topic_image


தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.நேற்று நானும் என்னவரும் செல்ஸி ப்ளவர் ஷோவுக்கு போனோம் ரொம்ப நல்லா இருந்தது.போட்டியும் வைத்திருந்தார்கள் யார் கார்டன் அழகாக செட் போட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசுகளும் கொடுப்பார்களாம்.எல்லோரும் விதவிதமாக வடிவமைத்திருந்தார்கள்.ரொம்பவும
் ரசித்து பார்த்தோம்.பூக்களுடன் மர வகைகளும் வைத்திருந்தார்கள்.நம்ம ஊர் வாழை,தென்னை,பப்பாளி மரம் வைத்திருந்தார்கள்.குரோடன்ஸ்,நி
றைய விதமான ரோஸ் மற்றும் லவெண்டர் இன்னும் எனக்கு தெரியாத நிறைய பூக்கள் இருந்தது.தக்காளியும்,மிளகாய் செடியும் கொத்து கொத்தாக காய்த்திருந்தது பார்க்கும் பொழுது எனக்கு பறித்து வந்துவிடலாம் போல இருந்தது.அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதோ சில புகைப்படங்கள் உங்களுக்காக தோழிகளே.பாருங்கள் ரசியுங்கள்
http://community.webshots.com/
album/563544082WrTNJF
அன்புடன் தீபா


ப்ளவர் ஷோ
மே 22, 2008 - 12:44pm - வழங்கியவர் pradeebala

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.நேற்று நானும் என்னவரும் செல்ஸி ப்ளவர் ஷோவுக்கு போனோம் ரொம்ப நல்லா இருந்தது.போட்டியும் வைத்திருந்தார்கள் யார் கார்டன் அழகாக செட் போட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசுகளும் கொடுப்பார்களாம்.எல்லோரும் விதவிதமாக வடிவமைத்திருந்தார்கள்.ரொம்பவும
் ரசித்து பார்த்தோம்.பூக்களுடன் மர வகைகளும் வைத்திருந்தார்கள்.நம்ம ஊர் வாழை,தென்னை,பப்பாளி மரம் வைத்திருந்தார்கள்.குரோடன்ஸ்,நி
றைய விதமான ரோஸ் மற்றும் லவெண்டர் இன்னும் எனக்கு தெரியாத நிறைய பூக்கள் இருந்தது.தக்காளியும்,மிளகாய் செடியும் கொத்து கொத்தாக காய்த்திருந்தது பார்க்கும் பொழுது எனக்கு பறித்து வந்துவிடலாம் போல இருந்தது.அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதோ சில புகைப்படங்கள் உங்களுக்காக தோழிகளே.பாருங்கள் ரசியுங்கள்
http://community.webshots.com/
album/563544082WrTNJF
அன்புடன் தீபா

ப்ளவர் ஷோ
மே 22, 2008 - 2:00pm - வழங்கியவர் Vijitvm

ஸுப்பர், ரோஸ் ரொம்ப நன்றாக இருக்கு.

விஜி நன்றி
மே 23, 2008 - 8:44am - வழங்கியவர் pradeebala

விஜி ரொம்ப நன்றி.பூக்களை பார்த்து ரசித்து கருத்தும் சொல்லியதற்கு.
எங்கப்பா எல்லோரும் பார்த்து ரசிக்க தானே கொடுத்தேன்.வந்து பாருங்க எல்லோரும்

ஹாய் தீபா
மே 23, 2008 - 10:03am - வழங்கியவர் seyedkatheeja

நீங்கள் மட்டும் பார்த்து ரசித்ததோடு இல்லாமல் அதை போட்டோவில் பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு தந்ததற்க்கு நன்றி. எல்லாம் அருமையாக இருந்தது.

அன்புடன் கதீஜா.

கதீஜா யான் பெற்ற இன்பம்
மே 23, 2008 - 10:19am - வழங்கியவர் pradeebala

ஹாய் கதீஜா ரொம்ப நன்றி பாராட்டியதற்கு.யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்று எண்ணி தான் இதை பதிவு செய்தேன்.நேற்றே உங்களுக்கு பதில் கொடுக்க நினைத்தேன் என்னவர் வந்துவிட்டதால் போய்விட்டேன்.நான் நலம் உங்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது இப்பொழுது கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் அடுத்த
வாரம் பேசலாம்
அன்புடன் தீபா

தீபா
மே 23, 2008 - 11:03am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் தீபா நலமா?இபோதான் பார்த்தேன் ரொம்ப அருமைப்பா எவ்லோ அழகு மாஷஅல்லாஹ் பச்ச பசேல்ன்னு வாவ்..ரொம்ப தேங்ஸ்பா எங்களோட பகிர்ந்து கொண்டதுக்கு...

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
மே 23, 2008 - 11:06am - வழங்கியவர் pradeebala

ஹாய் மர்ழியா நலமா?பொண்ணு எப்படி இருக்கா?ரொம்ப நன்றிப்பா பாராட்டியதற்கு.
அன்புடன் தீபா

ஹாய் தீபா,
மே 23, 2008 - 12:23pm - வழங்கியவர் Subha Jayaprakash

ஹாய் தீபா,
பார்க்க பார்க்க திகட்டாமல் ரசிக்கும் படியாக உள்ளது...
அப்படியே வலையினுள் புகுந்து அங்கே போய்விடமாட்டோமா என்று உள்ளது.. துபாயில் சூடு தாங்கல

ஹாய் சுபா
மே 23, 2008 - 12:34pm - வழங்கியவர் pradeebala

ஹாய் சுபா நலமா?முதலில் பாராட்டியதற்கு நன்றி.இங்கையும் மதியம் சூடு தாங்காது விடியகாலையும்,இரவும் குளிரும்.அங்கெல்லாம் ப்ளவர் ஷோ நடத்தமாட்டாங்களா?இப்ப அங்க எத்தனை மணி இங்க சாயங்காலம் 6.45 ஆகுது
அன்புடன் தீபா

அருசுவையில் புதிதாக
மே 23, 2008 - 4:46pm - வழங்கியவர் blackrose

அருசுவை சகோதரிகளே..பல மாதங்களாக அருசுவையின் பார்வையிட்டு வந்து..இப்போ உங்களோடு பேச வருகிறேன்..நாங்கள் வீடு மாறி இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன எல்லாம் சரியான பிறகு குறிப்புகள் அனுப்புகிறேன்.

ப்ளவர் ஷோ
மே 23, 2008 - 5:12pm - வழங்கியவர் VidhyaSaravanan

ஹாய் தீபா

தாங்கள் ரசித்ததோடு அல்லாமல் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மலர்களுக்கு நடுவே உங்கள் மலர் முகம் தெரியுமோ என்று ஆவலாய் பார்த்தேன்.

ஹாய் வித்யா
மே 29, 2008 - 1:49pm - வழங்கியவர் pradeebala

ஹாய் வித்யா நலமா?மன்னிக்கனும் உங்களுக்கு பதில் கொடுக்க தாமதமானதற்கு.உங்கள் பாராட்டுக்கு நன்றி.என்னோட முகம் மலர் முகமா அப்படினு நீங்க பாத்துட்டு தான் சொல்லனும்.உங்க மெயில் முகவரி தாங்க என் போட்டவை அனுப்பறேன்
அன்புடன் தீபா

ஹாய் தீபா
மே 29, 2008 - 2:17pm - வழங்கியவர் aniaksh

ஹாய் தீபா,
இப்போ தான் இந்த போடோஸ் எல்லாம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு. பூவெல்லாம் ஒரு அழகுன்னா, அந்த தக்காளி நதி அதைவிட சூப்பர். இவ்வளவு அருமையான போட்டோஸ் அனுப்பின உங்களுக்கு ஒரு பெரிய.........................
..... Thanks.
ஏன் வித்யாவுக்கு மட்டும்தான் உங்க மலர் முகம் காமிப்பீங்களா?. எங்களுக்கு கிடையாதா?
Rajini

ரஜினி
மே 30, 2008 - 9:11am - வழங்கியவர் pradeebala

என்ன ரஜினி இப்படி கேட்டுட்டிங்க உங்களுக்கும் என் போட்டோ தரேன் பாருங்க.சுற்றுலா போயிட்டு வந்து மெயில் பண்ணுங்க பேசலாம்.அப்பறம் ரொம்ப நன்றி போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்குனு சொன்னதுக்கு
அன்புடன் தீபா

ஹாய் மகா &திபு
ஜூன் 1, 2008 - 5:35am - வழங்கியவர் pradeebala

ஹாய் மகா என்னப்பா உங்களுக்கு மட்டும் ப்ளவர் ஷோ தெரியலனு சொல்லிட்டிங்க.இதோ இருக்கு போய் பாத்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

ஹாய் திபு சாரிப்பா உங்களுக்கு நேத்தே மெயில் பண்ணனும் என்று நினைத்தேன் கொஞ்சம் பிஸி அதனால முடியல
அன்புடன் தீபா

I AM TRYING BUT...................
ஜூன் 4, 2008 - 11:48pm - வழங்கியவர் Mahalakshmiprag...

தீபா எப்படியிருக்கிறீங்க?நான் உங்கள் 2 பதிவையும் பார்த்தேன். நான் நிறைய தடவை Try பண்ணி பார்த்து ஆகிவிட்டது எனக்கு The page cannot be displayed என்றுதான் வருது.நேற்றும் உங்கள் பதிவை பார்த்து try பண்ணினேன், இன்றும், இப்பொழுதும் try பண்ணிவிட்டு வரவில்லை நான் மட்டும் Flowershow இன்னமும் பார்க்கமுடியவில்லை என்று உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நான் பார்க்காமல் ஆஹா நன்றாக உள்ளது என்று சொல்ல விருப்பபடவில்லை.எல்லாரும் ரசித்ததை நானும் ரசிக்கவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன் ..............................
...மறுமுறையும் try பண்ணுகிறேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் தீப்ஸ்
ஜூன் 5, 2008 - 12:01am - வழங்கியவர் thalika

ஹாய் தீப்ஸ் மூன்றாவது முறை டைப் பன்றேன் இந்த முறையும் பிசி ஆஃப் ஆனா இனி அனுப்ப மாட்டேன்.பொருப்பா அப்லோட் பன்னி கண்ணுக்கு குளிர்ச்சியா படங்கள் தந்திருக்கே நன்றி சொல்லாம போக முடியுமா..இரு ஆஃப் ஆயிடும் அனுப்பிடறேன்

ப்ளவர் ஷோ
ஜூன் 5, 2008 - 4:50am - வழங்கியவர் T S JAYANTHI

ப்ரதீபாலா, இன்றுதான் பார்த்தேன்.
பைசா செலவில்லாமல் ஒர் பூஞ்சோலையைச் சுற்றிப் பார்த்தாச்சு. கண்கள் குளிர்ந்து போச்சு. ரொம்ப நன்றி தீபா.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மஹா,தளிகா,ஜெமாமி
ஜூன் 5, 2008 - 11:34am - வழங்கியவர் pradeebala

ஹாய் மஹா உங்களுக்காக கூகுளில் போட்டோவை அப்லோட் பண்ணியுள்ளேன்(http://
picasaweb.google.co.uk/
pradeebala79/Flowershow02?
authkey=pUFm7-Frzqs).பாருங்க இந்த லிங்க் வருதானு இல்லைனா சொல்லுங்க வேறஎதுலையாவது டிரை பன்றேன்.நீங்க பார்த்து ரசித்துவிட்டு சொல்லுங்க.

ரூபி உங்க பதிவை காணமேனு பாத்தேன் இது தான் காரணமா.ரொம்ப நன்றிபா உங்க பாராட்டுக்கு.பொண்ணு எப்படி இருக்கா?

ஜெமாமி ரொம்ப நன்றி உங்கள் பாராட்டுக்கு.வீட்டில் அனைவரும் நலமா?
அன்புடன் தீபா

Flower Show super
ஜூன் 6, 2008 - 5:00am - வழங்கியவர் Mahalakshmiprag...

ஹாய் தீபா வாவ் !!!!!!!!!!!!!!!!!!!!!!

ஃபளவ்ர் ஷோ பார்த்தேன் ,உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது.நான் மிஸ் பண்ண பார்த்தேன் ,நீங்கள் கொடுத்த 2 லிங் உடனே வந்துவிட்டது.பூக்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளது.அதிலும் எனக்கு அந்தோரியம் மற்றும் அந்த செர்ரி மரம் ரொம்ப நன்றாக உள்ளது.அதேபோல் தக்காளி அடுக்கிவைத்திருந்ததும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவே இருந்தது.இந்த 2வது லிங்கை அனுப்பி எனக்கு இந்த ஃபளவர் ஷோவை பார்த்து ரசிக்கும்படி தந்த தீபா உங்களுக்குமறுபடியும் தேங்யு

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் மகா
ஜூன் 9, 2008 - 9:47am - வழங்கியவர் pradeebala

ஹாய் மகா நலமா?ரொம்ப சந்தோசம்பா நீங்க பாத்து ரசித்தற்கு.ஏன் உங்களுக்கு மட்டும் வரலை என்று தெரியல அந்த லிங்க்.சரி இந்த லிங்க் வந்தது கேட்டு சந்தோசம்.உங்கள் பாராட்டுக்கும் நன்றி.
அன்புடன் தீபா

deepa
ஜூன் 10, 2008 - 12:52am - வழங்கியவர் deepaarunkumar

எல்லா போட்டோவும் பார்த்தேன் இன்னக்கி தான் பார்க்க நேரம் கிடைச்சது. நன்றி தீபா இவ்வளவு அழகான போட்டோஸ் கொடுத்ததுக்கு. எவ்வளவு அழகா இருக்குல ரசிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. நேச்சர் எப்போதும் அப்படிதான். எனக்கு இந்த நேச்சரும் நல்ல மெலடி பாடல்களும் ரொம்ப ரொம்ப பிடிச்சது, அதுவும் பாட்டு கேட்டேன் என்னையே மற்ந்துடுவேன்.

