![]() இன்று மதியம் 2 மணிக்கு மேல் பெங்களூரில் தொடர்ச்சியாக எட்டு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்து உள்ளன. அதிகாரப்பூர்வமான தகவல்கள்படி இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஜெய்ப்பூர் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, வெடித்த குண்டுகளின் எண்ணிக்கை ஒன்றாய் இருந்தாலும் பாதிப்பு குறைவுதான். அரசாங்கமும், அமைப்புகளும் கைத்தட்டி சந்தோசப்பட்டுக்கொள்ளலாம். 2005ல் டில்லியில் பிடிப்பட்ட சில தீவிரவாதிகள், பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களை வெடிவைத்து தகர்க்கும் திட்டம் இருப்பதாக விசாரணையில் தெரிவித்தார்கள். அப்போது பெங்களூர் நகருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கே வெடிக்குண்டு, இங்கே வெடிகுண்டு என்று தினம் ஒரு புரளி வந்துகொண்டிருந்தது. ஒருவழியாக 3 வருடங்கள் கழித்து தீவிரவாதிகள் தாங்கள் திட்டமிட்டதை செயல்படுத்திவிட்டார்கள். அடுத்து என்ன.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், நடத்தியவர்களுக்கு கண்டணங்களையும் தெரிவித்துவிட்டு, நாம் நம்முடைய வழக்கமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டியதுதான். அடுத்த குண்டுவெடிப்பு செய்தி வர இன்னும் சிறிது நாட்கள் ஆகலாம். வாழ்க பாரதம்.. ஜூலை 25, 2008 - 9:51am - வழங்கியவர் babu
|

