topic_image


வாழ்த்துவோம் வாருங்கள்!
500 ஐ நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் சகோதரிகள் செல்வி,ஜலிலா,சுபா ஆகியோருக்கு முதலில் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
அவர்களின் இயல்பான பணிகளுக்கிடையில் இது ஒரு கடின உழைப்பு தான். பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
வயதில் மூத்தவன் குறிப்புகளில் இளையவன்(50 ஐ எட்டி பிடித்து விட்டேன். அது வேறு விசயம்) என்ற உரிமையில், அட்மினுக்கும், ஏனைய சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்.
500 ஐ தொடும் சகோதரிகளுக்கு அறுசுவை.காம் சார்பாக "அறுசுவை ராணி" எனும் பட்டத்தை வழங்கலாமே! இதற்காக தனியாக விழா எடுக்கலாம் அல்லது அறுசுவையின் ஆண்டு விழாவோடு சேர்த்து இதையும் கொண்டாடலாம். நினைவு பரிசு வழங்கலாம்.
அட்மினும் மற்ற சகோதரிகளும் தயவு செய்து இதை பற்றி சிந்தித்து தங்களின் கருத்துக்களை இந்த திரெட்டினில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முன்பு சில திரெட்டுகளில், குறிப்பாக அமெரிக்கா வில் விலையேற்றம் பற்றிய திரெட்டில், நம் நாட்டு மக்களை இழிவாக பேசிய புஷ் பற்றி உங்களின் கண்டன கணைகளை எதிர் பார்த்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. 2 சகோதரிகள் மட்டுமே பதிவு செய்தார்கள். அது நம் நாட்டு மான பிரச்னையாக இருந்தும் ஏனோ யாரும் கண்டு கொள்ளவில்லை..
அதை மாதிரி இதிலும் அலட்சியமாக இருந்து விடாமல் தங்கள் அனைவரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தாருங்கள்.அட்மினுக்கும் வேண்டுகோள் வையுங்கள். கூட்டாஞ்சோற்றில் ஒன்று கூடி விழா எடுப்போம். அவர்களை கவுரவபடுத்துவது நமது கடமை.
இது பின் வந்து கொண்டிருக்கும் 300, 100 ஐ தொட்டவர்களுக்கு (மனோ,சரஸ்வதி,கதீஜா,ஜெயந்தி,தளி
கா,அஸ்மா,ஜுலைகா போன்றோர்களுக்கு) ஊக்கமாக அமையும்.

பி.கு; கடந்த காலங்களில் நான் கண்டது,கேட்டு அறிந்தது,படித்து தெரிந்தது இவைகளையெல்லாம் வீட்டில் அவ்வப்போது மனைவியின் ஒத்துழைப்புடன் செய்து பார்த்த பின்பு அறுசுவையில் 50 குறிப்புகள் தந்திருக்கிறேன். இன்னும் வளரும்.
ஒரு மின்னியல்(திட்டம்) பொறியாளருக்கு சம்பந்தமே இல்லாத துறை இது. இருந்தும் காலத்தின் கட்டாயத்தினால் சமையலை கண்டிப்பாக கற்றுத் தான் தீர வேண்டும் என்ற சூழ்நிலைக்கு ஒரு காலத்தில் தள்ளப் பட்டதின் விளைவு(அது ஒரு சோகக் கதை. அதை சொன்னால் நீண்டு கொண்டே போகும்) இன்று என் இல்லத்தரசிக்கும் சமையல் பாடம் எடுக்கும் அளவுக்கு முன்னேறி விட்டேன். அறுசுவையில் 50 குறிப்புகள் கொடுத்த ஆண் உறுப்பினர் நானாகத் தான் இருக்கிறேன் என்பதில் பெருமையடைகிறேன்.
கண்டிப்பாக அறுசுவை சகோதரிகள் அனைவரும் இங்கு பதிவு தர வேண்டுகிறேன்.
இறுதியாக 50.... 500ஐ வாழ்த்துகிறது.
நன்றி
குலசை சுல்தான்.


ஆ.... 500 ஆஆ.........
மே 19, 2008 - 4:06am - வழங்கியவர் அதிரா

500 ஐத் தொடப் போடப்போகிறார்களா?..... என்ன ஆச்சரியம், நான் சமைக்கத்தொடங்கிய காலத்திலிருந்து எண்ணினாலே 500 வகையாக சமைத்திருப்பேனோ என்பது சந்தேகமாகவே இருக்கு.
சீக்கிரமே 500 ஐத் தொட என் வாழ்த்துக்கள்.

என்ன அங்கிள் உங்கள் 16 குறிப்பைப் பார்த்த ஞாபகம்தான் எனக்கு இருக்கு அதற்கிடையில் 50 என்கிறீர்கள். எல்லோரும் பயங்கரமாக முன்னேறுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

குலசை அண்னா,,,
மே 19, 2008 - 6:54am - வழங்கியவர் MarliyaNoohu

ஆமாம் அவர்கள் அனைவரும் குறிப்பில் சும்மா பின்னுறாங்க..கண்டிப்பாக பட்டம் கொடுத்து ஆகனும்..இதில் அட்மின் ஒன்னும் சொல்லமாட்டார்அவருக்கு இதில் பெருமைதான் இருக்கும்..ஆனால் பரிசு சரிபடாது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில் இருக்கின்றார்கள் இதுவே என் கருத்து..

அன்புடன்,
மர்ழியாநூஹு

சகோ சுல்தான்
மே 19, 2008 - 6:19pm - வழங்கியவர் vinnie

சகோ சுல்தான் சார் மர்ழியா சொன்னது போல் ஒவ்வொருவரும் ஒரு திசையில் இருப்பதால் ஒரு விழா எடுத்து அனைவரையும் ஒன்று சேர்ப்பது கடினம். கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் பாராட்டப் பட வேண்டியவர்கள்தான். புதிய தளம் மாறும்போது தளத்திலேயே அவர்களை அட்மின் பெருமைப் படுத்துவார் என எண்ணுகிறேன்.

நீங்களும் மெஹர் மேடமும் தரும் குறிப்புகள் எல்லாம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. உங்கள் இருவரின் சேவையும் அறுசுவையில் மேன்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியும்.

குறிப்புகள்
மே 19, 2008 - 10:17pm - வழங்கியவர் thalika

ஆமாம் தளத்திலேயே அவர்களை கவுரவப்படுத்தலாம்.அதனை அட்மின் தவறாமல் செய்துள்ளார்.
நீங்களும் சீக்கிரம் 50 ஐ தொட்டு விட்டீர்கள் வாழ்த்துக்கள்.இது போன்ற நல்ல குறிப்புகள் இன்னும் கொடுங்க

சகோதரர் சுல்தான் அவர்களே
மே 19, 2008 - 10:25pm - வழங்கியவர் kr

சகோதரர் சுல்தான் அவர்களே,
நான் மர்ழியா மற்றும் வானதி சொல்வதை ஆமேதிக்கிறேன்.ஆம் அனைவரையும் ஒன்று சேர்ப்பது கடினம்.விழா எடுக்க முடியாவிட்டாலும் வானதி கூறியது போல் தளத்திலேயே வாழ்த்திவிடுவோம்.
ம்ம்ம்....மார்க்கப்பணிகளுக்கு இடையில் தாங்களும் 50 குறிப்புகள் கொடுத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை.பிடியுங்கள் எங்கள் அனைவரது வாழ்த்துக்களையும்...

அண்ணி இப்ப தான் 16
மே 20, 2008 - 1:15am - வழங்கியவர் Jaleela Banu

அட மெஹர் அண்ணி இப்ப தான் 16 பார்த்த மாதிரி இருந்தது, அதற்குள் 50 ஐ தண்டியாச்சா வாழ்த்துக்கள். இன்னும் பலநூறு குறிப்புகல் கொடுக்க.
எல்லாம் நல்ல வித்தியாசமான ரெஸிபி.

ஜலீலா

இங்க என்ன நடக்குது... 3 people in First Rank
மே 20, 2008 - 6:37am - வழங்கியவர் இலா

நானும் பாத்துட்டே இருக்கேன்.. சுபா/ஜலீலக்கா/செல்விமா.. மூன்று பேரும் 462 .. இதைப்போல மீண்டும் ஒரு முறை 3 பேர் ஒரே எண்ணிக்கையில் வருவது என்பது மிக கடினம்...

