயிர்னிங்கக்குயிருக்கும் விழிபுண்ர்ச்சிகூட இவ்வள்வு அறிவியல் வசதிகளை பயன்ப்டுத்தும் மனிதயினங்களுக்கு இல்லையே என்று நினைக்கும்போது மனவருத்தை தருகிறது .

அரசியல்,மதவெறி,சாதிவெறிகலவரம்,
உள்நாடு,வெளிநாடு கலவரங்களை எற்படுத்தும் மனிதன் இந்த குறுக்கியவட்ட்திலிருந்து வெளிவந்து இனியுள்ளகாலங்களில்

எல்லாயிருக்களு தம்முயிர்போல் நினைத்து,அவைகளை நேசிக்க பழக்கிகொள்ளவேண்டும்.ஆன்மீக ரீதியானும் சரி,நடைமுறை ரீதியானாலும் சரி மனச்மாதானத்துடன் தானும் வாழ்ந்து,அடுத்தவர்களையும் வாழவைக்க முடியும் என்றநிலை ஏற்பட வேண்டும்.
இனியுள்ளகாலங்களில் இய்ற்கை சீற்றம் வருவது சகசமாயிடும்,ஆனால் மனிதனால் இய்ற்கை சீற்றதோடு போரமுடியாத பட்சத்தில் மனிதன் எள்ளவு அலட்சியம் காட்டாமல் வருமுன் காப்பதே உத்தம்.இதன்மூலம் உயிரிழப்புக்களை மனிதனுக்கு தவிர்க்க முடியும்.
அன்பு மகா,ஹிபா தங்கள் குடும்பத்தில் அனைவரும் நலம் என்ற பதிவு பார்த்து மிக்க நிம்மதியாக இருக்கிறது! ஜாக்கிரதையாக இருங்கள்.மனமாற பிராத்திப்போம்
Think Positively U will achieve everything.

ஹாய் மகா
மே 14, 2008 - 12:06pm - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் மகா நலமா இருக்கின்றீகள் என கேட்க சந்தோசமாக இருக்கின்றது...உங்கள் பீலிங்சை சொல்லும் போது எனக்கே மனம் அதிர்கின்றது..நன்மையே நடக்கட்டும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹாய் மஹா
மே 14, 2008 - 2:37pm - வழங்கியவர் Vijitvm

நல்ல படியா இருக்கிங்க என்று தெரிந்தவுடன் ரொம்ப சந்தோஷ பட்டேன். பாவம் எத்தனை குழந்தைகள் அப்பாப்ப பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்ணுவது இந்த குடுர கொடுமையை எல்லாம் பார்த்திட்டு நாம மட்டும் என்ன பண்ன முடியும். இது ஆண்டவனால் தான் முடியும்.

வருமுன் காப்போம்
மே 14, 2008 - 5:30pm - வழங்கியவர் vinnie

அட்மின் சொன்ன கலிஃபோர்னியா விஷயத்த நானும் டிஸ்கவரி சானலில் பார்த்தேன். ஆனால் கலிஃபோர்னியா காரர்கள் பயப்பட வேண்டாம். அங்கு பூகம்பத்தை தாங்கக் கூடிய அளவுக்குத்தான் கட்டடங்கள் எல்லாம் கட்டுவார்கள். நாமும் நம் பங்கிற்கு ஒரு எமர்ஜன்ஸி ப்ளான் வைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கெல்லாம் டிவியிலே எப்போதும் அறிவுரை செய்வார்கள். இயற்கை சீற்றம் போன்ற எமர்ஜன்ஸி சமயங்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ப்ளான் வைத்துக் கொள்ள வேண்டுமாம். உதாரணமாக என்ன செய்வது, வீட்டில் எந்த இடத்தில் அடைக்கலம் தேடுவது, வீட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் என்ன செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே ப்ளான் செய்து கொள்ளனும். அதை அடிக்கடி ஒத்திகையும் செய்து பார்க்க வேண்டுமாம்.

இங்கு பள்ளிகளிலும் அவர்கள் பங்கிற்கு பள்ளியில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று அடிக்கடி ட்ரில் நடத்துகிறார்கள். உதாரணமாக பள்ளியில் தீப்பிடித்தால் எந்த வழியில் வெளியேற வேண்டும், டொர்னேடோ தாக்கும்போது எங்கு இருக்க வேண்டும் இப்படி. ஒன்றுமில்லை இரண்டு நாட்களுக்கு முன் நாங்கள் இருக்கும் இடத்தில் டொர்னேடோ சைரன் அடித்தது. என் பெண் ஓடிப்போய் ப்ளாங்கெட்டுகளுடன் பதுங்கிக் கொண்டாள். அந்த அளவிற்கு ஸ்கூலில் ட்ரெயின் பண்ணுகிறார்கள்.

இங்குள்ள காவல்துறை, தீயணைப்பு படையினர், மருத்துவர்கள் கூட அடிக்கடி இதற்கு ட்ரில் பண்ணுவார்கள். அப்போதுதான் நிஜமாக நடக்கும்போது குழப்பமின்றி அனைவரும் செயல் பட முடியும். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நம் அரசும், நம் மக்களும் வருமுன்பே செயல் பட்டு உயிர் சேதங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு இருக்க வேண்டும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே
மே 14, 2008 - 7:18pm - வழங்கியவர் DEVA

நான் 3 நாட்களுக்கு முன்பு ஆபிஸ் சென்ற போது கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கையில் ஆளாளுக்கு கால்குலேட்டர் வேறு. என்னதான் பேசிக்கொள்கிறார்கள் என்று பார்த்தால் ஒருத்தன் சொல்கிறான்," பாருங்கள். இத்தனை குழந்தைகள் ஒரு விநாடிக்கு சைனாவில் பிறக்கின்றன. அப்படிப் பார்த்தால் ஒரு மாதத்திற்கு மக்கள்தொகை இவ்வளவு ஏறுகிறது. இவர்கள் என்னவோ 10,000( அப்போதைய செய்திப்படி) பேருக்கு அழுகிறார்கள் " என்றான். நல்லா ஓங்கி அறையணும் போல அத்தனை ஆத்திரம் வந்தது. போன வாரம் சிட்னியில் திமிர்த்தனமாக Boat ஓட்டி 6 பேர் செத்துப் போனதுக்கு அப்படி பேசினாங்க. இதுதான் அவர்கள் மற்ற நாட்டினரின் உயிருக்கு கொடுக்கும் மதிப்பு. நான் சொன்னேன், 10,000 மோ ஆயிரமோ அதில் உன் குடும்பத்தினரும் இருந்திருந்தால்தான் உனக்கு அதன் வருத்தம் புரியும் என்று. மனதில் தோன்றிய அத்தனை கெட்ட வார்த்தைகளையும் திட்ட முடியவில்லை.

டீவியில் காண்பிக்கும் அத்தனையையும் பார்க்க பார்க்க அழுகையும், பயமும் வருகிறது. அட்மின் சொன்ன மாதிரி பட்டவர்களுக்குத்தான் விழிப்புணர்வு இருக்கிறது. நம் குடும்பத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டால்தான் நாம் அது நமக்கும் நேரலாம் என்று எப்போதும் விழிப்புணர்வோடு இருக்கிறோம். இது இயற்கையின் சீற்றத்துக்கு மட்டுமின்றி கேன்சர், சர்க்கரை என்று வியாதிகளுக்குக் கூட சொல்லலாம். அந்த இடிபாடுகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் டீவியில் அழும் துயரத்தை, ஒரு தாயான பின்னால்தான் என்னால் அதன் முழு வலியையும் உணர முடிகின்றது. முன்பு சாதாரணமாக பார்த்து கவலைப்பட்டு கண்ணீர் சிந்தியதற்கும் இதற்கும் வித்தியாசம் புரிகின்றது. தூங்க முடியாமல் பாரமாக, அந்தப் பெற்றோரை நினைத்து, அந்த முகம் தெரியாத குழந்தைகள் எத்தனை கஷ்டப்பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டே சேனல் மாற்றி சேனல் Updates பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த வீட்டிற்கு ஆபத்து வரும் வரை நம் வீட்டில் என்ன ஆகப் போகுது, சும்மா இப்படித்தான் சொல்வார்கள் என்ற எண்ணம்தான் நமக்கு மேலோங்கி இருக்கிறது. அட்மின், வின்னி சொன்னதுபோல் பள்ளிகளில் இதனைப் பற்றிய கல்வி மிகவும் அவசியம். இங்கே ஆஸ்திரேலியாவில் வெள்ள சமயத்தில் இங்கே இருக்கும் சிறுவர்கள் அதில் சர்பிங் செய்வதை காண்பித்தார்கள். அத்தனை பேருக்கும் சிறு வயதிலிருந்தே நீச்சல் கற்பிக்கிறார்கள்.

மற்ற எல்லா வெளிநாடுகளிலும் வின்னி சொன்ன எமர்ஜென்ஸி ட்ரில் உண்டு. டாக்டர்களுக்கும் அந்த சமயத்தில் எப்படி உடனடியாக ஸ்பாட்டுக்கு வருவது, அத்தனை விதமான பேஷண்டுகளுக்கு சிகிச்சை அளிப்பது என்று ட்ரில் உண்டு. இதில் பல நேரம் அது நிஜமான எமெர்ஜென்சியா அல்லது ட்ரில்லா என்று சொல்ல மாட்டார்கள்.

இந்த விழிப்புணர்வு என்றதும் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நாங்கள் மலேஷியாவில் இருந்தபோது, என் மகன் பிறந்து மூன்று வாரம் இருக்கும். அப்போது என் கணவரின் ஹாஸ்பிட்டலில் ஒரு குழந்தை அட்மிட் செய்யப்பட்டிருந்தது. அது பிலிப்பைன்ஸ் நாட்டுக் குடும்பம். திருட்டுத்தனமாக மலேசியாவில் இருந்தார்கள். இது போல் பல குடும்பங்கள் அங்கே வாழ்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு குடலில் ஏதோ பிரச்சனை. ஆபரேஷன் செய்யாவிட்டால் இறந்துவிடும் என்ற நிலைமை. 6 மாதம் ஆன குழந்தை. சாதாரண மருத்துவம் என்றால் அங்கே இருக்கும் டாக்டர்கள் பார்த்து விடுவார்கள். ஆனால் ஆபரேஷன் என்றால் நிச்சயம் அதற்கு ஸ்டேட் தலைமை ஹாஸ்பிட்டலிலிருந்து அனுமதி வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் அவர்கள் குடும்பத்தை அரெஸ்ட் செய்து விடுவார்கள். அந்தக் குழந்தைக்கு ஆபரேஷனும் நடக்காது, ஜெயிலுக்கும் போக வேண்டும். அதன் அம்மா தினமும் அழுதுக் கொண்டிருக்கிறார்கள். பார்க்க முடியல. ரொம்ப கவலையாக இருக்கிறது என்று என் கணவர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அப்போது என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வயிற்றுப் போக்கு அதிகமாகி மிகவும் கஷ்டப்பட்டான். 2 வாரம் போராடினோம். பிறகுதான் சரியாகியது. அன்று கணவர் ஹாஸ்பிட்டலிலிருந்து வரும்போது அங்கேயிருக்கும் குழந்தையின் நிலையை சொல்லி அவர்களும் இப்படித்தானே கஷ்டப்படுவார்கள் என்று சொல்லி கண் கலங்கி விட்டார். அதுவரை பேஷண்ட்டுகள் பற்றி ஃபீலிங்க்ஸ் இருக்கக்கூடாது, உயிர் முக்கியம் என்று மட்டும்தான் நினைக்க வேண்டும் என்று சொன்னவர் இப்படி சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அதோடு இரண்டு நாட்கள் நைட் ஆன்கால் பார்க்கப்போறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கும் வரவில்லை. மூன்றாம் நாள் வந்து சொல்கிறார், என் வேலையே போனாலும் போகும். நான் என் Chief Doctor கிட்ட எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். அந்தக் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று. முடியாது. நீ வேணா ரிஸ்க் எடுத்து செஞ்சுக்கோன்னு சொல்லிட்டார். தியேட்டர் நர்சுகளைக் கேட்டால் முடியாது என்று சொல்லி விட்டார்கள். அப்புறம் ஒரு மெடிகல் அசிஸ்டெண்ட் ( அனஸ்தீஷியா கொடுக்க), இன்னும் 2 நர்ஸ் வெச்சு நானே ஆபரேஷன் செஞ்சுட்டேன். குழந்தை பிழைச்சுடுச்சு. அதோட அம்மாக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. பாஷை தெரியாம என்னைப் பார்த்து அழுதுட்டே இருந்தாங்க. வேலைப் போனா என்னன்னு சொன்னார். ஆனால் அதற்குப் பிறகு அடுத்த நாளே அவரோட சீப் அவரைப் பாராட்டினார் . ஹாஸ்பிட்டலே வாழ்த்து சொன்னுச்சு. எனக்கு ஆச்சரியம் என்னன்னா, என் கணவர் நிச்சயம் தனக்கு ஒரு குழந்தை இல்லாம இருந்து அதோட Parent ஆ அந்தக் கஷ்டத்தை உணராம இருந்திருந்தா நிச்சயம் இந்த ரிஸ்க் எடுத்திருப்பாரா என்பது தான். இதையே கேட்டதுக்கு உயிரைக் காப்பாத்த போராடியிருப்பேன். நிச்சயம் வேலையை ரிஸ்க் எடுத்து செஞ்சிருக்க மாட்டேன் என்றார். முடிஞ்ச புரொசிஜரை பாலோ செய்திருப்பேன் என்றார். தனக்கு வந்தால்தான் பலருக்கு ரிஸ்க் எடுக்கற வலிமையும், விழிப்புணர்வும் இருக்கிறது. இது மனிதர்களின் மனோபாவமாக இருக்கிறது. இதில் அரசாங்கமும் அப்படியேதான். சுனாமி மாதிரி இன்னொரு பேர் தெரியாத இயற்கை சீற்றம் வந்தால் அப்போதும் இப்படி பேசுவார்கள்.

thanks to all.
மே 15, 2008 - 1:19am - வழங்கியவர் kr

அஞ்சலி மிக்க நன்றி,உங்களது கனிவான வார்த்தைகளுக்கும்,பிராத்தனைகளு
க்கும்.நலம் விசாரித்த அனனைத்து சகோதிரிகளுக்கும் எனது நன்றிகள்.

33 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »