ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
எனக்கொரு மகள் பிறந்தாள். .. எனக்கு ஜுலை 12 மகள் பிரந்திருக்கிராள். நார்மல் டெலிவரி தான். கொடி சுத்தி இருந்ததால பெயின் வரவச்சி பாப்பாவ எடுத்துட்டாங. கடவுள்புன்னியதுல நார்மல் ஆ முடிஞ்ஜுது. என் தங்கம் அப்படியே அவங்க அப்பா மாதிரி இருக்கா..
ப்ரியா, ரொம்ப சந்தோஷம். குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? குட்டிப் பெண்ணின் நடவடிக்கைகளை நல்லா ரசியுங்கள். (கொட்டாவி விடும்போது பார்க்க அழகாக இருக்கும்.) உங்கள் உடம்பையும், குழந்தையையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள். உதவிக்கு யாராவது இருக்கிறார்களா? பத்திய உணவு சாப்பிடுங்கள். அன்புடன் ஜெயந்தி மாமி
எப்படி இருக்கீங்க. செல்ல மகள் எப்படி இருக்கிறாள். நீங்கள் குழந்தை பெற்ற விஷயத்தை எங்களிடம் சொன்னதுக்கு மிகவும் சந்தோஷம். குழந்தை அவங்க அப்பா போல இருக்கிறாளா. உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்குமே.உங்கள் உடம்பையும் குழந்தையும் நல்ல கவனித்துக்கொள்ளுங்கள்.அப்புறம் எப்ப ஜப்பான் வர்றதா ஐடியா முடிவு செய்தாச்சா. நான் சொன்னது போல வின்டர் வர முன்னாடியே அதாவது அக்டோபர் கடைசிக்கு முன்னாடி வந்தால் சரியாக இருக்கும்.
அன்புடன் கதீஜா.
ஹாய் பிரியா வாழ்த்துக்கள்.நீங்களும்,குழந்த ையும் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்
அன்புடன் பிரதீபா
பிரியா குழந்தை பிறந்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி. குழந்தைக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள். குழந்தையையும், உங்கள் உடம்பையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.
ஜானகி
god bless you and your baby- ROJA
ஹை ப்ரியாக்கு குழந்தை பிறந்தாச்சா?வாழ்த்துக்கள் ப்ரியா. என்ன குட்டி அப்பா போலவா,அது மேலும் சந்தோஷம் தானே. ஜெ மாமி சொன்னது போல கொட்டாவி விடும் போது அந்த காட்சி அழகோ அழகு. ப்ரியா,பாருங்க, குட்டி பாப்பா இனி பாவ்பாஜி கேட்க போகுது.ஹீ..ஹீ.சும்மா பிரியா. ம்ம்ம்...எஞ்ஜாய் வித் யுவர் குட்டி.
ரொம்ப சந்தோசம் குட்டி பாப்பா என்ன செய்யுது?நல்லா பார்ட்துகங்க பிரியா என் மனமார்ந்த வாழ்த்துகள்
அன்புடன், மர்ழியாநூஹு
ப்ரியா வாழ்த்துகள். நான் இது தான் உங்கூட முதல் முறை பேசுவது. நல்ல சந்தோஷமான விஷயதோட நான் உங்ககூட பேச வாய்ப்பு கிடைத்தது. குட்டி பாப்பா எப்பிடி இருக்கிங்க? உங்க உடம்பும் நாமலுக்கு வந்தாச்சா?
ப்ரியா.வாழ்த்துக்கள்.உங்களுக்க ு பெண்பிறந்தது குறித்து மிக்க சந்தோஷம்.உங்கள் கனவு,ஆசைகளின் பிரகாரம்,உங்கள் செல்ல மகள் வளர எனது வாழ்த்துக்கள், ஸாதிகா
வாழ்த்துக்கள் ,உங்களிடம் பேசுவது இது தான் முதல் தடவை.குட்டி பாப்பா எப்படி இருக்கிறாள்.பாப்பாவின் சேஷ்டைகளை ரசியுங்கள்.உங்க உடம்பு இப்போ எப்படி இருக்கு?பாப்ப பெயர் என்ன?
ப்ரியா, உங்களுடன் ஒரு தடவை கதைத்ததாக ஞாபகம். உங்களுக்கும், கணவருக்கும் எனது வாழ்த்துக்கள் குட்டித் தேவதை அப்பா மாதிரி இருக்கிறாரா? அப்போ அப்பா பொண்ணாகத்தான் வருவார் :), நான் இப்பொழுதுதான் இத் தலைப்பைப் பார்த்தேன். நலமுடன் வந்து எம்முடன் பங்குகொள்ள ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
ஹலோ ப்ரியா வாழ்த்துக்கள்,
ஜுனியர் ப்ரியாவுக்கும் என் வாழ்த்துக்களையும் கூறுங்கள்.
பிரியா பூண்டை நெய்யில் வதக்கி சாப்பிடுங்க பால் நன்றாக இருக்கும். பனைவெல்லம் சாப்பிடுங்க உடம்புக்கு மிகவும் நல்லது.
வாழ்த்தும் மணி
பிரியா உங்களுக்கும்,உங்கள் வீட்டு புது வரவான குட்டி ப்ரியா(தேவதை)க்கும் என் ப்ரியமான வாழ்த்துக்கள்.குட்டி பாப்பாவின் பெயர் என்னவோ!!Take time to laugh.It is the music of the soul.
வாழ்த்துக்கள் ,உங்களிடம் பேசுவது இது தான் முதல் தடவை.குட்டி பாப்பா எப்படி இருக்கிறாள்.என் பொன்னும் அப்படியே அவங்க அப்பா மாதிரி தான் இருந்தா. அப்படி முதல் குழந்தை அப்பா மாதிரி இருந்தா நல்லதுன்னு எனக்கு சொன்னாங்க. வாழ்த்துக்கள்
எல்லாருக்கும் ரொம்ப தாங்ஸ். பாப்பா பேர் பிரதிக்க்ஷா என்ற ஜெயஸ்ரி. கதீஜா அக்டோபர் முதலில் டோக்கியோ வரலாம் என்று இருக்கிரேன். மாமியார் உடன் வருவார் இல்லை என்றால் அம்மா வை கூப்பிட வேண்டும். எனக்கு தான் ரொம்ப டயர்டா இருக்கு. எப்பிடி 2 மாசத்துல வேலைக்கு போரது ந்னு தெரியல. இடுப்பு வலி ஜாஸ்தி இருக்கு. ஏதாவது வைத்தியம் சொல்லுங்களேன்..
வணக்கம். தாங்கள் ஹாங்காங்கில் எங்கு இருக்கிறீர்கள். எப்படி இருக்கு அந்த நாடு. நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு போகும்போது 3நாட்கள் அங்கு சுற்றி பார்க்கலாம் என்று இருக்கிறோம். பார்க்க என்ன இருக்கிறது என்று ஒரு ஐடியா கிடைக்குமா. பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும். விரைவில் எதிர்பார்க்கிறேன் உங்க பதிலை. நன்றி.
வாழ்த்துக்கள் ,உங்களிடம் பேசுவது இது தான் முதல் தடவை.குட்டி பாப்பா எப்படி இருக்கிறாள்.என் பொன்னும் அப்படியே அவங்க அப்பா மாதிரி தான் இருந்தா. பிரதிக்க்ஷா ரொம்ப அழகான பெயர். ப்ரியா ஒரு 3 மாதம் வரை ஆங்காங்கே வலி இருக்கத்தான் செய்யும். நானும் நார்மல் டெலிவரிதான் எனக்கும் அப்படித்தான் இருந்தது. டாக்டர் கொடுத்த கால்சியம் மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிங்க. எல்லாம் சரியாகி விடும் வீட்டில் வேற லேகியம் எல்லாம் தந்து படுத்தியெடுத்திருவாங்க.
ஹாய் சரஸ்வதி மேம். நான் ஹாங்காங்கில் கவுலுன் எனும் இடதிலிருக்கோம். என்னைப்பொறுத்தவரை ஹாங்காங் கன்டிப்பாக பார்க்க வேன்டிய இடம். இங்கு இயற்கை அழகு நிறைந்துள்ளது. மிக மிக சுத்தமாக இருக்கும். இங்கு பார்க்க வேன்டிய முக்கிய இடங்கள்.,, 1. டிஸ்னி லேன்ட்__இதில் வானத்தில் வெடிக்கும் வெடியின் அழகை பார்த்துக்கொன்டெ இருக்களாம்.டோன்ட் மிஸ் இட்.
2.பீக்___மலைக்கு மேலே டிரேமில் செல்லனும்.இங்கு இருந்து வீவ் பார்க்கும் போது நல்லா இருக்கும்.
3ரிபல்ஸ் பே.__ அழகிய கடற்கரை.
4.லன்டாவு ஐலேன்ட்___ஹாங்காங்ல் நிறைய ஐலேன்ட், பீச் இருக்கு.போய் பாருங்கள்.
5.bbq___நிறைய இடத்தில் இருக்கும்.குரூப்பாக செல்லுவதற்க்கு எற்ற இடம்
6..ஸ்டார் குரூஸ்__கப்பலில் ஒரு நாள் செல்லும் பயணம்.ஒரு five star ஹோட்டலே கப்பலில் ,நிச்சயமாக பார்க்க வேன்டியது.