உங்களுக்கு எனது பாராட்டுக்கள்... ஏதோ விறு விறுப்பான ஒரு டென்னிஸ் மேட்ச் பார்பது போல இருக்கு.. ( பி.கு எனக்கு டென்னிஸ் மிக பிடிக்கும்)
இடையிலே ஒரு பயம்.. இந்த அருசுவை மெதுவா சுத்தி சுத்தி பேஜ் வருவதற்க்குள் சுபா இன்னும் ஒரு குறிப்பு போட்டுடுவாங்களேன்னு....

எப்படி ஜலீலாக்கா நீங்க இப்படி சொல்லலாம்...
மே 20, 2008 - 6:42am - வழங்கியவர் இலா

உங்க மெஹர் அண்ணி ( என் ஆன்டி) எப்போதும் 16 லே தான்... அப்படி சொன்னாதான்.. அண்ணனுக்கு ஒழுங்கா குபூஸ் கிடைக்கும்....

அங்கிள்.. உங்களுக்காக...
மே 20, 2008 - 7:07am - வழங்கியவர் இலா

http://youtube.com/watch?v=-
QUAxnY8moE

Marliza .. for you too .. i know you like this song too...

அப்படியே... நான் இப்போதைக்கு அப்பீட்ட்
Hope is just the part of the equation

superb song ila
மே 20, 2008 - 7:14am - வழங்கியவர் harigayathri

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு இலா அத இப்போ நியாபகப்படுத்துனதுக்கு ரொம்ப thanks. அதோட அங்க உள்ள எல்லா song super அழகன் படம் பாட்டு கூட அதில் இருந்துச்சு இலா really funtastiv songs and my evergreen favourite songs

சுல்தான் அங்கிள்,
மே 20, 2008 - 7:20am - வழங்கியவர் அதிரா

ஆயிரம் வேலைகளுடன் இருக்கும் சகோதரர் அட்மினுக்கு நாம் ஏன் தொந்தரவு கொடுப்பான்?, ஏதாவது தவறிருந்தால் அவர் தெரியப்படுத்தினாலே போதும்.

நாங்கள் ஊக்குவிப்போம் வாழ்த்துவோம்... ரெடியாவோம்.... ஆனால் எங்கள் அவசரத்தைப் பார்த்து குறிப்பெழுதுபவர்களும் அவசரத்தில் பொருட்களை மாறிச் சேர்த்திடப் போகினம், பார்த்து....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இலா உங்கள் பாட்டு
மே 20, 2008 - 7:27am - வழங்கியவர் அதிரா

இலா உங்கள் பாட்டு பார்த்து அப்படியே உறைந்து போயிற்றம் எல்லோரும்... இப்ப எனது நடனம் பாருங்கோ.... ஒரு உற்சாகம் பிறக்கும்.... அங்கிள் மன்னிக்கவும்.... வாழ்த்துடன் ஒரு பாடல் கேட்டால் நல்லது என்று நான் பாடுகிறேன்.....

http://www.youtube.com/watch?
v=HWD6SI3Orc0

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

குலசை அண்ணா,இலா
மே 20, 2008 - 7:37am - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் இலா என் லவ்லி சாங்க்பா எய் மறந்து போனேன் கேட்டு ரொம்ப நாளாச்சு...ரொம்ப தேங்ஸ் இலா..

ஓஹ் குலசை அண்ணா ஏன் அட்மின் அவர் வெளியூர் ஏதும் போஇ இருப்பார்,இல்லை பிஸியா இருக்கலாம் கண்டிப்பா வாழ்த்து சொல்லுவார்..அண்ணா வீட்டில் அனைவரும் நலமா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அதிரா குத்துபாட்டு...
மே 20, 2008 - 7:40am - வழங்கியவர் இலா

குத்துன குத்துல.. குமரன் ஓடிவாராரு... நான் அருசுவை க்லோஸ் பண்ணி போனபின்.. மறுபடி செக் செய்தால்.. இங்க அதிரா ஒர்ரே ஆட்டம் தான் போங்க...

வெரி நய்ஸ்

உங்கள் பேமிலி மெம்பர்ஸை
மே 20, 2008 - 7:47am - வழங்கியவர் Jaleela Banu

அதிரா நேற்று உங்கள் பேமிலி மெம்பர்ஸை அறிமுகபடுத்தியத்ற்கு ரொம்ப நன்றி, நான் ரொம்ப ரசிச்சி பார்த்தேன்.

ஆ அம்மா வரங்காளா ஜாலிதான், நல்ல என்சாய் பண்ணுங்கள்.
ஜலீலா

தரையில் நடக்கமாட்டீங்களா?
மே 20, 2008 - 7:54am - வழங்கியவர் Jaleela Banu

மர்லியா உங்க வீடு ஒரே அமர்களம் தான் என்ன சொன்னீங்க கை கால் ஓடலையா பார்த்து பா அப்ப எப்படி தரையில் நடக்கமாட்டீங்களா?

அப்ப உங்க அக்காவையும் அருசுவைக்கு அறிமுகபபடுத்துங்கள்.
நீங்களும், அதிராவும் பேசுவது எனக்கு ரொம்ப சிரிப்பா இருக்கும், அதை படிக்கும் போது இந்த பக்கம் யாராவது போனா இங்க என்ன தனியா சிரிக்கிறாங்க என்று பார்ப்பார்கள்.
ஜலீலா

குலசை அண்ணா
மே 20, 2008 - 7:58am - வழங்கியவர் MarliyaNoohu

ஹா ஹா குலசை அண்ணாஇங்கும் அதே நிலைதான் ஏஸி கூட கூல் தர மாட்டிகுது வெயிலுக்கு பயந்து இப்ப வெளியே பார்கலயா?சூப்பர் கிலைமேட் செம காற்று அழகா இருக்கு கிலைமேட்,,போஇ பாருங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

இலா என்ன ஜாலியா
மே 20, 2008 - 8:04am - வழங்கியவர் Jaleela Banu

இலா என்ன இன்னைக்கு ரொம்ப ஜாலியா பேசிக்கொண்டிருக்கிறீர்கள், டீ குடிச்சாச்சா?

வேலைக்கு கிளம்பளையா?
ஜலீலா

ஜலிலக்கா..
மே 20, 2008 - 8:08am - வழங்கியவர் MarliyaNoohu

நக்கலா போச்சு இந்த அக்காக்கு...
எனக்கும் ஒரு டைம் கிடைக்காமலா போஇடும் பார்கலாம்..தோ அக்கா ஐடி ரெடி புதிதாக இணைந்தவர்கள் பட்டியலில் வந்தாச்சு irfanahussain ந்னு ...

அன்புடன்,
மர்ழியாநூஹு

குழந்தைகள் லீவில் கம்பியுட்டர்
மே 20, 2008 - 8:09am - வழங்கியவர் Jaleela Banu

குழந்தைகள் லீவில் கம்பியுட்டர் முன்னாடி உட்கார்ந்தால் பசிக்கவே பசிக்காது, நீங்கள் தான் அப்ப அப்ப ஏதாவது கொடுத்து கொண்டே இருக்கனும். அப்ப மட்டும் நீங்க என்ன கொடுத்தாலும் கண்ணை மூடி கொண்டு சாப்பிடுவார்கள்.
ஜலீலா

அதிரா
மே 20, 2008 - 8:11am - வழங்கியவர் aniaksh

அதிரா, உங்க ஆட்டத்தைப் பார்த்தா உங்களை சாந்தப்படுத்த ஒரு குடம் மஞ்சத்தண்ணி போதாது போல இருக்கே. இப்பதான் உடம்பு கொஞ்சம் சரியாகி அறுசுவைப்பக்கம் வந்து குதிச்சேன். உங்க ஆட்டத்தப்பார்த்து அப்படியே ஆ.......டி போயிட்டேன்
Rajini

ஜலிலாக்கா அண்டு ஆல்
மே 20, 2008 - 8:13am - வழங்கியவர் MarliyaNoohu

அய்யோ ஜலிலாகா டீயா?இப்பதான் நியாபகம் வருது கிச்சனில் வைத்துட்டு வந்துட்டே குடிக்கனும் ஹா ஹா அதுவரை இதை பாருங்கோ..இலா போயாச்சு...
http://youtube.com/watch?
v=XhyYjDloC_w&feature=related

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹி ஹி
மே 20, 2008 - 8:14am - வழங்கியவர் MarliyaNoohu

ஹி ஹி இருமுறை பதிவாகிட்டு திட்டாதீங்கோ..ஜலிலாக்கா வேலைலாம் ஓவரா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
மே 20, 2008 - 8:24am - வழங்கியவர் aniaksh

மர்ழியா,
எப்படி இருக்கீங்க?. இன்னக்கு என்ன எல்லாரும் யூ ட்யூப் பும் கையுமா சுத்துறீங்க. ஆரம்பிச்ச பெருமை இலாவைச் சேரும். அடுத்து யாரு வரப்போறாங்களோ தெரியலையே
Rajini

அன்பு ரஜினி,யக்காவ்,அதிரா
மே 20, 2008 - 8:37am - வழங்கியவர் MarliyaNoohu

ஜலிலாக்கா பிரீனா கொஞ்சம் மெஷ்சேங்ஜரை ஓப்பன் பண்ணி பாருங்க ஆப் லைன் மெஷேஜ் போட்டு இருக்கேன்..

ஹாய் ரஜினி நாந்தான் கேட்கனும் நலமா?ஹா ஹா ஒரே அமர்கலம் என் பொணு தூக்கம் அதான் கலக்கலா இருக்கேன்னு வந்து இருகேன் எல்லாம் அவ முழிக்கும் வரைதான்..அதிரா போயாசா?சவுந்தே இல்லை?

அன்புடன்,
மர்ழியாநூஹு

நல்லா இருக்கேன் மர்ழியா
மே 20, 2008 - 8:54am - வழங்கியவர் aniaksh

நல்லா இருக்கேன் மர்ழியா. இப்போ கொஞ்சம் பெட்டர். பொண்னும் தூங்கறா. அதுனால நிம்மதியா இங்க வந்துட்டேன்.
அதிரா இப்போ ரெஸ்ட்ல இருக்காங்க. இல்ல யார்கண்டா அடுத்த பெர்பாமன்சுக்கு ரெடியாகராங்களோ என்னவோ.
Rajini

ரஜினி
மே 20, 2008 - 9:45am - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் ரஜினி ரொம்ப கஸ்டமா இருக்கு கொஞ்ச நாளா நிறைய பேருக்கு உடம்பு முடியாமல் போயிட்டு ஆமாமா மாகாராணிங்கல்லாம் தூங்கினாதான் நமக்கு இப்படிலாம் பேச முடியும் எழுந்து ஒரே ஆட்டம்..சிங்கில் கேப்பில் வந்தேன்..
அன்புடன்,
மர்ழியாநூஹு

கப்பலேரிப் போச்சே
மே 20, 2008 - 10:18am - வழங்கியவர் thalika

அதிரா என் மானம் கப்பலேரிப் போச்சே .ரொம்ப தர்ம சங்கடமான நிலையில் இருக்கேன்..அ
திரா அனுப்பின லின்கோட நிறுத்தியிருக்கலாம்.அதை சத்தமா போட்டு விட்டு இவரையும் இவர் தம்பியையும் அக்கா பிள்ளைகளையும் கூப்பிட்டு சுவாரசியமா பாத்தேன்..அடுத்து க்ரேசி ஃப்ராகும் அது தான் போலன்னு ஈன்னு இளிச்சுட்டே கேட்டேன்...ஒரு நிமிஷம் எனக்கு குலை நடுங்கிப் போச்சு அப்ப எதை அமுக்க எங்க ஆஃப் பன்னன்னு கூட மறந்து போச்சுப்பா..யாரும் தப்பி தவறி குடும்பத்தோட கண்டதையும் அழுத்திடாதீங்க..பொல்லாத காலமப்பா

Talika
மே 20, 2008 - 10:41am - வழங்கியவர் இலா

This happens to everyone ( mostly i guess).
Now clear all the old history by going to Tools-Internet options - Browsing history - Delete - Delete All. Close all your sessions and then start fresh sessions later on.
Never click on the next video or next Blog If you are viewing a blogspot page.

ila

என்ன தளிகா
மே 20, 2008 - 11:08am - வழங்கியவர் அதிரா

என்ன தளிகா
என்ன நடந்தது. நான் அனுப்பின பாட்டு தன்பாட்டில் பாடி ஓவ் ஆகிடுமே... வேறு பாட்டு வராதே..... நீங்க வேறு ஏதாவது கிளிக் பண்ணிட்டீங்களா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

57 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »