topic_image


செலாரி இலையை கொத்தமல்லி என வாங்கிவிட்டேன் செலாரி இலையை எதற்கு பயன்படுதலாம் அதில் என்ன செய்யமுடியும் என்று சொல்லுகள்ளேன்


செலரியா இல்லை பார்ச்லியா பயன்பாடு
மே 22, 2008 - 2:01pm - வழங்கியவர் இலா

பார்ஸ்லி தான் கொத்தமல்லி போல இருக்கும் நல்லா பொடியா கட் செய்து தக்காளி வெங்கயம் குடமிளகாஇ எல்லாம் வைத்து ஆம்லெட் செய்யலாம்... இது நான் செய்தும் இருக்கிறேன்.. மற்றபடி பெஸ்டோ செய்யலாம் டிவியில் பார்த்தது. இங்க கூட யாரவது குறிப்பு கொடுத்து இருப்பாங்க.. எனக்கு தெரியல

இலா
மே 22, 2008 - 2:07pm - வழங்கியவர் Vijitvm

எனக்காக கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன். 90 க்ராம்ஸ் என்பது நம்ம அவுன்ஸில் எவ்வளவு

viji 3.2 oz Not fluid oz
மே 22, 2008 - 2:14pm - வழங்கியவர் இலா

ஏன் இவ்வளவு சரியா அளவு கேக்கிறீங்க...
உங்க வீட்டுக்கு கெஸ்ட் வேற வராங்கன்னு சொன்னீங்க...??!!!

tabbouleh
மே 22, 2008 - 2:16pm - வழங்கியவர் thalika

பார்ஸ்லியா??அப்ப அதுக்கு என் குறிப்பில் தபோலேஹ் என்றொரு சாலட் உண்டு.நான் அனுப்பிய முதல் குறிப்பு..அதை செய்யுங்க..1 கட்டு காலியாகும்.ரொம்ப சுவையா இருக்கும்..ஆனால் அதுக்கு பர்குல் கோதுமை வேனும் அது இல்லாட்டியும் பரவாயில்லை.
மத்தபடி சாலட்களில் அப்படி இப்படின்னு கொஞ்சம் கொஞ்சமா போடலாம் ஆனால் மீதி செலவாகாமல் வேஸ்டாகும்..இந்த சாலடுக்குன்னா 1 கட்டு செலவாகும்

ராக்கோழி எல்லாம்
மே 22, 2008 - 2:18pm - வழங்கியவர் இலா

வந்து ஒரு அட்டென்டென்ஸ் போடுங்க.... தளிகா!!!!
உள்ளேன் மிஸ்!!!

நாயகி இலா
மே 22, 2008 - 2:20pm - வழங்கியவர் thalika

ஓட்டச்செருப்பு நாயகி இலா மிஸ். ப்ரெசென்ட் மிஸ்(இதுக்கு கூப்பிடாமலே இருந்திருக்கலாமில்ல;-))

ஆமாம் இன்று
மே 22, 2008 - 2:21pm - வழங்கியவர் Vijitvm

என் ஹஸுக்க் பிறந்த நாள். அவருடையா பெரெண்ஸ் வருகிறார்கள். சர்ப்ரைஸ் அவருக்கே தெரியாது அவங்க வருவது. நான் கேக் செய்கிறேன். எல்லா தடவையும் நான் என்னோட கேக் ரெசிப்பிதான் யூஸ் பண்னுவேன். இந்த தடவை நம்ம் அ.சுயில் இருந்த்து செய்ய போகிறேன். அதில் க்ராம்ஸ் இருக்கு அது தான். நன்றி இலா நாளை சொல்கிறேன் கேக் எப்பிடி வந்தது என்று.

ஆஹா....
மே 22, 2008 - 2:31pm - வழங்கியவர் இலா

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க..... தளிகா.. இப்படி சொன்னா என்ன நினைப்பாங்க.... இப்பொ முழு கதையும் சொல்லனுமே....
எல்லாம் பிளாகில போட டைப் பன்ணி வச்சுருக்கேன்... போட்ட்டுவிட்டு அதுக்கு தோதா கரகீட்டா ஒரு ஊ டுயுப் படமும் போடுரேன்... ஒகேவா

ஹஹஹா
மே 22, 2008 - 2:40pm - வழங்கியவர் thalika

ஹஹஹா..அப்ப யூ டியூபுக்கு வீடியோ இருக்கா?முதல்ல எனக்கனுப்பு அந்த கண்கொள்ளா காட்சியை பாக்கனும்

அய்... ரொம்ப தான்...
மே 22, 2008 - 2:41pm - வழங்கியவர் இலா

எங்கேயாவது இருந்து அதுக்கு தோதா படம் சுடனும்...

Hope is just the part of the equation

செலரி இலை
மே 22, 2008 - 3:33pm - வழங்கியவர் அதிரா

செலரி இலை,
இதில் வறை(சுண்டல்) செய்யுங்கள். நன்றாக இருக்கும். இங்கே தேடுங்கள் குறிப்புகளில் வேறு இலைகளில் வறை உண்டு. அதே முறையில் செய்யுங்கள், ஆனால் இலைகளைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி உடனேயே இறக்கிவிட வேண்டும். அதிக நேரம் அவிய வேண்டாம். இதில் ஏதாவது சந்தேகம் வந்தால் பக்கத்தில்...

இலா... வைக் கேளுங்க தீர்த்து வைப்பா.... தலையிடி என்று வீட்டில் சமையலை நிப்பாட்டிப்போட்டு.... அறுசுவையில் கூத்து நடக்கிறது.... ஐயையோ.... ஐயோஒ.... இலா உங்கட ஆத்துக்காரரின் நம்பர் இருந்தால் நானே போட்டுக்கொடுத்துவிடுவேன்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்