topic_image


enathu pakkathu veetu kulanthaiku(age11/2) manjal kamalai. atharku enna seyavendu endu seekiram theriyapaduthungalen.


udavungal
ஜூலை 3, 2008 - 3:29am - வழங்கியவர் anutaitus

யாருக்குமெ மஞ்சல் காமாலைக்கு பத்ல் தெரியதா

மஞ்சள் காமாலை
ஜூலை 3, 2008 - 4:22am - வழங்கியவர் thalika

எனக்கும் ஜான்டீஸ் பத்தி சரியா தெரியாது ஏன்னா என் உறவில் யாருக்கும் கேள்விப்ப்பட்டதில்லை.ஆனால் சின்ன வயதில் என் தோழிக்கு இருந்தது..அப்ப எனக்கு நியாபகம் இருக்கு எண்ணை பலகாரம்,நாம் வெஜ் காரம் எல்லாம் கொடுக்க மாட்டாங்க.
கரும்பு ஜூஸ் கொடுப்பாங்க,
மஞ்சள் காமாலை கவனிக்கனும்..முழுவதும் மாறியது என்று சொல்லி திரும்ப நாம் பழையபடி கவனிக்காம சாப்பிட கூடாது..லிவெரில் ஜான்டீஸ் பதுகியிருகும் என்பார்கள்.
மருத்துவர்களிடம் இது எந்த வகையான ஜான்டீஸ்,எதனால் வந்தது என்ன விதமான டயட் எடுக்கலாம் என்று கேளுங்கள்..இந்த வகையான நோய்கள் அதுவும் குழந்தைக்கு வந்தால் கட்டாயம் மருத்துவர் சொல்படி தான் கேட்க வேண்டும்

மஞ்சள் காமாலை
ஜூலை 3, 2008 - 8:26am - வழங்கியவர் saraswathi

அதிக உடல் உஷ்ணத்தால் மஞ்சள்காமாலை வரும் என சொல்வார்கள். கோழிக்கறி கட்டாயமாக குணமான பிறகு கூட 1வருட காலத்திற்கு சாப்பிடக்கூடாது. கிவாநல்லி கீரையின் சாறு கொடுப்பார்கள். இப்போது அதில் தயாரித்த மாத்திரை, மருந்து கூட மெடிக்கல் சாப்பிலே கிடைக்கிறது.தளிகா சொல்வது போல் எண்ணையில் செய்தது சாப்பிடக்கூடது.

மஞ்சள் காமாலை
ஜூலை 3, 2008 - 11:35am - வழங்கியவர் VidhyaSaravanan

தங்கள் குழந்தை விரைவில் குண்மடைந்து விடுவான் பயப்படாதீங்க. எனக்கு இருந்தது சிறிய வயதில். மருத்துவரிடம் சென்றால் liv-52 தருவார்கள் கீழா நெல்லை அரைத்து பாலில் கலந்து அம்மா தருவார்கள். காலை மாலை இரு வேளையிலும். சென்னை என்றால் அம்சிக்கரை மார்க்கட்டில் கிடைக்கும். ஆனால் இலை பார்த்து வாங்க வேண்டும். சிலதில் தண்டின் மேல் பகுதியில் நெல்லி இருக்கும் அதை தர கூடாது.

இளநீர், சாத்துகுடி ஜுஸ், பச்சை திராட்சை தந்தார்கள். பழங்கள், காய்கறி சூப் (வெறும் காய்கறி தண்ணீரில் அவித்து, மிக குறைவாக உப்பு போட்டு தாருங்கள்.) வெண்ணை நீக்கிய மோர் சாதம், ஆவியில் அவித்த இட்லி, பூட்டு(தேங்காய் இல்லாமல்) இடியாப்பம், ஆப்பம்(தேங்காய் இல்லாமல்) தந்தார்கள் என் அம்மா. எல்லாவட்ரிலும் உப்பே போடவிலை. தொட்டு கொள்வதற்கு பால் சர்க்கரை தான்.

குழந்தைக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருந்துவரை அனுகுங்கள். எனக்கு அப்படி ஆகிவிட்டது.

மேலும் விபரங்களுக்கு இந்த லின்கை பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/
forum/no/6830