7..சாப்பிட, சாப்பிங் பன்ன என்று நிறைய இருக்கு. சீனாவில் சாப்பிங் சென்றால் விலை குறைவாக இருக்கும்.
8.கோல்டன் டாய்லட்___ஒரு புதிய பார்வை.
9.பார்க்____ நிறைய இருக்கு. ஹாங்காங் பார்க் கன்டிப்பா பாருங்க
ஹாங்காங் பற்ற் இன்னும் நிறைய சொல்லிக்கொன்டே போகலாம்.சொல்லுவதை விட நேரில் சென்று பார்த்து விடுங்கள். எனக்கு மிகவும் பிடித்த நாடு ஹாங்காங். என் எண்ணங்களை அருசுவை தோழிகளுடன் பகிர்ந்துக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது. என் நன்றி உங்களுக்கு. ASIA M.S. PEACE BE ON EARTH
ஹாய் ஆசியா, உடனே பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நான் இப்போதுதான் ஒப்பன் பண்ணினேன். தெளிவாக தெரிவித்திருக்கிறீர்கள். இவ்வளவையும் பார்க்க 3நாள் போதுமா. அதற்குமேல் தங்க முடியாது. அதனால் ரொம்ப முக்கிமானதை மட்டும் பார்க்கலாமா. முக்கியமானது எந்த இடங்கள் என்று தெரிவிக்கமுடியுமா. தங்குவதற்கு சீப்[அன்ட்] பெஸ்ட் ஆன ஹோட்டல்கள் தெரிவிக்கமுடியுமா. முடிந்தால் கொஞ்சம் கூறுங்களேன். உதவியாக இருக்கும். விரைவில் எதிர்பார்க்கிறேன் உங்க பதிலை. நன்றி.நன்றி.
,உங்களுக்கு விரைவில் பதில் தருகிறேன்
ASIA M.S. PEACE BE ON EARTH
நல்லா தைலம் போட்டு சிறிது நேரத்திக்குபின் வெண்ணீர் ஒத்திடம் கொடுங்க இடுப்பில் 3 மாசமாவது ரெஸ்ட் எடுத்தால் நல்லது
Hi priya congrats...I am new to this site...I dont know how to type in tamil, i will try to do my best in future, Thaayum seeyum nalamudan vaala kadavulai venduhirean...
நீங்கள் இப்போது எங்கு இருக்கின்றீர்கள். hk il october குளிர் ஆரம்பிக்கும்.
ஹாங்காங் இல் ஹோட்டல் சொல்லுறேன்.
1.இம்பீரியல் ஹோட்டல்___ஒரு நாளைக்கு ரூ.5000
2.ஹாலிடே இன்___ஒரு நாளைக்கு ரூ.7000
இவை இரண்டுமே நாதன் ரோடில் உள்ளது.இண்டியன் சாப்பாடும் அருகிலேயே கிடைக்கும்.
ஹாங்காங்ல் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு.இது சீப் &பெஸ்ட்டா இருக்கும்.ஒரு சிறிய ரூம் இருக்கும்.
1.கோல்டன் க்ரவுன்____ஒரு நாள் ரூ. 2000 இதுவும் நாதன் ரோடில் உள்ளது.
3 நாள் ப்ரோகிராம் என்றால் ......
1.டிஸ்னி லேண்ட் போனால் ஒரு நாள் சரியாக இருக்கும்
2.டிஸ்கவரி பே ஐலேண்ட் வித் பீச்.
3.பீக்___மாலை நேரத்தில் சென்றால் போதும்.ஆனால் இருட்டும் முன் நல்ல வெளிச்சத்தில் சென்றால் வீவ் பார்க்க நல்லது. இப்போது நீங்கள் பகல் நேரத்தில் நாதன் ரோடில் கவுலுன் பார்க் செல்லலாம்.
கவுலுனில் ஈஸ்ட் என்று வாக்கிங் பன்னவும்,இங்கிருந்து ஹாங்காங் சைட் பில்டிங்ஸ் வீவ் பார்க்கவும் நல்லா இருக்கும்.
