topic_image


hello all, help me for blood loss during motion and for diahrea also... having this problem for 1 year... any home medicine please...


ஹாய் ப்ரியா
ஜூன் 2, 2008 - 12:05am - வழங்கியவர் thalika

ஹாய் ப்ரியா டாக்டர்ட்ட போனீங்களா இல்லையா.இதற்கு வீட்டு வைத்தியம் உண்டோ என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக மருத்துவரை அனுக வேண்டும்

hello thalika, i went to
ஜூன் 2, 2008 - 3:55am - வழங்கியவர் priyaudai

hello thalika,
i went to the docter and taking medicines also.. but it is not cured... all the check ups were done.. blood test,motion test, urine test and scaning also too.. but everything is fine for me, the docter said...
so iam asking for any home medicine from u all... that will be helpful... thanks...

ஹாய் பிரியாதுரை
ஜூன் 2, 2008 - 4:15am - வழங்கியவர் MarliyaNoohu

சாரிம்மா எனக்கும் இது பற்றி ஏதும் தெரியாது ஆனால் தளி சொன்னது போல டாக்டர்தான் பெஸ்ட்...இன்னும் வேறு யாராவது டாக்டரிடம் காட்டி பார்கலாமே?

அன்புடன்,
மர்ழியாநூஹு

ப்ரியா
ஜூன் 2, 2008 - 5:04am - வழங்கியவர் vimalakandaswamy

ஹ்லோ ப்ரியா,மாதுளம்பழத்தின் தோலை எடுத்து தயிர் விட்டுஅரைத்துசாப்பிட்டால் இதுசரியாகும் என்று நினைக்கிறேன்...வயிற்றுப்போக்கு
க்கு இது மிகவும்நல்ல்மருந்து.அதுவும் இல்லாமல் இதன் துவர்ப்பு ருசி கண்டிப்பாக நல்லபலனைதரும்.ட்ரை பண்ணுங்க.
அன்புடன்விமலா.

THANKS A LOT VIMALA MADEM
ஜூன் 2, 2008 - 6:32am - வழங்கியவர் priyaudai

THANKS A LOT VIMALA MADEM for giving one easy solution... sure i'll try this and at present i do have one pomogranate at home.. thanks to everyone.. and any other suggestions is there please tell me..

ஆமாம் ப்ரியா
ஜூன் 2, 2008 - 6:50am - வழங்கியவர் harigayathri

இது அனுபவத்தில் கண்ட உண்மை, ஆனால் நான் விமலா மேடம் சொல்லுவது போல் தயிருடன் சாப்பிடவில்லை. நான் மாதுளம் பழத்துடன் பால் சேர்த்து அரைத்து சாப்பிட்டேன் உடனே கண்ட்ரோல் ஆகும். அதிகமாக energy வேஸ்டாகி இருக்கும்ல அதானால அர்ரொட்டி மாவு என்று கடைகளில் விற்கும் அதை கூட வாங்கி காய்ச்சி குடிக்கலாம் ப்ரியா. அதை காய்ச்சினால் கேந்து போல இருக்கும் கூட

thanks gayathri.. i'll try
ஜூன் 2, 2008 - 7:10am - வழங்கியவர் priyaudai

thanks gayathri.. i'll try ur suggestion also....

சாரி ப்ரியா
ஜூன் 3, 2008 - 2:24pm - வழங்கியவர் thalika

சாரி ப்ரியா.1 வருஷமா டயோரியா வா.இது டயோரியாவா டிசென்ட்ரியா.அவங்க சொன்ன மாதிரி எப்பவும் எதுவும் இல்லன்னு ஒரு மருத்துவர் சொன்னால் நாம இன்னொரு மருத்துவர் கிட்டயும் போய் பாக்கலாம்..முன்ன போன டாக்டர் ரிசல்ட் சொன்னாம அடுத்த டாக்டர்ட்ட போங்க.
எனக்குன் தெரிஞ்சு டயோரியாவுக்கு நல்ல மருந்து கேற்ரட்டும்,ஆப்பிலும்..ரெண்டைய
ும் ஜூஸ் அடிச்சு அடிச்சு குடிங்க.வேறெதுவும் தெரியல..ஒரு வேளை டயோரியானால ஏதாவது சின்ன கீரல் அப்படி ரத்தம் வருதோ என்னவோ..அதாவது குழந்தைகளுக்கு கான்ஸ்டிபேஷன் ஆனால் சொல்லுவார்களே fissures நு..அது போல

பிரியா, கேரட் கஞ்சி
ஜூன் 4, 2008 - 12:39am - வழங்கியவர் Jaleela Banu

பிரியா தளிகா , விமாலா சின்ன மாதிரி

ஆப்பில் , கேரட் இரண்டையும் துருவி நல்ல ஜூஸா அடிச்சி,அதில் தேன் , இரு பின்ச் உப்பு கலந்து குடிங்க,
அடுத்து தொடர்ந்து இரவில் மட்டும் பன் சாப்பிடுங்கள் சிலருக்கு டென்சன் அதிகமானல் அப்படி ஆகும்,
இல்லை கேரட் கஞ்சி குடிங்க.
மாதுளை ஜூஸ் அதுவும் குடிக்கலாம்.
காரமே சாப்பிடாதீங்க சுள்லுன்னு காரமா சாப்பிட்டாலும் ஒத்து கொள்ளாது.
எல்லா ஜுஸ், கஞ்சி என் குறிப்பில் இருக்கு

வயிற்றை கலக்கும் அயிட்டம் எதுவும் சாப்பிடாதீர்கள்.
ஜலீலா

ஹாய் ப்ரியா
ஜூன் 4, 2008 - 6:01am - வழங்கியவர் harigayathri

என்ன ப்ரியா இப்ப எப்படி இருக்கு உடம்புக்கு இது எல்லாம் செய்து பார்த்தீங்களா? ஆன தொடர்ந்து சாப்பிட்டு வந்தா தான் கொஞ்சமாவது குணம் தெரியும். சாப்பிடுறீங்களா இல்லையா? ஆரோக்கியத்த கவனிச்சுக்கங்க ப்ரியா. டயரியா ஆனாலே ரொம்ப லேஸியா இருக்கும் அதனால ஏதாவது ஜூஸ் குடித்துக் கொள்ளுங்கள். சிலருக்கு immunisation power இல்லனாலும் இப்படி ஆகும் எதையாவது நினைத்து பயப்படுறீங்களா? டோண்ட் வொரி ப்ரியா இதெல்லாம் சீக்கிரம் சரியாக கூடியது தான்.

hello, harigayathri,jaleela
ஜூன் 4, 2008 - 1:12pm - வழங்கியவர் priyaudai

hello,
harigayathri,jaleela and thalika...
thanks a lot for giving such valuable information.. from yesterday onwards i started drinking apple,carrot and pomogranate juice's...
i'll continue for more days till iam ok.. but within 2 days itself i feel iam better.. but still not completely ok.... once again thanks a lot for all who helped me and going to help...

blood loss and diahrea
ஜூன் 17, 2008 - 8:38am - வழங்கியவர் seyedkatheeja

ஹாய் ப்ரியா எப்படி இருக்கீங்க. உங்களுக்கு இப்ப தேவலையா. எனக்கு தெரிந்த ஒருத்தங்களுக்கு இப்படி இருந்தது. அவங்க டாக்டர்கிட்ட காமித்தும் கேட்கலை உங்களை போலதான். ஆனால் அவங்க டாக்டர் கிட்ட காமித்து வெடிப்பு இருக்குன்னு ஏதோ ஆயின்மென்ட் கொடுத்தாங்களாம். அவங்களுக்கு கை மருந்துதான் சாப்பிட்டு சரியானதா சொன்னாங்க டென்ஷன் ஆகாதீங்க அப்பவும் இப்படி ஆகலாம். அப்புறம் நல்ல நிறைய ப்ரூட்ஸ் சாப்பிடுங்க நீங்க சாப்பாடு சாப்பிடாட்டா கூட ப்ரூட்ஸை அதிகமா சாப்பிடுங்க அவங்களும் அப்படிதான் செய்தாங்களாம். அப்புறம் வாத்துக்கறி சாப்பிடலாமாம். உடம்பு சூட்டினாலும் இப்படி ஆகும் அதனால் சிறிது கருப்பட்டி,அப்புறம் கசகசா 1 ஸ்பூன் கசகசாவை லேசாக வறுத்து கருப்பட்டி ஒருதுண்டு சேர்த்து நல்ல அரைத்து சாப்பிட்டாலும் கேட்க்கும் இது அவங்க என் கிட்ட சொன்னது இப்ப நல்லா இருக்காங்க. நான் அவங்க கிட்ட பேசினால் வேற ஏதாவது சாப்பிடுறது பற்றி கேட்டு சொல்கிறேன் அவங்க இந்தியால இருக்காங்க அதனால நான் அவங்க கூட பேச சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக கேட்டு சொல்கிறேன். நீங்க நான் சொல்லி இருக்கும் இந்த முறையையும் செய்து பாருங்க. உங்களுக்கு கூடிய விரவில் குணம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

அன்புடன் கதீஜா

கதிஜா
ஜூன் 17, 2008 - 9:05am - வழங்கியவர் Jaleela Banu

ஹாய் கதிஜா இந்த கச கசா, கருப்பட்டி எதுக்கு பிலெட் லாஸுக்கா (அ) டைரியாவிற்கா

ஜலீலா

ஹாய் ஜலீலா அக்கா
ஜூன் 17, 2008 - 9:54am - வழங்கியவர் seyedkatheeja

இந்த கசகசா இரத்தம் ஏற்படுவதை தடுக்கத்தான். இது எங்கள் ஊரில் மோஷனில் சில சமயம் இரத்தம் போகுமே அதுக்கு என்ன பேர் சொல்லுவாங்கன்னு தெரியலை சீத பேதின்னு நினைக்கிறேன் அதுக்கு எங்கள் வீட்டில் செய்து தருவார்கள் சிறுவர்களுக்கு கூட கொடுக்கலாம். எனக்கு 10 வயது இருக்கும் போது என் பாட்டி செய்து தந்து இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தவங்களும் இதை செய்து சாப்பிட்டு பலன் அடைந்ததாக சொன்னார்கள் அதான் நான் ப்ரியாவிற்க்கு யூஸ்ஸாக இருக்குமேன்னு சொன்னேன்.

அன்புடன் கதீஜா.

கதீஜா.
ஜூன் 17, 2008 - 10:09am - வழங்கியவர் anjali73

கதீஜா ஆன் லைனில்தான் இருக்கீங்களா!சோ சுவிட்

சலாம் கதீஜா
ஜூன் 17, 2008 - 10:10am - வழங்கியவர் shadiqah

அல்லாஹு அக்பர்...
சலாம் கதீஜா..எனக்கு ரொம்ப பிடிச்ச பெயர் இது.நபி(ஸல்) அவர்களின் மனைவி பெயரும் கூட..விரும்பினால் உங்களை பற்றி சொல்லுங்களேன்.
ஸாதிகா

வஅலைக்குமுஸ்ஸலாம் சாதிகா
ஜூன் 17, 2008 - 11:11pm - வழங்கியவர் seyedkatheeja

எப்படி இருக்கீங்க. உங்களுடன் முதல் தடவையாக பேசுகிறேன். உங்களை பற்றி நீங்கள் சொல்லி இருந்த பதிவுகளை நான் பார்த்தேன். பரவாயில்லையே கதைகள் எழுதுவதில் உள்ள உங்கள் ஆர்வம் எனக்கு பிடித்து இருக்கிறது. எனக்கும் கதைகள் படிப்பதற்க்கு மிகவும் பிடிக்கும். என்னை பற்றி நான் நிறைய இடத்துல சொல்லி இருக்கேன் நீங்கள் பழைய பதிவுகளை பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். இருந்தாலும் நீங்க கேட்டதால் சொல்கிறேன். நான் ஜப்பானில் இருக்கேன். ஒரு பையன் 3.9 ஆகிறது. அவன் கூடவே எனக்கு நேரம் சரியா இருக்கு.

அன்புடன் கதீஜா.

மிக மிக
ஜூன் 18, 2008 - 4:14am - வழங்கியவர் priyaudai

மிக மிக நன்றி கதீஜா அவர்களே.... நான் டாக்டரிடம் சென்றென், வைற்றில் புண் மாறி
ஏதாவது இருக்கும் என சந்தேகம் படுகிறார்... பிரார்த்தனை மட்டும் இப்பவேண்டும்.. இப்ப என் கவலை எல்லாம் என்ன இருக்குமோ என்கிற பயம் தான்... பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்...அடுத்த வாரம் டெஸ்ட் செய்வார்கள்...

ப்ரியா
ஜூன் 18, 2008 - 5:18am - வழங்கியவர் T S JAYANTHI

உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கிறது? எனக்கு கை வைத்தியம் எதுவும் தெரியவில்லை. வயிற்றில் புண் என்றால் மணத்தக்காளிக் கீரை (உங்களுக்கு அங்கு கிடைக்குமா) ஒரு கை தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள். காரமில்லாமல் பயத்தம் பருப்பு, பச்சைக் காய்கறி தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிரார்த்தனை செய்யுங்கள். அதற்கு மிஞ்சி வைத்தியம் இல்லை. தைரியமாக இருங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

thanks maami, iam not
ஜூன் 18, 2008 - 5:25am - வழங்கியவர் priyaudai

thanks maami,

iam not getting that keerai here... thairiyam kooriyatharkku migavum nandri...

ப்ரியா.
ஜூன் 18, 2008 - 5:33am - வழங்கியவர் kr

ப்ரியா,பயமே பாதி பிரச்சனையை உண்டு பண்ணும்,தைரியமா இருங்கள்.நாங்கள் உங்களுக்காக பிராத்தனை செய்கிரோம்.பாருங்களேன்,நீங்களே அடுத்த வாரம் இங்கு வந்து சொல்லப்போறீங்க,ஒன்னும் இல்லை,எல்லாம் சரியாகிவிட்டதுனு...இப்போ நீங்க மனசை ரிலாக்ஸா வச்சுக்கோங்க.

ப்ரியா
ஜூன் 18, 2008 - 5:37am - வழங்கியவர் harigayathri

ப்ரியா பயம் அடைய வேண்டாம் எதுவும் நெகடிவா வராது. பிரார்த்தனை செய்ங்க. நாங்களும் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம். ப்ரியா வயிற்றில் புண் இருந்தால் டைய்லி வெந்தயம் சாப்பிடலாம் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா அப்போ அப்படியே ஒரு தேக்கரண்டி வெந்தயமும் சேர்த்து சாப்பிடுங்கள் வயிற்று புண் விரைவில் குணம் ஆகும். dont worry priya.

ப்ரியா
ஜூன் 18, 2008 - 5:52am - வழங்கியவர் shadiqah

அல்லாஹு அக்பர்...ப்ரியா பயப்படாதீர்கள்.எல்லாம் நல்ல படியாக இருக்கும்.ஜெயந்திமாமி சொன்னது போல் பிரார்தனையை விட நல்ல சிகிட்சை இல்லை.இஸ்லாமிய வேதத்தில் ஒரு அற்புதமான வரிகள் வரும்.லா தஹ்சன் இன்னல்லஹ மாஅனா-அஞ்சாதீர் இறைவன் நம்மோடு வுள்ளான்.இது மனதுக்கு பூஸ்ட் தரும் தங்க வரிகள்.
கவலையே பட்டாதீர்கள் .கடவுள் மீது நம்பிக்கை வைத்து பிரர்த்தனை செய்யுங்கள்.உங்கள் கவலை பற.ந்தோடி விடும்.
உங்களுக்காக நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்.

ஸாதிகா

ஒரே ஆட்டம் பாட்டம்
ஜூன் 18, 2008 - 7:25am - வழங்கியவர் Jaleela Banu

என்ன இங்க ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்கு//

தளி , மர்லி., விஜி,கே. ஆர், அதிரா,சாரதா,ரஜினி, சாதிகா அக்கா, அஞ்சலி.செல்வி மேடம், மனோகரி மேடம்,மமோ மாமி,பாபு தம்பி, அட்மின்
ஜே மாமி, கதிஜா,அஸ்மா,வித்யா, ப்ரதீபா, ஜெய ஸ்ரீ, அன்பு தங்கை நிருபமா, கானாமல் போன, அன்பு தோழி ஜானகி,ஹர்ஷினி,மஹா,பஜிலா,புதுவர
வுகள்.
பர்வீன் பானு என்ன பா ரொம்ப நாளா ஆளையே காணும்.
சரஸ்வதி மேடம்,ரேணுகா என்ன ரொம்ப மசக்கையா?
சில்ஜா

எல்லாருக்கும் பை, பை// இன்னும் ஒரு வாரம் அப்பரம் கலந்து கொள்ள முடியாது.
ஊருக்கு போய் வருகிறேன்.

//சதிகா அக்கா உங்களுக்கு இருக்கா கை வலி மறத்து போகுது டாக்டர் கிட்ட போக பயமா இருக்கு கை கட்டை விரல் கிட்ட ஒரு ஆப்பரேஷன் செய்தால்சரியாகும் என்று சொல்கிறார்கள்.
இது இரண்டு வருடம் முன் ஆனால் இப்போது அந்த அளவுக்கு பெயின் இல்லை வந்து வந்துபோகுது.//

//என்ன அதிரா எப்போது ஆப்பரேஷன், அது இரண்டு நிமிட வேலை தான் முடிந்ததும் ஹையா ஜாலி நிறைய ஐஸ்கிறீம் எல்லம் தருவார்களாம்.
பயப்படாதீர்கள். எவ்வளவோ சின்ன குழந்தை கலுக்கெல்லம் செய்கிறார்கள்.//

ஜலீலா

அன்புள்ள ப்ரியா
ஜூன் 18, 2008 - 7:59am - வழங்கியவர் seyedkatheeja

கவலை வேண்டாம் கண்டிப்பாக நாங்க எல்லாரும் உங்களுக்காக பிரார்திப்போம். எந்த வித பயமும் இல்லாமல் மனதை தைரியமாக வைத்து ரிலாக்ஸா இருக்கனும் சரியா. டாக்டரிடம் போய்ட்டு வந்து என்னன்னு சொல்லுங்க.

அன்புடன் கதீஜா.

என் மீது
ஜூன் 18, 2008 - 12:37pm - வழங்கியவர் priyaudai

என் மீது அக்கறை எடுத்து பதில் கூறிய அனைவருக்கும் மிகவும் நன்றி...

என்னம்மா கண்ணு ஜலீ
ஜூன் 18, 2008 - 11:43pm - வழங்கியவர் T S JAYANTHI

எந்த ஊருக்கு, எப்ப திரும்பி வருவீங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா.
என் கேள்விக்கு பதில் சொல்லிட்டுப் போங்க.
அப்புறம் ஜானகி இந்தியா வந்திருக்கா. என்னோட போன் நம்பர் கொடுத்திருக்கேன். இன்னும் பேசவே இல்லை. நேரே சந்திக்கலாம்ன்னு சொல்லி இருக்கேன். காத்துண்டிருக்கேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஆமாம் மா கண்ணு ஜே
ஜூன் 18, 2008 - 11:46pm - வழங்கியவர் Jaleela Banu

ஆமாம் மா கண்ணு ஜே மாமி நம்ம சிங்கார சென்னைதான் அடுத்தவாரம் இதோடு ஆகஸ்ட் தான் வருவேன்.

சமையல் ராணியே சென்னை வருக
ஜூன் 19, 2008 - 12:20am - வழங்கியவர் T S JAYANTHI

வாங்க. வாங்க. சென்னையில் எங்கே?
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்பு ப்ரியா
ஜூன் 19, 2008 - 12:36am - வழங்கியவர் thalika

அன்பு ப்ரியா கவலைப் படாதீர்கள்.1 வருடமாக ப்ரச்சனை என்றதும் ஆடிப் போய்விட்டேன்..நல்ல கஷ்டத்தை அனுபவித்து விட்டீர்கள் தானே இப்படியே ஒன்னுமில்லை இல்லையென்று எத்தனை காலம் கஷ்டப்பட..இன்னது தான் என்று தெரிந்து கொள்வது நல்லது தானே..இன்று பெரும்பாலான ப்ரச்சனைகளுக்கு மருத்துவௌலகில் தீர்வு உண்டு .தீர்வு கிடைக்காத ப்ரச்சனைகள் மிராகிளாக மாறியவையும் உண்டு.எதுக்கும் பயப்படாதீர்கள்..இதோடு கண்டுபிடித்து ப்ரச்சனைக்கு ஹகுந்த சிகிச்சையளித்து மாற்றுவார்கள் என நம்புவோம்.உங்களுக்கு எங்களது ப்ராத்தனைகள் என்றும் உண்டு