topic_image


அன்புள்ள அஞ்சலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
இங்கே வாங்கப்பா வாழ்த்து சொல்ல......
என்ன அஞ்சலி என்ன ஸ்பெஷல் பண்ணுனீங்க?கிடத்த கிப்ட் சொல்லுங்க..


பிறந்த நாள்
மே 15, 2008 - 11:59am - வழங்கியவர் MarliyaNoohu

அன்புள்ள அஞ்சலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
இங்கே வாங்கப்பா வாழ்த்து சொல்ல......
என்ன அஞ்சலி என்ன ஸ்பெஷல் பண்ணுனீங்க?கிடத்த கிப்ட் சொல்லுங்க..நாம் சொல்ல லேட் ஆகிட்டாலும் லேட்டஸ்டா சொல்லலாம் கவனிக்காமல் போஇட்டேன்..இங்கே காலையில் இருந்து விருந்தினர்கள் அதனால்தான் அருசுவை பக்கம் வர முடியல

அன்புடன்,
மர்ழியாநூஹு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மே 15, 2008 - 1:31pm - வழங்கியவர் vinnie

அன்புள்ள அஞ்சலி,vijaya56 உங்கள் இருவருக்கும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நோய் நொடியின்றி இன்றுபோல் என்றும் இன்பமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மே 15, 2008 - 4:07pm - வழங்கியவர் aniaksh

அஞ்சலி,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Rajini

பாட்டு பாட சொன்னீங்க இல்லையா
மே 15, 2008 - 4:13pm - வழங்கியவர் இலா

You tube உபயம்
http://www.youtube.com/watch?
v=4byUlyh3npk&feature=related

ஹாய் இலா
மே 16, 2008 - 12:39am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் இலா பெயர் மாற்றம் பண்ணின்ஈர்களா?கொஞ்ஜ நாளாக குழம்பிட்டேன் புது மெம்பர் போலன்னு...

அன்புடன்,
மர்ழியாநூஹு

happy birthday anjali
மே 16, 2008 - 4:27am - வழங்கியவர் harigayathri

Many more happy returns of the day

birthday babies ANJALI AND VIJAYA

மர்ழியா...
மே 16, 2008 - 5:24am - வழங்கியவர் அதிரா

மெனி மோ ஹப்பி பேர்த்தே அஞ்சலி.....
மர்ழியா... என் கண்ணுக்கு இதெல்லாம் தெரிவதில்லை. இப்படி எங்காவது தப்பித்தவறி பட்டால்தான். இதனால் யாரும் என்னைத் தப்பா நினைக்கவேண்டாம்... மர்ழியா நர்மதாவின் ஐஸ்.. செய்ய பொருட்கள் வாங்கிவிட்டேன், இப்போ செய்முறை பார்க்கத்தான் ஓபின்..... நீங்க எல்லோரும் வாங்க ஐஸ்கிறீம் சாப்பிட... நாளை விருந்தினர் வருகிறார்கள்.. அதனால் நான் இப்பவே டென்சனாகிவிட்டேன்...வரட்டா....

பிறந்த நாள் இன்று
பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்தநாள்.......
இலங்கை வானொலிப் பாடல் நினைவு வருகிறதா?.......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா
மே 16, 2008 - 5:32am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் அதிரா என்ன வாங்கியாச்சா?இவ்ர் வாங்க மற்ந்து வந்துட்டார் நைட் வேலையை முடிச்சுட்டுதான் மால் போக இஉர்க்கேன் அப்பதான் நான் வாங்கனும்..பண்ணிட்டு பதில் போடுங்க..

அதிரா ஒன்னு சொல்லட்டுமா?எப்போதும் புதுசா ஒரு ஐட்டம் பண்ணுறப்ப தனியாகதான் பண்ணனும்..விருந்தாளிகள் வரும் டைம் பண்ண கூடாது சொதப்பல் ஆகிட்டா கஸ்டம்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

Dear anjali,
மே 16, 2008 - 5:52am - வழங்கியவர் Anupa

Many More Happy Returns Of the Day! Wishing you a long,happy,healthy and wealthy life forever

With love,
Anupa

ஆலோசனை சொல்லுங்க ப்ளீஸ்
மே 16, 2008 - 8:01am - வழங்கியவர் anjali73

ஐய்யொ எனக்கு சந்தோஷம் தாங்கமுடியால...............
நேத்தைக்கே பாக்காம போயிட்டெனே sorry.
வாழ்த்து சொன்ன குலசைசுல்தான்சார்,அதிரா,Anupa ,மர்ழியாநூஹு
harigayathri ,vinnie ,aniaksh நன்றி.
மர்ழியா கிடத்த கிப்ட் சொல்லவா ஒருடெரஸ்,நெக்லஸ்,500டாலர் இவ்வளவும் எனக்கு என் கணவர் பிரசன்ட் பண்ணாங்கப்பா.இதெல்லதோட ரொம்ப பெரிய சந்தோஷ்ம் அவ்ருக்கு இன்னைக்கு பிறந்தாள் நான் ரொம்ப சந்தோஷ்மாகயிருக்கேன் அவ்ருக்கு என்ன கிப்டு ?குடுக்கலாம் யோசிட்டுருக்கேன் ஆலோசனை சொல்லுங்க ப்ளீஸ் ........................அன்பு arusuvaiதோழிகளே ஆலோசனை சொல்லுங்க ப்ளீஸ்

இலா ,தாங்க்ஸ்
மே 16, 2008 - 8:26am - வழங்கியவர் anjali73

hai,இலா
அப்பா,தம்பி ,தங்கை,மற்றும் உறவினர்,பிரண்ஸ் வாழ்த்துசொல்லும்போது மனதுக்கு சந்தோஷத்தை தரும்,ஆனால் அதைவிட இரட்டிப்பானது முகதெரியாத மனதுணர்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்ளும் அ.சுதோழிகளுக்கும்,அறுசுவைக்கும
் என் மனமார்ந்த நன்றி. இலா வாழ்த்து சொன்ன விதம் அருமை.தாங்க்ஸ்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மே 16, 2008 - 8:34am - வழங்கியவர் Renuka

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஞ்சலி.இன்று நீங்கள் நினைத்த அனைத்தும் நிறைவேறும்.

Renuka தாங்க்ஸ்
மே 16, 2008 - 9:00am - வழங்கியவர் anjali73

hai, Renukaஎப்படியிருகிங்க?.21/2 வயசாகபோகிர மகனை ஸ்கூலுக்கு அனுப்புபோது கொஞ்சம் கஷ்டமாதயிருக்கும்,கவலைப்படாதீங
்க, அவன் அழகா ரையிம்ஸ் சொல்லுப்பொது உங்க கவலையெல்லாம் பறந்துபோய்விடும் சரியா துப்பாயில வெயில் ஜாஸ்தியா இருக்குமுன்னு நினைக்கிரென்.
வடக்கே,தெக்கே,கிழக்கேன்னு நீங்கபடுரபாடு கேட்ட ,மனசுக்கு கஷடமாயிருக்கு,கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வங்க அ.சுவைக்கு ஒ.கே நாம பேசலாம்

வாழ்த்துக்கு தாங்க்ஸ்.

இது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை அஞ்சலி!!!!
மே 16, 2008 - 3:01pm - வழங்கியவர் அதிரா

ப்றசன்ட் கிடைச்ச சந்தோசத்தில் இருக்கிறீங்களா? அதுசரி, ஆனால் ஹஸ்ஸின் பிறந்தநாளுக்கு முன்கூட்டியே வாங்கிவைத்து, நித்திரையால் எழும்புகிறபோதே கொடுத்திருக்க வேண்டுமே.... அதைவிட்டிட்டு, எழும்பி ரீயெல்லாம் குடித்திட்டா யோசிக்கிறீங்க என்ன கொடுக்கலாம் என்று. சரி இந்தப் பிழையை அடுத்தமுறை விடவேண்டாம்... முன்கூட்டியே வாங்கிடுங்க என்ன?

வேளைக்கே பிளான் பண்ணினால் நிறைய பொருட்கள் வாங்கலாம். இப்ப உடனே வாங்கக்கூடியதென்றால், நல்ல எக்ஸ்பென்சிவான உடைகள்/ கை மணிக்கூடு, மியூசிக் பிரியரென்றால் ஐபொட்.... வேறு அவருக்கு என்ன பிடிக்குமென்று உங்களுக்குத்தானே தெரியும்.... கெதியா ஓடுங்க கடைக்கு.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சரியாச் சொன்னீங்க மர்ழியா......
மே 16, 2008 - 3:22pm - வழங்கியவர் அதிரா

சரியாச் சொன்னீங்க மர்ழியா......
நான் எப்பவுமே, புது உணவுகளை எங்களுக்குத்தான் செய்வேன். நாளைக்கு லஞ்க்கு சமைப்பதற்காக நேற்று சுப்ப மார்கட் போனேன், அப்போ இந்த ஐஸ்கிறீமுக்கும் சேர்த்துப் பொருட்கள் வாங்கினேன். என்னில் ஒரு பழக்கம்... எதையும் உடனே செய்திட வேண்டும்... செய்தால் உடனே சொல்ல வேண்டும் இப்படி எல்லாம் உடனே.... வேண்டும்.. அதனால் இன்றே செய்கிறேன். கொஞ்சமாக எங்களுக்கு மட்டும்.

நாளைக்கு வருபவர்களுக்காக.... mango sorbet ( a variety of ice cream with mango pieces), strawberry youghurt(frozen), rich and creamy tryfle (pudding)and fruit salad(செய்கிறேன்), மற்றவை வாங்கியுள்ளேன். விருப்பப்படி சாப்பிடுவார்கள்.

என் ஹஸ் சொல்வார், எக்ஸ்பரிமென்ட் எதுவும் செய்திட வேண்டாம், அது பிறகு எங்களுக்குச் செய்து பார்க்கலாம் என்று. நான் புதிதாக எதுவும், நீங்க சொன்னதுபோல்தான் விருந்துக்குச் செய்வதில்லை. அதிலும் வருபவர்கள் வெள்ளைகள்(whites).

ஐஸ்கிறீம் நன்றாக வருகிறது. கட்டியாவதற்காக வைத்துள்ளேன். படமெடுத்துப் போடுகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா வெயிட்
மே 16, 2008 - 3:36pm - வழங்கியவர் anjali73

அஹா.......அஹா.....ஹாய் அதிரா வெயிட் ஒரு நிமிஷம் நான் 1வாரத்து முன்னாடியே ஒருகிப்டு வாங்கி ஒளித்து வைத்திருந்தேன் ஆனால் அவர் எதையோ தேடும்போது பார்த்துட்டார் அதை அன்றே யுஸ் பண்ண ஆரம்பிச்சுடார்.
விலையுர்ந்த சென்ட்தான் அது.
இப்போ பிரெஸ்லெட் ஒன்னு வாங்கியிருக்கேன் ஆபீஸுலயிருந்து வந்ததும் ஒருசின்ன கேக் கட் பண்ண சொல்லி சர்பிரெஸா பிரெஸ்லெட்டை குடுத்து ஆசத்த போரென். கை மணிக்கூடு வாட்ச்தான் அப்படி எழுதிரிங்களா செந்தமிழில் செப்பிருங்க ரொம்பா அழகாகயிருக்கு அதிரா

ஹாய் அஞ்சலி
மே 16, 2008 - 9:14pm - வழங்கியவர் Renuka

நான் நலம்.நீங்க நலமா?எத்தனை வயதில் பிள்ளையை அனுப்பினாலும் முதன் முறை போகும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும்.அப்பறம் எல்லாம் சரியாகிடும்.
என் பையன் இப்பவே தமிழ்ல இங்லிஷ்ல 20 ரைம்ஸ் சொல்றான்.அவனை இப்ப ஸ்கூலில் போட்ட முதல் காரண்மே இங்லிஷ் பேசி கத்துக்கவும், நல்ல ஸ்கூலில் சேர்க்கனும் என்ற காரணத்திற்க்கா தான்.துபாயில் சீட்டு கிடைப்பது,அவ்வளவு கஷ்டம்.

நான் அறுசுவையில் ரெம்ப நாளா இருக்கேன்.இங்க நடக்கிற எல்லாத்தையும் படிப்பேன்.பதில் போட கூட நினைப்பது உண்டு.ஆனால் முடியாது.என் பையனுடன் மட்டும் தான் செலவிடுவேன்.அவனும் நானும் பேசி கொண்டே இருப்போம்.இப்பொழுது அவன் ஸ்கூல் சென்று விட்டானே.சோ நான் ஃபிரியா இருக்கேன்.அதான் இந்த ஒரு வாரமா என் பதிவுகளை பார்க்க முடியுது.

God is Great
மே 17, 2008 - 1:29am - வழங்கியவர் chimru

God is Great

அதிரா
மே 17, 2008 - 5:08am - வழங்கியவர் MarliyaNoohu

என்ன அதிரா விருந்தெல்லாம் ஆச்சா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஆ..... மர்ழியா ஆச்சு... ஆச்சு, அஞ்சலி....
மே 17, 2008 - 1:25pm - வழங்கியவர் அதிரா

மர்ழியா, வந்தவர்களைவிட இருந்தவர்கள்தான் அதிகம் சாப்பிட்டுவிட்டோம்..... சோ.....ஓஒ...... ரயேட்.....

அஞ்சலி.... அப்படியா சங்கதி?... அப்ப நீங்க குட் கேர்ள் தான், இனி ஹஸ் கண்டுபிடிக்காத இடமாகப் பார்த்து ஒழியுங்க என்ன?... கீப் இற் அப்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்