ஆசியா முதலில் மிக்க நன்றி தெளிவாக அனுப்பியதற்கு. இருந்தாலும் இன்னும் சில சந்தேகங்கள். தொந்தரவுக்கு முதலில் மன்னிக்கவும். தாங்கள் அனுப்பிய ஹோட்டலில் வாடகை நம் இந்திய ரூபாய்தானே. எத்தனை பேர் தங்களாம். கெஸ்ட் ஹவுசில் எத்தனை பேர் தங்களாம். ஏனென்றால் அங்கு வந்தவுடன் தலைக்கு[1 ஆளுக்கு] இவ்வளவு ரேட் என்று சொல்வார்களா. 12 மணி நேர ரூம் வாடகையா[அ] 24 மணி நேர வாடகையா. நான், என் கணவர், பையன் 3 பெரிய ஆட்கள். என் பையன் 3நாள் தங்கிவிட்டு சான் பிரான்சிஸ்கோ செல்கிறான். நாங்கள் இருவரும் ஆஸ்திரேலியா செல்கிறோம். என் பெரிய பையன் மெல்பர்னில் இருக்கிறான். நான் தற்போது மதுரையில் இருக்கிறேன். சிங்கப்பூர் வழியாகவும், மலேஷியா வழியாகவும் தான் போவோம். இந்த முறை ஹாங்காங் வழியாக பையன் யு. எஸ் போவதால் நாமும் சுற்றி பார்த்து செல்லலாம் என்று நினைத்தோம். நாங்கள் செப்௨0 காலை11 மணிக்கு அங்கு இறங்கி விடுவோம். 23 மதியம் 4மணிக்கு அங்கிருந்து கிளம்ப டிக்கட் புக் செய்துள்ளோம். நாதன் ரோட் என்பது தமிழ் பெயர் மாதிரி இருக்கிறதே. அது தமிழர்கள் இருக்கும் ஏரியாவா. நம்ம இந்தியன் டைம் ஹாங்காங் டைம் வித்தியாசம் என்ன. 1. ஏர்போர்ட்டிலிருந்து நாதன் ரோட் எவ்வளவு தூரம். எப்படி செல்வது. ட்ரைன் மூலம் செல்வதா[அ]பஸ் வசதி உள்ளதா[அ] டாக்ஸி மூலம் செல்லலாமா. அங்கு சுற்றி பார்க்க ட்ராவல்ஸ் பாக்கேஜ் உள்ளதா. தனியாக பார்ப்பதுதான் சிறந்தததா. 2. தாங்கள் கூறியுள்ள ஹோட்டல்களின் ஈ.மெயில் ஐ.டி, ஐஎஸ்டி கோடுடன் போன் நம்பர் தெரிவித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
ஹலோ சரஸ்வதி மேம். என்னைவிட நீங்க பெரியவங்க.தயவு செய்து மன்னிப்பு கேட்காதீங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு.
எனக்கு தெரிந்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வள்வு தான்.
நான் பழைய பதிவில் போட்டது இந்திய ரூபாய் தான்.
24 மணிவாடகைதான். உங்கள் மூன்று பேருக்கு ஹோட்டல் ,கெஸ்ட் ஹவுஸ் மூன்றாவது பெட்டுக்கு தனி சார்ஜ் நினைக்கிறேன்.
நேதன் ரோடில் இந்தியன்ஸ்,பாகிஸ்தானிஸ்,இலங்கை யர் அதிகம் இருப்பங்க .
இரன்டரை மணி நேரம் இந்தியாவிலுருந்து அதிகம்.
ஏர்போர்டிலிருந்து 1 மணி நேரம்.பஸ்ஸில் வருவது சீப். தனியாகவெ சுற்றிப்பார்க்கலாம் .ஹாங்காக் என்று சர்ச் பண்ணிப்பாருங்கள் நல்ல விபரமும்,ஹோட்டல்களின் நம்பரும் கிடைக்கும்.
உங்களுடன் உடனே பேசமுடியவில்லை. ஹாங்காங் என்று சர்ச் பண்ணிபார்த்ததில் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றின் நம்பர் அட்ரஸ் தருகிறேன்.[MAN HING LUNG HOTEL, MIRADOR MANSION, PH-852 27220678, 852 23118807, NO 58.NATHAN ROAD] எனக்காக கொஞ்சம் சிரமப்பட்டு உங்கள் கணவர் மூலமாக கெஸ்ட் ஹவுஸ் தங்குவதற்கு டீசன்ட்டாக இருக்குமா என்று நேரடியாக பார்க்கமுடியுமா. ரொம்ப சிரமம் என்றால் நோ ப்ராப்ளம். ஏனென்றால் மற்ற ஹோட்டல் எல்லாம் வாடகை அதிகமாக இருப்பதால் வேஸ்ட்டாக எதற்கு என்று நினைக்குறோம். ஆதலால்தான் முடிந்தால் மட்டும் செய்யுங்கள். நன்றி.இல்லை வாடகை ஓரளவு ரிசனபுலாகவும் நீட்டாகவும் தெரிந்தால் தெரிவிக்கலாம்.