topic_image


கார்டன் II 70 ஐ தாண்டியாதால் இதில் தொடருகிறது.
அதிரா நன்றி.

எல்லா அ.சு. தோழிகளுக்கும் நன்றி.


கார்டன் III
மே 16, 2008 - 7:14am - வழங்கியவர் Vijitvm

ஹாய் அ.சு. தோழிகள் எல்லாருக்கும் தெரிவிக்கிறேன். என்னுடைய தோட்டத்தில் ஸுக்னி நன்றாக வள்ருகிறது. தக்காளி, கத்தரி,பூக்கள் எல்லாம் தற்போது நன்றாக வளர்ந்து கொண்டுள்ளது. என் வீட்டில் உள்ளே வாழை நன்றாக வளருகிறது.

ஹாய் சுபா
மே 16, 2008 - 8:10am - வழங்கியவர் Renuka

ஹாய் சுபா என் பையனுக்கு 2 வயது 5 மாதம் ஆகிறது.துபாய் இந்தியன் ஸ்கூல் என்று நான் கேள்வி பட்டது இல்லை.
Indian High School
Our Own
Kinderkarten starters
Milleniuum
இந்த நான்கு ஸ்கூல் தான் இங்கு நன்றாக உள்ளதாக சொல்லுகிறார்கள்.மில்லினியம் ஸ்கூல் அதிக பீஸ்.மற்ற 3 இடங்களிலும் முயற்டிக்கலாம்.
இப்பொழுது கோகுலை HAPPY KIDS NURSERY சேர்த்துள்ளேன்.அங்கு கிண்டர் கார்டன் அல்லது அவர் ஒன்னில் சேர்த்து விடுவதாக சொன்னார்கள்.பீஸ் மாதம் 900 திரகம்ஸ் ஆகும்.ஆனால் இடம் நன்றாக உள்ளது.அருகிலேயே டைனி டார்ட்ஸ் என்று மற்றொன்னு உள்ளது அங்கும் பள்ளியில் சேர்த்து விடுவார்கள்.ஆனால் இடம் சிறியதாக உள்ளது .சற்று இருட்டாக உள்ளது போல் உள்ளது, அது என் கணவருக்கு பிடிக்க வில்லை.பீஸ் 200 திரகம் (700)கம்மியாக இருக்கு.

குழந்தைகளுக்கான சீ,டி நான் நிறைய வைச்சிருக்கேன்.குறைந்தது 35 இருக்கு.உங்க ஐடி குடுங்க அனுப்ப முடிந்தா அனுப்பி வைக்கிறேன்.காப்பி போட்டு போட்டு விடுங்க.தமிழ் சீ.டி இங்க கிடைக்காது.ஊர்ல இருந்து நான் வாங்கி வந்தேன்.ரைம்ஸ் சும்மா போட்டு விடாத நாமும் அவங்க கூட பாடி டான்ஸ் ஆடனும்.அப்பதான் அதை அவங்க ரெம்ப விரும்புவாங்கா.நாம் டீவியில் வருவது போல் பாடினால் குழந்தைங்க நம்ம உதட்டு அசைவை வைத்து பாட முயற்சிப்பாங்க.
நாம் எப்பொழுதும் அவங்க கிட்ட பேசிகிட்டே இருக்கனும்.நிறையா கேள்வி கேக்கனும் புதுசா எதாவது பேசினாங்கன்னா அவங்களை என்கரேஞ் பன்னனும்.இது மாதிரி நிறையா இருக்கு.

வீக் எண்ட் முடியவிட்டு ஒவ்வொன்னா சொல்றேன்.

என் பையன் பேச ஆரம்பித்தான் நிறுத்தவே மாட்டான்.

HAPPY KIDS NURSERY சங்கர் சூப்பர் மார்க்கெட் எதிரில் இருக்கு.

அதிரா,மர்ழியா,மாலதிக்கா
மே 16, 2008 - 8:27am - வழங்கியவர் Renuka

அதிரா,மர்ழியா,மாலதிக்கா இங்கு பஸ்ஸில் தான் அனுப்பமுடியும்.வீட்டு அருகில் எல்லாம் பள்ளிகள் கிடையாது.ஸ்கூல் ஏரியாவே இங்கு இரண்டே இடங்கள் தான்.அங்கு தான் பிள்ளைகளை அனுப்ப முடியும்,
மேலும் இந்த துபாய் டிராபிக்கில் அலுவலகம் செல்லும் முன் குழந்தையை பள்ளியில் விட்டு செல்வது என்பது முடியாது காரியம்.

கிழக்கே ஆபிஸும் மேற்க்கே ஸ்கூலும் வடக்கே வீடும் உள்ளது,எப்படி இந்த துருவங்களை இனைப்பது.
டாக்ஸியில் ஆவது போய் வரலாம் என்றால் அதற்க்கு ஒரு மணி நேரம் நிற்க வேண்டும்.இந்த ஊர் வெயிலில் ஒரு முறை சென்றாலும் ஒரு வாரத்திற்க்கு படுக்கை போட வேண்டியது தான்.இங்கு நமக்கு ஏற்றது போல் இருக்க முடியாது.இடத்திற்க்கு தகுந்தாற் போல் நம்மை மாற்றி கொள்ள வேண்டும்.என் பையனை முதல் நாள் நர்சரி அனுப்பி விட்டு நான் அழுத அழுகை.அவன் கொஞ்சம் சினுங்கினாலும் எனக்கு அழுகை வந்து விடும்.இப்பொழுது நான் பிள்ளையை அனுப்ப ரெடி.அதற்க்கு என்னை தயார் படுத்தி கொண்டேன்.

இல்லையே
மே 16, 2008 - 8:45am - வழங்கியவர் MarliyaNoohu

இல்லையே ரேனுகா என் கஜின் கூட அங்குதான் இருக்கா 10 மினிட் தான் ஸ்கூல் போக அவளே போஇட்டு வந்திடுவா...

நானும் கூட என் பொண்ணுக்காகத்தான் டிரைவிங் படிக்க பழமுறை முயற்சித்தேன்..முடியவில்லை..இவ
ளுடன் டிரைவிங் படிக்க அலோட் இல்லையாம் என்ன பண்ண?அடுத்தமாதம் தான் டிரை பண்ணி பார்கனும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

இல்லை மர்ழியா
மே 16, 2008 - 9:04pm - வழங்கியவர் Renuka

நான் இருப்பது தேரா.ஸ்கூல் இருப்பது ஒரு இடம் கராமா.மற்றொன்று கிஸஸ்.இது ஒரு புறம் அது ஒரு புறம் இருக்கு.இரண்டுக்கும் நடுவில் நாங்க இருக்கோம்.துபாயில் மெஇன் ஏரியா நாங்க இருப்பது.இங்கு எல்லா வசதியும் கைக்கு எட்டின தூரத்தில் இருக்கும் ஸ்கூலை தவிர.இப்பொழுது செல்லும் நர்சரி ஓ.கே.கொஞ்ச தூரம் தான்.காலையில் என் பையன் தான் கடைசியாக ஏறுவான்.ஆனால் மதியம் ஒரு மணி நேரம் ஆகும்.காரில் சென்றால் 10 நிமிடத்தில் சென்று விடலாம்.நானும் டிரைவிங் பற்றி யோசித்தேன்.ஆனால் அது இங்கு அவ்வளவு எளிது அல்ல மர்ழியா.அது மட்டும் இல்லாமல் அதற்க்கு ஆகும் செலவு மிக அதிகம்.அதனால் அந்த என்னத்தை அப்படியே கை விட்டேன்.

அப்படியா ரேனுகா?தளிகா
மே 17, 2008 - 5:12am - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் அப்படியா ரேனுகா?ஆமாப்பா குழந்தைகளை வைத்துட்டு அதிக நேரம் செலவழிக்க முடியாது...அதனால்தான் நானும் போகல...என் பொண்ணை யாரிடமும் விட்டு போக மனம் இல்லை..அதோட யாரோடும் இருக்கவும் மாட்டாள்..அதனால்தான் இப்போதய்க்கு விட்டுட்டேன்...அவளை ஸ்கூலுக்கு அனுபிய பின் பார்கனும் அப்ப டைம் எப்படி போகுமோ தெரியல அதை பொறுத்துதான் இருக்கு....