ஹாய் தீபா,
ஜூன் 10, 2008 - 1:47am - வழங்கியவர் அதிரா

ஹாய் தீபா,
கொஞ்ச நாளாகவே கலக்குறீங்க போல இருக்கு இதில், நான் இப்பதானே பார்த்தேன். எங்கேயாவது லண்டன் பார்க்கில் எடுக்கலயே...(ஐயோ பகிடிக்கு..) உண்மையில் நன்றாகவே இருக்கிறது. இயற்கை எப்பவும் அழகோ அழகுதான்.

நான் ரீ வி யில் பார்த்தேன்... ஊட்டிக்குப் பக்கத்தில் ஒரு ஊரில் நேரு பூங்கா இருக்கிறது, அங்கே வெஜிடபிள் கண்காட்சி நடத்தியிருந்தார்கள். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அதிலும் கொலிபிளவர் கொண்ட ஒரு கோலம் வரவேற்பிற்காகப் போடப்பட்டிருந்தது.... கொள்ளை அழகாக இருந்தது... யாராவது நேரில் பார்த்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

pradeebala
ஜூன் 10, 2008 - 8:54pm - வழங்கியவர் Vijitvm

ஹாய் பாலா ஸுப்ப்ர் ஜோடி. மின்னஞ்சல் நாளை வருகிறது

ஹாய்
ஜூன் 11, 2008 - 8:00am - வழங்கியவர் pradeebala

ஹாய் தீபாஅருண்குமார் ரொம்ப நன்றி பாராட்டியதற்கு.எனக்கும் அப்படி தான் மெலடி பாட்டுக்களும்,இயற்கையும் ரொம்ப பிடிக்கும்.எங்கையாவது பஸ்சில் போனால் எனக்கு கண்ணாடி பக்கத்து இருக்கை தான் வேணும் என்று அடம்பிடிப்பேன்.கண்ணை ஒரு நிமிடம் கூட மற்ற பக்கம் திருப்ப மாட்டேன்.என்னுடைய ரசனைக்கு ஏற்றார் போல இந்த நாடும் பார்க்கும் இடம் எல்லாம் அழகு.நீங்க திருச்சியில் எந்த எரியா நான் பொன்நகர்.

ஹாய் அதிரா என்னப்பா கிண்டலா(பகிடியா).இது நிஜமாலுமே செல்ஸி ப்ளவர் ஷோவில் எடுத்தது தான் நீங்க பாக்கலையா பிபிசியில் காட்டினார்களே.நானும் என்னவரும் கைகோர்த்தபடி வந்தோமே.அப்பறம் என்ன இப்பலெல்லாம் ரொம்ப பிஸி போல ஜிமுக்கு போகவே நேரம் போதல போல அப்பப்ப அரட்டைக்கு வாங்கப்பா

ஹாய் விஜி ரொம்ப நன்றி .என்னப்பா மெயில் போடறேனு சொல்லிடு போடல.நான் இன்று எதிர்பார்க்கிறேன் உங்க மெயில

அன்புடன் பிரதீபா(இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இன்னொரு தீபா இருப்பதால் நான் இன்று முதல் என் முழு பெயரிலேயே பதிவு போடுகிறேன்)

Hai Deepa,
ஜூலை 16, 2008 - 9:31pm - வழங்கியவர் priyakarthi

ஹாய் தீபா,
என் பெயர் ப்ரியா.நான் அறுசுவையின் புதிய நேயர். போட்டோக்கள் அனைத்தும் அருமை.எனக்கு லவண்டர் கலர் ரொம்ப பிடிக்கும்.பகிர்ந்து கொண்டத்திற்க்கு மிகவும் நன்றி.

அன்புடன் ப்ரியா.

ப்ரியாகார்த்தி
ஜூலை 24, 2008 - 1:24am - வழங்கியவர் pradeebala

ஹாய் ப்ரியாகார்த்தி ரொம்ப நன்றிப்பா பாராட்டியதற்கு.சாரி நான் இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்.அதனால் தான் பதில் போட லேட் ஆகிடுச்சு.வாங்க ப்ரியா நீங்களும் எங்களோட வந்து அரட்டையில் கலக்குங்க.உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க.நான் லண்டனில் இருக்கேன்.
அன்புடன் பிரதீபா