தளிகா டாக்டரிடம் போனியா?இப்ப எப்படி இருக்கு?உன் பொண்ணு பாவம்பா என்ன பண்றா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

தளிகா
மே 17, 2008 - 6:01am - வழங்கியவர் Renuka

தளிகா உடம்புக்கு என்னாச்சு?உங்க பொன்னு எப்படி இருக்கா?இப்ப ரெம்ப வெயில் மோசமா இருக்கு.எனக்கும் இன்னிக்கு காய்ச்சல் வருவது போல் உள்ளது.என் பையனுக்கு காய்ச்சல் லேசாக உள்ளது.இப்பொழுது தான் மருந்து கொடுத்து தூங்க வைத்தேன்,ரோட்டா வைரஸ் என்று ஏதோ வந்துள்ளதாம்.அபுதாபியில் எங்கள் நன்பரின் மகனுக்கு அது தாக்கி ஒரு வாரம் ஹாஸ்ப்பிட்டலில் இருந்தான்,அதனால் அனைவரும் கவனமாக இருங்கள்.வெயில் எங்கும் போய்விட வேண்டாம்.உடம்பை கவனித்து கொள் தளிகா

ஹாய் ரேனு/ மர்ழியா
மே 17, 2008 - 6:32am - வழங்கியவர் thalika

பொண்ணு ஜாலியா அவ பாட்டுக்கு இன்னும் கொஞ்சம் ஆட்டம் போட்டுட்டு இருக்கா..இப்ப அவ எதை ஒடச்சாலும் கிழிச்சாலும் கேக்க ஆள் இல்லையே..அதுல வேற இடைலிடைல பக்கத்துல வந்து தூங்குன்னு கண் அடச்சு விட்டுட்டு போறது..அப்ப தானே இன்னும் ஜோரா நோன்ட முடியும்.
ரொம்ப வருஷமா உடம்பு சரியில்லாதவங்களை நான் தான் கவனிச்சு பழகிட்டேன் அதனால் என்னை மத்தவங்க கவனிக்கும்போது என்னவோ கஷ்டமா தோனுதுப்பா.
ஆமாம் ரேனு அதான் இங்க பஸ்ஸில் விடாம இருந்தா காரியம் நடக்காது.இப்ப இல்லாட்டாலும் 5 வயசிலாவது விட்டு தான் ஆகனும்.ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸில் கேட்டேன் 1700 திர்ஹம்ஸ் சொல்ராங்க.வேற நல்ல ப்லே ஸ்கூல் மதீனா சாயிதுக்கு பக்கமா ஒரு 2 மணிநேரத்துக்கு தெரியுமா?
பாத்துப்பா எனக்கு எங்கும் போக முடியாதபடி என் குடும்பத்தில் இங்க 4 குடும்பம் முழுக்க காய்ச்சல்,இருமல்..குழந்தைக்கு வராம இருக்கனும்

தளிகா
மே 17, 2008 - 6:44am - வழங்கியவர் Renuka

தளிகா நீங்க மதீனா சாயிதுன்னு சொன்னது உங்க வீடு இருக்கும் ஏரியாவா?நான் அங்கு உள்ள நண்பரிடம் கேட்டு சொல்கிறேன்.நாளை சொல்லவா?முதல் மாதம் பீஸ் அது இதுன்னு 1750 திரகம்ஸ் வந்தது.பிறகு மாதம் 900 வரும்.அதை டீடையிடா விசாரிங்க.நான் நாளை அவர்களுக்கு போன் செய்து விசாரித்து நல்ல ஸ்கூலை கண்டு பிடித்து தருகிறேன்.

எல்லோரும் இங்கே வாங்க வந்து சொலிட்டு போங்க
மே 17, 2008 - 7:14am - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் தளிகா அல்லாஹ் பரி பூரண சிபா தருவான் ஆமீன்...

ஹாய் எல்லோருக்கும் வாங்கப்ப இங்கே ஆப்பத்துக்கு சரியான மேச் ஆகும் வெஜ் ஐட்டம் ஏதாவது கொடுங்கப்பா .நான் வைட்டிங் பதில் போடுங்க அன்புடன்,
மர்ழியாநூஹு

ரேனுகா
மே 17, 2008 - 7:15am - வழங்கியவர் MarliyaNoohu

ஆமாம் ரேனுக அது தளிகாவின் ஏரியாதான் தெரிஞ்சவங்க இருந்தா அவளுக்கு சொல்லுங்க ஹெல்பா இருக்கும் அவளுக்கு,,,

அன்புடன்,
மர்ழியாநூஹு

பச்சை வெஜ் குருமா
மே 17, 2008 - 7:25am - வழங்கியவர் Jaleela Banu

என்ன மர்லியா பச்சை வெஜ் குருமா பார்க்கவில்லையா ரொம்ப சூப்பர்.
இதையும் ஒரு முறை டிரை பண்ணுங்க

ஜலீலா

தளிகா,மர்ழியா
மே 17, 2008 - 7:29am - வழங்கியவர் Renuka

நிச்சயம் மர்ழியா,எங்கள் ரெம்ப நெருங்கிய நண்பர் அங்கு உள்ளார்,2 நாளாக அனைவரும் இங்கு தான் இருந்தார்கள்.இன்று காலை தான் அபுதாபி சென்றனர்.இந்த சிறு உதவி கூட செய்யாமல் இருப்பேனா?ஆனால் அபுதாபியில் ஸ்கூல் எளிதில் கிடைத்து விடும்.நர்ஸரி போட வேண்டும் என்ற அவசியமில்லை,.இது உங்களுக்கு தெரியுமா தளிகா..துபாய் தான் அதிகம் கஷ்டம்.அதனால் தளிகா யோசித்து முடிவெடுங்கள்.ஸ்கூல் சேர்க்கும் 3 மாதம் முன் வேண்டுமானால் உங்க பொண்ணை நர்ஸரியில் போடுங்க.அவ இங்கிலிஷ் பேசி கத்துக்குவா.அபுதாபி அமைதியான ஊர்.லைப்பை என் ஜாய் பன்னுங்க.

ஜலிலக்கா..
மே 17, 2008 - 7:31am - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் ஜலிலாக்கா உங்க குறிப்பைதான் பார்த்துட்டு இருக்கேன்..நீங்க வேரு டெங்ஷனில் இருப்பதால் பதில் சொல்ல வரமாட்டிங்கன்னு நினைத்தென் அதான் உங்களை கூப்பிடல ஏன் தொந்தரவு கொடுக்கனும்னு ரொம்ப தேங்ஸ்க்கா பார்கிறேன்..அப்புறம் நாளை உங்க பிரை ரைஸ் தான் இன்னும் கொஞ்ச நேரம் இருபீங்களா?ஏதாவது டவுட் இருந்தால் கிலியர் பண்ணிக்கறேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஆமா மர்ழியா
மே 17, 2008 - 9:04am - வழங்கியவர் mali

ஆமா மர்ழியா, இனி என்னை யாரும் கேடின்னு கூப்பிட முடியாதுல்ல :-)) எல்லொருக்கும் என்னை அடையாளம் தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.
எல்லொருக்கும் அறிவிப்பது என்னன்னா நான் KT இல்லை, mali

மாலி வைத்துட்டாங்க ஆப்பு
மே 17, 2008 - 9:12am - வழங்கியவர் MarliyaNoohu

ஆஹா மாலி பெயர் மாற்றிய உடனேயே எனக்கே ஆப்பா?நாந்தானே சும்மா அப்படி அழைப்பேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

தீசிஸ்சே எழுதலாம்...
மே 19, 2008 - 1:18am - வழங்கியவர் Subha Jayaprakash

ஹாய் ரேணு எப்டி இருக்கீங்க,
ரெண்டு நாளா சரியா தூக்கம் இல்லபா..
நானும் ஸ்கூலுக்கு போற மாதிரி கனவு வந்து ஒரே டென்ஷன்..
என்னோட ஐடி தர்ரேன்.. நீங்க போன் நம்பர் தாங்க.. நான் கூப்பிடுறேன்...

சீடி என்னிடமும் இருக்கு... ஆனா டாம் அன்ட் ஜெர்ரி பாக்குற அளவு பாக்க மாட்டேன்கிறான்...

அப்புறம் டீடெயிலா எழுதுறேன்..

கார்டனுக்கு :

வெள்ளிக்கிழமை மண் வாங்கி வெந்தயமும், மிளகாயையும் தூவி விட்டாச்சு.... இன்னைக்கு 2 முளை விட்டு இருக்கு... சாதாரணமாக எத்தனை நாள் கழித்து முளை விடும்..???

யுஏஇ வாழ் மக்களே...

கார்டன் பத்தி படித்து மண் வாங்கிய கதையை ஒரு தீசிஸ்சே எழுதலாம்...

10லி, 20லி, 50லி என எல்லா வகைகளிலும் மண் கிடைக்கிறது.. நான் டைசோவில் 1 கிலோ 6 திராம்ஸ்க்கு வாங்கிய பின் செக் பண்ணியது தான் இது..

மண் ரொம்ப சீப் ஹைபர் பாண்டாவில் தான்... தொட்டி சிறிய அளவு, பெரிய அளவு எது வென்றாலும் சீப் இங்கே தான்...

டைசோவிலும் தொட்டி கிடைக்கிறது... இங்கும் வாங்கலாம்..

ஐக்கியா ரொம்ப ஜாஸ்தி விலை.. எல்லாமே... தொட்டி, மண்....

எனது கேள்விக்கு ரஜினி,விஜி, மற்றும் எனது அறுசுவை தோழிகளே பதில சொல்லுங்க!!

மாலதி மேடம் பிஸியா???

மெயில் ஐடி
மே 19, 2008 - 1:23am - வழங்கியவர் Subha Jayaprakash

அன்புள்ள தோழிகளே,
என்னுடைய மெயில் ஐடி வைத்திருப்பவர்கள் யாராவது ரேணு வின் ஐடி வைத்திருந்தால் தயவு செய்து எனக்கு ஃபார்வேட் பண்ணுங்கள். நன்றி

மாலி
மே 19, 2008 - 1:31am - வழங்கியவர் thalika

ஓஹ் கேடி மாலி ஆயாச்சா..அதெப்டி?அக்காவும் தங்கையும் எப்பவாவது தலைகாட்டினால் தான் சந்தோஷமா இருக்கு

சுபா மண் வாங்கியாச்சா..வாழ்க செடிகொடிகள்.

ரேனு சொல்லுங்க மெதுவா.ஆமாம் நான் கண்டிப்பா அபுதாபி வாழ்க்கையை எஞாய் பன்றேன் மெதுவா கேட்டு சொல்லுங்க..நான் இப்பத்திக்கி காலையில் தினமும் பொண்ணை கூட்டிட்டு வெளிய போவேன் .இங்கே சுற்று முற்றும் நடந்து எல்லா விஷயமும் சொல்லிக் கொடுப்பேன்..
ஆனால் கூட விளையாட குழந்தை மட்டும் இப்பவும் கிடைச்சபாடில்லை அதுக்கு தான் ப்லே ஸ்கூல் விடுவதைப் பற்றி யோசித்தேன்.

கம்பிமேல் இருப்பவர்கள் கவனிங்க!!!
மே 19, 2008 - 3:04am - வழங்கியவர் Subha Jayaprakash

கார்டனில் நான் கேட்ட கேள்வியின் பதிலை கம்பிமேல் இருப்பவர்கள் கவனிங்க!!!

வீட்டில் தோட்டம் போட்டாச்சா???
மே 19, 2008 - 3:25am - வழங்கியவர் Subha Jayaprakash

குலசை சார்,
இது நாம் தரையில் நடுவதற்கு பயன் படும்.
இங்கே நான் தொட்டியில் தான் வைக்க பாடுபடுகிறேன்...உரம் பற்றியும் மற்ற விசயங்களையும் தேடிக்கொண்டு உள்ளேன்...
இப்போது தான் முளை விட்டு இருக்கு பார்ப்போம்...

எனக்கு மிகவும் பேசிக்கில் இருந்து தோட்டம் பற்றி தெரியவேண்டும்... அது தான் நான் கேட்டேன்...
இவ்வளவு டீடெயில்ஸ் என்றால் வீட்டில் தோட்டம் போட்டாச்சா???

கார்டன் III அதிரா
மே 22, 2008 - 12:06pm - வழங்கியவர் Vijitvm

இங்கு கார்டனை பற்றி தொடரலாம். இது கார்டனுக்கு மட்டும் தான். என்ன அதிரா ஒ.கே வா.